விருச்சிக ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Viruch… — Transcript

விருச்சிக ராசிக்கான செல்வ செழிப்பு தசா புத்தி ரகசியங்கள் மற்றும் ஆன்மீக பரிகார வழிகள் பற்றிய விரிவான விளக்கம்.

Key Takeaways

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மன அழுத்தம் மற்றும் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
  • மறுபிறவி மற்றும் புதிய தொடக்கம் மூலம் செல்வ செழிப்பை கட்டியெழுப்ப முடியும்.
  • தசா புத்தி மற்றும் கிரக நிலைகள் செல்வ செழிப்பை பாதிக்கும்; அதற்கான பரிகாரங்கள் அவசியம்.
  • நேர்மையான பண்பாடு மற்றும் தெளிவான பினான்சியல் திட்டமிடல் வெற்றிக்கு முக்கியம்.
  • ஆன்மீக வழிபாடு மற்றும் பரிகாரங்கள் வாழ்க்கை வளத்தை மேம்படுத்த உதவும்.

Summary

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் பணம் மற்றும் செல்வ செழிப்பு தொடர்பான மன அழுத்தங்கள் அதிகமாக இருக்கும்.
  • சந்திரன் நீசம் காரணமாக மன அழுத்தம் மற்றும் குறைந்த செல்வம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • மறுபிறவி போன்ற புதிய தொடக்கம் மூலம் பணம் மற்றும் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியும்.
  • நேர்மையான பண்பாடு மற்றும் தெளிவான பினான்சியல் திட்டமிடல் செல்வ செழிப்பை மேம்படுத்த உதவும்.
  • ஆன்மீக வழிபாடு மற்றும் முருகர் கோயில்களில் பஞ்சாமிர்தம் தானம் போன்ற பரிகாரங்கள் முக்கியம்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் தங்களது மனநிலை மற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
  • பழைய கடன்கள் மற்றும் மறைமுக மன அழுத்தங்களை சரியாக கையாள வேண்டும்.
  • தசா புத்தி மற்றும் ஜாதக கோச்சாரங்களைப் பொருத்து வாழ்க்கை திட்டங்களை அமைக்க வேண்டும்.
  • சந்திரன் நீசம் மற்றும் சனி பகை போன்ற கிரக நிலைகள் செல்வ செழிப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் ஆன்மீக வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி, தங்கள் வாழ்க்கையை முழுமையாக மேம்படுத்த வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
இந்த வருடம் எல்லாம் எப்படி இருக்கு அப்படின்னா செல்வ செழிப்பு ரீதியா மறுபிறவினே சொல்லலாம் விருச்சகத்துக்கு எமோஷன் ஸ்ட்ரெஸ்ஸியா அவங்க பணம்னு வந்தாலே கண்டிப்பா உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும் கடன்கள் அதிகமா இருக்கும்.
00:13
Speaker A
எங்களுக்கு எப்படி செல்வ செழிப்பு வரப்போகுதுன்னா இந்த வருடத்தை கரெக்டா யூஸ் பண்ணிக்கணும் அப்படிங்கறதுதான் வந்து விருச்சகத்துக்கு சொல்றதே ஒரு ஜீரோல இருந்து உங்களால எதை வேணாலும் பில்ட் பண்ணி கொண்டு போக முடியும்னு ஒன்னு இருக்குது.
00:23
Speaker A
நீங்க உங்களை முழுசா நம்பி ஒரு மறுஜென்மமா இதை கருதி துணிஞ்சு ஒரு செயல்பட்டீங்க அப்படின்னா லாங் டெர்மா யோசிக்கணும்.
00:34
Speaker A
வணக்கம் எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா எல்லா ராசிரமே எதிர்பார்க்கிறது என்னன்னா நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும்.
00:46
Speaker A
நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம் எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள் புண்ணிய ஸ்தலங்கள் தெய்வ வழிபாட்டு முறைகள் அவங்களுடைய லைஃப் ஸ்டைல் அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும்னு.
01:01
Speaker A
இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறது மாறிக்கிட்டே இருக்கும் அதாவது தசா புத்தி அப்படிலாம் இருக்கு இல்லையா உங்களுடைய ஜாதக ரீதியாகவும் உங்களோட தசா புத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு அதெல்லாம் பொறுத்துதான் நம்முடைய செல்வ செழிப்புமே நிரந்தரமா தங்குமா இல்ல வந்துட்டு போகுமா அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
02:03
Speaker A
விருச்சகம் அப்படின்னு பார்க்கிறப்போ விருச்சகத்துக்கு எப்போ விடிவு காலம் எப்போ விமோசனம் அப்படின்னுலாம் இருக்கும் விருச்சகத்துக்கு வந்து செல்வ செழிப்புல பெரும்பாலும் குறை கிடையாது எல்லாமே அமையும் விருச்சகத்தில் இருக்கிறவங்களுக்கு செழிப்புங்கறது ரொம்ப நல்லாவே இருக்கும் அந்த செழிப்பை நம்ம எப்படி கட்டி காத்தோ.
02:26
Speaker A
எந்த மாதிரி நம்ம வந்து அந்த சிச்சுவேஷன்ஸ நம்ம ஹேண்டில் பண்ணனும் அப்படிங்கறதுதான்.
02:34
Speaker A
சோ இந்த வருடம் எல்லாம் எப்படி இருக்கு அப்படின்னா செல்வ செழிப்பு ரீதியா மறுபிறவினே சொல்லலாம் விருச்சகத்துக்கு என்ன மாதிரி நீங்க பிளானிங் போட போறீங்க மன அழுத்தங்கள் ஏன்னா உங்களுக்கு வந்து சந்திரன் நீசம்.
02:52
Speaker A
அப்ப இந்த சந்திரன் நீசம் என்ன பண்ணும்னா எமோஷனலா போய் உங்களை ஒரு மாதிரி டிப்ரஷன் பண்ணிட்டு உங்களுக்கு ஒரு லோ கான்பிடன்ஸ் கொடுத்துரும் சம்டைம்ஸ் உங்களுக்கு சூரியன்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குன்னு வச்சுக்கோங்களேன் ஓவர் கான்பிடன்ஸ் கொடுத்துரும்.
03:27
Speaker A
சோ இது எல்லாமே இம்பேலன்ஸ்டா நீங்க ஹேண்டில் பண்ணிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கும் ஹேண்டில் பண்ண முடியாது.
03:42
Speaker A
எல்லாரும் எங்களுக்கு ஒரு விமோசனம் வருதுன்னு சொல்றாங்களே ஆனா எங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தங்கள் பினான்சியல் ரீதியா ரொம்ப ஆழந்து இருக்குது இதுல இருந்து எப்படி நாங்க மீண்டு வருவோனே தெரியல ஒரு செல்ப் கான்பிடன்ஸ் டெவலப் பண்ணுங்கன்னு சொல்றீங்க ஆனா எதை நோக்கி நாங்க போறதுன்னு தெரியல நாங்க பண்றது கரெக்ட்தானா.
04:16
Speaker A
ஆனா ஏதோ ஒரு வகையில எங்களுக்கு இது ஒரு கெட்ட பேர் வந்துகிட்டே இருக்கே இதெல்லாம் எப்படி ஹேண்டில் பண்றது அப்படின்னா அதனாலதான் சொன்னேன் இது வந்து உங்களுக்கு ஒரு மறுபிறவி.
04:30
Speaker A
ஒரு எமோஷனல் ஸ்ட்ரெஸ்ஸியா அவங்க பணம்னு வந்தாலே கண்டிப்பா உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும் கடன்கள் அதிகமா இருக்கும்.
04:40
Speaker A
சோ மறைமுகமாவே அந்த பழைய கடன் எல்லாமே வந்து உங்களுக்கு ஒரு அழுத்தம் அப்படிங்கறது கொடுத்துட்டே இருக்கும் ஏதாவது ஒரு இஸ்யூஸ ஏதாவது ஒரு இஸ்யூஸ் வரும் தயார் நிலையிலேயே இருக்கும் உங்களுக்கு பிரச்சனைகள் அப்படிங்கறப்ப எங்களுக்கு எப்படி செல்வ செழிப்பு வரப்போகுதுன்னா இந்த வருடத்தை கரெக்டா யூஸ் பண்ணிக்கணும் அப்படிங்கறதுதான் வந்து விருச்சகத்துக்கு சொல்றதே.
05:02
Speaker A
உங்களால வந்து ஒரு ஸ்கிராட்ச்ல இருந்து ஒரு ஜீரோல இருந்து உங்களால எதை வேணாலும் பில்ட் பண்ணி கொண்டு போக முடியும்னு ஒன்னு இருக்குது அதாவது ஒரு விஷயம் சொல்லுவாங்க பைனரி அப்படின்னு நம்ம சொல்லுவோம் இது வந்து ட்ரைனரி ஜீரோல இருந்து ஸ்டார்ட் பண்ண முடியும் ஜீரோ டு ஒன் அதுக்கப்புறம் ஒரு குரோத் அப்படிங்கறதுதான் சோ உங்களால ஸ்டார்டிங் பிரம் ஸ்கிராட்ச் யாரு அப்படின்னா விருச்சக ராசிக்காரங்கதான்.
05:22
Speaker A
அப்போ நீங்க உங்களை முழுசா நம்பி ஒரு மறுஜென்மமா இதை கருதி துணிஞ்சு ஒரு செயல்பட்டீங்க அப்படின்னா லாங் டெர்மா யோசிக்கணும் இந்த நேரத்துல நான் போய் ஒரு தொழிலை ஆரம்பிக்கணும்னு நான் நினைக்கிறேன் இந்த நேரத்துல இந்த விஷயம் பண்ணனும்னு நினைக்கிறேன் என்கிட்ட சரியான பேக்கப் இல்லைன்னா இருக்கிறதை வச்சு சின்ன சின்னதா சின்ன சின்னதா நீங்க பில்ட் பண்ணி உங்களால ரீபில்ட் பண்ணி கொண்டு போக முடியும் விருச்சகத்துக்கு அப்படிங்கறதுதான்.
05:42
Speaker A
சோ எதுல எல்லாம் உங்களுக்கு சக்சஸ் வரும்னா முதல் ரிசர்ச் ஏன்னா விருச்சகம்னாலே ஆழ்ந்த ஆராய்ச்சி பண்ணி இது என்ன அது என்னன்னு எல்லாமே நோண்டி நோண்டி பார்க்கக்கூடிய ஒரு அமைப்பு.
05:57
Speaker A
சோ நீங்க வந்து ஸ்பிரிச்சுவாலிட்டி அப்படிங்கறது விருச்சகத்துக்கு ரொம்ப நல்லா இருக்குது.
06:10
Speaker A
சோ ஆன்மீகம்ங்கறது ஒரு கடல் நம்ம போய் சாமி கும்பிடுறது அப்படிங்கறது எல்லாம் இல்லை.
06:25
Speaker A
சோ அந்த ஆன்மீகம்ங்கறது நம்முடைய சோல் எதோட கனெக்ட் ஆகுது நம்முடைய தேடல் எதுல இருக்கு அப்படிங்கறத நீங்க பாக்கணும் ஒரு சிலருக்கு ஸ்பிரிச்சுவாலிட்டி அப்படிங்கறது வந்து அவங்களுடைய அவங்க செய்யக்கூடிய தொழிலா கூட இருக்கும் அந்த ஸ்பிரிச்சுவாலிட்டி அப்படிங்கறது.
06:53
Speaker A
சோ அதுல போக்கஸ் பண்ணுங்க அதுல எப்படி அடுத்தடுத்த லெவலுக்கு போகணும் அப்படிங்கறத நீங்க பாக்கணும் அதோட இப்ப நீங்க யாருக்கு கீழயாவது வேலை பார்த்துட்டு இருக்கீங்க மே பி அவங்க வந்து உங்களை வித்தியாசமா கூட ஹேண்டில் பண்ணி இருந்திருக்கலாம் அந்த நேரத்துல உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காம போயிருந்திருக்கலாம் அதை நீங்க மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இருந்திருக்கலாம் அப்படிங்கற மாதிரி எல்லாம் இருக்கும்.
07:22
Speaker A
அது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் தான் அப்படிங்கறத நீங்க புரிஞ்சுக்கணும் அப்போ இந்த இடத்துல எவ்வளவு விவரமா விருச்சகம் சிச்சுவேஷன்ஸ ஹேண்டில் பண்றாங்கன்னு இருக்கு சீக்கிரம் சீக்கிரம் தவறாவே நினைச்சுப்பாங்க விருச்சகம்.
07:40
Speaker A
அப்ப விருச்சகம் எப்படி இருக்கும்னா ஏன் எங்களுக்கு எல்லாமே நெகட்டிவா சொல்லிட்டு இருக்கேன் உங்களுக்கு நெகட்டிவா சொல்லவே இல்லை ரொம்ப அன்பா அனுசரணையா ஏன்னா அங்க சந்திரன் நீசம் சம்டைம்ஸ் நம்ம வந்து எமோஷனலா சில விஷயம் சொல்றப்போ அது ரிவர்ஸாவே போய் சேரும் ஜெனரலா விருச்சக ராசிக்கு எப்படி இருக்கும்னா எங்களுக்கு ஒரு பிரச்சனை நான் சொல்றேன் நீங்க கேளுங்க சொல்யூஷன் சொல்லுங்க ஆனா நான் வந்து ஃபாலோ பண்ண மாட்டேன் அப்படிங்கற மாதிரிதான் இருக்கும் ஏன் அப்படின்னா எல்லாத்தையும் கேட்டுட்டு திரும்பவும் நாளைக்கு எக்ஸிகியூட் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு அதை அப்படியே பாதியிலேயே விட்டுறது இல்லாட்டி செயல்பாடு பண்ணிட்டு அதுவும் பாதியிலேயே நிக்கிறது சோ கன்சிஸ்டன்ட் எஃபர்ட் அப்படிங்கறது வந்து விருச்சக ராசிக்கு ரொம்ப ரொம்ப அவசியம்.
08:37
Speaker A
சோ உங்களுடைய பினான்சியல் பிளானிங் கரெக்டா ஒரு ஸ்ட்ராடஜி போட்டுதான் நீங்க பிளான் பண்ணனும் அப்படின்னே இருக்குது அந்த மறைமுகமான இந்த நம்பர் டூ பிசினஸ் இந்த பினான்சியல் டீல்ஸ சத்தமே இல்லாம பண்றது இதெல்லாம் நீங்க செய்யக்கூடாது.
08:56
Speaker A
முடிஞ்ச அளவுக்கு ட்ரான்ஸ்பரன்சியா இருந்திருக்கிறது நல்லது இது வந்து உங்களுக்கே பேக் ஃபயர் ஆயிடும்.
09:12
Speaker A
அதாவது நல்லா உங்களுடைய ப்ரொபஷனல் லைஃப்ல ரொம்ப நேர்மையாவே நீங்க இருந்திருப்பீங்க இப்ப என்ன ஆயிருக்கும்னா நான் இவ்வளவு நேர்மையா இருந்து என்ன யூஸ்.
09:30
Speaker A
நான் இப்படி செஞ்சா என்ன அப்படின்னு நினைச்சிட்டீங்கன்னா உங்களுக்கு அங்க சனி பகை சோ உங்களுடைய டிசிப்ளினை நீங்க எங்க மிஸ் பண்றீங்களோ அங்க நீங்க மாட்டிருவீங்க.
09:52
Speaker A
சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் அந்த டிசிப்ளின் டிசிப்ளினாவே இருக்கட்டும் அப்பதான் உங்களுக்கு வந்து செழிப்பு அப்படிங்கறது ரொம்ப ரொம்ப அருமையாவே இருக்கும் நீங்க வந்து முருகர் ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு பண்றது மலையேறி போங்க பழனி மலையேறி போய் வழிபாடு பண்ணிட்டு அங்க பஞ்சாமிர்தம் வாங்கி எல்லாத்துக்கும் பஞ்சாமிர்தத்தை தானமா கொடுங்க.
10:25
Speaker A
இப்படி நீங்க பண்ணும் பொழுது ஏதாவது ஒரு பிளாக்கேஜஸ் இருக்கு அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு கிளியர் ஆகி இது மறுபிறவியே இது மறுஜென்மமே விருச்சகத்துக்கு செல்வ செழிப்பு கண்டிப்பா ரொம்ப நல்லபடியாவே உங்களுக்கு அமையும்.
10:40
Speaker A
சோ பொதுவாவே செழிப்பை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னே இருக்கு.
10:57
Speaker A
அப்போ ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான் இன்னார் இந்த கோயிலுக்கு போங்க இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு.
11:12
Speaker A
சோ பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும் எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா திருப்பதிதான் பெருமாள்தான் ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கும் அவங்க போலாம்.
12:04
Speaker A
ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா மேஷம் போலாம் அதே மாதிரி சிம்மம் போலாம் ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கற மாதிரி இருக்கும் அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது.
12:40
Speaker A
சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள்தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது அடுத்தது பார்க்கிறப்போ செழிப்பு வரணும் முதல் லக் வரணும் அப்புறம் செழிப்பு வரணும் அப்படின்னாலே அது லட்சுமிதான் மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.
13:56
Speaker A
மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா நல்ல வெல்த் நல்ல ஒரு ப்ராஸ்பரிட்டி நல்ல செழிப்பாதான் போகணும் இல்லையா எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்கு எல்லாம் போகும் பொழுது நம்ம வந்து ஒரு மனநிலைமை எல்லாம் சரியா வச்சிட்டுதான் போகணும்.
14:23
Speaker A
சிலர் எல்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன் லட்சுமி கோயிலுக்கு போனேன் ஆனா என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கு நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது.
14:40
Speaker A
சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும் பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும் நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.
15:05
Speaker A
இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும் வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்பவும் அதவே பன்மடங்கு கொடுத்துருவோம் அப்படிங்கறதுதான் லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம் லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.
15:33
Speaker A
லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியான தருணங்கள் பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க.
15:51
Speaker A
சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும்.
16:02
Speaker A
அடுத்தது வந்து யாரு கொடுக்கப்போறா அப்படின்னு ஒன்னு இருக்குல்ல குருதான் கொடுக்கணும்.
16:13
Speaker A
அப்போ குருவோட அனுக்கிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம் அப்போ குரு ஸ்தலங்கள் குரு வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு ஆலங்குடி போயிட்டு வந்துரும் யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை இல்லை என்கிட்ட பணம் இருக்கு ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா உடனே ஆலங்குடி கிளம்பி போயிடணும்.
16:40
Speaker A
ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவாரு அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு ஒரு பெண்ணோ ஒரு பென்சிலோ ஒரு பேகோ ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது காசு கொடுத்து இந்த இந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது.
17:08
Speaker A
நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதற்கான பிராயச்சித்தமே அதுதான்.
17:16
Speaker A
சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.
17:25
Speaker A
சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும் ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா.
17:30
Speaker A
சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கிறவங்களுக்கு சனிதான் முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டுதான் புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு.
17:50
Speaker A
இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள் இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும்.
18:03
Speaker A
இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்கிறாங்க அவங்களுக்கெல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா நன்றி சொல்லிட்டு வந்துரும்.
18:12
Speaker A
திருநள்ளாறு போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்கிருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்ட்டு பரிகார ஸ்தலம் போயிட்டு கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது நிறைய பேர் இது நிறைய பேர் செய்யக்கூடிய தப்புதான் ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க.
18:33
Speaker A
இந்த கோயில் ஒன்னு போறேன் ஃபார் எக்ஸாம்பிள் காளகஸ்தி போவீங்க காளகஸ்தியிலிருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது இல்ல திருப்பதியிலிருந்து அப்படியே காளகஸ்தி வரேன்னு போறது காளகஸ்திங்கறது என்னது பரிகார ஸ்தலம் திருப்பதிங்கறது என்னது புண்ணிய ஸ்தலம்.
18:52
Speaker A
புண்ணியத்தை வாங்கிட்டு வந்து இங்க பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா இல்ல இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும் அது பிளஸ் அண்ட் மைனஸ்ங்கற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.
19:06
Speaker A
சோ அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா திரும்பி வீட்டுக்குதான் வரணும்.
19:10
Speaker A
புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்குதான் வரணும்.
19:13
Speaker A
இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம் பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரும் புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரும்.
19:22
Speaker A
சோ இதுலயும் ரொம்ப கவனம் இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா.
19:30
Speaker A
அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்கன்னு நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.
19:40
Speaker A
யாராவது வந்து பரிகாரங்கள் விட்ட குறை தொட்ட குறை வச்சிட்டு நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன் போனேன் அப்படின்னா அதெல்லாம் புண்ணியம் தராது.
19:50
Speaker A
சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கறதுதான்.
20:00
Speaker A
சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறாங்க ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.
20:06
Speaker A
நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க ஸ்கந்த சஷ்டி கவசம் கேளுங்க வேல்மாறல் கேளுங்க.
20:15
Speaker A
பிளாக்கேஜஸ் முதல் வீட்டிலிருந்துதான் கிளியர் ஆகணும் அப்படிங்கறது ஒன்னு இருக்குது.
20:22
Speaker A
சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும் வீட்ல நெய் விளக்கேத்திட்டே இருக்கணும் முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள் எல்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.
20:34
Speaker A
சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.
Topics:விருச்சிக ராசிதசா புத்திசெல்வ செழிப்புஆன்மீக பரிகாரம்மன அழுத்தம்பினான்சியல் திட்டமிடல்சந்திரன் நீசம்முருகர் வழிபாடுமறுபிறவிஜாதக கோச்சாரம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →