Skip to content
Get App

நோன்பு நோற்பதினால் ஏற்படும் நன்மைகள்

ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பதன் முக்கிய நன்மைகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆன்மிக பலன்கள் பற்றி விரிவாக விளக்கம்.

Key Takeaways

  • ரமலான் மாதம் நோன்பு வைப்பது ஆன்மிக வளர்ச்சிக்கும் பாவமோடுதலைக்கும் முக்கியமானது.
  • நோன்பு வைப்பவர்கள் அல்லாஹ்விடமிருந்து சிறப்பு நன்மைகள் பெறுகின்றனர்.
  • நோன்பு நரகத்திலிருந்து பாதுகாப்பையும் சொர்க்க நன்மைகளையும் தருகிறது.
  • ரமலான் மாதத்தில் செய்யப்படும் நன்மைகள் சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில் பத்து மடங்கு அதிகம் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
  • இந்த மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்ததற்கான நன்மைகளை தரும்.

What the video covers

  • ரமலான் மாதம் வந்தவுடன் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன, மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
  • நோன்பு வைப்பதன் மூலம் இறையச்சம் அதிகரிக்கிறது மற்றும் அனைத்து செயல்களும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்படுகின்றன.
  • நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசம் கஸ்தூரியின் நறுமணத்தைவிட மேன்மையானது அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது.
  • ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பவர்கள் முன்னாடி செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன மற்றும் அதிக தவ்பா செய்யும் வாய்ப்பு உள்ளது.
  • நோன்பாளிகள் இஃப்தார் நேரத்தில் மற்றும் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
  • ரமலான் மாதத்தில் உம்ரா செய்தால் ஹஜ் செய்ததற்கான நன்மைகள் கிடைக்கும்.
  • ரையான் என்ற சொர்க்கம் நோன்பாளிகளுக்காகவே தனியாக படைக்கப்பட்டுள்ளது.
  • நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது.
  • ரமலான் மாதத்தில் பல ஆன்மிக நன்மைகள் மற்றும் சிறப்புகள் உள்ளன.
  • இந்த நன்மைகள் மூலம் ரமலான் மாதத்தை பயனுள்ள மாதமாக மாற்றலாம்.

Answers

Questions about this video

ரமலான் மாதத்தில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுவதன் அர்த்தம் என்ன?

ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுவது என்பது சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழிகள் இந்த மாதத்தில் அதிகமாக உள்ளன என்பதைக் குறிக்கிறது.

நோன்பு நோற்பதினால் இறையச்சம் எவ்வாறு அதிகரிக்கிறது?

சாதாரண நாட்களில் நாம் செய்யும் தொழுகை, ஓதுதல், நஃபிலான நோன்பு போன்ற செயல்கள் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களுக்காக இருக்கலாம். ஆனால் ரமலான் மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு அமலும் அல்லாஹ்வை முன்னோக்கி, அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்படுவதால், நம்முடைய இறையச்சம் அதிகரிக்கிறது.

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாசனைக்கு என்ன சிறப்பு?

நோன்பாளி நோன்பு நோற்கும்போது காலையிலிருந்து எந்த உணவையும் உட்கொள்ளாததால், அவர்களின் வாயில் ஒரு வாசனை ஏற்படும். இந்த வாசனை மறுமையில் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் நறுமணத்தை விட அதிகமான வாசனையைத் தரும் என்று கூறப்படுகிறது.

Full Transcript — Download SRT & Markdown

00:14
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வெல்கம் பேக் டு மை சேனல் மை ஜர்னி ஆஃப் இஸ்லாம்.
00:22
Speaker A
இன்ஷா அல்லாஹ் இந்த வீடியோல நம்ம நோன்பு வைக்கிறதன் மூலமா நம்ம எவ்வளவு நன்மைகளை அடையறோம் அதோட நோன்பினுடைய சிறப்பு இந்த விஷயங்கள் பத்தி தான் பார்க்க போறோம்.
00:35
Speaker A
சோ அதுல இருந்து முக்கியமான எட்டு விஷயங்கள் தான் நான் சொல்ல போறேன் முதல் விஷயம் என்னன்னா முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க சொல்லி இருக்காங்க.
00:48
Speaker A
ரமலான் மாதம் வந்துட்டாலே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுது நரகத்தின் கதவுகள் மூடப்படுது ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன அப்படின்னு சொல்லி.
00:59
Speaker A
சொர்க்கத்தின் கதவு திறக்கப்படுதுன்னா நம்ம சொர்க்கத்துக்கு செல்றதுக்கான வழிவகைகள் இந்த மாசத்துல தான் அதிகமா இருக்கு அப்படின்றதும்.
01:10
Speaker A
ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன அப்படின்னா ஷைத்தான்களின் செயல்களை ஈஸியா முறியடிக்கக்கூடிய மாசமா இந்த ரமலான் மாதம் இருக்கு அப்படின்றது அதனுடைய அர்த்தம்.
01:22
Speaker A
இரண்டாவது விஷயம் என்ன அப்படின்னு பார்த்தோம்னா நம்ம நோன்பு வைக்கிறதன் மூலமா நம்மளுடைய இறையச்சம் வந்து அதிகரிக்குது.
01:32
Speaker A
அது எப்படின்னு பார்த்தீங்கன்னா நம்ம சாதாரண நாட்கள்ல தொழக்கூடியதா இருக்கட்டும் ஓதக்கூடியதா இருக்கட்டும் இல்ல நஃபிலான நோன்பு வைக்கிறதா இருக்கட்டும்.
01:47
Speaker A
நம்ம அல்லாஹ்வை முன்னோக்கி செஞ்சாலும் அது வந்து நம்மளுடைய பர்சனலான விஷயங்களுக்காக நம்ம செய்யக்கூடியதா இருக்கும்.
02:00
Speaker A
ஆனா இந்த ரமலான் மாதத்துல நம்ம செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு அமலும் அல்லாஹ்வை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக மட்டுமே நம்ம செய்யக்கூடியதா இருக்கும்.
02:13
Speaker A
சோ அதன் மூலமா நம்மளுடைய இறையச்சம் அதிகரிக்குது.
02:19
Speaker A
மூணாவது விஷயம் என்ன அப்படின்னு நம்ம பார்த்தோம்னா.
02:26
Speaker A
ஒரு நோன்பாளி நோன்பு வச்சிருக்கப்ப அவங்க காலையில இருந்து எந்த ஒரு உணவையுமே சாப்பிடாம இருப்பாங்க.
02:38
Speaker A
அப்படி இருக்கப்ப அவங்க வாயில இருந்து ஒரு ஸ்மெல் ஏற்படும்.
02:44
Speaker A
அது எல்லாருக்குமே பொதுவான ஒரு விஷயம் தான்.
02:49
Speaker A
சோ அப்படி இங்க ஏற்படக்கூடிய அந்த ஸ்மெல் நாளைக்கு அல்லாஹ்விடத்துல கஸ்தூரியின் நறுமணத்தை விட அதிகமான ஒரு வாசம் தரக்கூடியதா இருக்குமா.
03:04
Speaker A
ஒவ்வொரு நோன்பாளிக்கும் அல்லாஹ் இந்த சிறப்பான விஷயத்தை கொடுக்கிறான்.
03:11
Speaker A
அது மட்டும் கிடையாது நம்ம சாதாரண நாட்கள்ல செய்யக்கூடிய ஒரு நல்ல செயலா இருக்கட்டும் இல்ல ஒரு நல்ல அமலா இருக்கட்டும்.
03:24
Speaker A
அதை நம்ம ரமலான் மாதத்துல செய்யறப்ப அது மாதிரி பத்து மடங்கு நன்மையை அல்லாஹ் வந்து தரான்.
03:32
Speaker A
சுபஹானல்லாஹ்.
03:33
Speaker A
அதுக்கப்புறம் நாலாவது விஷயம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா யார் ஒருத்தவங்க நன்மையை எதிர்பார்த்து.
03:43
Speaker A
இந்த ரமலான் மாதத்துல நோன்பு வைக்கிறாங்களோ அவங்க முன்னாடி செஞ்ச சின்ன பாவங்கள் எல்லாத்தையுமே அல்லாஹ் மன்னிச்சறான்.
03:52
Speaker A
அது மட்டும் இல்ல நம்ம செஞ்ச பாவத்தை நினைச்சு நம்ம வருந்தி இந்த ரமலான் மாதத்துல அல்லாஹ் கிட்ட அதிகமா தவ்பா செய்யறப்ப.
04:02
Speaker A
அல்லாஹ் நம்மளுடைய பாவங்களை மன்னிக்கக்கூடிய மாசமா இந்த ரமலான் மாதம் இருக்கு.
04:10
Speaker A
அடுத்து அஞ்சாவது விஷயம் என்னன்னா ஒரு நோன்பாளி இரண்டு விஷயங்களுக்காக அதிகமா சந்தோஷப்படக்கூடியவங்களா இருப்பாங்க.
04:20
Speaker A
ஒன்னு வந்து அவங்க நோன்பு வச்சிட்டு இஃப்தார் டைம்ல அவங்க நோன்பு திறக்கிறப்ப ஏற்படக்கூடிய அந்த சந்தோஷம்.
04:30
Speaker A
இன்னொன்னு வந்து அவங்க நோன்பு வச்சதன் மூலமா அடைஞ்ச அந்த நன்மையை எடுத்துட்டு நாளைக்கு மறுமையில அல்லாஹ்வை சந்திக்கிறப்ப அவங்க அவங்களுக்கு ஏற்படக்கூடிய அந்த மகிழ்ச்சி.
04:44
Speaker A
சோ இந்த இரண்டு வகையான மகிழ்ச்சி ஒரு நோன்பாளியை தவிர யாருமே வந்து அடைய முடியாது.
04:51
Speaker A
அடுத்து ஆறாவது விஷயம் என்ன அப்படின்னா.
04:56
Speaker A
உம்ரா ஹஜ் அப்படின்னு சொல்லி இரண்டு இருக்கு.
05:03
Speaker A
அதுல உம்ராவை விட நம்ம ஹஜ் செய்றது தான் வந்து ரொம்ப சிறப்பானது.
05:11
Speaker A
அதிக நன்மையும் கூட.
05:14
Speaker A
ஆனா இந்த ரமலான் மாதத்துல நம்ம உம்ரா செஞ்சாலே அல்லாஹ் வந்து ஹஜ் செஞ்சதுக்கான அந்த நன்மையை கொடுக்கிறான்.
05:24
Speaker A
சுபஹானல்லாஹ்.
05:25
Speaker A
அடுத்தது ஏழாவது விஷயம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா.
05:32
Speaker A
அல்லாஹ் சொர்க்கத்துல ஏழு வகையான சொர்க்கங்களை படைச்சிருக்கான்.
05:40
Speaker A
அதுல வந்து ரையான் அப்படின்னு சொல்லக்கூடிய சொர்க்கம் நோன்பாளிகளுக்குனே படைக்கப்பட்டதாம்.
05:50
Speaker A
நோன்பாளியை தவிர அந்த சொர்க்கத்துக்குள்ள யாருமே நுழைய முடியாதாம்.
05:56
Speaker A
சோ அப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஒரு சொர்க்கத்தை நம்ம மறுமையை அடையறதுக்கு முன்னாடியே அல்லாஹ் நம்மளுக்கு தயாரா வச்சிருக்கான்.
06:05
Speaker A
அடுத்தது எட்டாவது விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா.
06:11
Speaker A
நம்ம நோன்பு வைக்கிறதன் மூலமா நம்ம இறையச்சத்தை அடையறோம்.
06:18
Speaker A
அந்த இறையச்சம் பார்த்தீங்கன்னா நம்ம நம்மளை வந்து நாளைக்கு மறுமையில.
06:28
Speaker A
நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு கேடயமா செயல்படுமா.
06:37
Speaker A
அதாவது சிம்பிளா சொல்லணும்னா நம்ம நம்ம வைக்கக்கூடிய நோன்பு நம்மள நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு கேடயமா இருக்குமா.
06:46
Speaker A
நாளைக்கு மறுமையில.
06:47
Speaker A
சோ இந்த எட்டு விஷயங்கள் மட்டும் இல்ல ரமலான் மாதத்துல இன்னும் எவ்வளவோ நன்மைகளையும்.
06:58
Speaker A
எவ்வளவோ சிறப்பையும் வந்து அல்லாஹ் வச்சிருக்கான்.
07:03
Speaker A
சோ நான் சொல்ல நான் சொன்ன ஒவ்வொரு விஷயங்களா இருக்கட்டும் இல்ல இன்னும் இருக்கக்கூடிய எல்லா நன்மைகளையும் நாம் அடைந்து இந்த ரமலான் மாதத்தை.
07:16
Speaker A
பயனுள்ளதா நம்ம ஆக்கி எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மீது கிருபை புரிவானாக.
07:24
Speaker A
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
07:28
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
Topics:நோன்புரமலான்இறையச்சம்நன்மைகள்இஸ்லாம்உம்ராஹஜ்சொர்க்கம்பாவமோடுதல்தவ்பா

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries and speaker detection. 30 minutes free.

Or transcribe another YouTube video here →