ரமலான் மாத இரவுகளில் தராவீஹ் தொழுகையின் நேரம், ரக்அத்துகள் எண்ணிக்கை மற்றும் வழிமுறைகள் பற்றி விரிவாக விளக்கம்.
Key Takeaways
- தராவீஹ் தொழுகை என்பது இரவு தொழுகைகளின் ஒரு வகை மற்றும் நேரம் இஷா முதல் ஃபஜர் வரை ஆகும்.
- 11 ரக்அத்துகள் தொழுவதே நபி சுன்னத்தை பின்பற்றுவதாகும்; 23 ரக்அத்துகள் தொழுவதை ஆதரிக்கும் ஹதீஸ்கள் நம்பகமற்றவை.
- தனியாக அல்லது ஜமாஅத்தோடு தொழுவலாம், ஆனால் ஜமாஅத்தோடு தொழுவதே சிறந்தது.
- தராவீஹ் தொழுகையில் சிறப்பு சூராக்கள் அல்லது துஆக்கள் இடையிலோ ஓத வேண்டாம்.
- ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக நம்பிக்கை வைக்கலாம்.
What the video covers
- தராவீஹ் தொழுகை என்பது ரமலான் மாத இரவுகளில் தொழப்படும் இரவு தொழுகைகளைக் குறிக்கும்.
- குர்ஆனிலும் ஹதீஸிலும் 'தராவீஹ்' என்ற வார்த்தை நேரடியாக இல்லை; இரவு தொழுகைகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் 7, 8, 10, 11 ரக்அத்துகளில் தொழுகை செய்ததாக ஹதீஸ்கள் உள்ளன.
- தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துகள் என்ற விவாதத்தில் 11 மற்றும் 23 ரக்அத்துகள் என்ற இரண்டு கருத்துக்கள் உள்ளன.
- 11 ரக்அத்துகள் தொழுவதை ஆதரிக்கும் ஹதீஸ்கள் சஹீஹ் புகாரியில் உள்ளன மற்றும் இது நபி அவர்களின் சுன்னத்தைக் காட்டுகிறது.
- 23 ரக்அத்துகள் தொழுவதை ஆதரிக்கும் ஹதீஸ்கள் நம்பகமற்றவை மற்றும் ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது.
- இரவு தொழுகைகள் எவ்வளவு ரக்அத்துகள் இருந்தாலும் வழிமுறையை பின்பற்றி தொழலாம், வித்ரு தொழுகை கடைசியாக செய்ய வேண்டும்.
- தனியாக தொழுவதும், ஜமாஅத்தோடு தொழுவதும் இரண்டும் செல்லுபடியாகும்; ஆனால் ஜமாஅத்தோடு தொழுவதே சிறந்தது.
- தராவீஹ் தொழுகையில் சிறப்பு சூராக்கள், துஆக்கள் அல்லது சலவாத்துகள் இடையிலோ ஓதக்கூடாது என்று கூறப்படுகிறது.
- ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுவதாக நபி கூறியுள்ளார்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு பதிவுல ரமலான் மாத இரவுகளில் தொழப்படும் தராவீஹ் தொழுகை பற்றி நம்ம டீடைல்டா தெரிஞ்சுக்க போறோம்.
Speaker A
ரமலான் மாத இரவுகள்ல தொழப்படும் தொழுகைக்கு தான் தராவீஹ் அப்படின்னு சொல்லப்படுது.
Speaker A
தராவீஹ்ன்ற வார்த்தைக்கு ஓய்வெடுத்து தொழும் தொழுகை அப்படிங்கறதுதான் பொருள்.
Speaker A
ஆனால் குர்ஆனிலோ ஹதீஸிலோ தராவீஹ் அப்படிங்கிற வார்த்தையானது இடம்பெறவில்லை மாறாக இரவு தொழுகைகள் அப்படின்னு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான் இந்த மாதிரி இரவுல நின்று தொழக்கூடிய தொழுகைகளுக்கு தான் வித்ரு தொழுகை சலாத்துல் லைல் கியாமுல் லைல் தராவீஹ்னு நிறைய பேர் இருக்கு ஆனா இந்த தொழுகைகள் அனைத்துமே ஒரே தொழுகைதான் அதுதான் இரவு தொழுகைகள்.
Speaker A
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க ரமலானுடைய நாட்களிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் இரவுல நின்று தொழுகுறதுடைய சிறப்பு பற்றி நமக்கு நிறைய ஹதீஸ்கள்ல சொல்லி இருக்காங்க.
Speaker A
எனவே அவங்களை பின்பற்றி தொழுகக்கூடிய இந்த இரவு தொழுகைகள் அனைத்துமே சுன்னத்தான தொழுகைகளாகும்.
Speaker A
முதல்ல தராவீஹ் தொழுகையுடைய நேரம் என்னன்றத தெரிஞ்சுக்கலாம்.
Speaker A
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க இஷாவோடைய தொழுகைக்கு பின்பிலிருந்து ஃபஜருடைய பாங்கு கூறும் வரை இரவுல தொழுது இருக்காங்க.
Speaker A
எனவே நாமும் இஷாவோடைய நேரத்திலிருந்து ஃபஜருடைய பாங்கு சொல்றது வரைக்கும் நம்மளுடைய தஹஜ்ஜத் தொழுகை தராவீஹ் தொழுகைன்னு எல்லா தொழுகைகளையும் தொழுது கொள்ளலாம்.
Speaker A
அடுத்தது தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துகளாக தொழ வேண்டும்.
Speaker A
எப்படி வருடா வருடம் ரமலானுடைய மாதம் வருதோ அந்த மாதம் வரும்போதெல்லாம் இந்த டவுட்டும் நமக்கு கூட சேர்ந்து வந்துரும் தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துகள் அப்படின்னு.
Speaker A
இதை குறிக்கும் ஒரு ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதம் என்று இல்லாமல் பொதுவாக அனைத்து நாட்களிலும் இரவில் 7, 8, 10, 11 ஆகிய எண்ணிக்கையில் தொழுது உள்ளார்கள் ஹதீஸ் இடம்பெறும் நூல் சஹீஹ் புகாரி.
Speaker A
அதாவது நபி அவங்க குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில தொழாம வெவ்வேறு எண்ணிக்கைகள்ல தொழுது இருக்காங்க அப்படிங்கறது இந்த ஹதீஸ் மூலமா நமக்கு தெரியுது பொதுவாக தராவீஹ் தொழுகை அப்படின்னு எடுத்துக்கிட்டாலே ரெண்டு விவாதங்கள் நமக்கு வரும்.
Speaker A
ஒன்னு 8+3 11 ரக்அத்துகள் அப்படின்னும் இன்னொன்னு 20+3 23 ரக்அத்துகள் அப்படின்னும் இது ரெண்டுல எந்த கருத்து சரி அப்படிங்கறத ஹதீஸ்களின் விளக்கங்களோட நம்ம பார்க்கலாம்.
Speaker A
முதலாவதாக 11 ரக்அத்துகள் தொடர்பான கருத்து.
Speaker A
அபூ சலாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ரமலானில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக்அத்தை விட அதிகமாக தொழுததில்லை என்று பதில் கூறினார்கள் ஹதீஸ் இடம்பெறும் நூல் புகாரி.
Speaker A
அதாவது ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் நபி அவர்கள் எட்டு ரக்அத் தொழுவாங்களாம் அந்த எட்டு ரக்அத்துகளை நம்மள மாதிரி தொழுகாம இரவு முழுவதும் நின்று வணங்க கூடியவங்களாக இருந்தாங்க கடைசியாக அவங்க வித்ரு தொழுகை மூன்று ரக்அத் தொழுது இருக்காங்க இது சம்பந்தமான நிறைய ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கு.
Speaker A
இந்த கருத்தை பொறுத்தவரைக்கும் இந்த 11 ரக்அத்துகளை நம்ம பின்பற்றி தொழுவது நபி அவர்களின் சுன்னத்தை உயிர்ப்பித்தது போன்றது ஆகும் ஆனால் இதுல இன்னொரு கருத்தும் இருக்கு 11 ரக்அத்துகள் தான் தொழனும் அதற்கு மேல தொழக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு.
Speaker A
நபி அவர்கள் இயல்பாக 11 ரக்அத்துகள் தான் தொழுது இருக்காங்க அப்படிங்கறதுல எந்த ஒரு வாதமும் கிடையாது ஆனால் 11 ரக்அத்துகள் தான் தொழனும் அதற்கு மேல் தொழக்கூடாதுன்னு நபி அவங்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு ஹதீஸ்லயும் குறிப்பிட்டு கூறவில்லை.
Speaker A
அல்லாஹ்வை வணங்கி வழிபடக்கூடிய இந்த ரமலானுடைய மாதத்துல எண்ணிக்கையை காரணமா வச்சு சண்டை போடுறது வாதிடுவது இது எல்லாம் முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்களாகும்.
Speaker A
இரண்டாவது கருத்து 23 ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பது.
Speaker A
முதல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க ரமலானுடைய நாட்களிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 20 ரக்அத் நீங்க தொழுவுங்க அப்படின்னு சொன்னதாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு ஹதீஸ்களும் ஆதாரமாக இல்லை.
Speaker A
மேலும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவங்க ரமலானுடைய இரவுல 20 ரக்அத் தொழ வச்சாங்க அப்படின்னு சொல்லி வரக்கூடிய ஹதீஸ்களுடைய நிலை என்னன்னா இந்த ஹதீஸ்களுடைய அறிவிப்பாளர்கள் பொய் சொல்லக்கூடியவர்களாகவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை திணித்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.
Speaker A
சோ இந்த ஹதீஸ் உடைய அறிவிப்பாளர் பொய்யாக இருக்கும்போது இந்த ஹதீஸ் எப்படி உண்மையானதாக இருக்கும் மேலும் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவங்க 23 ரக்அத் தொழ வச்சிருக்காங்கன்னு ஆதாரமாக எந்த ஒரு ஹதீஸும் இடம்பெறவில்லை எனவே ரமலானில் 23 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை என்று சொல்லி வரக்கூடிய இந்த கருத்து பலகீனமானதாகவும்.
Speaker A
அதற்காக வேண்டி அப்ப நான் 20 ரக்அத் தொழுததெல்லாம் வேஸ்ட்டான்னு கேட்டா அப்படி கிடையாது ரமலான் அப்படிங்கறது இபாதத்துகளின் மாதம் நம்ம 20 ரக்அத்துகளும் தொழலாம் 50-ம் தொழலாம் முடிஞ்சா 100 ரக்அத்துகள் கூட நம்ம தொழலாம் அல்லாஹ்வை வணங்குவதற்கு எந்த ஒரு வரையறையும் கிடையாது அப்படிங்கறத நம்ம மனதால புரிஞ்சுக்கணும்.
Speaker A
சரி அப்படி எத்தனை ரக்அத்துகள் தான்பா தராவீஹ் தொழுகைக்கு தொழுகணும் அப்படின்னு கேட்டீங்கன்னா.
Speaker A
இதைப்பற்றி இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரவு தொழுகையை குறித்து கேட்டார் அதற்கு இரவு தொழுகை இரண்டு இரண்டு ரக்அத்துகள் ஆகும் சுபுஹ் நேரம் வந்துவிட்டது என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ரு தொழுது கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஹதீஸ் இடம்பெறும் நூல் முஸ்லிம் 1364.
Speaker A
அதாவது இரவு தொழுகைகள் அப்படிங்கறதே ரெண்டு ரக்அத் தான் அது தஹஜ்ஜத்தா இருந்தாலும் சரி அல்லது தராவீஹ் தொழுகையாக இருந்தாலும் சரி ரெண்டு ரெண்டு ரக்அத்துகளா நமக்கு எவ்வளவு இயலுமோ அவ்வளவு நம்ம தொழுது கொள்ளலாம்.
Speaker A
உதாரணமாக இப்ப நம்ம முன்னாடி பார்த்த கருத்துகள் மாதிரி எட்டு ரக்அத்துகளும் தொழலாம் 10 ரக்அத்துகளும் தொழலாம் 20 ரக்அத்துகளும் தொழலாம் 40 ரக்அத்துகளும் தொழலாம் ஆனால் நம்ம எத்தனை ரக்அத் தொழுதாலும் கடைசியாக நம்ம வித்ருடைய தொழுகையை நிறைவேற்றிடணும் ஒற்றைப்படையில.
Speaker A
அடுத்ததாக தராவீஹ் தொழுகையை தனியாக தொழுவது சிறந்ததா ஜமாஅத்துடன் தொழுவது சிறந்ததா.
Speaker A
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க ரமலானுடைய ஆரம்ப காலகட்டத்துல இந்த இரவு தொழுகைகளை ஜமாஅத்தோடு நிறைவேற்ற கூடியவங்களாக இருந்தாங்க அதன்பின்பு மக்களும் சஹாபாக்களுடைய கூட்டமும் அதிகமானதுனால எங்க அல்லாஹ் இந்த தொழுகையை நமக்கு கடமையாக்கிடுவானோன்னு பயந்து இந்த தொழுகையை ஜமாஅத்தோடு தொழுறதை விட்டு நிறுத்திக்கிட்டாங்க.
Speaker A
ஆனால் இயல்பாக ஒரு மனிதர் வீட்டிலோ கடைவீதியிலோ தொழுவதை விட பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது சிறந்ததுன்னு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க சொல்லி இருக்காங்க அதிலும் குறிப்பாக இந்த ரமலானுடைய மாதத்துல இரவு தொழுகைகளை ஆரம்ப முதல் இறுதி வரை இமாமோடு யார் தொழுவுறாங்களோ அவங்களுக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மைகள் கிடைக்கும் சுபஹானல்லாஹ் எனவே ஜமாஅத்தோடு தொழுவதே சிறந்ததாகும்.
Speaker A
இப்படி இல்லாமல் ஒருவர் தனியாக தொழுதாலும் அது கூடும் நீண்ட சூராக்களை உங்களுக்கு தெரியும் தொழுகையுடைய பக்குவம் தெரியும் அவங்களால தொழ முடியும்ன்ற நம்பிக்கை இருந்தா தாராளமாக அவங்க தனியாகவும் நின்று தொழலாம் இவ்வாறு ரமலானின் இரவுகளில் நின்று தொழுவதின் சிறப்பு பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
Speaker A
நம்பிக்கை கொண்டு நற்கூலியை எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும் சுபஹானல்லாஹ்.
Speaker A
மேலும் மக்களே சலாமை பரப்புங்கள் உணவளியுங்கள் இரத்த பந்தங்களுடன் இணைந்து வாழுங்கள் மக்கள் உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் இரவில் தொழுங்கள் நிம்மதியாக சொர்க்கம் செல்வீர்கள்.
Speaker A
மேலும் தராவீஹ் தொழுகை குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க எந்த ஒரு சிறப்பான சூராவையும் எந்த ஒரு சிறப்பான துஆக்களையும் தராவீஹ் தொழுகைக்கு இடையில ஓதக்கூடிய சலவாத்துகள்னு எதுவுமே நமக்கு கற்றுக்கொடுக்கவில்லை எனவே இதையெல்லாம் பின்பற்றாமல் சண்டையிடாமல் விவாதம் செய்யாமல் எவ்வளவு நம்மால் இயலுமோ அவ்வளவு தொழுது இந்த ரமலானின் அனைத்து நன்மைகளையும் கொள்ளையடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ஆமீன்.
Topics:தராவீஹ்ரமலான்இரவு தொழுகைரக்அத்ஹதீஸ்சுன்னத்வித்ரு தொழுகைஜமாஅத்இஷா தொழுகைதஹஜ்ஜத்
![[920] الرد على من قال بأن الله ليس له مكان ولا جهة – شر… — Transcript](https://i.ytimg.com/vi/EiuTNWt17v8/maxresdefault.jpg)










