கும்ப ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தரும் முருகன் வழிபாடு மற்றும் செவ்வாய் தோஷ பரிகாரம் பற்றிய ஆன்மீக விளக்கம்.
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- கும்ப ராசிக்காரர்கள் முருகனை வழிபாடு செய்வது வாழ்க்கையை முன்னேற்றும்.
- செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் வழிபாடு சிறந்த பலன்களை தரும்.
- செவ்வாய் தோஷம் வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- வீட்டிலேயே சிகப்பு மலர்கள் மற்றும் மந்திரங்களுடன் வழிபாடு செய்யலாம்.
- சரியான பரிகாரங்கள் மூலம் செவ்வாய் தோஷத்தை குறைக்க முடியும்.
What the video covers
- கும்ப ராசிக்காரர்கள் குழந்தை பருவத்தில் பல கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
- பெண்கள் ஆளுமை மற்றும் அடக்கத்துடன் இருப்பார்கள், ஆண்களுக்கு சைக்கிக் மனசு இருக்கும்.
- கும்ப ராசிக்காரர்கள் திருமணத்திற்கு முன் மற்றும் பிறகு மன அழுத்தம் மற்றும் குழப்பங்களை அனுபவிக்கலாம்.
- சென்னி ஆண்டவர் முருகனை வழிபாடு செய்வது வீக்னஸ்ஸை நீக்கி வாழ்க்கையை முன்னேற்றும்.
- செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் முருகனை வழிபாடு செய்வது சிறந்தது.
- கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிகப்பு மலர்கள் மற்றும் மந்திரங்களுடன் வழிபாடு செய்யலாம்.
- செவ்வாய் தோஷம் வாழ்க்கைத் துணை மற்றும் வீட்டுத் தடை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் மற்றும் வழிபாடு மூலம் பிரச்சனைகள் குறைக்கப்படலாம்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தாமதமான திருமணம் மற்றும் மன அழுத்தம் அனுபவிக்கலாம்.
- செவ்வாய் தோஷம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
Childhoodல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டவங்களா இருப்பாங்க.
Speaker A
மேக்ஸிமம் கும்ப ராசியில இருக்க பெண்கள் வந்து ஆளுமையாவும் இருப்பாங்க அடங்கியும் இருப்பாங்க ஒரு ஏக்கம் அப்படிங்கறது அவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும்.
Speaker A
தனக்கு நடக்கலைன்னா யாருக்குமே நடக்கலைன்னு நினைச்சுக்குவாங்க.
Speaker A
இந்த கும்ப ராசியில இருக்கவங்க பார்த்தீங்கன்னா...
Speaker B
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம் தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம் அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Speaker A
வணக்கம் மேம்.
Speaker B
கும்ப ராசிக்காரர்கள் எந்த கோவில்ல போய் எந்த முருகனை வணங்கினா அவங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்?
Speaker A
கும்ப ராசிக்காரங்க வந்து இவங்களும் எப்படின்னா இவங்களுக்கும் வந்து கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்கு பின் அப்படிங்கிற வாழ்க்கை.
Speaker A
அதாவது சைல்ட்ஹுட்ல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டவங்களா இருப்பாங்க மேக்ஸிமம்.
Speaker A
அப்பாவை இழந்திருப்பாங்க இல்ல அம்மாவால ஏதாவது கஷ்டப்படுறது.
Speaker A
ஏதோ ஒரு கஷ்டத்தை பார்த்திருப்பாங்க அப்படி அவங்க கஷ்டத்தை பார்க்கலை நாங்க நல்லாதான் இருந்தோம் எங்க அம்மா அப்பா நல்லா பார்த்துக்கிட்டாங்க எல்லாமே நல்லா இருக்கு மேரேஜ் லைஃப் நல்லா இருக்காது.
Speaker A
அங்க போய் கஷ்டப்படுற மாதிரி இருக்கும் என்னங்கிறது புலம்பிட்டே இருக்கிற மாதிரி இருக்கும் இப்படி இந்த ரெண்டு வகையான கேட்டகிரில இவங்க இருப்பாங்க.
Speaker A
சோ இவங்க வந்து வீக் ஆயிடுவாங்க மனரீதியா ஏதோ ஒரு இடத்துல வீக் ஆகக்கூடிய அமைப்பு யார்கிட்டயாவது கட்டுப்பாடுல போகக்கூடிய அமைப்பு.
Speaker A
கும்ப ராசியில இருக்க பெண்கள் வந்து ஆளுமையாவும் இருப்பாங்க அடங்கியும் இருப்பாங்க ஒரு ஏக்கம் அப்படிங்கறது அவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும்.
Speaker A
ஒரு ஆண் கும்ப ராசியில இருக்காருன்னா அவருக்கு சைக்கிக் மைண்ட் இருந்துகிட்டே இருக்கும் என்னுடைய குடும்பம் இவங்க யார்ட்டையும் பேசக்கூடாது பழகக்கூடாது அந்த ப்ரொடக்ஷன்லயே இருந்து ஒரு ஸ்ட்ரிக்ட்டா இருக்கிற மாதிரி இருந்து இந்த மாதிரி.
Speaker A
இவங்களுக்கும் அந்த நிம்மதிங்கிறது இந்த கும்பத்துல வாழ்றவங்களுக்கு இருக்காது.
Speaker B
ஒரு குழப்பமாவே இருக்கும்.
Speaker A
குழப்பம் அதாவது இவங்களுக்கு வந்து இப்ப துலாம் ராசிக்காரங்களை எல்லாம் கல்யாணம் பண்ணிட்டாங்கன்னா நல்லா இருப்பாங்க.
Speaker A
ஓகே ஏன்னா நான் சொன்னேன்ல இங்க துலாம் கௌச்சிட்டே இருக்கும்னு அதுக்கு இவங்க வேலை பார்த்து வேலை பார்த்தே இவங்க சரி ஆயிடுவாங்க சோ அந்த அன்யோன்யம்ங்கிறது நல்லா இருக்கும் என்ன மாதிரியான லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றாங்க என்ன ராசியில சூஸ் பண்றாங்கங்கறதெல்லாம் இருக்கு.
Speaker A
இந்த கும்ப ராசியில இருக்கவங்க பார்த்தீங்கன்னா எட்டுக்குடி சென்னி ஆண்டவர்.
Speaker B
சென்னி ஆண்டவர்.
Speaker A
சென்னி ஆண்டவர் தான் இவங்களுக்கு வந்து அந்த வீக்னஸ்ஸ போக்கக்கூடியவர் கும்ப ராசிக்கு.
Speaker A
ஏன் அப்படின்னா அப்படியே ஸ்டாக்னட் ஆயிடுவாங்க எனக்கு ஒண்ணுமே வாழ்க்கையில நடக்காது அப்படிங்கிற மாதிரி உட்கார்ந்துருவாங்க.
Speaker A
தனக்கு நடக்கலைன்னா யாருக்குமே நடக்கலைன்னு நினைச்சுக்குவாங்க பூனை கண்ணை மூடிக்கிட்ட மாதிரிதான் இவங்க.
Speaker A
இவங்களை யாராவது புஷ் பண்ணிட்டே இருக்கணும் இதை பண்ணு அதை பண்ணு நீங்க ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரம் அட்வைஸ் கொடுங்க அவங்க ஆல்ரெடி ஒரு விஷயத்தை புடிச்சிட்டு இருந்திருப்பாங்க அதையே தான் புடிச்சிட்டு இருப்பாங்க அந்த முன்னேறி வர்றதுங்கிறது அவங்களுக்கு வந்து தடை அந்த வீக்னஸ் அந்த தடை கொடுத்துக்கிட்டே இருக்கும் சோ அதை உடைச்சு அவங்க வெளிய வரணும் அப்படின்னா சென்னி ஆண்டவரை வழிபாடு பண்ணனும்.
Speaker B
எல்லா முருகன் கோவில்லயும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாராலயும் முருகனை பார்க்கவே முடியல கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டர்ன் வந்துருந்தாங்க ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க?
Speaker A
என்ன செவ்வாய் காரகன் அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது அதனாலதான் வந்து வியாழன் அதனாலதான் இந்த ரெண்டு நாள்.
Speaker A
இப்போ அது எப்படி வழிபடலாம்னா இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க தங்கிடுங்க புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.
Speaker A
ஏன்னா வந்து புதன் புத்தி அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார் அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம் இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.
Speaker A
இதுதான் அந்த காம்பினேஷன் செவ்வாய் புதன் வியாழன் இந்த மூணும் இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு.
Speaker A
ஏன்னா வந்து புதன் அப்படிங்கிறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும் இந்த பச்சையையும் குறிக்கும் மயிலையும் குறிக்கும் சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ் புதன் அப்படிங்கிறது முருகர்கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு.
Speaker A
அதனால இந்த செவ்வாய் புதன் வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம் இந்த கூட்டத்துலதான் போய் கும்பிடணும் அப்படிங்கறது இல்லை முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம் ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களுடைய எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா அந்த கிழமைகள்ல அவங்களோட எனர்ஜி வந்து நம்மளோட எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கிறப்ப உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை போங்க.
Speaker B
இப்ப வந்து கோவிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க நீங்க சொல்ற மாதிரி செவ்வாய் புதன் வியாழன் என்னால கோவில்ல எல்லாம் போய் தங்க முடியாது நான் வந்து வீட்டிலேயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி?
Speaker A
தாராளமா அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும் வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல சிகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்ப முருகரை மனசா நினைச்சிட்டாலே போதும் வேல்மாறல் கேட்கிறதோ ஸ்கந்த சஷ்டி கவசம் கேட்கிறதோ இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்களை கேட்டாலே அந்த அந்த உபதேசங்களை கேட்டாலே போதும் முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார் நீங்க வந்து கோவிலுக்கு போகணும்னு இல்ல நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம் நீங்க.
Speaker A
முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.
Speaker B
சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்.
Speaker B
இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க சிகப்பு கலருக்கு சொந்தக்காரர் ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க சில பேர் ஜாதகக்காரர் கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம் தசா புத்தி எல்லாமே பார்த்தாலுமே செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள் சில விஷயங்கள் சொல்லுவாங்க அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும் சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.
Speaker A
அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கறதுதான் அதனுடைய கணக்கு இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு 12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு இப்படி எல்லாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.
Speaker A
இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா பார்ஷியலா செவ்வாய் தோஷம் எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா முழுசா செவ்வாய் தோஷம் சோ இந்த செவ்வாய் தோஷம் ஒரு லைஃப் பார்ட்னருக்கு மட்டும் தான் இஸ்யூ கொடுக்குமா அப்படின்னா உங்க வாழ்க்கையில யாரெல்லாம் பார்ட்னரா வராங்களோ ஏதோ ஒரு இஸ்யூ ஏதோ ஒரு மனசை உடைச்சிட்டு போகக்கூடிய விஷயங்கள் அவங்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் வருது அந்த மாதிரி வந்து இருக்கும்.
Speaker A
அதாவது இப்ப நாலுல செவ்வாய் இருக்கிறவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது சொந்த வீடு அமையாது அவங்களுக்கு தான் இந்த வீடு பிரச்சனை வருது லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க நல்லா இருக்கும் எங்கயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது இப்ப எட்டுல செவ்வாய் இருக்கிறவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிருவாங்க.
Speaker A
எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க ஏன்னா நிதானம் இருக்காது ஆக்ரோஷமா இருக்கிறது அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம் அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லி தான் ஆகணும்.
Speaker A
செவ்வாய்ங்கிறது நம்முடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்கு அப்படிங்கறது சொல்றதுதான் அது அதை சரி பண்ணிக்கணும்.
Speaker A
இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா என் அப்பாவை நான் பார்க்கணும் அப்படி அவங்க யோசிக்கணும் என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது ஹெல்த் பார்க்கிறது அதாவது அப்பாவுக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துகிறது இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது ரொம்ப பவர்ஃபுல்லா இருக்குது இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா அப்பாவோடது வீக் ஆயிட்டே போகுதுன்னா கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது ஹெல்த் வைஸ் பண்ணாது டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும் ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும் இல்லை இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது.
Speaker A
செவ்வாய் வாழ்க்கையில ஏன்னா ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும் செவ்வாய்க்கு ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம் புத்தி உடையது கேது தான் நிதானத்தை கொடுக்கும் அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும் அதுல நம்மளுக்கு அப்செட் கொடுக்கும் கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே நான்தான் அப்படிங்கிற ஒரு ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும் சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும் சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும் சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா காலபைரவரை வழிபாடு பண்ணனும்.
Speaker A
அஷ்டமி அமாவாசையில காலபைரவர் வழிபாடு பண்ணி காலபைரவருக்கு அஷ்டமில போய் விளக்கு போடணும் விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம் பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும் பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க அதாவது அஷ்டதிக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க அஷ்டதிக் பாலகர்களை தொட்டலாம் வழிபாடு பண்ணக்கூடாது அஷ்டதிக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும் உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க அது அஷ்டதிக் பாலகர்கள் தான் பார்த்துட்டே இருப்பாங்க.
Speaker A
எட்டு திசையிலிருந்து பார்க்கும் அவங்க சொர்ண ஆகாஷ்ன பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும் சொர்ண ஆகாஷ்ன பைரவர் வந்து எப்படின்னா அவருக்கு கீழ ஆறு சிவன் இருக்கும் சொர்ண ஆகாஷ்ன பைரவருக்கு கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும் அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் அப்வேர்ட் டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கிறதுதான் அது.
Speaker A
அதுதான் அந்த செவ்வாய் காரகனும் இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட் கர்மாவை இறக்கி வச்சிட்டு தான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும் அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும் இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.
Speaker B
நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம் பிராயச்சித்தம் பண்ணிட்டு தான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வர்றது வந்துட்டு பெண்களை தான் அதிகமா சொல்லுவாங்க இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம் இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிரும் இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீடுல நல்லா இருக்காது வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும் அந்த பொண்ணோட ஜாதகத்தில் இருக்கிற கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க அது உண்மைதானா மேம்?
Speaker A
அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும் ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும் அவங்களுக்கு.
Speaker A
அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம் அந்த மாதிரி விஷயங்கள் தான் ஆனா அவங்களால குடும்பம் கொலையப்போகுது சீர்கெடப்போகுது அந்த மாதிரிலாம் கிடையாது அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது ஏன்னா அவங்கலாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க அந்த செவ்வாய் ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல அவங்களால அது நடக்கல இது வந்து அவங்களுடைய கர்மா.
Speaker A
அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப இங்க இது கிளியர் ஆயிடும் ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.
Speaker A
28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.
Speaker A
அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு குருவை ஸ்ட்ராங் பண்ணனும் அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு குரு குருமார்களை மதிக்கிறது.
Speaker A
ஏன்னா செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படின்னா குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும் செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.
Speaker A
அப்போ அங்க குரு இருக்கிறப்ப செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.
Speaker A
சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது.
Speaker A
அப்படி இருக்கிறப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும் குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது குரு குருதான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது.
Speaker A
செவ்வாய் எதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம் குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங் அப்ப எதுவும் நடக்காது.
Speaker B
சோ செவ்வாய் தோஷம்னா என்ன அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும் பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதையும் செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம் அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கறதையும் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க தொடர்ந்து பேசுவோம் நன்றி.
Topics:கும்ப ராசிமுருகன் வழிபாடுராஜயோகம்செவ்வாய் தோஷம்ஆன்மீகம்ஜோதிடம்பரிகாரம்முருகன் கோவில்திருமணம்வீட்டு வழிபாடு











