சிம்மம் ராசிக்காரர்களுக்கான காலபுருஷ தத்துவம் மற்றும் அவர்களின் வாழ்க்கை ட்ராப்கள், சவால்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய விரிவான விளக்கம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- சிம்மம் ராசிக்காரர்களுக்கு வயிற்றுப்பகுதி தொடர்பான உடல் மற்றும் மன சவால்கள் உள்ளன.
- ஆண் சிம்ம குழந்தைகள் அதிக ஆணவம் கொண்டவர்கள், வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
- பெண் சிம்ம ராசி குழந்தைகள் குடும்ப செழிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- திருமணம் தாமதமாகும் சாத்தியங்கள் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பெண்கள் சந்திக்கக்கூடும்.
- ஆன்மீக சரணடைதல் மற்றும் மன அமைதி பெற காலபுருஷ தத்துவம் வழிகாட்டுகிறது.
What the video covers
- காலபுருஷ தத்துவம் மூலம் மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மா விளக்கம்.
- 12 ராசிகளுக்கான தனித்துவமான ட்ராப்கள் மற்றும் வாழ்க்கை சவால்கள்.
- சிம்மம் ராசிக்காரர்களின் உடல் பகுதி வயிற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சனைகள்.
- ஆண் மற்றும் பெண் சிம்ம ராசி குழந்தைகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் வாழ்க்கை பாதைகள்.
- ஆண் சிம்ம குழந்தைகள் அதிக ஆணவம் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதன் முக்கியத்துவம்.
- பெண் சிம்ம ராசி குழந்தைகள் குடும்பத்தில் செழிப்பையும் ஆளுமையையும் கொண்டுவரும் தன்மை.
- சிம்ம ராசி பெண்களுக்கு திருமணம் தாமதமாகும் சாத்தியங்கள் மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள்.
- ஆணவம் மற்றும் சூரியனின் ஆதிக்கம் காரணமாக ஏற்படும் மனப்பாங்கு மற்றும் சவால்கள்.
- சிம்ம ராசி மக்களுக்கு ஆன்மீக பாதையில் செல்லும் வழிகாட்டல் மற்றும் சரணடைதல் முக்கியத்துவம்.
- காலபுருஷ தத்துவம் மூலம் வாழ்க்கை சவால்களை சமாளித்து முன்னேற வழிகாட்டுதல்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
வணக்கம்மா.
Speaker B
வணக்கம்.
Speaker A
எப்படி இருக்கீங்க?
Speaker B
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
Speaker A
நல்லா இருக்கேன். சோ, ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம், என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறதை ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம். அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு.
Speaker B
காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து, இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம், அதாவது கர்மா.
Speaker B
நம்ம வந்து காரண காரியத்தோடதான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு. அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது. அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை.
Speaker B
ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்கப்போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையிலிருந்து ரிலீவ் ஆகணும்?
Speaker B
ஏன்னா, மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படினாலே,
Speaker B
நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு.
Speaker B
இல்ல லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம்.
Speaker B
எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்குதான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது. அதுதான் காலபுருஷ தத்துவம்.
Speaker B
அதாவது இன்னும் ஜெர்னி இருக்கு அப்படிங்கற ராசிகளும் இருக்காங்க. இல்ல உங்களுக்கு ஜெர்னி முடியப்போகுது.
Speaker B
அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.
Speaker B
இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கற ஒரு விஷயம் தான் இது.
Speaker B
சோ, இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ, இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ்.
Speaker B
அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.
Speaker B
மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன்?
Speaker B
நான் யாரு? என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன மாறிக்கிட்டே இருக்கும்.
Speaker B
ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமா மாறிக்கிட்டே இருக்கிறப்போ, நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும்.
Speaker B
ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.
Speaker B
காலபுருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம்.
Speaker B
புருஷன் அப்படிங்கறது பர்சன், மனிதனை சொல்லக்கூடியது.
Speaker B
அதுதான் காலபுருஷன்.
Speaker B
இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான்.
Speaker B
எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ,
Speaker B
அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.
Speaker A
சோ, அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும்,
Speaker A
இப்ப ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும்.
Speaker A
இந்த விஷயம் பண்ணலாம், இந்த விஷயம் பண்ணக்கூடாது.
Speaker A
இவங்க இதுக்காகதான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொல்லிட்டு இருக்கோம்.
Speaker A
அதுல சிம்மம் அப்படின்னு சொன்னாலே,
Speaker A
சிம்ம ராசிக்காரர்கள்.
Speaker A
காலபுருஷ தத்துவப்படி.
Speaker A
அந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன ட்ராப் எல்லாம் இருக்கு?
Speaker A
சோ, பிறந்ததுல இருந்து இறக்கிறது வரைக்கும் நம்மள வழிநடத்திட்டு போறது காலபுருஷ தத்துவம் தான் சொல்லிருக்கீங்க.
Speaker A
இதுல சிம்மம் அப்படின்னு சொன்னாலே அக்னி அக்னி ராசின்னு சொல்லுவாங்க.
Speaker A
ரொம்ப சூடான ராசி.
Speaker A
சிவனோட ஆசீர்வாதம் அதிகமாக இருக்கும் அப்படின்னு நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.
Speaker A
சிம்மம் சொன்னாலே ஒரு ஒரு பொசிஷன்ல ஒரு ஸ்ட்ராங்கான பொசிஷன்ல உட்கார்ந்திருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker A
காலபுருஷ தத்துவப்படி அவங்களுக்கு என்னென்ன ட்ராப் எல்லாம் இருக்கு?
Speaker B
காலபுருஷ தத்துவப்படி வயிற்றுப்பகுதியை குறிக்கிறதுதான் வந்து சிம்மம்.
Speaker B
டைஜெஷன் அப்படிங்கிற விஷயம் எல்லாம் பார்த்துக்கணும்.
Speaker B
அவ்வளவு சீக்கிரம் நிறைய விஷயங்களை டைஜெஸ்ட் பண்ணிக்கவே இவங்களால முடியாது.
Speaker B
இவங்களுக்கு வந்து எப்பவுமே தான் என்கின்ற அகந்தை அப்படிங்கிறதோ அப்படிங்கிற ஒரு மனப்பாங்கோடதான் இவங்க வந்து பிறப்பதும், வளர விதமும் அப்படித்தான் இருக்கும்.
Speaker A
சோ, பொறுப்பா இருப்பாங்க.
Speaker B
பெண்கள் இருக்காங்க அப்படின்னா பொறுப்பு.
Speaker B
ஆண்கள் இருக்கிறாங்க சிம்மத்துல பிறக்கிறாங்கன்னா பொறுப்பெல்லாம் இருக்காது.
Speaker B
மந்த நிலையிலேயே இருக்கக்கூடிய அமைப்பு பெரும்பாலும் இருக்கும்.
Speaker B
இதுதான் வந்து சிம்மத்துக்கான காலபுருஷ தத்துவம். அது ஆண் சிங்கம், பெண் சிங்கம்.
Speaker B
இவங்க எல்லாம் வந்து சிம்பல்ஸ் அப்படின்னு பார்க்கிறப்போ, இந்த சிம்மம் ரிலேட்டடா.
Speaker B
சங்கு இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வச்சு வீட்ல வழிபாடு அப்படிங்கறதெல்லாம் இவங்க பண்றப்போ,
Speaker B
இந்த எனர்ஜிஸ் எல்லாம் இவங்களை வந்து கொஞ்சம் ப்ரொடெக்ட் பண்ற மாதிரி இருக்கும்.
Speaker B
இப்ப ஆண் ஆண் குழந்தைகள் இருக்காங்க சிம்மம்ல அப்படின்னா,
Speaker B
காலபுருஷ தத்துவப்படி, இப்ப ஒரு ஆண் சிங்கம் வந்து,
Speaker B
வேட்டைக்கு போகணும்னா போயிட்டு வந்துரும்.
Speaker B
வீட்ல வந்து சிவனேன்னு உட்காரும்.
Speaker B
எது ஏதோ ஒரு காரண காரியத்துக்காக தூண்டப்பட்டால் மட்டுமே அந்த சிங்கம் வேலை பார்க்கும்.
Speaker B
பெண் சிங்கம் அப்படி இல்லை.
Speaker B
உள்ள நுழைஞ்சு சுத்தி எல்லா வேலையும் பார்க்கும்.
Speaker B
அப்போ பெண் குழந்தைகள் சிம்மத்துல பிறக்கிறாங்கன்னா, அந்த குடும்பமே ஒரு ஆளுமையா இருக்கும்.
Speaker B
செழிப்பான ஒரு குடும்பமா இருக்கும் பெண் குழந்தைகள் பிறக்கிறாங்க அப்படின்னா.
Speaker B
இப்ப ஆண் குழந்தைகள் பிறக்கிறாங்க அப்படின்னா,
Speaker B
இப்ப நான் சொன்னேன் இல்லையா சிங்கம் வேட்டைக்கு போகணும்.
Speaker B
அதே மாதிரி இவங்க வந்து ஸ்போர்ட்ஸ்க்கு போகணும்.
Speaker A
ஓகே.
Speaker B
இந்த ஆண் குழந்தைகள்.
Speaker B
வெளிய போய் களத்துல போய் விளையாண்டுட்டு வர குழந்தைகள் வந்து சிம்மத்துல இருக்க குழந்தைகள்.
Speaker B
ஆண் குழந்தைகள் வாழ்க்கையில சக்சஸ் ஆயிடுவாங்க.
Speaker B
சில பேரண்ட்ஸ் என்ன பண்ணுவாங்கன்னா சிம்மத்தை விளையாடவே விடாம படிடா படிடா உனக்கு பொறுப்பு இல்லையா? அது இல்லையா? இது இல்லையா? உன்னால இப்படி ஆகுதுன்னு ஒபிஸ்க்கு போயிருவாங்க அந்த குழந்தைகள்.
Speaker B
சீக்கிரம் ஒபிஸ்க்கு போய் அடிக்ஷன்ஸ்க்கு போகக்கூடிய அமைப்பு வந்து சிம்மத்துல இருக்க ஆண் குழந்தைகளுக்கு உண்டு.
Speaker B
சிறு வயசு சிறு வயசுல இருந்தே இவங்களை களத்துல இறக்கிடணும்.
Speaker B
அது என்ன ஸ்போர்ட்ஸா இருந்தாலும் சரி ஓடணும், விளையாடணும், அந்த குரூப்பா விளையாடணும்.
Speaker B
ஃபுட்பால், பாஸ்கெட்பால், கிரிக்கெட் இந்த மாதிரி இவங்க போகணும்.
Speaker B
இல்ல அப்படின்னா,
Speaker B
காம்ப்ளக்ஸ் இன்ஃபர்ட்டிலிட்டி காம்ப்ளக்ஸ் இந்த குழந்தைகளுக்கு வர ஆரம்பிச்சு,
Speaker B
அப்படியே அந்த அந்த பாடியை வந்து நம்மளால காப்பாத்தவே முடியாது.
Speaker B
எல்லா நோய்களையும் வந்து அந்த ஆண் குழந்தைகள் வாங்கக்கூடிய ட்ராப்புக்குள்ள போய் அதை விட்டுரும்.
Speaker B
அதுதான் அவங்களுடைய ட்ராப்.
Speaker B
இதேதான் பெண் குழந்தைகளுக்கும்.
Speaker B
பெண் குழந்தைகள் வந்து நல்லா ஆக்டிவா இருக்கக்கூடிய ஒரு அமைப்புல இருப்பாங்க.
Speaker B
திடீர்னு சில பெண் குழந்தைகளுக்கு என்ன ஆகும் அப்படின்னா,
Speaker B
எங்கேயோ ஒரு இடத்துல அடிபடுறதோ இல்ல ஏதாவது ஒரு மெடிக்கல் ட்ரீட்மென்ட் போறப்போ,
Speaker B
இவங்க இவங்க இயற்கை சார்ந்த ட்ரீட்மென்ட்ஸ்ல இருந்துட்டாங்கன்னா தப்பிச்சிருவாங்க.
Speaker B
இதே இது ஸ்டீராய்ட்ஸ் எடுத்துக்கிறாங்க.
Speaker B
இந்த சிம்மத்துக்கு இந்த அமைப்பு உண்டு பெண் குழந்தைகளுக்கு.
Speaker B
ஸ்டீராய்ட்ஸ் எடுத்துக்கிறாங்கன்னா ஒபிஸ்க்குள்ள போவாங்க.
Speaker B
யூட்ரஸ் பாதிக்கப்படும் வயிற்றுப்பகுதி.
Speaker B
எதுவா இருந்தாலும் வயித்துல பிரச்சனை வரக்கூடிய ஒரு அமைப்புங்கறது இவங்களுக்கு வந்துரும்.
Speaker B
திருமணம்ங்கறது கொஞ்சம் டிலே ஆகக்கூடிய அமைப்பும் வந்து சிம்ம ராசி பெண்களுக்கு உண்டு.
Speaker B
சிம்ம ராசி பெண்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அந்த திருமணம்.
Speaker B
இவங்க எல்லாம் கொஞ்சம் ஏர்லி மேரேஜ் பண்ணிக்கிட்டா நல்லது ஒரு 23 இயர்ஸ் அந்த அதுக்குள்ள அவங்க பண்ணிக்கிட்டாங்கன்னா,
Speaker B
கல்யாணம் ஆயிடும்.
Speaker B
கரெக்டா ஆயிடும்.
Speaker B
இல்லன்னா ரொம்ப லேட் நான் இன்னும் படிக்கணும்.
Speaker B
அந்த ஆணவம் ஜாஸ்தி ஆயிட்டே போக போக என்ன ஆகும்னா,
Speaker B
யூட்ரஸ்ல இஸ்யூஸ் வந்துகிட்டே இருக்கும்.
Speaker B
ஒபிஸ்க்குள்ள போகக்கூடிய அமைப்பும் இந்த குழந்தை பிறப்பு தள்ளி ஆகக்கூடிய அமைப்பும் வந்து சிம்ம ராசி பெண்களுக்கு இதுதான் ட்ராப்.
Speaker B
அந்த குழந்தைக்காக ஏங்க வைக்கக்கூடிய தன்மையை வந்து சிம்ம ராசிக்கு கொடுத்துருவாங்க.
Speaker B
லேட் மேரேஜா இருக்கும் பொழுது.
Speaker B
அப்போ ஹெல்த்தை வந்து இந்த வயிற்றுப்பகுதியிலதான் வந்து அது அஃபெக்ட் பண்ணும்.
Speaker B
எப்படியும் அதை அஃபெக்ட் பண்ணிரும்.
Speaker B
ட்ராப்பும் பார்த்தீங்கன்னா ஆணவம் ஜாஸ்தியா இருக்குமா?
Speaker A
சோ, நான் தான் அப்படின்னு ஒரு மைண்ட்செட் இருக்கும்.
Speaker B
இந்த ஆணவம் இருந்துகிட்டே இருக்கும்.
Speaker A
ஓகே.
Speaker B
எப்ப வந்து இவங்களுக்கு கேது, சனி திசை எல்லாம் வந்து வேலை பார்க்குதோ,
Speaker B
அந்த டைம்ல பட்டேல்னு அடிச்சு உட்கார வைக்கும்.
Speaker B
அடிச்சு உட்கார வைக்கிறப்பதான் அந்த ட்ராப்புக்கான கீயே என்னன்னு இவங்களுக்கு பார்க்க தோணும்.
Speaker B
அப்பதான் சர்வீஸ் ஓரியன்டடான விஷயங்கள்ல போய் டச் பண்ணனும்.
Speaker B
அப்பதான் மத்தவங்களுக்கு ஹெல்ப்பிங் டென்டன்சிக்குள்ள இறங்கி சரண்டரிங் லெவலுக்கு இவங்க போய் ஆகணும்.
Speaker B
முருகரை எல்லாம் கெட்டியா பிடிச்சு முருகான்னு டோட்டலா போய் சரண்டர் ஆயிடணும் இவங்க எல்லாம்.
Speaker B
ஏன்னா இவங்களுக்கு வந்து சித்தருடைய கனெக்டிவிட்டிங்கறதுதான் காலபுருஷ தத்துவம் சொல்லுது.
Speaker B
ஏன்னா சிம்மம் ரொம்ப ஆணவமா இருக்கிறதுனால, சூரியனும் ரொம்ப ஆதிக்கமா இருக்கிறதுனால,
Speaker B
இவங்க வந்து மத்தவங்களுடைய லைஃப்க்கு ஒரு ஒளியாதான் இருக்கணும்.
Speaker A
ஓகே ஓகே.
Speaker B
ஆனா இவங்களுக்கு வந்து அந்த வயிற்றுப்பகுதின்னு சொன்னதுனால அந்த வயிற்று எரிச்சலும் உண்டு.
Speaker A
அடுத்தவங்களை பார்த்துட்டு.
Speaker B
என்ன என்ன விட இவங்க எப்படி இப்படி இருக்காங்க அப்படிங்கிற ஒரு தாட் போக போக கர்மா ரொம்ப வேலை பார்க்கும்.
Speaker B
அதுதாங்க அதுதான் காலபுருஷ தத்துவம் வச்சிருக்க ட்ராப் இவங்களுக்கு.
Speaker B
அப்போ இதெல்லாம் இருந்து நான் மத்தவங்களுடைய லைஃப்ல ஒரு ஒளிச்சுடரா நான் இருப்பேன்.
Speaker B
நான் வந்து என்னை விட தாழ்ந்து யாரையும் பார்க்க மாட்டேன் அப்படிங்கிற ஒரு மைண்ட்செட்டுக்குள்ள கொண்டு வந்து ஆன்மீக பாதைக்குள்ள கொண்டு போக வைக்கிறதுதான் காலபுருஷ தத்துவம் சொல்ற விஷயம் இவங்களுக்கு.
Speaker A
ஓகே.
Speaker A
இப்ப சிம்ம ராசி நீங்க சொல்லும்போது அடுத்தவங்களை பார்த்துட்டு ஒரு நான் தான் இங்க பெஸ்ட்டா இருக்கணும்.
Speaker A
நீ எப்படி இருக்கலாம் அப்படிங்கிற ஒரு மைண்ட்செட் இருக்கும்னு சொல்லிருக்கீங்க.
Speaker A
அவங்களுக்கு வந்துட்டு உடல் ரீதியா நிறைய ப்ராப்ளம் வரும்.
Speaker A
வயித்துல நிறைய ப்ராப்ளம் வரும் அப்படின்னு.
Speaker A
இதெல்லாம் கடந்துரணும்.
Speaker A
சோ, இந்த மாதிரி அவங்களுக்கே தெரியும் இது தப்பு நம்ம அடுத்தவங்களை பார்த்துட்டு தப்பான இதுல அவங்க எப்படி நல்லா இருக்கலாம்னு நம்ம நினைக்கிறோம்.
Speaker A
சோ, உடம்பு ரீதியா நிறைய ப்ராப்ளம்கள் வருது.
Speaker A
இதுல இருந்து எல்லாம் அவங்க தப்பிக்கணும்னா அவங்க என்ன பண்ணனும்?
Speaker B
இயற்கை இயற்கை சார்ந்த உணவுகள்.
Speaker B
ஃபுட் கண்ட்ரோல் டயட் அப்படிங்கறது இருக்கணும்.
Speaker B
நிறைய நடக்கணும்.
Speaker B
கோயில்ல நடைப்பயணங்கள் அப்படிங்கறது இவங்க நிறைய மேற்கொள்ளணும்.
Speaker B
பாதயாத்திரை போகக்கூடிய அமைப்பு முருகர் ஸ்தலத்துக்கு பாதயாத்திரை போறது.
Speaker B
டோட்டல் சரண்டரிங் சிம்ப்ளிசிட்டி.
Speaker B
டுவர்ட்ஸ் சிம்ப்ளிசிட்டி அப்படிங்கற மாதிரி போயிட்டாங்க அப்படின்னா,
Speaker B
இவங்க லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
Speaker B
அதே அதே இது சிம்மத்துக்கு வந்து பொறுப்புகள்.
Speaker B
பெண்கள் இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன்.
Speaker B
எல்லா விஷயத்தையும் இழுத்து போட்டு ஃபீல் பண்ண வைக்கிற அமைப்பையும் பெண்களுக்கு கொடுக்கும்.
Speaker B
இந்த காலபுருஷ தத்துவம் அதையும் செய்யும்.
Speaker B
அதையும் செஞ்சு,
Speaker B
ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல என்னைய நான் பார்த்துக்கணும் கரெக்டா.
Speaker B
நான் எல்லாத்தையும் பெர்ஃபெக்ஷனா இருக்கணும்னு நான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன் அப்படின்னா என் நிம்மதி போயிடும்.
Speaker B
ஏன்னா சிம்மம் வந்து ஆளுமை.
Speaker B
எல்லாத்தையும் ஒரு கண்ட்ரோலுக்கு கொண்டு வர வச்சிட்டே இருக்கிற மாதிரி.
Speaker B
கண்ட்ரோல் கண்ட்ரோல் அந்த அன்பு கூட ஒரு கண்ட்ரோல்ல கேட்கிற மாதிரியே இருக்கும்.
Speaker B
இலகன மனசு உடையவங்களும் சிம்மம் தான்.
Speaker B
ரொம்ப இலகன மனசா இருந்து ஏமாறக்கூடிய அமைப்பும் சிம்மத்துக்கு கிடைக்கும்.
Speaker B
சோ, இதெல்லாமே பேலன்சிங் அப்படிங்கறது இவங்களுக்கு தெரியணும்.
Speaker B
இந்த ட்ராப்பிலிருந்து எல்லாம் இவங்க வெளிய வந்து,
Speaker B
ஒரு ரியலைசேஷனுக்கு பீரியட் வரப்பதான்,
Speaker B
கையில ஒரு காபி வச்சிட்டு யோசிப்பாங்க.
Speaker B
எனக்காக நான் வாழ்ந்திருக்கலாமே அப்படின்னு.
Speaker A
இவங்க எந்த துறையில மேம் இருப்பாங்க?
Speaker A
இப்ப பார்த்தா வந்துட்டு மோஸ்ட் ஆஃப் சிம்மம் அப்படின்னு சொன்னாலே,
Speaker A
அரசியல்ல பெஸ்ட்டா இருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker A
சோ, பார்த்தா வந்து போலீஸ் டிபார்ட்மென்ட்ல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதுல எல்லாம் வந்துட்டு இவங்க இருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker A
எந்த துறையில வந்து இவங்க இருப்பாங்க மேம்?
Speaker B
சிம்மம் பார்த்தீங்கன்னா எல்லா துறையிலுமே சிம்மம் இருப்பாங்க.
Speaker B
அந்த எந்த துறையில இருந்தாலும் ஆளுமையிலதான் இருப்பாங்க.
Speaker A
சோ, ஸ்ட்ராங்கான பொசிஷன்.
Speaker B
ஆளுமை.
Speaker B
அட்மினிஸ்ட்ரேஷன் இவங்கதான் அப்படிங்கிற மாதிரி இல்லை அப்படின்னா இவங்களுக்கு அங்க சாட்டிஸ்பேக்ஷன் இருக்காது.
Speaker B
நிம்மதியா இருக்காது.
Speaker B
எதையோ ஒன்னு இழந்த மாதிரியே இருக்கும்.
Speaker B
அந்த லீடர்ஷிப்க்காகவே வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க.
Speaker B
அந்த லீடர்ஷிப் அந்த மரியாதையை நீங்க அங்க கொடுக்கல அப்படின்னா அவங்க அங்க இருந்து வெளிய வந்துருவாங்க.
Speaker B
ஆனா அந்த தனித்துவத்தை போன வேகத்துக்கு பெண்களால உருவாக்கிட முடியும்.
Speaker B
ஆண்களால உருவாக்க முடியாது.
Speaker B
அவங்களுக்கு கஷ்டம்.
Speaker B
அப்பதான் அவங்க வந்து இந்த கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடுறதுன்னு ஒன்னு இருக்கு இல்லையா ஆர்ட்.
Speaker B
அவங்க வந்து இந்த சுக்கிரன்கிட்ட இருந்து சில விஷயங்கள் வாங்கிக்கணும்.
Speaker B
இயற்கையாவே ஆண் குழந்தைகளுக்கு அழகா வரையக்கூடிய ஒரு டேலன்ட்டை வந்து இந்த காலபுருஷ தத்துவம் சொல்லிருக்கும்.
Speaker B
அது வந்து நிறைய பேர் கண்டுபிடிக்காமலும் இருப்பாங்க.
Speaker B
இந்த பெயிண்டிங் பண்றது.
Speaker B
இந்த டெக்கரேஷன்ஸ் இதெல்லாம் வந்து அவங்களுக்கு உள்ளூர பிடிக்கும்.
Speaker B
இதெல்லாம் வந்து ஒரு துறையா தொடுறதோ இல்ல அப்பப்போ அவங்க வீட்ல இருக்க பொருட்களையே அவங்க கிளீன் பண்ணிட்டே இருக்கிறதோ.
Speaker B
இதெல்லாம் பண்றப்போ கரெக்டா இருக்கும்.
Speaker B
இன்னும் சொல்லப்போனா,
Speaker B
அவங்களுடைய கழிவரைகளை அவங்களே கிளீன் பண்றது அழகா வச்சுக்கிறது.
Speaker B
அவங்களுடைய இருப்பிடத்தை அழுக்கை துடைக்கணும்.
Speaker B
அழுக்கை துடைக்க துடைக்க சரண்டரிங்க்குள்ள போறது.
Speaker B
தொழிலும் நல்லா இருக்கும்.
Speaker B
இப்ப வொர்க் பிளேஸே எனக்கு ஏன் இப்படி இருக்கு?
Speaker B
ஏய் இங்க வா இதை வந்து நீ தொடு அப்படின்னு சொல்றதுக்கு பதிலா அவங்களே கிளீன் பண்ணிடணும்.
Speaker B
செழிப்பு கொடுத்துரும்.
Speaker B
உடனே செழிப்பு கொடுத்துரும் அவங்களுக்கு.
Speaker A
தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.
Speaker A
ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும்.
Speaker A
எந்த கடவுளை வணங்கணும்?
Speaker A
எந்த துறையில அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க?
Speaker A
சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும்.
Speaker A
தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும் அந்த குரு சொல்றதை கேட்கணும்.
Speaker A
லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
Speaker A
இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.
Speaker A
சோ, எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்ல சொல்ல மாட்டாங்க நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.
Speaker A
நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.
Speaker A
இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?
Speaker B
அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றேன்.
Speaker B
நம்மளுடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறதை நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா,
Speaker B
நம்மளுடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.
Speaker B
இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால,
Speaker B
அஸ்ட்ராலஜி யாரெல்லாம் இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ,
Speaker B
அவங்க எல்லாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.
Speaker B
இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.
Speaker B
சோ, கீழ தெரியிற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க.
Speaker B
கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா,
Speaker B
அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.
Speaker A
ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தால்,
Speaker A
செப்டம்பர் ஆறுல இருந்து கிளாஸஸ் ஸ்டார்ட் ஆகுது.
Speaker A
கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.
Speaker A
தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம்.
Speaker A
தொடர்ந்து பேசுவோம்.
Speaker A
நன்றி.
Topics:சிம்மம்காலபுருஷ தத்துவம்ராசி பலன்கர்மாவயிற்றுப்பகுதி பிரச்சனைகள்ஆன்மீகம்சிம்ம ராசி குழந்தைகள்ஆணவம்திருமணம்சூரியன்











