Dhanusu 👉” சுயமா சிந்திக்கணும் நீங்க ” 🤯 | Astrologer J… — Transcript

தனுசு ராசி பெண்களின் வாழ்க்கை, தொழில், திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய ஜோதிட ஆலோசனைகள்.

Key Takeaways

  • தனுசு ராசி பெண்கள் சுயமாக சிந்திக்க வேண்டும் மற்றும் பிறரின் சொற்பொழிவுகளை blindly பின்பற்றக்கூடாது.
  • உட்கார்ந்து செய்யக்கூடிய வேலைகள் மற்றும் டீச்சிங் துறை தனுசு ராசி பெண்களுக்கு சிறந்தவை.
  • குடும்ப உறவுகளில் பொசசிவ்னஸ் அதிகம், அதனால் சமநிலை மற்றும் அன்பு முக்கியம்.
  • ஆரோக்கியம் மற்றும் உடல் பராமரிப்பு முக்கியம், உடல் உழைப்பை தவிர்க்கக்கூடாது.
  • குரு ஸ்தலங்களுக்கு செல்லுதல் மற்றும் பரிகாரங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும்.

Summary

  • தனுசு ராசி பெண்களுக்கு அறிவும் ஞானமும் உள்ளது, ஆனால் சுயமாக சிந்திக்க முடியாமல் பிறரின் சொற்பொழிவுகளை பின்பற்றுவார்கள்.
  • தனுசு ராசி பெண்களுக்கு உட்கார்ந்து செய்யக்கூடிய, குறிப்பாக டீச்சிங் துறை போன்ற தொழில்கள் சிறந்தவை.
  • திருமணம் தாமதமாகவும், குடும்பத்தில் சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்; அம்மாவின் சொற்பொழிவுகள் பெரிதும் பாதிப்பாக இருக்கும்.
  • தனுசு ராசி பெண்கள் அதிக பொசசிவ்னஸ் கொண்டவர்கள், இது குடும்ப உறவுகளில் சிக்கல்களை உருவாக்கும்.
  • உடல் பருமன் மற்றும் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டியது அவசியம்; சனி ஆக்டிவேஷன் மூலம் உடல் உழைப்பு முக்கியம்.
  • தனுசு ராசி பெண்கள் தொழிலில் நாலேட்ஜ் மற்றும் ஸ்கில்ஸ் மேம்படுத்தி 9-5 வேலை அல்லது தனிப்பட்ட தொழில்களில் வெற்றி பெறலாம்.
  • பார்ட்னர்ஷிப் பிசினஸ்கள் தனுசு ராசி பெண்களுக்கு பொருத்தமல்ல; தனிப்பட்ட வேலை அல்லது வேலை செய்யும் அமைப்புகள் சிறந்தவை.
  • பிரார்த்தனை மற்றும் குரு ஸ்தலங்களுக்கு செல்லுதல் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் பரிகாரங்களை வழங்கும்.
  • தனுசு ராசி பெண்கள் குடும்பத்தில் தங்கள் உரிமைகள் மற்றும் சுயபுத்தியை பாதுகாக்க வேண்டும்.
  • வீட்டிலிருந்து வேலை செய்வது மற்றும் குழந்தைகளுக்கு டியூஷன் கொடுப்பது தனுசு ராசி பெண்களுக்கு பொருத்தமான தொழில்கள்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அறிவு, ஞானம் எல்லாமே உண்டு. நல்ல படிக்கிறது அந்த மாதிரி எல்லாமே உண்டு. மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அமைப்புங்கிறது தனுசு ராசி பெண்களுக்கு ரொம்ப அதிகம்.
00:12
Speaker A
ஆனா ஒரு டிராபேக்கான விஷயம் என்ன தனுசு ராசி பெண்கள்ட்டனா
00:16
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு யார் பேச்சை ரொம்ப கேட்டு கெடுவாங்க அப்படின்னா தனுசு ராசி பெண்கள்
00:24
Speaker A
நீங்க என்ன மாதிரியான தொழில்லாம் உங்களுக்கு செட் ஆகும்னா உட்கார்ந்தே செய்யக்கூடிய தொழில் பெரும்பாலான தனுசு ராசி பெண்களுக்கு செட் ஆகும். டீச்சிங் துறை ரொம்ப அழகா செட் ஆகும். ப்ரொபசர், காலேஜ் ப்ரொபசரா போறது.
00:35
Speaker A
ஏன்னா இப்போ தனுசு ராசி பெண்கள் யார் கூட திருமணம் அமையும் அப்படின்னா
01:42
Speaker A
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
01:46
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா ஸ்பெஷலா பெண்களுக்காகவே
01:52
Speaker A
12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு. இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.
02:10
Speaker A
இது வந்து
02:11
Speaker A
ஆண்களுக்கு அப்படிங்கறது
02:14
Speaker A
ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது. அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக
02:20
Speaker A
நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
02:30
Speaker A
தனுசு ராசி பெண்கள்.
02:31
Speaker A
தனுசு அப்படிங்கறதே வந்து
02:33
Speaker A
குருவோட வீடு இல்லையா?
02:34
Speaker A
அப்போ இந்த குருவோட வீட்ல இருக்கக்கூடிய பெண்கள் எப்படி இருப்பாங்கன்னா
02:40
Speaker A
யாராவது ஒருத்தங்களுடைய சொல்பேச்சு கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க தனுசு ராசி பெண்கள்.
02:47
Speaker A
சொல்பேச்சு அப்படியே கேட்டு நடக்கிறது.
02:51
Speaker A
சுயமா அவ்வளவு சீக்கிரம் தனுசு ராசி பெண்கள் யோசிக்க மாட்டாங்க.
03:00
Speaker A
அதாவது அறிவு, ஞானம் எல்லாமே உண்டு. நல்ல படிக்கிறது அந்த மாதிரி எல்லாமே உண்டு.
03:07
Speaker A
மத்தவங்களுக்கு உதவி செய்யக்கூடிய அமைப்புங்கிறது தனுசு ராசி பெண்களுக்கு ரொம்ப அதிகம்.
03:15
Speaker A
ஆனா ஒரு டிராபேக்கான விஷயம் என்ன தனுசு ராசி பெண்கள்ட்டனா
03:20
Speaker A
சுயமா சிந்திக்க தெரியாது.
03:23
Speaker A
யாராவது ஒருத்தங்க சொல்றதை கேட்டு அதை ஃபாலோ பண்ற மாதிரி.
03:30
Speaker A
அதாவது சொல்பத்தி, சுயபுத்தி ஒன்னு இருக்கு இல்லையா?
03:34
Speaker A
டோட்டலா சொல்பத்தியிலேயே இருக்கிறது.
03:37
Speaker A
சுயபுத்தி எங்கெல்லாம் உங்களுக்கு மட்டுப்படுதோ.
03:42
Speaker A
அதாவது உங்களுக்கான உரிமையை
03:45
Speaker A
நீங்க விட்டுக்கொடுத்துடக்கூடாது தனுசு ராசி பெண்கள்.
03:48
Speaker A
பெரும்பாலும் விட்டுக்கொடுத்துருவீங்க.
03:50
Speaker A
தனக்கு என்ன வேணும்னே தெரியாது.
03:52
Speaker A
ஒரு கோர்ஸ் சூஸ் பண்றதா இருந்தாலும் சரி, ஒரு ப்ரொபஷனை சூஸ் பண்றதா இருந்தாலும் சரி.
04:00
Speaker A
இல்ல அதோட லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றதா இருந்தாலும் சரி, எங்கேயோ யாரோ ஒருத்தங்க சொல்றதை கேட்டுட்டே
04:07
Speaker A
செய்யற மாதிரி செவிவழி செய்திகளாவே கேட்டு பண்றப்ப
04:10
Speaker A
அது உங்களுக்கு பிற்காலத்துல ஏதோ ஒரு வகையில ஒரு கஷ்டமா அமைஞ்சிரும்.
04:16
Speaker A
ஏன் அப்படின்னா அவங்களுக்கு சர்வீஸ் மைண்ட்செட்ங்கிறது அதிகம்.
04:20
Speaker A
ஒரு எதிர்பார்ப்புல ஒரு தனுசு ராசி பெண் திருமணம் பண்ணிட்டீங்கன்னு வச்சுக்கோங்களேன்.
04:27
Speaker A
அந்த குடும்பத்துக்கு ரொம்ப உழைப்பை கொட்டுற மாதிரியோ இல்லைன்னா அந்த குடும்பத்துல இருக்கவங்க
04:34
Speaker A
எப்படின்னு புரிஞ்சுக்க முடியாத சூழல்ல கூட இருப்பீங்க.
04:39
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு யார் பேச்சை ரொம்ப கேட்டு கெடுவாங்க அப்படின்னா
04:46
Speaker A
தனுசு ராசி பெண்கள் அம்மாவோட பேச்சை கேட்டு தான் கெடுவாங்க.
04:50
Speaker A
அம்மா ரொம்ப போன் பேசக்கூடாது.
04:53
Speaker A
தனுசு ராசி பெண்கள் திருமணமாகி போயிட்டாங்க அப்படின்னா
05:00
Speaker A
ஏன்னா இவங்க யாராவது ஒருத்தங்களை கேட்டுக்கிட்டே இருப்பாங்க.
05:03
Speaker A
தாய் தான் வந்து ரொம்ப இவங்களை வந்து பிரைஸ் பண்ணிட்டே இருந்திருப்பாங்க.
05:10
Speaker A
போற்றி புகழ் பாடிட்டே இருந்திருப்பாங்க.
05:12
Speaker A
இந்த தாய் தகப்பன் நீ தான் பெஸ்ட் அப்படிங்கற விஷயத்தை எல்லாம் சொல்லி கேட்டு கேட்டு வளர்ந்து ஒரு புகுந்த வீட்டுக்கு போறப்ப அந்த அப்ரிசியேஷன் கொஞ்சம் கம்மியாகும்.
05:22
Speaker A
அப்போ இங்க போய் இல்லம்மா எனக்கு இந்த மாதிரி சொன்னாங்கம்மா அப்படிங்கறப்போ ஐயோ நீ இப்படிப்பட்டவளாச்சே உன்னை இந்த மாதிரி எல்லாம் பண்றாங்கங்கறப்போ அந்த பகைமைங்கிறது குடும்பத்துல உண்டாகக்கூடிய அமைப்புங்கிறது வந்துரும்.
05:34
Speaker A
அப்ப தனுசு ராசி பெண்கள் என்ன பண்ணுவாங்கன்னா புகுந்த வீட்டை ஒதுக்கி வைக்கக்கூடிய ஒரு அமைப்பு.
05:40
Speaker A
ஒரு எனிமிட்டி இயற்கையாவே கிரியேட் பண்ணக்கூடியது.
05:42
Speaker A
சிந்திக்காம சில விஷயங்களை செஞ்சறது.
05:45
Speaker A
இல்லைன்னா ரொம்ப செஞ்சுட்டு அதுக்கப்புறம் அந்த வேலிடேஷன் எதிர்பார்க்கிறப்போ அந்த வேலிடேஷனுக்கு சரியான ஒரு ரெஸ்பெக்ட் கிடைக்காம போறப்போ அந்த அங்கீகாரம், அந்த மரியாதை கிடைக்காம போறப்போ ஃபீல் பண்றது.
05:58
Speaker A
அதுக்கப்புறம் உழைப்பு போட்டுக்கிட்டே இருக்கிறது.
06:02
Speaker A
கடமைக்கே வாழக்கூடிய ஒரு அமைப்பு பெரும்பாலான தனுசு ராசி பெண்களுக்குங்கிறது அமைஞ்சிரும்.
06:08
Speaker A
நீங்கலாம் வந்து உங்களுடைய லைஃப் பார்ட்னருடைய லைஃப் ஸ்டைலை கவனிச்சுக்கிட்டே இருக்கணும்.
06:15
Speaker A
ஏன் அப்படின்னா நீங்க நிறைய கடமைகளாவே செஞ்சுகிட்டே இருக்கிற மாதிரியே
06:20
Speaker A
இருந்திடக்கூடாது.
06:21
Speaker A
கொஞ்சம் அன்பாவும், கொஞ்சம் பாசமாவும் ஏன்னா தனுசு ராசி பெண்களுக்கு அந்த மெட்டீரியலிஸ்டிக் தாட் அப்படிங்கறது ஒன்னு உண்டு.
06:29
Speaker A
ஆத்மார்த்தமா இருக்கிறோம் அப்படிங்கறது குருவுக்கு அவ்வளவு சீக்கிரம் வராது.
06:33
Speaker A
அப்ப அந்த ஆத்மார்த்தமான ஒரு பகிர்ந்தல், ஆத்மார்த்தமான ஒரு லைஃப் ஸ்டைல்குள்ள.
06:40
Speaker A
அதாவது லைஃப் லைஃப் பார்ட்னரை நம்பி
06:44
Speaker A
இருக்கிறதுன்னு ஒன்னு இருக்குது, அன்போடு இருக்கிறதுன்னு ஒன்னு இருக்குது.
06:50
Speaker A
கடமைக்காக இருக்கிறோம்னு ஒன்னு இருக்குது.
06:52
Speaker A
இது எல்லாமே பேலன்சிங்கா இருந்தா நல்லா இருக்கும்.
06:54
Speaker A
ரொம்ப ஓவர் டிபெண்டன்ட்டா இருக்கிறது.
06:57
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு பொசசிவ்னஸ்ஸும் ரொம்ப அதிகம்.
07:00
Speaker A
அதாவது கணவன் போய் அம்மாட்டயே இருக்கிறாங்க, அம்மாட்டயே பேசுறாங்க இல்ல அவங்க கூட பிறந்தவங்க கிட்டயே இருக்கிறாங்கன்னா தனுசு ராசி பெண்களுக்கு பொசசிவ்னஸ் அப்படிங்கறது அதிகமாயிரும்.
07:10
Speaker A
அப்ப குடும்பத்துல பிரச்சனைகள் அப்படிங்கறது வர ஆரம்பிச்சிரும்.
07:13
Speaker A
ரொம்ப லேட்டரான் ஸ்டேஜ்ல தான் தனுசு ராசி பெண்களுக்குங்கிறது புரிதலே கொஞ்சம் லேட்டரான் ஸ்டேஜ்ல தான் வரும்.
07:21
Speaker A
திருமணம் ஆகுறதுங்கிறது கூட கொஞ்சம் தாமதமாகி தான்
07:24
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு நடக்கும்.
07:26
Speaker A
என்னதான் இது குரு வீடாவே இருந்தாலும்
07:30
Speaker A
பரிகாரங்கள் எல்லாம் செஞ்சு தான் தனுசு ராசி பெண்களுக்கு மேக்ஸிமம் திருமணம் அமையும்.
07:36
Speaker A
அதேபோல குழந்தை பாக்கியமுமே அப்படித்தான்.
07:38
Speaker A
உடல் பருமன் ஆகாம பார்த்துக்கணும்.
07:41
Speaker A
ஏன்னா குரு இருக்கக்கூடிய இடம் பெருக்கிட்டே போகக்கூடிய ஒரு அமைப்பு.
07:46
Speaker A
அப்படிங்கறப்போ தனுசு ராசி பெண்கள் வெயிட் அதிகமா இருப்பாங்க.
07:50
Speaker A
அந்த வெயிட் அதிகமா இருந்து அதுக்குள்ள போய் சிக்கிடக்கூடாது.
07:56
Speaker A
பாடி ஆக்டிவிட்டிஸ், சனி ஆக்டிவேட் பண்ணனும்.
08:02
Speaker A
சனி ஆக்டிவேட் பண்றதுங்கிறது என்னன்னா
08:05
Speaker A
ஒரு ஜிம்முக்கு போறது, ஒரு யோகா பண்றது, உடல் உழைப்பை ஏதாவது ஒரு கேம்ஸ் விளையாண்டு
08:11
Speaker A
பாடிய ஃபிட்டா வச்சுக்கிறதுங்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்.
08:15
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு இல்லைன்னா அந்த ஒபிசிட்டியே வந்து
08:18
Speaker A
உங்களுக்கு பெரிய டிராபேக்கா மாறிடும்.
08:21
Speaker A
நீங்க என்ன மாதிரியான தொழில்லாம் உங்களுக்கு செட் ஆகும்னா
08:25
Speaker A
உட்கார்ந்தே செய்யக்கூடிய தொழில்
08:28
Speaker A
பெரும்பாலான தனுசு ராசி பெண்களுக்கு செட் ஆகும்.
08:32
Speaker A
டீச்சிங் துறை ரொம்ப அழகா செட் ஆகும்.
08:34
Speaker A
ப்ரொபசர், காலேஜ் ப்ரொபசரா போறது.
08:38
Speaker A
ஏன்னா குரு இல்லையா நீங்க?
08:40
Speaker A
ஐடி கம்பெனிலயே நீங்க வொர்க் பண்றீங்க அப்படின்னா
08:45
Speaker A
நீங்க ஒரு டாப் லீடா இருந்து மத்தவங்களை லீட் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு.
08:50
Speaker A
வெளிநாட்டுல இருக்கீங்க அப்படின்னா
08:53
Speaker A
எவ்வளவு பெரிய குரூப்பா இருந்தாலும் உங்களால இயக்க முடியும்.
08:56
Speaker A
அந்த அளவுக்கு உங்களுக்கு நாலேட்ஜ், நாலேட்ஜ் பேங்க் நீங்க.
09:00
Speaker A
அதெல்லாம் சரியா நீங்க யூஸ் பண்ணிக்கிறீங்க அப்படின்னா
09:03
Speaker A
உங்களுடைய நாலேட்ஜ் வச்சு தான் உங்களுக்கு டெவலப்மென்ட்டே.
09:08
Speaker A
எங்க போய் பணத்தை இன்வெஸ்ட் பண்றீங்க தனுசு ராசி பெண்கள்னா
09:12
Speaker A
கோட்டை விட்டுருவீங்க.
09:13
Speaker A
நாலேட்ஜ் இன்வெஸ்ட் பண்றீங்க.
09:16
Speaker A
ஸ்கில்ஸை இன்வெஸ்ட் பண்றீங்க.
09:18
Speaker A
அது வந்து 9 டு 5 ஜாப் ஆகட்டும் இல்ல தொழில் ஸ்டார்ட் பண்றதா இருக்கட்டும்.
09:22
Speaker A
இது ரெண்டுலமே ரொம்ப கவனம்.
09:25
Speaker A
தனுசு ராசி பெண்கள் ஒரு விஷயம்னா ஒரு விஷயத்தை ஃபோகஸ் பண்ணிட்டு இருக்கணும்.
09:30
Speaker A
இப்ப நீங்க வந்து பிசினஸ் பண்றீங்கன்னா தனிச்சு பிசினஸ் பண்ணிக்கிறது நல்லது.
09:33
Speaker A
பார்ட்னர்ஷிப் பிசினஸ்ங்கிறது உங்களுக்கு செட் ஆகாது.
09:36
Speaker A
முடிஞ்ச அளவுக்கு 9 டு 5 ஜாப் அப்படிங்கறது உங்களுக்கு செட் ஆகும்.
09:40
Speaker A
அதாவது இன்னொருத்தங்க சொல் கேட்டு தனுசு ராசி பெண்களுக்கு
09:45
Speaker A
ஒருத்தவங்க சொல்லணும் இவங்க செய்யணும்.
09:50
Speaker A
அந்த இன்ஸ்ட்ரக்ஷனை வாங்கி வாங்கி வேலை செய்யக்கூடிய ஒரு அமைப்பு.
09:53
Speaker A
அப்படிங்கறப்போ நீங்க ஜாப்க்கு போய்க்கிறது அப்படிங்கறது நல்லது.
09:56
Speaker A
அது வந்து வொர்க் ஃப்ரம் ஹோமா இருந்தாலும் சரி.
10:00
Speaker A
இல்ல அங்க போய் வொர்க் பண்றதா இருந்தாலும் சரி.
10:04
Speaker A
பெரும்பாலும் உங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ரொம்ப நல்லாவே செட் ஆகும்.
10:07
Speaker A
இருந்த இடத்துல இருந்து அட்மினிஸ்ட்ரேஷன் பண்ணக்கூடிய ஒரு ஸ்கில் அப்படிங்கறதும் நல்லா இருக்கும்.
10:11
Speaker A
உங்க குழந்தைக்கு நீங்க பாடம் சொல்லிக் கொடுக்கிறீங்கன்னா
10:15
Speaker A
உங்க குழந்தை ரொம்ப டாப்பா வரும்.
10:17
Speaker A
வீட்ல இருந்து டியூஷன் எடுக்கிறது.
10:20
Speaker A
இது எல்லாமே வந்து உங்களுக்கு உகந்த தொழில் தனுசு ராசி பெண்களுக்கு.
10:23
Speaker A
உங்களுக்கு ஆலயம் அப்படின்னு பார்க்கிறோம்.
10:27
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு குலதெய்வத்துடைய அனுகிரகம் அப்படிங்கறது கொஞ்சம்
10:32
Speaker A
கம்மியா இருக்கும்.
10:33
Speaker A
தனுசு ராசி எல்லாம் வந்து திருவண்ணாமலை போறது.
10:36
Speaker A
அங்க போய் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வந்து தரிசனம் பண்ணிட்டு வர்றது.
10:41
Speaker A
அப்பப்ப வந்து ராகு கேது பரிகாரங்கள் பண்ணிக்கிறதும் வந்து
10:46
Speaker A
கொஞ்சம் உங்களுக்கு லைஃப்ல அடுத்த லெவல் குரோத் அப்படிங்கறது கொடுக்கும்.
10:50
Speaker A
வருடத்துல ஒரு ஒரு தடவை ஆலங்குடி போயிட்டு வர்றதும்
10:55
Speaker A
குரு ஸ்தலங்களுக்கு போயிட்டு வர்றதுமே வந்து உங்களுக்கு வாழ்க்கையில முன்னேற்றம் அப்படிங்கறதை கொடுத்துரும்.
10:59
Speaker A
இப்போ தனுசு ராசி பெண்கள் யார் கூட திருமணம் அமையும் அப்படின்னா
11:04
Speaker A
தனுசு ராசி பெண்களுக்கு வந்து ஈர்ப்புங்கிறது
11:08
Speaker A
மேஷ ராசி மேல வரும்.
11:10
Speaker A
மேஷ ராசி ஆண்கள் மேல வந்துரும்.
11:13
Speaker A
அதோட கடக ராசி மேலயும் வரும்.
11:15
Speaker A
எப்பயாவது சிம்ம ராசி மேல வரும்.
11:18
Speaker A
இப்போ இந்த ஒவ்வொரு ராசிக்காரங்களுக்குமே ஒரு அமைப்பு உண்டு.
11:21
Speaker A
இப்ப தனுசு ராசி பெண்கள் மேஷ ராசி ஆண்களை திருமணம் பண்ணிக்கிறாங்க அப்படின்னா
11:26
Speaker A
நான் சொன்னேன் இல்லையா எங்கேயோ ஒரு இடத்துல ஒரு வேலிடேஷன் எதிர்பார்த்துட்டே இருக்கிறது.
11:30
Speaker A
இல்லைன்னா செஞ்சுகிட்டே இருக்கிறது அப்படிங்கிற ஒரு அமைப்பு.
11:33
Speaker A
இப்ப தனுசு ராசி பெண்கள் வந்து நிறைய செஞ்சுகிட்டே இருப்பாங்க மேஷ ராசி ஆண்களுக்கு.
11:38
Speaker A
ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல செய்யறதை நிறுத்திட்டாங்க அப்படிங்கறப்ப
11:43
Speaker A
அந்த மேஷ ராசி ஆண்களுக்கு இங்க இங்க பெண்கள் மேல கோவம் வரக்கூடிய அமைப்புங்கிறது ரொம்ப ரொம்ப அதிகம்.
11:48
Speaker A
அப்ப மேஷ ராசியை முடிஞ்ச அளவுக்கு அவாய்ட் பண்ணிக்கிறது நல்லது.
11:51
Speaker A
ஆனா இயற்கை என்ன பண்ணும்னா
11:54
Speaker A
மேஷ ராசிக்காரங்க கூட தான் சேர்ந்து வாழ்றதுக்கே கொடுக்கும். தனுசு ராசி பெண்கள் 20 வருஷம், 25 வருஷம்
12:02
Speaker A
ஏன் 30 வருஷமே கூட நீங்க வாழ்ந்தாலும் எங்கேயோ ஒரு இடத்துல
12:07
Speaker A
மேஷ ராசி பிரிஞ்சு போகக்கூடிய ஒரு அமைப்புங்கிறது பண்ணிரும்.
12:10
Speaker A
அதுல மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது.
12:12
Speaker A
அதேபோல கடக ராசி.
12:14
Speaker A
இப்ப தனுசு ராசி கடக ராசி கல்யாணம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா
12:18
Speaker A
நிறைய பிரச்சனைகள் சந்திச்சுட்டே இருக்கிற மாதிரியே இருக்கும்.
12:22
Speaker A
ஒருத்தர் ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டே இருக்கிற மாதிரியே இருக்கும்.
12:25
Speaker A
ஏன் அப்படின்னா கடக ராசி ஆண்கள் வந்து ரொம்ப பொசசிவ்.
12:30
Speaker A
ஒரு கண்ட்ரோலா இருக்கக்கூடிய ஒரு அமைப்புல இருப்பாங்க.
12:32
Speaker A
தனுசு ராசி பெண்கள் கொஞ்சம் பிராக்டிகலா இருக்கணும் அப்படின்னு நினைக்கிறப்ப
12:36
Speaker A
அந்த கடக ராசி ஆண்கள் தான் வந்து ரொம்ப அம்மா பசங்களாவும் இருப்பாங்க.
12:41
Speaker A
அப்போ இங்க ஒரு டிஸ்டர்பன்ஸ் அப்படிங்கறது வந்து தனுசு ராசி பெண்களுக்கு இருந்துகிட்டே இருக்கும்.
12:47
Speaker A
அப்போ இந்த கடக ராசி ஆண்களை திருமணம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா
12:51
Speaker A
கூட்டு குடும்பமா போய் வாழக்கூடிய ஒரு அமைப்புலாம் அதிகமாவே அமைஞ்சிரும்.
12:56
Speaker A
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வாழக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிற மாதிரியே
12:59
Speaker A
இருந்திருக்கும்.
13:00
Speaker A
அப்போ தனுசு ராசி பெண்களுக்கு வந்து மகர ராசி ஆண்கள் செட் ஆவாங்க.
13:04
Speaker A
சண்டைகள் அதிகமா வரும் மகர ராசியும் தனுசு ராசியும் திருமணம் பண்ணிக்கிறாங்க அப்படின்னா
13:08
Speaker A
சண்டைகள் அதிகம் ஆனா பிரிய மாட்டாங்க.
13:11
Speaker A
ஏதோ ஒரு வகையில சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு அமைப்புங்கிறது கொடுத்துரும்.
13:14
Speaker A
கும்ப ராசியும் தனுசு ராசிக்காரங்களுக்கு செட் ஆகாது.
13:16
Speaker A
மீன ராசி ரொம்ப நல்லாவே செட் ஆவாங்க.
13:18
Speaker A
ஏன் அப்படின்னா மீன ராசி ஆண்களுமே வந்து ரொம்ப வேலை வேலைன்னு இருக்கக்கூடியவங்க.
13:23
Speaker A
வொர்கஹாலிக்கா இருப்பாங்க.
13:24
Speaker A
குடும்பத்தை நீயே பார்த்துக்கோ அப்படின்னு தனுசு ராசி பெண்கள்ட்ட கொடுக்கிறப்ப
13:30
Speaker A
இந்த தனி குடுத்தனம் போய் இருக்கணும் தனுசு ராசி பெண்களுக்குலாம் வந்து ஆசைகள் அதிகமா இருக்கும்.
13:35
Speaker A
அப்ப இந்த மீன ராசி ஆண்களை திருமணம் பண்ணிக்கிறப்போ அவங்க கொஞ்சம் வேலைன்னு ஃபோகஸ் பண்றப்போ
13:40
Speaker A
நீங்க வீடுன்னு ஃபோகஸ் பண்றப்போ கொஞ்சம் சமநிலைக்கு அப்படிங்கிற மாதிரி வந்துரும்.
Topics:தனுசு ராசிபெண்கள் வாழ்க்கைஜோதிடம்தொழில் ஆலோசனைதிருமணம்குடும்ப உறவுகள்ஆரோக்கியம்பொசசிவ்னஸ்குரு ஸ்தலம்பரிகாரம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →