செவ்வாய் தோஷம் மற்றும் முருகன் வழிபாடு பற்றிய விரிவான விளக்கம் மற்றும் பரிகார முறைகள்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- செவ்வாய் தோஷம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கும், அதற்கான பரிகாரம் அவசியம்.
- முருகர் வழிபாடு செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
- கர்மா இறக்கி வைக்க பிராயச்சித்தம் செய்த பிறகு பரிகாரம் செய்ய வேண்டும்.
- காலபைரவர் வழிபாடு மற்றும் விளக்கு ஏற்றுதல் பரிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- வீட்டிலேயே நம்பிக்கையுடன் முருகர் வழிபாடு செய்யலாம்.
What the video covers
- செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் முருகர் வழிபாடு செய்வது முக்கியம்.
- முருகரை சிகப்பு மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும், மனதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
- செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய் இருக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள்.
- செவ்வாய் தோஷம் வாழ்க்கை, வீட்டுவசதி மற்றும் மனநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்யும் முன் கர்மாவை இறக்கி வைக்க பிராயச்சித்தம் அவசியம்.
- காலபைரவர் வழிபாடு மற்றும் அஷ்டமி, அமாவாசை போன்ற நாட்களில் விளக்கு ஏற்றுதல் பரிகாரத்தில் முக்கியம்.
- செவ்வாய் தோஷம் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், நிதானம் மற்றும் உடல் பிரச்சனைகள் பற்றி விளக்கம்.
- முருகர் வழிபாட்டின் போது கந்தசஷ்டி கவசம் மற்றும் மந்திரங்களை கேட்க பரிந்துரை.
- வீட்டிலேயே முருகர் புகைப்படத்துடன் வழிபாடு செய்வது சாத்தியமாகும்.
- செவ்வாய் தோஷம் மற்றும் அதற்கான பரிகார முறைகள் குறித்து தெளிவான அறிவுரை.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
இப்போ, அது எப்படி வழிபடலாம்னா, இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க, தங்கிடுங்க, புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
Speaker A
முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ, இல்ல செகப்பு அரளியோ,
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா, அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
Speaker A
இப்ப எட்டில செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.
Speaker A
கர்மாவை இறக்கி வச்சிட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும், அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.
Speaker B
வணக்கம் மேம்.
Speaker A
வணக்கம்.
Speaker B
எல்லா முருகன் கோயிலிலும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க, அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாரனாலயும் முருகனை பார்க்கவே முடியல, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டன் வந்துறாங்க.
Speaker B
ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க?
Speaker A
ஏன்னா செவ்வாய் காரகன், அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது, அதனாலதான் வந்து வியாழன்.
Speaker A
அதனாலதான் இந்த ரெண்டு நாள்.
Speaker A
இப்போ, அது எப்படி வழிபடலாம்னா, இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க, தங்கிடுங்க, புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
Speaker A
ஏன்னா வந்து புதன் புத்தி, அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.
Speaker A
அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம், இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.
Speaker A
இந்த இதுதான் அந்த காம்பினேஷன், செவ்வாய், புதன், வியாழன், இந்த மூணும்.
Speaker A
இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க, இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணனாலும் சிறப்போ சிறப்பு.
Speaker A
ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும்.
Speaker A
இந்த பச்சையையும் குறிக்கும்.
Speaker A
மயிலையும் குறிக்கும்.
Speaker A
சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ் புதன் அப்படிங்கறது.
Speaker A
முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு.
Speaker A
அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.
Speaker A
இந்த கூட்டத்துலதான் போய் கும்பிடணும் அப்படிங்கறது இல்லை.
Speaker A
முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம்.
Speaker A
ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களுடைய எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா, அந்த கிழமைகள்ல அவங்களுடைய எனர்ஜி வந்து நம்மளுடைய எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கறப்ப உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை.
Speaker A
நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.
Speaker A
உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை.
Speaker B
இப்ப வந்து கோயிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க, நீங்க சொல்ற மாதிரி செவ்வாய், புதன், வியாழன் நல்லா கோயில்ல எல்லாம் போய் தங்க முடியாது.
Speaker B
நான் வந்து வீட்டிலேயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி?
Speaker A
தாராளமா, அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.
Speaker A
வீட்ல வந்து ஒரு ரோஸோ, இல்ல செகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்போ முருகரை மனசுல நினைச்சிட்டாலே போதும்.
Speaker A
வேல்மாறல் கேட்கிறதோ, கந்தசஷ்டி கவசம் கேட்கிறதோ,
Speaker A
இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே அந்த அந்த உபதேசங்களை கேட்டாலே போதும்.
Speaker A
முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்.
Speaker A
நீங்க வந்து கோயிலுக்கு போகணும்னு இல்ல.
Speaker A
நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம் நீங்க.
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா, அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
Speaker B
இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க, சிகப்பு கலருக்கு சொந்தக்காரர், ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker B
சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.
Speaker B
சில பேர் ஜாதகக்காரர்கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம், தசா, புத்தி எல்லாமே பார்த்தாலுமே செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள், சில விஷயங்கள் சொல்லுவாங்க.
Speaker B
அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.
Speaker B
சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.
Speaker A
அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கறதுதான் அதனுடைய கணக்கு.
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, 12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.
Speaker A
இப்படி எல்லாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் உட்கார்ந்துருச்சு, நாலுல செவ்வாய் உட்கார்ந்துருச்சுன்னா இதெல்லாமே செவ்வாய் தோஷம்.
Speaker A
நாலுல செவ்வாய் உட்கார்ந்துருச்சுன்னா பார்ஷியலா செவ்வாய் தோஷம்.
Speaker A
எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா முழுசா செவ்வாய் தோஷம்.
Speaker A
சோ இந்த செவ்வாய் தோஷம் ஒரு லைஃப் பார்ட்னருக்கு மட்டும்தான் இஸ்யூ கொடுக்குமா அப்படின்னா உங்க வாழ்க்கையில யாரெல்லாம் பார்ட்னரா வராங்களோ ஏதோ ஒரு இஸ்யூ.
Speaker A
ஏதோ ஒரு மனசை உடைச்சிட்டு போகக்கூடிய விஷயங்கள், அவங்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் வர்றது அந்த மாதிரி வந்து இருக்கும்.
Speaker A
அதாவது இப்ப நாலுல செவ்வாய் இருக்கவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.
Speaker A
சொந்த வீடு அமையாது.
Speaker A
அவங்களுக்குதான் இந்த வீடு பிரச்சனை வருது.
Speaker A
லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க, நல்லா இருக்கும், எங்கேயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.
Speaker A
இப்ப எட்டுல செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.
Speaker A
ஏன்னா நிதானம் இருக்காது.
Speaker A
ஆக்ரோஷமா இருக்கிறது அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம்.
Speaker A
அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லிதான் ஆகணும்.
Speaker A
கண்டிப்பா.
Speaker A
செவ்வாய்ங்கிறது நம்மளுடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்குங்கறது சொல்றதுதான் அது.
Speaker A
அதை சரி பண்ணிக்கணும்.
Speaker A
இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா என் அப்பாவை நான் பார்க்கணும்.
Speaker A
அப்படி அவங்க யோசிக்கணும்.
Speaker A
என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது?
Speaker A
ஹெல்த் பார்க்கிறது, அதாவது அப்பாவுக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.
Speaker A
அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது.
Speaker A
இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது, ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு, இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா அப்போ அது வீக் ஆயிட்டே போகுதுன்னா,
Speaker A
கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.
Speaker A
ஹெல்த் வைஸ் பண்ணாது, டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்.
Speaker A
ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்.
Speaker A
இல்லை இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது செவ்வாய்.
Speaker A
வாழ்க்கையில.
Speaker A
ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும்.
Speaker A
செவ்வாய்க்கு.
Speaker A
ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம் புத்தி உடையது.
Speaker A
கேதுதான் நிதானத்தை கொடுக்கும்.
Speaker A
அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்.
Speaker A
அதுல நம்மளுக்கு ஒரு அப்செட்டை கொடுக்கும்.
Speaker A
கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே நான்தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.
Speaker A
இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.
Speaker A
சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.
Speaker A
சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.
Speaker A
சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா காலபைரவரை வழிபாடு பண்ணனும்.
Speaker A
அஷ்டமி, அமாவாசையில காலபைரவரை வழிபாடு பண்ணி காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.
Speaker A
விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.
Speaker A
பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.
Speaker A
பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க அதாவது அஷ்டதிக்கு பாலகர்கள் கூட சொல்லுவாங்க.
Speaker A
அஷ்டதிக்கு பாலகர்களை தொட்டெல்லாம் வழிபாடு பண்ணக்கூடாது.
Speaker A
அஷ்டதிக்கு பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.
Speaker A
உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.
Speaker A
அது அஷ்டதிக்கு பாலகர்கள்தான் பார்த்துட்டே இருப்பாங்க.
Speaker A
எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.
Speaker A
சொர்ண ஆகாஷ்ன பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும்.
Speaker A
சொர்ண ஆகாஷ்ன பைரவர் வந்து எப்படின்னா அவருக்கு கீழ ஆறு சிவன் இருக்கும்.
Speaker A
சொர்ண ஆகாஷ்ன பைரவர் கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்.
Speaker A
அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க.
Speaker A
ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.
Speaker A
இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கறதுதான் அது.
Speaker A
அதுதான் அந்த செவ்வாய் காரகன்.
Speaker A
இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.
Speaker A
கர்மாவை இறக்கி வச்சிட்டுதான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும், அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.
Speaker A
இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.
Speaker A
பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.
Speaker B
நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்.
Speaker B
பிராயச்சித்தம் பண்ணிட்டுதான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.
Speaker B
இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வர்றது வந்துட்டு பெண்களைதான் அதிகமா சொல்லுவாங்க.
Speaker B
இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு, இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம்.
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிடும்.
Speaker B
இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீட்ல நல்லா இருக்காது.
Speaker B
வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்துல இருக்கிற கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.
Speaker B
அது உண்மைதானா மேம்?
Speaker A
அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.
Speaker A
பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும்.
Speaker A
அவங்களுக்கு.
Speaker A
அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள்தான்.
Speaker A
ஆனா அவங்களால குடும்பம் கொலையப் போகுது, சீர்கெடப் போகுது அந்த மாதிரி எல்லாம் கிடையாது.
Speaker A
அந்த மாதிரி எல்லாம் இஸ்யூஸ் ஆகாது.
Speaker A
ஏன்னா அவங்க எல்லாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க அந்த செவ்வாய்.
Speaker A
ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல.
Speaker A
அவங்களால அது நடக்கல.
Speaker A
இது வந்து அவங்களுடைய கர்மா.
Speaker A
அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப இங்க இது கிளியர் ஆயிடும்.
Speaker A
ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.
Speaker A
செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.
Speaker A
28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.
Speaker A
அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சிரும்.
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.
Speaker A
அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு.
Speaker A
குருவை குருமார்களை மதிக்கிறது.
Speaker A
ஏன்னா செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும்,
Speaker A
செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.
Speaker A
அப்போ அங்க குரு இருக்கிறப்போ செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.
Speaker A
சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க, விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.
Speaker A
அதுவும் பார்த்தீங்கன்னா அதுவும் ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன்தான் அது.
Speaker A
அப்படி இருக்கிறப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.
Speaker A
குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.
Speaker A
குரு குருதான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது, செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.
Speaker A
குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங்.
Speaker A
அப்ப எதுவும் நடக்காது.
Speaker B
சோ செவ்வாய் தோஷம்னா என்ன, அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும், பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதையும் செவ்வாய் தோஷம் இருக்கிறவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம்.
Speaker B
அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கறதையும் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
Speaker B
தொடர்ந்து பேசுவோம்.
Speaker B
நன்றி.
Topics:செவ்வாய் தோஷம்முருகர் வழிபாடுபரிகாரம்கர்மாகாலபைரவர்அஷ்டமிஅமாவாசைகந்தசஷ்டி கவசம்மந்திரம்தமிழ் ஆன்மீகம்











