Skip to content
Get App

தஹஜ்ஜுத் தொழுகை தொழுகாமலேயே தொழுத நன்மை கிடைக்க இதை செய்யுங்கள்||tahajud prayer tamil

Answers

Questions about this video

இரவு முழுவதும் தூங்கிக் கொண்டிருந்தாலும் தஹஜ்ஜத் தொழுத நன்மை மற்றும் இரவு முழுவதும் விழித்து வணங்கிய நன்மை பெற என்ன செய்ய வேண்டும்?

இஷா தொழுகையை ஜமாத்துடன் பள்ளியில் தொழுது, அதைத் தொடர்ந்து பஜ்ர் தொழுகையையும் ஜமாத்துடன் பள்ளியில் தொழுதால், இரவு முழுவதும் வணங்கிய நன்மை கிடைக்கும். இந்த இரண்டு தொழுகைகளுக்கும் இடைப்பட்ட நேரத்தில் தூங்கினாலும், தஹஜ்ஜத் தொழுத நன்மையும் கிடைக்கும்.

இஷா தொழுகையை ஜமாத்துடன் தொழுவதால் கிடைக்கும் நன்மை என்ன?

இஷா தொழுகையை ஜமாத்துடன் பள்ளியில் தொழுபவர்களுக்கு, இரவில் பாதி நேரம் விழித்து வணங்கிய நன்மை கிடைக்கிறது.

பஜ்ர் தொழுகையை ஜமாத்துடன் தொழுவதால் கிடைக்கும் நன்மை என்ன?

பஜ்ர் தொழுகையை ஜமாத்துடன் பள்ளியில் தொழுபவர்களுக்கு, மீதி பாதி இரவும் விழித்து வணங்கிய நன்மை கிடைக்கும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
00:03
Speaker A
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அல்ஹம்துலில்லாஹ்
00:07
Speaker A
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா நபியிஹி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயீன்
00:11
Speaker A
அல்லாஹ்வின் நல்லடியார்களே இது உங்களுடைய தீன் கல்வி சேனல்
00:15
Speaker A
இன்னைக்கு நாம இந்த வீடியோல நம்ம இரவு முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கும்போதே வணங்கிய நன்மை பெற முடியுமான்னு பார்த்தா அல்ஹம்துலில்லாஹ்
00:24
Speaker A
நிச்சயமாக நீங்க பெற்றுக்கொள்ள முடியும் இரவு முழுவதும் நீங்க தூங்கிக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு தஹஜ்ஜத் தொழுத நன்மையும் இன்னும் இரவு முழுவதும் விழித்து வணங்கிய நன்மையும் அல்லாஹ் கொடுக்கக்கூடிய அமல் இருக்குது அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து அறிவித்துக் கொடுத்திருக்காங்க
00:37
Speaker A
நாம வந்து இரவு நேரத்துல நம்ம தொழுகணும்னு ஆசைப்படுறோம் ஆனா தொழுக முடியாம போகுது இன்னும் வந்து இரவு முழுவதும் நம்ம தொழுகுறவங்களா இருக்கோமான்னு பார்த்தா கண்டிப்பா இருக்காது
00:46
Speaker A
கியாமில் லைல் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து நிறைவேற்றி வந்தார்கள்
00:50
Speaker A
குறைந்தபட்சம் நம்ம ரமலான்லையாவது இரவு தொழுகையை நம்ம வந்து கடைபிடிக்கிறோம் ஆனா மத்த நாட்கள்ல நாம என்ன பண்றது இல்ல இரவு தொழுகைகளை கடைபிடிக்கிறது இல்ல
00:58
Speaker A
இன்னும் இரவுடைய கடைசி நேரத்துல நம்ம தஹஜ்ஜத் தொழுகையாவது நம்ம தொழுகுறோமான்னு பார்த்தா நிறைய நேரங்கள்ல அதுகூட நம்மளால செய்ய முடியறது இல்ல
01:06
Speaker A
இந்த ஒரு அமலை வந்து நீங்க தொடர்ச்சியா செய்றது மூலமாக தஹஜ்ஜத் தொழுத நன்மையும் இரவு முழுவதும் விழித்து வணங்கிய நன்மையும் நமக்கு கிடைக்கும் தூங்கிக் கொண்டிருக்கும்போதே
01:16
Speaker A
நம்ம படைக்கப்பட்டதே நம்ம அல்லாஹ்வை வணங்குவதற்காக தான்
01:20
Speaker A
ஆனா பார்த்தீங்கன்னா எல்லா நேரமுமே வணங்கிக் கொண்டிருக்குமான்னு பார்த்தா கண்டிப்பா கிடையாது நம்ம நம்மளுடைய உலக விஷயத்தை வந்து பார்த்துட்டு இருக்கோம் அதுல வந்து அல்லாஹ் சொல்லியபடி நடக்கிறதே வந்து பார்த்தீங்கன்னா ஒரு வணக்கமாகும்
01:31
Speaker A
அதே மாதிரி இரவு முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கிற நேரத்துல கூட வணக்க வழிபாடு செய்த நன்மைக்கான ஒரு அமலை தெரிவித்துக் கொடுத்திருக்காங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்ப அதை செய்து இரவு நேரத்திலேயும் வணங்கிய நன்மையும் வந்து நம்ம பெற்றுக்கொள்ளலாம்
01:43
Speaker A
முஸ்லிம்ல 656 வது ஹதீதா வந்துள்ளது
01:47
Speaker A
முதல் வந்து ஆண்களுக்கு சொல்றேன் யார் ஒரு ஒருத்தர் வந்து இஷா தொழுகையை ஜமாத்தோடு பள்ளியில தொழுகுறாங்களோ அவங்களுக்கு இரவுல பாதி நேரம் விழித்து வணங்குன நன்மை கிடைக்குது
01:58
Speaker A
அதை தொடர்ந்து யார் பஜர் தொழுகையை ஜமாத்தோடு பள்ளியில தொழுகுறாங்களோ அவங்களுக்கு மீதி பாதி இரவும் வந்து விழித்து வணங்கிய நன்மை கிடைக்கும் அப்ப இஷாவையும் பஜர் தொழுகையும் ஜமாத்தோடு தொழுது வருவதுனால இரவு முழுவதும் வணங்கிய நன்மை கிடைக்குது
02:16
Speaker A
அந்த ரெண்டு இடைப்பட்ட நேரத்துல தான் நம்ம வந்து ஓய்வுக்காக உறங்குகிறோம்
02:20
Speaker A
இந்த இஷாவுக்கும் பஜருக்கும் நடுவுல தான் நமக்கு தஹஜ்ஜத்துடைய நேரமும் வரும் அதனால தஹஜ்ஜத் தொழுத நன்மையும் இன்னும் இரவு முழுவதும் வணங்கிய நன்மையும் உங்களுக்கு வந்து கிடைக்கும்
02:29
Speaker A
ஆனா பெண்கள் வந்து பள்ளிக்கு போவதில்லை ஜமாத்தோடு தொழுவதில்லைனாலும் வீட்ல நேரத்துக்கு நல்ல முறையில உளுவு செஞ்சு நீங்க இஷாவையும் பஜரையும் வந்து கடைபிடித்தீங்கனாவே இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு இரவு முழுவதும் வணங்கிய நற்கூலியை வழங்குவான்
02:43
Speaker A
ஆண்களை வந்து ஜமாத்தோடு தொழுவதுதான் வந்து வலியுறுத்தி இருக்காங்க 27 மடங்கு வந்து அது சிறப்பு
02:50
Speaker A
இதனால நீங்க வந்து தஹஜ்ஜத் தொழுகை தேவையில்லை அப்படின்னு அர்த்தம் கிடையாது நிச்சயமாக நீங்க எந்திரிச்சு அமல் செய்யும்போது அதிக நன்மை கிடைக்கும் அந்த நேரத்துக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு அந்த நன்மையும் இன்னும் துவா அங்கீகரிக்கப்படக்கூடிய நேரம் அது அதனுடைய சிறப்பையும் நீங்க வந்து பெற்றுக்கொள்ளலாம்
03:04
Speaker A
ஆனாலும் நீங்க தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட நன்மை தரக்கூடிய அமலாக அந்த ரெண்டு தொழுகையை நீங்க வந்து நிறைவேற்றி வருவதனால உங்களுக்கு கிடைக்கும்

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries and speaker detection. 30 minutes free.

Or transcribe another YouTube video here →