ரமலான் மாதத்தில் தஹஜ்ஜத் நேரத்தில் ஓத வேண்டிய சிறப்பு துவா மற்றும் அதன் பலன்கள் பற்றிய விளக்கம்.
Key Takeaways
- தஹஜ்ஜத் நேரத்தில் ஓத வேண்டிய துவா மிகவும் பலம் வாய்ந்தது.
- ஒரே ஒரு சஹரில் இந்த துவாவை ஓதுவதால் பெரிய நன்மைகள் கிடைக்கும்.
- இறைவன் கீழ்வானத்துக்கு இறங்கி கேட்கும் நேரத்தில் பிரார்த்தனை செய்தால் அது கபூல் ஆகும்.
- துவாவை தொடர்ந்து ஓதுவதால் வாழ்நாளில் சிறப்புகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படும்.
- வழிபாடு மற்றும் துவா மூலம் நமது தேவைகள் மற்றும் பாவங்களுக்கு மன்னிப்பு பெற முடியும்.
What the video covers
- ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய நன்மைகள் மற்றும் அமல்களை பற்றி அறிமுகம்.
- தஹஜ்ஜத் நேரத்தில் ஓத வேண்டிய சிறப்பு துவா மற்றும் அதன் முக்கியத்துவம்.
- ரசூலுல்லாஹ் கற்றுக்கொடுத்த துவாவை ஒரே ஒரு சஹரில் ஓதுவதன் பலன்கள்.
- தஹஜ்ஜத் நேரம் என்பது இறைவனின் கீழ்வானத்துக்கு இறங்கும் நேரம் என்பதன் சிறப்பு.
- துவாவை ஓதியவுடன் பாவங்களுக்கு மன்னிப்பு மற்றும் தேவைகளுக்கான பிரார்த்தனைகள் கபூல் ஆகும்.
- துவாவில் உள்ள இரண்டு கலிமாக்கள் மற்றும் இஸ்திஃபாரின் முக்கியத்துவம்.
- துவாவை தொடர்ந்து ஓதுவதன் மூலம் வாழ்நாளில் சிறப்புகள் பெறும் வாய்ப்பு.
- வழிபாடு மற்றும் துவா வழியாக வாழ்க்கையை மாற்றும் சக்தி.
- சேனல் சப்ஸ்கிரைப் செய்யும் மற்றும் பிற வஜீஃபா மற்றும் தௌபா கிதாப்கள் பற்றிய அறிவுரை.
- முடி வளர்ச்சி மற்றும் உடல் அழகு பராமரிப்புக்கான மூலிகை தயாரிப்புகள் பற்றிய விளக்கம்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் நாம் அனைவருமே பரக்கத் வாய்ந்த ரமலானுடைய மாதத்தில் இருக்கோம். இந்த மாதத்தில் செய்யக்கூடிய அமல்களை நம்ம தொடர்ந்து பார்த்துட்டு வரோம். அதுல இன்றைக்கு நம்ம பார்க்க போறது தஹஜ்ஜத்துல ஓதக்கூடிய
Speaker A
வளம் வாய்ந்த ஒரு துவாவை தான் நம்ம பார்க்க போறோம்.
Speaker A
ரசூலுல்லாஹ் கற்றுக்கொடுத்தது.
Speaker A
இந்த ஒரு துவாவை ஓதி பலரும் பலன் அடைஞ்சிருக்காங்க. நானும் ஓதி பலன் அடைஞ்சேன்.
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் நேத்து ஒரே ஒரு சஹர்ல தான் இதை நான் ஓதுனேன். சுபஹானல்லாஹ் ஒரு பெரிய காரியத்தை இன்னைக்கு அல்லாஹுத்தஆலா எனக்கு நடத்திக் கொடுத்துட்டான்.
Speaker A
சுபஹானல்லாஹ் நீங்களும் ஓதி பாருங்க. ஏன்னா நபி அவங்க சொல்லி இருக்காங்க அப்படின்னா அது எவ்வளவு பலம் வாய்ந்தது அப்படின்னு நம்ம எல்லோருமே யோசிக்கணும்.
Speaker A
இன்னும் நம்மள நிறைய பேர் என்ன பண்றோம் அப்படின்னா நிறைய புதிது புதிதான அமல்களை தேடிட்டு நபி அவங்க கற்றுக்கொடுத்த அமல்களை நம்ம மிஸ் பண்ணிடுறோம்.
Speaker A
ஆனா ரசூலுல்லாஹ் கற்றுக்கொடுத்த ஒரு அமலை நம்ம பின்பற்றினோம் அப்படின்னா பல விதத்துல நமக்கு சிறப்புகள் கிடைக்கும். அப்படித்தான் நேற்று ஒரே ஒரு சஹர்ல தான் நான் இதை ஓதுனேன்.
Speaker A
ஏன்னா தஹஜ்ஜத்துடைய நேரம் என்பது சஹருடைய நேரம் என்பது மிகவும் உன்னதமானது. அதுல நம்ம கை ஏந்தினோம் அப்படின்னா எந்த அமல் செய்யாட்டியும் பரவாயில்லை. கை ஏந்தி கேட்டா அல்லாஹ் தருவான். ஏன்னா அல்லாஹுத்தஆலா கீழ்வானத்துக்கு இறங்கி வந்து என்கிட்ட கேட்கிறவங்க யாராவது இருக்கீங்களான்னு கேட்கக்கூடிய ஒரு நேரம் அது.
Speaker A
ஒவ்வொரு நபர்களுடைய வாழ்க்கையையும் மாற்றி அமைக்கக்கூடிய நேரம் இந்த நேரம் தான்.
Speaker A
எனவே உங்களோட தலை எழுத்தை மாத்தணும்னு நினைச்சீங்கன்னா இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சஹருடைய நேரத்தையும் நீங்க பயன்படுத்திக்கோங்க.
Speaker A
எப்பவுமே நம்ம வந்து சஹருக்கு எழக்கூடியவங்களா தான் நம்ம இருக்கோம். அந்த நேரத்துல இந்த ஒரு துவாவை ஒரே ஒரு தடவை நீங்க ஓதுங்க.
Speaker A
அதற்கு பிறகு உங்களுக்கு தேவையானது கேளுங்க. உங்களுக்கு என்ன அவசர தேவைனாலும் கேளுங்க அல்லது இந்த வருஷத்துல உங்களுக்கு என்ன தேவையோ கேளுங்க.
Speaker A
அல்லது இப்படி கேளுங்க வருடம் முழுவதும் நான் கேட்கக்கூடிய துவாவை எனக்கு கபூலாக்கு யா அல்லாஹ் அப்படின்னு கேளுங்க.
Speaker A
ஏன்னா எப்பவுமே நான் இப்படித்தான் கேட்பேன். அன்றைக்கு மட்டும் நான் கேட்க மாட்டேன்.
Speaker A
வருஷம் முழுக்க கேட்கிற எல்லாமே கபூல் ஆகணும்னு கேட்டுட்டா இது ஒன்னு கபூல் ஆனா போதுமே.
Speaker A
நம்ம வாழ்நாள் முழுக்க இப்படியே கடந்து போயிடலாம்.
Speaker A
நம்ம ஒரு துவாவை கேட்டா அல்லாஹ் கொடுத்தான் அப்படின்னா அது எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.
Speaker A
நம்ம தான் அதிர்ஷ்டசாலியா இருக்க முடியும்.
Speaker A
எனவே இந்த ஒரு விஷயத்தையும் நீங்க ஃபாலோ பண்ணிக்கோங்க. இப்போ அந்த நபி அவங்க கற்றுக்கொடுத்த அந்த ஒரு துவா என்ன அப்படிங்கறதை பார்க்கலாம்.
Speaker A
தஹஜ்ஜத் நேரத்தில் ஓத வேண்டிய துஆ.
Speaker A
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் இரவில் விழித்து, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்துலில்லாஹி வ சுபஹானல்லாஹி வ லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வ லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்
Speaker A
என்று கூறிவிட்டு, இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும்.
Speaker A
உளு செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும் என்பதாக ரசூலுல்லாஹ் சொல்லி இருக்காங்க.
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் இந்த ஒரு துவாவை நம்ம ஓதிட்டு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டாலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பிரார்த்தனையை கேட்டாலோ
Speaker A
அல்லாஹுத்தஆலா நமக்கு கபூல் ஆக்குவான்னு சொல்றாங்க.
Speaker A
எனவே நாமும் இன்று முதல் ஒவ்வொரு சஹரிலும் இதை ஓதி அல்லாஹ்விடத்தில நம்ம துஆ செய்து அவரிடமிருந்து நமக்கு தேவைப்படக்கூடிய அனைத்தையும் அடைந்து கொள்ளணும்.
Speaker A
இந்த ஒரு துவாவில ரெண்டு கலிமா இருக்கு. நாலாவது கலிமா, மூணாவது கலிமா ரெண்டும் சேர்ந்தது இன்னும் ஒரு இஸ்திஃபாரும் இருக்கு.
Speaker A
அதனாலதான் இதற்கு இவ்வளவு சிறப்பு.
Speaker A
இன்ஷா அல்லாஹ் நீங்களும் ஓதி பாருங்க. நீங்களும் சொல்லுவீங்க ஒரு இரவுல அல்லாஹுத்தஆலா என்னோட வாழ்க்கையவே மாத்திட்டான் அப்படின்னு.
Speaker A
எனவே இந்த ஒரு பதிவு உங்க எல்லோருக்கும்மே யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன். முடிஞ்ச அளவுக்கு நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Speaker A
மேலும் நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
Speaker A
மேலும் உங்களோட மேலான துஆவுல என்னையும் சேர்த்துக்கோங்க. நானும் உங்க எல்லாரையுமே என்னுடைய துஆவுல சேர்த்துட்டு தான் இருக்கேன் இன்ஷா அல்லாஹ்.
Speaker A
மேலும் இதுபோல சிறந்த வஜீஃபாக்கள் ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒவ்வொரு வஜீஃபா வேணும் அப்படின்னா அற்புத வஜீஃபாக்கள் கிதாப நீங்க வாங்கி பாருங்க இன்ஷா அல்லாஹ்.
Speaker A
நீங்க கிதாப பார்த்தாலே உங்க மனசுக்கு அவ்வளவு ஒரு நிறைவா இருக்கும்.
Speaker A
நீங்க தேடக்கூடிய நிறைய அமல்கள் இதுல இருக்கு. மேலும் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டிய அவுராதுகள் நிறைந்தது தான் நம்மளோட கேட்பது கிடைக்கும் வஜீஃபா மற்றும் தௌபா கிதாப்.
Speaker A
இந்த ரெண்டு கிதாப் வேணும்னாலும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
Speaker A
அதுமட்டுமல்ல நம்மளோட உடல் அழகையும் முக அழகையும் பராமரிக்கக்கூடிய இன்ஸ்டா க்ளோ ஃபேஸ் பேக் மற்றும் கோல்டன் க்ளோ சீக்ரெட் நலங்கு மாவு வேணும் அப்படின்னாலும் சரி.
Speaker A
அல்லது நம்மோட முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய முடி உதிர்தலை நிறுத்தக்கூடிய முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய மூலிகை சீயக்காய் தூள் இருக்கு.
Speaker A
அதுமட்டுமல்ல கூந்தல் வளர்ச்சி தைலம் நம்மளே வீட்ல ரெடி பண்ணக்கூடிய மூலிகைகளும் நம்மகிட்ட இருக்கு.
Speaker A
இந்த ரெண்டு ப்ராடக்ட்டையும் நீங்க தொடர்ந்து யூஸ் பண்ணீங்க அப்படின்னா உங்களோட முடி ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.
Speaker A
மேலும் நம்மளோட ப்ராடக்ட் எல்லாமே குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். எந்தவிதமான சைடு எஃபெக்ட்டும் கிடையாது. சந்தேகங்களும் தேவையில்லை.
Speaker A
இன்னும் நம்மகிட்ட ஒரிஜினல் சுருமா இருக்கு. அதுமட்டுமல்ல சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை
Speaker A
ஆரோக்கியமா இருக்கிறதுக்கு சிறுதானிய மிக்ஸும் இருக்கு.
Speaker A
இந்த ப்ராடக்ட் உங்களுக்கு வேணும்னாலும் சரி அல்லது தமிழ்ல முழுக்க குர்ஆன் இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சாலும் சரி.
Speaker A
ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
Topics:தஹஜ்ஜத்துவாரமலான்இஸ்லாம்பிரார்த்தனைஅமல்நன்மைகள்முஸ்லிம் வழிபாடுமன்னிப்புவழிபாடு நேரம்











