19ஆம் நூற்றாண்டில் இந்திய பெண்மணிகளின் அடக்கமும் பண்டித ரமாபாயின் சமூகப் பணிகளும் பற்றிய விரிவான விவரம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- 19ஆம் நூற்றாண்டில் இந்திய பெண்கள் மதம் மற்றும் சாதி அடிப்படையில் அடிமைப்படுத்தப்பட்டனர்.
- பண்டித ரமாபாய் பெண்களின் கல்வி மற்றும் சமூக விடுதலைக்காக போராடிய முன்னோடி.
- சமஸ்கிருத கல்வி பெற்று, சமூக எதிர்ப்புகளை தாண்டி ரமாபாய் சாதனை படைத்தார்.
- மிஷனரிகள் மற்றும் சமூக சீர்திருத்தக் கலைஞர்கள் பெண்களின் நிலையை மேம்படுத்த முக்கிய பங்கு வகித்தனர்.
- பெண்கள் கல்வி மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டம் இந்திய சமூக மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது.
What the video covers
- இந்திய சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் பெண்கள் மதம், சாதி காரணமாக அடிமைப்பட்ட நிலைமையில் இருந்தனர்.
- பண்டித ரமாபாய் என்ற பெண்மணி சமுதாயத்தில் பெண்களை மீட்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் போராடினார்.
- ரமாபாயின் தந்தை சமஸ்கிருதம் கற்றுத்தருவதால் சமுதாய எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.
- சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய ரமாபாய் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டித பட்டம் பெற்றார்.
- அவருடைய குடும்பம் உயர்சாதி இருந்தாலும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றியது.
- சாதி மற்றும் மத அடிப்படையிலான பெண்களின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து ரமாபாய் போராடினார்.
- வேதங்களைப் படிப்பது ஆண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்த சமுதாயத்தில் பெண்கள் மோட்சத்தை அடைய முடியாத நிலைமை இருந்தது.
- ரமாபாய் பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.
- மிஷனரிகள் இந்திய பெண்களுக்கு உதவிய விதம் மற்றும் அவர்களின் சமூக பணிகள் பற்றியும் விவரிக்கப்பட்டது.
- இந்திய பெண்களின் நிலையை மாற்றும் பணியில் பண்டித ரமாபாய் மற்றும் பிற மிஷனரிகளின் பங்கு முக்கியம்.
Chapters
- 00:00நிகழ்ச்சி அறிமுகம் மற்றும் மிஷனரிகள் பற்றிய முன்னோட்டம்
- 02:20பண்டித ரமாபாயின் சமூக எதிர்ப்புகள் மற்றும் சமஸ்கிருத கல்வி
- 04:38ரமாபாயின் குடும்ப பின்னணி மற்றும் வாழ்வியல்
- 07:00சாதி மற்றும் மத அடிப்படையிலான பெண்களின் நிலைமை
- 09:14மிஷனரிகள் மற்றும் பெண்கள் கல்வி மேம்பாடு
- 11:54பண்டித ரமாபாயின் சமூகப் போராட்டம் மற்றும் சாதனைகள்
- 15:54மிஷனரிகள் சமூக சேவை மற்றும் பொருளாதார மேம்பாடு
- 18:54முடிவுரை மற்றும் பெண்களின் முன்னேற்ற பாதை
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
சால்வேஷன் தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். நேயர்களே, மிஷனரிகள் இந்திய சமுதாய சிற்புகள் என்ற இந்த தொடர் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நம்ம இதுவரைக்கும் தொடர்ந்து நிறைய மிஷனரிகளை பற்றி பார்த்துக்கிட்டே வரோம். எப்படியாக சமுதாயத்திற்கு அவங்க சுவிசேஷ பணிக்குன்னு இந்தியாவுக்கு வந்தாலும் கூட எவ்வளவு தூரத்துக்கு சமுதாய சீதத்தில் அண்ணாங்கன்றது நம்ம பார்த்துட்டே இருக்கோம். இன்னைக்கு நம்ம பார்க்க போவது
Speaker A
இந்திய பெண்மணியை பற்றி 19ஆம் நூற்றாண்டுகளில் எப்படியாக வந்து பெண்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடிமைகளாக நடத்தப்பட்டனா என்பதைக் நம்ம பார்த்துட்டே வரோம். அப்படிப்பட்ட அந்த அடக்கு முறைகளுக்கு, அடிமை முறைகளுக்கு இருந்து பெண்களை மீட்கவும், அவர்கள் கல்வி போற்றுமாக ஒரு பெண்மணி வந்து பாடுபட்டிருக்காங்க இந்தியாவில். அவங்க பேர் வந்து எல்லாருக்குமே தெரியும் பண்டித
Speaker A
ரமாபாய்ன்னு நம்ம சொல்லுவோம் இல்லையா? அப்படிப்பட்ட பெண்மணியை பற்றி தான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். நம்மளோட கலந்துரையாடுவதற்காக திரு வெங்கடேசன் வந்திருக்கிறார். பண்டித ரமாபாய்ன்றப்ப அவங்க பெரிய ஒரு ஸ்காலர் அப்படின்ற அளவுக்குதான் தெரியுமே. ஒழிய ரீபார்மர் ஆமா தெரியுமே. ஒழிய ஒரு கிறிஸ்தவ பெண்மணி எனக்கு தெரியவே தெரியாது. எனக்கு அப்ப ஒருவேளை அந்த குறிப்பு இல்லையோ என்னமோ
Speaker A
தெரியல. அப்புறம்தான் ரொம்ப காலத்துக்கு அப்புறம் தெரிஞ்சுகிட்டது. ஆனா இப்ப இந்த நிகழ்ச்சிக்காக பண்டித ரமாவை பற்றி நம்ம படிக்க படிக்கிறப்ப, அவங்க வந்து எவ்வளவு பெரிய ஒரு ஸ்காலரா இருந்திருக்காங்க.
Speaker A
உயர்ந்த ஜாதியில் பிறந்து ஆனாலும் கூட அடித்தட்டு உள்ள பெண்களுக்காக சமுதாயத்தில வந்து அந்த காலத்தை இந்தியாவில் வந்து அடிமைப்பட்டு, கணவன் தான் கண்கண்ட தெய்வம் அப்படின்னு சொல்ற மாதிரிப்பட்ட ஒரு நிலைமையில எப்படியாவது ஒடுக்கப்பட்டிருந்த ஆண்கள்ன்னு சொல்லி அப்படி குரல் கொடுத்து, அவங்களை வந்து முன்னேற்றத்திற்காக பாடுபட்டாங்கன்னு நினைக்கிறப்ப நிஜமாவே மெய்சிலிருக்குன்னா மெய்சிதான் நம்ம
Speaker A
சொல்லணும். நம்ம வந்து இவங்க வந்து பாத்தீங்கன்னா 1858ல் ஏப்ரல் 23ஆம் தேதி பிறக்குறாங்க. ஒரு உயர்ந்த நீங்க சொன்னது போல பின்புலத்தில ஒரு வைத்திக உயர்ந்த குலத்தில அவங்க பிறந்தாலும், அவங்குடைய தந்தையார் அப்படின்னு பார்க்கும்போதே, அவரு தந்தையாரே பாத்தீங்கன்னா ஒரு பெரிய ஒரு புரட்சிகரமான கருத்தை உடையவராக இருந்திருக்கிறார். அப்படிங்கறத நம்ம வரலாற்றுல பார்க்க முடியுது. அவருடைய
Speaker A
தந்தையார் பாத்தீங்கன்னா, அவருடைய மனைவிக்கு அதாவது பண்டித ரமாபாய் அவர்களுடைய மனைவிக்கு சமஸ்கிருதம் சொல்லி கொடுத்திருக்கிறார். ஆமா, அந்த காலத்தில அவருக்கு சமுதாயத்தில பெரிய எதிர்ப்பு வந்திருக்கிறது.
Speaker A
பெண்ணுக்கு வந்து எப்படி சமஸ்கிருதம் சொல்லி கொடுக்கலாம் அப்படின்னு சொல்லி எதிர்ப்பு வந்திருக்கிறது. ஆனால் அந்த எதிர்ப்பை மீறி அவர் வந்து என்ன செஞ்சிருக்கிறார்? தன்னுடைய மனைவிக்கு சமஸ்கிருத மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறார். இதனால பல்வேறு ஒடுக்கு முறைகள் அவருக்கு ஏற்பட்டிருக்கு.
Speaker A
சமுதாயத்தில வந்து அவர் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறாங்க. இந்த மாதிரி பல பிரச்சனைகளை அவர் சந்தித்திருக்கிறார். ஆனா இதனுடைய பலன் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, ரமாபாய் அவர்களுக்கு சமஸ்கிருத புலமை பெறுவதற்கு இது ஒரு மிக முக்கியமான ஒரு காரணமா இருந்திருக்கு.
Speaker A
அவருடைய தாயாருடைய அந்த சமஸ்கிருதம் கல்வி அப்படிங்கிறது. பண்டித ரமாபாய் உடைய அந்த பண்டித பட்டத்துக்கு ஒரு மிக முக்கியமான ஒரு காரணமா இருக்கு. ஏன்னா சமஸ்கிருதத்தில ஒரு மனப்பாடமாக இவ்வளவு பகுதிகளை சொன்னதுக்கு பிறகுதான் அவருக்கு அந்த பண்டித பட்டமே கொடுத்திருக்காங்க. அதுவும் கல்கத்தா யுனிவர்சிட்டில பல்வேத்து கொடுத்துருக்காங்க. அப்ப அந்த அளவுக்கு வந்து அவர்களுடைய அந்த
Speaker A
படிப்பு அப்படிங்கறது. தன்னுடைய அந்த மார்க்கம் சார்ந்த கல்வியும் சரி, அறிவு சார்ந்த கல்வியிலும் அவங்க ரொம்ப அற்புதமா, அவங்க பெர்பாம் பண்ணி இருக்கறாங்க. அப்படிங்கறது ரொம்ப முக்கியமான ஒரு செய்தி. ஏன்னா அவங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும், அம்மாவுக்கு வந்து ஒன்பது வயசா இருந்துருக்கு, கல்யாணத்தப்ப, அப்பாவுக்கு அப்ப 40 வயசு. அப்ப அவர் அந்த
Speaker A
மாதிரிதான் அந்த காலத்துல கல்யாணம் நடக்கும். சின்ன பிள்ளைகளே கல்யாணம் பண்ணி வச்சிறாங்க பொம்பளைக்கு. தன்னுடைய மகளுக்கும் அப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுக்காக சடங்கு ஆன உடனேயோ இல்ல, குழந்தை திருமணமோ பண்ண மாட்டேன் உறுதியா இருந்திருக்காரு அவங்க அப்பா. பெரிய சமஸ்கிருத அறிஞர் ரமாபாயுடைய அப்பா. நீங்க சொன்ன மாதிரி,
Speaker A
ரமாபாயினுடைய சமஸ்கிருத கல்விக்கு வேதங்கள், புராணங்கள் எல்லாம் அவங்களுக்கு வந்து அத்துப்படி ஆயிருக்கு அவங்க. ரொம்ப இளம் வயதிலேயே வேதங்கள் என்னென்ன சொல்லுது, மோட்சத்தை அடைவதற்கு என்னென்ன வழிகள் இருக்குது, வேதத்தில எல்லாமே அவங்க வந்து கத்து வச்சிருந்திருக்காங்க. அவங்க அப்ப அப்படி பார்கறப்ப, அப்படி ஒரு பாரம்பரிய குடும்பத்தில அவங்க இருந்தாலும் கூட மிக உயர்ந்த சாதி அமைப்பில, அவங்க இருந்தாலும்
Speaker A
கூட அடித்தட்டு மக்களை, பெண்களை கஷ்டப்படுவ பார்த்திருக்காங்க. அது எப்படின்னா, அவங்களுடைய வரலாறு நம்ம படிக்கிறப்ப. ரமாபா பனிதரமாட அப்பா வந்து நல்ல ஒரு வயசையான குடும்பம்தான். ஆனால் அவங்க வந்து அந்த வேதத்தின்படி வாழ்ந்ததுனால மக்கள பிறக்க, மக்களுக்கு அதாவது யாத்திரக்கு வரவங்களுக்குல்லாம் சாப்பாடு போடணும், அவங்கள வந்து உபசரிக்கணும். அப்படில்லாம் நினைச்சு நிறைய வந்து அவங்க பண்ணுவாங்களா?
Speaker A
செலவளிக்கிறது எல்லை மீறிய செலவு. விளைவாக இவங்க வறுமைக்கு வந்துறாங்க. அப்ப என்ன பண்ணிருக்காங்க? அந்த உயர்சாதி வேதத்தின் படியாக அந்த உயர்சாதியினர் வந்து மத்த போய் பிச்சை எடுக்க கூடாது. வேற தொழில் உங்களுக்கு செய்ய முடியாது. யாருமே குடும்பத்துல உள்ள உறுப்பினர்களுக்கு வெளிய உலகமும் தெரியாது. அவங்களுக்கு வந்து வேற வேலையும் தெரியாது.
Speaker A
நீங்க கூட ஒரு நிகழ்ச்சியில குறிப்பிட்டாங்க. உயர்சாதி பெண்களுக்கு வந்து கல்வி கற்பதுக்காக அவங்க பள்ளிக்கூடத்துக்கு போக முடியாது. வந்துதான் கற்கணும் அப்படின்னு சொல்லிட்டு. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில இருந்தவங்க ரமாபாய் அவ குடும்பம் என்ன ஆகுது? அப்படின்னா, இவங்க வேற ஊர் ஊரா போயி, அப்ப வேதங்கள் தெரிந்ததுனால வேதத்தை வச்சுதான் இவங்க பிழைக்க முடியும். அப்ப இவங்க அப்பா
Speaker A
என்ன பண்ணுவாராம்? ஒவ்வொரு கோயில், குளம் அப்படில்லாம் போய்ி அங்க வந்து வேதத்தின்படி எப்படி வாழணும், வேதத்தில என்னென்ன கதைகள் இருக்குது, வேதம் என்ன சொல்லுது அப்படி எல்லாம் வந்து அவர் சொல்லி தருவாராம். அதன் மூலமாக வருகிற வருமானத்தை வச்சுதான் அவ வாழ்ந்துருக்காங்க. சமஸ்கிருத மொழி சொல்லி கொடுக்கறது இப்படி பல கல்விகள் இருக்காங்க. அப்ப அப்படி பண்றப்பதான் அந்த
Speaker A
மாதிரி ஊர் ஊரா போவாங்களாம். ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு ஊர்ல இருப்பாங்க, இன்னொரு ஆறு மாசத்துக்கு, ஆறு மாசத்துக்கு இன்னொரு கோயில் இங்க இருக்குது. அப்படி மாதிரி தேடி போறப்ப வழியில அவங்க வந்து நிறைய பெண்களுடைய கஷ்டங்களை பார்த்துருக்காங்க. எப்படி எல்லாம் வந்து குடும்பத்துக்குள்ள வந்து சாதியின் பெயரால, மதத்தின் பெயரால பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள்
Speaker A
அதெல்லாம் பார்த்திருக்காங்க. அதுல வந்து நம்ம இப்ப நம்ம இப்ப நம்ம கலைக்கலா சொல்லுவோம். கணவனே கண்கண்ட தெய்வம் அப்படின்னு சொல்லிட்டு ஆனா அவங்க சொல்றாங்க. அவங்க ஆட்டோபயோகிராபில அவங்க பண்டித ரமாபாய் சொல்றாங்க, பெண்கள் ஏன் இப்படி இழிவா நிலைக்கு இருந்தாங்க? அப்படின்னா அவங்களுக்கு வந்து எந்த ஆண்கள் மட்டும்தான் அந்த வேதத்தை படிக்க முடியும்.
Speaker A
அப்ப வேதத்தை படித்தால் தான் மோட்சம் கிட்ட முடியும். அப்ப பெண்களுக்கு வேதத்தை படிக்கறதுக்கே இல்ல, உயசா இருந்தாலும் சரி, கீழ தாழ்த்த சாதி வேதத்தை படிக்க முடியாது. அவங்களுக்கு அதனால கணவனுக்கு சிசு செய்வதுதான் அதன் மூலமாகத்தான் அவங்க வந்து மோட்சத்தை போக முடியும்ு சொல்லிட்டு. அவங்களுடைய நம்பிக்கை, மத நம்பிக்கை, அவங்களுக்கு அதன்படிதான் பெண்கள் வேற
Speaker A
வழியே இல்லாமல் எல்லா நிலையிலும் ஆண்களை சார்ந்து வாழும்படியாக இருந்ததுனால இவ்வளவு கொடுமைக்கு உள்ளானார்கள் என்று அவங்க எழுதுறாங்க. அவங்க வந்து பாத்தீங்கன்னா எல்லா இடத்திலும் போராடத்தல்லாம் பெண்களுக்கு படுற கஷ்டத்தை பார்த்துட்டு தான் வந்து அதை வந்து நீக்கணும். அந்த பெண்களுடைய துன்பங்களை கலையணும் சொல்லிட்டு அவங்க தீர்மானம் பண்றாங்க போலவங்க அப்படியாக ஒரு
Speaker A
அது அந்த அந்த பாதை. அவங்களுடைய அந்த பயணம் அப்படிங்கறது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அது வந்து வேதாகமத்தை நோக்கி திரும்புகிறது. அப்படிங்கறத நம்ம பார்கறோம். ஆமா, அவங்க வந்து படிப்படியாக வேதத்தை வாசிக்க ஆரம்பிக்கிறாங்க. அதன் மூலமாக அவங்க வந்து ஆண்டவருடைய அன்பை தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பா மாறுது. ஆமா, ஆமா.
Speaker A
இது நல்லா நீங்க சொன்ன ஆண்டவருடைய அன்பை அவங்க எப்படி தெரிஞ்சுக்கிட்டாங்க? ஒரு வரலாற்று குறிப்பு என்ன? அப்படின்னா, அவங்க வந்து இந்தியாவில இருக்கப்பவே அவங்களுக்கு வந்து ஒரு ஏதோ சுவிசேஷத்த கூடுத்த போயிருக்காங்க. போனப்ப வந்து அங்க உள்ளவங்கல்லாம் ரொம்ப, அவங்கள எல்லாம் வரவேற்று உட்கார எல்லாம் வச்சிருக்காங்க.
Speaker A
அப்பதான் முதல் முதல்ல வந்து அவங்க வந்து மேச நாட்கள்ல்லாம் ஆட்களா உட்கார்ந்து படல்லாம் அவங்க பா்கறாங்களாம். ஏன்னா வெளியுலகம் பார்த்ததே கிடையாது. ரொம்ப ஆச்சரியமா இருக்கு, எல்லாரும் அன்பா வந்து பேசுறாங்க. அப்பவே மனசு தொடப்பட்டிருக்குது.
Speaker A
ஆதியாகமத்தில உள்ள அந்த கிரியேஷன் ஸ்டோரிய பற்றி சொல்லிருக்காங்க. அப்ப தான் படிச்சதுக்கும் இந்த இதுல படிச்சிருக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு. அவங்க உணர்ந்துருக்காங்க.
Speaker A
ஆதியாகமத்தில உள்ள அந்த கிரியேஷன் ஸ்டோரிய பத்தி சொல்லிருக்காங்க. அப்ப தான் படிச்சதுக்கும் இந்த இதுல படிச்சிருக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு அவங்க உணர்ந்துருக்காங்க. மனசுல எப்பவுமே அவங்களுக்கு வந்து உண்மையான கடவுள் கடவுள்ன்ற மாதிரி இருந்துருக்கு.
Speaker A
அப்ப வந்து பெண்களுக்கு என்ன செய்யலாம் நல்ல கல்வியை எப்படி கொடுக்கலாம் எப்படி ஹவ டு பிரிங் எஜுகேஷனல் ரிபார்மேஷன்ற மாதிரி இன்னொரு தன்னை வந்து எக்யூப் பண்ணிக்கணும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் அவங்க கல்வி சீர்திருத்த முறையில படிக்க வேண்டும் என்பதற்காக மேல்நாட்டுக்கு போறாரு. அங்க வந்து சமஸ்கிருதம் ஒரு கல்லூரியில
Speaker A
சமஸ்கிருதம் சொல்லித்தராரு. இவரும் நல்லா ஆங்கிலத்தை எல்லாம் புலமை வாய்ந்தவரா விளங்குகிறார். அந்த சமயத்துல வந்து அவங்க சிஸ்டர்ஸ் சந்திக்கிறாங்க. அதாவது மதத்துல உள்ள கேத்தோலிக் சிஸ்டர்ஸாதான் இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். அவங்ககிட்ட சொல்ற கேக்குறாங்க நீங்க எப்படி இவ்வளவு தொண்டுலம் படைத்தவரா இருக்காங்க எப்படி இவ்வளவு எல்லாட்டையும் அன்பா அவங்களால இருக்க முடியும்ன்றப்ப அவங்க
Speaker A
சொல்லிருக்காங்க நாங்கள் வழிபடுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அவர் மூலமாகதான் நாங்க இந்த அன்பை வந்து கத்துக்கிட்டோம் அப்படின்னு சொல்லி அவங்களுக்கு சொல்ல ஆரம்பிச்ச பிறகுதான் அவங்குடைய மனம் வந்து தன்னுடைய மதம் சார்ந்த தான் ஏற்கனவே வைத்திருக்கின்ற அ அந்த மதம் சார்ந்த நம்பிக்கைகளை விட இது எப்படி இருக்கு என்று பார்ப்பதற்காக அவங்க
Speaker A
வந்து திருமறை எல்லாம் படித்ததாகவும் அது அந்த கடவுள் கர்த்தராக இயேசு கிறிஸ்து மனதை கவர்ந்ததாகவும் தனது மனத்திற்கு உகந்த தான் பின்பற்றக்கூடிய மதமாக இருப்பதால அவங்க வந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிருக்காங்க ஏன்னா அவங்க ஏற்கனவே வந்து நிறைய அந்த சமஸ்கிருத ஸ்லோகங்கள் இப்படிப்பட்ட விஷயங்கள்ல்லாம் படிச்சிருந்ததுனால ஆன்மீகம் அப்படிங்கறது அவங்களுக்கு ஒரு மிக பரிச்சயமான ஒன்னு அத வந்து இயேசு
Speaker A
கிறிஸ்துவினுடைய அந்த வெளிச்சத்தோடு அவங்க கம்பேர் பண்ணி பார்க்கும்போது அவங்களுக்கு ஒரு பெரிய மிகப்பெரிய ஒரு ஆச்சரியங்கள் அங்க இருந்திருக்கு அப்படிங்கறத நம்ம பார்க்க முடிகிறது ஏன்னா அவங்களுடைய அந்த ஆட்டோபயோகிராபில கூட பாத்தீங்கன்னா நிறைய நிறைய வேத வசனங்களை குறிப்பிட்டு குறிப்பிட்டு குறிப்பிட்டு அவங்க தங்களுடைய கடிதங்களை எழுதக்கூடியவங்களா இருந்திருக்கறாங்க அப்ப அந்த மாதிரி அந்த
Speaker A
அளவுக்கு வேத வசனங்கள் அவர்களுடைய அந்த இருதயத்தை தொற்றுருக்கு அவருடைய வாழ்க்கையை பெரிய அளவுக்கு அது மாற்றி இருக்கு அப்படிங்கறதையும் நம்மால பார்க்க முடிகிறது ஏன்னா அவங்க அங்க அது மட்டுமில்ல மேலை நாடுகள்ல் அவங்க போய் பாத்தீங்கன்னா பல இடங்கள்ல வந்து பெண்களை குறித்து இந்திய பெண்களுடைய நிலைகளை குறித்து அவர்களுடைய மறுமலர்ச்சியை குறித்து அவங்க வந்து
Speaker A
ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட இடங்கள்ல் பேசி இருக்கறாங்க அப்ப அது மூலமா வந்து உங்களுக்கு பாத்தீங்கன்னா மேலை நாடுகள்ல் குறிப்பா அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள்ல் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு இந்திய பெண்களுக்கு ஏதாவது ஒரு வகையில நாங்கள் உதவுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்குமா அப்படிங்கற அளவுக்கு அங்க இருக்கிற மக்கள் தங்களை வந்து இந்த விஷயத்துக்குள்ள
Speaker A
அர்ப்பணிக்கறதுக்கு ஒரு மிக முக்கியமான ஒரு காரணமா இருந்திருக்கு ஆமா மனமாற்றம் அவங்களுக்கே வருது உதவி செய்யணும் இந்திய பெண்கள் இந்திய பெண்களுடைய நிலையும் அவர்களுடைய அந்த ஒடுக்கப்பட்ட நிலையும் அவர்களுக்கான அந்த எதிர்கால இருண்ட ஒரு நிலையையும் பார்த்துட்டு, அவங்களுக்கான ஒரு முழுமையான ஒரு வெளிச்சம் உண்டாகணுமே இந்த இந்த மண்ணின் மக்கள் இந்த தேசத்தினுடைய மக்கள்
Speaker A
இந்திய தேசத்தினுடைய மக்கள் ஒரு பெரிய வெளிச்சத்தை நோக்கி வரணுமே அது குறிப்பாக பெண்கள் பெரிய வெளிச்சத்தை நோக்கி வரணுமே அப்படிங்கறதுக்காக அங்க இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய வாழ்விலிருந்து அவங்க வந்து ஒரு பங்களிப்பை கொடுக்கணும் அப்படிங்கிற எண்ணத்தில வந்து அதை வந்து இந்தியாவுக்கு இந்திய கல்விக்கு குறிப்பாக பெண்களுடைய கல்விக்கு கொடுப்பதற்கு அவர்கள் முன்
Speaker A
வந்தாங்க. அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்மால பார்க்க முடியுது அவங்களுடைய தைரியத்தையும் வந்து அக்கரையும் பெண்கள் மேல விழுந்த பாராட்டணும் ஏன்னா அவங்க சின்ன பிள்ளைல இருந்து அம்மா அப்பா இவங்க கொஞ்சம் இளவயதிலையா இறந்து போயிட்டாங்க கூட பிறந்தவங்கல்லாம் இறந்து போயிட்டாங்க இவரும் இவருடைய அன்னை ஸ்ரீனிவாசன்ன்றவர்தான் எல்லா இடத்துக்கும் தனியா போய் சுத்தி வந்து எப்படி அப்பா
Speaker A
வந்து இந்த வேதங்களை சொல்லி பிழைத்தாரோ அது மாதிரிதான் பிழைக்க வேண்டிய கட்டாயத்துல இருந்தாங்க அப்புறம் சமஸ்கிருத லெக்சர் போவாங்க அவங்க அப்படிப்பட்ட காலகட்டத்துல அப்புறம் திருமணம் பண்றாங்க அவங்க யாரை திருமணம் பண்றா ஒரு வழக்கறிஞர் தன்னை விட தாழ்ந்த சாதிள் வழக்கறிஞர் அவங்க திருமணம் பண்றாங்க. அவரும் வந்து ரொம்ப கூ ரொம்ப
Speaker A
சீக்கிரத்தில இறந்து போயிட்டாரு ஒரு மகள் பிறக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கஷ்டமான சூழ்நிலையில தனக்கு எந்தவிதமான ஒரு பின்னணியும் இல்லாமல் இந்திய பெண்கள் மீது அவ்வளவு கர்சனையும் அக்கரையும் வந்து அவங்களுக்கு இருந்திருக்குது. மனசுல வந்து அந்த பெண்களுக்கான ஒரு அன்பு அவங்களுக்கு இயல்பாவே அப்படி சுறந்திருக்க அதன் மூலமா அவங்க என்ன செய்றாங்க அப்படின்னா சாரதா மிஷன் அப்படின்னு ஒரு
Speaker A
மிஷன முதல் முதலா ஆரம்பிக்கிறாங்க. ஒரு மூவ்மென்ட் அவங்க இந்தியாவுக்கு வந்த உடனே அவங்க அது முன்னாடியே வந்து ஆரிய மிஷன்னு ஒரு மிஷின வச்சிருந்திருக்காங்க அவர் இந்தியாவில இருக்கும்போதே வந்து ஆரிய மிஷன் அப்படின்னு ஒரு மெஷின வச்சிருந்திருக்காங்க ஒரு மூவ்மெண்ட்ட வச்சிருந்திருக்காங்க அதுக்கு பிறகு அவங்க திரும்ப வந்து சாரதா மிஷன் அப்படின்னு
Speaker A
பெண்களுக்காக பெண்களுடைய கல்விக்கு பெண்களுடைய பாதுகாப்புக்கு கைவிடப்பட்ட பெண்களை அரவணிப்பதற்கு இப்படி அவங்க வந்து முதல்ல தொடங்குறாங்க அந்த சாரதா மிஷன் முதல்ல தொடங்கப்படுது. அது மூலமாக பல ஏழை பெண்களுடைய வாழ்க்கையில ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி அவங்க கொடுக்குறதுக்கு முயற்சிக்கிறாங்க பல கல்வி ரீதியா அவங்களுக்கு வந்து உரைவிடம் தங்குமிடம் உணவு இப்படி பல நிலைகள்ல
Speaker A
அவங்களை பாதுகாக்கறது அவங்களுக்கு கைத்தொழில் கூட கடுத்து கொடுத்துருக்காங்க போல ஆமா அது எல்லாமே பால் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன விற்பனைகள் பண்றது மத்த அவங்களுக்கு செய்யக்கூடிய கைத்தொழில் அவங்க தங்களுடைய கால்ல பெண்கள் நிப்பதற்காக வந்து அவங்களுக்கு ஒரு பொருளாதார மேம்பாடு வரணும் க பண்ணி கொடுத்துருக்காங்க விதவைகளுக்கு ரொம்ப பண்ணிருக்காங்க அவங்க பண்ணிருக்காங்க
Speaker A
பிற்காலத்துல இந்த சாரதா மிஷன் வந்து முக்தி மிஷன் அப்படின்னு மாறுது ஆமா இன்னைக்கு கூட அது இருக்கு இருக்கு அப்படின்னா முக்தி மிஷன்னா விடுதலைக்காக முக்தினா விடுதலை அப்படிங்கிற விடுதலைக்கான இயக்கம் அப்படிங்கற மாதிரி தொடங்கி பல்வேறு தரப்பட்ட மக்களுக்காக அவங்க உதவி செஞ்சிருக்காங்க குறிப்பாக பாத்தீங்கன்னா மத்திய பிரதேசத்தில ஏற்பட்ட பஞ்சங்கள் அந்த காலகட்டத்தில் பாத்தீங்கன்னா
Speaker A
ஏறக்குறைய 1500 2000 பேரை தன்னுடைய மிஷன்ல வச்சு அவங்க பாதுகாத்திருக்காங்க அதுக்கப்புறம் குஜராத்தில ஏற்பட்ட பஞ்ச காலங்கள்ல ஏறக்குறை 2500 பேருக்கு மேல வந்து அவங்க தங்களுடைய இதுல அழைத்து கொண்டு வந்து அவர்களை பாதுகாப்பதற்கு இன்னும் சொல்லப்போனா எந்தவிதமான அவங்களுக்கு ஒரு பெரிய எஸ்டாப்ளிஷ்மென்ட்டோ பெரிய பணமோ எதுவுமே கிடையாது இவங்களை குறித்து சொல்லும்போது அந்த காலத்தில
Speaker A
இருந்த அந்த வேதாகம தேவ அறிஞர்கள் சொல்லும்போது ஜார்ஜ் முல்லர் எப்படி தன்னுடைய விசுவாசத்தினால வந்து ஒரு அனாதை இல்லங்களை வைத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை பிள்ளை பிள்ளைகளை எப்படி தன்னுடைய இல்லத்தில வளர்த்தாரோ எப்படி அவர்களை உருவாக்கினாரோ அது போன்ற ஒரு விசுவாசத்தை ஒரு இந்திய பெண்ணிடத்திலே பெண்மணி இடத்திலே காணப்படுகிறது அப்படின்னு சொல்லி சொன்னத நாம பா்கோம்
Speaker A
இப்ப அவங்க அப்பா என்ன செஞ்சிருக்காருன்னா இவங்க ஊர் ஊரா இந்த மாதிரி போய் இது பண்ணி இருந்துருக்காங்க வறுமையினால வாடுறப்ப ஒரு நாள் ஒரு காலகட்டத்துல ரொம்ப பஞ்சம் வந்துருச்சு பஞ்சத்துல வந்து இந்த குடும்பத்துல உள்ள அம்மா அப்பாவ யாரும் காப்பாத்த முடியல அப்ப இவங்க அப்பா என்ன நினைச்சிருக்காரு தற்கொலை பண்ணிக்கணும்னு
Speaker A
நினைச்சிருக்காரு அந்த ஒரு புனித நதியில எங்கயோ ஒரு இடத்துல போயி உள்ள மூழ்கிடணும்னு நினைச்சட்டு கடைசியா வந்து ஒவ்வொரு பிள்ளைகளையும் கூப்பிட்டு அவர் பேசி இருக்கிறாரு அப்ப ரமாபாய் கைய பிடிச்சிட்டு அவர் என்ன சொல்லிருக்கார் அப்படின்னா நான் வந்து உன்னை வந்து கடவுளுக்கு ஒப்பு கொடுக்கிறேன் நீ வந்து கடவுளை மட்டும்தான் நீ சார்ந்துருக்கணும்
Speaker A
கடவுளுக்கு மட்டும்தான் நீ தொண்டு செய்யணும் அப்படின்னு சொல்லி அவர் வந்து வாக்கு பண்ணி வாங்கிட்டு ஆனா அவர இவங்கல்லாம் விடல அந்த அந்த குளத்துக்குள்ளயோ நதிக்குள்ளயோ போய் சாகறதுக்கு தற்போது செய்ய விடல ஆனா அவர் உடனே சீக்கிரத்தை இறந்து போயிட்டார் பஞ்சத்தினால எதுக்கு சொல்றேன் அப்படின்னா அவங்க அப்பா எந்த கடவுள நினைச்சு சொன்னாரோ
Speaker A
தெரியல ஆனால் ஆண்டவர் அவர் கேட்டுட்டுதானே இருப்பாரு. ஒரு மனசுல வந்து அவங்க அப்பாவும் தன்னுடைய மகள் ஒரு உண்மையான கடவுளை நம்பி இருக்கணும்ன்ற எண்ணம்தான்.
Speaker A
ரமாபாய் அவங்களுக்கும் பண்டித ரமாபாய்க்கும் அதே எண்ணம்தான். அதனாலதான் ஆண்டவர இயேசு கிறிஸ்துவ இது பண்ணி அவங்கள இவ்வளவு தூரத்துக்கு வழிநடத்தி ஒரு பிரகாசமா எறிஞ்சிருக்காங்க ஆண்டவருக்காக வேண்டி அவங்க.
Speaker A
இதை சொன்ன உடனே நான் என்னுடைய லைப்ல நடந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு சொல்லணும்னு விரும்புறேன். என்னுடைய தாத்தா ரொம்ப பக்தி மார்க்கத்தில இருந்தவர்.
Speaker A
அவரு என்ன செய்வாருன்னா என்னுடைய ஜாதகத்தை வந்து அந்த காலத்துல அவர் வந்து ஒவ்வொரு இடத்துக்கு கூட்ட்டு போய் காமிப்பாரு.
Speaker A
அதுல ஒரு நபர்ட்ட கொடுத்த உடனே அவரு பார்த்துட்டு ஒரு 15 வயசுக்கு அப்புறம் இவனோட லைஃப் எங்கேயோ போயிரும். இவன் கடவுளுக்கு சேவை பண்ணுவான்.
Speaker A
அப்படின்னு சொல்லிருக்காரு. சரி அதை பார்த்து எங்க தாத்தாவுக்கு பயங்கர சந்தோஷம் ஏன்னா நானும் பிற்காலத்துல வந்து அவர் மாதிரி அல்லது அவருடைய மகன் என்னுடைய மாமா அவங்கள மாதிரில்லாம் வந்து நான் வந்து இருப்பேன் அப்படின்னு அவங்க நினைச்சிருக்காங்க. ஆனா ஆச்சரியமான விஷயம் என்னன்னா நான் 15 வயசுக்கு பிறகுதான் வந்து இயேசு கிறிஸ்துவை சொந்த ரட்சகரா
Speaker A
ஏற்று கொள்றேன். அப்ப பாருங்க கிட்டத்தட்ட நான் ஐந்து வயதில இருக்கும்போது சொல்லப்பட்ட ஒரு விஷயம். ஆமா ஆனா 15 வயதுக்கு பிறகுதான் வந்து பாத்தீங்கன்னா அது வந்து வேற ஒரு ஆங்கிள் நடக்குது இப்ப நீங்க சொன்னதுனால பண்டிதர் ரமாபாயுடைய லைப்ல இப்படி அவங்க தந்தை கடவுளுக்குதான் நீ பணி செய்யணும் அப்படின்னு சொன்னது வந்து உண்மைதானே அப்ப
Speaker A
ஆண்டவருடைய அந்த உண்மையான இதுக்குள்ள வெளிச்சத்தை தேடி அவங்க வந்துகிட்டாங்க அப்படிங்கறது ஏன்னா அவங்க ரொம்ப பக்தி உள்ள ஒரு பெண்மணியாக இருந்ததுனால வந்து அந்த நல்ல ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை நடத்த வேணும் மத்தவங்கள முன்னேற்றத்திற்காக வேண்டி தான் பாடுபடனு நினைச்சதுனாலதான் அது உள்ள இருந்துட்டே இருக்குது அப்ப வந்து அந்த வாஞ்சைய வந்து பைபிள்
Speaker A
அதான் சொல்லுது பக்தி உள்ளவனே கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொள்கிறார் அப்படின்னு வசனம் சொல்லுது அப்ப உண்மையான ஒரு தேடலோட இருக்கக்கூடிய மனிதர்களை ஆண்டவர் எப்படியாகலும் சந்திக்கிறார் அப்படிங்கறதுக்கு இவங்க ஒரு மிக முக்கியமான ஒரு சாட்சியா இருக்கறாங்க அப்படின்றத பார்கலாம் சொல்லலாம் அப்புறம் அதே மாதிரி பெண்கள் கல்விக்கு ரொம்ப அவங்க வந்து பாடுபட்டுருக்காங்க ஏன்னா தான் வந்து
Speaker A
கல்வி கற்க வெளியில அனுப்பப்பட முடியல ஆனாலும் ஒரு பெரிய ஸ்காலராக வந்துருக்காங்க அவங்க அப்ப அதுக்காக என்ன பண்ணிருக்காங்கன்னா இந்தியாவுல வந்து ஒரு கமிஷன் மாதிரி ஏதோ போட்டுருந்துருக்காங்க ஒரு அமைப்பு அரசாங்கமே அதுல வந்து பண்டித ரமாபாய் வந்து பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவங்க பேசுறப்ப இந்தியாவில் உள்ள பெண்களுக்கு எப்படி கல்வி ஒன்னுமே கற்க முடியவில்லை அதுல
Speaker A
குறிப்பாக மருத்துவ சம்பந்தப்பட்ட காரியங்கள்ல்லாம் எவ்வளவோ அவங்களுக்கு தெரியாம இருக்கு அப்படில்லாம் சொல்லி அவங்க பெரிய பேசி கட்டாயமாக இந்திய பெண்களை வந்து கல்வி கற்கும்படி வைக்கறதுக்கு இது ஏதாவது உதவி பண்ணனும் அப்படின்னு சொல்லி அவங்க பேசின பேச்சு விக்டோரியா மகாராணி வரைக்கும் போயிருக்கு அவங்க பிரிட்டிஷ் வரைக்கும் போயிருக்கு ஏன்னா அந்த அரசாங்கம் பிறந்தனால இவங்க
Speaker A
பேச்சின் அடிப்படையில அவ்வளவு பெரிய போரத்துல இவங்க வந்து இந்திய பெண்களை பற்றி பேசுனதுனால பிரிட்டிஷ் அரசாங்கமே இந்திய பெண்களை வந்து கல்வி கற்பதற்கு பலவிதமான வாய்ப்புகளை வந்து திறந்து கொடுத்தது அப்படின்னு நம்ம பார்க்கலாம் நம்ம வந்து ஆக்சுவலா இவங்க வந்து அந்த காலத்துல ஒரு பெரிய ஒரு ஆளுமை அப்படின்னே நம்ம சொல்ல
Speaker A
முடியும் ஏன்னா 1890கள்ல 80களுக்கு பிறகு 9093ல காங்கிரஸ்னுடைய வட்டமேசை மாநாட்டில பங்கு பெற்ற நபர்கள்ல இவங்களும் ஒரு மிக முக்கியமான ஒரு நபரா இருந்திருக்காங்க ஏன்னா பெண்கள் 10 பேர் தான் இருந்திருக்காங்க அதுல மூணு பெண்கள் கிறிஸ்தவர்கள் நம்ம ஏற்கனவே பார்த்தோம் அதுல ஒரு நபர் வந்து இவங்க மண்டித ரமாபாய் இவங்க ஆரம்ப காலங்களலயே வந்து வந்து
Speaker A
காங்கிரஸ்னுடைய அந்த வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு மிக முக்கியமான ஒரு நபர் அப்படிங்கறத இப்பதான் அந்த காங்கிரஸ்ன்றதுக்கு வேற அர்த்தம் வருது ஆனா அப்ப வந்து இந்திய மக்களை வந்து சுதந்திர போராட்டத்துக்குள் ஈடுபடுத்தனது அந்த மாதிரிதான இருக்குது அப்ப அப்ப வந்து அவங்களுக்கு அந்த பொலிட்டிக்கல் கான்ஷன்
Speaker A
இருந்துருக்கு அரசியல் மூலமாகவும் பெண்களுக்கு மற்ற ஏழைகளுக்கு உதவ வேண்டும் விடுதலை பெற்று தரணும்ு அவங்களுக்கு இருந்துருக்கு அவங்களுக்கு வந்து இல்ல அந்த அளவுக்கு ஒரு ஒரு சிறப்பான திட்டமிடப்பட்ட ஒரு பணி அப்படின்னு சொல்லலாம் அவங்களுடைய பணி எல்லா நிலைகளலையும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சனைகளுக்குள்ள இருக்கிற மக்கள் கைவிடப்பட்ட மக்கள் வாழ்க்கையில முன்னேற முடியாத மக்கள் இவங்க
Speaker A
எல்லாத்துக்குமே வந்து ஒரு வெளிச்சத்தை பாதிச்சணும் அப்படிங்கிற அடிப்படையில கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு அரசியல் இப்படி பல நிலைகளலயும் அவங்க சமூகம் சமயம் இப்படி பல விடுதலைகளுக்கான மிக முக்கியமான கூறுகளை அவங்க வந்து ஆராய்ஞ்சு அவங்க அதை தங்களுடைய வாழ்க்கையில் அப்பியாசித்து அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்திருக்காங்க அப்படிங்கறதுல பண்டிதர் ரமாயபாயுடைய பணி
Speaker A
வந்து ஒரு மிக அற்புதமான ஒரு பணியாதான் இருக்கு நீங்க இப்ப வெடிசன் சொன்னது எனக்கு ஞாபகம் வருது நிறைய இந்த பார்வையற்றவர்களுக்கு பார்வையற்றவர்களுக்கு அந்த கல்வி முறையை பூத்துறதுக்கு ரொம்ப உதவியா இருந்துருக்காங்க அவங்க படிக்கணும் படிக்க வைக்கணும் அப்படின்னு சொல்லிட்டு விளையாட்டு பள்ளி அந்த முறையும் கொண்டுட்டு வந்ததுக்கு இவதான் காரணமா இருந்துருக்காங்க அவங்க
Speaker A
ஒரு ஒரு புத்தகம் கூட நான் படித்தேன் இப்ப சமீபத்துல பண்டித ரமாபாய் ஒரு வாழ்க்கை வரலாறு அப்படின்னு சொல்லிட்டு மோ சந்தோஷ குமார் அப்படிங்கறவரு ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதுல வந்து சில விஷயங்களை ரொம்ப அற்புதமா அவர் வந்து குறிப்பிடுறார் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா பாகவத புராணத்தில இருந்து கிட்டத்தட்ட 18000 வெண்பாக்களை மனப்பாடம் செய்து
Speaker A
காட்டிய பிரம்மிக்க வைக்கும் சாதனை மூலம் அவருடைய சமஸ்கிருத மொழிப்புலமையை கண்டு வியந்த கல்கத்தாவை சேர்ந்த பண்டிதர்கள் அவருக்கு பண்டிதை பட்டம் வந்து கொடுத்திருக்கறாங்க அப்படின்னு சொல்றாங்க அந்த பண்டிதை ரமாபாய் என்ற பட்டம் வந்து 18000 வெண்பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்ததுக்கு தான் கொடுத்திருக்காங்க அதே மாதிரி பாத்தீங்கன்னா அமெரிக்க ஐக்கிய நாட்ல இருக்கும்போது அவர் கற்றுக்கிட்ட
Speaker A
அந்த அந்த முறைகள் அந்த கிண்டர் கார்டன் இப்ப நம்ம சொல்றோம். அந்த பள்ளி முறையை வந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தின பெண்மணி இவங்கதான் முதல் முறையா அப்படின்னு சொல்றாங்க.
Speaker A
அடுத்து பாத்தீங்கன்னா நீங்க சொன்னது போல பார்வையற்றவோருக்கு அந்த பிரைலி முறைப்படி வாசிக்க எழுத கற்றுத்தரும் அந்த சிறப்பு பயிற்சி பள்ளிகளை வந்து இந்தியாவில உருவாக்கினது இவங்கதான் அப்படிங்கறதையும் பார்க்கிறோம். அதுமட்டும்ல்ல அமெரிக்காவில இருந்து இந்த பாட புத்தகங்கள் இருக்கு இல்லைங்களா அவைகளை வந்து மராட்டிய மொழியில மொழிபெயர்த்து இங்க இந்தியாவில வெளிவிட்ட முதல் பெண்மணி இவங்கதான் அமெரிக்க பாட
Speaker A
முறைகளை அவங்க எப்படி கற்று கொள்றாங்க அப்படிங்கிற அந்த முறைகளை வந்து இங்க அவங்க வந்து மொழிபெயர்த்து இங்க வெளியிட்டுருக்காங்க மராட்டிய மொழியில மொழிபெயர்த்து வெளியிட்டுருக்கறாங்க அப்படின்னு பார்க்கிறோம் அதுக்கடுத்தது பெண்களுக்கு கல்வி அளிப்பதாலும் இளம் விதவைகளின் மறுமணங்களுக்கும் ஆதரவ அளிப்பதாலும் பெண் கல்வியாலும் பெண் சமூக அந்தஸ்தி உயர்த்திய முதல் பெண் சீர்திருத்தவாதியும் இவர்தான்
Speaker A
அப்படின்றாங்க அதாவது விதவை திருமணம் மறுமணம்ங்கறது இந்தியாவில் ஒரு மிக முக்கியமானது ஏன்னா விதவைகளுக்கு வந்து மறு வாழ்க்கையே கிடையாது அப்படிங்கறதுதான் வந்து அந்த காலத்தினுடைய எழுத ஒரு மிகப்பெரிய சட்டமாக இருந்த பெரிய தலைவர்கள்ல்லாம் கூட எதிர்த்துருக்காங்க திருமண விதவை திருமணம்ங்கறத ஏற்றுக்கொள்ளவே முடியாது விதவைகளுக்கு மறுமணம்ங்கறதே வந்து கூடாது அப்படின்னு இருந்த காலகட்டங்கள்ல அந்த
Speaker A
விதவை மறுமணம்ங்கறத பண்டிதர் அம்மாபாய் வந்து ரொம்ப இன்சிஸ்ட் பண்ணிருக்காங்க அதன் மூலமா பெண்கள் விடுதலையில ஒரு மிக முக்கியமான ஒரு பங்களிப்ப இன்னைக்கு இந்தியா வந்து பெண்கள் இன்றைக்கு இந்தியாவினுடைய மிக முக்கியமான ஒரு ஆளுமைகளாக வந்து கொண்டிருக்கும் போது இந்திய நாட்டையே இன்னைக்கு பெண்கள் ஆட்சி செய்த வரலாறு எல்லாம் நம்மால பார்க்க
Speaker A
முடியுது அப்படி இருக்கும்போது அந்த இடத்துக்கு நகறுவதற்கு ரமாபாயினுடைய அந்த ஆரம்ப முயற்சி அப்படிங்கறது ரொம்ப முக்கியமானதா இருக்கு அது மட்டுமல்ல அவரே இந்தியாவின் வாழ்க்கை முறை தொழில் தொழில் கல்வியை அறிமுகம் செய்து அதன் மூலம் பெண்களுக்கு கல்வியும் அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்று கொடுத்த பெண்மணியா இருக்கிறார் தொழில் கல்வியோடு சேர்ந்து இந்த வாழ்க்கை
Speaker A
முறைக்கு அவங்களுக்கு வேண்டியத செஞ்சு கொடுக்கக்கூடிய ஒரு பெண்மணியா செஞ்சது ஒருவேளை மிஷனரிகள் இதுக்கு முன்னாடி செஞ்சிருந்தாலும் ஒரு பெண்ணாக இந்த விஷயத்தை முதல் முதல் இந்தியாவுக்குள்ள பெண்களுக்காக செஞ்சிருக்கறது வந்து இவங்களாதான் இருக்கறாங்க அப்படின்னு சொல்றாங்க அடுத்தது பாருங்க வில்லியம் ஹண்டர் அப்படிங்கறவர் டாக்டர் வில்லியம் ஹண்டர் தலைமலையான பொறுப்பாண்மை குழு முன் பெண்கள்
Speaker A
சார்பாக பேச்சு நீங்க சொன்னீங்க இல்லையா அது பெண்களுக்கு மருத்துவ பயிற்சி கொடுக்க வேண்டியது தேவையை வலியுறுத்தி இருக்கிறார் அதன் மூலமாக ஏற்பட்ட பல மாற்றங்கள் இந்தியாவில நடந்திருக்கு அப்படிங்கறத பார்க்கிறோம் அடுத்தது அவங்க சொல்றாங்க கிறிஸ்தவத்தில் முதல் பிரிவு சாராத சமய சங்கத்தை துவக்கிய பெண்மணி இவங்கதான் ரொம்ப அற்புதமான விஷயம் அதாவது கிறிஸ்தவத்தில வந்து சமயம் சாராத
Speaker A
பிரிவு சாராத அதுவரைக்கும் வந்து நான் அந்த பிரிவு நான் இந்த பிரிவு அப்படின்னு பிரிஞ்சி இருப்பாங்க இப்ப நம்ம வந்து பாத்தீங்கன்னா நாம எல்லா பிரிவுகளையுமே நம்ம அரவணிக்கிறோம் எல்லா பிரிவுகளோடும் இணைந்து பணி செய்றோம் எப்படி முடியுதுன்னா அத வந்து இவங்கதான் வந்து அத முதல் முதலா செயல்படுத்தி இருக்கறாங்க பிரிவு சாராத
Speaker A
இயக்கங்களை உருவாக்கி எல்லா எல்லாம சொல்லுவோம் இன்டினாமினேஷன் ஆமா அது எல்லா மக்களையும் ஒன்னு சேர்ந்து அரவணிக்கிற ஒரு விஷயம் அதுக்குடுத்தது சமூக சேவைக்காக வழங்கப்படுகிற கைசரி ஹிந்த் அப்படிங்கிற அந்த பதக்கத்தை வென்ற முதல் இந்திய பெண்மணி இவங்கதான் அவங்கதான் அந்த கைசரி ஹிந்துங்கறதுதான் அன்றைக்கு பிரிட்டிஷ் அரசுல ஒரு மிக முக்கியமான சமூக சேவைக்கான அந்த இதை வந்து
Speaker A
இவங்க வாங்கி இருக்கறாங்க அப்படிங்கறத பார்க்கிறோம். இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பெண்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் பெண்மணி இவர்தான் இவங்கதான் அப்ப தேசிய காங்கிரஸ்ல ஒரு பெரிய ஈடுபாட்டை காண்பித்து அங்க பெண்களுடைய முன்னேற்றத்தை பற்றியும் பெண்களுக்கான பங்களிப்பை பற்றியும் அவர்கள் அன்னைக்கு பேசி இருக்காங்க பின்பாகத்தான் நம்ம வந்து இந்திரா காந்தி
Speaker A
அவங்கல்லாம் வந்து இந்த காங்கிரஸ் இந்த காங்கிரஸ்குள்ள வராங்க பெண்கள் காங்கிரஸ்ல ஈடுபடுறாங்க தலைமை பொறுப்புக்கு எல்லாம் வராங்க ஆனா இவங்க அத காங்கிரஸ் உருவான காலத்திலேயே பெண்களுடைய பங்களிப்பை பற்றி பேசிய மிக முக்கியமான ஒரு தலைவி அப்படின்றத பார்க்கிறோம் ஒரு தர்ம காரியத்துக்காக வெளிநாட்டிலிருந்து நிதி திரட்டிய முதல் இந்திய பெண்மணி இவங்கதான்
Speaker A
அதாவது இங்க இருக்கக்கூடிய மக்களுக்கு சேவை செய்வதற்காக அமெரிக்காவில வந்து நிதி திரட்டி கொண்டு வந்த ஒரு மிக முக்கியமான ஒரு நபர் அப்படிங்கற ஒரு பெருமையை அந்த பெண்மணிங்கிற பெருமையை இவங்க பெறறாங்க அப்படிங்கற ஐடாஸ் கட கூட அந்த மிஷன் ஹாஸ்பிடல் பண்றதுக்காக வேண்டி நிதிய திரட்டி இருக்காங்க ஆனா அவங்க மிஷனரி நம்ம
Speaker A
இல்ல அவங்க லேட்டர் இவங்களுக்கு பிறகு இவங்கதான் வந்து அத முன்னாடி செஞ்சிருக்காங்க ஆரம்பத்திலயே அதுக்கப்புறம் இந்தியாவை சேர்ந்தவங்க இந்தியாவை சேர்ந்தவங்க அடுத்தது பாத்தீங்கன்னா பெண்களுக்காக முதல் சங்கத்தை துவக்கியவரும் இவராதான் இருக்கறாங்க ஒரு பெண்மணியா பெண்களுக்கான சங்கம் உலகிலேயே முதல் வேதாகம பெண் மொழிபெயர்ப்பாளர் இவங்கதான் பஸ்ட் பஸ்ட் மொழிபெயர்ப்புல பெண்ணாக இருந்தாங்க முழு வேதாகமத்தையும் மராட்டிய மொழியில
Speaker A
இவங்கதான் மொழிபெயர்த்திருக்காங்க முதல் முதலா இவ்ள கடினமான பணி இவ்வளவு பணிகளையும் செய்து சமுதாய பணிகளை செய்துவிட்டு அடிஷனலா அவங்க வந்து இலக்கியப் பணியாகவும் இதை செய்திருக்கறாங்க. அமெரிக்க பாட புத்தகங்களை மொழிபெயர்த்தது மட்டுமல்ல முழு வேதாகமத்தையும் வந்து அவங்க மராட்டி மொழியில மொழிபெயர்த்துருக்காங்க.
Speaker A
எவ்வளவு பெரிய பணி அப்படின்னு பாருங்க. பெண்களுக்கான ஆசிரம இயக்கத்தை ஆரம்பித்தவரும் இவர்தான் அப்படின்றாங்க. அந்த மாதிரி ஒரு ஃப்ரீ மூவ்மெண்ட் பரிசுத்த ஆவியானவருடைய அந்த நிறைவு அப்படிங்கறது எல்லாமே இவருடைய அந்த முக்தி மிஷன்ல இருந்துதான் ஆரம்பிச்சிருக்கு 1905ல. அதுக்கு பிறகுதான் வந்து இப்படிப்பட்ட ரீபார்மேஷன் சபைகளுக்குள்ளாகவே ஒரு மாற்றங்கள் வந்து இது மாதிரி இவருடைய பணியில நடந்திருக்கு
Speaker A
அப்படிங்கறது ஒரு அற்புதமான விஷயமா இருக்கு. நேயர்களே இன்றைய நிகழ்ச்சிகளல நம்ம பண்டிதர் ரமாபாய் பத்தி பேசி இருக்கோம் இல்லையா நீங்கல்லாம் நினைச்சிருப்பாங்க எதுக்கு மிஷனரிகள் எல்லாம் இவங்க வராங்க அப்படின்னுட்டு ஏனென்றால் ஒவ்வொரு மிஷனரியும் இந்தியாவுக்கு வந்தப்ப சுவிசேஷ பணிக்காக வந்தாலும் கூட இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பெண்களினுடைய முன்னேற்றத்திற்காக விடுதலைக்காக எவ்வளவு பாடுபட்டாங்க அப்படின்னு சொல்லிட்டு நம்ம
Speaker A
பார்த்திருக்கோம் அதுல ஒன்னு கூட குறையாம பல படைகள் மேலாக நின்று அது ஒரு இந்திய பெண்மணியா அயல்நாட்டில இருந்து வந்தவங்களுக்கு கூட ஏதாவது சப்போர்ட் இருக்கு நம சொல்லலாம் ஆனால் இந்திய பெண் பெண்மணியாக ஒரு எந்தவித பின்புலமும் இல்லாமல் அவங்க வந்து என்ன பண்ணிருக்காங்க ஒரு நாடோடியாக திருந்த பண்டித ரமாபாய் இவ்வளவு பெரிய காரியத்தை செஞ்சிருக்காங்க
Speaker A
பெண்கள் விடுதலைக்கு பாடுபட்டுருக்காங்க பெண் கல்விக்கு அடிக்கோள் இட்டுருக்காங்க சமுதாயத்தை சீர்திருத்தம் பண்ணி இருக்காங்க அப்படிப்பட்டவங்க இருக்கறதுனாலதான் இன்னைக்கு நாம இந்த நிகழ்ச்சியில வந்து ஒரு மிஷனரிக்கு ஒத்த ஒரு சமுதாய சீர்த்தத்தை பண்ணதுனாலதான் இன்னைக்கு நம்ம வந்து அவங்க பத்தி பார்க்கிறோம் பண்டிதமாபாயினுடைய சேவைகளை சமுதாய சீர்திருத்தத்துக்காக அதை பாராட்டும் வண்ணம் அதை கௌரவிக்கும்
Speaker A
அவங்களுக்கு வந்து ஒரு ஸ்டாம்ப் வெளியிட்டது. அப்ப ஸ்டாம்ப் வெளியிட்டதோட மட்டுமல்லாமல் வந்து லேட்டரா அவங்களுக்கு என்ன பெயர் கொடுத்துருக்காங்கன்னா வுமன் ஆப் த மில்லினியம் அதாவது அந்த நூற்றாண்டின் பெண்மணி ஒரு மதிப்புமிக்க பெண்மணியாக அவங்கள கௌரவிச்சிருக்கு இந்த பட்டத்திற்கு வந்து மிகவும் தகுதியான பெண்மணிதான் அவங்க ஏன்னா அவங்க செய்த பெண்கள் விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக
Speaker A
செய்த ஒரு மிஷனரினுடைய தாகத்தோடும் தியாக உள்ளத்தோடும் செய்த பணி மிகவும் அளப்பரியது. இத பார்கற நிச்சயமாக ஒவ்வொரு பெண்ணும் நம்மளும் சமுதாயத்திற்கு பெண்கள் விடுதலைக்காக இன்னும் அடிமைப்பட்டு கிடக்கறாங்க பெண்கள் எத்தனையோ விஷயங்கள் இல்லையா அப்படிப்பட்ட விஷயங்களுக்காக இந்த இந்திய சமுதாயத்திற்காக நம்மளும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு சிந்தனையை கொள்ள வேண்டும் என்று ஒரு உறுதி பூண வேண்டும்
Speaker A
என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Topics:பண்டித ரமாபாய்இந்திய பெண்கள்சமூக அடக்கம்சமஸ்கிருத கல்விமிஷனரிகள்சாதிபெண்கள் கல்வி19ஆம் நூற்றாண்டுசமூக சீர்திருத்தம்தமிழ் வரலாறு











