Simmam 👉 குறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..! | Astrologe… — Transcript

சிம்ம ராசி பெண்களின் வாழ்க்கை, திருமணம், தொழில் மற்றும் உடல் நலம் பற்றிய ஜோதிட ஆலோசனைகள்.

Key Takeaways

  • சிம்ம ராசி பெண்கள் தங்கள் குறைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதால் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • திருமணம் தாமதமாக நடக்கலாம், ஆனால் அதை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • உடல் நலம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் தேவை.
  • சிம்ம ராசி பெண்களுக்கு ரிஷபம் மற்றும் கும்பம் ராசி ஆண்களுடன் திருமணம் சிறந்தது.
  • வீண் செலவுகள் மற்றும் ஆடம்பரம் தொழிலில் தடையாக இருக்கும்.

Summary

  • சிம்ம ராசி பெண்கள் பிறந்த குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.
  • சிம்ம ராசி பெண்களுக்கு பல நல்ல லைஃப் பார்ட்னர்கள் வர வாய்ப்பு உள்ளது.
  • திருமணம் தாமதமாக நடக்கக்கூடும், ஆனால் அதை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • சிம்ம ராசி பெண்கள் குறைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • உடல் பருமன் மற்றும் யூட்ரஸ் தொடர்பான சுகாதார கவனங்கள் அவசியம்.
  • சிம்ம ராசி பெண்கள் ரிஷபம் மற்றும் கும்பம் ராசி ஆண்களுடன் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
  • மேஷம் மற்றும் மகர ராசி ஆண்களுடன் திருமணம் சிக்கல்களை உருவாக்கும்.
  • சிம்ம ராசி பெண்கள் தொழிலில் வீண் ஆடம்பரம் மற்றும் அதிக செலவுகளை தவிர்க்க வேண்டும்.
  • சுக்ரன் மற்றும் சூரியன் அனுகிரகங்கள் காரணமாக செழிப்பு மற்றும் வளர்ச்சி ஏற்படும்.
  • பெண்கள் வாழ்க்கையில் பொறுப்பான மற்றும் ஆதரவான துணைவிகள் தேவை.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker 1
ஒரு சிம்ம ராசியில ஒரு பெண் பிறந்துட்டாங்க அப்படின்னாலே அந்த குடும்பமே சுபிட்சம் அப்படின்னுதான் நம்ம சொல்லணும்.
00:09
Speaker 1
லைஃப் பார்ட்னர்ஸ் அதாவது வரன்கள் அதிகமா வரக்கூடியது சிம்ம ராசி பெண்களுக்குதான் நிறைய அதிக வரன்களே வரும். அந்த வரனை வந்து வேண்டாம்னு சொல்லி ரெஸ்ட்ரிக்ட் பண்றதும் சிம்ம ராசி பெண்களாதான் இருப்பாங்க. சோ அது பண்ணக்கூடாது.
00:24
Speaker 1
சித்தர்களுடைய ஒரு கனெக்டிவிட்டியோ இல்ல இவங்களே சித்தரா இருக்கக்கூடிய ஒரு அமைப்போ அதனால இந்த வாழ்க்கையில ஏதோ ஒரு தவறு செஞ்சோ அதை சரி பண்றதுக்கு வந்த அமைப்புதான் சிம்ம ராசி பெண்களா இருப்பாங்க.
00:33
Speaker 1
இப்ப சிம்ம ராசி பெண்களுக்கு என்ன மாதிரியான தொழில் அமையும் அப்படின்னா என்ன மாதிரி செய்யக்கூடாதுன்னு ஃபர்ஸ்ட் சொல்லிடுறேன்.
00:55
Speaker 1
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள். இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா
00:59
Speaker 1
ஸ்பெஷலா பெண்களுக்காகவே 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.
01:04
Speaker 1
இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.
01:10
Speaker 1
இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிஃபிக்கா இங்க சொல்ல முடியாது. அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும் அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
02:07
Speaker 1
சிம்ம ராசி பெண்கள். ஒரு சிம்ம ராசியில ஒரு பெண் பிறந்துட்டாங்க அப்படின்னாலே அந்த குடும்பமே சுபிட்சம் அப்படின்னுதான் நம்ம சொல்லணும்.
02:13
Speaker 1
ஏன்னா அது வந்து சூரியன் அதோட குருவுடைய அனுகிரகமும் அதிகமாவே உண்டு.
02:20
Speaker 1
அப்போ அந்த ஒரு சிம்ம ராசியில ஒரு பெண் பிறந்துட்டாங்க அப்படின்னா அந்த குடும்பம் அப்படியே டெவலப்மென்ட் ஆக ஆரம்பிச்சிருவாங்க. லட்சுமி கடாட்சம் அப்படிங்கறது நிறைஞ்சிருக்கும் சிம்ம ராசி பெண்களுக்கு.
02:27
Speaker 1
என்ன சிம்ம ராசி பெண்களுடைய டிராபேக் அப்படின்னா குறைகள் அப்படின்னு சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க.
02:35
Speaker 1
அந்த குறைகள் எல்லாம் எங்க சொல்லுவாங்க அப்படின்னா கொஞ்சம் உட உடம்பை பார்த்துக்கோ ஏன்னா அவங்களுக்கு குரு அனுகிரகம் குருவோட அனுகிரகம் அதிகமா இருக்கிறதுனால உடல் பருமன் அப்படிங்கறது ஏதோ ஒரு வகையில வந்துரும். அது மட்டும் வராம பார்த்துக்கணும்.
03:26
Speaker 1
அதாவது அளவுக்கு அதிகமான உடன் உடல் பருமன் ஆகக்கூடிய அமைப்பு பெரும்பாலான சிம்ம ராசி பெண்களுக்கு அமைஞ்சிரும்.
03:33
Speaker 1
அப்படி அந்த உடல் பருமன் வருது அப்படின்னாலே குழந்தை பிறப்பிலேயும் ஏதோ ஒரு வகையில ஒரு டிஸ்டர்பன்ஸ் அப்படிங்கறது வந்து உங்களுக்கு வர ஆரம்பிச்சிரும்.
03:41
Speaker 1
அப்போ உங்களுடைய உணவு உங்களுடைய லைஃப் ஸ்டைல்னாலதான் உங்களுடைய யூட்ரஸ் பாதிக்கப்படுது அப்படிங்கற விஷயத்தை புரிஞ்சுக்கணும். யூட்ரஸ் இயற்கையா பாதிக்கப்படல உங்களுடைய லைஃப் ஸ்டைல்னால ஏதோ ஒரு வகையில அது பாதிப்படையறது அப்படிங்கறது ஒன்னு உண்டு.
03:54
Speaker 1
அதே மாதிரி சிம்ம ராசி பெண்கள் வந்து உங்களுக்கு லவ் மேரேஜ்ங்கறது செட் ஆகும் ஆனா அவ்வளவு சீக்கிரம் லவ் பண்ண மாட்டாங்க சிம்ம ராசி பெண்கள்.
04:00
Speaker 1
ரொம்ப ரொம்ப சூசி அதாவது லைஃப்ல நிறைய பேரை கடந்து வந்தாலும்
04:05
Speaker 1
சூஸ் பண்றது அப்படிங்கறது ரொம்ப கவனமா சூஸ் பண்றதா இருப்பாங்க. பெரும்பாலான சிம்ம ராசி பெண்களுக்கு ரொம்ப தாமதமாவே திருமணம் நடக்கக்கூடிய ஒரு அமைப்பும் இருக்கு.
04:14
Speaker 1
ஏன்னா வேலிடேஷன் பண்ணிட்டே இருப்பாங்க. எனக்கு இப்படித்தான் இருக்கணும் ஹஸ்பண்ட் எனக்கு இப்படி பயங்கர கண்டிஷன்ஸ் போடுவாங்க சிம்ம ராசி பெண்கள்.
05:03
Speaker 1
சிம்ம ராசி பெண்களுக்கு எல்லாம் நான் சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா திருமணத்தை ரொம்ப தாமதிக்க வேண்டாம் அப்படிங்கறதுதான் ஏன்னா அவங்களுக்கு குரு அனுகிரகம் எப்பவுமே இருக்கு.
05:12
Speaker 1
அந்த திருமணத்துக்கான அமைப்பு அடிக்கடி வரக்கூடிய அமைப்பு சிம்ம ராசி பெண்களுக்குதான் உண்டு ஆனா அதை யூஸ் பண்ணாங்களா அப்படிங்கற விஷயம் தான் வந்து இதுல கேள்விக்குறியே.
05:20
Speaker 1
நல்ல நல்ல லைஃப் பார்ட்னர்ஸ் அதாவது வரன்கள் அதிகமா வரக்கூடியது சிம்ம ராசி பெண்களுக்குதான் நிறைய அதிக வரன்களே வரும். அந்த வரனை வந்து வேண்டாம்னு சொல்லி ரெஸ்ட்ரிக்ட் பண்றதும் சிம்ம ராசி பெண்களாதான் இருப்பாங்க. சோ அது பண்ணக்கூடாது.
05:34
Speaker 1
அதாவது குருவை ரொம்பவும் அலட்சியப்படுத்தக்கூடாது. உங்களுக்கு திருமணம் அமையுது அப்படின்னா அதை ஏத்துக்கணும்.
05:40
Speaker 1
ஏன்னா சிம்ம ராசி பெண்களை யாரு திருமணம் பண்ணாலும் சரி அந்த சிம்ம ராசி பெண்கள் தான் ஆளுமையா இருக்க போறீங்க. அதனால அந்த பயமே உங்களுக்கு வேண்டாம். நான் போய் கஷ்டப்பட போறேனா அப்படின்னா யாரு திருமணம் பண்ணக்கூடாது அப்படின்னா
05:55
Speaker 1
நீங்க நெருப்பு ராசியே ஆனாலும் மேஷமும் தனுசும் வேண்டாம். ஆனா மேஷமும் தனுசு கிட்ட தான் உங்களுக்கு அட்ராக்ஷனே இருக்கும். எல்லாம் சொல்லுவாங்க. அதே நெருப்பு ராசி நீர் ராசி அவங்களே திருமணம் பண்ணிக்கிட்டா நல்லாதானே இருக்கும் அப்படின்னா இந்த நெருப்பிலேயே வேறுபாடுகள் அப்படிங்கறது உண்டு.
06:45
Speaker 1
அதே நெருப்பு ராசி நீர் ராசி அவங்களே திருமணம் பண்ணிக்கிட்டா நல்லாதானே இருக்கும் அப்படின்னா இந்த நெருப்பிலேயே வேறுபாடுகள் அப்படிங்கறது உண்டு.
06:50
Speaker 1
அதாவது மேஷ ராசியோட நெருப்பு தன்மைங்கறது வேற. சிம்ம ராசியோட நெருப்பு தன்மைங்கறது வேற.
07:00
Speaker 1
தனுசு ராசியோட நெருப்பு தன்மைங்கறது வேற. இப்ப மேஷ ராசி எல்லாம் வந்து குப்புன்னு எரியக்கூடியது. இப்போ சிம்ம ராசி அப்படின்னு பார்க்கிறப்போ நீங்க எல்லாம் வந்து வெளிச்சம் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்புல இருக்கக்கூடியவங்க. தனுசு ராசி ஆண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ திரி மாதிரி.
07:14
Speaker 1
திரியை தூண்டி விட்டா மட்டுமே அந்த திரி எவ்வளவு எரியுமோ அவ்வளவுதான் எரியும். அந்த மாதிரி ஒரு அமைப்புல இருக்கப்போ இதோடைய அந்த டிகிரி லெவல் அப்படிங்கறது எல்லாம் மாறும். அப்போ நீங்க மேஷ ராசிக்காரங்களை திருமணம் பண்ணிட்டீங்க ஒரு மேஷ ராசி ஆணை திருமணம் பண்ணிட்டீங்க அப்படின்னா சிம்ம ராசிக்கு அடங்கவே மாட்டாங்க.
07:25
Speaker 1
பிரச்சனைகள் சண்டைகள் வாக்குவாதங்கள் அப்படிங்கறது வந்துகிட்டே இருக்கும். அப்ப சிம்ம ராசி மகர ராசிக்காரங்களையும் திருமணம் செய்யக்கூடாது.
07:35
Speaker 1
ஏன்னா அது வந்து டார்க் சைடு அதாவது சனி குறைகளை மட்டுமே பார்க்கக்கூடியவங்க. சிம்ம ராசி பெண்களால அவ்வளவு சீக்கிரம் வந்து அந்த டார்க் சைடு அப்படிங்கறத வந்து பார்த்து ஏத்துக்க முடியாத ஒரு அமைப்பு அவங்களுக்கு.
08:25
Speaker 1
அப்போ உங்களுக்கு எல்லாம் ரிஷப ராசிக்காரங்க செட் ஆவாங்க. இந்த ரிஷப ராசி வந்து அழகா ஆராதிக்கக்கூடியவங்க அவங்க சுக்ரன் இந்த சுக்ரன் வந்து இந்த சிம்மத்து கிட்ட வரப்ப செழிப்பாவே அது மாறும்.
08:36
Speaker 1
அதாவது ஒரு லைஃப் ஸ்டைலே ஒரு திருமணம் பண்றாங்க. ஒரு நார்மலா அந்த வாழ்க்கையை ஆரம்பிச்சா கூட போகப்போக அது செழிப்பா மாறக்கூடிய ஒரு அமைப்பு.
08:50
Speaker 1
இந்த இந்த சுக்ரனும் இங்க சிம்மமும் சேர்றப்ப இயற்கையாவே அந்த செழிப்புங்கறது வந்துரும். ஏன்னா சுக்ரனுக்கு தங்கம் தேவைப்படுது.
09:04
Speaker 1
அப்படிங்கறப்போ இங்க சிம்மத்துக்கு சுக்ரன் அந்த வெள்ளி அந்த வைரம் தேவைப்படுது அப்படிங்கறப்போ இது ரெண்டும் சேர்றப்போ செழிப்பாவே மாறும். அது ஒரு பெரிய குரோத் அது ஒரு லக்காவே மாறும். அதாவது ரிஷபம் ஆண்கள் இருக்கிறாங்க அப்படின்னா சிம்மம் பெண்களை நல்லா பார்த்துப்பாங்க. ஏதோ ஒரு வகையில இந்த சிம்ம பெண்களுக்கு எப்படி இருக்கும்னா சிம்ம ராசி பெண்கள் ஒரு தாய் மாதிரி இருந்து எல்லாத்தையும் வழிநடத்தி எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணி ரொம்ப பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கக்கூடியவங்க.
10:14
Speaker 1
இந்த ரிஷப ராசி ஆண்கள் எப்படின்னா கொஞ்சம் அலட்சியப்பூ கூட இருக்கக்கூடியவங்க அவங்களுக்கு தாய் மாதிரி ஒரு ஒரு துணைவி மனைவிதான் அவங்களுக்கு தேவைப்படுறாங்க. அப்படி இருக்கப்போ இந்த சிம்ம ராசி பெண்கள் ரிஷபத்துக்கு ரொம்ப நல்லாவே செட் ஆவாங்க.
10:29
Speaker 1
கன்னி ராசி மேல சிம்ம ராசி பெண்களுக்கு ஒரு அட்ராக்ஷன் அப்படிங்கறது இருக்கும். ஆனா அது லைஃப் லாங் ஜர்னியா இருக்குமா அப்படின்னு பார்த்தா இருக்காது. சிம்ம ராசி பெண்கள் கன்னி ராசி மேல ஒரு ஈர்ப்பு அப்படிங்கறது எல்லாம் வந்து ஒரு விரும்புறாங்கன்னு வச்சுக்கோங்களேன் அது பாதியிலேயே போகக்கூடிய ஒரு அமைப்பு.
10:43
Speaker 1
ஏன்னா கன்னி ராசியில இருக்கக்கூடிய ஆண்கள் அவ்வளவு சீக்கிரம் பொறுப்புங்கறதை ஏத்துக்கறதுக்கு கொஞ்சம் தயங்குவாங்க. சிம்ம ராசி பெண்களுக்கு பொறுப்பான ஆட்கள் தான் தேவை. இப்ப ரிஷப ராசியிலிருந்து வராங்கன்னா பொறுப்பா மாறிக்கக்கூடிய தன்மை அவங்களுக்கு உண்டு. அதனால அவங்க மாறிக்குவாங்க. கும்ப ராசி ஆண்களுமே வந்து உங்களுக்கு செட் ஆவாங்க. ஏன் அப்படின்னா இவங்களுக்கும் வந்து யாராவது ஒருத்தங்க கைட் பண்ணா நல்லா இருக்கும். கொஞ்சம் தூக்கி விட்டா நல்லா இருக்கும். கும்பத்தோட சிம்பலே என்ன? அது வந்து உயிரற்ற ஒரு அந்த ஒரு கும்பம்ங்கறது ஒரு பானை மாதிரி. அந்த கலசம் அது.
11:47
Speaker 1
அந்த கலசத்தை தூக்கி வச்சா தான் உச்சாணி கோபுரத்துல யார் தூக்கி வைக்கிறாங்கன்னு ஒன்னு இருக்கு இல்லையா சிம்ம ராசி பெண்களால அப்படி தூக்கி வைக்க முடியும். அப்ப நாங்க என்ன சேவை பண்ணிட்டே இருக்கணுமா அப்படிங்கறது கிடையாது. ஒரு ஆணுக்கு பின்னாடி ஒரு பெண்ணுடைய ஒரு பெண்ணால தான் வெற்றி அடையறாங்க அப்படிங்கறது எல்லாம் ஒன்னு இருக்கு இல்லையா கும்பம் அப்படி சிம்ம ராசி பெண்களை திருமணம் பண்ணிக்கிறாங்க அவங்களும் சனிதான். இருந்தாலும் இங்க கும்பம் விதிவிலக்கு. அப்படி கும்பத்துல இருக்கவங்களும் நீங்க திருமணம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா ஒரு குரோத் லைஃப் குரோத் அப்படிங்கறது கொஞ்சம் நல்லா இருக்கும். அண்டர்ஸ்டாண்டிங் அப்படிங்கறது கொஞ்சம் சரியா வரும்.
12:09
Speaker 1
இப்ப சிம்ம ராசி பெண்களுக்கு என்ன மாதிரியான தொழில் அமையும் அப்படின்னா என்ன மாதிரி செய்யக்கூடாதுன்னு ஃபர்ஸ்ட் சொல்லிடுறேன். வீண் ஆடம்பரம் அதீத அகலக்கால் வைக்கிறது இந்த மாதிரி எந்த துறையிலும் போயிறக்கூடாது.
12:20
Speaker 1
அதிகமா பணத்தை இன்வெஸ்ட் பண்ணிடுறது அந்த மாதிரி போகக்கூடாது. ஏன்னா அவங்களுக்கு தெய்வ அனுகிரகம் இருக்கு.
12:27
Speaker 1
எல்லாமே கரெக்டாதான் அமையும். நீங்க வந்து ஒரு ஹோட்டல் பிசினஸ் அதாவது வழிநடத்தக்கூடிய அட்மினிஸ்ட்ரேஷன் பண்ணக்கூடிய அந்த பாஸ் ஓவர் பண்ணக்கூடிய உங்களுக்கு கீழ எல்லாருமே வேலை பார்க்க முடியும். இப்ப நீங்க வந்து ஒரு சைக்காட்ரிஸ்ட்டா போலாம். ஒரு சைக்காலஜிங்கற ஒரு சப்ஜெக்ட்டை சூஸ் பண்றீங்க ஸ்டூடென்ட்டா இருக்கீங்க. நீங்க ஒரு சைக்காட்ரிஸ்ட்டா போலாம். நீங்க ஒரு நல்ல டாக்டரா இருக்க முடியும். நீங்க ஒரு நல்ல ஒரு ஆஸ்ட்ராலஜரா இருக்க முடியும். நீங்க சொல்றதை மத்தவங்க கேட்பாங்க. அந்த மாதிரி ஆளுமை என்னெல்லாம் ஆளுமையான சிம்ம ராசி பெண்களால யாருக்கும் கீழேயும் வேலை பார்க்க முடியாது.
13:34
Speaker 1
அப்படி யாருக்கு கீழையாவது நீங்க வேலை பார்த்துட்டு இருக்கீங்கன்னா மன உளைச்சலே மிஞ்சும். நீங்க செய்யக்கூடிய இடத்துல டிசைடிங் இப்ப ஒரு இடத்துல வேலை பார்க்கிறீங்க டெசிஷன் எடுக்கக்கூடிய ஒரு இடத்துல நீங்க இருக்கீங்க.
13:49
Speaker 1
பிசினஸ் பேசக்கூடிய ஒரு இடத்துல இருக்கீங்கன்னா அது உங்களுக்கு உகந்தது நல்லபடியா நீங்க சம்பாதிக்க முடியும். அந்த இடத்துல ஒரு தனித்துவத்தையே உங்களால உருவாக்க முடியும். இந்த எம்பிஏ படிக்கிறது இந்த எம்பிஏ ரிலேட்டடா அட்மினிஸ்ட்ரேஷன் படிக்கிறது பிசினஸ் மேனேஜ்மென்ட் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே வந்து உங்களுக்கு நல்லபடியா வரும்.
14:01
Speaker 1
திடீர்னு புதுசா ஒன்னு படிக்கிறீங்க ஒன்னு கத்துக்குறீங்க அப்படின்னாலும் உங்களுக்கு நல்லபடியா வரும். சிம்ம ராசி பெண்கள் அதிகமா படிச்சிட்டே இருப்பாங்க. நிறைய படிப்பாங்க. டபுள் பிஎச்டி வாங்குறவங்க எல்லாம் சிம்ம ராசி பெண்களா இருப்பாங்க. விட்ட படிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி லெக்சரரா போகக்கூடியது டீச்சிங் அந்த ஆளுமை நீங்க சொல்லிக் கொடுத்தா ஒரு தடவை சொல்லிக் கொடுத்தாலே ஸ்டூடென்ட்ஸ்க்கு புரியும். அந்த அளவுக்கு உங்களுக்கு வந்து ஆளுமை திறன் அப்படிங்கறது உண்டு.
15:06
Speaker 1
அப்போ எஜுகேஷன் ரிலேட்டடா எதுவா இருந்தாலும் அந்த துறையை நீங்க வந்து தொடலாம். அது என்ன ப்ராடக்ட்டா இருந்தாலும் சரி என்ன சப்ஜெக்ட்டா இருந்தாலும் சரி மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு தொழிலா இருக்கிற பட்சத்துல அந்த டீச்சிங் அந்த மென்டர் ஒரு ஸ்கூல் பிரின்சிபல் ஒரு காலேஜ் பிரின்சிபல் இந்த மாதிரி எல்லா அமைப்பும் சிம்ம ராசி பெண்களுக்கு அப்படிங்கறது உண்டு. அப்போ ஆளுமை இருக்கக்கூடிய ஒரு துறையா பார்த்து நீங்க சூஸ் பண்ணிக்கிறீங்க அப்படின்னா அந்த பிசினஸாவே இருந்தா கூட உங்களால ஒரு பத்து பேரை வச்சு வேலை வாங்க முடியும். துணிஞ்சு நீங்க போய் ஒரு லோன் வாங்கலாம். துணிஞ்சு நீங்க ஒரு தொழிலை ஸ்டார்ட் பண்ணலாம். ஆனா ஒரே ஒரு வார்னிங் என்னன்னா அகலக்கால் கூடாது. எல்லாமே சரியா போயிட்டு இருக்குன்னு அந்த ஒரு சர்க்கிள்குள்ளேயே இருந்துகிறது அப்படிங்கறது நல்லது உங்களுக்கு.
15:45
Speaker 1
உங்களுக்கான ஸ்தலம் அப்படின்னு பார்க்கிறப்போ சிம்ம ராசிக்காரங்களுக்கு எங்கெல்லாம் சித்தர்கள் ஜீவ சமாதி அடைஞ்சிருக்காங்களோ அந்த ஜீவ சமாதிகள் இருக்கக்கூடிய இடங்களை தேடி தேடி போகப்போக சித்தர்களுடைய கனெக்டிவிட்டிங்கறது சிம்ம ராசி பெண்களுக்கு அதிகமாவே இருக்கும். ஏன் அப்படின்னா இவங்க எல்லாம் ஏதோ ஒரு ஜென்மத்துல சித்தர்களுடைய ஒரு கனெக்டிவிட்டியோ இல்ல இவங்களே சித்தரா இருந்தக்கூடிய ஒரு அமைப்போ அதனால இந்த வாழ்க்கையில ஏதோ ஒரு தவறு செஞ்சோ அதை சரி பண்றதுக்கு வந்த அமைப்புதான் சிம்ம ராசி பெண்களா இருப்பாங்க. அப்போ இந்த சித்தர்களை எல்லாம் பிடிச்சிட்டு முருகரை போய் பிடிச்சிட்டீங்கன்னா உங்களை அசைக்க யாராலுமே முடியாது. முதலில் சித்தர் அதுக்கப்புறம் முருகர் இதுவே உங்களுக்கு வந்து உகந்த வழி அப்படின்னே சொல்லலாம். வேல்மாறல் படிக்கிறது வேல்மாறல் கேட்க கேட்க சிம்ம ராசி பெண்களுக்கு வந்து மனசு ரொம்ப இலகன மனசு பயம் அப்படிங்கறது எல்லாம் திடீர்னு அதிகமா வரும். வெளிய காட்டிக்க மாட்டாங்க. இப்ப இந்த வேல்மாறல் படிக்க படிக்க உங்களுக்கு வந்து தைரியம் அந்த தைரிய ஸ்தானம் அப்படிங்கறது ரொம்ப ஸ்ட்ராங் ஆயிடும்.
Topics:சிம்ம ராசிபெண்கள் வாழ்க்கைதிருமணம் ஆலோசனைஜோதிடம்உடல் நலம்தொழில் ஆலோசனைரிஷப ராசிகும்ப ராசிசுக்ரன் அனுகிரகம்தமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →