சிம்ம ராசிக்காரர்களுக்கான 2026 புத்தாண்டு ராசிபலன், ஆரோக்கியம், வேலை, உறவு மற்றும் மனநிலை மாற்றங்கள் பற்றிய முக்கிய அறிவுரைகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- ஆரோக்கியம் மற்றும் மனநிம்மதி 2026ல் முதன்மை கவனம் பெற வேண்டும்.
- பழைய கடன்களை சரியாக முடித்து, வேலை மற்றும் வருமானத்தில் முன்னேற்றம் வரும்.
- சமூக உறவுகளில் ரகசியமாக நடந்து, வெளிப்படையான பேச்சை தவிர்க்க வேண்டும்.
- குரு கிரக மாற்றம் நல்ல பலன்களை தரும், அதனால் ஆன்மீக வழிபாடு முக்கியம்.
- மனைவியுடன் சமரசம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி மற்றும் சந்தோஷம் அதிகரிக்கும்.
What the video covers
- 2026ல் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய பெயர், புகழ் மற்றும் கௌரவம் வரும்.
- உடல் ஆரோக்கியம் முக்கியம், குறிப்பாக லிவர், ஹார்ட் மற்றும் நரம்பு பிரச்சனைகள் கவனிக்க வேண்டும்.
- பழைய கடன்கள் வசூலாகும், வேலை உயர்வு மற்றும் இடமாற்றம் ஏற்படும்.
- சமூக உறவுகளில் ரகசியமாக செயல்பட வேண்டும், வெளிப்படையாக பேசுவது வெற்றி குறைக்கும்.
- துரோகங்கள் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும், அதனால் மனநிம்மதி முக்கியம்.
- குரு கிரக மாற்றம் நல்ல பலன்களை தரும், ஆனாலும் சனியின் தாக்கம் கவனிக்க வேண்டும்.
- சூரிய நமஸ்காரம் மற்றும் கோவில் வழிபாடு மூலம் ஆரோக்கியம் மற்றும் மனநிம்மதி பெறலாம்.
- மனைவியுடன் சமரசம் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
- உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிம்மதி வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து ஆகும்.
- புதிய இடங்களுக்கு பயணம் மற்றும் இயற்கையுடன் இணைவது மனநிம்மதிக்கு உதவும்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
DISCLAIMER
Speaker A
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026.
Speaker B
செய்யாத குற்றத்துக்கு தண்டனைகள் வந்தே தீரும். அது ஒரு ட்ரைனிங் பீரியடா இது இருக்கு. மலை போல பிரச்சனைகள் வந்தாலும் பனி போல மாறும்.
Speaker C
உங்களுடைய லிவர்லாம் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும். ஹார்ட் அப்படிங்கிற ஒரு விஷயத்தை பத்திரமா பாத்துக்கணும். ஹெல்த் அப்படிங்கிற ஒரு விஷயத்தை தான் முதல்ல நீங்க போக்கஸ் பண்ணனும்.
Speaker D
சொல்லி சொல்லி கில்லி மாதிரி அடிப்பீங்க. இதுவரைக்கும் இல்லாத பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் எல்லாம் வந்திருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வரக்கான நேரம் அப்படியே நிறைய இருக்கு.
Speaker E
பெரிய பொறுப்புகள் உங்களுக்கு தேடி வரும். நம்பிக்கையாக பல காரியங்களை எடுத்து முன்வைக்கக்கூடிய ஸ்தானங்கள்.
Speaker E
ஆனா என்ன? ரகசியமாக செய்ய வேண்டும். எந்த விஷயத்தையுமே நீங்க ஓபனா வெளிய சொல்லும்போது அதனுடைய வீரியம் குறைந்துவிடும்.
Speaker A
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026. வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு. வருஷம் போகுது, மாசம் போகுது, நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.
Speaker A
நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களுடைய வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க.
Speaker A
அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு.
Speaker A
அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்க போகுது என்னவெல்லாம் பண்ணலாம் சார்?
Speaker B
பொதுவாவே இந்த யூடியூப், டிவி எல்லாத்துலயும் பார்த்தீங்கன்னா சார் சிம்ம ராசி நேயர்களே நீங்க வந்து அஷ்டம சனியில இருக்கீங்க.
Speaker B
ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.
Speaker B
அப்படின்னு ஒரு கிரகத்தை வச்சு நம்ம பலன் சொல்லானும் மற்ற கிரகங்கள் எப்படி இருக்குன்னு பார்க்கணும்.
Speaker B
இதை எல்லாத்தை விட உங்க ஜாதகத்துல இப்ப என்ன மகா திசைகள் நடந்துகிட்டு இருக்கு.
Speaker B
அது சாதகமா பாதகமா அப்படின்னு பார்க்கணும்.
Speaker B
தேவையில்லாம நீங்க வேற யாரையோ மனசுல வச்சுக்கிட்டு பேசுறதுங்கிறது அவ்வளவு சரியா வராது.
Speaker B
ஆனால் இந்த வருடம் பிறக்கும் பொழுது நான் சொல்லி இருக்கேன் தனுசுல நாலு கிரகங்கள் மகரத்துல நாலு கிரகங்கள்.
Speaker B
கும்பத்துல நாலு கிரகங்கள் இதை எல்லாத்தை விட சூரியன், சனி, செவ்வாய் சேரும் காலம்.
Speaker B
இந்த காலகட்டத்துல ஒன்பதாம் வீட்டுக்கு இந்த மூன்று பேரும் சேரும் காலத்துல உடல் ஆரோக்கியத்துல கவனம் வேண்டும்.
Speaker B
இப்ப நான் சொல்றேங்க உங்களுக்கு நல்ல வருமானம் வரும் உத்தியோக உயர்வு வரும் இடமாற்றம் வரும்.
Speaker B
தொழில் மாற்றம் வரும் பழைய கடன்கள் வசூலாகும்.
Speaker B
இதெல்லாம் கூட சொல்றீங்க ஏதோ கஷ்டப்பட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன்பா.
Speaker B
அப்படின்னு சொல்லிட்டு பழைய கடனை வசூல் பண்ணிறீங்க நீங்களும் கடனை கொடுத்துறீங்க.
Speaker B
வந்த பணத்தை பெட்டியில வைங்கன்னு நான் சொல்லணுமா?
Speaker B
அது உங்களுக்கே தெரியும்.
Speaker B
ஆனால் தயவு செஞ்சு டென்ஷன் ஆகாதீங்க துரோகங்கள் நிறைய இருக்கும்.
Speaker B
எதிர்பாராத இடத்திலிருந்து நண்பர்களிடத்திலிருந்து துரோகங்கள் இருக்கும்.
Speaker B
செய்யாத குற்றத்துக்கு தண்டனைகள் வந்தே தீரும்.
Speaker B
அது ஒரு ட்ரைனிங் பீரியடா இது இருக்கு.
Speaker B
சார் குரு மாறப்போறாரே.
Speaker B
குரு மாறி அதிசாரமா வரும்போது என்னுடைய ராசிக்கே வருவாரே.
Speaker B
இதெல்லாம் அப்ப பலன் நல்லா இருக்குமே சார் அப்படின்னா தப்பு இல்லை.
Speaker B
அது ஜென்மத்துக்கு வரும்போது ஐந்து, ஏழு, ஒன்பது பார்வை கிடைக்கும்.
Speaker B
மலை போல பிரச்சனைகள் வந்தாலும் பனி போல மாறும்.
Speaker B
நான் இல்லைன்னு சொல்ல வரல.
Speaker B
ஆனால் இதயம், ரத்த சம்பந்தமான, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
Speaker B
அலைச்சல், திரிச்சல் இருக்கக்கூடாது.
Speaker B
நிம்மதியாக தூங்கணும்.
Speaker B
எல்லாத்தை விட சில நேரங்கள்ல சில பிரிவுகள் நல்லதுமா.
Speaker B
கரை ரொம்ப நல்லது.
Speaker B
யாருக்கு நல்லது?
Speaker B
அந்த பவுடர் கம்பெனிக்கு நல்லது.
Speaker B
ஆனா மக்களுக்கெல்லாம் வெண்மையை தரக்கூடியது.
Speaker B
அந்த மாதிரி உங்களுக்கு ஊர் விட்டு ஊர் போனால் சில நேரத்துல இப்ப கணவர் வந்து வெளியூருக்கு போறாருன்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
என் வீட்டுக்காரர் இருந்தா எப்ப சாப்பிட்டீங்க? எப்போ போனீங்க? என்ன சாப்பிட்டீங்க அப்படின்னு கேட்பார்.
Speaker B
ஆனா அவர் வீட்ல இருக்கும்போது என்ன சாப்பிட்டா உனக்கு என்னயா அப்படின்னு விதண்டாவாதம் பண்ணவங்க கூட.
Speaker B
அவங்க பிரிவுல தான் அந்த உண்மை தெரியும் அன்பு புரியும்.
Speaker B
ஆகவே இந்த மாதிரி நேரத்துல உங்களுக்கு ஊர் விட்டு ஊர் போறதோ நாடு விட்டு நாடு போறதோ போனால்.
Speaker B
மன நிம்மதியும் சந்தோஷமும் வரும்.
Speaker B
நீங்க டாக்குமெண்ட்ல சைன் பண்றதா இருந்தா அரசாங்க உத்தியோகத்துல இருக்கிறவங்க ஒரு முறைக்கு ரெண்டு முறை படிச்சு பார்த்து கையெழுத்து போடுங்க.
Speaker B
பிரைவேட் துறையில இருக்கிறவங்களுக்கு நியாயம் சொல்றேன் தர்மம் சொல்றேன் நான் வந்து உங்களுக்கு.
Speaker B
உங்க பஞ்சாயத்து பண்றேன் அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்.
Speaker B
உடல் ஆரோக்கியத்துல கவனம் வைங்க.
Speaker B
உடம்பு நல்லா இருந்தா நம்ம எப்ப வேணாலும் பணம் சம்பாதிக்கலாம்.
Speaker B
இதெல்லாம் சரி சார்.
Speaker B
இதெல்லாம் மலை போல வர பிரச்சனைகள் எனக்கு போகணும் அப்படின்னா.
Speaker B
நான் எந்த கோவில்ல எப்படிப்பட்ட தானம் இறை வழிபாடு எப்படி செய்யலாம் அப்படின்னா.
Speaker B
அந்த கிரகம் உங்களை கோவிலுக்கு போக விடமாட்டான்.
Speaker B
நியாயமா நான் உங்களை சூரியனார் கோவிலுக்கு அனுப்பணும்.
Speaker B
சூரியனார் கோவிலுக்கு உங்களை போக விடமாட்டான்.
Speaker B
பக்கத்திலேயே சென்னைக்கு பக்கத்துல எதுனா இருக்கான்னா ஒரு அதி அற்புதமான கோவில் ஒன்னு இருக்கு.
Speaker B
அந்த ஊருக்கே பேரு ஞாயிறு கிராமம்.
Speaker B
அந்த ஊருக்கே ஞாயிறுன்னு பேரு.
Speaker B
தாமரை மீது சிவபெருமான் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான கோவில் தான் ஞாயிறு கிராமம்.
Speaker B
அந்த கோவிலுக்கு போயிட்டு ஞாயிற்றுக்கிழமையில அந்த சுவாமிக்கு கோதுமை அந்த கோதுமையில செய்யக்கூடிய உணவுகள் வந்து சுவாமிக்கு நெய்வேத்தியம் பண்ணி.
Speaker B
தானங்கள் செஞ்சு சிகப்பு மலர்களால ஆரஞ்சு மலர்களால நீங்கள் வந்து அர்ச்சனை செஞ்சீங்கன்னா.
Speaker B
உங்க உடல் ஆரோக்கியம் மன நிம்மதி.
Speaker B
தயவு செஞ்சுங்க வீட்ல உங்க மனைவியிடம் நீங்க தோற்கணும்.
Speaker B
அப்படி இல்லை அப்படின்னா மனசு கஷ்டம்.
Speaker B
வாழ்க்கையில வெற்றி பெறணும்னா மனைவியிடம் தோற்க வேண்டும்.
Speaker B
ஆர்கியூமெண்ட்ட விடுங்க.
Speaker B
மொத்தத்துல சிம்ம ராசி நேயர்கள் வாயை கட்டினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்னு சொல்லி.
Speaker B
வாழ்க வளமுடன் ஆல் தி பெஸ்ட்.
Speaker A
ஜீவிதா மேம் நீங்க சொல்லுங்க.
Speaker A
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு என்ன பலன்களை கொடுக்கப்போகுது?
Speaker C
சிம்ம ராசிக்காரங்க வந்து ஆல்ரெடி நிறைய ஸ்ட்ரெஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போயிட்டீங்க.
Speaker C
ஒபிசிட்டி அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ளயும் ஓவர் ஈட்டிங் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ளயும் நீங்க அதீதமா இப்ப போயிட்டு இருக்கீங்க.
Speaker C
உங்களுடைய ஃபுட் கண்ட்ரோல் அப்படிங்கிறது உங்க ஹெல்த்த பாதிச்சுக்கிட்டு இருக்கு.
Speaker C
எங்கிருந்து பாதிக்குது அப்படின்னு பார்க்கிறப்போ.
Speaker C
அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா எது வந்தது அப்படிங்கிற மாதிரி உங்களுக்கு தூக்கத்தினால ஸ்ட்ரெஸ் ஆச்சா.
Speaker C
இல்ல ஸ்ட்ரெஸ் வந்து தூக்கம் போச்சா இல்ல அதனால ஓவர் ஈட்டிங் பண்ணீங்களா.
Speaker C
இல்ல அதனால லேட் ஈட்டிங் பண்ணீங்களான்னு உங்களாலயே கண்டுபிடிக்க முடியாது.
Speaker C
இவங்களுடைய மைண்ட் டைவர்ஷன் எங்க இருக்கும் அப்படின்னா அந்த ஃபுட் கிரைவிங் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போய் உங்களுடைய ஹெல்த்த நீங்க ஸ்பாயில் பண்ணி.
Speaker C
வெயிட் இன்கிரீஸ் ஆகும் அப்படிங்கிறதும்.
Speaker C
ஒரு சிலருக்கு வெயிட் ரீதியான விஷயங்களிலேயே ஒரு குழப்பம் வரதும்.
Speaker C
உங்களுடைய லிவர்லாம் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும்.
Speaker C
ஹார்ட் அப்படிங்கிற ஒரு விஷயத்தை பத்திரமா பாத்துக்கணும்.
Speaker C
ஹெல்த் அப்படிங்கிற ஒரு விஷயத்தை தான் முதல்ல நீங்க போக்கஸ் பண்ணனும்.
Speaker C
அதுக்கப்புறமா தான் வாழ்க்கையோட டெவலப்மென்ட் என்ன அப்படிங்கறத ஒரு மனிதனுடைய சொத்தே என்ன அப்படின்னா அவனுடைய உடல் ஆரோக்கியம்.
Speaker C
அப்போ சிம்மம் அப்படிங்கிறது உங்களுடைய மிகப்பெரும் சொத்து 2026ல நான் சேர்க்கிறேன் அப்படின்னா.
Speaker C
முதலில் உங்களுடைய ஆரோக்கியம் அந்த ஆரோக்கியம் எப்படி இருக்கணும் அப்படின்னா.
Speaker C
நீங்களா சில கற்பனைகளுக்குள்ள போவீங்க.
Speaker C
அந்த எக்ஸ்டர்னல் வேலிடேஷன் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு இல்லையா.
Speaker C
யாரும் உங்களை எதுவுமே நினைக்கல.
Speaker C
யாரும் உங்களை எங்கேயும் குறையும் பேசல.
Speaker C
ஆனா இந்த சிம்மத்துக்கு எப்படி இருக்கும் அப்படின்னா யாராவது நம்மள பத்தி ஏதாவது பேசுறாங்களோ.
Speaker C
அதனால நம்ம இப்படி ஆயிட்டோமோ அப்படின்னு அந்த கான்பிடன்ஸ் லெவல் கொஞ்சம் இறங்குற மாதிரியான ஒரு சிச்சுவேஷன்ல இருக்கீங்க.
Speaker C
பட் ஸ்டில் நீங்க திருச்செந்தூர்ல இருக்கக்கூடிய.
Speaker C
அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தியை நீங்க போய் வழிபாடு பண்ணும் பொழுது.
Speaker C
உங்களுக்கு குரு பலமும் வரும்.
Speaker C
ஏன்னா குரு நல்லது செய்யற இடத்துக்கு வராரு அப்படிங்கிறப்போ.
Speaker C
யார் நல்லது செய்றாங்களோ அவங்களை போய் முதல்ல நம்ம புடிச்சுக்கணும்.
Speaker C
சூரிய நமஸ்காரம் காலையில ஆறு டூ ஏழுக்குள்ளார கோல்டன் சன் மூவ்மென்ட்.
Speaker C
என்னால ஆலயத்துக்கு போக முடியல.
Speaker C
பரவாயில்லை நீங்க காலையில எந்திரிச்சு வெளியில போய் பார்த்தாலே.
Speaker C
இந்த இயற்கையா ஆலயம் தான்.
Speaker C
அப்போ அந்த சூரியனுடைய வழிபாடு.
Speaker C
அந்த சூரிய நமஸ்காரம்.
Speaker C
கையில ஒரு நீரை வச்சுக்கணும்.
Speaker C
அஃபர்மேஷன் எடுக்கணும்.
Speaker C
சங்கல்பம் எடுக்கணும்.
Speaker C
நான் நல்லாதான் இருக்கேன்.
Speaker C
என்ன நான் வேல்யூ பண்றேன்.
Speaker C
நான் கான்பிடன்ஸா இருக்கேன்.
Speaker C
உங்களுடைய கான்பிடன்ஸை யாருமே உடைக்கவே முடியாது.
Speaker C
ஆனா நீங்களே உடைச்சு அதாவது வீட்ல இருக்கக்கூடிய சில சிச்சுவேஷன்ஸ்.
Speaker C
அந்த லோன்லினஸ்.
Speaker C
அந்த ஐசோலேஷன் உங்களை அப்படி பண்ணும்.
Speaker C
எங்கேயாவது ஒரு டிராவல் பண்ணி போயிட்டு வாங்க.
Speaker C
இயற்கையை நேசிங்க.
Speaker C
உங்களை சுத்தி இருக்க விஷயங்கள் எல்லாமே அழகா தான் இருக்கு அப்படிங்கிற ஒரு ரசிப்பு தன்மைக்கு நீங்க போகணும்.
Speaker C
இப்ப எப்படி இருக்குன்னா எல்லாமே விரக்தி தன்மையாவே இருக்கிற மாதிரியே இருக்கு.
Speaker C
எதுவுமே வந்து நிரந்தரம் கிடையாது மாற்றங்கள் ஒன்றே மாறாதது அப்படிங்கிறதை நீங்க நம்புனீங்க அப்படின்னா.
Speaker C
உங்களுக்கு வந்து ரெண்டு வகையா பிரிச்சிரலாம் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க போகுதுன்னு.
Speaker C
ஒரு அஞ்சு ஆறு மாசம் ஒரு ஏழு மாசம் எப்படியாவது கடந்துரணும்.
Speaker C
அதாவது 21 டேஸ் சேலஞ்ச் 48 டேஸ் சேலஞ்ச்.
Speaker C
அந்த டிசிப்ளின் குள்ள நான் வருவேன்.
Speaker C
உங்களுக்கு நீங்களே மார்க் போட்டுக்கோங்க.
Speaker C
உங்களுக்கு நீங்களே வேலிடேஷன் போட்டுக்கோங்க.
Speaker C
மத்தவங்க கிட்ட அந்த வேலிடேஷன் எதிர்பார்த்து ஒவ்வொருத்தவங்க கிட்ட போய் கேட்கிறப்போ எல்லாருமே பிஸியா இருந்துகிட்டு இருக்காங்கங்கிறப்போ.
Speaker C
உங்களுடைய எஃபர்ட் அவங்களுக்கு தெரியாம கூட போகலாம்.
Speaker C
ஆனா அந்த இயற்கை அந்த தெய்வம் அப்படிங்கிற ஒரு விஷயம் உங்களை பார்த்துட்டு இருக்கு.
Speaker C
அப்படிங்கிறப்போ தெய்வத்துடைய அனுகிரகம் குருவுடைய அனுகிரகம் குருவுடைய அருள்.
Speaker C
சனி என்ன பண்ணிட்டு இருக்கிறார் அப்படின்னா.
Speaker C
கொஞ்சம் யோசிங்க.
Speaker C
கொஞ்சம் நிதானமா இருங்க.
Speaker C
சுத்தி இருக்கிறவங்களை கவனிங்க.
Speaker C
உங்களுக்கு நல்லதுதான் சொல்றாங்க.
Speaker C
அப்படிங்கிற விஷயத்தை எடுத்துட்டு இருக்கும்போது கொஞ்சம் பிரிக்கிங்கா இருக்கும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
Speaker C
ஆனா அதெல்லாம் வந்து ரிஃபைன் பண்ற இடத்துல இருக்கீங்க.
Speaker C
டோட்டல் ரிஃபைன் அப்படிங்கிறதுதான் உங்களுடைய வாழ்க்கை 2026.
Speaker C
அதனால குரோத்தை நோக்கி போகக்கூடியது அந்த கான்பிடன்ஸை எங்கேயும் இழந்துடக்கூடாது.
Speaker C
ஓவர் கான்பிடன்ஸ் கூடவே கூடாது சிம்மத்துக்கு.
Speaker A
வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க சிம்மத்துக்கு.
Speaker A
2026 எப்படி இருக்கு?
Speaker D
தன்னுடைய செயலாலும் சிந்தனையாலும் அனைவரையும் சொக்க வைக்கும்.
Speaker D
என் மனசுக்கு பிடிச்ச சிம்ம ராசி.
Speaker D
அப்படிதான் சொல்லுவேன் இல்லையா.
Speaker D
சோ இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகுது அப்படின்னு சொல்லி பார்த்தோம்னா.
Speaker D
சிந்தனை வந்து கொஞ்சம் அப்படியே பிளாக்கேஜ் ஆகப்போகுது.
Speaker D
இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு விஷயம் வந்து ரொம்ப அப்படியே மாற தட்டி சொல்லலாம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தடவை செல்ப் கான்பிடன்ட் அதிகரிக்க போகுது.
Speaker D
ஸ்டாண்ட் அலோன்ல நிக்க போறீங்க.
Speaker D
சொல்லி சொல்லி கில்லி மாதிரி அடிப்பீங்க.
Speaker D
இதுவரைக்கும் இல்லாத பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் எல்லாம் வந்திருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வரக்கான நேரம் அப்படியே நிறைய இருக்கு.
Speaker D
ஏன்னா ஏழாம் இடத்துல இருக்கக்கூடிய ராகு இதுவரைக்கும் அப்படியே குருவோட பார்வையில இருந்தாரு இப்ப அப்படியே கொஞ்சம் நகர்ந்து தனித்த ராகுன்ற போது.
Speaker D
ஏழாம் இடத்துல இருக்கும்போது நிறைய வேற்று மொழி, வேற்று மதம், வேறு நாடு.
Speaker D
வேறு ஊருக்கு போய் அதன் மூலமாக பொருள் தேடக்கூடிய பொருள் அமையக்கூடிய.
Speaker D
வேலை அமையக்கூடிய வாய்ப்பெல்லாம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எக்கச்சக்கமா இருக்கு.
Speaker D
சிம்ம ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் இந்த தடவை தலைக்கு மேலேயே கேது.
Speaker D
தலைக்கு மேலேயே கேது இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
Speaker D
எப்பயுமே இந்த நியூ இயர் எடுத்தோம் ராசி பலன்லாம் எடுத்தோம்னா ஒரு நேச்சுரல் ஹாரோஸ்கோப் இந்த தடவை எப்படி இருக்குன்னா.
Speaker D
ராசிநாதன் அஞ்சாம் இடத்துல அமர்ந்து அங்கிருந்து குருவோட பார்வையில.
Speaker D
கிட்டத்தட்ட அஞ்சாம் இடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரம்பிக்கும் போதே வலிக்கிறது.
Speaker D
சிந்தனை, செயல், சொல்வாக்கு, செல்வாக்கு, கீர்த்தி, புகழ், அந்தஸ்து, கலை, ஜோதிடம்.
Speaker D
திடீர் அதிர்ஷ்டம், பணம், லாட்டரி டிக்கெட் இதெல்லாம் இந்தா இந்தா இந்தான்னு சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய கிடைப்பதற்கான வாய்ப்புகள்.
Speaker D
100, 200% இருக்கு.
Speaker D
உங்களுடைய ஜனன கால ஜாதகம் அதுக்கு இண்டிகேட் பண்ற பட்சத்துல கண்டிப்பாக சிம்ம ராசிக்காரர்களுக்கு.
Speaker D
ப்ரமோஷன் அப்படின்றது 100 விழுக்காடு இருக்கு.
Speaker D
யாரெல்லாம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு திசை நடக்குதோ குரு திசை நடக்குதோ.
Speaker D
எழுதி வச்சுக்கோங்க நிறைய இன்வெஸ்ட்மென்ட் பண்ணி நிறைய புதிய புதிய விஷயங்கள் நீங்க பண்றதுக்கான வாய்ப்புகளை இது உங்களுக்கு.
Speaker D
உருவாக்கி கொடுக்கும்.
Speaker D
சோ சிம்ம ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் இந்த தடவை கொஞ்சம் உங்களுடைய யோசனையில மட்டும் கவனமா இருங்க.
Speaker D
நீங்களா தேவையில்லாம ஏதாவது ஒரு டிராப் பாசஸ் குள்ள போயிட்டு ஏன்னா தலைக்கு மேல இருக்கக்கூடிய கேது வந்து.
Speaker D
அப்படியே ஒரு மாதிரி தனிமைப்படுத்தப்படுவார் எப்பயுமே.
Speaker D
ஒரு மாதிரி நான் இருந்துக்கிறேனே நான் பேசாம இருந்துக்கிறேனே சிங்கம் சிங்கிளா இருந்தாதான் நல்லா இருக்கும்.
Speaker D
எப்பயும் போல நீங்க அப்படியே கெத்தா இருந்தாதான் எல்லாருக்கும் பிடிக்கும்.
Speaker D
அப்படியே ஒரு மாதிரி நான் உண்டு என் வேலை உண்டு அப்படின்ற மாதிரி போறது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குன்ற மாதிரி தேவையில்லாத ஒரு இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளக்ஸ் குள்ள போய்க்கிறதுன்ற மாதிரி.
Speaker D
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு மாதிரி சின்ன சின்னதா மைண்ட் லெவல்ல ஒரு டிஸ்டர்பன்ஸ் வரும்.
Speaker D
அப்புறம் பாத்தீங்கன்னா 12 ஆம் இடத்துக்கு குரு போகும்போது 12 ஆம் இடம் அயன சேனை போகத்தை வந்து அபெக்ட் பண்ணுவாரு இல்ல பெருக்குவாரு.
Speaker D
அதெல்லாம் தாண்டி.
Speaker D
12 ஆம் இடம் அப்படின்றதே சிறைவாசம்னு ஒன்னு இருக்கு.
Speaker D
அதனால ஜெயிலுக்கு போவீங்களா.
Speaker D
அப்படிலாம் இல்ல.
Speaker D
நிறைய சிம்ம ராசிக்காரங்க இந்த தடவை ஒர்க் ஃப்ரம் ஹோம் பார்ப்பீங்க.
Speaker D
அதுவே வீட்டுக்குள்ள இருக்கிறது அந்த மாதிரிதான்.
Speaker D
அதனால நிறைய சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தடவை ஒர்க் ஃப்ரம் ஹோம் அமையறதுக்கான வாய்ப்பெல்லாம் இருக்கு நீங்களா வீட்ல உட்கார்ந்து ஒரு விஷயம் நீங்க வந்து ஆரம்பிப்பீங்க.
Speaker D
அது பெரிய அளவுல உங்களுக்கு சக்சஸ் கொண்டு வந்து கொடுக்கும்.
Speaker D
12 ஆம் இடம் இன்வெஸ்ட்மென்ட் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்.
Speaker D
நிறைய இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவீங்க.
Speaker D
நிறைய லேண்ட்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணுவீங்க.
Speaker D
எஸ்பெஷலி உங்களுடைய மனைவிக்கு இல்ல உங்களுடைய கணவருக்கு உங்கள் சம்பாத்தியத்தில் ஏதாவது நகை வாங்கி தரது இல்ல ஏதாவது கிப்ட் வாங்கி தரதுன்ற மாதிரி இந்த தடவை.
Speaker D
வருஷம் ஆரம்பிக்கும்போதே அவங்க இன்ப்ரஸ் பண்றதுக்கான அமைப்பு எல்லாம் கொண்டு வந்து கொடுக்கும்.
Speaker D
நிறைய ஏழாம் இடம் இயங்குது.
Speaker D
அதனால கொஞ்சம் சிம்ம ராசிக்காரர்கள் ஆன்லைன்ல ரொம்ப ரொம்ப கவனமா இருங்க.
Speaker D
தேவையில்லாத தளத்தை தேவையில்லாம பார்த்து தேவையில்லாம மாட்டிக்காதீங்க.
Speaker D
12 ஆம் இடம் ஏற்கனவே ஆக்டிவேட் ஆயிட்டு இருக்கு.
Speaker D
அதனால இதை மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துகிட்டா போதும்.
Speaker D
சிம்ம ராசிக்காரர்கள் மத்தபடி எல்லாமே சூப்பரா இருக்கு.
Speaker D
நிறைய சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தடவை கொஞ்சம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம்.
Speaker D
ரத்தத்துல கொஞ்சம் அணுக்களுடைய உற்பத்தி கொஞ்சம் கம்மியாகலாம்.
Speaker D
தூக்கத்துல கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் வரும்.
Speaker D
பிபி அதிகரிக்கிறதுக்கான வாய்ப்புகள் உண்டு.
Speaker D
ஏன்னா செவ்வாயுடைய சேர்க்கையும் ஓரளவுக்கு இருக்கறதுனால கொஞ்சம் அடிக்கடி கோவப்படுவீங்க.
Speaker D
பிபி அதிகரிக்கும்.
Speaker D
நிறைய காரமா சாப்பிட்டு அல்சர் அது மாதிரிலாம் இருக்கறதுனால கொஞ்சம் சாப்பாட்டு விஷயத்துல.
Speaker D
மிகுந்த கவனம் தேவை.
Speaker D
என்ன கோவிலுக்கு போய் வழிபாடு பண்ணலாம் அப்படின்னா.
Speaker D
தலையில நாகாபரணம் சூடிய சிவன் ஆலயம் பக்கத்துல இருந்தா அங்க போயிட்டு வாங்க.
Speaker D
பிரதோஷ வேலையில போய் தேன் கொடுத்து அபிஷேகம் பண்ணுங்க.
Speaker D
நிறைய சிம்ம ராசிக்காரங்க இந்த தடவை திருச்செந்தூர் முருகனை பார்ப்பீங்க.
Speaker D
திருச்செந்தூர் போயிட்டு வரதுக்கான வாய்ப்பு கண்டிப்பாக அமையும்.
Speaker D
கிட்டத்தட்ட டிசம்பர்க்குள்ள ஒரு தடவையா திருச்செந்தூர் முருகனை பார்த்து அங்க போய் கடல்ல நீராடிட்டு வருவதற்கான வாய்ப்பு சிம்ம ராசிக்காரர்களுக்கு இருக்கு.
Speaker D
அங்க போயிட்டு வந்ததுல இருந்து உங்களுக்கு ராஜயோகம் இனிதே மலர காத்திருக்கிறது.
Speaker A
சார் நீங்க சொல்லுங்க சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு?
Speaker E
2026 சிம்ம ராசி நண்பர்களுக்கு ஃபர்ஸ்ட் விஷயம்.
Speaker E
ராசி லக்னத்திலே கேது இருக்கிறதும் ஏழாம் இடத்துல இருக்கக்கூடிய ஒரு கெடு பலன்கள் எல்லாமே வந்து அதிகமா காட்டும்.
Speaker E
விச் மீன்ஸ் என்னன்னா இப்ப ஃபேமிலியை விட்டு பிரியற மாதிரி வரும்.
Speaker E
சில பேருக்கு டிவோர்சஸ் நடக்கும்.
Speaker E
இந்த ஃபேமிலியே வேணாம் நமக்கு இந்த பிரச்சனையே வேணாம்னு சொல்லி சந்நியாசிகள் எல்லாம் போலாம்ங்கிற மாதிரி ஐடியாஸ்லாம் கிரியேட் ஆகும்.
Speaker E
சில பேருக்கு மறுமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள்.
Speaker E
எப்படி ஆல்ரெடி டிவோர்ஸ் ஆனவங்க.
Speaker E
இல்லனா கல்யாணம் ஆகி பிரேக் ஆயிருக்கும் இல்ல ஏதோ ஒரு சிச்சுவேஷனால ஃபேமிலியை விட்டு பிரிஞ்சிருப்பாங்க.
Speaker E
மேரேஜ் நாட் கன்சூமரேட்டட் அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker E
சோ அந்த மாதிரி இருக்கக்கூடிய ஆண்களை அல்லது பெண்களை நீங்கள் திருமணம் பண்ணக்கூடிய வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு.
Speaker E
ரெண்டாவது பார்த்துக்க வேண்டிய ரொம்ப முக்கியமானதுங்கிறது உங்களுடைய தலைப்பகுதி.
Speaker E
தலைப்பகுதி மேல மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு சில பேருக்கு ஏற்படும்.
Speaker E
ஒரு சில பேருக்கு மெயினா மாத்துரு காரகன் அம்மாவை ஏதோ ஒரு இடத்துல பிரியற மாதிரி ஒரு சிச்சுவேஷனோ ஒரு பயத்தை கண்டிப்பாக கொடுக்கக்கூடிய.
Speaker E
ஒரு நிலைமைகள் கண்டிப்பாக உண்டு.
Speaker E
ரெண்டாவது விரையத்துல உட்கார்ந்திருக்கக்கூடிய குரு உங்களுக்கு என்னன்னா.
Speaker E
நிறைய ஆலய வழிபாடுகளுக்கு செல்ல வைக்கும்.
Speaker E
க்ஷேத்ராடனங்கள் அப்படின்னு சொல்லுவோம்.
Speaker E
தீர்த்த யாத்திரைகள்.
Speaker E
புண்ணிய க்ஷேத்ராடனங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு.
Speaker E
அது வந்து நிறைய மகான்கள் சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் தான் ரொம்ப அதிகமா இருக்கு.
Speaker E
சரி ஏதாவது ஒன்னா நல்லதா நடக்குமான்னு கேட்டா.
Speaker E
சிம்பிள் சொல்யூஷன்.
Speaker E
குரு எப்ப விரையத்துக்கு போறாரோ பரஸ்தானம் போயிடணும்.
Speaker E
பரஸ்தானம் மீனிங் இருக்கிற ஊரை விட்டு வேற ஊருக்கு.
Speaker E
வேற இடத்துக்கு.
Speaker E
இல்லையா இருக்கிற ஜாப விட்டு வேற ஜாப்க்கு போயிட்டோம்னா இது பெரிய ஒரு பிரச்சனைகள்.
Speaker E
பொதுவா டிஸ்டர்பன்ஸ் எல்லாம் கொஞ்சம் குறையும்.
Speaker E
நம்பக்கூடாத விஷயமே உங்க நண்பர்கள் தான்.
Speaker E
நண்பர்களை வீட்டுக்குள்ள விட்டீங்கன்னா அதுக்கப்புறம் கும்மி அடிச்சிட்டு போயிடுவாங்க.
Speaker E
உங்களால வந்து நம்பிக்கை இழந்து பல விஷயங்களை வந்து தவிக்கிற மாதிரி இருக்கும்.
Speaker E
குடும்பத்தையே விட்டுட்டான்.
Speaker E
இதுக்கப்புறம் நமக்கு ஒண்ணுமே கிடையாது.
Speaker E
அப்படிங்கிற நிலைமை போயிடும்.
Speaker E
அதே மாதிரி ஃபேமிலில இருக்கக்கூடிய ரகசியங்களை கப்புன்னு வைக்கணும்.
Speaker E
நீங்க வெளிய போய் ஜாலி என் பிரண்ட் தானே எங்க அக்கா தானே எங்க அண்ணன் தானேன்னு உட்கார்ந்து உளறினீங்கன்னா நிறைய பிரச்சனைகள் கண்டிப்பாக கொடுக்கும்.
Speaker E
இதுல மிக முக்கியமானது தாயாருடைய உடல்நலம்.
Speaker E
சந்திரன் கேது ஸ்தானம் கனெக்ட் ஆகும்போது அம்மாவுடைய ஹெல்த் இஸ்யூ.
Speaker E
மெயினா கேதுங்கிறது பேசிக்கலா கிட்னி சம்பந்தப்பட்ட பாதிப்புகள்.
Speaker E
அதெல்லாம் வந்து மெயினா பாத்துக்கணும்.
Speaker E
சில பேருக்கு லோவர் பேக்.
Speaker E
அது கொஞ்சம் பிரச்சனைகள் கொஞ்சம் கொடுக்கும் அதுக்கும் மேல சிம்மத்துக்கு ப்ராப்ளம்னா ஸ்கியாட்டிக்கா.
Speaker E
அதாவது கால் நரம்பு கீழ வரைக்கும் இழுக்கும் உட்கார முடியாது நிக்க முடியாது இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொடுக்கும்.
Speaker E
இதெல்லாம் ஒரு நெகட்டிவ் ஷேட்ல இருந்தாலும் ஒரு பெரிய பாசிட்டிவ் ஷேட் பார்த்தீங்கன்னா.
Speaker E
ஜூனுக்கு முன்னாடி நிறைய விஷயங்கள் பாசிட்டிவாவே நடக்கும்.
Speaker E
எதிர்பாராத இடத்துல இருந்து ஆஃபர் வரும்.
Speaker E
பெரிய பொறுப்புகள் உங்களுக்கு தேடி வரும்.
Speaker E
நம்பிக்கையாக பல காரியங்களை எடுத்து முன்வைக்கக்கூடிய ஸ்தானங்கள்.
Speaker E
ஆனா என்ன?
Speaker E
ரகசியமாக செய்ய வேண்டும்.
Speaker E
எந்த விஷயத்தையுமே நீங்க ஓபனா வெளிய சொல்லும்போது அதனுடைய வீரியம் குறைந்துவிடும்.
Speaker E
அப்ப எந்த அளவுக்கு நீங்க ஓபனா சொல்லாம இருக்கீங்களோ அந்த அளவுக்கு நல்லது.
Speaker E
ரெண்டாவது வேற்று மொழி மனிதர்கள் அல்லது வேற்று இனத்தினர் மூலமா சில பிரச்சனைகள்.
Speaker E
சில பேருக்கு முடி கொட்டும்.
Speaker E
ஐயயோ முடி கொட்டுதேன்னு ஃபீல் பண்ணக்கூடாது.
Speaker E
சில பேருக்கு அந்த ட்ரான்ஸ்பிளான்ட் மாதிரி விஷயங்கள் எல்லாம் பண்ணுவீங்க.
Speaker E
சோ மோர் ஆர் லெஸ் சிம்மத்துக்கு பார்க்கும்போது இடமாற்றம் செய்தால்.
Speaker E
க்ஷேத்ராடனங்கள் சென்றால்.
Speaker E
வீட்ல பெரியவங்களுக்கு.
Speaker E
அதாவது என்னன்னா நம்ம வந்து பெரியவங்களுக்கு செய்யக்கூடிய பித்து ஷார்த தர்ப்பணங்கள்.
Speaker E
இந்த மாதிரி விஷயங்கள்ல.
Speaker E
வட்டமா ஒரு மண்டலம் போடுவோம்.
Speaker E
அதுக்கு அப்புறம் சௌகவர் மண்டலம்னு சொல்லுவோம்.
Speaker E
அதாவது ஸ்கொயரா ஒரு மண்டலம் சொல்லுவோம்.
Speaker E
பிண்ட பிரதானம் பண்ணுவோம்.
Speaker E
அதுல பார்த்தீங்கன்னா மெயினா உருண்டை உருண்டையா வந்து ரைஸ் பால்ஸ் இங்கிலீஷ்ல சொன்னா.
Speaker E
அதை வந்து நம்ம பேசிக்கலா அந்த பித்துருக்களுக்கு நம்ம கொடுக்கக்கூடிய ஸ்தானம்.
Speaker E
அது எங்க போய் சேருதுன்னா டைரக்டா மாத்துரு காரகன் வழியா அப்பாவுடைய முன்னோர்களுக்கு போய் சேரும்.
Speaker E
அப்ப அவர்களுக்கு செய்யக்கூடிய விஷயங்கள் நீங்க கரெக்டா பண்றீங்க அமாவாசை அன்னைக்கு நீங்க செய்யக்கூடிய தான தர்மங்கள்.
Speaker E
இதெல்லாம் பெரிய அளவுக்கு உங்களுக்கு மாற்றங்கள் கொடுக்கும்.
Speaker E
ஒரு சின்ன சொல்யூஷன் நம்ம சொல்லணும்னா இவ்வளவு அளவுக்கு எனக்கு சித்திரவதையா இருக்கு.
Speaker E
பயங்கர பிரஷரா இருக்கு தாங்க முடியலன்னா.
Speaker E
சிவன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை இந்த பூஜா சாமான் ஸ்டோர் போனீங்கன்னா தர்ப்பை அப்படின்னு கேட்டா கொடுப்பாங்க.
Speaker E
அதை ஒரு கட்டு கொண்டு போய் கையில கொடுத்துட்டு ஒரு 11 ரூபாய் தட்சணை கொடுத்துட்டு கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு வந்தீங்கன்னா போதும் சிம்ம ராசி நண்பர்களுக்கு பயங்கர மாற்றத்தை கொடுக்கும்.
Speaker E
ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை பண்ணலாம்.
Speaker E
இது பண்ணும்போது அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு உங்களுக்கு பிரச்சனையே கிடையாது நிம்மதியா தூங்குவீங்க பிரச்சனைகள் எல்லாம் இருக்கும்.
Speaker E
சோ ஓவர் ஆலா பார்க்கும்போது சந்தோஷமும் சரி புல்லாதர ஏற்றமும் சரி ஆன் அன் ஆவரேஜ் ஒரு 80% நல்லா இருக்குன்னு சொல்லலாம்.
Speaker E
தூக்கத்தை இழக்காமல் பார்த்துக் கொள்வது உங்களுடைய வேலை.
Speaker A
கண்டிப்பா சார்.
Speaker A
சிம்ம ராசிக்காரர்கள் இதை கேட்கும்போது இதெல்லாம் செஞ்சா வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அப்படின்னு இதை உபயோகமா எடுத்துப்பாங்க அப்படின்னு நினைக்கிறேன்.
Topics:சிம்மம்ராசிபலன் 2026புத்தாண்டு பலன்ஆரோக்கியம்வேலை உயர்வுமனநிலைகுரு கிரக மாற்றம்சூரிய நமஸ்காரம்மனைவியுடன் சமரசம்துரோகங்கள்











