ரமலானில் முதல் வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் செய்ய வேண்டிய முக்கிய திக்ருகள் மற்றும் துஆக்கள் தொகுப்பு.
Key Takeaways
- ரமலானில் முதல் வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் திக்ரு மற்றும் துஆக்கள் முக்கியம்.
- மூன்று முறை ஓதுவதால் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் வாழ்வில் நன்மைகள் கிடைக்கும்.
- அல்லாஹ்வின் மீது பொறுப்பு ஒப்படைப்பது மற்றும் நபியின் மீது ஸலவாத் சொல்லுதல் முக்கியமானது.
- திக்ருகள் மற்றும் துஆக்கள் ஒரே தொகுப்பாக வழங்கப்பட்டு எளிதாக செய்யக்கூடியவை.
- வீடியோ தொடர்ச்சியாக ரமலானில் செய்ய வேண்டிய அமல்களை பகிர்கிறது.
What the video covers
- ரமலானின் முதல் வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் சிறப்பாக செய்ய வேண்டிய திக்ருகள் மற்றும் துஆக்கள் பற்றி விளக்கம்.
- திக்ருகள் மற்றும் துஆக்கள் மூன்று முறை ஓதுவதன் மூலம் வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும்.
- யூனுஸ் நபி ஓதிய துஆ மற்றும் அல்லாஹ்வின் மீது பொறுப்பு ஒப்படைப்பது போன்ற முக்கிய வார்த்தைகள்.
- அல்லாஹ்விடத்திலிருந்து ரிஸ்கு, உறுதியான இதயம், ஜன்னத்து பாக்கியம், நரகத்திலிருந்து பாதுகாப்பு போன்ற வேண்டுதல்கள்.
- திக்ருகளின் வகைகள்: அஸ்தஃபிருல்லாஹ், சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், கலிமா, அல்லாஹு அக்பர் மற்றும் பிற.
- திக்ருகள் மற்றும் துஆக்கள் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டு, தொழுகை செய்ய எளிதாக்கப்பட்டுள்ளன.
- இவை எல்லாம் ரமலானில் சிறப்பு அமல்களாக கருதப்படுகின்றன.
- நபியின் மீது ஸலவாத் சொல்லுதல் மற்றும் மறுமை நாளில் நல்லடியாராக எழுப்ப வேண்டுதல்.
- வீடியோவில் தொடர்ந்தும் ரமலானில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் அறிவுரை வழங்கப்படுகிறது.
- சேனல் மெம்பர்ஷிப் மற்றும் ஹதியாவாக இணைவதற்கான அழைப்பு.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கண்ணியமிக்க சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ்.
Speaker A
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம்.
Speaker A
இன்னைக்கு நம்ம வந்து பார்த்தீங்கன்னா ரமலானுடைய முதல் வியாழக்கிழமை நாட்களிலும் வெள்ளிக்கிழமை நாட்களிலும் அடைந்திருக்கும் இந்த இரண்டு நாட்களிலுமே நம்ம வந்து சிறப்பாக செய்து கொள்ள வேண்டிய அமல் இருக்கு.
Speaker A
அந்த அமலை செய்து கொள்ளுங்கள் நிச்சயமாக வந்து அதைக் கொண்டே உங்களுக்கு எல்லா பாக்கியமும் கிடைக்கும்.
Speaker A
அதுலயும் வந்து பார்த்தீங்கன்னா இது ஒரு தொகுப்பான அமல்னு சொல்லலாம்.
Speaker A
இதுல வந்து துவா, திக்ரு, அல்லாஹ்வுடைய இஸ்மகள்னு சொல்லிட்டு எல்லாமே கலந்து இருக்கும்.
Speaker A
இதை வந்து பார்த்தீங்கன்னா 13ஐயும் ஓதிக் கொள்ளுங்கள்.
Speaker A
இது ஒவ்வொன்றையும் வந்து பார்த்தீங்கன்னா குறைந்தது மூன்று முறை ஓதினாவே போதும்.
Speaker A
ரொம்ப குறைவான நேரம் தான் எடுக்கும் தொழுகை இல்லாதவங்க ஒளு இல்லாதவங்க கூட வந்து இதை ஓதிக் கொள்ள முடியும்.
Speaker A
ஓதிவிட்டு உங்க துஆக்களை கேளுங்க உங்களுடைய துஆக்கள் மறுக்கப்படாமல் கபூலாகும்.
Speaker A
அதுல முதல் ஒன்று என்னன்னு பார்த்தீங்கன்னா லா இலாஹ இல்லா அந்த சுபஹானக்க இன்னி குந்து மினல்லாலீமின்.
Speaker A
யூனுஸ் நபி அவர்கள் ஓதிய துஆ தான் இதுதான் நம்முடைய ஒட்டுமொத்த கஷ்டத்தையும் துன்பத்தையும் போக்கக்கூடியதாக இருக்குது.
Speaker A
நிச்சயமாக உங்களுக்கு கவலை நீங்கி சிறப்பான வாழ்க்கை தருவதற்கு இதுவே போதுமானது.
Speaker A
அதனால இதை மூன்று முறை ஓதிக் கொள்ளுங்கள்.
Speaker A
அடுத்து ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லாஹு அலைஹி தவக்கல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்.
Speaker A
அப்படின்னா என்ன அர்த்தம்னா நான் என்னுடைய காரியத்தின் பொறுப்பை அல்லாஹ்விடத்திலே ஒப்படைக்கிறேன்.
Speaker A
அப்படின்னு சொல்லிட்டு அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டக்கூடிய வார்த்தை.
Speaker A
அதனால அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டி நீங்க என்ன பண்ணுங்க இந்த ஒரு துஆவை ஓதுங்க.
Speaker A
இது அல்லாஹ்வின் மீது நபி அவர்கள் பொறுப்பு சாட்டி தினமுமே ஏழு முறை எல்லாம் ஓதி வந்திருக்காங்க.
Speaker A
அதனால இதை ஓதுபவர்களுக்கு இம்மை மறுமையுடைய தேவைகள் எது கேட்டாலும் அது இதுக்குள்ள அடங்கும்னு சொல்லப்பட்டிருக்கு.
Speaker A
அடுத்து வந்து அல்லாஹும்ம அர்ஸுக்னி மின் ஹைசு லா அஹ்தசிப்.
Speaker A
அப்படின்னா என்னன்னு பார்த்தீங்கன்னா அல்லாஹ்விடத்திலிருந்து தான் நமக்கு என்ன கிடைக்குது ரிஸ்கு கிடைக்குது.
Speaker A
அதே அவன் நாடியவனுக்கு தான் அல்லாஹ் வந்து கொடுக்கிறான்னு சொல்றோம்.
Speaker A
அடுத்தது அல்லாஹும்ம சப்பித் கல்பி அலா தீனிக்.
Speaker A
அல்லாஹ்விடத்தில ஒரு துஆ கேட்கிறோம் யா அல்லாஹ் தீன் விஷயத்தில் என்னுடைய உறுதியான இதயத்தை எனக்கு கொடு.
Speaker A
என்னுடைய இதயம் உறுதியாக இருக்கணும்னு நம்ம கேட்கிறோம்.
Speaker A
அடுத்தது யா ரப்பி ரிலாக்க வல் ஜன்னா.
Speaker A
யா அல்லாஹ் எனக்கு உன் திருப்புறுதத்தை கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை கொடுன்னு நம்ம கேட்கிறோம்.
Speaker A
அடுத்தது அல்லாஹும்ம அஹ்ஸின் ஹாத்திமதி.
Speaker A
அல்லாஹ்விடத்தில வந்து பார்த்தீங்கன்னா அழகான விஷயங்களை நம்ம கேட்கிறோம்.
Speaker A
அடுத்தது அல்லாஹும்ம அஹ்ஷுர்னி மஅ நபிய்யிக்.
Speaker A
இது நபி அவர்களுக்காக நம்ம ஓதுறோம்.
Speaker A
அடுத்தது அல்லாஹும்ம அஜிர்னி மின் அதாபின் நார்.
Speaker A
நரக நெருப்பு வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுன்னு நம்ம ஒரு துஆ கேட்கிறோம்.
Speaker A
அடுத்து அல்லாஹும்ம ஃபீ அதாபிக்க யவ்ம தபுஸு இபாதிக்.
Speaker A
அல்லாஹ்விடத்தில வந்து பார்த்தீங்கன்னா அல்லாஹ்விடத்தில நம்ம மறுமை நாள்ல இபாதத் செய்யக்கூடிய நல்லடியார்கள் கூட்டத்தில் எழுப்புன்னு நம்ம சொல்றோம்.
Speaker A
அதாவது மொத்தமாகவே நம்ம என்னெல்லாம் துஆ கேட்கணுமோ அதெல்லாம் இதுல வந்துருச்சு.
Speaker A
நரகத்தை விட்டு பாதுகாப்பு கொடு, சொர்க்கத்தை கொடு, நபி அவர்களுக்காக கேட்டோம் இன்னும் நமக்கு வந்து பார்த்தீங்கன்னா ரிஸ்கு கேட்டோம்.
Speaker A
இன்னும் மறுமை நாள்ல நல்லடியார்களா எழுப்புன்னு சொல்லிட்டு கேட்டோம்.
Speaker A
இந்த மாதிரி வந்து பார்த்தீங்கன்னா நமக்கு தேவையான எல்லா துஆவும் இதுக்குள்ள இருக்கு.
Speaker A
அதை வந்து நம்ம ஒரு கலெக்ஷனா கேட்டோம் அதுவும் இந்த வியாழன் வெள்ளி நாட்கள் வந்து அமல்கள் உயர்த்தப்படக்கூடிய நாட்களா இருக்கறதுனால இது வந்து உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்.
Speaker A
அடுத்தது அஸ்தஃபிருல்லாஹ் அப்படின்னு சொல்லக்கூடிய திக்ரு.
Speaker A
இப்ப நம்ம வந்து திக்ரு ஓத போறோம்.
Speaker A
அஸ்தஃபிருல்லாஹ் அப்படிங்கக்கூடிய திக்ரை ஓதிக் கொள்ளுங்கள்.
Speaker A
அஸ்தஃபிருல்லாஹ்னா உங்களுக்கே தெரியும் அல்லாஹ்விடத்தில மன்னிப்பு கேட்கிறோம்னு.
Speaker A
அடுத்தது சுபஹானல்லாஹ் அப்படின்னா அல்லாஹ் பரிசுத்தமானவன்னு சொல்லிட்டு அல்லாஹ்வை வந்து போற்றிறோம்.
Speaker A
அடுத்தது அல்ஹம்துலில்லாஹ் அப்படின்னா என்ன அர்த்தம்?
Speaker A
புகழுக்குரியவன்னு நம்ம சொல்றோம்.
Speaker A
இப்ப நம்ம சொன்னதெல்லாம் வந்து பார்த்தீங்கன்னாவே உங்களுக்கு தெரியும் இதுல வந்து என்ன இருக்குது?
Speaker A
தஸ்பீஹ் இருக்குது, தஹ்மீத் இருக்குது, தக்பீர் இருக்குது.
Speaker A
அடுத்தது என்ன இருக்கணும்?
Speaker A
கலிமா இருக்கணும்.
Speaker A
அந்த கலிமா தான் லா இலாஹ இல்லல்லாஹ் அப்படின்னு சொல்லக்கூடிய கலிமா.
Speaker A
இந்த கலிமாவையும் ஓதிக் கொள்ளுங்கள்.
Speaker A
அடுத்தது அல்லாஹு அக்பர்.
Speaker A
அல்லாஹ் எப்படி மிகப்பெரியவன்னு நம்ம சொல்றோம்.
Speaker A
அல்லாஹு மிகப்பெரியவன்னு சொல்லிட்டு தக்பீர் சொல்லி தானே நம்ம தொழுகிறோம்.
Speaker A
அந்த திக்ரை ஓதுறோம்.
Speaker A
அடுத்தது சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அலீம்.
Speaker A
அப்படின்னு சொல்லக்கூடிய இந்த திக்ரை ஓதுறோம்.
Speaker A
இதுதான் அல்லாஹ்வுக்கு பிடித்த திக்ரு சொல்வதற்கும் இலகுவானது இன்னும் வந்து பார்த்தீங்கன்னா நமக்கு மீஜான் தராசிலும் கனமானதா இருக்கும்.
Speaker A
அடுத்து அஸ்தஃபிருல்லாஹ வஅதூபு இலைஹி.
Speaker A
அப்படின்னா அல்லாஹ்விடத்தில தான் மீண்டு செல்லப் போகிறோம் அப்படிங்கறதை நம்ம வந்து சொல்றோம்.
Speaker A
அடுத்து லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.
Speaker A
தீமையை விட்டு விலகுவதும் நன்மையை செய்ய சக்தி பெறுவதும் அல்லாஹ்வை கொண்டுதான் அப்படின்னு சொல்றோம்.
Speaker A
அடுத்தது அல்லாஹும்ம ஸல்லி அலா நபிய்யினா முஹம்மதின்.
Speaker A
நபியின் மீது ஸலவாத்தையும் சொல்றோம்.
Speaker A
இது எல்லாத்தையுமே மூன்று முறை ஓதி நீங்க துஆ செய்யுங்க.
Speaker A
இதுல எல்லாமே சிறப்புக்குரிய வார்த்தைதான்.
Speaker A
உங்களுக்கு வந்து எதை ஓதணும் பொதுவா திக்ரு செய்யுங்க துஆ செய்யுங்கன்னா என்னன்னு தெரியாது.
Speaker A
அதனால நம்ம ஏதாவது தொகுத்து கொடுக்கும்போது அது உங்களுக்கு இலகுவா இருக்கும்.
Speaker A
ஒரே இடத்திலேயே வந்து என்ன பண்ணிக்க முடியும் அத்தனையுமே நல்ல அமலாக வந்து தொகுத்து செஞ்சுக்க முடியும்.
Speaker A
இதை ஓதிட்டு துஆ செய்து கொள்ளுங்கள்.
Speaker A
நம்ம தொடர்ந்து ரமலான்ல அமல்கள் போடுவோம்.
Speaker A
சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க லைக் பண்ணிக்கோங்க.
Speaker A
நம்ம சேனல்ல வந்து மெம்பர்ஷிப் இருக்குது ஹதியாவாக ஜாயின் பண்ணிக்கோங்க.
Topics:ரமலான்திக்ருதுஆவியாழன்வெள்ளிஇஸ்லாம்யூனுஸ் நபிஸலவாத்அல்லாஹ்மறுமை நாள்











