2026ல் விருச்சக ராசிக்கான கிரக நிலைகள் மற்றும் வாழ்க்கை, ரிலேஷன்ஷிப், பணியியல், குடும்பம் மற்றும் ஆன்மிக பரிகாரங்கள் பற்றிய ஜோதிடம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- 2026ல் விருச்சக ராசிக்காரர்களுக்கு கிரக மாற்றங்கள் காரணமாக மன அழுத்தம் மற்றும் சிக்கல்கள் ஏற்படும்.
- ஆன்மிக வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள் வாழ்க்கையில் தடைகளை குறைக்க உதவும்.
- காதல் வாழ்க்கை மற்றும் கிரியேட்டிவிட்டி பிப்ரவரி மாதத்தில் மேம்படும்.
- குழந்தைகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கும், கவனமாக இருக்க வேண்டும்.
- மே மாதத்தில் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும், கர்மா டெஸ்ட் எதிர்கொள்ள வேண்டும்.
What the video covers
- 2026ல் விருச்சக ராசிக்காரர்களுக்கு சனி நாலாம் இடத்தில் சென்று வலுவாக இருக்கும், பிரம்மா விஷ்ணு வழிபாடு முக்கியம்.
- ஜனவரி மாதத்தில் சனி நாலில் இருப்பதால் மன அழுத்தம் மற்றும் குழப்பங்கள் ஏற்படும், ஆனால் குரு மற்றும் ராகு நிலைகள் சில சிக்கல்களை சமாளிக்கும்.
- பிப்ரவரி மாதத்தில் சுக்கிரன் அஞ்சில் சென்று காதல் வாழ்க்கை மற்றும் கிரியேட்டிவிட்டி மேம்படும்.
- மார்ச் மாதத்தில் புதன் அஞ்சுக்கு மாறி தெளிவு மற்றும் ஹீலிங் ஏற்படும், ஆனால் போட்டி சூழல் ஆரோக்கியமானதாக இருக்கும்.
- ஏப்ரல் மாதத்தில் ராகு அஞ்சில் சென்று குழந்தைகள் மற்றும் மனக்குழப்பங்களில் சிக்கல்கள் ஏற்படும், ராகு பரிகாரம் அவசியம்.
- மே மாதத்தில் குரு ஏழிலிருந்து எட்டுக்கு மாறும் போது உறவுகளில் சிக்கல்கள் மற்றும் கர்மா டெஸ்ட் ஏற்படும்.
- விருச்சக ராசிக்காரர்கள் பூதநாதேஸ்வரர் மற்றும் காளி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் தடைகள் குறையும்.
- பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களை சமாளிக்க திருநள்ளாறு சனீஸ்வரர் மற்றும் திருப்பாம்புரம் ராகு பரிகாரம் பயனுள்ளதாக இருக்கும்.
- வீடு, வண்டி போன்ற சொத்துக்களில் செலவுகள் மற்றும் பராமரிப்பு கவனமாக இருக்க வேண்டும்.
- மொத்தமாக 2026ல் விருச்சக ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டும் இருக்கும், ஆன்மிக வழிபாடுகள் முக்கியம்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
விருச்சக ராசி 2026 எப்படி இருக்கும் அப்படின்னா
Speaker A
ரிலேஷன்ஷிப் அப்படின்னு பார்க்கிறப்போ வாழ்க்கையில சில
Speaker A
இது விருச்சக ராசிக்குனே மெயினா இருக்க வேண்டிய ஒரு கோயில் அப்படின்னு நான் சொல்லுவேன்.
Speaker A
புதன் நாலுல இருந்து அப்படியே அஞ்சுக்கு மாறறார். நாலாவது இடத்துல இருந்து அஞ்சாவது இடத்துக்கு மாறறப்போ அது வந்து
Speaker A
ராகு அஞ்சுல கேது 11ல அஞ்சுல ராகு போயிடுச்சு அப்படினாலே குழந்தைகள்
Speaker A
இப்ப ஜூன் 2026ல வந்து சனி நாலாம் இடத்துல போய் செம ஸ்ட்ராங் ஆகுறாரு.
Speaker A
சனி நாலுல போய் ஸ்ட்ராங் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும் பிரம்மா விஷ்ணுவை வழிபாடு பண்றீங்க பிரம்மனையும் விஷ்ணுவையும் ஒன்னா வழிபடும்போது
Speaker A
விருச்சக ராசி
Speaker A
2026 எப்படி இருக்கும் அப்படின்னா ஜனவரி மாதத்துல வந்து சனி நாலுல இருக்கிறாரு.
Speaker A
குரு ஏழுல இருக்கிறாரு ராகு அஞ்சுல இருக்காங்க கரெக்டா ஜனவரி மாசம் துவங்கும் பொழுது.
Speaker A
அப்போ இந்த டைம்ல கரெக்டா ஜனவரி மாசம் எப்படி இருக்கும்னா மனசு கொஞ்சம் ஹெவியா இருக்கும்.
Speaker A
ஏன்னா நாலுல சனி போயிட்டாரு அப்படினாலே ஹெவி ஆயிடும் ஏழுல குரு போய் உட்கார்ந்தாலும் அப்படி ஆகும்.
Speaker A
அஞ்சுல ராகு போய் உட்கார்ந்தாலும் சில குழப்பங்கள் அப்படிங்கறது கொடுக்கும்.
Speaker A
அப்ப கெரியர் அப்படிங்கறது எப்படி இருக்கும்னா கொஞ்சம் மாடரேட்டா இருக்கும் அப்படின்னுதான் நான் சொல்லுவேன்.
Speaker A
அதாவது மோசமும் இல்ல ரொம்ப சூப்பரும் இல்ல அதுவே ஒரு குழப்பமா இருக்கும்.
Speaker A
இது இது எப்படி இது அடுத்த லெவல் எப்படி போகும் நான் இப்படியே இருக்கலாமா இல்ல சொந்தமா ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணலாமா
Speaker A
கிட்டத்தட்ட வடிவேலுடைய வாய்ஸ் டோன் தான் உள்ள போயிட்டு இருக்கும் நம்ம இங்கயே இருக்கலாமா இல்ல துபாய்க்கே போயிரலாமாங்கிற மாதிரியான
Speaker A
ஒரு மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு இருந்துகிட்டு இருக்கும்.
Speaker A
ரிலேஷன்ஷிப் அப்படின்னு பார்க்கிறப்போ வாழ்க்கையில சில டெஸ்ட் அப்படிங்கறத வந்து
Speaker A
குரு வைப்பார்.
Speaker A
குரு குரு அந்த டெஸ்ட் எல்லாம் வைக்கிறப்ப கொஞ்சம் ஜாக்கிரதையா அந்த விஷயங்களை கொஞ்சம் ஹேண்டில் பண்ணிக்கிறது
Speaker A
வாய் எல்லாம் கொஞ்சம் கட்டு போட்டுட்டு கொஞ்சம் அமைதியா இருந்துகிறது கொஞ்சம் நல்லது.
Speaker A
அதோட ப்ராப்பர்ட்டி வைஸ் இல்ல வண்டி வாகனம் எல்லாம் வச்சிருக்கிறீங்க அப்படின்னா
Speaker A
ஒரு ஒரு வீடு வச்சிருக்கிறீங்க அதுக்கு ஒரு செலவு நடக்கும்.
Speaker A
வண்டி வச்சிருக்கிறீங்க வண்டிக்கு ஒரு செலவு நடக்கும் அப்படின்னா என்னது ரிப்பேரிங் மாதிரி ஏதோ ஒரு விஷயங்கள் நடக்கும்.
Speaker A
அப்ப இந்த வண்டி ஓட்டுறப்ப எல்லாம் கொஞ்சம் கவனமா இருந்துகிறது அப்படிங்கறது
Speaker A
விருச்சகம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே அந்த டைம்ல இருந்துக்கணும்.
Speaker A
நீங்க எல்லாம் வந்து திருநள்ளாறு சனீஸ்வரருக்கு போயிட்டு ஒரு எள் தீபம் போட்டுட்டு வந்துறது நல்லது.
Speaker A
ஜனவரி மாசம் தொடங்கிட்டு நீங்க பண்ணிட்டீங்க அப்படின்னா கொஞ்சம் இந்த பாரங்கள் எல்லாம் கொஞ்சம் சரியாகும்.
Speaker A
ஏன்னா நாலுல சனி இருக்கப்போ ஃபேமிலி லைஃப்ல கொஞ்சம் பர்சனல் லைஃப்ல எல்லாம் கொஞ்சம் அழுத்தங்கள் அப்படிங்கறது வந்து சனி கொடுப்பார்.
Speaker A
அதே மாதிரி இந்த சனி இந்த மாதிரி எல்லாம் விஷயங்கள் பண்ணிட்டு இருக்கப்போ
Speaker A
இந்த மாதிரி கிரக நிலைகள் எல்லாம் இருக்கும் பொழுது நீங்க வந்து குளித்தலையில இருக்கக்கூடிய
Speaker A
பூதநாதேஸ்வரர்
Speaker A
கோயிலுக்கு போயிட்டு வர்றது நல்லது.
Speaker A
ஏன்னா இது விருச்சக ராசிக்குனே மெயினா இருக்க வேண்டிய ஒரு கோயில் அப்படின்னு நான் சொல்லுவேன்.
Speaker A
குளித்தலையில இருக்கக்கூடிய பூதநாதேஸ்வரர்.
Speaker A
ஏன்னா விருச்சக ராசிக்காரங்களுக்கு வந்து எந்த கோயில்ல போய் என்ன பரிகாரம் பண்றது எங்க போனாலும் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலையேங்கிற மாதிரியே இருக்கும்.
Speaker A
விருச்சக ராசியுடைய பிறப்புடைய தேடலே என்னது வாழ்க்கையில ஏன் ஏன் என் லைஃப்ல ஏன் இது மாறுது மாறுதுன்னு தேடல்கள் ஜாஸ்தி.
Speaker A
ஒரு குழிையில விழுந்து இன்னொரு எந்திரிச்சு போறதுக்குள்ள இன்னொரு குழிையில விழுந்துருவாங்க.
Speaker A
சோ இதுல இருந்து மீண்டு வரணும் அப்படின்னா இந்த பூதநாதேஸ்வரரை இவங்க புடிச்சுக்கணும்.
Speaker A
இது ரகசிய வழிபாடாகவே விருச்சக ராசி அப்பப்ப வாழ்க்கையில தடைகள் வருது அப்படின்னா
Speaker A
இதை நீங்க செஞ்சுட்டீங்கன்னா லைஃப்ல சேஞ்சஸ் அப்படிங்கறது உங்களுக்கு வந்துரும்.
Speaker A
இப்ப பிப்ரவரி மாசத்துல விருச்சகத்துக்கு வந்து சுக்கிரன் வந்து அஞ்சுல போய் பலம்படுறார்.
Speaker A
அதாவது உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு சுக்கிரன் போறார் அப்படின்னா
Speaker A
உங்களுடைய அந்த லவ் லைஃப் அப்படிங்கறது கரெக்டா ஆக்டிவேட் ஆயிடும்.
Speaker A
அந்த உங்களுடைய அந்த ஆசைகள் அந்த கிரியேட்டிவிட்டி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மைண்ட் நல்லா வந்து ஒரு எனர்ஜெட்டிக்கா இருக்கும் அப்படின்னே சொல்லலாம்.
Speaker A
அதாவது என்ன விஷயங்கள் உங்களுடைய மைண்ட் கிரியேட்டிவா நீங்க யூஸ் பண்றீங்களோ
Speaker A
ஒரு ப்ராஜெக்ட் பண்றீங்க சக்சஸ்ஃபுல்லா இருக்கும்.
Speaker A
நீங்க ஒரு ஸ்டூடென்ட்டா இருக்கிறீங்க உங்களுடைய கிரியேட்டிவிட்டி தாட்ஸ் நீங்க எழுதுறப்போ உங்களுடைய ஹேண்ட் ரைட்டிங் அழகா ஆகுறது.
Speaker A
அதுல நல்லபடியா ஒரு மார்க் வரக்கூடிய ஒரு அமைப்பு இதெல்லாமே இந்த சுக்கிரன் அப்படிங்கிற ஒரு அமைப்பு உங்களுக்கு கொடுக்கும்.
Speaker A
எல்லாமே ஆசைப்பட்டு விருப்பப்பட்டு செய்யற மாதிரி இருக்கும்.
Speaker A
ஒரு யாராவது ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க தாராளமா சுக்கிரன் அஞ்சுல இருக்கிறப்போ பிப்ரவரி மாசம்
Speaker A
விருச்சக ராசிக்காரங்க ஏதாவது ஒரு ஒரு பொருள் வாங்கணும் இல்ல ஒரு பூமியில போடணும் இல்ல வண்டி வாங்கணும்.
Speaker A
அந்த மாதிரி ஏதாவது ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஒரு லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்டா இருந்துகிறது நல்லது.
Speaker A
ஏன்னா விருச்சகம் எப்பவுமே இந்த ஷார்ட் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்டே தேடிட்டு இருப்பீங்க.
Speaker A
சோ இந்த லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்குள்ள நீங்க போயிட்டீங்க அப்படின்னா ரொம்ப நல்லா இருக்கும்.
Speaker A
மார்ச் 2026 அப்படின்னு பார்க்கிறப்ப
Speaker A
புதன் நாலுல இருந்து அப்படியே அஞ்சுக்கு மாறறார் நாலாவது இடத்துல இருந்து அஞ்சாவது இடத்துக்கு மாறறப்போ அது வந்து
Speaker A
ஒரு பெயின்ல இருந்து ஒரு கஷ்டத்துல இருந்து ஒரு ஹீலிங் பார்ட் அப்படின்னு சொல்லலாம்.
Speaker A
கொஞ்சம் ஹீல் ஆகக்கூடிய ஒரு அமைப்பு.
Speaker A
ஆனா வார்த்தைகள் தெளிவாக ஆரம்பிக்கும்.
Speaker A
ஏன்னா உங்களுக்கு தெளிவு நிலை அப்படிங்கறது வரும்.
Speaker A
ஏன்னா புதன் ஒரு தெளிவை ஒரு கிளாரிட்டிய கொடுத்துக்கிட்டே வருவார்.
Speaker A
இது இல்ல அதுவரைக்கும் உங்களுக்கு வந்து ஒரு பனிமூட்டம் மாதிரியே சில தாட் ப்ராசஸ் எல்லாம் இருந்திருக்கும்.
Speaker A
அதெல்லாம் கிளியர் ஆகி எவ்வளவு பெரிய காம்படிஷன்ஸ் வந்தாலுமே அந்த காம்படிஷன்ஸ் உங்களுக்கு ஃபேவரபிலாதான் இருக்கும்.
Speaker A
அது வந்து ஆரோக்கியமான ஒரு காம்படிஷனாதான் நீங்க பார்க்கணும்.
Speaker A
ஹெல்தி காம்படிஷன்.
Speaker A
அது உங்களுக்கு ஃபேவரபிலா இருந்து நீங்க சக்சஸ்ஃபுல்லா கண்டிப்பா வருவீங்க.
Speaker A
அப்ப நீங்க வந்து காளி வழிபாடு எல்லாம் கொஞ்சம் பண்ணிக்கிறது நல்லது.
Speaker A
விருச்சக ராசிக்காரங்க வந்து இந்த புத்து கோயில்கள் எல்லாம் இருக்கும் தெரியுமா.
Speaker A
புத்து கோயில்கள் இருக்கக்கூடிய இடங்கள்ல போயிட்டு அங்க இருக்கிற காளியை வழிபாடு பண்றீங்க அப்படின்னா
Speaker A
இந்த ஆள் மனசுல ஒரு பயம் இருக்கும் இப்படி ஒரு காம்படிஷன் இருக்கே எப்படிடா நம்ம ஜெயிப்போம்னு இருக்கும்.
Speaker A
எமோஷன் வைஸ் கொஞ்சம் ஹெவியா இருப்பீங்க இன்னும் கொஞ்சம் ஹீல் ஆகல அப்படிங்கற மாதிரிலாம் இருக்கிறீங்கன்னா
Speaker A
புத்து கோயில்களுக்கு போயிட்டு வர வர அந்த தெளிவு உங்களுக்கு வந்து திடீர்னு ஏதோ ஒரு பவர் கிடைச்ச மாதிரி
Speaker A
யாரோ நம்மள ப்ரொடெக்ட் பண்ற மாதிரியான ஒரு மனநிலைமைக்கு நீங்க போயிடுவீங்க.
Speaker A
ஏப்ரல் 2026 அப்படின்னு பார்க்கிறப்போ
Speaker A
ராகு அஞ்சுல கேது 11ல
Speaker A
அஞ்சுல ராகு போயிடுச்சு அப்படினாலே குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல ப்ராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ண ஆரம்பிச்சிரும்.
Speaker A
மனக்குழப்பங்கள் பிரச்சனைகள் அப்படிங்கறது விருச்சகத்துக்கு வர ஆரம்பிச்சிரும்.
Speaker A
என் குழந்தையை என்னால பார்த்துக்க முடியலங்கிற மாதிரி இருக்கும்.
Speaker A
இல்ல உங்க குழந்தைங்க எங்கயாவது போய் அடிபட்டுட்டு வருவாங்க.
Speaker A
சில பேர் குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டு இருப்பீங்க அதாவது அந்த ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் பேபிஸ் எல்லாம் போகணும்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாம் அந்த மாதம் உகந்த மாதம் உங்களுக்கு கிடையாது.
Speaker A
ஏன்னா உங்களுடைய மைண்டே ராகு கொஞ்சம் பிளாக் பண்ணி வச்சிரும்.
Speaker A
அந்த கிரியேட்டிவிட்டில இல்லூஷன்ஸ் மாதிரி கொண்டு போயிட்டு ரொம்ப ஒரு போராட்ட நிலைமைக்கு உங்களை கூட்டிட்டு போயிடும்.
Speaker A
பிரண்ட்ஸ் சர்க்கிள்லயே ஒரு டிஸ்டர்பன்ஸாவே உங்களுக்கு இருக்கும்.
Speaker A
எல்லாருமே ஏதோ நச நசன்னு பேசிட்டு இருக்கிற மாதிரி எல்லாமே உங்களுக்கு எதிர்வினையா நடந்துகிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.
Speaker A
அப்ப இந்த சமயங்கள்ல வந்து முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் அமைதியான ஒரு சூழல்ல நீங்க இருந்துகிறது நல்லது.
Speaker A
ஆனா அமைதியான சூழலுக்குள்ள போக முடியாது.
Speaker A
குழப்பங்கள் அதிகமா இருக்கும் பொழுது நீங்க வந்து திருப்பாம்புரம் போயிட்டு வந்துருங்க.
Speaker A
அந்த டைம்ல திருப்பாம்புரம் போயிட்டு அங்க இருக்கிற ராகுவை போய் வழிபாடு பண்ணிட்டு ராகு பரிகாரம் பண்ணிட்டு வரீங்க அப்படின்னா
Speaker A
இந்த ராகு கொடுக்கக்கூடிய இந்த ராகு கேது கொடுக்கக்கூடிய டென்ஷன்ல இருந்து கொஞ்சம் மீண்டு நீங்க வருவீங்க.
Speaker A
மே 2026 விருச்சக ராசி எப்படி இருப்பாங்க அப்படின்னா
Speaker A
கிரகங்கள் பார்த்தீங்கன்னா குரு ஏழுக்கு போறார் ஏழுல இருந்து எட்டுக்கு அப்படியே மாறறார்.
Speaker A
கரெக்டா அது மாறற டைம் பீரியடா இருக்குது.
Speaker A
அந்த மே மாசம்.
Speaker A
அப்ப எப்படி இருக்கும்னா ரிலேஷன்ஷிப்ஸ்ல எல்லாம் இருக்கிறீங்க அப்படின்னா இது வேணுமா இது வேண்டாமா.
Speaker A
இது எனக்கு நிலைக்கமா நிலைக்காதா அப்படிங்கிற ஒரு சிச்சுவேஷன்ஸ்குள்ள நிறைய பேர் போவாங்க.
Speaker A
சில பேத்துக்கு கர்மா பயங்கர டெஸ்ட் வைக்கும்.
Speaker A
இவங்க இதையும் தாண்டி ஒன்னா சேர்ந்து இருக்காங்களா அப்படின்னு ஒரு பிரஷர் எல்லாம் கொடுக்கும்.
Speaker A
இந்த டெஸ்ட்ட நீங்க பாஸ் பண்ணீங்களா இல்லையா அப்படிங்கறதுதான் வந்து
Speaker A
கரெக்டா இந்த ஏழு டு எட்டுல இந்த குரு ட்ரான்சிட் ஆகுறப்போ நடக்கக்கூடிய விஷயங்கள்.
Speaker A
அப்ப எப்படி இருக்கும்னா பார்ட்னர் ரிலேட்டடா பிசினஸ் பார்ட்னரா இருக்கலாம் லைஃப் பார்ட்னரா இருக்கலாம்.
Speaker A
இந்த பார்ட்னர் இல்ல அது பிரண்டா கூட இருக்கலாம்.
Speaker A
அந்த பார்ட்னர் ரிலேட்டடா ஏதாவது ஒரு மெண்டல் பிரஷர் ஃபேஸ் பண்ணிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.
Speaker A
வேலை சம்பந்தமா மே மாசம் எந்த முடிவுகளும் விருச்சக ராசிக்காரங்க எடுத்துறாதீங்க.
Speaker A
மே 2026ல எடுத்துறாதீங்க.
Speaker A
ஏன்னா பயங்கரமான ஒரு குழப்பத்துல தான் நீங்க இருப்பீங்க.
Speaker A
ஒரு ஜாப் என்ன வேணும்னே உங்களுக்கு தெரியாது.
Speaker A
சொந்தமா பண்ணனும்னு நினைக்க வேண்டாம் அந்த ஜாப விட்டு போகணும்னு நினைக்க வேண்டாம்.
Speaker A
ஏன்னா அந்த வேலைங்கிறது ஒரு நிலையிலா தன்மையை கொடுக்கக்கூடியது பெரும்பாலானோருக்கு இருக்கும்.
Speaker A
அந்த டைம்ல வந்து அபிராமி அம்மன் வழிபாடு அபிராமி அந்தாதிகள் கேட்கிறது.
Speaker A
திருக்கடவூர் போயிட்டு அங்க இருக்கிற அபிராமி அம்மனை வழிபாடு பண்ணிட்டு வர்றது.
Speaker A
ஏன்னா இது என்ன அப்படின்னா ஏன் இங்க நான் போக சொல்றேன் அப்படின்னா
Speaker A
குரு குரு வந்து
Speaker A
அஷ்டம பரிகாரம் பண்றதுல இந்த இடம் ஸ்ட்ராங்.
Speaker A
ஏன்னா குரு அஷ்டமத்துல உங்களுக்கு போறார்.
Speaker A
அப்படி அஷ்டமத்துல போறப்ப திருக்கடவூர் போய் அபிராமி அபிராமி அம்மனை நீங்க வழிபாடு பண்றீங்கன்னா
Speaker A
இந்த ஸ்ட்ரெஸ்ங்கிற ஒரு விஷயத்துல இருந்து அப்படியே உங்களுக்கு ஸ்மூத் ஆக்கிடுவாங்க.
Speaker A
ரொம்ப இந்த பிரஷரா தெரியாது.
Speaker A
இல்லங்க எங்களால அங்க எல்லாம் கிளம்பி போக முடியாது அப்படின்னா அபிராமி அந்தாதி படிங்க வீட்ல.
Speaker A
அபிராமி அம்மனை வீட்ல வச்சு வழிபாடு பண்ணுங்க அதுவே உகந்தது.
Speaker A
ஏன்னா அதுவே நீங்க ஸ்தலத்துக்கு போயிட்டு வந்ததுக்கு சமம்.
Speaker A
இப்ப ஜூன் 2026ல வந்து
Speaker A
சனி நாலாம் இடத்துல போய் செம ஸ்ட்ராங் ஆகுறார்.
Speaker A
சனி நாலுல போய் ஸ்ட்ராங் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்.
Speaker A
ரெஸ்பான்சிபிலிட்டி டபுள் ஆயிடும்.
Speaker A
ஆல்ரெடி சில பிரஷர்ஸ்ல இருக்கிற மாதிரிதான் இருக்கும்.
Speaker A
எங்கயாவது டிராவல் பண்ணனும்னு அந்த டைம்ல நீங்க நினைக்க வேண்டாம்.
Speaker A
ஜூன் 2026ல வந்து டிராவல் கொஞ்சம் தடங்கள் ஆகுற மாதிரி இருக்கும்.
Speaker A
ஃபேமிலில சில பிரஷர்ஸ்.
Speaker A
ஏன்னா நாலுல போய் சனி உட்காருது அப்படினாலே குடும்பத்துலதான் கை வைக்கும்.
Speaker A
அப்ப அந்த டைம்ல வந்து நிறைய திடீர்னு தலையில இவ்வளவு பெரிய பாரம் வந்துருச்சே அப்படின்னு இல்லாம
Speaker A
இதை எப்படி ஹேண்டில் பண்ணனும் ஏன்னா சனி ஒரு பொறுப்பை கொடுக்கிறார்னா
Speaker A
உங்களை ஒரு டிசிப்ளின்க்குள்ள கொண்டு வர்றாருன்னு அர்த்தம்.
Speaker A
கரெக்டா அந்த டிசிப்ளினை பிராக்டிஸ் பண்ணனும்ங்கிறது அர்த்தம்.
Speaker A
ஒரு ரொட்டின் லைஃப்க்குள்ள நீங்க கரெக்டா வரணும்ங்கிறதுதான் அதோட அர்த்தம்.
Speaker A
அதை பாரமா பார்க்காம இதை எப்படி சரி பண்ணனும் அப்படின்னுதான் பார்க்கணும்.
Speaker A
சனிக்கு போய் சனீஸ்வரருக்கு போய் விளக்கு போட்டுட்டு ஆஞ்சநேயரை வழிபாடு பண்ணிட்டு வர்றது ஒரு ஜூன் மாசத்துல அந்த மாதத்துல ஒரு பழக்கமாவே நீங்க வச்சுக்கிறதுங்கிறது
Speaker A
நீங்க கொஞ்சம் சனி கொடுக்கக்கூடிய டென்ஷன்ல இருந்து கொஞ்சம் ரிலீவ் அப்படிங்கறது நீங்க ஆவீங்க.
Speaker A
ஜூலை 2026 அப்படின்னு வரப்போ
Speaker A
இந்த கிரக நிலைகள் எப்படி இருக்கும்னா சூரியன் ஒன்பதுக்கு போறாரு.
Speaker A
அதே மாதிரி சுக்கிரனும் ஒன்பதுல பலம் அடையறாரு அப்படிங்கறதுதான் இருக்கு.
Speaker A
அப்ப எப்படி இருக்கும்.
Speaker A
சுக்கிரன் சூரியன்.
Speaker A
பயங்கரமா லக் இம்ப்ரூவ்மென்ட் ஆகும்.
Speaker A
ஜூலை மாசம் தான் உங்களுக்கு.
Speaker A
அந்த டைம்ல குருவுடைய பிளஸ்சிங்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.
Speaker A
அது எப்படிங்க சூரியன் சுக்கிரன் இருக்கப்போ குரு பலம் வரும் அப்படின்னா
Speaker A
குரு இருக்கக்கூடிய இடத்துல இருந்து குரு பார்ப்பார்.
Speaker A
குரு பார்வை நம்மளுக்கு ரொம்ப முக்கியம்.
Speaker A
அப்ப சூரியன் சுக்கிரன் நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும் பொழுது உங்களுக்கு குரு பலமும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறப்போ
Speaker A
அப்பா ரிலேட்டடா சில ப்ராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ணிட்டு இருந்திருப்பீங்க.
Speaker A
ஒரு சிலருக்கு அப்பா தவறி இருந்திருக்கலாம்.
Speaker A
சோ அப்பா சம்பந்தமா ஏதோ ஒரு டிஸ்டர்பன்சஸ் அப்படிங்கறதெல்லாம் இருந்திருக்கும்.
Speaker A
இது எல்லாமே வந்து சரியாகக்கூடிய ஒரு அமைப்பு.
Speaker A
இப்ப அப்பா தவறனவங்களா இருக்கிறாங்க அப்படின்னா அவங்க அப்பாவுக்கு சரியான ஒரு தர்ப்பண முறைகள் எல்லாம் நீங்க பண்றீங்கன்னா
Speaker A
உங்க அப்பாவுடைய ஆன்மா எவ்வளவு டிஸ்டர்ப்டா இருந்தாலும் சாந்தி அடையும் அப்படிங்கறதும்.
Speaker A
அப்பா இருக்கிறாங்க அப்படிங்கறப்போ
Speaker A
அப்பா ரிலேட்டடான இஸ்யூஸ் எல்லாம் கரெக்டா சால்வ் ஆகி விருச்சக ராசிக்காரங்க கொஞ்சம் அப்பா கூட ஒரு நல்ல ஒரு
Speaker A
ஒரு பழக்க வழக்கத்துல இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அந்த ஒரு சைலன்ட்டா ஒரு ஹேண்டில் பண்ணிட்டு இருப்பாங்க.
Speaker A
விருச்சக ராசியில இருக்கிறவங்க எல்லாம் அப்பாவை கொஞ்சம் டிஸ்டன்ட்டா இருக்கிற மாதிரி.
Speaker A
அதெல்லாமே கொஞ்சம் அந்த கோல்டா இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் ரிலீவ் ஆகக்கூடிய ஒரு அமைப்பு.
Speaker A
இன்னொரு விஷயம் என்னன்னா அப்பா செய்த கர்ம வினைகள் அப்படின்னு ஒன்னு இருக்கும்.
Speaker A
அப்பாவுடைய தாத்தா செஞ்ச கர்ம வினைகள் எல்லாம் இருக்கும்.
Speaker A
அதெல்லாம் கொஞ்சம் தர்மமா மாறக்கூடிய ஒரு அமைப்புமே வந்து இந்த டைம்ல வந்து விருச்சக ராசிக்காரங்களுக்கு
Speaker A
பலம் அப்படிங்கறது கிடைக்கும்.
Speaker A
அதேபோல இப்ப மொத்தத்துல விருச்சக ராசிக்காரங்களுக்கு 2026 எப்படி இருக்கும் அப்படின்னா
Speaker A
ஃபர்ஸ்ட் ஹாப் அப்படின்னு பார்க்கிறப்போ சில பிரளயங்கள் எல்லாம் ஃபேஸ் பண்ணி ஏன்னா உங்களுக்கு வந்து பேஸ்மென்ட் எப்பவுமே கொஞ்சம் வீக் தான்.
Speaker A
ஏன்னா அங்க வந்து சந்திரன் நீசமாயிடுச்சு விருச்சகத்துக்கு.
Speaker A
சந்திரன் நீசமா இருக்குங்கிறப்போ ஒரு பேஸ்மென்ட் எப்பவுமே ஒரு ஆட்டங்கான அப்புறம்தான் ஸ்டெபிலைஸ் ஆகும்.
Speaker A
அதுக்கப்புறம் அந்த மிட் இயர்னு வரப்போ கர்மா.
Speaker A
கர்மத்துல இருந்து லைட்டா தர்மத்துக்கு ஷிப்ட் ஆகுறப்போ இந்த கர்மம் திரும்பி புல் பேக் பண்றதுக்கு பார்க்கும்.
Speaker A
கிட்டத்தட்ட கர்மா கிளியரன்ஸ் மாதிரிதான் அது.
Speaker A
கர்மா கிளியர் பண்றப்போ ரொம்ப ஹெவியா இருக்கும்.
Speaker A
இது ஏன்டா நம்ம லைஃப்ல நடக்குது ரொம்ப சோதனைகள் காலமா இருக்கும் இந்த மிட் பீரியட்.
Speaker A
செகண்ட் ஹாப்னு பார்க்கிறப்போ அப்படியே குரோத் தான்.
Speaker A
ஏன் இவ்வளவு விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடந்துச்சுங்கிறது உங்களுக்கு புரியும்.
Speaker A
ஏன்னா விருச்சகத்துக்கு ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் டைம் ரொம்ப நல்லா இருக்கு இந்த தடவை.
Speaker A
சோ அது செகண்ட் ஹாப்ல தான் உங்களுக்கு நல்லா இருக்கு.
Speaker A
அதே மாதிரி லவ் ரொம்ப ஸ்ட்ராங் ஆகுது.
Speaker A
பிப்ரவரில இருந்து ஜூலைக்குள்ளார லவ் ரொம்ப ஸ்ட்ராங் ஆகுது.
Speaker A
கெரியர் வைஸ் ஆகஸ்ட்ல எல்லாம் நல்ல ஆகஸ்ட் மந்த்ல இருந்து நல்ல பீக்குக்கு போகக்கூடிய அமைப்பும் வந்து
Speaker A
விருச்சக ராசிக்காரங்களுக்கு இருக்கு.
Speaker A
அக்டோபர் டு டிசம்பர்க்குள்ளார அந்த ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்துல கரெக்டா போய் ஐக்கியம் ஆயிடுவீங்க.
Speaker A
அதனால விருச்சக ராசிக்காரங்களுக்கு நான் சொன்ன ஸ்தலங்கள் தெய்வ வழிபாடு எல்லாம் நீங்க பண்றீங்க அப்படின்னா
Speaker A
உங்களுக்கு ஆன்மீக பலம் தெய்வ பலம் அனுக்கிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு.
Speaker A
விருச்சகத்துக்கு பல வருஷத்துக்கு அப்புறம் டைம் ரொம்ப நல்லா இருக்கு.
Speaker A
நிஜமாலுமே விருச்சக ராசிக்காரங்களுக்கு டைம் நல்லா இருக்கு.
Speaker A
எப்பவுமே விருச்சக ராசிக்காரங்க கேட்கிற விஷயம் என்னன்னா எங்களுக்கு எப்ப டைம் கரெக்ட் ஆகும்.
Speaker A
எப்ப எங்களுக்கு சரியாகும் எப்ப பார்த்தாலும் விருச்சக ராசிக்கு நல்லா இருக்காதுன்னு எல்லாருமே சொல்றீங்களேன்னா
Speaker A
இந்த வருடம் நிச்சயமா நல்லா இருக்கும் கரெக்டா யூஸ் பண்ணிக்கணும் விருச்சக ராசிக்காரங்க 2026.
Topics:விருச்சக ராசி2026 ஜோதிடம்சனி பரிகாரம்ராகு கேதுகுரு நிலைபூதநாதேஸ்வரர் வழிபாடுகாளி வழிபாடுகுழந்தைகள் பிரச்சனைகாதல் வாழ்க்கைஆன்மிக பரிகாரம்











