Simmam 👉ஆன்மிக பயணத்தில் எச்சரிக்கை | Astrologer Jeevit… — Transcript

சிம்ம ராசிக்குரிய குரு அதிசார பெயர்ச்சி மற்றும் ஆன்மிக பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

Key Takeaways

  • குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம், குறிப்பாக தொற்று நோய்களுக்கு.
  • நிதானமாக முடிவெடுத்து, தர்மபூர்வமான வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
  • குரு தர்மத்தின் வழிகாட்டியாக செயல்படுகிறார், அதனால் பயப்பட வேண்டாம்.
  • ஆன்மிக பரிகாரங்கள் மற்றும் பரிகார முறைகள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

Summary

  • சனி பிடியில் இருந்து குரு பெயர்ச்சி மூலம் புதிய நல்ல பாதைகள் திறக்கப்படுகின்றன.
  • சுகாதார பிரச்சனைகள் மற்றும் தொற்று நோய்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்.
  • குரு பெயர்ச்சி ஆன்மிக தேடலுக்கு வழிகாட்டுகிறது மற்றும் வாழ்க்கையில் சுபகாரியங்களை தருகிறது.
  • திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பரிகாரம் செய்தால் செழிப்பு மற்றும் நல்லது வரும்.
  • மிதுனம் மற்றும் கடகம் ராசிகளில் குரு பெயர்ச்சி மற்றும் அதிசார பெயர்ச்சி நடைபெறுகிறது.
  • குரு தர்மத்தின் பிரதிநிதி, நல்ல முடிவுகள் எடுக்க நிதானமாக இருக்க வேண்டும்.
  • சனி மற்றும் குரு கிரகங்களின் பாதிப்புகளை புரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
  • குரு பெயர்ச்சி என்பது ஒரு ஆண்டு காலம் ஒரு ராசியில் இருப்பதைக் குறிக்கிறது.
  • வக்ரம் (வக்ரகாலம்) என்பது குரு தற்காலிகமாக நிதானம் எடுத்துக் கொள்ளும் காலம்.
  • குரு பெயர்ச்சி மூலம் திருமணம், செல்வம், செழிப்பு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
இத்தனை நாள் சனி பிடியில கொஞ்சம் இருந்திருப்பீங்க. எப்படா குரு வருவார் அப்படின்னு காத்துட்டு இருந்திருப்பீங்க.
00:06
Speaker A
இப்ப குரு உங்களுக்கு ஒரு நல்ல பாதையை காட்டுறதுக்கு தான் வராரு.
00:11
Speaker A
சுகாதார பிரச்சனைனால ஏதாவது தொற்று வியாதிகள் வரக்கூடிய ஒரு அமைப்போ இந்த மாதிரி இருக்கும்.
00:18
Speaker A
அதுல மட்டும் நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கிறது அப்படிங்கறது நல்லது.
00:24
Speaker A
சனி வந்து கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்குது சிம்மத்துக்கு பாதி வாழ்க்கை என்ன அப்படிங்கறத இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கும் உங்களுக்கு.
00:57
Speaker A
சிம்ம ராசியில இருக்கவங்களுக்கு வந்து குரு என்ன செய்ய போறாருன்னா நல்ல விஷயங்கள் தான் பண்ண போறாரு.
01:03
Speaker A
அதாவது இத்தனை நாள் சனி பிடியில கொஞ்சம் இருந்திருப்பீங்க.
01:08
Speaker A
எப்படா குரு வருவார் அப்படின்னு காத்துட்டு இருந்திருப்பீங்க.
01:12
Speaker A
இப்ப குரு உங்களுக்கு ஒரு நல்ல பாதையை காட்டுறதுக்கு தான் வராரு.
01:16
Speaker A
இதை வந்து நீங்க ஒரு நல்ல முறையில உபயோகிக்கணும்.
01:22
Speaker A
அதாவது எப்படின்னா சிம்மத்துல ரெண்டு வகையா இப்ப பார்க்கப்படுது.
01:25
Speaker A
அதாவது ஒருவேளை கணவன் மனைவி பிரிஞ்சிருக்கலாம்.
01:30
Speaker A
இல்ல பிரிஞ்சிருந்து டிவோர்ஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.
01:35
Speaker A
இல்ல டிவோர்ஸ் ஆகி அடுத்த திருமணத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.
01:38
Speaker A
இப்படி எந்த நல்ல விஷயத்துக்காகவும் நீங்க எதிர்பார்த்துட்டு இருக்கீங்க.
01:47
Speaker A
அதாவது ரொம்ப கஷ்டம் துயரப்பட்டுட்டேன் நானு இத்தனை நாள் இதே துயரப்பட்டுட்டே இருந்துட்டேன்.
01:52
Speaker A
இந்த துயரத்துல இருந்து நான் மீளனும்.
01:54
Speaker A
சுபமான சில விஷயங்களை நீங்க யோசிச்சுட்டு இருப்பீங்களா நல்லது நடக்கணும் அப்படின்னு.
01:59
Speaker A
அந்த நல்லது நடக்குறதுக்கான அமைப்பு அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா அமையும்.
02:04
Speaker A
அதே மாதிரி வெளிநாடு போகணும்னு நினைக்கிறீங்களா?
02:06
Speaker A
வெளிநாடு போகக்கூடிய அமைப்பு அந்த பிராப்தம் ஆன்மீகம் அப்படிங்கிற விஷயம் வந்து ரொம்ப நல்லா இருக்கு.
02:13
Speaker A
இந்த தடவை உங்களுக்கு வந்து அந்த குருவோட அதிசார பெயர்ச்சி வந்து நல்ல ஒரு ஆன்மீக தேடலுக்கான ஒரு விடை.
02:20
Speaker A
அந்த ஒரு திருப்தி நிலைமை அப்படி எல்லாம் கொடுத்தாலுமே.
02:25
Speaker A
உங்களுக்கு டிராவலிங் அப்படின்னு வரப்ப மட்டும் கொஞ்சம் ஹைஜீனிக்கா அதாவது சுகாதாரமா இருந்திருக்கிறது அப்படிங்கறது நல்லது.
02:30
Speaker A
ஏன்னா உங்களுடைய உடம்புல உபாதைகள் அப்படிங்கறது வந்து சுகாதார பிரச்சனைனால ஏதாவது தொற்று வியாதிகள் வரக்கூடிய ஒரு அமைப்போ இந்த மாதிரி இருக்கும்.
02:38
Speaker A
அதனால அதுல மட்டும் நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கிறது அப்படிங்கறது நல்லது.
02:43
Speaker A
நீங்க வந்து திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணிட்டு வந்தீங்க அப்படின்னா.
02:50
Speaker A
எல்லாமே செழிப்பாவே இருக்கும் தேக்க நிலைகள் எதுவும் இல்லாம சனி பிடியிலிருந்து கொஞ்சம் வெளிய வந்து சுபகாரியங்கள் அப்படிங்கறது உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும்.
02:59
Speaker A
சரி எல்லாமே எனக்கு நல்லாதான் நடக்க போகுதா?
03:03
Speaker A
அப்ப நான் வந்து பட்டு பட்டுன்னு முடிவெடுத்துறேன் அப்படின்னு சொல்லி முடிவெடுத்துற கூடாது.
03:07
Speaker A
ஏன் அப்படின்னா இத்தனை நாள் சில தேக்க நிலைகள் அப்படிங்கறது எல்லாம் சிம்மம் சில பேர் பார்த்திருந்திருப்பீங்க லைஃப்ல.
03:12
Speaker A
இப்ப திடீர்னு எல்லாம் நல்லது நடக்க போகுது அப்படிங்கறப்போ நிதானம் தவறக்கூடிய ஒரு அமைப்பும் அப்படிங்கறது உங்களுக்கு இருக்கு.
03:18
Speaker A
சுத்தி நம்மள சுத்தி என்ன விஷயங்கள் நடக்குது.
03:23
Speaker A
எடுக்கக்கூடிய முடிவு சரியானது தானா?
03:26
Speaker A
கொஞ்சம் டைம் எடுத்து முடிவெடுத்துக்கிறது அப்படிங்கறது நல்லது.
03:33
Speaker A
ஏன் அப்படின்னா உங்களுக்கு குரு வந்து இங்க உபதேசம் பண்ணிட்டு தான் இருக்கிறார்.
03:36
Speaker A
ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க தான் வந்திருக்கிறார்.
03:38
Speaker A
ஏன்னா ஆல்ரெடி சனி வந்து கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்குது சிம்மத்துக்கு.
03:44
Speaker A
உங்களுக்கு வந்து அஷ்டமத்துல சனி இருக்கனால.
03:49
Speaker A
பாதி வாழ்க்கை என்ன அப்படிங்கறத இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கும் உங்களுக்கு.
03:54
Speaker A
இந்த தருணத்துல இருந்து இப்ப குரு ஒரு ஜஸ்ட் ஒரு அப்கிரேடேஷன்.
04:00
Speaker A
அப்படியே கொஞ்சம் ஒரு ஒரு விடுவிக்கிற மாதிரி ஒரு நல்ல காரியம் நடக்குறதுக்கு.
04:04
Speaker A
ஒரு நல்ல நிகழ்வுகள் நடக்குறதுக்குங்கறப்போ.
04:08
Speaker A
புலப்படாது சில சமயங்கள்ல.
04:11
Speaker A
அந்த நேரங்கள்ல வந்து அவசரப்பட்டு முடிவெடுத்த எந்த முடிவுகளுமே வந்து உங்களுக்கு சரியான முடிவா இருக்கறதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி.
04:20
Speaker A
அதனால நிதானமா முடிவெடுத்து எடுத்த முடிவு சரிதானா அப்படின்னு குரு ஸ்தானத்துல இருக்கவங்க யார்கிட்டயாவது கேட்டு.
04:26
Speaker A
நீங்க முடிவுகள் எடுக்கிறீங்க அப்படின்னா அது ஒரு நல்ல முடிவாவே இருக்கும்.
04:30
Speaker A
நீங்களே தாந்தோன்றி தனமா முடிவுகள் எடுக்காம இருந்திருக்கிறது இந்த தருணத்துல நல்லது.
04:35
Speaker A
ஏன்னா ஆல்ரெடி உங்களுக்கு சனி இருக்கிற காரணத்தினால நிதானம்ங்கிற பாடம் அங்க சனி ஆல்ரெடி எடுத்துட்டு இருக்கறதுனால.
04:42
Speaker A
சுப காரியமா இருந்தாலும் சரி சுப செலவுகள் பண்றதா இருந்தாலும் சரி அது சுப விரய செலவாவே இருந்தாலும் சரி நிதானத்தோடு முடிவெடுக்கிறது அப்படிங்கறதுதான் வந்து இங்க சிம்மத்துக்கு.
04:52
Speaker A
நான் சொல்லக்கூடிய ஒரு சின்ன அட்வைஸ் அப்படின்னு கூட நீங்க எடுத்துக்கலாம்.
05:09
Speaker A
மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
05:18
Speaker A
அதே இது நவம்பர் மாசம்.
05:25
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.
05:29
Speaker A
சனிக்கு பயந்துக்குவாங்க.
05:30
Speaker A
நிஜமா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?
05:36
Speaker A
ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு.
05:40
Speaker A
எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட.
05:45
Speaker A
கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.
05:52
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
05:54
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா.
06:00
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.
06:08
Speaker A
கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கறதுதான் விதி.
06:13
Speaker A
அப்ப அந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?
06:20
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி.
06:25
Speaker A
பயபக்தியோட பண்ணி.
06:30
Speaker A
குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
06:34
Speaker A
இன்னைக்கு நம்ம பேச போற விஷயம் என்ன அப்படின்னா.
06:39
Speaker A
குரு அதிசார பெயர்ச்சி.
06:41
Speaker A
அது என்ன குரு அதிசார பெயர்ச்சி?
06:43
Speaker A
சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சுட்டு இருக்கு.
06:48
Speaker A
குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கற மாதிரி இருக்கும்.
06:51
Speaker A
அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது.
06:56
Speaker A
அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
07:05
Speaker A
அதே இது நவம்பர் மாசம்.
07:09
Speaker A
திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.
07:13
Speaker A
அதுதான் அதிசார பெயர்ச்சி.
07:15
Speaker A
அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.
07:18
Speaker A
குருனா யாரு?
07:20
Speaker A
குரு வந்து அவர் தேவ குரு இல்லையா?
07:22
Speaker A
அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.
07:24
Speaker A
தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.
07:26
Speaker A
அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்.
07:31
Speaker A
குரு வந்து பிள்ளை பேர் ஆகட்டும்.
07:34
Speaker A
திருமணம், செல்வம், செழிப்பு.
07:36
Speaker A
அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா?
07:42
Speaker A
சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்.
07:46
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.
07:50
Speaker A
சனிக்கு பயந்துக்குவாங்க.
07:51
Speaker A
நிஜமா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?
07:54
Speaker A
குருவுக்கு தான் பயந்துக்கணும்.
07:57
Speaker A
ஏன் அப்படின்னா.
07:59
Speaker A
குரு ஞானக்காரகன்.
08:01
Speaker A
அதாவது தர்மம்.
08:03
Speaker A
தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.
08:07
Speaker A
இல்ல அப்படின்னா தர்மம் தலை காக்கும்.
08:10
Speaker A
கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ.
08:16
Speaker A
அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா?
08:18
Speaker A
தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிப்பார் தெய்வம் தர்மத்தின் பக்கமே நிக்கும் அப்படிங்கறதுதான் வந்து குருவோட கொள்கையே.
08:24
Speaker A
அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட.
08:29
Speaker A
நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.
08:35
Speaker A
சரி இந்த குரு அதிசார பெயர்ச்சினா என்ன?
08:38
Speaker A
இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.
08:41
Speaker A
புரியுற மாதிரி சொல்லுங்க.
08:43
Speaker A
எங்களுக்கு அது புரியல பெயர்ச்சினா என்ன அதிசார பெயர்ச்சினா என்ன அப்படின்னா.
08:48
Speaker A
நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க.
08:51
Speaker A
ஒரு பஸ்னு வச்சுக்கோங்க.
08:52
Speaker A
எல்லாருமே பஸ்ல போயிருப்போம்.
08:54
Speaker A
இப்ப நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது.
08:58
Speaker A
பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்ப நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?
09:02
Speaker A
பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.
09:04
Speaker A
ஆனா பஸ் அங்கேயே தான் நிக்குது.
09:06
Speaker A
நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.
09:07
Speaker A
அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே.
09:13
Speaker A
ஒரு வருடம் ஒரு ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பாரு.
09:19
Speaker A
மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.
09:23
Speaker A
அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.
09:28
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
09:30
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா.
09:33
Speaker A
குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.
09:39
Speaker A
அந்த மாதிரி ரிவர்ஸ் போறாரு இப்ப.
09:41
Speaker A
அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா.
09:45
Speaker A
இது வந்து வானில் நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.
09:49
Speaker A
அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கி தான் போகணும்.
09:53
Speaker A
வக்ரம் அடையறாரு.
09:56
Speaker A
வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.
10:00
Speaker A
நிதானத்தை இழந்து.
10:02
Speaker A
அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.
10:08
Speaker A
என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ.
10:13
Speaker A
டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறாரு அந்த இடத்துல.
10:15
Speaker A
அப்ப என்ன பண்ணுவேன்?
10:16
Speaker A
குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?
10:17
Speaker A
குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.
10:20
Speaker A
இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம்.
10:25
Speaker A
காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா?
10:28
Speaker A
கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும்.
10:32
Speaker A
எப்படா கடவுளை பார்ப்போம்.
10:33
Speaker A
ஆனா பாத்துருவோம்.
10:34
Speaker A
அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோ கிரேட் அப்படின்னு சொல்லுவாங்க.
10:40
Speaker A
குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும்.
10:45
Speaker A
திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியிலே திரும்பவும் வந்துருவார்.
10:50
Speaker A
கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வான்ல அந்த வானியல் சாஸ்திரப்படி.
10:57
Speaker A
அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.
11:02
Speaker A
அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது.
11:09
Speaker A
சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறது எல்லாம் குரு கொடுக்க மாட்டார்.
11:14
Speaker A
நிதானமா தான் கொடுப்பார்.
11:15
Speaker A
சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.
11:20
Speaker A
ஆனா குரு வந்து குரோத்த கொடுப்பாரு உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும்.
11:27
Speaker A
எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறது எல்லாம் தெரியும் இல்லையா?
11:33
Speaker A
அது இன்னும் நிதானிச்சு கொடுக்க போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசார பெயர்ச்சி.
11:37
Speaker A
அப்படிங்கறது அர்த்தம்.
11:39
Speaker A
இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசார பெயர்ச்சி என்னென்ன மாதிரியான.
11:44
Speaker A
நல்லதை எப்படி கொடுக்க போறாரு?
11:48
Speaker A
என்ன பாடத்தை கற்றிக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.
11:51
Speaker A
ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்க தான் வராரு.
11:53
Speaker A
அது இந்த அதிசார பெயர்ச்சி எப்படி தெரியுமா ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாதியார் போறப்ப.
11:59
Speaker A
அந்த வாதியார் எப்படி நம்மட்ட பிஹேவ் பண்ண போறார்னே நம்மளுக்கு தெரியாது.
12:04
Speaker A
அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசார பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்த போகக்கூடிய விஷயமா இருக்கும்.
12:10
Speaker A
சரி இந்த குரு அதிசார பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா.
12:16
Speaker A
கடகம், ரிஷபம், மீனம்.
12:20
Speaker A
இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசார பெயர்ச்சி நிச்சயமா நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும்.
12:27
Speaker A
நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.
12:31
Speaker A
அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்போட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.
12:36
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.
12:42
Speaker A
மிதுனம், தனுசு, மகரம்.
12:46
Speaker A
கொஞ்சம் கவனமா இருந்திருக்கிறது நல்லது இந்த அதிசார பெயர்ச்சில.
12:51
Speaker A
ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால.
12:53
Speaker A
எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.
13:00
Speaker A
குரு உருவாக்க மாட்டார்.
13:01
Speaker A
குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால.
13:07
Speaker A
கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.
13:12
Speaker A
யாருக்கெல்லாம் ஓகே அதாவது ஒரு மத்தியமா இருக்குது.
13:16
Speaker A
ஒன்னும் இல்ல நீங்க எல்லாம் பிரச்சனை இல்ல உங்களை எல்லாம் குரு அதிசார பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்க போறது இல்ல அப்படிங்கறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா.
13:24
Speaker A
மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம்.
13:30
Speaker A
உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படிங்கறது சொல்லுது.
13:37
Speaker A
பொதுவாவே குரு அப்படிங்கறவர் எதுக்கு வராரு அப்படினாலே.
13:43
Speaker A
நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்கு தான்.
13:47
Speaker A
அப்ப இந்த குரு அதிசார பெயர்ச்சி பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்கு தான் பயந்துக்கணும்.
13:52
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோட பண்ணி.
13:57
Speaker A
இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் திருப்பி திருப்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்க்குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற.
14:05
Speaker A
குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.
14:08
Speaker A
குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே.
14:11
Speaker A
அவர் வந்து நம்மளுக்கு டீச்சர் தானே.
14:14
Speaker A
அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க.
14:16
Speaker A
ஓகே இனிமேல் நீ இந்த தவறு பண்ணக்கூடாது.
14:17
Speaker A
இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா கர்மத்தின் பாதையில போயிருவோம்.
14:24
Speaker A
இது எப்படின்னா.
14:26
Speaker A
கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கறதுதான் விதி.
14:30
Speaker A
அப்ப அந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?
14:34
Speaker A
செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.
14:38
Speaker A
அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா.
14:43
Speaker A
தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.
14:45
Speaker A
குருங்கறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.
14:49
Speaker A
என்னங்கறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை.
14:52
Speaker A
ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோட நம்ம அந்த தெய்வத்தை நம்பி இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ.
15:00
Speaker A
குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும்.
15:04
Speaker A
எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கறது ரொம்ப நல்லது.
15:10
Speaker A
சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்கு தான் பயந்துக்கணும்.
15:14
Speaker A
ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கற மாதிரி இருக்கும்.
15:20
Speaker A
ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
15:25
Speaker A
அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா?
15:29
Speaker A
குரு தட்சணை எல்லாம் செழிப்பான்னா அது குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வர்றது.
15:33
Speaker A
அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து இது பண்ணனா போதுமா அப்படிங்கிற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ.
15:41
Speaker A
குருனாலே சந்தேகமே படவே கூடாது.
15:43
Speaker A
குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படின்னா ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ.
15:48
Speaker A
குரு பலம் கம்மியா இருக்குங்கறது அர்த்தம்.
15:50
Speaker A
அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.
15:52
Speaker A
அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை.
15:59
Speaker A
குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே.
16:05
Speaker A
குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.
Topics:குரு பெயர்ச்சிசிம்ம ராசிஆன்மிக பயணம்சனி பிடிதர்மம்அதிசார பெயர்ச்சிதிருக்கடவூர் பரிகாரம்ஆயுர்வேத சுகாதாரம்கிரக பலன்ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →