மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தரும் முருகன் வழிபாடு மற்றும் செவ்வாய் தோஷ பரிகாரம் பற்றி ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- மீன ராசிக்காரர்கள் ஆறுமுகன் முருகனை வழிபாடு செய்தால் வாழ்க்கையில் ராஜயோகம் ஏற்படும்.
- செவ்வாய் தோஷம் வாழ்க்கையில் மனஅழுத்தம், வீடு பிரச்சனை போன்றவை உண்டாக்கும்; பரிகாரம் அவசியம்.
- முருகனை செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் வழிபாடு செய்வது சிறந்தது.
- வீட்டிலேயே மனதில் நினைத்து வழிபாடு செய்தாலும் முருகர் அருள் கிடைக்கும்.
- மோட்ச பாதை கடினமானது; மனசு வலியும் நிதானமும் அவசியம்.
What the video covers
- மீன ராசிக்காரர்கள் டோட்டல் சரண்டர் ஆகி, மோட்ச பாதையை நோக்கி செல்ல வேண்டும்.
- பர்சனல் மற்றும் ப்ரொபஷனல் வாழ்க்கையில் சமநிலை இல்லாமல் மனசு வலியும் மனஸ்தாபமும் ஏற்படும்.
- ஆறுமுகன் முருகனை திருபரங்குன்றம் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்தது.
- செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் முருகனை வழிபாடு செய்தல் நன்மை தரும்.
- வீட்டிலேயே சிகப்பு மலர்கள் வைத்து முருகனை வழிபாடு செய்யலாம்; மனதில் நினைத்தாலும் போதும்.
- செவ்வாய் தோஷம் வாழ்க்கையில் பல பிரச்சனைகள், குறிப்பாக வீடு மற்றும் வாழ்க்கை துணை பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
- செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் பரிகாரம் செய்தால் வாழ்க்கை நன்றாக அமையும்.
- முருகன் வழிபாடு மற்றும் பரிகாரம் மூலம் மனசு நிதானமாகவும், நிதானமாக மோட்ச பாதை செல்ல முடியும்.
- சேனல் ஆன்மீக அனுபவங்களை ஆரோக்கிய முறையில் பகிர்ந்து, ஜோதிட அறிவுரைகளை வழங்குகிறது.
- முருகனை வழிபாடு செய்வதில் நேரம் மற்றும் நாள்களின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
DISCLAIMER
Speaker A
இந்த சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த கருத்துக்களே ஆகும்.
Speaker A
ஆன்மீக அனுபவங்களையும், ஆன்மீக கருத்துக்களையும் ஆரோக்கியமான முறையில் பயனுள்ள நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புவதே RETRO ஆன்மீகம் சேனலின் நோக்கம்.
Speaker A
மீன ராசிக்காரங்க வந்து மோட்சத்தை நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு.
Speaker A
லிபரேஷன்.
Speaker A
டோட்டல் சரண்டர் ஆயிருங்கன்னுதான் நான் சொல்லுவேன்.
Speaker A
பர்சனல் லைஃப் ரொம்ப நல்லா போயிட்டு இருக்க மாதிரி இருக்கும், ப்ரொபஷனல் லைஃப் சரியா இருக்காது.
Speaker A
ப்ரொபஷனல் லைஃப் நல்லா போயிட்டு இருக்குன்னா பர்சனல் லைஃப் ஒரு மாதிரி அடி வாங்கும்.
Speaker A
ஏதாவது சின்ன மனஸ்தாபம் ஆச்சுன்னா இவங்க எல்லாம் உடைஞ்சு போயிடுவாங்க.
Speaker A
இவங்க எல்லாம் டோட்டலா
Speaker B
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம்.
Speaker B
தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம்.
Speaker B
அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Speaker B
வணக்கம் மேம்.
Speaker A
வணக்கம்.
Speaker B
மீன ராசிக்காரர்கள் எந்த கோவில் போய் எந்த முருகனை வணங்கினா அவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்?
Speaker A
மீன ராசிக்காரங்க வந்து
Speaker A
டோட்டல் சரண்டர் ஆயிருங்கன்னுதான் நான் சொல்லுவேன்.
Speaker A
ஏன்னா மீன ராசிக்காரங்களுக்கு குழப்பம் அதிகம்.
Speaker B
ஓகே.
Speaker A
ஏதோ ஒண்ணுதான் நல்லா இருக்கும்ங்கிற மாதிரியே அவங்களுக்கு இருக்கும்.
Speaker A
ஒண்ணு பர்சனல் லைஃப் ரொம்ப நல்லா போயிட்டு இருக்க மாதிரி இருக்கும், ப்ரொபஷனல் லைஃப் சரியா இருக்காது.
Speaker A
ப்ரொபஷனல் லைஃப் நல்லா போயிட்டு இருக்குன்னா பர்சனல் லைஃப் ஒரு மாதிரி அடி வாங்கும்.
Speaker A
ஏன்னா இவங்க ஏதோ ஒண்ணுலதான் ஃபோகஸ் பண்ணிட்டே இருப்பாங்க.
Speaker A
அதுக்கப்புறம் இது வரல, அது வரல அப்படின்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கக்கூடிய அமைப்பு.
Speaker A
லைஃப் பார்ட்னர்ஸ்ல ரொம்ப க்ளோஸா இருப்பாங்க.
Speaker A
ஏதாவது சின்ன மனஸ்தாபம் ஆச்சுன்னா இவங்க எல்லாம் உடைஞ்சு போயிடுவாங்க.
Speaker A
இவங்க எல்லாம் டோட்டலா ஆறுமுகன், ஆறுமுகனேன்னு போய் உட்கார்ந்தரணும்.
Speaker A
டோட்டல் சரண்டர் நீயே பார்த்துக்கோ அப்படிங்கிற மாதிரி உட்கார்ந்தரணும்.
Speaker A
இவங்களும் வந்து திருபரங்குன்றம்.
Speaker A
இவங்களுக்கு செட் ஆகும்.
Speaker A
இந்த ஆறுமுகம் எப்படி வழிபாடு பண்ணனும்னா இந்த ஒரு முருகன்லாம் இவங்களுக்கு வேலைக்கு ஆகாது.
Speaker A
அறுபடையும் இவங்க வழிபாடு பண்ணனும் மீனம்.
Speaker A
ஏன்னா மீன ராசிக்காரங்க வந்து மோட்சத்தை நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு.
Speaker A
லிபரேஷன்.
Speaker A
மீன ராசி அப்படிங்கிறது.
Speaker A
மோட்ச பாதை.
Speaker A
அந்த மோட்ச பாதை எப்படி வரும் அப்படின்னா மோட்ச பாதை அவ்வளவு ஈஸி கிடையாது.
Speaker B
ஓகே.
Speaker A
எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்கணும்.
Speaker A
மனசு அடிபடணும், மனசு வலிக்கணும்.
Speaker A
மனசு வலிச்சாதான் நிதானம் வரும்.
Speaker A
நிதானம் வந்தாதான் உங்களால இன்னொருத்தங்களை ஹீலிங்கே பண்ண முடியும்.
Speaker A
ஹீலிங் பண்ணுனாதான் மோட்ச பாதைக்கே போக முடியும்.
Speaker A
இவ்வளவு பெரிய ப்ராசஸ் இருக்கு மீன ராசிக்கு.
Speaker A
அந்த ரியாலிட்டி அவங்க புரிஞ்சுக்கணும்.
Speaker A
ஏன்னா மீன ராசிக்கு ஒரு விஷயத்தை நம்ம சொல்றோம்னா இது உங்களுக்கு நடக்கப்போகுது.
Speaker A
எப்ப நடக்கும்? எப்ப நடக்கும்?
Speaker A
இருங்க அதுக்கு ஒரு நேரம்.
Speaker B
அவசரப்பட்டு.
Speaker A
காலம்.
Speaker B
அவகாசம்.
Speaker A
அவகாசம் இருக்கு.
Speaker A
அந்த அவகாசத்தை அவங்க கொடுக்கவே மாட்டாங்க.
Speaker A
அதுதான் மோட்ச பாதை.
Speaker A
அவகாசம்ங்கிறது நிதானமா கடந்து அப்படியே ரிலாக்ஸ்டா போய்.
Speaker A
இவங்க எல்லாம் கோவில்ல
Speaker A
போயிட்டு ரிட்டர்ன் டிக்கெட் கூட எடுக்காதீங்க.
Speaker B
உட்கார்ந்து.
Speaker A
ஏன்னா இவங்க வந்து வொர்க்கஹாலிக்.
Speaker B
அதே செட்டில் ஆயிடுவாங்க.
Speaker A
இவங்க வொர்க்கஹாலிக் மீன ராசி.
Speaker A
இந்த வேலைக்காக நான் டக்குன்னு போயிட்டு டக்குன்னு வந்தா ஓகே நான் இதை செஞ்சுட்டேன் இதை பண்ணிரு அப்படிங்கிற மாதிரி வருவாங்க.
Speaker A
அதெல்லாம் இல்ல.
Speaker A
பெசாம போய் உட்காருங்க.
Speaker A
இவங்க வந்து கால்குலேட் பண்ணி வழிபடக்கூடியவங்களா இருப்பாங்க.
Speaker A
அதாவது நான் சாமிக்கிட்ட இந்த வேண்டுதல் வச்சுட்டேன்.
Speaker A
அப்ப சாமி நம்மளுக்கு இந்த வேலையை பார்த்தரணும்.
Speaker B
ஓகே.
Speaker A
அப்படி இருக்கக்கூடாது.
Speaker A
சாமி பார்க்கும் ஏன்னா உங்களோடது மோட்ச பாதை.
Speaker A
நிதானமாதான் போகும்.
Speaker B
எல்லா முருகன் கோயிலையும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க.
Speaker B
அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை.
Speaker B
முருகனை பார்க்க யாராலயும் முருகனை பார்க்கவே முடியல கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டர்ன் வந்துறாங்க.
Speaker B
ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க?
Speaker A
ஏன்னா செவ்வாய் காரகன் அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது.
Speaker A
அதனாலதான் வந்து வியாழன்.
Speaker A
அதனாலதான் இந்த ரெண்டு நாள்.
Speaker A
இப்போ அது எப்படி வழிபடலாம்னா.
Speaker A
இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க தங்கிடுங்க.
Speaker A
புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
Speaker A
ஏன்னா வந்து புதன் புத்தி.
Speaker A
அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.
Speaker A
அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம்.
Speaker A
இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.
Speaker A
இந்த இதுதான் அந்த காம்பினேஷன்.
Speaker A
செவ்வாய், புதன், வியாழன்.
Speaker A
இந்த மூணும்.
Speaker A
இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு.
Speaker A
ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கிறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும்.
Speaker A
இந்த பச்சையையும் குறிக்கும்.
Speaker A
மயிலையும் குறிக்கும்.
Speaker A
சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ்.
Speaker A
புதன் அப்படிங்கிறது.
Speaker A
முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு.
Speaker A
அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சுட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.
Speaker A
இந்த கூட்டத்துலதான் போய் கும்பிடணும் அப்படிங்கிறது இல்லை.
Speaker A
முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம்.
Speaker A
ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களுடைய எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா அந்த கிழமைகள்ல அவங்களோட எனர்ஜி வந்து.
Speaker A
நம்மளோட எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கிறப்ப உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை.
Speaker A
நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.
Speaker A
உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை போகும்.
Speaker B
இப்ப வந்து கோவிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க.
Speaker B
நீங்க சொல்ற மாதிரி செவ்வாய், புதன், வியாழன் என்னால கோவில்ல எல்லாம் போய் தங்க முடியாது.
Speaker B
நான் வந்து வீட்டிலேயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி?
Speaker A
தாராளமா.
Speaker A
அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல சிகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்ப முருகரை மனசுல நினைச்சுட்டாலே போதும்.
Speaker A
வேல்மாறல் கேட்கிறதோ, கந்தசஷ்டி கவசம் கேட்கிறதோ.
Speaker A
இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே அந்த.
Speaker A
அந்த உபதேசங்களை கேட்டாலே போதும்.
Speaker A
முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவாரு நீங்க வந்து கோவிலுக்கு போகணும்னு இல்ல.
Speaker A
நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம்.
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சுட்டாருன்னா அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
Speaker B
சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்.
Speaker B
இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker B
சிகப்பு கலருக்கு சொந்தக்காரர், ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker B
சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.
Speaker B
சில பேர் ஜாதகக்காரர்கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம், தசா, புத்தி எல்லாமே பார்த்தாலுமே செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள் சில விஷயங்கள் சொல்லுவாங்க.
Speaker B
அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.
Speaker B
சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.
Speaker A
அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கிறதுதான் அதனுடைய கணக்கு.
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.
Speaker A
12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.
Speaker A
இப்படிலாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் உட்கார்ந்துருச்சு, நாலுல செவ்வாய் உட்கார்ந்துருச்சுன்னா இதெல்லாமே செவ்வாய் தோஷம்.
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்துருக்குன்னா பார்ஷியலா செவ்வாய் தோஷம்.
Speaker A
எட்டுல செவ்வாய் உட்கார்ந்துருக்குன்னா முழுசா செவ்வாய் தோஷம்.
Speaker A
சோ இந்த செவ்வாய் தோஷம் ஒரு லைஃப் பார்ட்னருக்கு மட்டும்தான் இஸ்யூ கொடுக்குமா அப்படின்னா.
Speaker A
உங்க வாழ்க்கையில யாரெல்லாம் பார்ட்னரா வராங்களோ ஏதோ ஒரு இஸ்யூ ஏதோ ஒரு மனசை உடைச்சிட்டு போகக்கூடிய விஷயங்கள்.
Speaker A
அவங்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் வர்றது அந்த மாதிரி வந்து இருக்கும்.
Speaker A
அதாவது இப்ப நாலுல செவ்வாய் இருக்கவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.
Speaker A
சொந்த வீடு அமையாது.
Speaker A
அவங்களுக்குதான் இந்த வீடு பிரச்சனை வர்றது.
Speaker A
லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க நல்லா இருக்கும்.
Speaker A
எங்கயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கிறத அவங்களுக்கு சொல்லிடுவாங்க.
Speaker A
இப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.
Speaker A
ஏன்னா நிதானம் இருக்காது.
Speaker A
ஆக்ரோஷமா இருக்கிறது.
Speaker A
அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம்.
Speaker A
அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா.
Speaker A
நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லிதான் ஆகணும்.
Speaker B
கண்டிப்பா.
Speaker A
செவ்வாய்ங்கிறது நம்முடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்குங்கிறது சொல்றதுதான் அது.
Speaker A
அதை சரி பண்ணிக்கணும்.
Speaker A
இப்ப செவ்வாய் தசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா என்னோட அப்பாவை நான் பார்க்கணும்.
Speaker A
அப்படி அவங்க யோசிக்கணும்.
Speaker A
என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது?
Speaker A
ஹெல்த் பார்க்கிறது அதாவது அப்பாவுக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.
Speaker A
அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது.
Speaker A
இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது.
Speaker A
ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு இப்ப அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா அப்போ அது வீக் ஆயிட்டே போகுதுன்னா.
Speaker A
கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.
Speaker A
ஹெல்த் வைஸ் பண்ணாது.
Speaker A
டக்குன்னு ஏதாவது ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்.
Speaker A
ஏதோ ஒண்ணு பண்ணி விட்டுரும்.
Speaker A
இல்ல இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது.
Speaker A
செவ்வாய்.
Speaker A
வாழ்க்கையில.
Speaker A
ஏன்னா.
Speaker A
ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும்.
Speaker A
செவ்வாய்க்கு.
Speaker A
ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம்.
Speaker A
புத்தி உடையது.
Speaker A
கேதுதான் நிதானத்தை கொடுக்கும்.
Speaker A
அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா.
Speaker A
யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்.
Speaker B
ஓகே.
Speaker A
அதுல நம்மளுக்கு ஒரு அப்செட் கொடுக்கும்.
Speaker A
கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே.
Speaker A
நான் தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.
Speaker A
இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.
Speaker A
சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.
Speaker A
சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.
Speaker A
சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா.
Speaker A
காலபைரவரை வழிபாடு பண்ணனும்.
Speaker B
ஓகே.
Speaker A
அஷ்டமி அமாவாசையில காலபைரவரை வழிபாடு பண்ணி காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.
Speaker A
விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.
Speaker A
பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.
Speaker A
பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க.
Speaker A
அதாவது அஷ்டதிக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க.
Speaker A
அஷ்டதிக் பாலகர்களை தொட்டலாம் வழிபாடு பண்ணக்கூடாது.
Speaker A
அஷ்டதிக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.
Speaker A
உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker A
அது அஷ்டதிக் பாலகர்கள்தான் பார்த்துட்டே இருப்பாங்க.
Speaker A
எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.
Speaker A
ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.
Speaker A
இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கிறதுதான் அது.
Speaker A
அதுதான் அந்த செவ்வாய்க்கான.
Speaker A
இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.
Speaker A
கர்மாவை இறக்கி வச்சுட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும்.
Speaker A
அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.
Speaker A
இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.
Speaker A
பிராயச்சித்தத்தை முடிச்சுட்டு பரிகாரம் பண்ணனும்.
Speaker B
நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம் பிராயச்சித்தம் பண்ணிட்டுதான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.
Speaker B
இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்கும் ஒரு மைண்ட்ல வர்றது வந்துட்டு.
Speaker B
பெண்களைதான் அதிகமா சொல்லுவாங்க இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம் இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிரும்.
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீட்ல நல்லா இருக்காது வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றத பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்தில் இருக்கிற கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.
Speaker B
அது உண்மைதானா மேம்?
Speaker A
அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.
Speaker A
பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும்.
Speaker A
அவங்களுக்கு.
Speaker A
அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள்தான்.
Speaker A
ஆனா அவங்களால குடும்பம் கொலையப்போகுது சீர்கெடப்போகுது அந்த மாதிரிலாம் கிடையாது.
Speaker A
அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது.
Speaker A
ஏன்னா அவங்க எல்லாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க.
Speaker A
அந்த செவ்வாய்.
Speaker A
ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல.
Speaker A
அவங்களால அது நடக்கல.
Speaker A
இது வந்து அவங்களுடைய கர்மா.
Speaker A
அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சுட்டு இங்க.
Speaker A
ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப இங்க இது கிளியர் ஆயிடும்.
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.
Speaker A
செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும்.
Speaker A
அப்படிங்கிறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.
Speaker A
28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா அவங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.
Speaker A
அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.
Speaker A
அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு குரு குருமார்களை மதிக்கிறது.
Speaker A
ஏன்னா.
Speaker A
செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும்.
Speaker A
செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.
Speaker A
அப்போ அங்க குரு இருக்கிறப்ப செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.
Speaker A
சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க.
Speaker A
விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.
Speaker A
அது அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது.
Speaker A
அப்படி இருக்கிறப்ப கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.
Speaker A
குரு குருதான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது.
Speaker A
செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.
Speaker A
குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங்.
Speaker A
அப்ப எதுவும் நடக்காது.
Speaker B
சோ செவ்வாய் தோஷம்னா என்ன அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும் பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கிறதையும்.
Speaker B
செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம் அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கிறதையும் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
Speaker B
தொடர்ந்து பேசுவோம் நன்றி.
Topics:மீன ராசிமுருகன் வழிபாடுஆறுமுகன்செவ்வாய் தோஷம்ஜோதிடம்மோட்சம்திருபரங்குன்றம்ஆன்மீகம்பரிகாரம்Retro Aanmeegam











