Skip to content

Rishabam | ரிஷப ராசிக்கு குருவால் நிகழப்போகும் மாற்றங்கள் | Astrologer Jeevitha | ரிஷபம் | குரு

ரிஷப ராசிக்கு குருவால் ஏற்படும் மாற்றங்கள், குலதெய்வம், குரு பலம் மற்றும் வாழ்க்கை மேம்பாடு குறித்து ஜீவிதா ஜோதிடர் விளக்கம்.

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Key Takeaways

  • குரு பலம் ரிஷப ராசி வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
  • குலதெய்வம் மற்றும் குரு இடம் வாழ்க்கை நலனுக்கு பெரும் தாக்கம் உண்டு.
  • சுக்கிரன் மற்றும் குருவுக்கு இடையேயான போராட்டங்கள் வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கும்.
  • குரு ஸ்தலங்களில் வழிபாடு மற்றும் பரிகாரங்கள் நன்மைகளை தரும்.
  • ஜாதக கட்டம் மற்றும் குரு திசை பற்றி விழிப்புணர்வு அவசியம்.

What the video covers

  • ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குலத்தில் பெண் சாபம் இருந்தால் அதனால் பாதிப்பு ஏற்படும்.
  • குலதெய்வம் அனுக்கிரகம் ரிஷபத்தில் இருந்தால் குரு பலம் குறைவாக இருக்கும்.
  • குரு தசை மற்றும் கோச்சார காலங்களில் குரு பலம் முக்கிய பங்கு வகிக்கும்.
  • சுக்கிரனுக்கு குருவால் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் முறைகள்.
  • குரு பிளஸ்ஸிங்ஸ் பெறுவதன் மூலம் வாழ்க்கையில் மரியாதை மற்றும் நன்மைகள் கிடைக்கும்.
  • குரு பலம் குறைவாக இருந்தால் வாழ்க்கையில் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படும்.
  • குரு திசை மற்றும் ஜாதக கட்டங்களில் குருவின் இருப்பு மற்றும் அதன் தாக்கம்.
  • குரு மற்றும் சுக்கிரன் இடையேயான பகை மற்றும் அதனை சமாளிக்கும் வழிகள்.
  • ரிஷப ராசி நேயர்கள் குரு ஸ்தலங்களில் வழிபாடு செய்வதன் முக்கியத்துவம்.
  • குரு பலம் மற்றும் அதனை மேம்படுத்தும் பரிகாரங்கள் பற்றிய விளக்கம்.

Answers

Questions about this video

ரிஷப ராசிக்காரர்களுக்கு குலதெய்வ அனுக்கிரகம் குறைவாக இருக்க காரணம் என்ன?

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பெண் சாபம் இருக்கும் பட்சத்தில், குலதெய்வ அனுக்கிரகம் குறைவாக இருக்கும். சிலருக்கு குலதெய்வம் தெரியாமலேயே இருக்கும்.

குரு பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பாடங்களை கற்பிப்பார்?

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளால் அழிவதைத் தடுக்க, குறிப்பாக பெண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்காமல் இருக்க, குரு பகவான் சில அவமானங்கள் மூலம் பாடங்களைக் கற்பிப்பார். இது ஆணாக இருந்தால் பெண்ணுடனும், பெண்ணாக இருந்தால் ஆணுடனும் ஆசைகளால் ஏற்படும் பிரச்சனைகளை உணர்த்துவதற்காக இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மரியாதை பெற என்ன செய்ய வேண்டும்?

ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மரியாதை பெற, தங்கள் குருமார்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். குருவின் பிளஸ்ஸிங்ஸ் பெற தாழ்ந்து பணிந்து போகும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
ரிஷபத்துல பிறக்குறாங்கனாலே பெண் சாபத்தோட
00:03
Speaker A
அந்த குலத்துல ஏதாவது ஒரு பெண் சாபம் இருக்கும் அப்போ அந்த பெண் சாபம் இருக்கிற பட்சத்துல குலதெய்வம் அனுக்கிரகம் ரிஷபத்துல இருக்கவங்களுக்கு கம்மியாதான் இருக்கும் ஒரு சிலருக்கு குலதெய்வம் தெரியாமயே இருக்கும்
00:14
Speaker A
நல்ல லைஃப் நல்லா போயிட்டு இருக்கும் மது அருந்தக்கூடிய ஒரு நேரத்துல குரு வந்து அந்த இடத்துல ஒரு வேலையை காட்டுவார் எங்க புத்தி மாறுதுங்கிறதெல்லாம் குரு கவனிக்கும் அப்படி இருக்கப்போ ஒரு பாடத்தை கற்பிக்காம போகாது
00:28
Speaker A
அந்த குரு பலத்தை வாங்கிட்டு அதாவது குருவுடைய பிளஸ்ஸிங்ஸ் தான் இவங்க வாங்கணும் குருவோட பிளஸ்ஸிங்ஸ் தாழ்ந்து பணிஞ்சு போகக்கூடிய ஒரு அமைப்புல இருந்துட்டாலே குரு வந்து இவங்களை காப்பாத்திடும்
00:41
Speaker B
சோ இந்த ரிஷப ராசி நேயர்களுக்கு வந்து இந்த குரு என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் பண்ணுவார்
00:46
Speaker A
இப்போ ரிஷபம் தான் சுக்கிரன் சுக்கிரனுக்கு குரு பகை
00:51
Speaker A
அப்படின்னு இருக்கப்ப இங்க குருவால சுக்கிரனுக்கு புரிய வைக்க ஒரு ஒரு போராட்டம் கண்டிப்பா இருக்கும் ஏன்னா வந்து குரு அப்படிங்கிறவர் ஞானத்தை சொல்லக்கூடியவரா இருக்கப்போ சுக்கிரன்ங்கிறவர் வந்து ஆசைகள் அந்த டிசையர்ஸ் அந்த அந்த ஒழுக்கத்துக்கு வரணும்
01:48
Speaker A
ரிஷபத்துல இருக்கவங்க அந்த ஒழுக்கத்துக்கு வர வரைக்கும் இந்த குரு சுக்கிரன் போராட்டம் அப்படிங்கறது இருக்கும் இந்த குரு தான் வந்து மரியாதைக்கான ஒரு ஒரு கிரகமா பார்க்கப்படுது இல்லையா அப்போ இவங்களுக்கு வாழ்க்கையில மரியாதை வரணும் அப்படின்னா தன்னுடைய குருமார்கள் அப்படிங்கறவங்கள வந்து இவங்க மதிக்கிறதுக்கு தெரிஞ்சுக்கணும்
02:04
Speaker A
இவங்களுக்கு வந்து முதல் தன்னோட டிசையர்ஸ் தான் எல்லாமே இப்போ ஒரு ரிஷபத்துல இருக்கவங்களுக்கு வந்து சில விஷயங்கள் நம்ம போய் சொல்றப்போ ஆல்ரெடி அவங்க மைண்ட் பிக்ஸடா தான் இருக்கும் நான் வந்து இவ்வளவுதான் கேட்பேன் இதுக்கு மேல நான் கேட்க மாட்டேன் என்ன சொன்னாலும் இல்ல நீங்க அவங்கள தவறா பேசிட்டீங்க நீங்க இப்படி பேசி இருக்கக்கூடாது ஜெனரலாவே ரிஷபத்துல இருக்கக்கூடியவங்களுக்கு வந்து ரிஷபத்துல பிறக்குறாங்கனாலே பெண் சாபத்தோட அந்த குலத்துல ஏதாவது ஒரு பெண் சாபம் இருக்கும்
02:35
Speaker A
அப்போ அந்த பெண் சாபம் இருக்கிற பட்சத்துல குலதெய்வம் அனுக்கிரகம் ரிஷபத்துல இருக்கவங்களுக்கு கம்மியாதான் இருக்கும் ஒரு சிலருக்கு குலதெய்வம் தெரியாமயே இருக்கும் அப்படி குலதெய்வம் தெரியாமயே இருக்கிறப்போ இங்க குரு அப்படின்னு வரப்போ எங்கேயாவது ஒரு இடத்துல ஒரு அவமானங்களை கொடுக்கிற மாதிரி ஒரு சிச்சுவேஷன் அப்படிங்கறத வந்து குரு செஞ்சுருவார் ஏன் அப்படின்னா உங்களுடைய ஆசைகளாலயே நீங்க அழியறீங்க முக்கியமா அந்த மண் பெண் பொன் அப்படின்னு சொல்றோம் இல்லையா இந்த பெண் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல போய் ஏதாவது ஒரு இஸ்யூஸ்ல மாட்டுற மாதிரி இது ஆணாக இருந்தால் பெண்ணுக்கும் பெண்ணாக இருந்தால் ஆணுக்கும் அவங்களுடைய ஆசைகளால பிரச்சனைகளை சிக்கக்கூடிய அமைப்பை வந்து குரு தசா காலங்கள்ல கொடுத்துருவார்
03:46
Speaker A
புரிய வைக்கிறதுக்காக அந்த மாதிரி செஞ்சுருவார் அதனால அந்த நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டு அப்படிங்கிற மாதிரி ரிஷபம் இருந்தரணும்
03:53
Speaker A
சில விஷயங்களை புரிஞ்சுக்கணும் அவங்களால ஒரு ரிஷபத்துல இருக்கவங்களால அவங்க வந்து யாராவது ஒருத்தவங்களை போய் இவங்க என்னுடைய குருன்னு ஏத்துக்கிறது நல்லது அந்த குரு அந்த குரு சொல்றதை கேட்டு இருந்துகிட்டாங்கன்னா குரு காப்பாத்திடும்
04:08
Speaker A
எனக்கு அந்த குரு கிட்டயே கத்துக்கிட்டு அந்த குருவையே தவறா பேசுறதோ இல்ல அந்த குருவை தாண்டி நான் நல்லா வந்துருவேன் அந்த குருவையே ஒரு காம்படிட்டரா பார்க்கக்கூடிய அமைப்பு எல்லாம் ஒரு சில ரிஷப ராசிக்கு உண்டு அந்த மாதிரி அவங்க இருந்துட்டாங்க தன்னை வளர்த்து விட்டவங்களுக்கு ஒரு துரோகம் பண்ணனும்னு நினைச்சாலோ தாண்டி போகணும்னு நினைச்சாலோ குரு திசை வரக்கூடிய காலங்கள் அதாவது குரு திசைங்கிறது கோச்சார முறைப்படியும் வரும் அந்தர் திசை முறைப்படியும் வரும் குரு குருவுக்குன்னு சில காலகட்டங்கள் இருந்தாலும் குரு இருக்கக்கூடிய இடம் ஒரு ஒரு ராசியில போய் இருக்கக்கூடிய இடம் ஒரு வருஷம் அந்த ஒரு வருஷ காலமும் ஏதாவது ஒரு பாடத்தை கற்பிக்காம குரு கிளம்பாது
05:29
Speaker A
அதே மாதிரி அந்த கோச்சாரங்கள்ல கூட ரிஷபத்துல இருக்காங்க நல்ல லைஃப் நல்லா போயிட்டு இருக்கும் திடீர்னு அந்த கோச்சாரம் அங்க குரு எங்கேயாவது ஒரு இடத்துல ஆறு எட்டு 12ங்கிற ஒரு விஷயத்துல போய் அந்த கோச்சாரத்துல அவங்களுக்கு அங்க இருக்கு எல்லா நாளும் நம்மளால கோச்சாரத்தை பார்த்துட்டு இருக்க முடியாது ஆனா ஒரு சில நேரங்கள்ல நான் சொன்னேன் இல்லையா இந்த மண் பொன் இந்த மாதிரி விஷயங்கள் இந்த மது அருந்தக்கூடிய ஒரு நேரத்துல குரு வந்து அந்த இடத்துல ஒரு வேலையை காட்டுவார் எங்க புத்தி மாறுதுங்கிறதெல்லாம் குரு கவனிக்கும் அப்படி இருக்கப்போ ஒரு பாடத்தை கற்பிக்காம போகாது அப்போ அந்த குரு பலம் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப அவசியம் இவங்களுக்கு
06:45
Speaker A
இவங்க எல்லாம் வந்து இந்த ஸ்தலத்துக்கு போய் வழிபாடு பண்றது அப்படிங்கறதை விட குருமார்கள் யார் இருந்தாலும் சரி
06:52
Speaker B
ஓகே
06:52
Speaker A
குரு ஸ்தலங்கள் எதுவா இருந்தாலும் சரி ஏதாவது தனக்கான ரிஷியவோ இல்ல சித்தர்கள் வழிபாடு அந்த மாதிரி பண்றது அப்படிங்கறது அந்த குரு பலத்தை வாங்கிட்டு அதாவது குருவுடைய பிளஸ்ஸிங்ஸ் தான் இவங்க வாங்கணும் குருவோட பிளஸ்ஸிங்ஸ் தாழ்ந்து பணிஞ்சு போகக்கூடிய ஒரு அமைப்புல இருந்துட்டாலே குரு வந்து இவங்களை காப்பாத்திடும்
07:10
Speaker B
ஓகே மேம் இப்போ வந்து ரிஷப ராசி நேயர்கள் வந்து குரு என்னென்ன மாதிரியான விஷயங்கள் பண்ணும்னு சொல்லி சொன்னீங்க இப்போ இவங்க வந்து இந்த ஸ்தலத்துக்கு போய் வழிபாடு பண்ணாங்கன்னா இன்னும் வந்து அவங்க வாழ்க்கையில வந்து சிறப்பாக இருக்கும் அப்படின்னா எந்தெந்த மாதிரியான ஸ்தலங்களுக்கு போகலாம்
07:23
Speaker A
சிறந்த பரிகாரமாவே இருக்கும்
07:26
Speaker B
ஓகே ஓகே சூப்பர் சூப்பர்
07:26
Speaker B
பொதுவாவே எல்லார்கிட்டயும் ஒரு பார்வை இருக்கும் மேம் என்ன அப்படின்னா சனி அப்படின்னு சொல்லிட்டாலே ஆத்தி சனியா அப்படின்னு சொல்லிட்டு ஒரு பயம் இருக்கும்
07:38
Speaker B
அதே வந்து குரு உங்க ராசியில இருக்காருப்பா அப்படின்னு சொன்னா அவங்களுக்குள்ள ஒரு அவ்வளவு அளவுகடந்த மகிழ்ச்சி இருக்கும்னே சொல்லலாம் ஏன்னா குரு வந்துட்டாலே நமக்கு எல்லாமே நன்மையா நடக்கும் அப்படின்னு சொல்றது சோ இந்த குரு நம்முடைய ஜாதகத்துல எங்கெங்க இருந்தா என்னென்ன மாதிரியான நன்மைகள் கொடுப்பார்னு முதல்ல சொல்லிடுங்க
08:27
Speaker A
அதாவது ஒரு ஜாதக கட்டம் அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னு வச்சுக்கோங்களேன் அவங்களுக்கு வந்து குரு பலமா இருக்கணும் அப்படின்னு சொல்லப்படுது
08:35
Speaker A
இப்ப வந்து கடகத்துல உச்சம் அப்படின்னு பாக்குறப்போ புதன் அப்படின்னு வரப்போ புதனுக்கு பகை சுக்கிரனுக்கு பகை அப்படின்னு சொல்லப்படுது அதே மாதிரி மகரத்துல அது நீசம் அடையுது அப்படின்னு சொல்லப்படுது எல்லாத்துக்குமே ஒரு புராண கதைகள் அப்படி இருந்தாலுமே
09:03
Speaker A
ஜெனரலா நம்ம பார்க்கிறோம் அப்படின்னா குரு அப்படிங்கிறவர் வந்து தேவர் தேவர்களுக்கு அவர்தான் குரு அப்படின்னு சொல்லப்படுது சுக்கிரன் அப்படின்னு பார்க்கிறப்போ அசுர குரு அப்படின்னு சொல்றப்போ இவங்க ரெண்டு பேரும் பகையாளிகள் ஆயிடுறாங்க புதன் அப்படிங்கறது எல்லாமே லாஜிக்கலா திங்க் பண்ணிட்டு போகக்கூடிய ஒரு அமைப்புல இருக்கிறப்போ குரு வந்து ஞான ஞானத்தை குறிக்கக்கூடிய ஒரு விஷயமா இருக்கிறப்போ இவர் எல்லாமே வந்து பிலாசபிக்கலா பார்க்கக்கூடிய ஒரு குரு ஆனா வந்து புதனால பிலாசபிக்கலாலாம் பார்க்க முடியாது
10:13
Speaker A
என்ன லாஜிக்கோ என்ன விஷயமோ அதை ஷார்ப்பா போறப்போ குருவால புதனுக்கு எக்ஸ்பிளைன் பண்ண முடியாம போறப்போ புதன் அமைப்பு இருக்கவங்க அதாவது மிதுனம் கன்னி அப்படிங்கறவங்கலாம் வந்து புதன் தான் வந்து அதுக்கான லேண்ட்லார்ட் அப்படிங்கறதே வந்து புதன்
10:23
Speaker A
இந்த மிதுனத்துக்கும் கன்னிக்கும் அப்படின்னு பார்க்கிறப்ப இவங்க ஏதோ ஒரு வகையில அவமானப்படுற மாதிரியோ இல்ல குரு பலம் இல்லாத மாதிரியோ அப்படின்னு மாதிரி சிச்சுவேஷன்ஸ் இருக்கும் மொத்தத்துலயே ஜாதகம்னு பார்க்கிறப்போ ஆறு எட்டு 12 இதுல குரு இருக்கு அப்படினாலே அவங்க அவங்க ஜாதக கட்டத்துல குரு இருக்கு அப்படினாலே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்
10:36
Speaker A
அதுபோக ஒன்னு அஞ்சு ஏழு ஒன்பது 11 இந்த ஸ்தானங்கள்ல ரெண்டுலயும் குரு
10:51
Speaker A
இந்த ஸ்தானங்கள்ல குரு இருக்கிறாங்க அப்படின்னா நல்லது செய்வார் அவங்களுக்கு குரு திசை போறப்போ நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது சில பேத்துக்கு வந்து லக்னத்துல குரு இருக்கும் ஆனா அங்க நீசம் அடைஞ்சிருக்கும் அப்படின்னுலாம் ஒன்னு இருக்கு அப்படி நீசமே அடைஞ்சாலும் குருவை ஸ்ட்ரென்தன் பண்ணிட்டாங்க அப்படின்னா குரு ஹெல்ப் பண்ணும் ஒரு சில சில பேத்துக்கு குரு பலமே இருக்காது அதாவது குரு வந்து நீசம் அடையக்கூடிய ஒரு அமைப்பும் நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடிய அமைப்பும் அதாவது எல்லாரும் சனிக்கு பயந்துக்கிறாங்கன்னு வச்சுக்கோங்க பயந்துக்க வேண்டியது குருவுக்கு தான் பயந்துக்கணும்
12:05
Speaker A
குரு நல்லா இருக்கணும் குருவுடைய பலம் இல்ல அப்படின்னா மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் அதாவது அந்த குடும்பம் அந்த குடும்பத்துக்கு விமோசனம் அப்படிங்கறது கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும் இப்போ ஒரு சில ராசி அமைப்புகள் எல்லாம் எப்படி இருக்கும்னா அந்த குடும்பத்துக்கே குரு பலம் கம்மியா இருக்கு அப்படிங்கற மாதிரி எல்லாம் அமைப்புள்ள ஜாதகங்கள் எல்லாம் இருக்கும் அவங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்னா அவங்க ஃபேமிலில அந்த டீனேஜர்ஸ்ல ஒரு முன்னுக்கு வராம போறது திருமணம் அமையாம போகக்கூடிய அமைப்பு எத்தனை வயதானாலும் திருமணத்துக்காக ஏங்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு குரு அப்படிங்கறதே வந்து குரு இருக்கக்கூடிய இடம் அப்படிங்கறது செழிப்பாக்கக்கூடிய ஒரு இடம் அப்படின்னு சொல்லப்படுது குரு ஆரோக்கியத்தையும் குறிக்கும் நல்லபடியான ஒரு ஆரோக்கியம் நல்ல ஒரு பேச்சுத்திறன் வந்து அறிவாற்றல் அந்த மாதிரி எல்லா விஷயங்களையும் குறிக்கக்கூடியது குரு
13:32
Speaker A
அப்படி பார்க்கிறப்ப இப்ப இந்த குரு வந்து கெட்டுட்டாரு அப்படின்னா யாரு என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டே இருக்க வச்சுக்கிட்டே இருக்கும் அவங்கள ஒரு விஷயத்தை சொல்லி அவங்களுக்கு நம்ம புரிய வைக்கவே முடியாது திரும்ப திரும்ப கேள்வி கேட்க வச்சுக்கிட்டே இருக்கும் இப்போ மீன ராசி எடுத்துக்குறோம்னு வச்சுக்கோங்க அது குருவுடைய வீடாகவே இருந்தாலும் அங்க சந்திரன் ஒரு பிளே பண்ணும் அங்க சந்திரன் சரியா இருக்கணும் சந்திரன் சரியா இல்ல அப்படின்னா அங்க குருவால ஹெல்ப் பண்ணவே முடியாது அவங்க அவங்களுக்கு குரு நல்லா இருந்தா மட்டும் தான் லைஃப் ஒரு குரோத் அப்படிங்கறது அவங்களுக்கு வரும் இல்லனா வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படக்கூடிய ஒரு அமைப்பு இந்த மாதிரி எல்லாம் வந்துரும் இப்ப தனுசுக்கும் குரு வீடா இருந்தாலும் அவருக்கும் குரு நல்லா இருக்கணும் இல்ல அப்படின்னா தொழில் ரீதியா அவமானங்கள் அப்படிங்கறது கொடுத்துரும் அதனால இந்த உச்சம் நீச்சம் பகையாகவே இருந்தாலும் நம்ம சொல்றோம்ல திக்பலம் பெற்றிருக்கணும் அப்படின்னு நம்ம சொல்லுவோம் அந்த திக்பலம் அந்த திக்பலம்ங்கறது ஆறு வகையான பலன்கள் அந்த ஆறு வகையான பலன்கள்ல ஏதோ ஒரு பலன் அடைஞ்சா கூட தப்பிச்சுக்குவாங்க இல்ல அப்படின்னா நீசம் அடையுதுங்கறப்போ குரு திசை போறப்போ மிக மிக கவனம் அப்படிங்கறதுதான் எல்லாத்துக்கும் குரு திசை போதா வாவ் சூப்பர்னு நம்ம வாழ்த்திட முடியாது குரு இருக்கக்கூடிய இடத்தை பொறுத்தும் அது அமையும்
Topics:ரிஷபம்குரு பலம்குலதெய்வம்சுக்கிரன்ஜாதகம்குரு தசைகுரு கோச்சாரம்பரிகாரம்தமிழ் ஜோதிடம்Astrologer Jeevitha

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →