Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
National Arogya Expo and Ayush Conclave 2026
Speaker B
Ayush Conclave
Speaker C
நம்ம சென்னையில மனப்பாக்கத்தில் உள்ள Heartfulness Institute
Speaker D
Babuji
Speaker E
January 9 to 12
Speaker F
Click the link below and register.
Speaker G
இது என்னன்னா ஒரு ஷேடோ லைஃப் மாதிரிதான் அவங்களோட லைஃப் 2024ல. இதுதான் உண்மை போலன்னு நினைச்சுட்டு நல்ல ஒரு க்ரோத் நோக்கி போன மாதிரி அவங்களுக்கு தெரிஞ்சிருந்திருக்கும்.
Speaker G
எங்களை நிறைய பேர் ஏமாத்திருக்காங்க அப்படின்னா ஏன் ஏமாத்துனாங்க? ஏன் நம்புனீங்க? அப்படின்னு ஒன்னு இருக்குல்ல. ஏன்னா அவசரம் ஜாஸ்தி விருச்சகத்துக்கு. டக்குன்னு நம்பிடுறது, டக்குன்னு தூக்கி எறிஞ்சிடுறது, டக்குன்னு பேசிடுறது.
Speaker G
அவங்க மேல நான் ஏன்னா வெஞ்சன்ஸ் வச்சுப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் விருச்சகம். வெஞ்சன்ஸ் ஏன் வச்சுப்பாங்கன்னா அவங்களுக்கு துரோகங்கள் நடந்திருக்கும். இவங்க முன்னாடி நான் வாழ்ந்து காட்டுறேங்கிற ஒரு வெஞ்சன்ஸ் தான். சக்தியே இல்லாம. சோ, இது உங்களுடைய பவரை நீங்கதான் உருவாக்கிக்க முடியும்.
Speaker G
இப்ப விருச்சகத்துக்கு போயிட்டு இப்ப எனக்கு கூட ஒருத்தர் வந்து விருச்சகத்துல வந்து ஒருத்தர் வந்து எனக்கு பர்சனலாவே ஒரு மெசேஜ் போட்டுருந்தார். நீங்க வந்து விருச்சகத்தை வந்து பயங்கரமா கெட்டதாவே பேசிட்டு இருக்கீங்கன்னு கெட்டதா பேசவே இல்லை. ட்ரூத் உண்மை என்னவோ அதை நான் பேசுறேங்கிறப்போ உண்மைகள் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.
Speaker H
Nemmadhi Property Management. Contact 7667008999.
Speaker I
நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை. இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை. தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.
Speaker J
Fourth Estate தமிழ் நேயர்களுக்கு அருள்மொழிவர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் Fourth Estate தமிழ் வழங்கும் இன்றைய சிறப்பு நேர்காணல் பகுதி. என்ன நேர்காணல் பகுதின்னு பார்த்தீங்கன்னா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்ல தெரிவிச்சுக்கிறேன். ஏன்னா ஜனவரி 1, 2026 பிறந்திருக்கிறது. இந்த 2026 வந்து ஒரு ஆண்டு முடிஞ்சு இன்னொரு ஆண்டு பிறக்கும்போதே நாம் எல்லாருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான ஆர்வம், கியூரியாசிட்டி அப்படிங்கறது வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளை பத்தி எல்லாருமே பேச கண்டிப்பா நினைப்போம். அந்த அடிப்படையில நம்மோடு மீண்டும் இன்றைக்கு இணையறாங்க. ரொம்ப நாளுக்கு கழிச்சு ஜாயின் பண்றாங்க. அவங்களை பிடிக்கிறதே ரொம்ப கஷ்டமா போச்சு. ரைட்டர் கம் அஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய திருமதி ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள். வணக்கம்.
Speaker G
வணக்கம்.
Speaker J
எப்படி இருக்கீங்க?
Speaker G
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
Speaker J
சோ அடுத்த கட்டமா 2026க்கு விருச்சகம் எப்படி இருக்க போகுது? எப்படி இருந்துச்சு விருச்சக ராசி நேயர்களுக்கு?
Speaker G
விருச்சகம் வந்து 2024 அப்படின்னு பாக்குறப்ப செத்து செத்து பொழச்சு விளையாடணும்னு ஒன்னு இருக்குல்ல. அதுதான் விருச்சகம் 2024ல.
Speaker J
சரி.
Speaker G
அதாவது 2024 லைஃப் கொஞ்சம் நல்லா போன மாதிரி அவங்களுக்கு தெரிஞ்சிருந்திருக்கும். எல்லாமே கரெக்டாதான போயிட்டு இருக்கு அப்படிங்கற மாதிரி ஒரு இது என்னன்னா ஒரு ஷேடோ லைஃப் மாதிரிதான் அவங்களோட லைஃப் 2024ல. இதுதான் உண்மை போலன்னு நினைச்சுட்டு நல்ல ஒரு க்ரோத் நோக்கி போன மாதிரி அவங்களுக்கு தெரிஞ்சிருந்திருக்கும்.
Speaker G
2024 முடியற டைம்லதான் தெரியும் இது நிழல். இது நிஜம் இல்லை அப்படிங்கறது தெரிஞ்சிருக்கும். 2025 எப்படி இருந்திருக்கும் அப்படின்னா டோட்டலா என்ன நான் மாத்திக்கணும் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல. அது 2025ல அந்த மோல்டிங்க்குள்ள போயிருப்பாங்க. ஒரு ஆல்கெமி மாதிரி அவங்க ரெடியா இருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன். இந்த ட்ரையல் அண்ட் எரர் மாதிரி 2025 அவங்களுக்கு. இதை பண்ணி பார்க்கலாமா அதை பண்ணி பார்க்கலாமா எல்லாமே முயற்சி பண்ணி பார்த்திருந்திருப்பாங்க. திருப்பி ரிவர்ஸே போய் பார்க்கலாமான்னு யோசிச்சிருந்திருப்பாங்க.
Speaker G
ஏன்னா விருச்சகம் என்ன சொல்லுவாங்கன்னா எங்களுக்கு துரோகங்கள் ஜாஸ்தி.
Speaker G
எங்களை நிறைய பேர் ஏமாத்திருக்காங்க அப்படின்னா ஏன் ஏமாத்துனாங்க? ஏன் நம்புனீங்க? அப்படின்னு ஒன்னு இருக்குல்ல. ஏன்னா அவசரம் ஜாஸ்தி விருச்சகத்துக்கு. டக்குன்னு நம்பிடுறது, டக்குன்னு தூக்கி எறிஞ்சிடுறது, டக்குன்னு பேசிடுறது.
Speaker G
பட்டு பட்டுன்னு ஒரு முடிவெடுத்துட்டு வந்துட்டு இன்னைக்கு இது வேண்டாம். அது வேண்டாம். எனக்கு இது அந்த இக்கரைக்கு அக்கரை பச்சைதான் அவங்களுக்கு. இப்ப இங்க இருந்து அங்க இருந்து அங்கேயே போய் இருந்திருக்கலாமா அப்படின்னு. நீங்க எங்கேயும் போக வேண்டாம். 2026 வந்து ரொம்ப நல்லா இருக்கு இவங்களுக்கு. இவங்களுக்கான பவர் வந்து இவங்ககிட்டதான் இருக்கு. அந்த இவங்ககிட்டதான் அந்த லிபரேஷனே இருக்கு. இவங்கதான் அந்த பவரே. அதைத்தான் வந்து 2026ல வந்து நம்மளுக்கு விருச்சகத்துக்கு சொல்றதே என்னன்னா நீங்க நிறைய பேத்துக்கு பிரிட்ஜா இருந்திருக்கிறீங்க. துரோகங்கள் பார்த்துட்டீங்க. வஞ்சகமும் பார்த்தாச்சு. அதனாலதான் நான் அவங்களை வந்து அவங்க மேல நான் ஏன்னா வெஞ்சன்ஸ் வச்சுப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன் விருச்சகம். வெஞ்சன்ஸ் ஏன் வச்சுப்பாங்கன்னா அவங்களுக்கு துரோகங்கள் நடந்திருக்கும். இவங்க முன்னாடி நான் வாழ்ந்து காட்டுறேங்கிற ஒரு வெஞ்சன்ஸ் தான். சக்தியே இல்லாம. சோ, இது உங்களுடைய பவரை நீங்கதான் உருவாக்கிக்க முடியும். இவங்ககிட்டதான் அந்த ரியாலிட்டியே இருக்குங்கறதுதான் விருச்சகத்துக்கு சொல்றதே. விருச்சகம் இப்பதான் அது புரியவே ஆரம்பிச்சிரும்.
Speaker G
ஏன்னா இவங்க டிபென்டன்சி ஜாஸ்தி. இவங்ககிட்ட போய் நான் சார்ந்திருந்தா நான் பெரிய ஆளாயிடுவேனா. இவங்க சொன்னதை கேட்டா இவங்க சொன்னதை கேட்டுட்டு நான் சொன்னா அது கரெக்டா இருக்குமோ. உங்களுக்குன்னு சுயமா சில விஷயங்கள் இருக்குல்ல. அந்த சுயமா ஏன்னா இவங்க கோவம் வரப்ப தான் சுயமே வெளிய வரும். அப்பதான் நான் ரொம்ப ரியலிஸ்டிக்னு பேசுவாங்க. அதுவரைக்கும் இவங்க வந்து அப்படியே ஒரு பூசுனாப்புல முழுகுனாப்புல இருந்துகிடுறது.
Speaker G
இப்ப அவங்களுடைய அந்த ஒரு நெர்வ்ஸ போய் நம்ம டச் பண்றது ஒன்னு இருக்குல்ல. அவங்களை தூண்டி விட்டுட்டு அவங்களுக்கு சரட்டுன்னு ஒரு கோவம் வரும். கோவம் வந்து இல்லையே நான் இப்படி கிடையாது. என்னை எப்படி நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு படபட படபடன்னு. இல்லீங்க கொஞ்சம் நிதானமா கேளுங்க. லாஜிக்கலா பேசலாம் அப்படிங்கறதுக்குதான் நம்ம வந்து விருச்சகத்திட்ட சொல்லணும். லாஜிக்கல் குள்ள வாங்கன்னு. ஏன்னா இங்க சந்திரன் நீசம். சந்திரன் நீசம் விருச்சகத்துல அப்படின்னா எமோஷன்ஸ் வேலை செய்யாது. இந்த எமோஷன்ஸ் வந்து உல்டாவாதான் வேலை செய்யும்.
Speaker G
இப்ப விருச்சகத்துக்கு போயிட்டு இப்ப எனக்கு கூட ஒருத்தர் வந்து விருச்சகத்துல வந்து ஒருத்தர் வந்து எனக்கு பர்சனலாவே ஒரு மெசேஜ் போட்டுருந்தார். நீங்க வந்து விருச்சகத்தை வந்து பயங்கரமா கெட்டதாவே பேசிட்டு இருக்கீங்கன்னு கெட்டதா பேசவே இல்லை. ட்ரூத் உண்மை என்னவோ அதை நான் பேசுறேங்கிறப்போ உண்மைகள் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். உண்மையை உங்களால அக்செப்ட் பண்ணிக்க முடியல. நான் நல்லதைதான் சொல்ல முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அது உங்களுக்கு கசப்பா தெரியுதுங்கிறப்போ ஏன்னா நான் வந்து இங்க நீசம் அப்படின்னா நீங்க ஜாக்கிரதையா இருங்கங்கிற விஷயத்தைதான் நம்ம சொல்றது. இங்க சந்திரன் நீசம் என்ன பண்ணும் அப்படின்னா நம்ம ஒருத்தங்களுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்றோம்னா இவங்களுக்கு ரிவர்ஸாதான் புரியும். என்னை ஹர்ட் பண்ணிட்டாங்க. என்னுடைய குறைகளை பார்த்துட்டாங்க. நான் எவ்வளவு பாசிட்டிவ் நீங்க பாசிட்டிவ் தான். ஆனா அங்க இருக்க பிளாக் டாட்ட சொன்னாதான் அதை சரி பண்ணுவீங்க.
Speaker G
ஏன்னா உங்களுக்கு தேவையே அதுதான். ஏன்னா ஏன் விருச்சகத்தையே இப்படி சொல்றீங்கன்னா விருச்சகம் தான் வந்து கால கால புருஷ தத்துவத்துப்படி அஷ்டங்கம் எட்டாவது. இந்த எட்டு எட்டாவது ராசி அது. இந்த எட்டு என்ன பண்ணும் அப்படின்னா இன்ஃபினிட்டி. இது வந்து நான் ஏன் விருச்சகத்தை வந்து என்ன சொல்லுவேன்னா நீங்க குழி இது ஒரு குழி அப்படின்னா இது அடி ஆழம். கடலாழத்தை விட கடல் ஆழத்தை எப்படி நம்மளால கணிக்க முடியாதோ விருச்சகத்துக்கும் அதேதான். அவங்க ஆழத்தை வந்து நம்மளால கணிக்கவே முடியாது. அங்க சந்திரன் நீசமாயிடுச்சு. தாட் ப்ராசஸ் கரெக்டா இருக்காது. இப்படி எல்லாம் இருக்கிறப்ப இவங்களுக்கு தனக்கு என்ன வேணும்னே தெரியாது விருச்சகத்துக்கு. அதனாலதான் விருச்சகத்துக்கு வந்து விருச்சகம் நீங்க இப்படி இருங்க அப்படி இருங்க. உங்களை சுத்தி இவ்வளவு விஷயங்கள் நடக்குது. இப்ப நம்மளுக்கு இந்த ராசி பகை அந்த ராசி பகை எல்லாம் இல்ல. இது வந்து கடவுள் விதிக்கப்பட்ட ஒரு விதி. இது வந்து பிளானட்ஸ் உடைய பேட்டர்ன் இந்த மாதிரி இருக்குங்கறப்போ விருச்சகத்துக்கு நம்ம இவ்வளவு தூரம் எக்ஸ்பிளைன் பண்ணி சொல்ல வேண்டியதா இருக்கு. ஏன்னா இவங்க வந்து ஒரு பேட்டர்னை நம்பிடுவாங்கன்னு வச்சுக்கோங்களேன். இதுதான் கரெக்ட்ன்ட்டே இருப்பாங்க. இந்த ஜோன்ல இருந்து நீங்க இப்படி வெளிய வந்து இந்த மிஸ்டேக்க மட்டும் என்னன்னு விருச்சகம் ரியலைஸ் பண்ணிட்டாங்கன்னா டக்குன்னு ஒரு க்ரோத் இருக்கு.
Speaker J
26ல பண்ணிடுவாங்க.
Speaker G
2026 இவங்க பண்ணியே ஆகணும். ஏன்னா இவங்களுக்கு வந்து ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பீரியட். இந்த சந்திரன் நீசம் என்னெல்லாம் பண்ணும்னா பயத்தைதான் கொடுத்திருக்கும். ஏன்னா விருச்சகம் வந்து ஆழ்மனசுல பயந்துக்க கூடியவங்கதான். எதுக்கு பயம்னா இதை மாத்துனா எனக்கு இப்படி ஆயிடுமோ அப்படி ஆயிடுமோன்னு. பயமே உங்களுக்கு வேண்டாம். அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனை தயவு செஞ்சு அக்செப்ட் பண்ணிக்கோங்க.
Speaker J
அக்செப்ட் பண்ணிக்கணும்.
Speaker G
ஏன்னா இது வந்து சோல். விருச்சகம்ங்கிறது ஆன்மா. இந்த ஆன்மாவுக்குதான் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பிடிக்காது. அது அப்படியே இருந்துக்கும். ஏன்னா நான் ஜெனரலாவே விருச்சகத்தோடைய அமைப்பு என்ன அப்படின்னா இவங்க வந்து பல ஜென்மம் எடுத்து வந்த ஒரு ஆன்மா விருச்சகம். அப்ப பல ஞாபகங்கள்ல சுமந்து வந்த ஒரு ஆன்மா அப்படிங்கறப்ப இவங்க டிராவல் பண்ணனும். இவங்க டிராவல் பண்ண டிராவல் பண்ணதான் நிறைய விஷயங்கள் வந்து இவங்களுக்கு வாழ்க்கையில மாறும். அதாவது மறு ஜென்மம் 2026. இந்த மறு ஜென்மம் எந்த அளவுக்கு இவங்க ஆக்டிவேட் பண்றாங்கன்னு ஒன்னு இருக்கு. அந்த ரீபர்த் இன்டு ஆக்ஷன் அப்படின்னுதான் இப்ப அவங்களுக்கு சொல்லணும். இந்த 2026 விருச்சகம் கரெக்டா பயன்படுத்தணும். கரெக்டா பயன்படுத்திதாங்கன்னா இவங்களுடைய அத்தனை கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் ஒரு விடை அப்படிங்கறது வந்து ஒரு வெளிச்சத்துக்கு வரக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறதுதான் வந்து விருச்சகத்துக்கு இருக்கு.
Speaker J
விருச்சகத்துக்கு ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு அவங்களுக்கு.
Speaker J
ஓகே அவங்க எப்படி மீடியம் ஆவரேஜ் சூப்பர்ல சொல்லலாம் அவங்களுக்கு விருச்சகத்துக்கு?
Speaker G
இவங்க வந்து மீடியம் டு சூப்பர் ஜோன்குள்ள இருக்காங்க. பட் ரொம்ப ரொம்ப கவனம் விருச்சகம். ஏன்னா உங்களுக்கு என்னதான் டைம் நல்லா இருக்கும்னு சொன்னாலும் ஹெல்த் கவனிச்சுக்கணும். ஏன்னா இது எப்படி பார்க்கப்படுதுன்னா விருச்சகத்துக்கு இது கொஞ்சம் ஸ்பெஷலாவே நம்ம சொல்லணும். விருச்சகம் வந்து உங்களுக்கு டைம் ரொம்ப நல்லா இருக்கும்னு நம்ம சொன்னாலும் தலைக்கு மேல கத்தியும் தொங்கிட்டு இருக்கு விருச்சகத்துக்கு. நம்ம இப்பதான் நம்ம நல்லா இருக்க போறோம் அப்படின்னு நினைக்கிறப்போ கூட இருந்தே யாராவது குழி பறிக்கறதுக்கான அமைப்பும் வந்து விருச்சகத்துக்கு உண்டு. இல்ல இவங்களுடைய இம்மெச்சூரிட்டினாலயே ஏதாவது ஒரு விஷயங்கள் நடந்திரும். வெண்ணை திரண்டு வரப்ப பானை உடைஞ்ச கதை மாதிரி அந்த நேரத்துல டக்குன்னு ஏதாவது ஒன்னு பேசிடுறதோ திடீர்னு இவங்களே ஒரு எதிரியை உருவாக்கிடுறதோ இல்ல ஆல்ரடி இருந்த எதிரி தனக்கே தெரியாம கூட இருந்ததோ கரெக்டா நழுவ தெரியணும் விருச்சகத்துக்கு. கரெக்டா நழுவி கரெக்டா வந்துட்டாங்கன்னா அந்த ஒரு ஆபத்தும் கொஞ்சம் விருச்சகத்துக்கு வந்து 2026ல இருக்கு. இருக்கு. நல்லதும் இருக்கு கூடவே ஆபத்தும் இருக்கு அப்படிங்கறதுதான் விருச்சகத்துக்கு.
Speaker J
பொறுத்திருந்து பார்க்கலாம் 2026 எல்லாருக்கும் நல்லபடியா அமையட்டும் அப்படிங்கிற ஒரு வாழ்த்துக்களோட உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் உங்களுடைய நேர ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.
Speaker G
நன்றி.
Speaker J
நன்றி நண்பர்களே மீண்டும் மற்றுமொரு சிறப்பு நேர்காணல் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.











