Skip to content
Get App

இனி வங்கிக் கடன் வாங்கவே முடியாதா? | REPO Rate: இந்தியர்கள் ஷாக் | Karthick MaayaKumar| Episode 6463

இந்த வீடியோவில் இந்தியாவில் ரெப்போ வட்டி விகித உயர்வும் அதன் விளைவுகளும், வங்கிக் கடன் பெறும் நிலைமையும் விவரிக்கப்படுகிறது.

Key Takeaways

  • ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வங்கிக் கடன்களின் வட்டி விகிதம் அதிகரிக்கும்.
  • RBI பொருளாதார நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது.
  • இந்த மாற்றம் வீட்டு, வாகன மற்றும் தனிப்பட்ட கடன்களுக்கு நேரடி தாக்கம் ஏற்படுத்தும்.
  • உலக பொருளாதார சூழல் இந்தியா மீது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • RBI-யின் பைமாரிட்டரி பாலிசி மற்றும் கேலிபரேட்ட டைட்னிங் கொள்கைகள் முக்கியமானவை.

What the video covers

  • இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 5.25% இருந்து 5.50% ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த உயர்வு காரணமாக வங்கிக் கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும்.
  • இந்த மாற்றம் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிப்பட்ட கடன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த முடிவை பொருளாதார நிலைமையை கவனித்து எடுத்துள்ளது.
  • RBI-யின் பைமாரிட்டரி பாலிசி மற்றும் கேலிபரேட்ட டைட்னிங் கொள்கைகள் விளக்கப்படுகின்றன.
  • உலக பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்கா, வெஸ்ட் ஏசியா போரின் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் உள்ளது.
  • RBI-யின் முக்கிய பணிகள் மற்றும் அதன் கடமைகள் விளக்கப்படுகின்றன.
  • ரெப்போ வட்டி விகிதம் உயர்வின் காரணமாக கடன் வாங்கும் மக்களுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
  • இந்த வீடியோவில் ரெப்போ வட்டி, RBI மற்றும் அதன் பொருளாதார தாக்கங்கள் பற்றி தெளிவான விளக்கம் தரப்படுகிறது.
  • இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் எதிர்கால முன்னேற்றங்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

Answers

Questions about this video

ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?

ரெப்போ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு குறுகிய கால கடன்கள் வழங்கும் வட்டி விகிதமாகும். இது வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தையும் பாதிக்கிறது.

ரெப்போ வட்டி உயர்வால் என்ன விளைவுகள் ஏற்படும்?

ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகள் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கும், அதனால் வீட்டு, வாகன மற்றும் தனிப்பட்ட கடன்களின் வட்டி அதிகரிக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) என்ன பணிகள் செய்கிறது?

RBI வங்கிகளின் கடன் கொடுப்பதை கட்டுப்படுத்துதல், அரசுக்கான வங்கி ஆக செயல்படுதல், நாணய வெளியீடு, பொருளாதார நிலைமையை பராமரித்தல் போன்ற முக்கிய பணிகள் செய்கிறது.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
எல்லா வீடியோஸ்கான நோட்டிபிகேஷன் உங்களுக்கு வரணும்னாக்கா சேனல் சப்ஸ்கிரைப் பண்ணிட்டு கீழ ஒரு பெல் ஐகான் இருக்கும். ஆல் நோட்டிபிகேஷன் அதைக் கிளிக் பண்ணிடுங்க.
00:06
Speaker A
அதைக் கிளிக் பண்ணா மட்டும்தான் நான் போடுற வீடியோஸ் ஒன்னொன்னத்தையும் நீங்க பார்க்க முடியும். [இசை] வணக்கம் பிக் டாபிக் வித் கார்த்திக் மாயகுமார். இதுவரைக்கும் ரெப்போ வட்டி விகிதம் சார்ந்து அப்பப்போ ஒரு சின்ன செய்தியா பார்த்துட்டு கடந்து போயிடுவோம்.
00:21
Speaker A
ஆனா இப்ப இந்தியா முழுக்க பல மக்களும் வாயில வயித்துல அடிச்சிக்கிட்டு இருக்கீங்கள. ரெப்போ ரேட் சார்ந்து எதுக்காக எந்த அளவுக்கு ஒரு சிட்டுவேஷன ஒரு அசாதாரண சூழல் இந்தியால இந்த ரெப்போ ரெட் மிக இப்ப ஏத்தி வச்சிருக்கு. இதை பத்திதான் முழுக்க முழுக்க பார்க போறோம் நிகழ்ச்சிக்குள்ள போலாம்.
00:39
Speaker A
[இசை] வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் இருக்குல்ல இது 5.50% இப்ப நின்றுருக்கு. இதுக்கு முன்னாடி எவ்வளவு இருந்துச்சு? 5.25% இருந்துச்சு. அது இப்ப எவ்ளோ போயிருக்கு? 0.25% மேல போகி 5.50% உயர்ந்துருக்குங்க. ரெப்போ வட்டி வைக்குதோ இது எதுக்கு இந்த அளவுக்கு? இத அழுத்தி சொல்றேன்னா இவ்வளவு நாட்களா உயரவே இல்ல.
01:08
Speaker A
எவ்வளவு நாட்களா? 2023 பிப்ரவரிக்கு அப்புறம் இப்பதான்ஃர் த பஸ்ட் டைம் ரெப்போ வட்டி விகிதம் இவ்வளவு மேல வந்து நின்றுருக்கு. இதனால என்ன ப்ரோ ஆகப்போகுது அப்படின்னு நீங்க அறியாமையில கேக்குறீங்கன்னா மக்களே பேங்க்ல எத்தனை பேர் லோன் எடுத்துருப்பீங்க, எத்தனை பேர் லோன் எடுக்க ரெடியா இருப்பீங்க எல்லாருக்கும் சேர்த்து ஆப்பு வைக்கிற மாதிரிதான்.
01:25
Speaker A
இந்த ஒரு அனௌன்ஸ்மென்ட் இந்த வீட்டுக்கு கடன் வாங்குறதா இருக்கட்டும், வாகனங்களுக்கான கடன் வாங்குறதா இருக்கட்டும், அப்புறம் உங்களுக்கு தனிப்பட்ட தேவைக்கு கடன் வாங்குறதா இருக்கட்டும். இப்படி நீங்க வங்கி கிட்ட இருந்து எந்த கடன் வாங்குறதா இருந்தாலும் வட்டி மேல உயரும், பயங்கரமா வட்டி விதம் மேல போகும். அதான் இத இன்டிகேட் பண்ணுது.
01:38
Speaker A
இந்த ஒரு நல்ல அனௌன்ஸ்மெண்ட்டு வெளியிட்டுருக்கார்ல வேற யாரும் இல்ல, ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா. எப்பவுமே இந்த பைமாரிட்டரி பாலிசி முடிஞ்ச பிற்பாடு பிரஸ் சந்திப்பாங்க. சந்திச்சு இத்தனை பேர் இருக்கோங்க, நாங்க மெம்பர்ஸா இதுல அனானிமஸா இந்த அளவுக்கு ஓட்டுகள் விழுந்துச்சு. அதுபடி நாங்க முடிவெடுத்து அனௌன்ஸ் பண்ணிட்டோம். ரெப்போ ரேட் விகிதத்தை
01:53
Speaker A
குறைக்கலாமா அதிகரிக்கலாம் சொல்லிட்டு அந்த வகையிலதான் நாங்க இந்த முறை பண்ணிருக்கோம் சொல்லி இருக்காப்பல. டீடைலா அசஸ்மென்ட் பண்ணாங்களமா, டீடைல்டா அதாவது இந்த மேக்ரோ எகானமிக் நல்ல எவால்விங்ல இருக்குல இது சார்ந்தும் பினான்சியல் கண்டிஷன்ஸ் இருக்கு. பாருங்க இந்தியால இதை பேஸ் பண்ணியும் அப்புறம் இந்த டெவலப்மெண்ட்ஸ் அவுட்லுக் இந்த நாலு விஷயத்தை நாங்க மேஜர் பில்லர்ஸ
02:11
Speaker A
வச்சிட்டோம். வச்சு இந்த நாலின் அடிப்படையில நாங்க முடிவுகளை எடுக்க ஆரம்பிச்சோம். அதுல நாங்கல்லாம் ஒரு மனதா முடிவு பண்ணது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திருவோம் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம். அண்ட் இன்னொரு பக்கம் பாரக்ஸ் ரிசர்வ் இருக்குல்ல அது நம்மகிட்ட ஹெல்தியாதான் இருக்கு. அந்ிய சலாவணி கையிருப்புல எந்த பிரச்சனையும் இல்லைன்னு அவங்க சொல்லிருக்காங்க. இது ஏன் ப்ரோ கீயா?
02:27
Speaker A
அவங்க சொல்லணும் இவ்வளவு தூரம் கீ பாயிண்ட் மாதிரி சொல்லணும்ன்னு கேட்டீங்கன்னா இலங்கையில பொருளாதாரம் சம்பிச்சதுல்ல அதுக்கு என்ன பிரைமரி ரீசன் நினைக்கிறீங்க? அங்க அன்னிய செலவணி கையிருப்பு ஃபுல்லா அடி வாங்குனதுதான்.
02:35
Speaker A
அந்த நிலைமை நாடு எந்த நாட்டுக்கும் வந்துர கூடாதுல்ல. அதான் அதை இங்க மென்ஷன் பண்ணி சொல்லிருக்காங்க. ஓகே ரைட். இவ்வளவு பெரிய டிசிஷன் ஆர்பிஐ எடுத்துருக்கல. அதுல இன்னொரு ஸ்டான்ட்ஸ் பத்தி நான் சொல்லிறேன்.
02:44
Speaker A
கேலிபரேட்ட டைட்னிங் அப்படின்னு சொல்லுவாங்க. ஆர்பிஐ டேர்ம்ல. என்னன்னா நம்ம நாட்டோட இன்பிளேஷன் இருக்குல்ல பண வீக்கம். இது எப்ப எப்பலாம் இழுத்து பிடிக்கணும்னு நினைக்கிறாங்களோ, கண்ட்ரோல் பண்ணும் நினைக்கிறாங்களோ அதை கீ டார்கெட்டா வச்சுக்கிட்டு இந்த கேலிப்ரேட்டர் டைட்னிங் அப்படின்ற ஸ்டான்ட்ஸ் கொண்டு வருவாங்க. அதுதான் இப்ப நடந்துருக்கு. சோ இதன் மூலமா இன்னும்ஃபர்தர் ரெப்போ ஹைக்ஸையும் நம்ம
03:04
Speaker A
பார்க்க போறோம்னு நினைக்கிறேன். ஏன்னா இந்த கேலிப்ரேட்ட டைட்னிங் சொல்ற விஷயமும் அதுதான். இது ஆரம்ப சிக்னல். இதுக்கு அடுத்து ஒரு பைமானிட்டரி பாலிசில மேபி இத தொடரலாம்னு சொல்லுவாங்க. அதுக்கு அடுத்து பைமானிட்டரி பாலிசில ரெப்போ ரேட் இன்னும் மேல போக வாய்ப்பு இருக்குன்னு சொல்லுவாங்க. ஏன்னா இந்த இன்பிளேஷன்ற தலைவழிய நம்ம கட்டுக்குள்ள வைக்கிறோம்னா
03:19
Speaker A
ரேட்ட ஏத்திதான் ஆகணும். நாளைக்கு அவங்க வந்துறாங்க. ரியல் ஜிடிபி குரோத் இருக்குல்ல அது 2027 பினான்சியல் இயருக்கு 7.1% இருக்கும்னு ப்ரொஜெக்ட் பண்ணிருக்காங்க. இதே ஆர்பிஐ தான். ஓகே ரைட். இதுல ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஃபேக்ட்டு சொல்லட்டுமா? வெஸ்ட் ஏசியா வார் இதனால உலக நாடுகளோட பொருளாதாரமே கொஞ்சம் ததிகணந்தம் போட்டுிட்டு இருக்கா? அமெரிக்க பொருளாதார
03:37
Speaker A
நிலைமையா என்ன நினைக்கிறீங்க? ரொம்ப கஷ்டம்தான். உலக பொருளாதாரமே கிட்டத்தட்ட அமெரிக்க பொருளாதாரத்தை நம்பி இருக்கு. அதாவது அங்க ஒரு நெகட்டிவான இம்பாக்ட்னா நம்ம இந்தியால இருக்கற ஷேர் மார்க்கெட்ஸ்லாம் ஊந்துகிட்டு இருக்கு.
03:46
Speaker A
இந்த அமெரிக்கால ஃபெடரல் ரிசர்வ் சொல்லுவாங்கள. இங்க ஆர்பிஐ பண்ணிச்சு பாருங்க இந்த ரெப்போ ரேட் அது மாதிரிதான். அங்கயும் கிட்டத்தட்ட அமெரிக்கால ஃபெடரல் ரிசர்வ் பாத்தீங்கன்னா 0.25% அளவுக்கு அவங்களும் ஏத்துனாங்க ஹைக் பண்ணாங்க. எப்போ செப்டம்பர் மாசம் நடந்தது இது.
03:59
Speaker A
எக்ஸாக்ட்டா இப்ப அதேதான் நாமளும் இப்ப பண்ணிருக்கோம். அமெரிக்கா இத பண்ணதுக்கு காரணம் வெஸ்ட் ஏசியா வரால ஏம்ப்பட்டிருக்க நெகட்டிவ்வான இம்பாக்ட் அமெரிக்காவோட பொருளாதாரத்துல. ஏன்னா ஆயில் பிரைஸ் மேல போச்சா? இது போக போக போக எல்லா பொருட்கள் வலையும் மேல போச்சா? கரன்சிஸ் வீக் ஆக ஆரம்பிச்சச்சுங்க அமெரிக்கா சார்ந்து. சோ அங்க நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்பட
04:18
Speaker A
ஆரம்பிச்சதா இதனால அவங்க இந்த ரேட்ட இன்கிரீஸ் பண்ணிடு பெடரேட் அப்படின்னு முடிவு பண்ணி பண்ணிருந்தாங்க. இப்ப நாம கிட்டத்தட்ட அதே பண்ணி இருக்கோம்.
04:23
Speaker A
ஆக்சுவலா வெஸ்ட் ஏசியா வாரல அமெரிக்கா மட்டும் இல்ல இந்தியாவும் இம்பாக்ட்ட பேஸ் பண்ணி இருக்குன்றதுதான் இங்க நம்ம புரிஞ்சுக்க முடியும் தெளிவா. சரி ரைட் இதுவரைக்கும் நான் சொன்ன விஷயங்கள் புரிஞ்சிருக்கும். ஆனா பல பேருக்கும் எதுக்கு இந்த ஆர்பிஐ, எதுக்கு இந்த ரெப்போ ரேட் இத வச்சு என்ன பண்ண முடியும்?
04:38
Speaker A
லோன்ஸ்ல எந்த அளவுக்கு வட்டி விதம் மேல வர வாய்ப்பு இருக்கு இதெல்லாம் பேஸ் பண்ணி அதோ கரன்சிய பத்தி சொன்னேன் பாத்தீங்களா? இதை பத்தி சில குழப்பங்கள் இருக்கும். இது எல்லாத்துக்கும் சேர்த்து உங்களுக்கு பதில் கொடுக்கற வகையில ஒரு தெளிவான தொகுப்பை காண்பிக்கிற மக்களே. முழுமையா பாருங்க கிளியர் ஆயிடும் உங்களுக்கு. இந்த
04:51
Speaker A
மத்திய வங்கி அப்படின்ற கான்செப்ட் இந்தியால மட்டும்தான் இருக்குன்னு நினைக்காதீங்க. எல்லா நாடுகளும் பெரும்பால இருக்கும். அதாவது ஒரு நாட்டுக்குள்ள எவ்வளவோ வங்கிகள் இருக்கலாம். இந்த அரசு வங்கி, தனியார் வங்கி அதுன்னு சொல்லிட்டு ஆனா எல்லா வங்கிகளுக்கும் தலையாய வங்கிதான் இந்த ரிசர்வ் வங்கி. அதனாலதான் இத சென்ட்ரல் பேங்க் அப்படின்னு கூட சொல்லுவாங்க. மத்திய வங்கி எல்லா
05:07
Speaker A
வங்கிகளையும் இணைக்கக்கூடிய ஒரு பவர் ஹப் தான் இந்த ரிசர்வ் பேங்க் அப்படின்றது. நம்ம இதுல ஆர்பிஐ அப்படின்ற மூன்று எழுத்துக்கள் கூடிய அந்த ஒரு பிரேஸ் பார்த்திருப்பீங்க. அதுக்கு விரிவாக்கம் என்னன்னு பாத்தீங்கன்னா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. அதாவது இந்திய ரிசர்வ் வங்கின்னு அர்த்தம். இந்த ரிசர்வ் வங்கியோட முக்கியமான பணிகள் பாத்தீங்கன்னா
05:24
Speaker A
ஐந்து பணிகள் இருக்கு. இந்த ஐந்து பணிகள்ல ஒன்னு மிஸ் ஆனாலும் நம்ம இந்தியா பொருளாதாரம் இருக்கு பாருங்க ஃபுல்லா ஸ்தம்பிச்சே போயிடும். இதுல முக்கியமான முதல் கடமை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாக்கு இருக்கறது என்னன்னு பாத்தீங்கன்னா கடன்களை கட்டுப்படுத்துறது.
05:35
Speaker A
கேக்கற எல்லாருக்குமே கடனை கொடுத்துட்டு அந்த வாங்குன கடனை யாரும் திருப்பி கொடுக்காம இருந்தாங்கன்னா பேக் டெப்ஸ்ன்னு சொல்லுவாங்க. இந்த வாரா கடன். இந்த எண்ணிக்கை அதிகமாக ஆரம்பிச்சிரும். ஒரு நாட்டில இருக்க வங்கிகள் சார்ந்து வாராக்கடன் எண்ணிக்கை எந்த அளவுக்கு மேல போகுதோ அந்த அளவுக்கு அந்த நாட்டோட பேங்கிங் செக்டார் இருக்கு பாருங்க. அது
05:51
Speaker A
கீழ போயிட்டு இருக்குன்னு அர்த்தம். சோ அப்பேற்பட்ட ஒரு குளறுபடி நடக்காம பார்த்துக்கிற முழு பொறுப்பும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிட்ட இருக்கு.
05:57
Speaker A
ரெண்டாவது கடமை பாத்தீங்கன்னா அரசுக்கான வங்கி. அதாவது இப்ப எனக்கு ஒரு பேங்க் அக்கவுண்ட் இருக்கும். நம்ம வீட்ல இருக்கறவங்களுக்கும் ஒரு பேங்க் அக்கவுண்ட் இருக்கும். இந்த அக்கவுண்ட் எல்லாம் இருக்கறது ஒரு பேங்க்லதான். இதே ஒரு அரசு சார்ந்த எல்லாவிதமான நிதியியல் நடவடிக்கையும் மேற்கொள்ளணும். மத்திய அரசோட பகுப்பாய்வு நிதியில இருக்கற தொகைகள் எல்லாம் மாநில அரசுகளுக்கு
06:13
Speaker A
பிரிச்சு கொடுக்கணும். ஏதாவது இடற்பாடு ஏற்படுற காலத்துல கடன் கொடுக்கணும். இது போல விஷயங்கள் எல்லாமே இந்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாக்குள்ள நடக்கும். சோ அதனாலதான் இதை அரசுக்கான வங்கி அப்படின்னு சொல்லுவாங்க. மூணாவது கடமை இந்த வர்த்தக வங்கிகள்ல்லாம் இருக்கு. பாத்தீங்களா இந்த பிசினஸ் பண்றவங்களுக்கு மட்டும் அதிகமா லோன் கொடுப்பாங்க. இது மாதிரி லோன்
06:29
Speaker A
கொடுக்கறதுக்கு அதிகப்படியா பணம் கையில இருக்கா இல்லையா அந்த பேங்க் கிட்ட இத ஃபுல்லா மானிட்டர் பண்ற முக்கியமான வேலையும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிட்ட இருக்கு.
06:45
Speaker A
சிலாவணியோட பாதுகாவலர் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. இப்ப ஸ்ரீலங்கா எதுக்காக இவ்வளவு தூரம் கதறிக்கிட்டு இருக்கு பொருளாதாரம் ஃபுல்லா ஸ்தம்பிச்சு போய். அவங்ககிட்ட அந்நிய செலாவணி கையிருப்பு பெருசா இல்ல.
06:54
Speaker A
அது அதிகமா உள்ள இருந்திருந்தா இந்த அளவுக்கு அந்த நாடு பாதிக்கப்பட்டிருக்காது. பொருளாதாரம் சீர்குலையும் செஞ்சிருக்காது. இது மாதிரி அந்நிய செலாவணி கையிருப்பு இந்தியா கிட்ட எந்த அளவா இருக்கு? இல்ல போதிய அளவு திரட்ட என்ன பண்ணலாம்? இது எல்லாமே பண்றது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாதான். இதுல ஐந்தாவது கடமை பாத்தீங்கன்னா, நம்மத யூஸ்
07:09
Speaker A
பண்ணிக்கிட்டு இருக்கோமே ரூபாய் நோட்டுக்கள். இதை ஃபுல்லா வெளியிடுறதும் இதே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாதான். இந்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவோட முக்கியமான கடமையில ஐந்தாவது கடமை ஒன்னு பார்த்தோம் பாத்தீங்களா இந்த ரூபாய் நோட்டுகள அச்சிட்டு வெளியிடுறதுன்னு சொல்லிட்டு.
07:20
Speaker A
இது ஒன்னும் சும்மா சாதாரண விஷயம் கிடையாதுங்க. ஆக்சுவலா வெளியிடுற ஆர்டரை பிறப்பிக்கிறது ஆர்பிஐ ஆனா இந்த அச்சிடுற வேலையை செய்றது ஒரு அமைப்பு. அந்த அச்சிடுற நிறுவனம் இருக்கு பாருங்க.
07:31
Speaker A
அவங்களுக்கு முழுக்க முழுக்க வழிகாட்டல்களை கொடுக்கறதும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. இதுல நிதி அமைச்சத்தோட பங்குன்றது பெருசா இருக்காது.
07:37
Speaker A
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாதான் அந்த நோட்டு ஃபுல்லா பிரிண்ட் பண்ணி வெளிய வர வரைக்கும் பொறுப்பானவங்களா இருப்பாங்க. இந்த எல்லா ப்ராசஸ்க்கும் தலையாய ஒரு பதவியில இருக்கவரு ஆர்பிஐயோட கவர்னர்.
07:46
Speaker A
அதாவது இப்ப நீங்க ஒரு ரூபாய் நோட்ட கொண்டு போய் கடையில கொடுக்குறீங்க. அதுக்கு மதிப்பு இருக்கு. நீங்க கேட்கற பொருளை கொடுக்கறாங்க. நீங்க என்ன நினைப்பீங்க அந்த ரூபாய் தாளுக்கு மதிப்பு நினைப்பீங்க. ஆனா விஷயம் அது கிடையாது.
07:56
Speaker A
அதுல ஒருத்தர் ஒரு வாக்குறுதியை கொடுத்திருப்பாரு அதுக்கு கீழ ஒரு சிக்னேச்சர் இருக்கும். அதுக்குதான் மதிப்பு. உதாரணத்துக்கு சொல்றதா இருந்தா இந்த 200 நோட் இருக்கு பாத்தீங்களா இதோட மையத்துல கொஞ்சம் நோட் பண்ணி பாத்துருக்கீங்களா ஒரு சிக்னேச்சர் இருக்கும் அதுக்கு கீழ கவர்னர்ு போட்டுருப்பாங்க. மேல பாத்தீங்கன்னா நான்கு வரிகள் வரும். அதை எப்பயாவது டைம்
08:13
Speaker A
இருந்தா படிச்சு பாருங்க.ஐ பராமிஸ் டு பே த பேரர்த சம் ஆப் 200 அப்படின்னு போட்டுட்டு கீழ அந்த கவர்னர் சிக்னேச்சர் இருக்கும். இந்த சிக்னேச்சர் தான் rர்பிஐ கவர்னர்ோட சிக்னேச்சர். இதுக்கு என்ன அர்த்தம்னா அதாவது கடைக்காரர் கிட்ட நீங்க அந்த பணத்தை கொடுக்குறீங்க. அவர் இத எப்படி புரிஞ்சுக்கணும்னா இந்த பணத்தை
08:29
Speaker A
வாங்கிக்கங்க. நான் உங்களுக்கு கடன் பட்டுருக்கேன். நான் திருப்பி கொடுத்துருவேன். அப்படின்னு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவோட கவர்னர் அவங்களுக்கு வாக்குறுதி கொடுக்கறதுக்கு சமம். கிட்டத்தட்ட பாண்டு மாதிரிதான் இந்த ஒவ்வொரு ரூபாய் தாளுமே செயல்பட்டுகிட்டு இருக்கு. நாம இதுக்கு மதிப்புன்னு நினைக்க கூடாதுங்க. ரூபாய் தாளுக்கு உள்ள இருக்க மேட்டர் இருக்கு பாருங்க இதுக்குதான்
08:44
Speaker A
மதிப்பு. இப்படிதான் ஒவ்வொரு ரூபாய் தாளும் இந்தியால புழக்கத்துல இருந்துிட்டு இருக்கு. மக்களே இந்த ரூபாய் நோட் அப்படின்றது எப்படி செயல்படுது? எதுக்காக அப்படி செயல்படுது இந்த எல்லா விஷயத்தையும் பாத்துட்டீங்க. அதாவது ஆர்பிஐ நமக்காக கடன் வாங்குது. இந்த குறிப்பிட்ட சர்வீஸ்யோ இல்ல ப்ராடக்ட்டோ விக்கறாங்கள அவங்க கிட்ட இத மனசுல வச்சுக்கங்க. அவ்ளோதான். இப்பதான்
09:00
Speaker A
முக்கியமான கண்டென்ட் உள்ள டிராவல் பண்ண போறோம். இந்த ரெப்போ ரேட் அப்படின்னா என்ன? அது எதுக்காக இப்ப எல்லா ஊடகங்களலயும் பெருசா பேசப்பட்டுட்டு இருக்கு தலைப்பு செய்தியா வந்துகிட்டு இருக்கு. இந்த ரெப்போன்ற வார்த்தைக்குள்ள இருக்க நாலு எழுத்துக்களை பார்கறதுக்கு சின்னதா இருக்கலாம். ஆனா சாதாரண விஷயம் கிடையாதுங்க. இது உங்களுக்கு புரிஞ்சிருச்சு அப்படின்னா நீங்க
09:16
Speaker A
பொருளாதாரம் சார்ந்து எதை படிச்சாலும் ஈஸியா புரிஞ்சிரும். முடிஞ்ச அளவுக்கு எளிமையா புரிய வைக்க ட்ரை பண்றேன். இந்த ரெப்போ அப்படின்றதோட விரிவாக்கம் பாத்தீங்கன்னா ரெடிஃபார்வர்ட் அப்படி இல்லன்னா ரீபர்சேஸ் அக்ரிமென்ட் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது இப்ப நாம வங்கியில கடன் வாங்குறோம். ஆனா வங்கி என்ன பண்ணும்னா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிட்ட கடன் வாங்குவாங்க. எப்படி போகும்
09:34
Speaker A
அந்த சைனா. இப்படி ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கிட்ட இருந்து இந்த வங்கிகள் வாங்குற குறுகிய கால கடன் இருக்கு பாத்தீங்களா இதுக்காக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு இன்ட்ரஸ்ட் போடுவாங்க.
09:42
Speaker A
அதுக்கான வட்டி விகிதத்தைதான் இந்த ரெப்போ வட்டி விகிதம் அப்படின்னு சொல்லுவாங்க. புரிஞ்சிருக்கும் நம்புறேன். இதுல இன்னொரு டவுட் வரலாம். அது என்னப்பா குறுகிய காலம் அப்படின்னு சொல்லிட்டு ஆக்சுவலா இது போல விதிக்கப்படுற வட்டி விகிதங்கள் அப்படின்றது ரெண்டு மாசம் வரைக்கும் மட்டும்தான் உயிர் போடு இருக்கும். அடுத்த ரெண்டு மாசத்திலயே எது வேணாலும்
09:58
Speaker A
நடக்கலாம். இந்த ரேட்ட குறைக்கலாம் ஏத்தலாம் இதெல்லாம் நடக்கும். அதனாலதான் குறுகிய கால கடன் வட்டி விகிதம் அப்படின்னு சொல்றோம். இதை வச்சுதான் வங்கியோட வளர்ச்சி அப்படின்றது அமையும்.
10:05
Speaker A
இந்த ரெப்போ ரேட்ட வச்சுதான். இதுல முக்கியமான விஷயமே பாத்தீங்கன்னா மக்களுக்கான வட்டி விகிதமும் இந்த ரெப்போ ரேட்ட பேஸ் பண்ணிதான் அமையும். புரியலையா ஒன்னு இல்லைங்க. இப்போ ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஏத்திட்டாங்க அப்படின்னா என்ன ஆகும்?
10:19
Speaker A
பேங்க்ல்லாம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு அதிகமா வட்டி கொடுக்க வேண்டியதா ஆயிடும். அந்த பேங்க் எங்க இருந்து சம்பாதிப்பாங்க பேங்க்ல போய் கடன் வாங்குறோம்ல சாமானியர்கள் நாமதான்.
10:28
Speaker A
நமக்கான கடன்ல இருக்க வட்டி விகிதத்தை இவங்க ஏத்தி விட்டுருவாங்க. சோ அங்க நீங்க கொடுக்கணும் அப்படின்றதுக்காக இங்க இருந்து கொண்டு போவாங்க. இதனாலதான் ரெப்போ ரேட் ஏறுச்சு அப்படின்னா நமக்கெல்லாம் ஷாக் ஏற்படுது. ஓகே பேங்க்ல லோன் வாங்கி இருக்கோம். இதுக்கான இன்ட்ரஸ்ட் ரேட்ட கொஞ்சம் ஏத்திருவாங்க போல இருக்கு இதுக்கு அப்புறம்ன்னு சொல்லிட்டு இவ்வளவு பெரிய
10:43
Speaker A
விஷயம் அந்த டேர்ம்ல இருக்கு. ஆனா இதுல இன்னொரு எக்செம்ஷன் ஒன்னு இருக்குங்க. அதாவது எல்லா பேங்குமே இந்த ரெப்போ ரேட்ட பேஸா வச்சு மட்டும்தான் ஏத்துது இறக்குது வட்டி விகிதத்தை அப்படின்னு சொல்லவே முடியாது. ஏன்னா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எவ்வளவோ ரெகுலேட் பண்ணி பாத்தாங்க ஆனா அவங்களாலயே முடியல. மக்களே இந்த
10:57
Speaker A
பணம்னா என்னன்னு பாத்துட்டோம். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவோட பபங்கஷன்ஸ் பாத்துட்டோம். ரெப்போ ரேட்னா என்ன? அதை பத்தியும் பாத்துட்டோம். இப்ப அடுத்த ஒரு முக்கியமான விஷயம். இந்த பைமானிட்டரி பாலிசி கேள்விப்பட்டுருக்கீங்களா? அதாவது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் அப்படின்னு சொல்லுவாங்க. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை இந்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியால உயர்மட்ட அதிகாரிகள் இருக்காங்கள
11:15
Speaker A
இவங்களுக்குள்ள மட்டும் அந்த ஒரு மீட்டிங் நடக்கும். அதுல பலதரப்பட்ட முடிவுகள் எட்டப்படும். அந்த முடிவுகள் ஒவ்வொன்னுமே இந்திய பொருளாதாரத்தோட தலையெழுத்தை மாத்திரம்தான் இருக்கும். அவங்க ரெண்டு முக்கியமான விஷயங்களை பத்தி பேசி இது சார்ந்து தீர்வை மேற்கொள்வாங்க. அதுல முதல் விஷயம் பாத்தீங்கன்னா பண வீக்கத்தை எப்படி கட்டுப்படுத்துறது. நாம ரெப்போ ரேட்டை ஏத்தனா கட்டுப்படுத்த முடியுமா?
11:33
Speaker A
இறக்கனா கட்டுப்படுத்த முடியுமா? இதை பத்தி பேசி இருக்காங்க. ரெண்டாவது விஷயம் பாத்தீங்கன்னா பொருளாதார வளர்ச்சி. நம்ம நாட்டோட பொருளாதார வளர்ச்சி அதிகமா இருக்கணும் அப்படின்னா ரெப்போ ரேட்டம எந்த அளவா கை வைக்கணும் இதை வச்சும் ஃபுல்லா அவங்க கிளான்ஸ் பாப்பாங்க. இந்த பொருளாதார வளர்ச்சியில இருக்க ஒரு என்ட்ரி கிளாஸ் பாத்தீங்கன்னா ஜிடிபி அப்படின்னு
11:48
Speaker A
சொல்லுவோம். கிராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இது ஒன்னும் புரிஞ்சுக்கிறதுக்கு கஷ்டமான விஷயம்ல்லாம் இல்ல. இப்ப நாம இறக்குமதி அதிகமா பண்ணாம ஏற்றுமதி அதிகமா பண்றோம்னா என்ன விஷயம்?
11:58
Speaker A
நாம பொருட்களை அதிகமா உற்பத்தி பண்றோம்ன்ற விஷயம். சோ ஒரு நாட்டுக்குள்ள எந்த அளவு பொருட்களை நம்ம உற்பத்தி பண்ணிக்கிறோமோ இதோட எண்ணிக்கை அதிகமாச்சுன்னா நாம மத்தவங்களுக்கு கொடுக்கிறோம் மத்த நாடுகளுக்கு. சோ நம்மளோட பொருளாதார வளர்ச்சிது மேல இருக்கும். இதுவே நம்ம உள்நாட்டு உற்பத்தி குறைஞ்சு போயிடுச்சு அப்படின்னா நாம மற்ற நாடுகளை நம்பி
12:14
Speaker A
இருக்கணும். சோ அவங்க பொருளாதார வளர்ச்சி மேல இருக்கும். நாம கீழேதான் இருப்போம். இப்படி எல்லாத்தையும் சேர்த்துதான் இந்த குறிப்பிட்ட பைமானிட்டரி பாலிசி மீட்டிங் அப்படிங்கறது நடந்து முடிஞ்சிருக்கு. இப்ப நான் அந்த ரெண்டு முக்கியமான விஷயங்களை பத்தி சொன்னேன் பாத்தீங்களா இதை பத்தி ஃபுல்லா டிஸ்கஸ் பண்ணி முடிச்சிட்டு இவங்க செய்தியாளர்களை சந்திக்கணும். அப்படி
12:28
Speaker A
சந்திச்சு இவங்க நாட்டு மக்களுக்கு சொல்லுவாங்க. இதுபோல நாங்க ரெப்போ ரேட்ட இந்த அளவு ஏத்தி இருக்கோம் அப்படி இல்லன்னா இறக்கி இருக்கோம் அப்படின்ற தகவல சொல்லுவாங்க. அதுக்கப்புறம்தான் நாம சந்தோஷப்படுறதா இல்லன்னா நம்ம துக்கப்படுறதான்றதா அப்படின்ற முடிவுக்கே வர முடியும். ஏதோ பொருளாதார டேர்ம் எங்களுக்கு பெருசா புரியாதுன்னு பல பேர் டவுட்லதான் வீடியோ ஆன் பண்ணிருப்பீங்க
12:43
Speaker A
பா்கறதுக்கு ஆனா ஓரளவுக்காச்சு புரிதல் உங்களுக்கு ஏற்படுத்தி இருப்பேன்னு நம்புறேன். இந்த காண்டென்ட்ட பொறுத்தவரைக்கும் நாமல்லாம் சிந்திக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம் அடி மேல அடி மேல அடி மேல அடி விழுந்துகிட்டே இருக்கு.
12:53
Speaker A
இந்தியர்களுக்கு சொல்றேன். நமக்கு பணம் கொடுக்கற மாதிரி எந்த ஸ்கீமும் பெருசா வரதில்லை. ஆனா படத்தை பாக்கெட்ல இருந்து பெருசா எடுக்கலாமட்டும் ஸ்கீம் நிறைய வந்துகிட்டுதான் இருக்கு. மக்கள் என்னதான் ஆகுறதுன்னு தெரியலைங்க. ஆல்ரெடி காங்கிரஸ் கட்சியினர் இந்த விஷயத்தை பெருசாக ஆரம்பிச்சிட்டாங்க. என்னங்க ரெப்போரட்ட இப்படி ஏத்தி வச்சிருக்கீங்க மக்கள் வைத்தில அடிக்கிறீங்கன்னு இது எங்க போய்
13:08
Speaker A
நிக்க போகுது அடுத்த நிகழ்ச்சி சந்திக்கலாம் நன்றி வணக்கம்.
Topics:ரெப்போ வட்டி விகிதம்RBIவங்கிக் கடன்இந்திய பொருளாதாரம்பைமாரிட்டரி பாலிசிகேலிபரேட்ட டைட்னிங்வட்டி உயர்வுகடன் வட்டிபொருளாதார வளர்ச்சிமத்திய வங்கி

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries and speaker detection. 30 minutes free.

Or transcribe another YouTube video here →