Speaker A
மீனா ராசி எல்லாம் வந்து மோக்ஷம், மோக்ஷத்துக்கான பாதை அப்படிங்கறப்போ எல்லா தெய்வங்களையுமே வழிபாடு பண்றதுங்கறது உகந்தது. அதாவது சமநிலையில பெருமாள், சயன பெருமாள், சயன பெருமாளை வழிபாடு பண்றது. அதோட வந்து ஸ்ரீரங்கத்துல போய் வழிபாடு பண்றது. ஸ்ரீரங்கத்துல இருக்க எல்லா தெய்வங்களையும் போய் வழிபாடு பண்றது. ஏன்னா அது வந்து மோக்ஷ பாதை. அங்கதான் வந்து மோக்ஷத்துக்கான பாதையே ஸ்ரீரங்கம் தான். சொர்க்கவாசல் திறக்குறாங்கன்னு சொல்றாங்க இல்லையா. அது மீனா ராசிக்கு ரொம்ப உகந்த ஸ்தலம் அப்படிங்கறது ஸ்ரீரங்க ஸ்தலம். அதனால அங்க ஸ்ரீரங்கத்துல போய் தங்கி இருந்து நிதானமா அத்தனை தெய்வங்களையும் ஒரே நாள்ல வழிபாடு பண்ணவே முடியாது ஸ்ரீரங்கத்துல. அதனால தங்கி இருந்து ஒரு நாலு நாள், அஞ்சு நாள் தங்கி இருந்து எல்லா தெய்வங்களுடைய அனுக்கிரகமும் வாங்கிட்டு வரப்ப உங்களுடைய வாழ்க்கை ரொம்ப சுபிக்ஷமா இருக்கும். அதுக்கப்புறம் முருகர் ஸ்தலத்துக்கு போய் முருகரோட கனெக்ட் ஆகுறப்போ உங்களுடைய விதி மாறக்கூடிய அமைப்பு அப்படிங்கறது அப்பதான் உங்களுக்கு உருவாகும்.