Skip to content

மீனம் - அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் | Meenam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

மீன ராசிக்காரர்களுக்கான கடன், அதிர்ஷ்டம் மற்றும் தெய்வ வழிபாடு பற்றிய ஆன்மீக ஆலோசனைகள்.

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Key Takeaways

  • மீன ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
  • தெய்வ வழிபாடு மற்றும் பிரார்த்தனை கடன் சுமையை குறைக்க உதவும்.
  • திருப்பதி கோயிலுக்கு போவது கடன் தீர்வில் சிறந்த வழி அல்ல.
  • வாழ்க்கைத் துணையை நம்பி கடன் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.
  • சனி மற்றும் பிற கிரகங்களின் தாக்கம் கடன் பிரச்சனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

What the video covers

  • மீன ராசிக்காரர்கள் கடன் வாங்குவதில் சிக்கல்கள் மற்றும் அதனால் ஏற்படும் துயர் பற்றி விவரிக்கப்படுகிறது.
  • சனிக்கிழமை கடன் வாங்குவது கடன் பெருக்கத்தை அதிகரிக்கும் என்பதைக் கூறுகிறது.
  • மீன ராசிக்காரர்கள் இரு வகைப்படி இருப்பார்கள்: கருணைப்பட்டு கடன் கொடுப்பவர்கள் மற்றும் கருணையில்லாதவர்கள்.
  • தொழில் விரிவாக்கம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை காரணமாக கடன் சுமை அதிகரிக்கும்.
  • விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி, முருகர், விநாயகர் போன்ற தெய்வ வழிபாடுகள் கடன் பிரச்சனைகளில் உதவும்.
  • திருப்பதி கோயிலுக்கு போவது மீன ராசிக்காரர்களுக்கு கடன் தீர்வில் உகந்தது அல்ல என அறிவுறுத்தப்படுகிறது.
  • கடன் வாங்கும் போது வாழ்க்கைத் துணையை நம்பிக்கையுடன் அணுகுவது முக்கியம்.
  • விநாயகர் வழிபாடு மற்றும் பிரார்த்தனை மூலம் புத்திசாலித்தனமும் மன அமைதியும் பெறலாம்.
  • மீன ராசிக்காரர்கள் கடன் சுமையில் மூழ்காமல் தெய்வ வழிபாடு மற்றும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
  • சனி, கேது, ராகு போன்ற கிரகங்களின் தாக்கம் கடன் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.

Answers

Questions about this video

மீன ராசிக்காரர்கள் கடன் வாங்குவதற்கான முக்கிய காரணம் என்ன?

மீன ராசிக்காரர்கள் பொதுவாக தொழில் விரிவாக்கம் அல்லது ஆடம்பரமான செயல்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அகலக்கால் வைத்து, டாம்பீகமாக ஏதாவது செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் கடனில் மூழ்க நேரிடும்.

மீன ராசிக்காரர்கள் கடன் வாங்கினால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும்?

மீன ராசிக்காரர்கள் ஆடம்பரமாக செலவு செய்யும்போது எளிதில் திருஷ்டி படும். கடனைத் திருப்பிச் செலுத்த முடிந்தாலும், உடல்நலக் குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மீன ராசிக்காரர்கள் கடன் கொடுக்கும்போது எப்படி இருப்பார்கள்?

மீன ராசிக்காரர்கள் கடன் கொடுக்கும்போது இரண்டு வகையாக இருப்பார்கள்: ஒன்று, அதிக கருணையுடன் கடன் கொடுப்பது; மற்றொன்று, கருணையே இல்லாமல் இருப்பது. அவர்கள் தங்கள் பொருள் தங்களிடமே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
அவ்வளவு சீக்கிரம் மீன ராசியில இருக்கவங்களுக்கு வந்து கடன் கேட்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணம் முதல் வராது.
00:08
Speaker A
சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க சனி பெருக்கிட்டே தான் போகும்.
00:14
Speaker A
மீன ராசிக்காரங்க எல்லாம் கடன்ல விழுந்துட்டீங்கன்னா மீளா கடன், மீளா துயர்.
00:21
Speaker A
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள் இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா
00:27
Speaker A
வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை இல்லையா?
00:30
Speaker A
எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.
00:41
Speaker A
அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.
00:52
Speaker A
அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்குனாங்க எப்படி அவங்க அதுல இருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன் என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்துல இருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.
01:56
Speaker A
மீன ராசி மீன ராசின்னு பார்க்கிறப்போ நீங்களே குருதான்.
02:00
Speaker A
அவ்வளவு சீக்கிரம் மீன ராசியில இருக்கவங்களுக்கு வந்து கடன் கேட்கணும் அப்படிங்கிற ஒரு எண்ணம் முதல் வராது.
02:06
Speaker A
கடன் ஒருவேளை மீன ராசிக்காரங்க நீங்கதான் கடன் கொடுக்கிறவங்களாவே இருப்பீங்க அப்படி உங்கள்ட்ட யாராவது கடன் வாங்கிட்டாங்க அப்படின்னா அதை வசூல் பண்ணாம நீங்க விடவே மாட்டீங்க.
02:14
Speaker A
ஏன் அப்படின்னா உங்களுக்கு என் பொருள் என்கிட்ட தான் இருக்கணும் அப்படிங்கிற ஒரு போக்கஸ் ரொம்ப அதிகம் அவ்வளவு சீக்கிரம் மீன ராசிக்காரங்க ரெண்டு வகை இருக்காங்க.
02:21
Speaker A
ஒன்னு ஓவரா கருணைப்பட்டு கடன் கொடுக்கிறது இல்லை அப்படின்னா கருணையே இல்லாம இருக்கக்கூடிய அமைப்பு இது ரெண்டு அமைப்பும் மீன ராசியில இருப்பீங்க.
02:28
Speaker A
நீங்க பெரும்பாலும் எதுக்கு கடன்படுவீங்க அப்படின்னா தொழில் தொழில் செய்ய போறீங்க அப்படின்னா எக்ஸ்டென்ஷன் ஆடம்பரமா பண்ணனும் அப்படிங்கிற தாட் உங்களுக்கு வரும்.
02:38
Speaker A
அப்பதான் போய் அகலக்கால் வைக்கிறது ரொம்ப டாம்பீகமா ஏதாவது ஒன்னு பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு போறப்பதான் நீங்க வந்து கடன்ல மூழ்குவீங்க.
03:25
Speaker A
திஷ்டியா மாறும் நீங்க அப்படி ஒரு ஆடம்பரம் பண்ண பண்ண மீன ராசிக்காரங்களுக்கு ரொம்ப ஈஸியா திஷ்டி விழுகும் உனக்கு என்னப்பா நீ ரொம்ப செழிப்பா இருக்க அப்படிங்கிறப்போ கடனை வந்து உங்களால திருப்பி கொடுக்க மேக்ஸிமம் முடியும் உங்களால ஆனா என்ன அப்படின்னா உடல்நிலை பாதிக்கப்படக்கூடிய அமைப்பு அப்படிங்கறதெல்லாம் மீன ராசிக்கு அதிகமாயிடும்.
03:43
Speaker A
சனி வந்து வேலை பார்க்க ஆரம்பிச்சிரும் அப்படின்னே நம்ம சொல்லலாம் மீன ராசிக்காரங்க கடன் வாங்குறாங்க அப்படின்னா.
03:49
Speaker A
முடிஞ்ச அளவுக்கு மீன ராசிக்காரங்க கடன் கொடுங்க ஆனா கடன் வாங்க வேண்டாம்.
03:56
Speaker A
கடன் வாங்குறீங்க அப்படின்னா ஏதோ ஒரு வகையில உங்களுடைய லக்கு உங்களை விட்டு குறையுது அப்படின்னு அர்த்தம்.
04:02
Speaker A
அதேபோல மீன ராசிக்காரங்களுக்கு சுத்தி சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன் நீங்க செழிப்பா இருக்கீங்கன்னு தெரிஞ்சிட்டாலே உங்கள்ட்ட வந்து கடன் கேட்க வந்துகிட்டே இருப்பாங்க அந்த தருணங்கள்ல உங்களால கடனை திருப்பி வாங்க முடியாத ஒரு சூழலும் உங்களுக்கு ஆகும் அப்போ பகைமையா மாறக்கூடிய அமைப்பு அப்படிங்கறது அதிகமாவே உண்டு.
04:18
Speaker A
மீன ராசிக்காரங்க எல்லாம் கடன்ல விழுந்துட்டீங்கன்னா மீளா கடன் மீளா துயர் அந்த மாதிரி உங்களுக்கு ஆயிடும்.
05:06
Speaker A
நீங்க எல்லாம் வந்து விஷ்ணு சகஸ்ரநாமம் எப்பவுமே கேட்கணும் காலையில விஷ்ணு சகஸ்ரநாமம் அந்த லட்சுமி கடாட்சம் செழிப்பா இருக்கணும் அதிகாலையில வேண்டுதல் பண்றது உங்களுக்கு எல்லாம் வந்து பிரம்ம முகூர்த்த நேரங்கள்ல வேண்டுதல் பண்றது அப்படிங்கறதுதான் வந்து.
05:20
Speaker A
உங்களுக்கு ரொம்ப உகந்ததாவே வேலை செய்யும் கடவுளை வந்து நல்லா டெக்கரேட் பண்ணி எல்லாம் வந்து கும்பிடக்கூடிய அமைப்பு எல்லாம் வந்து மீன ராசி பெண்களுக்கு அதிகமா உண்டு.
05:30
Speaker A
மீன ராசி ஆண்களுக்கு அதுல பெருசா ஈடுபாடு அப்படிங்கறதெல்லாம் இருக்காது அவங்களுக்கெல்லாம் வந்து வொர்க்கஹாலிக் அந்த மாதிரி இருப்பாங்க.
05:37
Speaker A
சோ ஒரு வியாழக்கிழமையா பார்த்து குரு வழிபாடு அப்படிங்கறத பண்ணிக்கணும் வியாழக்கிழமையா பார்த்து விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்கிறது.
05:47
Speaker A
ஒரு வியாழக்கிழமையா பார்த்து லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு போயிட்டு வரது அதே மாதிரி வாய்ப்பு கிடைக்கிற நேரத்துல அகோபிலம் போயிட்டு வாங்க.
05:59
Speaker A
அகோபிலம் போயிட்டு வரீங்க அப்படின்னா அதாவது திருப்பதி பக்கத்துல இருக்கு இல்லையா அகோபிலம் அகோபிலம் போயிட்டு வந்தீங்க அப்படின்னாலே உங்களுடைய கடன் அடையறதுக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனா திருப்பதிக்கு போகக்கூடாது மீன ராசி.
06:44
Speaker A
கடன் பற்றுக்கீங்க கடன் கொடுத்திருக்கீங்க அப்படிங்கிற பட்சத்துல உங்களுக்கு இன்னும் அதிக சுமையையே திருப்பதி கொடுக்கும் ஏன்னா அந்த இடத்துடைய ஜாகிரபினு ஒன்னு இருக்கு இல்லையா அது வந்து மீன ராசிக்காரங்க எல்லாத்துக்குமே உகந்தது கிடையாது.
07:23
Speaker A
இப்படி இதை கேட்கிறவங்க சில பேர் நாங்க மீன ராசிதான் நாங்க கோயிலுக்கு போயிட்டு வந்தோம் எங்களுக்கு எதுவுமே ஆகலையே அப்படின்னு சொன்னா கூட மே பி உங்க கூட வந்த யாரோ ஒருத்தங்களுடைய ராசி அமைப்பு உங்களை காப்பாத்தி இருக்குன்னு தான் சொல்ல முடியும்.
07:37
Speaker A
ஆனா அவ்வளவு சீக்கிரம் மீன ராசிக்காரங்களுக்கு வந்து திருப்பதி அப்படிங்கறது செட் ஆகாது.
07:42
Speaker A
நான் கடன் வாங்கிட்டேன் இல்ல கடன் கொடுத்துட்டேன் திருப்பதி வீட்ல போய் வேண்டிட்டு வரேன் எனக்கெல்லாம் செழிப்பா வரணும்னா இது உங்களுக்கு செட் ஆகாது.
07:52
Speaker A
உங்களுக்கெல்லாம் வந்து ஸ்ரீரங்கம் சயன பெருமாள் செட் ஆவார்.
07:58
Speaker A
ஸ்ரீரங்கம் சயன பெருமாள்ட்ட போய் வழிபாடு பண்றதும் முருகர் வழிபாடு பண்றதும் முருகர் எல்லாம் ரொம்ப இருக்கி பிடிச்சுக்கணும் ஏன்னா மீன ராசிக்காரங்க எல்லாம் வந்து மோட்சம் இல்லையா விதியை மாத்தக்கூடிய அமைப்பும் வந்து முருகருக்கு தான் உண்டு அப்போ நீங்க கடன் கொடுத்தாலும் சரி கடன் வாங்கினாலும் சரி மீளா துயரத்துக்கு போறீங்க அப்படின்னாலே நான் சொன்ன தெய்வங்களை பற்றிக்கணும் எல்லா தெய்வத்தையும் குருவா தான் நீங்க பார்க்கணும் எந்த தெய்வத்தை வழிபாடு பண்ணுனாலும் குருவா கன்சிடர் பண்ணி அவங்க நாமத்தை உச்சரிச்சு அது குருவே நமஹ அப்படின்னு சொல்லி தான் உங்களுடைய பிரார்த்தனை அப்படிங்கறது முடியணும் அது முடிஞ்ச அளவுக்கு காலையில நீங்க பிரம்ம முகூர்த்த வழிபாடு அப்படிங்கறது மிக மிக உகந்த வழிபாடு உங்களுக்கு.
08:47
Speaker A
மீன ராசிக்காரங்க முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு செலவு பண்ணாம இருந்துகிறது நல்லது ஏன்னா மத்தவங்களுக்கு செலவு பண்ண பண்ண உங்களுக்கு நிம்மதி அப்படிங்கறது குறையும் கிட்டத்தட்ட அதுவே கடன் மாதிரி தான் மாறும் உங்களுக்கு.
08:58
Speaker A
இப்படித்தான் கடன்லாம் உங்களுக்கு ஆகும் மத்தவங்களுக்கு ஓகே என்கிட்ட பணம் இருக்கு நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு செலவு பண்ணிடுவீங்க இவங்க எல்லாம் நம்மளுக்கு திருப்பி கொடுப்பாங்களா அப்படின்னு பார்க்கிறப்போ அவங்க அவங்க அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு போயிடுவாங்க.
09:09
Speaker A
ஏன்னா அந்த ஆடம்பரம் செழிப்புக்கு நீங்க தான் இம்பார்ட்டன்ஸ் கொடுத்துட்டு இருப்பீங்க அவங்க என்ன நினைச்சிருப்பாங்க நீங்க பே பண்ணுவீங்கன்னு நினைச்சிருப்பாங்க அந்த இடத்துல ஒரு கடன் படுறது தேவையில்லாத ஆலோசனைகளை கேட்கிறது முக்கியமா உங்க லைஃப் பார்ட்னர்க்காக நீங்க கடன்படுவீங்க அது மீன ராசி ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் அந்த கடன் அப்படிங்கறது லைஃப் பார்ட்னரை முழுசா நம்புறது இந்த லைஃப் பார்ட்னர் எந்த விஷயத்துக்காக அந்த செலவு நம்மகிட்ட வந்து செய்யணும்னு சொல்லி கேட்டிருந்தாங்க தீர விசாரிக்காம போய் அவங்களுடைய கடன் அடைக்கிறேன்னு சொல்லிட்டு போய் கடன்படுறது அது அது வந்து மீளா துயரத்திலேயே போய் விட்டும் குடும்பமே மூழ்கக்கூடிய அளவுக்கு மீன ராசிக்காரங்களுடைய அமைப்பு அப்படிங்கறது நடந்துரும் அதனால கடன் அப்படிங்கறது மீன ராசிக்காரங்க வீழாம இருந்துகிறது நல்லது அப்படிங்கறது நான் சொல்ற விஷயம் இங்க.
10:23
Speaker A
இப்ப மீன ராசிக்காரங்க எல்லாம் விதவிதமான விநாயகர் வழிபாடு அப்படிங்கறது நீங்க பண்ணலாம்.
10:32
Speaker A
எத்தனை விநாயகரை வேணாலும் உங்கள்ட்ட வச்சுக்கோங்க ஏன் அப்படின்னா விநாயகர் தான் ஞானகாரகன்.
10:41
Speaker A
உங்களுக்கு வந்து அந்த இடத்துல புதனோ சந்திரனோ பெருசா உங்களுக்கு வந்து வேலை பார்க்காது.
10:56
Speaker A
அந்த சிந்திக்கிற புத்தியோ இல்ல அந்த சிந்திச்சு அந்த மெச்சூடா ஹேண்டில் பண்ணக்கூடிய விஷயங்களையோ வந்து இந்த புதன் சம்டைம்ஸ் உங்களுடைய கண்ணை மறைச்சிரும் சந்திரனும் மைண்ட் ஆசிலேஷன் மைண்ட்ல போய் உங்களை விடுறப்பதான் இந்த மாதிரி கடன்படுற சூழல் எல்லாம் நீங்க போய் விடுவீங்க அதனால நீங்க விநாயகர் வழிபாடு இப்ப ஒரு கோயிலுக்கு போறீங்கன்னா விநாயகர் கோயிலை அதிகமா சூஸ் பண்ணி போங்க ஏன்னா அது ஏதோ ஒரு வகையில உங்களுக்கு ஒரு ஞானத்தை கொடுத்துரும் அருகம்பல் கொடுத்து வழிபாடு பண்றது அதே மாதிரி தேவையில்லாத ஆடம்பரம் இப்ப நான் வந்து தெய்வத்துக்கு நல்ல செழிப்பா சாமி கும்பிடுங்க அப்படின்னு நான் சொல்றேன்ல அதுக்கு போய் கடன் வாங்கக்கூடாது கடன் வாங்கி நான் செழிப்பா தெய்வத்தை வழிபாடு பண்றேன் அப்படி கிடையாது இருக்கிறதை வச்சு ஒரு செழிப்பா இருந்துகிறதுக்கு மீன ராசிக்காரங்க அப்படிங்கறது கத்துக்கணும்.
12:09
Speaker A
சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி கேது சில டைம் ராகு கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும் ராகு இப்ப ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து அதீத ஆடம்பரத்துக்கும்.
12:25
Speaker A
கற்பனை இமேஜினேஷன் இல்லயூஷன் பார்த்துக்கலாம் அப்படிங்கறது தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும் கேது வந்து வச்சு செஞ்சிரும் கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா அது எப்படின்னா ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போய்கிட்டே இருக்கிற மாதிரிதான் கேது காலங்கள்ல கடன்படுறதும் கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும் நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்க கிட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும் அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க ஏன்னா இந்த கடன் அப்படினாலே இந்த சனி ராகு கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க.
13:43
Speaker A
புதன் கெட்டுப்போயிருச்சு அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது உங்களுடைய புத்தியை ஷார்ப் ஆக்கிக்கிறது புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான் நீங்க வந்து ஃபாலோ பண்ணனும்.
14:05
Speaker A
இப்ப குரு வழிபாடு அப்படின்னுலாம் பண்றப்போ குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும் செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ செவ்வாய்ங்கிறது முருகர் முருகர் வழிபாடுனு பண்றப்போ பெரும் பிரச்சனையில போய் விடாது அதாவது சில பேத்துக்கெல்லாம் வந்து இப்ப பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிடுது இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிடுது அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்லாம் வந்து இந்த செவ்வாய் கோரையில கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரி எல்லாம் அமைஞ்சிரும் அதனால எந்த கோரை கோரைங்கிறது முக்கியம் கடன் கொடுக்கிறதும் கடன் வாங்குறதும் அந்த கோரை பார்த்து செய்றது நல்லது.
15:13
Speaker A
சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க சனி பெருக்கிட்டே தான் போகும் சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா அது நோய்க்கா இருக்கட்டும் நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும்.
15:33
Speaker A
ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம்.
15:38
Speaker A
அது வந்து எதுவும் பண்ணாது சுபகாரியங்களுக்கு சனிக்கிழமைல வந்து கடன் வாங்குற வேலை வேண்டவே வேண்டாம்.
15:43
Speaker A
அது வந்து இன்னும் கஷ்டத்திலேயே போய் விட்டும் அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க வாங்கவும் மாட்டாங்க ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம் புதன்கிழமை கடன் கேட்கிறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம் ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க இந்த மாதிரி நேரம் காலம் நாள் கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு ஏன்னா ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ் இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா அப்படின்னா ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது அது வந்து உதவி அது வந்து நம்ம உதவி கேட்கிறோம் அது எமர்ஜென்சிக்கு உதவி கேட்கிறோம்.
17:14
Speaker A
முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புனு இருக்கு இல்லையா இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்ட எல்லாம் போய் பணம் கேட்கிறீங்கன்னா அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் ஒரு பேங்க்ல போய் நகை அடமானம் வைக்க போறீங்க இல்ல அடைக்க போறீங்க இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்றப்போ உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும் அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சு அப்படின்னு ஒன்னு இருக்கு ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திடக்கூடாது கடன் ஒரு பொருள் உள்ள வரணும் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும் இல்லைன்னா நிறைய கடன் வாங்குனாங்க வீட்டை போய் பாருங்க வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது அப்ப எதுக்கு கடன் வாங்குனீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன் இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கிற மாதிரி போயிரும் அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம் அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது ஆலய வழிபாடு பண்றது இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து நீங்க சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர செழிப்புங்கிறது அதிகரிக்கும்.
18:55
Speaker A
பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும் ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.
19:05
Speaker A
விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.
20:03
Speaker A
அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசிக்கார எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும் உங்களுடைய சந்திராஷ்ட காலங்கள்ல எதுவுமே பண்ணாம அதாவது எதுவும் பண்ணாமங்கிறது முடிவுகள் எடுக்காம கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்க போகவும் வேணாம் அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம் சந்திராஷ்ட காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போய் விடுவீங்க சந்திராஷ்டம்.
20:38
Speaker A
தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே அன்னைக்கு எங்க நட்சத்திரம் விதி அப்படிதான் பண்ணும் அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும் அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டம் போகாதீங்க அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும் அந்த கடனை அடைக்கவே முடியாது சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள் இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டம் போகாதீங்க திரும்பவும் அங்கேயே ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டும் அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துகிறது நல்லது தெய்வ வழிபாடோட இருந்துகிறது நல்லது எதற்காக கடன் வாங்குறோம் வீண ஆடம்பரத்துக்கு வாங்குறோமா கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன்படணும் அப்படிங்கறது கிடையாது கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படியளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார் ஆசைப்படப்பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விடுவோம் ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.
Topics:மீன ராசிகடன்தெய்வ வழிபாடுவிஷ்ணு சகஸ்ரநாமம்விநாயகர் வழிபாடுஆன்மீகம்சனிதிருப்பதிஆடம்பரம்முருகர்

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →