Kumbam 👉உங்களை திருமணம் செய்பவர் பாக்கியசாலி | Astrolog… — Transcript

கும்பம் ராசி பெண்களின் திருமண வாழ்க்கை, தொழில், மற்றும் வாழ்க்கை சவால்கள் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.

Key Takeaways

  • கும்பம் ராசி பெண்கள் தியாக மனப்பான்மையுடன் குடும்பம் மற்றும் வேலை இரண்டிலும் சிறந்து விளங்குவார்கள்.
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை தரும்.
  • ஆரோக்கியம் மற்றும் கண் பார்வை பிரச்சனைகள் கவனிக்கப்பட வேண்டும்.
  • திருமணத்தில் துலாம் ராசி ஆண்களுடன் பொருத்தம் சிறந்தது, அதே ராசியிலுள்ளவர்களுடன் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அறிவுரைகளை கேட்டு செயல்பட வேண்டும், ஆனால் சில சூட்சும நிலைகளை கவனிக்க வேண்டும்.

Summary

  • கும்பம் ராசி பெண்கள் திருமணத்தில் பாக்கியசாலிகள் என கூறப்படுகின்றனர்.
  • இந்த பெண்கள் தியாக மனப்பான்மையுடன் குடும்பத்திற்காக பணியாற்றுவர்.
  • கும்பம் ராசி பெண்களுக்கு சாத்வீகமான தொழில்கள், யோகா, கைவினை பொருட்கள் போன்ற துறைகள் பொருத்தமாக இருக்கும்.
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கும்பம் ராசி பெண்களுக்கு விதி மாற்றம் மற்றும் நல்ல வாய்ப்புகளை தரும்.
  • கும்பம் ராசி பெண்கள் குடும்பத்திற்கும் வேலைக்கும் இடையே சமநிலை பேணும் திறன் கொண்டவர்கள்.
  • திருமண வாழ்க்கையில் துலாம் ராசி ஆண்களுடன் பொருத்தம் சிறந்தது.
  • கும்பம் ராசி பெண்களுக்கு உடல் மற்றும் கண் பார்வை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரோக்கிய பராமரிப்பு அவசியம்.
  • வாழ்க்கையில் முன்னேற உபதேசங்களை கேட்டு செயல்பட வேண்டும், ஆனால் ஆபத்தான 'எட்டு போட்டு' நிலையை தவிர்க்க வேண்டும்.
  • கும்பம் ராசி பெண்கள் சமையல் மற்றும் ஹோம் பிசினஸ் துறைகளில் சிறந்து விளங்க முடியும்.
  • கும்பம் ராசி ஆண்களுடன் அல்லது அதே ராசியிலுள்ளவர்களுடன் திருமணம் செய்ய வேண்டாம் என அறிவுரை.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கும்ப ராசி பெண்கள் அப்படிங்கிறவங்கள திருமணம் பண்ணிக்கிறவங்க ரொம்ப பாக்கியவான்கள் அப்படின்னே சொல்லுவாங்க. ஏன் அப்படின்னா ரொம்ப டெடிகேட்டடாவே இருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
00:09
Speaker A
உடலை கெடுத்துக்கிற அமைப்பு. கண் பார்வை பாதிச்சிரும். சீக்கிரம் கும்ப ராசி பெண்கள் ரொம்ப உங்களுடைய எஃபர்ட் ரொம்ப வொர்க் ஹாலிக்கா இருக்கிறீங்க.
00:16
Speaker A
குடும்பத்துல வேலை பார்த்துட்டே இருக்கீங்கன்னா முதல் பாதிக்கப்படுவது உங்களுக்கு வந்து கண் பார்வைதான்.
00:19
Speaker A
உங்களுக்கு ஒரு தெரப்பியாவே நான் சொல்றது என்னன்னா
00:26
Speaker A
இப்ப உங்களுக்கு வெளிநாட்டு அமைப்புகள் எல்லாம் வருது. வெளிநாட்டுல வேலை அமைப்பு எல்லாம் வருதுன்னா தாராளமா எடுத்து நீங்க போய் செய்யலாம்.
00:32
Speaker A
ஏன்னா இந்த கும்ப ராசியிலதான் வந்து ராகுவோட நட்சத்திரமும் இருக்கு. ராகுவோட அம்சமே என்ன அப்படின்னா வெளிநாடுகள்ல போறப்போ விதி மாறும்.
00:38
Speaker A
கும்ப ராசி யாரெல்லாம் திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னா
01:40
Speaker A
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
01:44
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா ஸ்பெஷலா பெண்களுக்காகவே 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.
01:50
Speaker A
இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.
01:56
Speaker A
இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிஃபிக்கா இங்க சொல்ல முடியாது. அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும் அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறதை பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
02:12
Speaker A
கும்ப ராசி அப்படின்னு எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்களேன். கும்ப ராசி பெண்கள் அப்படிங்கிறவங்களை திருமணம் பண்ணிக்கிறவங்க ரொம்ப பாக்கியவான்கள் அப்படின்னே சொல்லுவாங்க.
02:19
Speaker A
ஏன் அப்படின்னா ரொம்ப டெடிகேட்டடாவே இருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
02:23
Speaker A
ஏன்னா கும்ப ராசி பெண்களுக்கு லைஃப் ரெண்டு வகையா இருக்குது.
02:26
Speaker A
ஒன்னு அம்மா அப்பா வளர்த்துறப்போ செழிப்பா வளர்ந்துட்டாங்க. செல்ல பிள்ளையா வளர்ந்துட்டாங்க அப்படின்னா புகுந்த வீட்டுல போய் கஷ்டப்படக்கூடிய ஒரு சூழ்நிலைன்னு இருக்கும்.
02:36
Speaker A
இல்லை நான் வந்து வளர்த்துறப்பவே நான் நிறைய கஷ்டங்களை பார்த்துட்டேன். எனக்கு அம்மா இல்லை இல்லை எனக்கு அப்பா இல்லை.
02:42
Speaker A
இல்லை யாரோ ஒருத்தவங்க சண்டை போட்டுட்டே இருந்தாங்க. இந்த பிரச்சனைகள் எல்லாம் பார்த்தே நான் வளர்ந்தேன் அப்படிங்கிறவங்களுக்கு திருமண வாழ்க்கை ரொம்ப நல்லபடியா அமைஞ்சு அந்த குடும்பத்துக்குள்ள போறப்போ அந்த லைஃப் சுபிக்ஷமா மாறக்கூடிய ஒரு அமைப்பு அப்படின்னு ஒன்னு இருக்கு.
02:53
Speaker A
இந்த கும்ப ராசி பெண்கள்னு பார்க்கிறப்போ தியாகங்கள் செஞ்சு அதாவது தெரிஞ்சோ தெரியாமலே தன்னை தியாகியாவே வச்சிட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்புங்கிறது கும்ப ராசி பெண்களுக்கு உண்டு.
03:04
Speaker A
கும்ப ராசி பெண்களுக்கு வந்து என்ன மாதிரியான படிப்பு தொழில் அமையும் அப்படின்னா இவங்களுக்கு வந்து சாத்வீகமா இருக்கக்கூடிய துறை எல்லாமே செட் ஆகும்.
03:13
Speaker A
கொஞ்சம் அமைதியா ஆர்ப்பாட்டமே இல்லாம தொழில் அப்படிங்கறது நல்லபடியா அமையும்.
03:17
Speaker A
அதாவது ஒரு யோகாசனம் கத்துக்கிறது ஒரு யோகா டீச்சரா போறது இந்த ரேக்கி கலை அதேபோல இந்த கைவினை பொருட்கள் எல்லாம் கும்ப ராசி பெண்களுக்கு ரொம்ப நல்லா வரும்.
03:29
Speaker A
நீங்க ஒரு ப்ரொபஷன் சூஸ் பண்றீங்க அதாவது படிக்கிறதுக்கு நீங்க சூஸ் பண்றீங்க அப்படின்னா கூட சர்வீஸ் ஓரியண்டடான சப்ஜெக்ட் நீங்க சூஸ் பண்ணிக்கிறது.
03:39
Speaker A
அதாவது ஒரு அட்மினிஸ்ட்ரேஷன்லயே இருந்தீங்கன்னா கூட நீங்க ஒரு சேவை செய்யக்கூடிய ஒரு இடத்துல இருக்கணும்.
03:44
Speaker A
யாருக்காவது சேவை செஞ்சிட்டே இருக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கும்ப ராசி பெண்களோட அமைப்பு.
03:48
Speaker A
இப்ப ஒரு ஐடி துறையில நீங்க வேலை பார்க்கிறீங்க அப்படின்னா கூட உங்க லீட் சொல்றதை நீங்க கேட்டு கேட்டு வேலை பண்ணிட்டே இருக்கீங்கன்னா உங்களுக்கு குரோத்ங்கறது இருந்துகிட்டே இருக்கும்.
03:55
Speaker A
ஏன்னா உங்களுக்கு வந்து உபதேசம் செய்யறதுக்குன்னே நிறைய பேர் இருப்பாங்க. அந்த உபதேசத்தை நீங்க கேட்கணும்.
04:00
Speaker A
இந்த கும்ப ராசியில இருக்க பெண்கள் என்ன பண்ணுவாங்கன்னா அட்வைசஸ் நிறைய பேர் வந்து சொல்லுவாங்க.
04:05
Speaker A
வாழ்க்கையில முன்னேறதுக்கு சொல்றாங்க அப்படிங்கறப்போ அதை கேட்டு முன்னேறி வந்துட்டா உங்க லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்.
04:10
Speaker A
சம்டைம்ஸ் அந்த கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளிய வரமாட்டாங்க. அந்த ரிஸ்க் எடுக்கறதுக்கு ரொம்ப யோசிக்கிறது.
04:14
Speaker A
இப்ப உங்களுக்கு வெளிநாட்டு அமைப்புகள் எல்லாம் வருது. வெளிநாட்டுல வேலை அமைப்பு எல்லாம் வருதுன்னா தாராளமா எடுத்து நீங்க போய் செய்யலாம்.
04:20
Speaker A
ஏன்னா இந்த கும்ப ராசியிலதான் வந்து ராகுவோட நட்சத்திரமும் இருக்கு. ராகுவோட அம்சமே என்ன அப்படின்னா வெளிநாடுகள்ல போறப்போ விதி மாறும்.
04:28
Speaker A
விதி மாறி பெரிய சுபிக்ஷத்தை கொடுத்து நல்ல ஒரு குரோத்தை கொடுக்கும்.
04:31
Speaker A
பிறந்த ஊர்லயே இருக்கீங்கன்னா கர்மா அனுபவிச்சிட்டே இருக்கிற மாதிரியான ஒரு சூழ்நிலையும் கொடுத்துரும்.
04:36
Speaker A
அப்போ உங்களுக்கு வரக்கூடிய லைஃப் பார்ட்னர் வந்து வெளிநாட்டுல இருக்காங்க. நீங்களும் வெளிநாட்டுல போய் வாழ போறீங்க அப்படின்னா தாராளமா இந்த மாதிரியான லைஃப் பார்ட்னர்ஸ் நீங்க சூஸ் பண்ணலாம்.
04:45
Speaker A
இல்லை நாங்க இதே ஊர்லதான் இருப்போம் அப்படின்னா நீங்க வந்து ரொம்ப சேவை செஞ்சிட்டே இருந்திடக்கூடாது.
04:50
Speaker A
அதாவது தியாக மனப்பான்மையில இருந்து உள்ளுக்குள்ளேயே புழுங்கக்கூடிய ஒரு அமைப்பு. பயம் ஜாஸ்தியா இருக்கும் கும்ப ராசி பெண்களுக்கு.
04:56
Speaker A
ஜட்ஜ்மென்ட் நினைச்சு பயம். என்னை இவங்க இப்படி நினைச்சிருவாங்க அப்படி நினைச்சிருவாங்க.
05:00
Speaker A
அதனால நான் இவங்களுக்கு எல்லாம் இந்த வேலையை நான் செஞ்சுகிட்டே இருக்கேன் செஞ்சுகிட்டே இருக்கேன் அப்படின்னு உடலை கெடுத்துக்கிற அமைப்பு.
05:06
Speaker A
கண் பார்வை பாதிச்சிரும். சீக்கிரம் கும்ப ராசி பெண்கள் ரொம்ப உங்களுடைய எஃபர்ட் ரொம்ப வொர்க் ஹாலிக்கா இருக்கிறீங்க.
05:12
Speaker A
குடும்பத்துல வேலை பார்த்துட்டே இருக்கீங்கன்னா முதல் பாதிக்கப்படுவது உங்களுக்கு வந்து கண் பார்வைதான்.
05:15
Speaker A
அப்ப கும்ப ராசி பெண்களுக்கு எல்லாம் உங்களுக்கு ஒரு தெரப்பியாவே நான் சொல்றது என்னன்னா இந்த எட்டு போட்டு நடப்பாங்க.
05:22
Speaker A
இந்த எட்டு போட்டு நடக்கிறதுங்கிறது ரிவர்ஸ்ல நடக்கணும்.
05:25
Speaker A
இப்படி ரிவர்ஸ்ல நடக்கிறீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து ஒரு நிதானத்தை கொடுக்கும்.
05:29
Speaker A
எல்லாத்துக்குமே ரிவர்ஸ் இப்ப நான் கும்ப ராசி பெண்களுக்கு சொல்றேன்னு மத்தவங்க அதை ட்ரை பண்ணிடக்கூடாது.
05:34
Speaker A
ஏன்னா இந்த எட்டுல நடக்கிறதுக்குன்னு ஒரு சூட்சுமம் எல்லாம் இருக்கு.
05:37
Speaker A
அப்ப கும்ப ராசி பெண்கள் ஒரு ஏழு நிமிஷம் ஒரு 12 நிமிஷம் ஒரு எட்டு போட்டு ஒரு ரிவர்ஸ்ல நடக்கிறப்போ ஒரு நிதான நிலை.
05:46
Speaker A
தனக்கு என்ன வேண்டும் என்ன நான் பார்த்துக்கணும் எனக்கு என்ன பிடிக்கும் அப்படிங்கிற விஷயங்கள் எல்லாம் அவங்களுக்கு புரியும்.
05:52
Speaker A
அதே மாதிரி டெசிஷன் எடுக்கிறதும் வந்து தெளிவா எடுப்பாங்க.
05:55
Speaker A
அந்த டெசிஷன் மேக்கிங்ல கொஞ்சம் பேக் அடிப்பாங்க கும்ப ராசி பெண்கள்.
05:59
Speaker A
அப்போ நீங்க சூஸ் பண்ணக்கூடிய துறை அதனாலதான் வந்து யார்கிட்டயாவது வேலை செய்யற மாதிரி நீங்க போயிட்டீங்கன்னா அவங்க சொல்றதை கேட்டு கேட்டு நீங்க செய்யறப்போ அந்த கடமையை முடிச்சிட்டு வர மாதிரி இருக்கும்.
06:04
Speaker A
இப்ப கும்ப ராசி பெண்கள் யாரை திருமணம் பண்ணிக்கிட்டாலுமே கொடுத்து வச்சவங்கன்னே சொல்லலாம்.
06:09
Speaker A
ஏன்னா அந்த குடும்பத்தை பாதுகாக்குறதும் சரி அந்த வேலைக்கு போயிட்டு வரதும் சரி அந்த குழந்தைகளை பாதுகாக்குறதும் சரி கும்ப ராசி பெண்களை அடிச்சுக்கவே முடியாது.
06:19
Speaker A
அந்த அளவுக்கு பத்திரமா பார்த்துப்பாங்க எல்லாத்தையுமே.
06:21
Speaker A
அப்ப கும்ப ராசி யாரெல்லாம் திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னா கும்பத்துக்கு துலாம் ராசி ஆண்கள் வந்து செட் ஆவாங்க.
06:26
Speaker A
ஏன்னா ஒரு ஒரு அட்ராக்ஷன் அப்படிங்கறது இருக்கும்.
06:29
Speaker A
முடிஞ்ச அளவுக்கு கும்ப ராசி பெண்கள் வந்து அரேஞ்ச்ட் மேரேஜா இருந்துகிறது அப்படிங்கறது கொஞ்சம் வேலை செய்யும்.
06:36
Speaker A
இல்லை அப்படின்னா லைஃப் லெசன்ஸ் ஏதாவது ஒரு விஷயத்துல சொல்லிக் கொடுக்கும்.
06:40
Speaker A
நீங்க என்ன லவ் மேரேஜ்க்கு அகைன்ஸ்ட்டா அப்படின்னுலாம் இல்லை.
06:42
Speaker A
ஒரு சில அமைப்புகளுக்கு ஒவ்வொரு மாதிரியான திருமண வாழ்க்கை அமையறப்போ அதுக்கான லைஃப் லெசன்ஸ்ன்னு ஒன்னு இருக்கு இல்லையா குருதான் அந்த அந்த லைஃப் லெசன்ஸ் நம்மளுக்கு வந்து கொடுக்க போறாரு அப்படிங்கறப்போ நம்ம லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றதுல அதாவது எந்த ஃபேமிலிக்குள்ள நம்ம திருமணம் பண்ணி போறோம்.
06:57
Speaker A
இப்போ வந்து கூட்டு குடும்பத்துக்குள்ள போகக்கூடிய அமைப்பு கும்ப ராசி பெண்களுக்கு ரொம்ப அதிகம்.
07:01
Speaker A
அப்ப எல்லாத்துக்குமே வேலை செஞ்சு கொடுத்துட்டே இருக்கிற மாதிரியே இருக்கும்.
07:04
Speaker A
இது எல்லாமே பார்த்து ஒரு பவுண்டரி ஆரம்ப நிலையிலேயே செட் பண்ணிக்கிட்டீங்கன்னா லைஃப் கொஞ்சம் ஹாப்பியா போகும்.
07:09
Speaker A
இல்லைன்னா புழுங்கி புழுங்கி அதுவே உங்களுக்கு நோயை கொடுத்துரும்.
07:12
Speaker A
அதிகபட்ச நோயை கொடுத்துரும். இந்த வீசிங் ப்ராப்ளம் வரது லங்ஸ்ல இஸ்யூஸ் வரது இந்த மாதிரி ஒவ்வொரு நோயா ஒரு 35 வயசுல இருந்தே உங்களுக்கு வர ஆரம்பிச்சிரும்.
07:20
Speaker A
அப்போ உங்க ஹெல்த்ங்கறதை நீங்க ஆரம்ப காலத்திலிருந்தே ரொம்ப நல்லா பார்த்துக்கணும் கும்ப ராசி பெண்கள்.
07:25
Speaker A
உங்களுக்கு வந்து தொழில் கூட வந்து கைவினை பொருட்கள் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கக்கூடியது.
07:30
Speaker A
அதாவது சமையல் கூட கும்ப ராசி பெண்களுக்கு ரொம்ப நல்லா வரும்.
07:33
Speaker A
சமையல் கலையில ரொம்ப சிறந்து விளங்க முடியும். யூனிக் டேஸ்ட்டா இருக்கும் நீங்க சமைச்சு கொடுக்கிறது எல்லாம்.
07:39
Speaker A
ஹோம் ஃபுட் செஞ்சு கொடுக்கிறது ஒரு சின்ன ரெஸ்டாரண்ட் வைக்கிறது.
07:42
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் இந்த மாதிரி தொழில் அமைக்கிறது இது எல்லாமே வந்து உங்களுக்கு செட் ஆகும்.
07:46
Speaker A
இப்ப கும்ப ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ கும்ப ராசி ஆணையே திருமணம் பண்ணிக்க கூடாது.
07:50
Speaker A
அதே ராசிக்குள்ள இருக்கிறவங்களை திருமணம் பண்ணிக்க கூடாது.
07:53
Speaker A
இப்ப கும்ப ராசியில இருக்கிறவங்களுக்கு வந்து மகரம் ராசி ஒரு அளவுக்கு செட் ஆவாங்க.
07:57
Speaker A
துலாம் ராசி அப்படிங்கிறவங்க செட் ஆவாங்க.
07:59
Speaker A
அதேபோல கன்னி ராசியும் செட் ஆவாங்க.
08:01
Speaker A
ஏன்னா கன்னி ராசியுமே வந்து லைஃப் பார்ட்னருக்கு கொஞ்சம் அனுசரிச்சு போகக்கூடிய ஒரு அமைப்புல கும்ப ராசி பெண்கள் வரப்போ கொஞ்சம் இருப்பாங்க.
08:09
Speaker A
அப்போ கன்னிக்கும் கும்பத்துக்கும் கொஞ்சம் செட் ஆகும்.
08:11
Speaker A
ஓவர் எமோஷனலா போய் சிக்கிக்காம இருந்துகிறது நல்லது.
08:14
Speaker A
மேஷம் ராசி அப்படிங்கறது அவ்வளவுக்கு செட் ஆக மாட்டாங்க.
08:17
Speaker A
ஏன்னா அவங்க கொஞ்சம் அவசரமா எல்லாமே செயல்பட்டுட்டு இருக்கப்போ கும்பத்தால அதை ஹேண்டில் பண்ண முடியாம போகும்.
08:23
Speaker A
அப்போ உங்களுக்கு லைஃப் பார்ட்னர் அப்படிங்கிறவங்க மகரத்துல வராங்க அப்படின்னா ஓகே.
08:28
Speaker A
கடகத்துல வராங்கன்னா கூட உங்களுக்கு செட் ஆயிரும்.
08:30
Speaker A
ஆனா அம்மா பையனா என்ன அப்படிங்கறதை பார்த்து முடிவு பண்ணிக்கிறது நல்லது.
08:35
Speaker A
சிம்ம ராசி அப்படிங்கறவங்களும் உங்களுக்கு செட் ஆவாங்க கும்ப ராசியில இருக்கிறவங்களுக்கு.
08:40
Speaker A
என்னதான் அவங்க சூரியன் நீங்க சனியா இருந்தாலுமே இந்த சிம்ம ராசியில இருக்கக்கூடிய ஆண் வந்து கொஞ்சம் கும்ப ராசிக்கு கொஞ்சம் பணிஞ்சு போகக்கூடிய ஒரு அமைப்பும் உண்டு.
08:48
Speaker A
இப்ப கும்ப ராசி யாரை வழிபாடு பண்ணலாம் அப்படின்னா உங்களுக்கு எல்லாம் சிவன் ஸ்தலங்கள் நிறைய சிவன் ஸ்தலங்கள்.
08:53
Speaker A
பழைய சிவன் ஸ்தலங்களுக்கு போறது அதோட தேனுபுரீஸ்வரர் கோயில்னு ஒரு கோயில் இருக்கும்.
08:58
Speaker A
பழைய பழங்காலத்து கோயில் அது வந்து சென்னையிலதான் இருக்குது அந்த கோயில்.
09:02
Speaker A
இந்த தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு நீங்க போக போக அங்க இருக்கிற சரபேஸ்வரர் தூண்லயே இருப்பார் அந்த கோயில்ல.
09:10
Speaker A
அந்த சரபேஸ்வரரை நீங்க வழிபாடு பண்றப்போ உங்களுக்கு லைஃப்ல இருக்கக்கூடிய நிறைய இஸ்யூஸ் அப்படிங்கறது கொஞ்சம் சரியாகும்.
09:17
Speaker A
நிறைய துக்கங்கள் பாரங்களை சுமந்துட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்புல இருக்கப்போ இந்த சரபேஸ்வரர் வழிபாடுங்கறது ஞாயிற்றுக்கிழமைகள்ல அங்க வந்து ராகு காலத்துல வழிபாடு முறைகள்னு இருக்கும்.
09:27
Speaker A
முடிஞ்ச அளவுக்கு மாதத்துல ஒரு முறையாவது அங்க வந்து தரிசனம் பண்ணி அந்த பூஜையில நீங்க கலந்துக்கிறீங்க அப்படின்னா உங்களுக்கு ஏதாவது ஒரு தோஷங்கள் இருக்குன்னா அங்க அந்த சரபேஸ்வரர் வழிபாட்டுக்கு நீங்க வந்து உட்காரப்போ அந்த தோஷம் நிவர்த்தி அப்படிங்கறது அமையும்.
Topics:கும்பம் ராசிதிருமணம்ஆரோக்கியம்தொழில்வெளிநாட்டு வேலைஜோதிடம்துலாம் ராசிகைவினையோகாவாழ்க்கை அறிவுரை

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →