துலாம் 👉 நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க போகிறது | Thulam … — Transcript

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026ல் புதிய வாய்ப்புகள், நிதி நிம்மதி, குடும்ப கவனம் மற்றும் சவால்களை சமாளிக்கும் வழிகாட்டல்.

Key Takeaways

  • 2026ல் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • குடும்ப உறவுகள் மற்றும் குலதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கும்.
  • பொறுமை, நிதானம் மற்றும் கவனத்துடன் செயல்பட வேண்டும், தவறான ஆலோசனைகளுக்கு எச்சரிக்கை.
  • சவால்களை சமாளித்து புதிய தொடக்கங்களை மேற்கொள்ள 2026 சிறந்த காலம்.
  • உடல் மற்றும் மனநிலையை பாதுகாப்பது அவசியம்.

Summary

  • துலா ராசி மக்கள் 2026ல் கடன் தீர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம்.
  • குரு பெயர்ச்சி மற்றும் கிரக நிலைகள் தொழில் மாற்றம், சம்பள உயர்வு மற்றும் மனநிம்மதி தரும்.
  • சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் கடன் அதிகரிப்பு மற்றும் நரம்பு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.
  • குலதெய்வ வழிபாடு மற்றும் குடும்ப உறவுகள் முக்கியத்துவம் பெறும்.
  • துலாம் ராசிக்காரர்கள் பொறுமை, நிதானம் மற்றும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
  • பிரண்ட்ஷிப் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்; தவறான ஆலோசனைகளுக்கு எச்சரிக்கை.
  • பண இழப்பு மற்றும் கடன் தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம், அதனால் வீட்டு ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
  • 2026ல் தொழில் விரிவாக்கம், புதிய முதலீடு வாய்ப்புகள் மற்றும் வேலை மாற்றங்கள் அதிகரிக்கும்.
  • துலாம் ராசிக்காரர்கள் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • புதிய தொடக்கம் மற்றும் வளர்ச்சி நோக்கி முன்னேற 2026 சிறந்த ஆண்டு ஆகும்.

Full Transcript — Download SRT & Markdown

00:06
Speaker A
துலா ராசி அப்படின்னா எதையும் சீர்தூக்கி பார்த்து தெளிவான முடிவெடுக்க கூடியவர்கள் அப்படிங்கறது தெரியும்.
00:10
Speaker A
அவங்களுக்கு உள்ள கடன் இதெல்லாம் தீரும்.
00:13
Speaker A
மொத்தத்துல புதிய வாய்ப்புகள் நமக்கு கதவு வந்து தட்டும்.
00:16
Speaker B
நிதானம், பொறுமை அப்படிங்கறது துலாமுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
00:20
Speaker B
அப்சர்வ் பண்ணனும் சுத்தி என்ன விஷயம் நடக்குது அப்படிங்கறது துலாம் அப்சர்வ் பண்ணுனீங்க அப்படினாலே நல்லபடியாவே அமையும்.
00:26
Speaker C
தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டமா முதல் ஒரு அஞ்சு மாசம் இருக்கு.
00:30
Speaker C
தயவு செஞ்சு வீட்ல அம்மா சொல்ற பேச்சை கேளுங்க நீங்க யார் சொல்றது கேக்குறீங்களோ இல்லையோ அவங்க அம்மா சொல்ற பேச்சை கேளுங்க.
00:34
Speaker C
யாருக்கும் தெரியாம வீட்ல ஏதாவது ஒரு வேலை பண்றேன்ற மாதிரி பண்ணீங்கன்னா அதுல மாட்டிக்குவீங்க.
00:38
Speaker D
2026 முழுக்க முழுக்க உங்களுக்கு காசு பணத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது நிம்மதியா இருக்கக்கூடிய வாய்ப்புகள்.
00:43
Speaker E
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026.
00:47
Speaker E
வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு வருஷம் போகுது மாசம் போகுது நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.
00:58
Speaker E
நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களோட வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது.
01:56
Speaker E
சார் துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 என்ன மாதிரி பலன்களை கொடுக்கப்போகுது சார்.
02:00
Speaker A
நல்லா இருக்குங்க அது ஒன்னும் தப்பு ஒன்னும் இல்லை.
02:04
Speaker A
துலா ராசிக்காரர்களுக்கு இந்த 1/6 வந்து அவங்களுக்கு ஜூன் மாதம் 1ஆம் தேதி குரு பெயர்ச்சி அங்க வரும்போது குடும்பமாக்கு தனஸ்தானத்தை வந்து இரண்டாம் வீட்டை பார்க்க போறார்.
02:15
Speaker A
பிரதிக அவருடைய ஜென்மத்தை பார்க்கிறார்னு வச்சுக்கங்க.
02:19
Speaker A
இருந்தாலும் செய்யும் தொழில்ல இடமாற்றம் அதிக சம்பளம் மனநிம்மதி தரக்கூடிய இடம்.
02:23
Speaker A
அதே மாதிரி தொழில் பண்றதா இருந்தா எக்ஸ்டென்ஷன் எக்ஸ்பான்ஷன் புது இன்வெஸ்ட்மென்ட் அவங்களுக்கு உள்ள கடன் இதெல்லாம் தீரும்.
02:30
Speaker A
மொத்தத்துல புதிய வாய்ப்புகள் நமக்கு கதவு வந்து தட்டும்.
02:34
Speaker A
துலா ராசி அப்படின்னா எதையும் சீர்தூக்கி பார்த்து தெளிவான முடிவெடுக்க கூடியவர்கள் அப்படிங்கறது தெரியும் அதனால அவங்களுக்கு வந்து நானு நீங்க குரு வந்து ஆறு மாசம் இப்படி இருக்கு அப்படி இருக்கு அப்படின்னு சொல்ல வேண்டாம்.
03:21
Speaker A
ஆனா ஆறாம் இடத்துல இருக்கக்கூடிய சனியும் செவ்வாயும் கடனை அதிகப்படுத்துவாங்க தூக்கம் இருக்காது ஏதோ சிந்தனை வைப்பட்டவங்க இல்ல அப்படின்னா நிறைய பொறுப்புகள் அதிகம் போறதுனால அவங்களுக்கு வேலையினால தூக்கம் கம்மியாக இருக்கும்.
03:41
Speaker A
அப்படிப்பட்டவர்கள் மிக ஜாக்கிரதையாக நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள்ல கவனமா இருக்கணும்.
03:47
Speaker A
பழைய வியாதி மருத்துவ செலவு இதெல்லாம் கம்மியாகும் தாயினுடைய உடல் நிலையில அக்கறை வேணும்.
03:55
Speaker A
இவங்களுக்கு தூரதேச பிரயாணங்கள் சில நேரங்கள்ல சின்ன ஷார்ட் டிஸ்டன்ஸ் போயிட்டு போயிட்டு வர மாதிரி வரும் இதையெல்லாம் செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும்.
04:03
Speaker A
சனி உச்சம் பெறக்கூடிய இடம் இந்த இடம் நியாயாதிபதிகள் நீதிபதிகள் இவங்க எல்லாம் இந்த ராசியில தான் இருப்பாங்க.
04:12
Speaker A
ஆக உங்களை பொறுத்தவரைக்கும் ஒரு முறை உங்க குலதெய்வ வழிபாடு போய் பண்ணிட்டு வாங்க எவ்வளவுக்கு எவ்வளவு குலதெய்வத்தை நீங்க கொண்டாடுறீங்களோ 2026 சிறப்பான ஆண்டாக இருக்கும் வாழ்க வளமுடன்.
05:04
Speaker A
ஆல் தி பெஸ்ட்.
05:05
Speaker E
குலதெய்வத்தை போய் வழிபட சொல்லி இருக்கீங்க நேயர்களும் அதை ஃபாலோ பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன் மேம் நீங்க சொல்லுங்க துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு.
05:13
Speaker B
துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 தவறான சேர்க்கைகளுக்குள்ள போற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு.
05:23
Speaker B
ஏன் அப்படின்னா கரெக்டான தவறானவர்களை போய் நம்பி ஏமாறக்கூடிய ஒரு அமைப்பு அது பிரண்ட் அப்படிங்கிற ஒரு போர்வைகுள்ள வரவங்களாதான் இருப்பாங்க.
05:32
Speaker B
வீட்ல இருக்கவங்களோடைய அட்வைசஸ் அப்படிங்கறது கொஞ்சம் கேட்டுக்கிறது நல்லது துலாவுக்கு ஜெனரலாவே அட்வைசஸ் பிடிக்காது அவங்கள அப்ரிசியேஷன் மட்டுமே பண்ணிட்டு இருக்கிறது அப்படிங்கறதுதான் துலாமுக்கு பிடிக்கும்.
05:45
Speaker B
துலாமுக்கு வந்து ஃபெயிலியர்ஸ் அப்படிங்கற ஒரு விஷயத்தை பார்க்கிறப்போ தாங்கிக்க முடியாது அந்த சேலஞ்சஸ் அப்படிங்கறது துலாம் பேஸ் பண்ணனும்.
05:55
Speaker B
ஏன் அப்படின்னா இந்த 2026 நீங்க நிறைய சேலஞ்சஸ் பேஸ் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு.
06:06
Speaker B
அந்த கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து கொஞ்சம் நெக்ஸ்ட் லெவல் அந்த நெக்ஸ்ட் லெவல்ங்கறது என்ன அப்படின்னா ஒரு குரோத்த நோக்கி போகக்கூடியது.
06:16
Speaker B
ஏன் அப்படின்னா உங்களுக்கு டைம் எப்படி இருக்குன்னா உங்களுடைய பொருளாதாரம் அப்படிங்கறது கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கக்கூடிய ஒரு அமைப்பு ஏன்னா உங்க வீட்ல இருக்கவங்க ஒருவேளை உங்களுடைய கணவனோ இல்ல உங்களுடைய மனைவியோ இல்ல உங்களுடைய அம்மாவோ அப்பாவோ யாரோ ஒருத்தங்களுக்கு வந்து பினான்சியல் வைஸ் குரோத் அப்படிங்கறது வரப்போ இதுல வீண் விரைய செலவு பண்ண வைக்கிறதுக்காகவே உங்களோட வரக்கூடிய சேர்க்கைகள் அதை செய்ய முயற்சி பண்ணுவாங்க அப்படிங்கறப்போ நீங்க வீட்டாரோட சரியான ஒரு முறையில நியாய தர்மத்தோடு இருக்க முடியாத ஒரு சூழலுக்குள்ள உங்களுடைய மனநிலைமை அப்படிங்கறது தள்ளப்படும்.
07:06
Speaker B
துலாம் அப்படிங்கறவங்க இப்ப எப்படி இருக்கணும் அப்படின்னா லிசனிங் மட்டுமே பண்ணிட்டு இருக்கணும்.
07:14
Speaker B
எக்ஸிகியூஷன் அப்படிங்கறது லேட்டர் ஆன் ஸ்டேஜ்ல பண்ணிக்கணும்.
07:21
Speaker B
ஏன் அப்படின்னா துலாம் உங்களுடைய சின்னம் என்ன அப்படின்னா தராசு உயிரற்ற பொருள்.
07:29
Speaker B
அப்போ நீங்க ரெண்டையுமே பேலன்ஸ் பண்றவங்களா இருக்கணும் உங்களை யாராவது தூக்கி நிலைநிறுத்துறவங்களா இருக்கணும்.
07:36
Speaker B
நீங்க யாரு பக்கம் செவிசாய்க்கிறீங்க அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கு உங்களுக்கு உங்களுடைய குடும்பத்தினராகட்டும் உங்களுக்கு ரொம்ப வெல்விஷஸ் ஆகட்டும் எல்லாருமே உங்களுக்கு நல்லது சொல்ல முயற்சி பண்ணும் பொழுது எங்கேயோ அட்வைஸ் பண்ற மாதிரி தெரியும் பொழுது அது அட்வைஸ் இல்ல என்னுடைய நல்லதுக்கு அப்படின்னு தெரிஞ்சுக்கணும்.
08:20
Speaker B
யாரெல்லாம் உங்களுக்கு அட்வைஸ் பண்ண மாட்டாங்க அப்படின்னா உங்களை புகழ்ச்சி பண்ணிட்டு உங்க ஏஜ் கேட்டகிரிலயே உங்கள்ட்ட பேசிட்டே இருந்து கெடுக்க பார்க்கக்கூடிய ஒரு அமைப்பு.
08:40
Speaker B
இன்னொரு விஷயம் என்னன்னா உங்களுடைய பிரைனை ஈட் பண்ணக்கூடிய விஷயம் அப்படிங்கறது இந்த கெஜட் பண்ணப்போகுது விடிய விடிய விடிய அதையே பார்த்து பார்த்து பாதி இல்லயூஷன் அந்த இன்டியூஷன் இல்லயூஷனா மாறறது ஒரு கன்பியூஷனா மாறறது அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதெல்லாம் வரும் அதனால பேலன்சிங் நிதானம் பொறுமை அப்படிங்கறது துலாமுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் அப்சர்வ் பண்ணனும் சுத்தி என்ன விஷயம் நடக்குது அப்படிங்கறது துலாம் அப்சர்வ் பண்ணுனீங்க அப்படினாலே இந்த 2026 உங்களுக்கு நல்லபடியாவே அமையும்.
08:57
Speaker E
வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க துலாம் ராசிக்கு 2026 எப்படி இருக்கப்போகுது.
09:02
Speaker C
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தடவை தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டமா முதல் ஒரு அஞ்சு மாசம் இருக்கு.
09:09
Speaker C
அடுத்த ஒரு ஏழு மாசம் எப்படி இருக்கு அப்படின்னா கொஞ்சம் கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வெடியாதான் இருக்கு பார்த்து பத்திரமாதான் கால் வைக்கணும்.
09:16
Speaker C
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தடவை ஒரு விஷயத்துல ரொம்ப கவனம் பிரெண்ட்ஷிப்ல மட்டும் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் அதே மாதிரி உங்களை நம்பி சில விஷயம் சொல்றேன்னு யாராவது சொல்லி அதுக்காக நீங்க காது கொடுத்து கேட்டு நீங்க அவங்களுக்கு அட்வைஸ் பண்ணி கடைசில உங்களை வம்பல மாட்டி விட்டு போயிடுவாங்க.
10:00
Speaker C
நான் சொல்றது புரியுது அதனால யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீங்க யாருக்கு வந்து இந்த தூது போறது அது மாதிரி வேலை எல்லாம் பார்க்காதீங்க தேவையில்லாம உங்க பேர்ல யாராவது கடன் வாங்கி குடுன்னு சொல்லி உங்களை மேனிபுலேட் பண்ணி கடனை வாங்க வச்சு அதுக்கப்புறம் உங்களுக்கு வந்து கடனை உங்க பேர்ல கட்டி விட்டு போறதுக்கான வாய்ப்புகள் எல்லாம் இருக்கு இதுல கொஞ்சம் கவனமா இருக்கணும்.
10:25
Speaker C
எது சூப்பரா இருக்கும் அப்படின்னா நிறைய துலாம் ராசிக்காரர்களுக்கு நகை வச்சீங்கன்னா நகையை மீட்டெடுக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு இந்த தடவை.
10:33
Speaker C
இரண்டாம் இடத்துக்கு குரு பார்வை வரப்போகுது எனக்கு தெரிஞ்சு நான் சொன்ன மாதிரி அந்த ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே குரு வந்து இயங்க ஆரம்பிச்சிருவார்ன்றபோது வரக்கூடிய ஏப்ரல்ல இருந்து துலாம் ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கு.
10:46
Speaker C
இரண்டாம் இடத்துக்கு குரு பார்வை நான்காம் இடத்திற்கு குரு பார்வை கிட்டத்தட்ட ஆறாம் இடத்திற்கு குரு பார்வை அப்படின்றபோது நிறைய பேருக்கு வேலை மாற்றம் கண்டிப்பாக உண்டு.
10:56
Speaker C
நீங்களா சொந்தமா ஒரு தொழில் பண்ணலாம் அப்படின்ற மாதிரி நீங்களா ஒன்னு ஆரம்பிக்கிறதுக்கான வாய்ப்பு எல்லாம் இருக்கு நண்பர்களோட சேர்ந்து நிறைய பண இழப்பு சந்திச்சிருப்பீங்க போன வருஷம் ஃபுல்லாமே ஒரு மாதிரி ஒரு பாதியில இருந்து பண இழப்பு நிறைய இருந்துகிட்டே இருக்கும் தயவு செஞ்சு வீட்ல அம்மா சொல்ற பேச்சை கேளுங்க நீங்க யார் சொல்றது கேக்குறீங்களோ இல்லையோ அவங்க அம்மா சொல்ற பேச்சை கேளுங்க.
11:36
Speaker C
அதே மாதிரி யாருக்கும் தெரியாம வீட்ல ஏதாவது ஒரு வேலை பண்றேன்ற மாதிரி பண்ணீங்கன்னா அதுல மாட்டிக்குவீங்க ஒன்னு கொடுத்தா ரெண்டு கொடுக்கும் ரெண்டு கொடுத்தா மூணு கொடுக்கும்னு யாராவது உங்களை வந்து பணம் கொடுத்து அதிக வட்டிக்கு தரேன்ற மாதிரி வருவாங்க ஏன்னா குருவோட போர்ஷன் கொஞ்சம் அப்படித்தான் இருக்கு திரும்ப பத்தாம் இடத்துல குரு உட்காரும்போது பதவி பறி போகுமா அப்படி இப்படின்னு எல்லாம் இல்ல பதவி மாற்றம் கிடைக்கும்.
12:02
Speaker C
ஒரு இடத்தை விட்டு இன்னொரு வேலைக்கு போறதுக்கான வாய்ப்புகள் எல்லாம் உண்டு எஸ்பெஷலி கொஞ்சம் பல்லு பார்த்துக்கணும் நிறைய துலாம் ராசிக்காரர்கள் பல்லு போய் எடுக்கறதுக்கு பல்லு ரூட் கால் பண்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு அதே மாதிரி கண்ணு சம்பந்தப்பட்டு டாக்டர் கிட்ட போவீங்க ஷோல்டர்ல கொஞ்சம் பெயின் அப்பப்ப வந்துட்டு போகும் கொஞ்சம் ஸ்கின் அலர்ஜில இருந்து என்ன சொல்றது ஒரு ரெண்டு மாசம் அப்படியே ஒரு மாதிரி கஷ்டப்படுவீங்க அதுக்கப்புறம் இந்த தடமே தெரியாம மாறி போயிடும்.
12:19
Speaker C
நிறைய துலாம் ராசிக்காரர்கள் டிராவல் பண்ணுவீங்க இந்த தடவை வீடு மனை வண்டி வாகனம் உங்களுக்கு உங்களுக்கு உங்களுக்குன்னு சில விஷயத்தை வாங்கிக்கணும்னு ஆசை இருக்கும்.
12:28
Speaker C
அந்த ஆசை எல்லாம் நான்காம் இடம் எல்லாம் உடமை இந்த உடமைன்றது உங்களுக்கான உடமை உங்களுக்குன்னு சில விஷயம் பண்ணி எனக்குன்னு ஒரு போன் எனக்குன்னு ஒரு கார் எனக்குன்னு ஒரு வீடு எனக்கு எனக்கு எனக்குன்ற மாதிரியான விஷயங்கள் எல்லாம் ஏப்ரலுக்கு அப்புறம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு நிறைய நாள் நீங்க வாங்கணும் வாங்கணும்னு நினைச்ச எல்லாத்தையும் வாங்க போறீங்க.
13:21
Speaker C
கொஞ்சம் உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் இல்ல உங்களுக்கும் உங்க கணவருக்கும் ஒரு சின்ன கருத்து வேறுபாடு வரலாம் ஒரு மூன்று மாதம் கொஞ்சம் ஊடலாகவும் அடுத்த மாதம் எல்லாம் கொஞ்சம் கூடலாகவும் இருக்க போகுது சோ அதனால வார்த்தைகளில் ரொம்ப கவனமா இருக்கணும்.
13:32
Speaker C
குரு பார்வை இருக்கிறது ஒரு பக்கம் செல்ப் கான்பிடன்ட் இன்கிரீஸ் பண்ணி கொடுத்தாலுமே நான் தான் பெரிய ஆளுன்ற மாதிரி பேச வச்சிரும்.
13:41
Speaker C
அதனால பேச்சுல மட்டும் கவனமா இருக்கணும் மத்தபடி சூப்பரா இருக்கு நிறைய வைரம் வாங்குவீங்க எவ்வளவு காசு எவ்வளவு போனாலும் வைரம் வாங்குறதுக்கான அமைப்பு இந்த தடவை துலாம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி வாங்குறதுக்கான அமைப்பு இருக்கு நிறைய குருமார்களுடைய சந்திப்பு கிடைக்க போகுது நிறைய கோயில்களுக்கு போக போறீங்க புனித யாத்திரைகள் நீராட போறீங்க.
13:56
Speaker C
நிறைய டிராவல் பண்ண போறீங்க ஜீவ சமாதி வழிபாடு சித்தர்களுடைய வழிபாடுன்ற மாதிரி மனம் கொஞ்சம் அந்த மயிலைக்கு போகுது ஒரே ஒரு விஷயம் இந்த தடவை துலாம் ராசிக்காரர்களுக்கு என்ன வாழ்வியல் பரிகாரம்னா தயவு செஞ்சு மெடிடேஷன் பண்ணுங்க வேற ஒண்ணுமே இல்லை பத்தாம் இடத்துல கர்ம ஸ்தானத்துல வந்து குரு அமர போறார் கர்மிகளை இன்கிரீஸ் பண்ண போறார் ஆறாம் இடத்துல வேற அந்த பக்கம் உட்கார்ந்திருக்கார் சனி அதனால மெடிடேஷன் பண்ணுங்க பௌர்ணமி ஒளியில மெடிடேஷன் பண்ணுங்க.
15:00
Speaker C
உங்க வீட்ல மொட்டை மாடி இருக்கு இல்ல டெரஸ் இருக்கு எங்கயோ இருக்கு துளசி செடி பக்கத்துல வச்சு அது பக்கத்துல மெடிடேஷன் பண்ணீங்கனாலே இந்த தடவை துலாம் ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கு ரொம்ப நல்லா இருக்கு.
15:01
Speaker E
மெடிடேஷன் பண்ணாலே வாழ்க்கை நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி சொல்லி இருக்கீங்க சார் நீங்க சொல்லுங்க துலாம் ராசிக்கு 2026 எப்படி இருக்கு.
15:06
Speaker D
2026 துலாம் ராசி நண்பர்களுக்கு ஃபர்ஸ்ட் விஷயம் அருமையான ஒரு கார் வாங்குவீங்க அதுதான் உண்மை இருக்கிற காரை கொடுத்துட்டு நல்ல காரா வாங்கக்கூடிய பிராப்தம்.
15:16
Speaker D
ஒரு சில பேர் ஒருவேளை டூ வீலர் இருந்தீங்கன்னா டூ வீலர் மாத்தி ஒரு பெரிய வண்டி வாங்கக்கூடிய பிராப்தம்.
15:22
Speaker D
நிறைய பேருக்கு வீட்ல பூர்வீக சொத்துக்கள் வரக்கூடிய பிராப்தம் நிறைய பேருக்கு பாக்கியஸ்தானம் ஃபுல் ஆக்டிவா இருக்க போகுது.
15:30
Speaker D
எப்படி பார்த்தாலும் மூணு நாலு மாசத்துக்கு நல்லா இருக்கும் அதுக்கப்புறம் பத்தாம் இடத்துக்கு குரு போனதுக்கு அப்புறம் வொர்க்கிங் பார்ட்னரா நீங்க மாறக்கூடிய வாய்ப்புகள்.
15:39
Speaker D
தொழில் அமைப்பு அப்படிங்கக்கூடிய ஸ்தானத்துல இன்வெஸ்ட்மென்ட் போடுற ஒருத்தரா இருப்பாரு ஒர்க் பண்ணி கொடுக்கிறது நீங்களா இருப்பீங்க.
15:47
Speaker D
உங்க ஷேர் என்ன இருக்கோ அது கண்டிப்பா கிடைக்கும் நிறைய பேர் ஒருவேளை மனைவியா இருந்தால் கணவருடைய தொழில்ல நீங்க வந்து வொர்க்கிங் பார்ட்னரா மாறுவீங்க.
15:56
Speaker D
இல்ல நீங்க கணவரா இருக்கீங்கன்னா வைஃபோட தொழில்ல நீங்க வந்து வொர்க்கிங் பார்ட்னரா மாறக்கூடிய பிராப்தம் ரொம்ப அதிகமா இருக்கு நிறைய பேர் வந்து இந்த ஹாஸ்டல் பெசிலிட்டி அதே மாதிரி விடுதிகள் தங்கக்கூடிய விடுதிகள் ஒரு ரிசார்ட் கட்டுறது இந்த டவுன் சவுத்ல வந்து நிறைய விஷயங்கள் வாங்கி போட்டு கட்டுறது.
16:44
Speaker D
அதே மாதிரி நிறைய பேர் இந்த விண்ட் எனர்ஜி சோலார் எனர்ஜி இந்த மாதிரி விஷயங்கள்ல இன்வெஸ்ட் பண்றது எந்த இடத்துல நம்ம கவர்மெண்ட் சப்சிடி கிடைக்கும் அப்படின்னு பிளான் பண்ணி அந்த விஷயங்கள் வாங்கி அதை நம்ம இன்வெஸ்ட் பண்றது நிறைய பேருக்கு வீட்டு கடன் கண்டிப்பா க்ளோஸ் பண்ணக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
16:57
Speaker D
தொழில் ஸ்தானம் அதே மாதிரி ஜீவன ஸ்தானம் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பொதுவா நல்லா அமைஞ்சிருச்சு அப்படின்னாவே 2026 முழுக்க முழுக்க உங்களுக்கு காசு பணத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
17:08
Speaker D
நிம்மதியா இருக்கக்கூடிய வாய்ப்புகள் ஆனா 24 மணி நேரம் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டும்தான் 2026 அதிகமா இருக்கும்.
17:16
Speaker D
அப்ப என்ன அர்த்தம் ஹெல்த் பார்த்துக்கணும் அப்படின்னு அர்த்தம் பத்தாம் இடத்துக்கு குரு வர்றார் அப்படின்னாவே அது கர்ம ஸ்தானம் அப்படின்னு சொல்லுவோம்.
17:27
Speaker D
பத்தாம் இடத்துக்கு குருனா வீட்ல அம்மாவுடைய ஹெல்த் பார்த்துக்கணும் கால் முட்டி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள் கவனமா இருக்கணும் ஏன்னா தொடை பகுதிகள்ல சின்ன பிரச்சனை.
17:36
Speaker D
ஒரு சில பேருக்கு மருகு இருக்கு சார் அது பெரிய சமாச்சாரம் கிடையாதுன்னு பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியும் அது ஏதோ கட்டி போயிருக்கு இல்ல லைட்டா அது பயாப்ஸி அனுப்பணும் அப்படின்னுலாம் சொல்லி நம்மள பயமுறுத்துவாங்க பெரிய பாதிப்புல ஒன்னும் கொடுக்காது சோ மோர் ஆர் லெஸ் துலாம் ராசி நண்பர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வு 2026 கண்டிப்பா உண்டு.
18:22
Speaker D
பரிகார ஸ்தானம்னு பார்க்கும்போது மிக முக்கியமா சாரங்கபாணி வழிபாடு கும்பகோணம் சாரங்கபாணியை போய் நமஸ்காரம் பண்ணிட்டு வந்தீங்கன்னா நல்ல மாற்றங்கள் கண்டிப்பா உண்டு டோட்டலா பார்க்கும்போது 85% நல்லா இருக்கும்.
18:32
Speaker E
நாலு பேருமே துலாம் ராசிக்கு நல்லா இருக்கு கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க அப்படிங்கறதையும் சொல்லி இருக்கீங்க.
Topics:துலாம் ராசி2026 ராசிபலன்புதிய வாய்ப்புகள்குரு பெயர்ச்சிதொழில் மாற்றம்கடன் தீர்வுகுலதெய்வ வழிபாடுநிதி நிம்மதிசவால்கள்ஆரோக்கியம்

Frequently Asked Questions

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் பணப் பிரச்சனைகள் இருக்குமா?

இல்லை, துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு முழுக்க முழுக்க காசு பணத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. நிம்மதியாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி என்ன பலன்களைத் தரும்?

ஜூன் 1 ஆம் தேதி குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் தனஸ்தானத்தை இரண்டாம் வீட்டைப் பார்க்கப் போகிறார். இது செய்யும் தொழிலில் இடமாற்றம், அதிக சம்பளம், மனநிம்மதி மற்றும் புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். மேலும், அவர்களுக்கு உள்ள கடன்கள் தீர்ந்து, புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

துலாம் ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

ஆறாம் இடத்தில் இருக்கும் சனியும் செவ்வாயும் கடனை அதிகப்படுத்தலாம் மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். எனவே, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தாயின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →