Kadagam 👉ஜாக்பாட் அடிக்கப்போகுது.! | Astrologer Jeevitha — Transcript

2026ல் கடக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், திருமணம், குழந்தை, வேலை, மற்றும் செலவுகள் குறித்து ஜோதிட பரிந்துரைகள்.

Key Takeaways

  • 2026 கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் மற்றும் வெற்றி கிடைக்கும்.
  • திருமணம் மற்றும் குடும்ப வளர்ச்சிக்கு இது சிறந்த ஆண்டு ஆகும்.
  • செலவுகளை திட்டமிட்டு கவனமாக செலவிட வேண்டும்.
  • சனி கிரகத்தின் மாற்றங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
  • உக்கிர தெய்வ வழிபாடு மற்றும் தாந்திரிக முறைகள் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

Summary

  • 2026ல் கடக ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • திருமணத்துக்கான நல்ல நேரம் மற்றும் புதிய அலைன்ஸ் வர வாய்ப்பு உள்ளது.
  • குழந்தை பிறப்புக்கான ஆசீர்வாதம் மற்றும் ட்ரீட்மென்ட் வெற்றி பெறும் காலம்.
  • பரபரப்பான செலவுகள் வரும், ஆனால் அவை தேவையான செலவுகளாக இருக்கும்.
  • ஊழியர் மற்றும் படிப்பு தொடர்பான செலவுகள் நல்ல நோக்கத்துடன் இருக்கும்.
  • உக்கிர தெய்வ வழிபாடு மற்றும் தாந்திரிக பயிற்சிகள் மூலம் பிரச்சனைகள் தீரும்.
  • சனி கிரகத்தின் தாக்கம் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஏற்படும்.
  • எமோஷனல் கிளியரன்ஸ் மற்றும் புதிய உறவுகள் உருவாகும்.
  • ஃபாரின் டிராவல் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், ஆனால் செலவுகளை கவனிக்க வேண்டும்.
  • ஜூன் மாதம் வரை பணியிலும் வாழ்க்கையிலும் முக்கிய முடிவுகள் வரும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கடக ராசிக்கு தான் வந்து இந்த வருஷம் ஜாக்பாட் ஜாக்பாட்னே வந்து எல்லா ஜோதிடர்களுமே சொல்லிட்டு தான் இருக்காங்க.
00:06
Speaker A
எப்படி ஜாக்பாட் வரும்னா
00:10
Speaker A
கடகத்துல இருக்கவங்களுக்கு வந்து எனக்கு நல்ல வரன் வராதா அப்படின்னு அந்த திருமணத்துக்காக காத்துட்டு இருக்கீங்க ஒரு நல்ல நேரத்துக்காக காத்துட்டு இருக்கீங்க இல்ல எனக்கு வந்து திருமண தேதிக்காக நான் காத்துட்டு இருக்கேன் அப்படிங்கறவங்க எல்லாமே வந்து
00:23
Speaker A
செலவுகள் எல்லாமே நீங்க உங்களுக்கு இந்த 2026ல வரக்கூடிய செலவுகள் எல்லாமே
00:32
Speaker A
கடக ராசியில இருந்தவங்கலாம் ஒரு மாதிரி டம்பாவே இருந்துருந்திருப்பீங்க ரொம்ப இது என்னடா லைஃப் ஒரே மாதிரியே இருக்குதே அப்படிங்கறவங்களுக்குலாம் இந்த வருடம்
00:42
Speaker A
யாரெல்லாம் உங்களுக்கு பின்னாடி இருந்து சில சதி வேலைகள் எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்கன்னு ஒன்னு இருக்கு இல்லையா உக்கிர தெய்வங்கள் வழிபாடு பண்ண பண்ண
00:51
Speaker A
இப்போ கடகம் கவனமா இருக்க வேண்டிய காலகட்டங்கள்னு ஒன்னு இருக்கு எல்லாமே எங்களுக்கு சூப்பரா இருக்குன்னு நீங்க பட்டுக்கு ஜெட் வேகத்துல போயிறக்கூடாது நீங்க வந்து இப்போ கடக ராசிக்காரங்களுக்கு வந்து பிரச்சனை வெளியில இருந்து தான் வரும் உங்ககிட்ட இருந்துலாம் வராது உங்ககிட்ட இருந்து எப்படி வரும் அப்படின்னா
02:18
Speaker A
கடக ராசிக்கு தான் வந்து இந்த வருஷம் ஜாக்பாட் ஜாக்பாட்னே வந்து எல்லா ஜோதிடர்களுமே சொல்லிட்டு தான் இருக்காங்க எப்படி ஜாக்பாட் வரும்னா நீங்க என்ன உழைப்பு போடுறீங்களோ அதுக்கான ஜாக்பாட் தான் ஜஸ்ட் லைக் தட் லக் ஆக்டிவேட் ஆகுறதுலாம் இல்ல ஏதோ ஒரு வகையில குரு உங்களை காப்பாத்துவாரு அப்படிங்கறதுதான்.
02:32
Speaker A
இந்த ஃபர்ஸ்ட் ஆறு மாசம் எப்படி இருக்கும் அப்படின்னா இந்த ஜூன் மாசம் வரைக்கும் வச்சுக்கலாம் ஜனவரில இருந்து ஜூன் மாசம் வரைக்கும் என்னென்ன வேலைகள் எல்லாம் உங்களுக்கு பெண்டிங் ஒர்க் இருந்ததோ அந்த பெண்டிங் ஒர்க் எல்லாமே வந்து சீக்கிரம் நிறைவடையும் அதோட சில விஷஸ் சில ஆசைகள் எல்லாமே இருந்திருக்கும் இதை நான் நிறைவேத்தணும் நிறைவேறாத ஆசைகள் இது எல்லாமே நிறைவேறக்கூடிய அமைப்பும் வந்து கரெக்டா இந்த ஆறு மாசத்துக்குள்ள உங்களுக்கு நல்லா இருக்கும்.
03:36
Speaker A
இன்னிய ஒன்னு கடகத்துல இருக்கவங்களுக்கு வந்து எனக்கு நல்ல வரன் வராதா அப்படின்னு அந்த திருமணத்துக்காக காத்துட்டு இருக்கீங்க ஒரு நல்ல நேரத்துக்காக காத்துட்டு இருக்கீங்க இல்ல எனக்கு வந்து திருமண தேதிக்காக நான் காத்துட்டு இருக்கேன் அப்படிங்கறவங்க எல்லாமே வந்து இந்த வருஷம் வந்து உங்களுக்கு திருமணத்துக்கான ஒரு வருடம் நல்ல ஒரு அலைன்ஸ் வரக்கூடிய ஒரு வருடம் அப்போ திருமணத்தை எல்லாம் நீங்க தாராளமா இந்த வருஷம் வந்து நீங்க துணிஞ்சு திருமணம் பண்ணிக்கலாம் லவ் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா இந்த லவ் அப்படிங்கறது உங்களுக்கு சக்சஸ் ஆகும் அப்படின்னு இருக்கு பிரண்ட்ஸ் சர்க்கிள் மூலமா நிறைய பெனிஃபிட்ஸ் உங்களுக்கு கிடைக்க போகுது எல்லாமே உங்களுக்கு ஃபேவரபிலா தான் இந்த இந்த வருஷம் இருக்கு.
04:08
Speaker A
புதுசா திருமணம் ஆயிருக்கு எங்களுக்கு எப்போ குழந்தை பிறக்கும் அப்படின்னு இருக்கிறவங்க ரொம்ப நாளா எனக்கு குழந்தையே பிறக்கல நாங்க ட்ரீட்மென்ட்ல இருந்தோம் எல்லாத்துக்குமே இந்த தடவை வந்து குழந்தை பிறப்புக்கான பிராப்தம் அப்படிங்கறது வந்து இந்த வருடம் அதுவும் முக்கியமா ஜனவரி டூ மேக்குள்ளார எல்லாம் யாராவது ட்ரீட்மென்ட் பேபிஸ் போகணும்னு நினைக்கிறீங்க நாங்க இனிமேல் தான் ட்ரீட்மென்ட்குள்ள போகப்போறோம் இயற்கை முறையிலேயே நீங்க முயற்சி பண்ணுனாலும் இந்த குரு வந்து உங்களுக்கு பரிபூரண ஆசீர்வாதத்தை கொடுக்கறதுக்கு ரொம்ப தயாராவே இருக்கிறார் இந்த தடவை சோ எல்லாமே தடைப்பட்ட விஷயங்கள் எல்லாமே கிளியர் ஆகப்போகுது அப்படிங்கற மாதிரிதான் வந்து இந்த வருடம் 2026 கடக ராசிக்கு இருக்கு.
05:23
Speaker A
இன்னொரு விஷயம் என்ன அப்படின்னா நீண்ட நாள் வழிபாட்டு முறைகள்ல இருந்திருப்பீங்க நேத்திக்கடன்லாம் வச்சிருந்திருப்பீங்க வேண்டுதல் வச்சிருந்திருப்பீங்க அந்த வேண்டுதல் நிறைவேறல அப்படிங்கற மாதிரிலாம் இருக்கும் இல்லையா இந்த வேண்டுதல் 2026ல உங்களுக்கு நிறைவேறும் பரிபூரண தெய்வத்துடைய ஆசீர்வாதம் அப்படிங்கறது வந்து இந்த ஸ்பிரிச்சுவல் கிப்ட்ன்னு சொல்றோம்ல அது வந்து கடக ராசிக்கு இந்த வருஷம் ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கு.
05:46
Speaker A
ஃபாரின்க்கு டிராவல் பண்ணனும்னு நினைக்கிற கடக ராசிக்காரங்க ஃபாரின்ல போய் படிக்கணும்னு நினைக்கிறீங்க ஃபாரின்க்கு போய் வேலை பார்க்கணும்னு நினைக்கிறீங்க சில பேர் வந்து ஏதாவது ஏஜென்சிஸ் மூலமா ட்ரை பண்ணிட்டு இருப்பீங்க துணிஞ்சு இறங்கலாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்கிறவங்க இந்த வருஷம் வந்து உங்களுக்கு ஃபாரின் டிராவல் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குது என்ன விஷயம் அப்படின்னா செலவுகள் எல்லாமே நீங்க உங்களுக்கு இந்த 2026ல வரக்கூடிய செலவுகள் எல்லாமே காரண காரியமா தான் வருது தேவையில்லாத செலவுகள் அப்படின்னு கிடையாது ஒரு பர்பஸ்காக நம்ம இந்த செலவு பண்றோம்னு ஒன்னு இருக்கு இல்லையா அந்த ஒரு நோபல் பர்பஸ்ன்னு சொல்லுவோம் அந்த மாதிரி ஓகே இந்த செலவு இதுக்கு செஞ்சுதான் ஆகணும் இப்ப படிக்கிறதுக்கு போறீங்க அந்த படிப்புக்கு அந்த செலவு பண்ணிதான் ஆகணும் ஒரு வேலை ரீதியா ஒரு இடத்துக்கு டிராவல் பண்ணி போறீங்க அது அத்தியாவசிய தேவைகள் சோ எல்லாமே அத்தியாவச செலவுகள்தான் நல்ல செலவுகளாதான் உங்களுக்கு வந்து இந்த வருடம் அப்படிங்கறது வருது இது இன்னொரு விஷயம் என்னன்னா உங்களுடைய லைஃப் பேட்டர்ன் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா அதை அப்படியே கொஞ்சம் அடுத்த லெவலுக்கு போகும் அந்த பேட்டர்ன் அப்படியே மாறும் உங்களுடைய உருவம் மாறும் உங்களுக்கு ஒரு தேஜஸ் வரும் உங்களுக்கு ஒரு அழகு வரும் அப்படிங்கறதுதான் வந்து இந்த 2026 சொல்லுது.
07:37
Speaker A
எமோஷன் வைஸ் நிறைய கிளியர் ஆகும் ஏன்னா ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நம்ம மாறறோம் அப்படின்னாலே அந்த சூழல்ல இருந்து நம்ம இன்னொரு புது சூழலுக்கு போறோம் அப்படிங்கறதுதான் சோ ஒரு மாதிரி சில கடக ராசியில இருந்தவங்கலாம் ஒரு மாதிரி டம்பாவே இருந்துருந்திருப்பீங்க ரொம்ப இது என்னடா லைஃப் ஒரே மாதிரியே இருக்குதே அப்படிங்கறவங்களுக்குலாம் இந்த வருடம் எப்படி இருக்கும் அப்படின்னா ஒரு சேஞ்ச் லைஃப் எமோஷன் வைஸ் கொஞ்சம் கிளன்ஸ் ஆகி புது மனிதர்கள் பார்க்கிறது புது பிரண்ட்ஸ் பார்க்கிறது அப்படிங்கறப்போ கொஞ்சம் கிளியரன்ஸ் அப்படிங்கறது கரெக்டா இருக்கும் நல்லா இருக்கும் அதோட இந்த சனி சில வேலைகள் உங்க வாழ்க்கையில பண்ணும் இந்த சனி என்ன பண்ணும்னா ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுக்கும் கண்டிப்பா இந்த ட்ரான்ஸ்பர்மேஷனை முதல்ல நம்ம அக்செப்ட் பண்ணிக்கணும் சில பேருக்கு சில வழிகளை கொடுத்து அதிலிருந்து ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் அப்படிங்கறது கொடுக்குதுனாலும் அது குரோத் நோக்கி ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் அப்படிங்கறத நீங்க புரிஞ்சுக்கணும்.
10:04
Speaker A
ஏன்னா திடீர் திடீர்னு சில கர்ம வேலைகளையும் இந்த சனி செய்யும் வாழ்க்கையில ஏன்னா எல்லாமே சூப்பரா இருக்குமா அப்படின்னா சனி தன்னுடைய பங்கு என்னவோ அது செய்யும் எப்படி செய்யும் அப்படின்னா சில விஷயங்களுக்கு எல்லாம் நீங்க ரொம்ப பயந்து இருந்திருப்பீங்க அந்த பயத்தை முதல்ல கிளீன் பண்ணும் அந்த பயத்தை கிளீன் பண்ணனும்னா என்ன பண்ணும் சின்ன சின்ன பிரச்சனைகள் கொடுக்கும் எப்படி சேலஞ்சஸ் ஃபேஸ் பண்றீங்கன்னு பார்க்கும் தாராளமா நீங்க அந்த ப்ராப்ளம ஃபேஸ் பண்ணலாம் அதை சேலஞ்ச் அந்த சேலஞ்சஸ் நீங்க எதிர்கொள்றப்போ கண்டிப்பா வெற்றி அப்படிங்கறது கடக ராசிக்கு இந்த தடவை வரும் அதோட சில பேர் வந்து தாந்திரிக வழிபாட்டு முறைகள் எல்லாம் இருந்திருப்பீங்க தாந்திரிக பயிற்சி முறைகள்லயும் இந்த கடகத்துல இருக்க சில நட்சத்திரக்காரர்கள் இந்த வேலைகள் எல்லாம் இந்த தடவை நீங்க செஞ்சுட்டு இருந்திருப்பீங்க அதற்கான ஆசீர்வாதமும் சரியானதா இருக்குது அதாவது உங்களுடைய வேண்டுதல் சரியானதா இருக்குன்னா அதுக்கான பிளஸ்சிங்ஸும் வந்து இந்த 2026ல உங்களுக்கு பரிபூரணமாவே உங்களுக்கு உண்டு இந்த தடவை அதாவது உக்கிர தெய்வ வழிபாடு இதெல்லாம் நீங்க பண்ணிட்டு இருப்பீங்க இல்லையா அந்த உக்கிர தெய்வ வழிபாட்டு முறைகளுமே வந்து இந்த தடவை வந்து உங்களுக்கு நல்லது பண்ணக்கூடிய ஒரு இடத்துலதான் வந்து கடகத்துக்கு இந்த தடவை இருக்கு.
11:45
Speaker A
இது எப்படி இருக்குன்னா யாரெல்லாம் உங்களுக்கு பின்னாடி இருந்து சில சதி வேலைகள் எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்கன்னு ஒன்னு இருக்கு இல்லையா உக்கிர தெய்வங்கள் வழிபாடு பண்ண பண்ண அதெல்லாம் உங்களுக்கு வெளிய எக்ஸ்போஸ் ஆகி கரெக்டா நல்ல நண்பர்களை மட்டும் கூட வச்சிருப்பாங்க இந்த 2026ல சோ சில வாஷ் அவுட் சில கிளீனிங் வேலை எல்லாம் வந்து இந்த தடவை வந்து சனி வந்து உங்களுக்கு செய்வார் லைஃப்ல அந்த கிளீனிங் நல்லதுக்கு கரை நல்லதுன்னு சொல்றோம்ல அந்த மாதிரி அந்த கரை கிளீன் பண்றதும் இந்த தடவை 2026 கடகத்துக்கு கண்டிப்பா ரொம்ப நல்லா இருக்கும் இப்போ கடகம் கவனமா இருக்க வேண்டிய காலகட்டங்கள்னு ஒன்னு இருக்கு எல்லாமே எங்களுக்கு சூப்பரா இருக்குன்னு நீங்க பட்டுக்கு ஜெட் வேகத்துல போயிறக்கூடாது நீங்க வந்து ஜூன் மாசத்துல எல்லாம் செலவுகளை கொஞ்சம் பார்த்து செலவு பண்ணனும் ஏன்னா திடீர் திடீர்னு செலவுகள் வரும் அப்படி கண்ணுக்கு தெரியாம சின்ன சின்ன அமௌன்ட்டா போயிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும் திடீர்னு பெரிய அமௌன்ட் போயிரும் அப்போ பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்துக்கணும் ஜூன் மாசத்துல ஜூலை மாசத்துல முடிஞ்ச அளவுக்கு டிராவல் பண்ணாம இருக்கிறது நல்லது டிராவல் பண்றீங்க அப்படின்னா அங்க ஏதோ ஒரு லாஸ் உங்களுக்கு காட்டிட்டு இருக்கு அப்படிங்கற மாதிரிதான் தேவையில்லாம அது ஒரு வீண் செலவு மாதிரி ஆயிடும் எதுக்கு போனோம் எதுக்கு வந்தோம்ங்கிற மாதிரி ஆயிடும் செப்டம்பர் மாசம் யாருக்கும் நீங்க கடன் கொடுக்கவும் கூடாது கடன் வாங்கவும் கூடாது இது ரெண்டும் பண்ணிட்டீங்க அப்படின்னா பெரிய டேஞ்சர் உங்களுக்கு டேஞ்சர் கண்டிப்பா அது டேஞ்சர் என்னங்க நாங்க லோன்லாம் அப்ளை பண்ணிருக்கோம் அப்ப செப்டம்பர் மாசம் வருதான்னா கொஞ்சம் வெயிட் பண்ணிக்கிறது நல்லது ஏன்னா அந்த இடத்துல சில ட்ரான்சிஷன்ஸ் காரணமாக சில பிளானட்ஸ்ோட ட்ரான்சிஷன்ஸ் காரணமாக நம்மகிட்ட இருந்து ஒன்னு கடனா கொடுத்தாலோ வெளியிலிருந்து கடனா வாங்கினாலோ அது பிரச்சனைகளையே கடகத்துக்கு கொடுக்கும் அப்படிங்கறதுனால கொஞ்சம் கொடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் கவனமா இருந்துக்கணும் சில பேர்லாம் வந்து நாங்க வட்டி பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம் அப்ப நாங்க செப்டம்பர் மாசம் வந்து வட்டி எல்லாம் கொடுக்க வேணாமா அப்படின்னா வசூல் எல்லாம் பண்ணுங்க ஆனா புதுக்கடன்கள் கொடுக்காம இருந்திருக்கிறது நல்லது செப்டம்பர் மாசம் கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு அப்புறம் தரேங்க அப்படின்னு சொல்லிக்கிறது நல்லது.
13:44
Speaker A
இப்போ ஏப்ரல் 11ல இருந்து மே 9ஆம் தேதி வரைக்கும் திடீர்னு சில லக் ஆக்டிவேட் ஆகக்கூடிய அமைப்புலாம் ஒன்னு இருக்கும் இல்லையா கரெக்டா அந்த டைம் பீரியட்ல லட்சுமி கடாட்சம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் கடகத்துக்கு அந்த டைம்ல ஏதாவது ஒரு இன்கம் ஜெனரேட் பண்ணனும் இல்ல புதுசா ஏதாவது ஒரு தொழில் ஆரம்பிக்கணும் இல்ல படிப்பு ரீதியா ஏதாவது ஒன்னு நாங்க செய்யப்போறோம் இல்ல உங்க பேர்ல ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டி வாங்க போறீங்க கரெக்டா இந்த ஏப்ரல் 11ல இருந்து மே 19க்குள்ள நீங்க பண்ணுனீங்க அப்படின்னா அது சுபிட்சமாவே மாறும் அது லக்காவே உங்களுக்கு ஆக்டிவேட் ஆகும் அந்த டைம்ல உங்க லைஃப்ல யாராவது வராங்க இது எல்லாமே வந்து ஒரு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடியதாகவே இருக்கும் இது வந்து லட்சுமி அறுவடை செய்யக்கூடிய ஒரு காலமாகவே உங்களுக்கு ஏப்ரல் 11ல இருந்து மே 19ஆம் தேதி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு அதுக்கப்புறம் இல்லையா அப்படின்னா கரெக்டா குறிப்பிட்டு இந்த நேரத்துல லாட்டரி வாங்கணும்னு நினைக்கிறவங்கலாம் இந்த டைம்ல லாட்டரி வாங்கினீங்கன்னா ஏதோ கொஞ்சமாவது லட்சுமி கடாட்சம் அந்த லட்சுமியோட அருளால உங்களுக்கு கிடைக்கிறதுக்கும் கொஞ்சம் வாய்ப்புகள் அப்படிங்கறது இருக்கு.
15:20
Speaker A
இப்போ கடக ராசிக்காரங்களுக்கு வந்து பிரச்சனை வெளியில இருந்து தான் வரும் உங்ககிட்ட இருந்துலாம் வராது உங்ககிட்ட இருந்து எப்படி வரும் அப்படின்னா எல்லாரும் உங்ககிட்ட தான் வந்து அவங்களுடைய ப்ராப்ளம்ஸ சொல்லுவாங்க கர்மா எவ்வளவு தூரம் நீங்க வந்து மத்தவங்களுடைய கர்மாவை வாங்கிக்கிட்டே இருக்கீங்களோ இதுதான் பெரிய கர்மா ஆல்ரெடி கடகத்துல பிறந்தவங்க ஒரு சில கர்மாவை சுமந்து தான் வந்திருப்பீங்க முன்னோர்கள் கர்மா எல்லாம் சுமந்து வந்திருப்பீங்க இது தேவையே இல்லாம மத்தவங்களுடைய கர்மாவும் உங்களுக்கு அட்டாக்ட் உங்களுக்கு உங்களுக்கு அட்ராக்ட் ஆகுது அப்படின்னா உங்களுக்கு பெரிய துயரத்துல தான் இந்த இது போய் விடும் ரொம்ப ஒரு கஷ்டத்துல போய் விடும் ஏன்னா இந்த 2026 உங்களுக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய விஷயம் என்னன்னா சில எமோஷனல் பவுண்டரிஸ் போட்டுக்கணும் யார்கிட்ட எவ்வளவு பழகணும் எந்த அளவுக்கு ஒருத்தவங்களுடைய கஷ்டத்தை நம்ம கேட்கணும் அப்படிங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு இந்த எல்லையை தாண்டி நீங்க போறீங்கன்னா அவங்க கர்மாவை தேவையே இல்லாம நீங்க சுமப்பீங்க ஏன்னா உங்களுக்கு நல்ல லக் ஆக்டிவேட் ஆகுதுன்னு சொல்றேன் அப்ப எல்லா கடக ராசிக்காரங்களுக்கும் லக் ஆக்டிவேட் ஆகுமா ஒரு சில கடக ராசிக்காரங்கலாம் சொல்லுவீங்க இல்லையே நான் கஷ்டப்பட்டுட்டே தான் இருக்கேன்னா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கங்கறத நீங்க பாக்கணும் எத்தனை பேத்தோட கர்மாவை வாங்கி வச்சிருக்கீங்கங்கறத பாக்கணும் அது நம்மளுக்கு தேவையே இல்லை ஏன்னா இந்த பிரண்ட்ஸ்க்கு போய் ஹெல்ப் பண்றது மத்தவங்கள பாவம் பார்க்கிறது ரொம்ப பாவம் பார்க்கிறது தாக்ஷண்யம் பார்க்கிறது இதெல்லாம் கடகம் பண்றீங்கன்னா உங்களுடைய எனர்ஜி இப்படித்தான் உங்களுடைய லக் வெளிய போயிடும் சோ அந்த லக்க பத்தரமா வச்சுக்கணும்னா அதுக்காக உதவி பண்ணாதீங்கன்னு சொல்ல வரல உதவி யாருக்கு பண்றோம் அப்படிங்கறதுல ரொம்ப கவனமா இருக்கணும் அந்த பவுண்டரி செட் பண்ணிட்டு இருக்கிறது நல்லது நீ நல்லா இருக்க நான் நல்லா இருக்கேன் ஓகே என்னால இவ்வளவுதான் செய்ய முடியும்ங்கிற மாதிரி இருந்துக்கணும் அப்படி இருந்துகிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு 2026 நிஜமாலுமே லக் ஆக்டிவேட் ஆகக்கூடிய வருடம் தான் உங்களுக்கு.
Topics:கடகம்ஜாக்பாட்திருமணம்குழந்தை பிறப்புசனி கிரகம்உக்கிர தெய்வ வழிபாடுதாந்திரிக பயிற்சி2026 ஜோதிடம்செலவுகள்ஃபாரின் டிராவல்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →