Skip to content
Get App

ஸகாதுல் பித்ர் பற்றிய முழு விளக்கம்||zakathul fitir ramalan 2022 tamil bayan

Answers

Questions about this video

ஸகாத்துல் பித்ர் எதற்காக கொடுக்கப்படுகிறது?

ஸகாத்துல் பித்ர் நோன்பில் நாம் செய்த குறைகளை நீக்குவதற்கான ஒரு பரிகாரமாக கொடுக்கப்படுகிறது. மனிதர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால், கடமைகளை நிறைவேற்றாமல் அல்லது குறைகளை செய்திருந்தால் அதற்கான நிவர்த்தியாக இது அமைகிறது.

ஸகாத்துல் பித்ர் பணமாக கொடுக்கலாமா அல்லது உணவாக கொடுக்க வேண்டுமா?

ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமாக வந்திருப்பது உணவுப் பொருட்களாக (கோதுமை, பேரீச்சம்பழம்) கொடுப்பதே சிறந்தது. இருப்பினும், அபு ஹனிபா ரஹீமுல்லாஹ் அவர்கள் பணமாகவும் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள். தற்போது பலர் பணமாகவும் கொடுக்கிறார்கள்.

ஒருவருக்கு எவ்வளவு ஸகாத்துல் பித்ர் கொடுக்க வேண்டும்?

உணவுப் பொருட்களாக கொடுக்கும்போது, ஒருவருக்கு மூன்று கிலோ அரிசி கொடுக்கலாம் என்று உலமாக்கள் கூறுகிறார்கள். பணமாக கொடுக்கும்போது, அதற்கென நியமிக்கப்பட்ட தொகையை கொடுக்க வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker 1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்லாஹும்ம ஸல்லி அலா சையதினா முஹம்மதின் வ அலா ஆலி சையதினா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம்
00:08
Speaker 1
அல்லாஹ்வின் நல்லடியார்களே இது உங்களுடைய தீன் கல்வி சேனல்.
00:12
Speaker 1
இன்னைக்கு நம்ம சதக்கத்துல் பித்ரையை பத்தி பார்க்க போறோம் இதை வந்து ஜகாத்துல் பித்ரு சதக்கத்துல் பித்ரு பித்ரா பணம் அப்படிங்கிற பேர்ல வந்து இங்க உபயோகப்படுத்திட்டு இருக்கோம்.
00:21
Speaker 1
நம்ம எதற்காக வந்து பித்ரா பணத்தை கொடுக்கிறோம் யாருக்கு கொடுக்கணும் எப்படி கொடுக்கணும் எப்போது கொடுக்கணும் எல்லாமே வந்து இந்த வீடியோல நம்ம பார்க்கலாம்.
00:29
Speaker 1
நம்ம இந்த பித்ராங்கறதே நம்ம எதுக்காக கொடுக்கிறோம்னா நம்மளுடைய நோன்புல நாம செய்த குறைகளை நீக்குவதற்கான ஒரு பரிகாரமாக தான் நம்ம அதை கொடுக்கிறோம் அதற்கான நிவர்த்தியாக தான் நம்ம கொடுக்கிறோம்.
00:41
Speaker 1
ஒரு நோன்பு வந்து இப்படி கடைபிடிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு நிறைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து சொல்லி இருக்காங்க ஒரு நோன்புல நம்ம எப்படி இருக்கணும்னு சொல்லிட்டு சொல்லி இருக்காங்க இல்லாட்டினா நம்ம நோன்புல பசித்திருப்பதும் தாகித்திருப்பதும்னால அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை நம்மளுடைய குணங்களை வந்து நம்ம நேர்படுத்திக்கணும் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு.
00:58
Speaker 1
ஆனாலும் மனிதர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறதுனால கடமைகளை வந்து நிறைவேற்றாமல் வந்திருப்போம் குறைகளை வந்து செய்திருப்போம் அதற்கெல்லாம் பரிகாரமாக தான் நம்ம என்ன பண்றோம் பித்ரா பணத்தை கொடுக்கிறோம்.
01:10
Speaker 1
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து அறிவிக்கிறாங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து இந்த பித்ரா பணத்தை வந்து பர்லாக்கி இருக்காங்க.
01:17
Speaker 1
பர்ல்னா கடமை அதை வந்து நீங்க வந்து விடவே கூடாது.
01:20
Speaker 1
இந்த பர்லாக்கனதுக்கான காரணம் பார்த்தீங்கன்னா ரெண்டு முக்கியமான நோக்கம் இருக்கு.
01:25
Speaker 1
எப்படி கொடுக்கணும்.
01:27
Speaker 1
காசாவும் கொடுக்கலாம் உணவாவும் கொடுக்கலாம் எப்படி கொடுக்கணும்னு பார்க்கும்போது ஹதீதுகள்ல வந்து ஆதாரப்பூர்வமா வந்தது வந்து உணவு பொருட்கள்ல தான் கொடுத்திருக்காங்க.
01:33
Speaker 1
அதாவது வந்து கோதுமை பேரிச்சம்பழம் அதைத்தான் வந்து கொடுத்திருக்காங்க அதுதான் மிகவும் சிறந்தது.
01:40
Speaker 1
அபு ஹனிபா ரஹீமுல்லாஹ் வந்து அவங்க அறிவிக்கிறாங்க அல்லாஹ் அவங்களுக்கு கூலி கொடுக்கட்டும்.
01:44
Speaker 1
அவங்க வந்து காசாவும் கொடுத்துக்கலாம்னு சொல்லி சொல்றாங்க இப்ப நம்ம நிறைய பேர் காசாவும் கொடுக்கிறோம்.
01:50
Speaker 1
ஆனா வந்து சிறந்தது வந்து உணவு பொருளாக கொடுக்கிறது.
01:53
Speaker 1
உணவு பொருள்னா இங்க வந்து ஒரு பிரதானமான உணவு பொருள்ங்கிறது பார்த்தீங்கன்னா விளையக்கூடியது பார்த்தீங்கன்னா அரிசிதான்.
01:58
Speaker 1
அதனால வந்து அரிசியை கொடுக்கலாம்.
02:00
Speaker 1
இப்ப வந்து உலாமாக்கள் எல்லாம் சொல்றாங்க ஒருத்தவங்களுக்கு மூணு கிலோ கொடுக்கலாம்னு சொல்றாங்க.
02:04
Speaker 1
காசுனா ஒருத்தவங்களுக்கு இவ்வளவு நியமிச்சிருப்பாங்க அந்த அளவுக்கு நம்ம கொடுக்கிறோம்.
02:08
Speaker 1
உணவு பொருட்கள் பார்த்தீங்கன்னா ஒருத்தவங்களுக்கு மூணு கிலோ கொடுக்கலாம்னு சொல்றாங்க.
02:11
Speaker 1
இப்ப உங்க குடும்பத்துல நாலு பேர் இருந்தீங்கன்னா 12 கிலோ கொடுக்கணும்.
02:14
Speaker 1
இதைக்கொண்டு ஏழைகள் வந்து நிச்சயமாக சந்தோஷமா இருப்பாங்க.
02:17
Speaker 1
இன்ஷா அல்லாஹ் இந்த முறையை வந்து ஏன் நம்ம பித்ராவை கொடுக்கணும் எப்படி நம்ம தெரிஞ்சு இன்ஷா அல்லாஹ் செய்து வருவோம்.
02:22
Speaker 1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries and speaker detection. 30 minutes free.

Or transcribe another YouTube video here →