சிம்மம் ராசியின் தனித்துவமான குணாதிசயங்கள், ரத்தக் குழுக்களின் பாதிப்பு மற்றும் வாழ்க்கை, திருமணத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விவாதிக்கிறது.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- சிம்மம் ராசி தனக்கே உரிய தலைமை மற்றும் ஆட்சி குணத்துடன் இருக்கிறது.
- பிளட் குரூப்புகள் மனிதர்களின் குணாதிசயங்களை மற்றும் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றன.
- சிம்மம் ராசி உள்ளவர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள் மற்றும் மற்றவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து உதவுகிறார்கள்.
- ஏ, பி, ஓ பிளட் குரூப்புகளின் தனித்துவ குணாதிசயங்கள் வாழ்க்கை மற்றும் திருமணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- இந்த ஜோதிட ஆலோசனை மூலம் ராசி மற்றும் பிளட் குரூப்புகளின் இணைவை புரிந்து கொள்ள முடியும்.
What the video covers
- சிம்மம் ராசி தனக்கே உரிய டாமினன்ட் மற்றும் ராயல் லீடர் குணத்துடன் இருக்கிறது.
- ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன.
- ரத்தக் குழுக்கள் மனிதர்களின் குணாதிசயங்களையும் வாழ்க்கை முறையையும் பாதிக்கின்றன.
- சிம்மம் ராசியில் ஓ (O) பிளட் குரூப்பினர் வாரியர் குணத்துடன், உதவிக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள்.
- ஏ (A) பிளட் குரூப்பினர் டிசிப்ளின் மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்கள், பி (B) பிளட் குரூப்பினர் அதிக கிரியேட்டிவிட்டி கொண்டவர்கள்.
- சிம்மம் ராசி மற்றும் பிளட் குரூப்புகளின் இணைவு வாழ்க்கை மற்றும் திருமணத்தில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- சிம்மம் ராசி உள்ளவர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள், மற்றவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அழுவார்கள்.
- சிம்மம் ராசி உள்ளவர்கள் அதிகாரத்தை சமாளிக்கவும், சமநிலையுடன் நடத்தவும் திறமை வாய்ந்தவர்கள்.
- பிளட் குரூப்புகளின் குணாதிசயங்கள் மூலம் மனிதர்களின் குணம் மற்றும் நடத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
- இந்த விவாதம் ஜீவிதா சுரேஷ்குமார் என்ற ஜோதிடர் மற்றும் எழுத்தாளர் மூலம் வழங்கப்படுகிறது.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
இப்போ சிம்மத்துல வந்து ஓ தான் ரொம்ப டாமினேட். அவங்கதான் வந்து தன்னை வந்து ஒரு ராயல் லீடராவே நினைச்சுக்குவாங்க அப்படின்னா அது சிம்மம் தான்.
Speaker A
இவங்களுக்கு கூட ஓ இருக்குது சிம்மத்துக்கு கூட ஒரு ஓ இருக்குன்னா
Speaker A
லக்கியா இருப்பாங்க. சிம்மம் லக்கியா இருப்பாங்க. ஓ பக்கத்துல இருக்குது ஒரு ஃப்ரெண்டா இருக்கலாம், லைஃப் பார்ட்னரா இருக்கலாம், பிசினஸ் பார்ட்னரா இருக்கலாம்.
Speaker A
இதே இது பில இருக்காங்கல்ல சிம்மம் இவங்கதான் வந்து ரொம்ப இளகன மனசு இருக்கிறவங்க. தொட்டது தொண்ணூறுக்கும் ஒருத்தங்க அழுகுறாங்க அப்படின்னா அது சிம்மம் தான்.
Speaker A
இன்னொருத்தவங்களுடைய எனர்ஜிஸ வாங்கக்கூடியவங்க. எத்தனை பேர் வந்து பாரத்தை இவங்ககிட்ட வந்து இறக்குறாங்களோ இது வாங்கிக்கிட்டே இருக்கும்.
Speaker B
ரெட்ரோ ஆன்மீகம் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர், ரைட்டர் திருமிகு ஜீவிதா சுரேஷ் அவர்கள்.
Speaker A
வணக்கம்.
Speaker B
எப்படி இருக்கீங்க?
Speaker A
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
Speaker B
ரொம்ப நல்லா இருக்கேன்.
Speaker B
இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல. அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல.
Speaker B
சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும்? அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.
Speaker A
பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம். லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும். ராசி அப்படிங்கிறது அந்த திசைக்குள்ள நம்மளுடைய மனநிலைமை என்ன அப்படிங்கிறது சொல்லும். நட்சத்திரம் என்ன அப்படிங்கிறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும். இது எல்லாமே ஒன்னோட ஒன்னு கனெக்டட் அப்படிங்கிறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது. எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம்.
Speaker A
இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு இருக்கணும்னு ஒரு விஷயம் இருக்கு. அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கிறது ஒன்னு உண்டு இல்லையா.
Speaker A
இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு. அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது, ரெஸ்பான்ட் பண்ணப்போகுது, இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது அப்படிங்கிறதுதான் நம்ம பார்க்கப்போறோம்.
Speaker A
இப்போ ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கிறது ஒன்னு உண்டு.
Speaker A
என்ன எதுன்னே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது ஓக்கு இருக்கும்.
Speaker A
எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கிறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.
Speaker A
இப்ப ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன்.
Speaker A
ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.
Speaker A
ஒரு ரெஸ்பான்சிபிலிட்டினு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க அப்படிங்கிறதுனால
Speaker A
அந்த ஏவை வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கிற மாதிரி வச்சாங்க.
Speaker A
நெக்ஸ்ட் பார்க்குறப்போ பி.
Speaker A
பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம்.
Speaker A
சுயநலமும் அதிகம்.
Speaker A
ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.
Speaker A
இந்த ஏ பி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம்.
Speaker A
ஏன் அப்படின்னா
Speaker A
இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட்.
Speaker A
செம்மையா பிளான் போடக்கூடியவங்க.
Speaker A
ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும். அந்த ஏவோட கேரக்டரும் பியோட கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கிறது.
Speaker A
ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கே சொல்லலாம்.
Speaker A
அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏபி அப்படிங்கிறவங்க யூஸ் பண்ணாங்க.
Speaker A
அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னுலாம் சொன்னது உண்டு.
Speaker A
ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள்.
Speaker A
போகர் வந்து நிறைய உலகம் சுத்துனார் ஜப்பான் போனார், சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடுகள்ல இருந்த ஒரு விஷயம் தான் இது.
Speaker A
ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வாதம், பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கிறவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு ஒன்னு.
Speaker A
அந்த டைம்ல வார்க்கு சூஸ் பண்ணாங்க இல்லையா வார்க்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்ல தான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.
Speaker A
இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்பை வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.
Speaker B
இப்ப நான் அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படித்தான் இருக்கப்போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க.
Speaker B
இப்ப இந்த ராசில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்? இந்த ராசில இருக்க பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசில இருக்க பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.
Speaker B
திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.
Speaker B
சிம்மம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அதுவே பொதுவாவே அந்த ராசி வந்து கொஞ்சம் டாமினேட்டா
Speaker B
ராசி அப்படிங்கிற மாதிரி சொல்லுவாங்க.
Speaker B
இதுல இருக்க சிம்மத்துல இருக்க அந்த பிளட் குரூப்லாம் எப்படி இருக்கும்? அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும்?
Speaker A
இப்போ சிம்மத்துல வந்து ஓ தான் ரொம்ப டாமினேட். அவங்கதான் வந்து தன்னை வந்து ஒரு ராயல் லீடராவே நினைச்சுக்குவாங்க அப்படின்னா அது சிம்மம் தான்.
Speaker A
இப்ப அந்த ஜாப்பனீஸ்லாம் வந்து அந்த ஓவ சூஸ் பண்ணுனாங்க இல்லையா அந்த லீடர்ஷிப் ஸ்கில் அப்படிங்கிறது ஓக்கு தான் உண்டுன்னு தான் சூஸ் பண்ணாங்க.
Speaker A
அது முக்கியமா அந்த சிம்மத்துக்கு தான் அந்த ராயல்னஸ் ஹேண்டில் பண்ணக்கூடியதுல கெத்தாவே இருக்கும்.
Speaker A
இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துட்டே இருக்கிறதுதான்.
Speaker B
ஃபுல் கமாண்டிங்.
Speaker A
ஃபுல் கமாண்டிங் தான்.
Speaker A
அந்த ஓக்கு வந்து இருக்கும்.
Speaker A
அது மேல், ஃபீமேல் ரெண்டு பேத்துக்குமே இந்த விஷயம் இருக்கும்.
Speaker A
ஏ அப்படிங்கிறது எப்படி இருக்கும்னா
Speaker A
சமாளிக்க கூடியவங்களா இருப்பாங்க.
Speaker A
அந்த அத்தாரிட்டி எடுத்துக்குவாங்க. அப்பட்டமா வெளிய காட்டிக்க மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.
Speaker A
எங்க தேவையோ அங்க அவங்களுடைய அதிகாரத்தை காட்டிட்டு பேலன்ஸ்டா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது ஏல இருக்கிறவங்க இருந்துருவாங்க.
Speaker B
பதுங்கி பாயிற மாதிரி அப்படி.
Speaker A
இல்ல அவங்களுக்கு வந்து ஹேண்ட்லிங் தெரியும்.
Speaker B
எப்படி ஹேண்டில் பண்ணனும்னு.
Speaker A
எங்க யார்கிட்ட அப்படிங்கிற மாதிரி எங்க வாய்ஸ் ரைஸ் பண்ணனும் எங்க இறக்கணும் ஆனா வேலைகளை கரெக்டா செஞ்சிருவாங்க.
Speaker A
அந்த அத்தாரிட்டி கையில வச்சிருப்பாங்க.
Speaker A
டாமினன்ட்டா அது இருக்காது.
Speaker A
கடமையா செய்யற மாதிரி இருக்கப்போ மத்தவங்க கட்டுப்படுவாங்கங்கிற மாதிரிதான் இருக்கும்.
Speaker A
கடமையில கண்ணா இருப்பாங்க. எவ்வளவு நாள் ஆனாலும் சரி ஒரு வேலையை முடிக்கிறவங்களாதான் இந்த ஏல இருக்க சிம்மம் அப்படிங்கிறவங்க இருப்பாங்க.
Speaker A
இதே இது பில இருக்காங்கல்ல சிம்மம்.
Speaker A
இவங்கதான் வந்து ரொம்ப இளகன மனசு இருக்கிறவங்க.
Speaker A
தொட்டது தொண்ணூறுக்கும் ஒருத்தங்க அழுகுறாங்க அப்படின்னா அது சிம்மம் தான்.
Speaker B
சிம்மத்துல.
Speaker A
சிம்மத்துல இருக்கிறவங்கதான் அழுவாங்க.
Speaker A
பில இருக்கிறவங்கதான் அழுவாங்க.
Speaker A
ஹைலி எமோஷனல்.
Speaker A
இன்னொருத்தவங்களுடைய எனர்ஜிஸ வாங்கக்கூடியவங்க.
Speaker A
எத்தனை பேர் வந்து பாரத்தை இவங்ககிட்ட வந்து இறக்குறாங்களோ இது வாங்கிக்கிட்டே இருக்கும்.
Speaker A
வாங்கி வாங்கி அவங்களுக்காக அழுகுறது அவங்களுக்காக ஃபீல் பண்றது.
Speaker A
சம்பந்தமே இல்லாம ஒரு டிவியில ஒரு விஷயத்தை பார்த்துட்டு கண் கலங்குறது மனசு பாதிப்படையறது.
Speaker A
எங்கேயோ இது நமக்கு நடந்துருமோன்னு ஒரு இல்யூஷன்குள்ள போறது இது எல்லாமே பில இருக்கிற சிம்மத்துக்கு இந்த குணங்கிறது உண்டு.
Speaker A
சில சிம்மம்லாம் இவங்கதான் ஒபீஸ்க்குள்ள போறவங்க.
Speaker A
ஓவர் திங்கிங், ஓவர் ஈட்டிங், டைவர்ஷன்ஸ் வந்து எல்லாமே இந்த ஃபுட் கிட்ட போய் விழுகுறவங்க வந்து இவங்கதான்.
Speaker A
சம்டைம்ஸ் ஏதாவது ஒரு அடிக்ஷன்ஸ்க்கு போயிட்டாங்கன்னு வச்சுக்கோங்க.
Speaker A
இந்த பி வந்து அடிக்ஷன்ஸ்க்கு போயிருச்சுன்னா
Speaker A
கிட்டத்தட்ட இவங்களுடைய டிராமா பயங்கரமா இருக்கும்.
Speaker A
இந்த இவங்களோட கிரியேட்டிவிட்டியே எல்லாமே கொஞ்சம் டிராமட்டிக்காதான் இருக்கும்னு வச்சுக்கோங்களேன்.
Speaker A
ஒருத்தவங்கள வந்து சர்ப்ரைஸ் பண்றோம் அப்படின்னா பயங்கர டிராமாவா இருக்கும்.
Speaker A
வாவ் ஹாய் அப்படின்னுலாம் பேசி அப்படியே வராங்க இல்லையா.
Speaker A
இந்த மாதிரி ஏன்னா அவங்களுக்கு அது தேவை.
Speaker A
அவங்க வந்து அது வேணும்னு பண்றது இல்ல அவங்களுடைய பிஹேவியரே அவ்வளவு எக்ஸ்பிரசிவா இருக்கக்கூடியது.
Speaker B
இயல்பாவே.
Speaker A
அவங்களுடைய முழு இயல்பு அது.
Speaker A
ஆனா வரக்கூடிய லைஃப் பார்ட்னர் வந்து இவங்கள எப்படி ஹேண்டில் பண்றாங்கங்கிற ஒரு விஷயம்லாம் இருக்குது.
Speaker A
இதே இது ஏபி இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன்.
Speaker A
இவங்க வந்து கிங் அப்படின்னு சொல்லலாம்.
Speaker A
ஆனா சத்தமே இல்லாம ஒரு விஷயத்தை நடத்தி முடிக்கிறாங்க அப்படின்னா
Speaker A
அது ஏபில இருக்க சிம்மம் தான்.
Speaker A
எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது ஆனா இவங்ககிட்ட அத்தனை பேரும் ஒரு கண்ட்ரோல் இருக்கிற மாதிரியே இருக்கும்.
Speaker A
சத்தமாலாம் பேச தேவையில்லை.
Speaker A
பார்த்தாலே போதும்.
Speaker A
அப்படிங்கிறதுலாம் இருக்கு இல்லையா.
Speaker A
பிளானிங் கரெக்டா போடுறது.
Speaker A
இவங்களுக்கு எல்லாமே கரெக்டா இருக்கணும்.
Speaker A
பெரிய பெரிய நிறுவனங்களை எல்லாம் ஹேண்டில் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறதுலாம் இவங்களுக்கு இருக்கும்.
Speaker A
இந்த ஏபில இருக்கிறவங்க பாலிடிக்ஸ்ல எல்லாம் இருக்காங்க அப்படின்னா
Speaker A
நிறைய பேர் இவங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்புல வந்து அதிகமாவே இருப்பாங்க.
Speaker A
இவங்க யார்கிட்டயும் போய் வேலை செய்யறவங்க அப்படிங்கிறது
Speaker A
இந்த சிம்மம் முதல் ஏபி சிம்மம் முதல் அதை நினைக்காது.
Speaker A
ஏன்னா அப்படி போனா கூட தன்னை ஒரு கிங்கா ஒரு குயினாதான் வந்து இந்த ஏபி நினைப்பாங்க.
Speaker A
இதே இது இவங்க யாரை கல்யாணம் பண்ணிட்டா நல்லா இருக்கும்னா
Speaker A
ஓவும் ஏபியும் இவங்களுக்கு பெஸ்ட்.
Speaker A
ஏன்னா ஓ வந்து எமோஷன்ஸ்க்கு கட்டுப்படும்.
Speaker A
எப்படி வேணாலும் வளைஞ்சு கொடுக்கக்கூடிய அமைப்பு வந்து ஓக்கு உண்டு.
Speaker A
ஏபியும் வந்து
Speaker A
ஏபி இவங்களுக்கு தேவைதான்.
Speaker A
ஏன்னா இவங்களுக்கு எல்லாமே வந்து ஒரு ஸ்ட்ராட்டஜி போட்டு இருக்கிறவங்க இவங்க வாழ்க்கையில இருக்காங்க அப்படின்னா
Speaker A
ஏன்னா இது மேல் ஆகட்டும் ஃபீமேல் ஆகட்டும்.
Speaker A
இந்த சிம்மத்துக்கு வந்து அந்த ஒரு லக்ஸரி ஒரு கம்ஃபர்ட் லைஃப் ஸ்டைல் அப்படிங்கிற ஒரு விஷயம் தேவைப்பட்டுட்டே இருக்கும்.
Speaker A
அப்ப ஏபி இவங்க வாழ்க்கையில வாழ்க்கைக்குள்ள வராங்க அப்படின்னா வாழ்க்கை ரொம்ப நேர்த்தியா போகக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது வந்து
Speaker A
இவங்களுக்கு பிடிக்கும் கண்டிப்பா வாழ்க்கை இவங்களுக்கு செட் ஆகும்.
Speaker A
இவங்க கூட இருக்கக்கூடிய லைஃப் பார்ட்னருக்கு ஹார்ட் ரிலேட்டடா ஏதாவது ஒரு இஸ்யூ இருக்கும்.
Speaker B
ஹார்ட் ரிலேட்டடா.
Speaker A
ஒரு லைஃப் பார்ட்னருக்கு இருக்கும்.
Speaker A
ஹார்ட் ரிலேட்டடா ஒரு பிளட் சர்குலேஷன்ஸ் இந்த மாதிரி ஏதாவது ஒரு விஷயம் வந்து இவங்களுக்கு கண்டிப்பா வந்து லைஃப் பார்ட்னருக்கு வரக்கூடிய ஒரு அமைப்பு இந்த காம்பினேஷனுக்கு வரும்.
Speaker A
ஏன்னா
Speaker A
இவங்களுடைய அமைப்பே எப்படின்னா இவங்களுடைய வெல்த்தே வந்து ஒரு லீடர்ஷிப் லைன்ல இருக்கக்கூடிய அமைப்புலதான் வந்து சிம்மத்துக்கு லைஃப் பார்ட்னரே வருவாங்க.
Speaker B
சோ அந்த இன்கமே அப்படிதான் வரும். எந்த பிளட் குரூப்பா இருந்தாலும் அவங்க கூட இந்த ஏபி சேரும்போது அவங்களுக்கு இந்த மாதிரியான பாதிப்புகள் வரும்னு.
Speaker A
ஆமா இவங்களுக்கு வந்து ஓவும் ஏபியும் சேர்றப்போ
Speaker A
பாடில ஆட்டோமேட்டிக்கா இந்த மாதிரி இஸ்யூஸும் வந்து இவங்களுக்கு உள்ள வர ஆரம்பிச்சிரும்.
Speaker B
ஓக்கு உண்டு.
Speaker A
ஓக்கும் உண்டு ஏபிக்கும் உண்டு.
Speaker A
இது நடக்கும்.
Speaker A
இவங்களுக்கு லைஃப் பார்ட்னரா வரப்போ.
Speaker A
ஏன் அப்படின்னா
Speaker A
இவங்க வந்து இவங்களுடைய வெல்த் எல்லாம் எப்படி இருக்கும் அப்படின்னா ஒரு லீடர்ஷிப் ஸ்கில்லையே இன்கம் ஜெனரேட் பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.
Speaker A
அப்ப அந்த லீடர்ஷிப் ஸ்கில்ங்கிறது ஒரு ஸ்ட்ரெஸ்ஸான ஒரு ஜாப்லதான் அவங்க இருப்பாங்க.
Speaker A
அந்த டிக்னிட்டியை மெயின்டெயின் பண்ணிட்டே இருக்கணும்ங்கிறதுல ஒன்னு இருக்கும் அப்படின்னுங்கிறப்போ
Speaker A
இவங்களுக்கு இந்த மாதிரி ஹெல்த் இஸ்யூஸ் இருக்கும்.
Speaker A
இவங்களுக்கு வெல்த் வந்து வரக்கூடிய லைஃப் பார்ட்னர் வந்து நல்லா படிச்சவங்களாவோ ஒரு உழைப்பை போட்டுட்டே இருக்கக்கூடிய அமைப்புலதான் வந்து இவங்களுக்கு இருப்பாங்க.
Speaker A
இவங்களுக்கு கூட ஓ இருக்குது.
Speaker A
சிம்மத்துக்கு கூட ஒரு ஓ இருக்குன்னா
Speaker A
லக்கியா இருப்பாங்க.
Speaker B
சிம்மம் லக்கி.
Speaker A
சிம்மம் லக்கியா இருப்பாங்க. ஓ பக்கத்துல இருக்குது ஒரு ஃப்ரெண்டா இருக்கலாம், லைஃப் பார்ட்னரா இருக்கலாம், பிசினஸ் பார்ட்னரா இருக்கலாம்.
Speaker A
ஓ இருந்தா எல்லாத்துக்குமே அட்மைர் பண்ணும்.
Speaker A
ஓ வந்து சிம்மத்தை அட்மைர் பண்ணும்.
Speaker A
ஆகவே ஆகாதுங்கிறது பி தான்.
Speaker A
ஏன்னா ஆல்ரெடி
Speaker A
இந்துல இருக்க பியே வந்து அழுது வடிஞ்சு எமோஷனலா இருக்கக்கூடியவங்க.
Speaker A
அவங்க ஆல்ரெடி எக்ஸ்பிரசிவ்.
Speaker A
ரெண்டு எக்ஸ்பிரஷனும் சேர்ந்து என்ன வருது இன்னொரு கிரியேட்டிவிட்டி இங்க வந்துச்சுன்னு வச்சுக்கோங்களேன்.
Speaker A
ரெண்டு பேருமே ஒரு இல்யூஷன்ஸ்க்குள்ள போக ஆரம்பிச்சிருவாங்க.
Speaker A
சோ இவங்களுக்கு பி ஆகவே ஆகாது.
Speaker B
பி ஆகவே ஆகாது.
Speaker A
ஏன்னா பி வந்து ஹைலி எக்ஸ்பிரசிவா இருக்கிறது வந்து சிம்மத்தினால ஹேண்டில் பண்ண முடியாம
Speaker A
இந்த பி கேட்டகிரில வரவங்கதான் வந்து டிவோர்ஸ்க்கு போயிடுவாங்க.
Speaker A
கிட்டத்தட்ட மன அழுத்தத்துக்கே போயிடுவாங்க.
Speaker A
இந்த பி வந்து யாரும் ஒருத்தங்க பெரிய மன அழுத்தத்துக்கு போகக்கூடிய ஒரு அமைப்புங்கிறது உண்டு.
Speaker A
ஏன்னா சிம்மம் வந்து ராயலா இருக்கணும் தனக்கு வரவங்க லாயலா இருக்கணும்.
Speaker A
தன்னை பார்த்துக்கணும்.
Speaker A
அப்படிங்கிறதுலாம் ஒன்னு உண்டு.
Speaker A
அப்போ பி வந்துச்சுன்னா பார்த்துக்காது.
Speaker A
அப்போ இவங்களுக்கு எல்லாமே கொஞ்சம் ஈக்குவலா இருக்கணும் அந்த பிரைடோட இருக்கணும்.
Speaker A
அந்த கரிஸ்மாவோட லைஃப் கரெக்டா போயிறணும்ங்கிறதுதான் இவங்களுடைய எண்ணமாவே இருக்கும்.
Speaker A
இந்த சிம்மத்துல பி ஒன்னு இருக்கு ஆல்ரெடி எமோஷன்.
Speaker A
அவங்க அப்படித்தான் இருப்பாங்க.
Speaker A
ஆனா அவங்களுக்கு ஓவும் ஏபியும் வராங்க அப்படின்னா பேலன்ஸ் ஆயிடும்.
Speaker A
அவங்கள வந்து ஓவும் ஏபியும் பார்த்துக்கும்.
Speaker A
அந்த எமோஷன்ஸ வந்து ஒரு லவ்வா மாத்திடுவாங்க.
Speaker A
பட் இந்த பி வேற ஒரு பி வேற ஒரு ராசியில இருந்து ஒரு பி போகுது சப்போஸ்.
Speaker A
ஒரு சிம்மம் சிம்மமே கல்யாணம் பண்ணிக்கிறாங்க.
Speaker A
அதுக்குள்ள ஒரு பி வந்துருச்சு.
Speaker A
அவ்வளவுதான்.
Speaker A
ஹேண்டில் பண்ண முடியாது.
Speaker B
அது வந்து டிவோர்ஸ்ல தான் போய் முடியறதுக்கான வாய்ப்பு இருக்கு.
Speaker A
கிட்டத்தட்ட அப்படித்தான் ஆயிடும்.
Speaker B
சோ இப்ப இதுல ஒரு ஏன்னு ஒரு பிளட் குரூப் இருக்கு.
Speaker B
இப்ப சிம்மத்துக்கு கூட இந்த ஏ வந்து எந்த வகையில பொருந்தி போகும்?
Speaker A
பெருசா ஒன்னும் இம்பாக்ட் கிடையாது.
Speaker A
ஏன்னா அவங்க வந்து இந்த 9 டு 5 ஜாப் பண்ற மாதிரி.
Speaker A
சுவாரஸ்யம்ங்கிறது இருக்காது.
Speaker A
இருப்பாங்க இவங்களால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவங்களால இவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
Speaker A
அவங்க அவங்க அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு இருக்கிற மாதிரி.
Speaker A
இவங்க இருக்கறதுனால லக் ஆக்டிவேட் ஆகும் அப்படிலாம் கிடையாது.
Speaker A
ஒரு நார்மலா லைஃப் போயிட்டு இருக்கிற மாதிரிதான் அவங்களுக்கு இருக்கும்.
Speaker A
ஏன் அப்படின்னா
Speaker A
இந்த ஏபிக்கு இருக்கக்கூடிய அந்த கிரியேட்டிவிட்டி வந்து ஏ வந்து மத்தவங்களுக்கு தான் வேலை பார்த்துட்டு இருக்கும்.
Speaker A
இது வந்து சிம்மத்துக்கு ஆக்சுவலா வந்து பெருசா ஒரு ஒரு பெனிஃபிட் அப்படிங்கிற ஒரு விஷயத்தை கொடுக்காது.
Speaker A
அப்ப அந்த லைஃப் பார்ட்னரை பார்த்து ஒரு வெம்பிட்டியே இருக்கிற மாதிரிதான் இருக்கும்.
Speaker A
இப்படி இருந்திருக்கலாமே அப்படி இருந்திருக்கலாமே ஒரு குறைப்பாடோட இருக்கிற மாதிரியே ஒரு தாட் ப்ராசஸ்குள்ள அவங்க போயிடுவாங்க.
Speaker B
அவங்கள வந்து குறையாதான் பார்ப்பாங்க.
Speaker A
குறை இன்னும் பெட்டரா இருந்தா நல்லா இருக்குமே அப்படிங்கிற அந்த பெட்டர்னட் தாட்லயே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அவங்களுக்கு இருக்கும்.
Speaker B
கண்டிப்பா.
Speaker B
சிம்ம ராசிக்காரங்க எல்லாமே பார்க்குறாங்கன்னு வச்சுக்கோமே அவங்க வந்து அவங்களோட குணாதிசயங்களை தெரிஞ்சுக்கிட்டது மட்டும் இல்லாம அவங்களுக்கு யார் செட் ஆவாங்க.
Speaker B
யார் கூட வந்து பிசினஸா இருக்கட்டும் லைஃப் பார்ட்னரா இருக்கட்டும் யார் கூட எந்த பிளட் குரூப்காரங்க கூட சேர்ந்தா நல்லா இருக்கும்ங்கிறதுலாம் நீங்க ரொம்ப டீடைலா சொன்னீங்க.
Speaker B
அதே மாதிரி இன்னொரு விஷயம் என்னன்னா ஜாதகத்தை பார்த்து மட்டுமே பொருத்தம் பார்க்கக்கூடாது ஜாதகத்தை கூட சேர்த்து பிளட் குரூப்பை கண்டிப்பா பார்க்கணும்ங்கிறது வந்து நீங்க சொல்லி இருக்கீங்க.
Speaker B
கண்டிப்பா அதை பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன்.
Speaker B
சிம்ம ராசிக்காரங்க அவங்களோட என்ன பிளட் குரூப் அப்படிங்கிறத வந்து அவங்களோட குணாதிசயத்தை தெரிஞ்சுக்கிறதுக்கு அவங்களோட பிளட் குரூப்பை வந்து கமெண்ட்ல பண்ணுவாங்கன்னு நம்பலாம்.
Speaker B
நன்றி.
Speaker A
நன்றி.
Topics:சிம்மம்ராசி குணாதிசயங்கள்பிளட் குரூப்ஜோதிடம்தமிழ் ஜோதிடம்ராயல் லீடர்சிம்மம் ராசி பண்புகள்ஜீவிதா சுரேஷ்குமார்திருமணம் மற்றும் ராசிஆன்மீகம்











