Rishabam👉குருவால் உங்களுக்கு சிக்கல் | Astrologer Jeevi… — Transcript

ரிஷப ராசி பெண்களின் வாழ்க்கை, தொழில், திருமணம் மற்றும் குடும்ப சாபங்களை ஜீவிதா ஜோதிடர் விளக்குகிறார்.

Key Takeaways

  • ரிஷப ராசி பெண்கள் தங்கம் விட வெள்ளி மற்றும் வைரம் முதலீடு செய்ய வேண்டும்.
  • சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் அவசியம்.
  • ஆடை, ஆபரணங்கள் மற்றும் பியூட்டி பிசினஸ்கள் ரிஷப ராசி பெண்களுக்கு பொருத்தமானவை.
  • குடும்ப சாபத்தை குறைக்க பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்.
  • வார்த்தை மற்றும் குரல் வசீகரம் மூலம் தொழிலில் வெற்றி பெற முடியும்.

Summary

  • ரிஷப ராசி பெண்களுக்கு தங்கம் சீக்கிரம் தங்காது, வெள்ளி மற்றும் வைரம் முதலீடு செய்ய பரிந்துரை.
  • ரிஷப ராசி பெண்கள் அழகு, ஆடம்பரம் மற்றும் வார்த்தை வசீகரத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள்.
  • ஆடை, ஆபரணங்கள், காஸ்மெடிக், டெக்ஸ்டைல் மற்றும் பியூட்டி பிசினஸ்கள் ரிஷப ராசி பெண்களுக்கு பொருத்தமானவை.
  • குரு கிரகத்தின் எதிரி நிலை காரணமாக ரிஷப ராசி பெண்களுக்கு குடும்பத்தில் பெண் சாபம் இருக்கும்.
  • சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை, தவறான தேர்வு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • ரிஷப ராசி பெண்கள் வார்த்தை மற்றும் குரல் மூலம் மற்றவர்களை ஈர்க்கும் திறன் கொண்டவர்கள்.
  • புதிய முயற்சிகளில் தயக்கம் மற்றும் ரிஸ்க் எடுக்காமை காரணமாக வளர்ச்சியில் தடைகள் ஏற்படும்.
  • பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் குடும்ப சாபத்தை குறைக்க முடியும்.
  • ஆன்லைன் பிளாட்பார்ம்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளது.
  • ரிஷப ராசி பெண்கள் லவ் மேரேஜ் மற்றும் அரேஞ்ச் மேரேஜ் தொடர்பான கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
பெரும்பாலான ரிஷப ராசி பெண்களை கவனிச்சோம்னா தெரியும் தங்கம் தங்குதா இல்லையா அப்படிங்கறது.
00:06
Speaker A
தங்கம் போடுறாங்க அப்படின்னா ஏதோ ஒரு பின்னடைவை பார்க்கிற மாதிரியே ஏன் அப்படின்னா
00:15
Speaker A
பேசி பிசினஸ் பண்றீங்களோ உங்களுடைய பிசினஸ் அப்படிங்கறது குரோத் ஆகும்.
00:23
Speaker A
இந்த ரிஷப ராசியில் பிறக்கிறவங்களுடைய குடும்பத்துல பெண் சாபம் அப்படிங்கறது ஒன்னு இருக்கும்.
00:27
Speaker A
இந்த பெண் சாபத்தை எப்படி நம்ம சரி பண்ணனும் அப்படின்னா
00:35
Speaker A
ரிஷப ராசி பெண்கள் லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றாங்க அப்படின்னா மிக மிக கவனம் அப்படின்னுதான் நான் சொல்லுவேன்.
00:40
Speaker A
வீட்ல பார்க்கிற பெரியவங்க நிர்ணயிக்கிற திருமணமா இருந்தா மட்டுமே அது நிலைச்சிருக்கும்.
00:46
Speaker A
இல்ல இப்பவும் நான் லவ் பண்ணிதான் ஒருத்தரை சூஸ் பண்றேன் அப்படின்னா மேக்ஸிமம் 99% அது
01:47
Speaker A
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள் இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா
01:51
Speaker A
ஸ்பெஷலா பெண்களுக்காகவே 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம் இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும் அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
02:18
Speaker A
ரிஷப ராசி பெண்கள் எப்படி இருக்கும் எங்களோட லைஃப் அப்படின்னா ரிஷப ராசி அப்படிங்கறது சுக்கிரன் சுக்கிரனை குறிக்கக்கூடியது இல்லையா.
02:26
Speaker A
அப்போ எங்களுக்கு சுக்கிரன் இருக்கு ஆனா எங்ககிட்ட ஒன்னும் பெருசா செழிப்பு இல்லையே பெரும்பாலான ரிஷப ராசி பெண்களை கவனிச்சோம்னா தெரியும் தங்கம் தங்குதா இல்லையா அப்படிங்கறது.
02:36
Speaker A
ஏன் அப்படின்னா ரிஷப ராசி பெண்களுக்கு இயற்கையாவே தன்னை அழகுபடுத்தி பாத்துக்கறதுலயும் புதுசு புதுசா ஆடை போட்டு பாத்துக்கறதுலயும் வந்து ஈர்ப்பு அதிகம் ஆசை அதிகம்.
03:26
Speaker A
ஆனா அது வந்து எவ்வளவு வெளிக்காட்டுனாங்க அப்படிங்கறதுதான் விஷயம் பெரும்பாலும் ரிஷப ராசி பெண்களுக்கு தங்கம் அவ்வளவு சீக்கிரம் தங்காது அப்படி தங்கம் உங்களுக்கு நகையா செஞ்சு போட்டு அதாவது உங்களுக்கு திருமணமே செழிப்பா நடத்தி கொடுத்திருந்தாலும் தங்கத்தை வந்து அடமானம் வைக்கிறதோ இல்ல கணவன்கிட்ட எடுத்து தங்கத்தை கொடுத்துட்டீங்க அப்படின்னாலே அது திரும்ப வர்றது ரொம்ப கடினமாயிரும்.
03:49
Speaker A
வெள்ளி நிறைய சேர்க்கணும் வைரத்துல இன்வெஸ்ட் பண்றது அதாவது உங்களுக்கு வைரமும் வெள்ளியும் எப்பவுமே வந்து சுபிக்ஷத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும்.
03:57
Speaker A
ஆக்சுவலா வந்து உங்களுக்கு லக் ஆக்டிவேட் பண்றதே வந்து வெள்ளிதான் தங்கத்தை போடுறாங்க பெரும்பாலான ரிஷப ராசி பெண்களை கவனிச்சு பார்த்தோம்னா தெரியும் தங்கம் போடுறாங்க அப்படின்னா ஏதோ ஒரு பின்னடைவை பார்க்கிற மாதிரியே ஏன் அப்படின்னா
04:09
Speaker A
நீங்க சுக்கிரன் குரு வந்து உங்களுக்கு கிட்டத்தட்ட எதிரி ஸ்தானத்தில் இருக்கக்கூடியவர் அவர் தேவகுரு நீங்க அசுரகுரு அப்படிங்கறப்போ அந்த ஆசைகள் பட பட இந்த குருங்கிறது தங்கம் சம்பந்தப்பட்ட விஷயம் மஞ்சள் சம்பந்தப்பட்ட விஷயம் இந்த மஞ்சள் உங்கள்ட்ட வரக்கே ரொம்ப யோசிக்கும் தங்கறதுக்கு யோசிக்கும்.
05:07
Speaker A
அப்போ அதை பத்திரப்படுத்தி வைக்கணும் அப்படின்னா இங்க சுக்கிரன் ஈக்குவலா இருக்கணும்னா வெள்ளி ஈக்குவலா இருக்கணும் இந்த ஆபரணங்கள் அது ஒயிட் கோல்டா நீங்க போட்டுக்கறது அந்த சில்வர் அப்படிங்கற தன்மை எல்லாம் வரப்போ உங்களுக்கு செழிப்பு கொடுக்கும்.
05:20
Speaker A
அப்போ நீங்க என்ன மாதிரியான தொழில்கள் எல்லாம் நீங்க பண்ணா நல்லா இருக்கும் சுக்கிரன்ங்கறது என்னது அழகு ஆடம்பரம் மத்தவங்களை பேசி கவரக்கூடியது.
05:30
Speaker A
காலபுருஷ தத்துவப்படி இரண்டாவது ஸ்தானத்துல வாக்கு ஸ்தானம் அப்போ உங்களுக்கு வாக்குதான் உபயோகமா இருக்கும் உங்களுடைய வாக்குதான் உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் உங்களுடைய வார்த்தைகள்தான் உங்களுடைய தொழிலே.
05:40
Speaker A
அதாவது ஒரு இப்ப நீங்க வந்து ரிஷப ராசி பெண்களுக்கு இயற்கையாவே வந்து ஆடை ஆபரணங்கள் மேல ஈர்ப்பு அதிகம் அப்படிங்கறப்போ நீங்க இந்த மாதிரி காஸ்மெடிக் பிசினஸ் பண்றது டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றது ஆர்னமென்ட்ஸ் பிசினஸ் ஆக்சஸரிஸ் பிசினஸ்லாம் பண்றீங்கன்னா இந்த ஜெர்மன் சில்வர் இந்த ஒயிட் கோல்டு இந்த வெள்ளி அதே மாதிரி டிரஸ்ஸஸ் காஸ்டியூம்ஸ் இந்த மாதிரி பிசினஸ்லாம் பண்றப்போ செழிப்பா இருக்கும் டெய்லரிங் பிசினஸ் பண்றீங்க நல்லா இருக்கும்.
06:47
Speaker A
ஆனா இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்றேன் அப்படின்னா சில பேர் சொல்லுவீங்க ஆமாங்க நாங்க இந்த பிசினஸ்லாம் பண்ணிட்டுதான் இருக்கோம் ஆனா என்னமோ தெரியலைங்க எங்களுக்கு ஒரு குரோத் வரல அப்படின்னு சொல்லக்கூடிய பெண்கள் இங்க அதிகமா இருப்பீங்க ஏன் அப்படின்னா ரிஷப ராசி பெண்களுக்கு குழப்பம் அதிகம் ஒரு முயற்சி எடுத்து வைக்கிறதுல அவ்வளவு தயக்கம் ஒரு ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல ஒரு தயக்கம் இங்க இருந்து ஒரு இடத்தை மாத்தி போங்கனாலே அவ்வளவு யோசிப்பாங்க ரிஷப ராசி பெண்கள் இங்க எனக்கு கம்பர்ட்டபிலா இருக்கு எனக்கு இதுவே போதும் அப்படின்னு நினைக்கக்கூடிய ஒரு எண்ணம் கொண்டவங்க ரிஷப ராசிக்காரங்க.
07:17
Speaker A
அதாவது உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு அவங்க ஒரு வேலையே இருக்கு அப்படின்னா எனக்கு இங்க 10000 ரூபாய்க்கு கம்பர்ட்டபிலா இருக்குன்னு சொல்லி இருக்கக்கூடியவங்க உங்களுடைய பவர் என்ன உங்களுடைய வர்த் என்னன்னே உங்களுக்கு தெரியாது எதையோ ஒன்னு தேடி தேடி ஓடிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு இப்போ இந்த தொழில் எல்லாம் நான் சொன்னேன் இல்லையா நீங்க வந்து இந்த ஆடை ஆபரணங்கள் சம்பந்தப்பட்ட தொழில் பண்றீங்கன்னா டிராவல் பண்ணி பண்ணனும் நிறைய பேத்தை சந்திக்கணும் ஏன்னா உங்களுடைய வார்த்தைகளுக்கு மயங்குவாங்க ரிஷப ராசி பெண்களுக்கு வந்து வார்த்தை ஜாலம் குரல் ஜாலம் அப்படிங்கறது அதிகம் ஈர்ப்புங்கறதே உங்களுடைய குரல்லையும் உங்க வார்த்தை வசீகரத்துலதான் இருக்கு அப்போ நீங்க வந்து ஒரு பொருளை விக்கிறீங்கன்னா அந்த பொருளுடைய தன்மை என்ன அப்படின்னு சொல்றப்போ கேட்கிறவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
08:35
Speaker A
நீங்க வந்து இயற்கையாவே மத்தவங்க மேல பொறாமை எல்லாம் இருக்கவே இருக்காது ரிஷப ராசி பெண்களுக்கு வர்ணிக்கிறது மத்தவங்களோட அழகை வர்ணிக்கிறது அவங்களை உண்மையா அவங்களுக்கு வந்து ஒரு காம்ப்ளிமென்ட் கொடுக்கிறது இதெல்லாம் வந்து ரிஷப ராசி பெண்கள் ரொம்ப அழகாவே செய்வீங்க அப்போ நீங்க இந்த பியூட்டி இண்டஸ்ட்ரியை டச் பண்றீங்க அப்படின்னா ஒரு பியூட்டி பார்லர் வைக்கிறீங்க அப்படின்னா உங்களுக்கு நிறைய கிளைன்ட்ஸ் வருவாங்க.
09:08
Speaker A
ஏன்னா அவங்களை அழகா மாத்தி அனுப்பக்கூடிய ஆற்றல் அப்படிங்கறது வந்து ரிஷப ராசி பெண்களுக்கு உண்டு அப்போ நீங்க வந்து பியூட்டிஷியன் ரிலேட்டட் கோர்சஸ் படிக்கிறது எனிதிங் ரிலேட்டட் டு பியூட்டி அந்த மாதிரி விஷயங்கள் நீங்க தொட்டுக்கலாம் இப்ப இந்த பியூட்டி தொடுறீங்க டெய்லரிங் தொடுறீங்க இப்ப ஒரு பியூட்டி பார்லர் வைக்கிறீங்க அந்த இடத்துல வந்து மக்கள் வந்து போகக்கூடிய ஒரு அமைப்பு பேசிக்கிட்டே இருக்கணும் இல்லன்னா எக்ஸிபிஷன்ஸ்லாம் போடுறாங்க நிறைய எக்ஸிபிஷன்ஸ் போறது டிராவல் எவ்வளவு பண்றீங்களோ ரிஷப ராசி எவ்வளவு டிராவல் பண்ணி டிராவல் பண்ணி பேசி பிசினஸ் பண்றீங்களோ உங்களுடைய பிசினஸ் அப்படிங்கறது குரோத் ஆகும்.
10:07
Speaker A
இப்ப எல்லாமே ஆன்லைன் அப்படின்னு வந்துருச்சு இல்லையா நீங்க ஆன்லைன்லயே உலகத்துல எத்தனையோ பேர் பார்க்கிறாங்க அப்போ ஆன்லைன் பிளாட்பார்ம் அப்படிங்கறத ரொம்ப ஸ்ட்ராங் பண்ணனும் அங்க நீங்க பேசுறது அங்க நீங்க காட்டக்கூடிய பொருள் அப்படிங்கறது வசீகமாகும் உங்களால மத்தவங்களுக்கு டீச்சும் பண்ண முடியும் ரிஷப ராசிக்காரங்கனால நீங்க கத்துக்கிட்ட தொழிலை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்து அவங்களையும் ஒரு தொழில் முனைவர் ஆக்குறீங்க அப்படின்னா
10:32
Speaker A
ஏன் இதை நான் உங்களுக்கு சொல்றேன்னா இந்த ரிஷப ராசியில் பிறக்கிறவங்களுடைய குடும்பத்துல பெண் சாபம் அப்படிங்கறது ஒன்னு இருக்கும் இந்த பெண் சாபத்தை எப்படி நம்ம சரி பண்ணனும் அப்படின்னா ஒரு பெண் இன்னொரு பெண்ணோட வளர்ச்சிக்கு உதவி பண்ணனும் அப்படி உதவி பண்ணிட்டீங்க அப்படின்னாலே பாதி பெண் சாபம் அப்படிங்கறது நீங்கிரும் அவங்ககிட்ட இருந்து நீங்க வாழ்த்து வாங்கணும் உங்களால நான் வாழ்ந்தேன் நீங்களும் நல்லா இருக்கணும் அப்படின்னு அந்த வாழ்த்தை வாங்க வாங்க உங்க வாழ்க்கை குரோத் ஆயிட்டே போகும் இது வந்து உங்களுக்கு தொழிலுக்கு.
10:59
Speaker A
ரிஷப ராசி பெண்கள் லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றாங்க அப்படின்னா மிக மிக கவனம் அப்படின்னுதான் நான் சொல்லுவேன் ஏன்னா கரெக்டா போய் ராங்கான லைஃப் பார்ட்னரை சூஸ் பண்றது பெரும்பாலான ரிஷப ராசி பெண்கள் செய்யக்கூடிய ஒரு தவறாவே இருக்கும்.
11:53
Speaker A
சுக்கிரன் சுக்கிரன் ஆசைகளை தூண்டக்கூடியவரு அவசரப்பட்டு முடிவெடுக்க வைக்கக்கூடியவரு குருதான் வந்து நல்ல திருமண பாக்கியத்தை அமைச்சு தரக்கூடியவர் அப்போ ரிஷப ராசி பெண்கள் குருமார்களாகிய ஏன் எங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ்ன்னு சொல்றீங்க நாங்க லவ் மேரேஜ் தானே பண்ணனும் அப்படின்னா லவ் மேரேஜ் கொஞ்சம் வருஷத்துக்கு நல்லா இருக்கிற மாதிரி இருக்கும் ஆனா குரு என்ன பண்ணுவார் அப்படின்னா நீங்க சூஸ் பண்ணுன பார்ட்னர் எங்கேயோ ஒரு இடத்துல தவறுங்கறத குரு சுட்டிக்காட்டாம விடவே மாட்டார் இல்ல தெரியாம ஒரு லைஃப் பார்ட்னர் இப்படி நான் அமைச்சுக்கிட்டனோ அப்படின்னு ஒரு ஃபீல் பண்றது நீங்க எதிர்பார்த்த ஏன்னா சுக்கிரன் அப்படிங்கறவர் வந்து ஆசைகளை அந்த டிசையர்ஸ கொடுக்கக்கூடியவர் பின்விளைவுகளை காட்ட மாட்டார் வெளித்தோற்றத்தை பார்த்து மயங்குறதோ வார்த்தையில மயங்குறதோ இதெல்லாம் வந்து ரிஷப ராசி பெண்கள் ஈஸியா போய் விழுந்துருவாங்க.
13:21
Speaker A
அது கானல் நீர் மாதிரி ரிஷப ராசி பெண்கள் வந்து லவ் பண்றீங்க அப்படின்னாலே அது இல்லைங்க நாங்க வீட்டு சம்மதத்தோடதான் நாங்க திருமணம் பண்ணனும் அப்படின்னு சொன்னாலுமே கூட அந்த வீட்டோடைய சம்மதம் எந்த அளவுக்கு கரெக்டா இருந்தது குருவோட ஆசீர்வாதத்தோட இருந்ததா இல்ல நீங்க பிரச்சனை எல்லாம் பண்ணி சம்மதிக்க வச்சீங்களா அப்படிங்கற ஒரு விஷயமும் இருக்கு ஏன் அப்படின்னா ரிஷப ராசி பெண்கள் தான் சூஸ் பண்ற லைஃப் பார்ட்னர் சரின்னு தனக்கு மட்டும்தான் தெரியும் சுத்தி இருக்கிறவங்களால மட்டும்தான் குறை என்னன்னே கண்டுபிடிக்க முடியும் அந்த குறையை வந்து உங்கள்ட்ட சொன்னா கூட உங்களுக்கு கோபம் தான் வரும் அதுக்கப்புறம் ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல அந்த ரிஷப ராசி பெண்களை வந்து இந்த லவ் பண்ணவங்க திருமணமே பண்ணிக்கிட்டா கூட ஒரு 10 வருஷம் 12 வருஷம் கழிச்சு குழந்தை எல்லாம் கொடுத்துட்டு கூட விட்டுட்டு அடுத்த வாழ்க்கைக்கு போகக்கூடிய அமைப்புங்கறது ரொம்ப அதிகம்.
14:12
Speaker A
இதனால செல்வங்களை இழந்த பெண்கள் ரொம்ப அதிகம் ரிஷப ராசியில அதுக்கப்புறம் திருப்பி இரண்டாவது திருமணத்துக்கு போறது இரண்டாவது திருமணமும் ரிஷப ராசி பெண்களுக்கு பெரும்பாலும் லவ் மேரேஜ் பண்ணுனாங்கன்னா செகண்ட் மேரேஜ் அமையக்கூடிய வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகமாவே இருக்கும் அப்படியும் செகண்ட் மேரேஜ் போறீங்கன்னா அந்த செகண்ட் மேரேஜ் ஆவது வீட்ல பார்க்கிற பெரியவங்க நிர்ணயிக்கிற திருமணமா இருந்தா மட்டுமே அது நிலைச்சிருக்கும் இல்ல இப்பவும் நான் லவ் பண்ணிதான் ஒருத்தரை சூஸ் பண்றேன் அப்படின்னா மேக்ஸிமம் 99% அது தவறாகவே போய் முடிஞ்சிரும் ஏன்னா அவங்களுமே வந்து உங்ககிட்ட ஏதோ ஒரு வெளித்தோற்றத்துக்காகவோ இல்ல உங்ககிட்ட இருக்கிற அந்த செல்வ செழிப்புனாலயோ ஏதோ ஒரு எக்ஸ்பெக்டேஷனாலதான் உங்களை திருமணமே அவங்க பண்ணிருப்பாங்க அது உங்ககிட்ட இருந்து ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல கிடைக்காம போயிருச்சுன்னு வச்சுக்கோங்க அதாவது உங்கள்ட்ட சொத்து இருந்திருக்கலாம் இல்ல நீங்க வேலைக்கு போய் சம்பாதிச்சு கொடுக்கிறவங்களா இருக்கலாம் நீங்க சம்பாதிச்சு கொடுக்கிற வரைக்கும் நல்லா இருக்கும் திடீர்னு ஒரு உடம்பு முடியாம படுக்குறீங்க ஆபீஸ் போக முடியாம போகுது உங்ககிட்ட இருந்து வருமானம் வராம போகுதுங்கறப்பதான் உங்க லைஃப் பார்ட்னருடைய உண்மை முகமே என்னன்னு உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கும் அப்போ அவங்க அன்பா இருந்தாங்களா காரியமா இருந்தாங்களா அப்படிங்கறதே அப்பதான் ரிஷப ராசி பெண்களுக்கு புலப்படுறப்போ அதுக்கப்புறம் தேவையில்லாத ஒரு ரிலேஷன்ஷிப்குள்ள போறது அன்புக்காக ஏங்குறது அப்படிங்கறது எல்லாம் வந்து ரிஷப ராசி பெண்களுக்கு அமைஞ்சிரும்.
16:44
Speaker A
அதனால ரிஷப ராசியில நான் பிறந்துட்டேன் அப்படின்னாலே என் குடும்பத்துக்கு பெண் சாபம் இருக்கு அப்படிங்கறது தெரிஞ்சுக்கணும் இப்ப உங்க வீட்ல ஒரு ஆண் இருக்கிறாங்க அந்த ஆணுக்கு அவங்க ஏதாவது பெண்களுக்கு ஏதாவது ஒரு துரோகம் பண்ணி இருந்திருப்பாங்க உங்களுடைய பாட்டன் முப்பாட்டன் யாரோ ஒருத்தங்க பண்ணிருப்பாங்க அதோடைய சாபம் ரிஷபத்துக்கே வந்து சேரும் அப்போ இந்த மாதிரியான ஒரு ரிலேஷன்ஷிப்லதான் அவமானம் அசிங்கங்களும் வந்து ரிஷப ராசிக்கு பெண்களுக்கு வந்து சேரும் நான் என்னதான் மறைமுகமா இருந்து நான் பண்ணேன் அப்படின்னாலும் ஏதோ ஒரு தருணத்துல குரு அந்த அதை வெளிக்காட்டி கொடுத்துருவார் அந்த அவமானம் அசிங்கத்தைங்கறத குரு கொடுத்துருவார் ரிஷப ராசி பெண்களுக்கு அதனால ரொம்ப ஜாக்கிரதையாகவே இருக்கணும் அவமானம் அசிங்கங்கள் படாம இருந்துக்கிறது அப்படிங்கறது ரிஷப ராசி பெண்களுக்கு நான் வந்து இது ஒரு அட்வைஸ் அப்படிங்கறது இல்லாம இது இது வந்து உங்களுக்கு ஒரு ஐடியாலஜியா நீங்க எடுத்துக்கலாம் ஓகே நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கணும் அப்படிங்கறதுக்குதான் வந்து உங்களுக்கு இதை சொல்றது நிறைய பெண்கள் வாழ்க்கையில ரிஷப ராசி பெண்கள் பாதி கடந்து வந்து 40 வயதை கடந்து வந்தவங்களுக்கு நான் என்ன சொல்றேங்கறது உங்களுக்கு புரியும் ஏன்னா நீங்க லைஃப்ல இந்த மாதிரிதான் ஃபெயிலியர்ஸ் சந்திச்சு வந்திருந்திருப்பீங்க.
18:29
Speaker A
அதோட யாரையுமே நம்பக்கூடாது அப்படிங்கறதையும் குரு உங்களுக்கு உணர்த்தி இருப்பார் ஏன்னா குருவுடைய அனுக்கிரகம்ங்கறது ரிஷப ராசி பெண்களுக்கு ரொம்ப அவசியம் அதனால அனுக்கிரகத்தை எப்படியாவது நீங்க வாங்கிக்கணும் அப்போ குருமார்கள் பெரியவங்க பேச்சை கேட்கிறது குரு ஸ்தலங்களுக்கு போறது அந்த பவரை ஏத்திக்கிட்டே இருக்கணும் ரிஷப ராசி பெண்கள் பவரை ஏத்த எல்லாத்துக்கும் குருவோட அனுக்கிரகம் அந்த வலிமைங்கறது ரொம்ப ரொம்ப அவசியம் குருவோட அனுக்கிரகம் இல்லை அப்படின்னாலே வாழ்க்கையில பிரச்சனைகளும் வந்துகிட்டேதான் இருக்கும் அப்போ நீங்க செய்யக்கூடிய தொழில்ல கூட அப்பப்போ அந்த கோல்டு ரிலேட்டடா ஏதாவது ஒன்னு சேர்த்துக்கிட்டே இருந்து குரு குரு கிட்ட கொஞ்சம் சரணடைஞ்சுக்கிறதுங்கறது நல்லது குருவுக்கு ஏதாவது கொடுத்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டே இருங்க குரு ஸ்தலங்களுக்கு போங்க பாலாபிஷேகம் கொடுங்க கொடுத்து அந்த காட்சியை பாருங்க தட்சிணாமூர்த்தி நேருக்கு நேரா நின்னு பார்க்கிறது நேருக்கு நேரா நின்னு வழிபாடு பண்றது தாழ்ந்து பணிஞ்சு நன்றி சொல்லிட்டு வர்றது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருந்துக்கணும் ஏன்னா வாழ்க்கை உங்களுக்கு நல்லபடியா இருக்கக்கூடிய வாழ்க்கையை நீங்களே வந்து சில சலனங்களால கெடுத்துக்க கூடாது.
20:07
Speaker A
ரிஷப ராசி பெண்கள் எங்கேயாவது ஒரு சலனத்துல போய் சிக்கறதுக்கு சுக்கிரனே வழிவகுப்பார் குரு வழிவைக்க மாட்டார் சுக்கிரனே வழிவகுப்பார் குரு அதற்கான தண்டனையை கொடுத்துருவார் அதனால தர்மத்தின்படி ரிஷப ராசி பெண்கள் அப்படிங்கறவங்க இருந்துக்கணும் தெய்வ வழிபாடு மோட்சத்துக்கான பாதை என்ன தெய்வத்தை இறுக்கி பிடிச்சுக்கிறது தெய்வம் தான் எல்லாம் பார்த்துக்கணும்னு தெய்வத்தை முழுசா நம்பனும் அப்பப்போ கொகிச்சுக்கிறது தெய்வத்துக்கிட்ட இனிமேல் நான் சாமியை கும்பிட மாட்டேன்னு சொல்றது அப்படிலாம் இல்லாம தெய்வ வழிபாடு அதோட ரிஷப ராசி பெண்களுக்கு இந்த வீட்ல வளர்க்கக்கூடிய பிராணிகள் இதெல்லாமே ரொம்ப பிடிக்கும் மீன் வளங்க வீட்ல நீங்க மீன் வளர்க்கிறீங்க அப்படின்னா அது இன்னுமே சுக்கிரன் தான் குருவும் கூட ஒரு மீன் வளர்க்கிறது ஏன்னா மீன்ங்கறது குரு இல்லையா மீனை ராசியில் இருக்கக்கூடிய குருதான் வந்து அந்த மீனே அந்த மீன் எந்த அளவுக்கு செழிப்பா நீங்க வளர்க்கிறப்போ அது இருக்குதோ அந்த அளவுக்கு குருவுடைய அனுக்கிரகமும் உங்களுக்கு இருக்குது அப்படிங்கறதுதான் அர்த்தம் அந்த மீன் சாகுது அப்படின்னா குரு ஏதோ ஒரு வார்னிங் உங்களுக்கு கொடுக்கிறார் திரும்பவும் ஒரு மீனை மாத்துங்க அப்போ அந்த மீனை செழிப்பா வைக்க வைக்க உங்களுக்கு ஏதோ ஒரு வகையில குரு அனுக்கிரகம்ங்கறது இருந்துகிட்டே இருக்கும்.
21:48
Speaker A
இப்ப ரிஷப ராசி யாரெல்லாம் திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னா குரு ஸ்தானத்துல இருக்கிறவங்களை நீங்க வந்து திருமணம் பண்ணிக்கலாம் அதாவது தனுசு மீனம் இவங்களை எல்லாம் வந்து அரேஞ்ச் மேரேஜ் அப்படிங்கறப்போ அது வந்து உங்களுக்கு செட் ஆகும் கன்னி ராசி அப்படின்னு வரப்போ கன்னி ராசி அரேஞ்ச் மேரேஜா இருந்தா ஓகே இதே இது கன்னி ராசி லவ் மேரேஜா இருக்கிறாங்க அப்படின்னா நீங்க லவ் பண்றீங்க ஒரு கன்னி ராசியைனா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் ஏதாவது ஒரு இஸ்யூஸ் ஃபேஸ் பண்ற மாதிரி ஆயிரும் மகரம் அப்படிங்கறவங்க உங்களுக்கு ரொம்ப நல்லா வேலை செய்யும் ஏன்னா ரிஷபம் அதாவது சுக்கிரன் சனி அப்படிங்கறப்போ இந்த சனிக்கு வந்து சுக்கிரனை பிடிக்கும் சுக்கிரனை ரசிக்கும் அதே மாதிரி இந்த சுக்கிரனும் சனியும் கொஞ்சம் ரசிக்கும் ஒருத்தர் ஒருத்தர் குறைபாடுகள் இல்லாம ஒரு பிரெண்ட்லியா இருந்துக்க கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது மகரத்துக்கும் ரிஷபத்துக்கும் எப்பவுமே ஒரு அட்ராக்ஷன் அப்படிங்கறது உண்டு அப்போ நீங்க மகர ராசி ஆண்கள் அந்த மாதிரி எல்லாம் உங்களுக்கு வந்து செட் ஆவாங்க.
Topics:ரிஷப ராசிபெண்கள் வாழ்க்கைஜோதிடம்தங்கம்வெள்ளிபியூட்டி பிசினஸ்குடும்ப சாபம்வாழ்க்கை துணைஆடை மற்றும் ஆபரணங்கள்குரு கிரகம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →