படி படியாய் வாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்| Jeevitha S… — Transcript

2026-ல் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வழிகாட்டும் ராசிபலன், பொறுமை, நிதானம், குடும்பம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

Key Takeaways

  • 2026-ல் முன்னேற்றம் பெற பொறுமை மற்றும் நிதானம் அவசியம்.
  • குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளை அமைதியாக சமாளிக்க வேண்டும்.
  • முதலீட்டில் கவனமாக செயல்பட்டு, அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும்.
  • ஆரோக்கியம் மற்றும் மனநிலை பராமரிப்பு முக்கியம்.
  • திட்டமிடல் மற்றும் முன்னுரிமைகளை தெளிவாக நிர்ணயித்து செயல்பட வேண்டும்.

Summary

  • 2025-ல் இருந்து வாழ்க்கையில் தெளிவும் நோக்கமும் பெறும் ஒரு தாட் ப்ராசஸ் தொடங்கும்.
  • 2026 பிப்ரவரி வரை முக்கிய முடிவுகளை தள்ளி, கவனமாக திட்டமிட வேண்டும்.
  • குடும்ப பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது; பொறுமையுடன் சமாளிக்க வேண்டும்.
  • ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சுக்ரன் நன்மைகள் தரும், குடும்ப உறவுகள் மேம்படும்.
  • முதலீட்டில் அவசரப்படாமல், வெளிநாட்டு முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மேஷ ராசிக்காரர்கள் பொறுமையாக, நிதானமாக முடிவெடுக்க வேண்டும்; உடல் ஆரோக்கியம் முக்கியம்.
  • பிசினஸ் வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும்; திட்டமிடல் மற்றும் முன்னுரிமைகள் தெளிவாக இருக்க வேண்டும்.
  • ரிஷப ராசிக்காரர்கள் குடும்ப உறவுகளில் கவனம் செலுத்தி, நியாயம் மற்றும் பொறுமையை வளர்க்க வேண்டும்.
  • ரிஷப ஆண்களுக்கு எதிர்ப்புகள் வரலாம்; மன அழுத்தம் குறைக்க கவனமாக இருக்க வேண்டும்.
  • ரிஷப பெண்கள் பிசினஸ் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தி, படைப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:03
Speaker A
2026 எப்படி இருக்கும் அப்படின்னா, 2025-லேயே ஒரு பாதையிலிருந்து அதாவது ஒரு ஆகஸ்ட்ல இருந்தே நிறைய பேத்துக்கு வந்து லைஃப்ல ஃபோக்கஸ் ஒரு கிளாரிட்டி நோக்கி போகணும் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் அப்படிங்கிறது வர ஆரம்பிச்சிருக்கும்.
00:15
Speaker A
இனிமே ஒரு சிலரால டெசிஷன் எடுக்க முடியாத சூழ்நிலைகள்ல இருக்கும். இப்ப நிறைய அந்த அதிசாரமாகுறதும் சரி, வக்ரமாகுறதும் சரி, இந்த மாதிரி விஷயங்கள்ல வந்து இப்படி நடக்கும் பொழுது முடிவுகள் எடுக்க திணறுவாங்க.
00:28
Speaker A
முடிஞ்ச அளவுக்கு யாராக இருந்தாலுமே சரி, பிப்ரவரி 2026 வர வரைக்கும் நீங்க எடுக்கக்கூடிய முடிவுகள் கொஞ்சம் தள்ளிப்போட்டு கிளாரிஃபை பண்ணிட்டே இருக்கணும், இன்னும் என்னென்ன விஷயங்கள் நான் சரி பண்ணனும், அவசரப்படக்கூடாது.
00:42
Speaker A
யார் என்ன அவசரப்பட்டாலுமே உங்களுடைய அதாவது புதன் சில வேலைகள் இங்க பாக்குது, நீங்க எடுக்கக்கூடிய முடிவுகள்ல சில தவறுகள் நடக்கும்படி செய்யக்கூடியதா இருக்கு, அதோட இந்த கணவன் மனைவி இந்த கணவன் மனைவி பிரிவு, நிறைய அந்த டிவோர்ஸ் நோக்கி போகக்கூடிய விஷயங்கள், முடிவெடுக்கக்கூடிய விஷயங்கள் இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போட்டு.
00:57
Speaker A
ஏன்னா ஆகஸ்டுக்கு அப்புறம் கொஞ்சம் சுக்ரன் கொஞ்சம் நல்லபடியா வரது அப்படிங்கறதுனால, பெண்கள் உங்க கணவன் மேலக்கோ உங்க கணவன் மீது கோவமா இருக்கீங்க அப்படின்னா, அது சரியாகக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறதெல்லாம் வருது, ஃபேமிலி இஸ்யூஸ் அப்படிங்கிறது அதிகரிக்கக்கூடிய வண்ணமாக இருக்குது.
01:53
Speaker A
பொதுப்பலன் அப்படின்னு பாக்குறப்போ, ஃபினான்சியல் ரீதியா உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் அப்படிங்கிறது அவசரப்படாம இருந்திருக்கிறது நல்லதுன்னே சொல்லுவேன்.
02:07
Speaker A
ஆஃப்டர் ஆகஸ்ட் இல்ல அக்டோபர் 2026-க்கு அப்புறம் உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் பிளான்ஸ் அப்படிங்கிறது நல்லா இருக்கும், நிறைய பேர் வெளிநாட்டுல போய் இன்வெஸ்ட் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும், அந்த வெளிநாட்டுல இன்வெஸ்ட் பண்றதுக்கு முன்னாடியும் கொஞ்சம் கவனமா பரிசீலிச்சு.
02:27
Speaker A
ஏன் அப்படின்னா ராகு ராகு என்ன பண்ணும்னா ரொம்ப வேவரிங்கா யோசிக்க வைக்கும், மீடியாவை பார்ப்போம், மீடியாவை பார்த்து வேவரிங்கா யோசிக்கும் பொழுது முடிவுகள் தவறாகலாம், அவசரப்பட வைக்கும் ராகு, ஏன்னா இந்த 2026-உடைய டார்கெட்டே யாருன்னு பார்த்தீங்கன்னா யங்ஸ்டர்ஸ் தான், உங்களுடைய மூளைதான், உங்களுடைய மூளையை எவ்வளவு மழுங்கடிக்க முடியுமோ அவ்வளவு விஷயங்களும் நடக்கப்போகுது அப்படிங்கிறப்போ மிக மிக தெளிவாக இருந்து சுபிக்ஷம் பெறக்கூடிய ஆண்டாக இது இருக்கும்.
03:24
Speaker A
மேஷ ராசிக்காரர்கள் வந்து எதிலும் கொஞ்சம் அவசரப்படாம நிதானமாக ஒரு மே மாசத்துக்கு அப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும் கொஞ்சம் சரியா இருக்கும், ஏன் அப்படின்னா இப்ப பிளானிங் ப்ராசஸ் இருக்கும், எங்க பணம் வரணுமோ அங்க கொஞ்சம் இழுப்படியா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கும், அப்போ நீங்க கொஞ்சம் இம்பல்சிவா கொஞ்சம் அவசரப்பட்டு ஏதாவது பேசுறப்போ அதை இன்னும் தடுமாறக்கூடிய ஒரு அமைப்பு இருக்கு, ஏன்னா சனி உங்களுக்கு சொல்லிக்கொடுத்துட்டு இருக்க விஷயமே என்ன அப்படின்னா கொஞ்சம் பொறுமையா இருங்க, அந்த பொறுமையை கொஞ்சம் கத்துக்கங்க, அது வந்து இப்ப உங்களுக்கு கல்டிவேட் ஆயிட்டு இருக்கு அந்த பொறுமைங்கிற விஷயம்.
03:52
Speaker A
அதோட உங்களுக்கு நெக்ஸ்ட் இயர் 2026-னு பாக்குறப்போ பிசினஸ் டெவலப்மென்ட் அப்படிங்கிறது கொஞ்சம் நெக்ஸ்ட் லெவல் போகுது, ஆனா உங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்குன்னா சிதறிக்கிடக்கு.
04:07
Speaker A
எதை சூஸ் பண்ணனும், எதை பிரையாரிட்டி பண்ணனும், எதை ஃபோக்கஸ் பண்ணனும் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கு.
04:19
Speaker A
ஃபோக்கஸ் நான் எதை செய்யப்போறேன் அப்படிங்கிறதுல முதல் நீங்க டெசிஷன்குள்ள போகணும், அதோட ஹெல்த்தை கொஞ்சம் மெயினா நீங்க பார்த்துக்கணும், ஏன்னா இந்த மல்டி டாஸ்கிங் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு, எல்லாமே அந்த பாதி பாதியா விடக்கூடிய ஒரு அமைப்பு, இதுவா அதுவா ஃபீனிக்ஸ் பறவைதான் மேஷம்.
05:00
Speaker A
ஏன்னா உங்களுக்கு ஃபீல் பண்ணக்கூட டைம் கிடையாது, அதை அப்புறமா ஃபீல் பண்ணிக்கலாம்னு இன்னொரு விஷயத்தை நோக்கி போயிட்டு இருக்கப்போ எல்லாமே ஸ்கேட்டர்டா இருக்கப்போ உங்களுக்கு பேக் பெயின் வரக்கும் கொஞ்சம் வாய்ப்பு இருக்கு, சனி இந்த வேலையெல்லாம் பண்ணும், எதுக்கு பண்ணுதுன்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, கொஞ்சம் நிதானமா கொஞ்சம் புல் பேக் பண்ணி கொஞ்சம் யோசிங்க அப்படிங்கிறதுதான்.
05:16
Speaker A
வீட்ல கூட ஒருத்தங்ககிட்ட பேசுறப்போ உங்களுடைய ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட பேசுறப்போ உங்களுடைய டோன் ஆஃப் வாய்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு இல்லையா, உங்களுடைய இன்டென்ஷன் வேற பேசுறது, ஆனா உங்க டோன் ஆஃப் வாய்ஸ் த்ரோ ஆஃப் வாய்ஸ் அப்படிங்கிறது டாமினேட்டிங்கா இருக்கும் பொழுது உங்களுக்கு மனக்கஷ்டங்கள் வந்துரும்.
05:32
Speaker A
திரும்பி சனி என்ன பண்ணுவார்னா ஓரமா போய் ஃபீல் பண்ணு, நான் எங்க தவறு செஞ்சேன், எல்லாத்துக்கிட்டயும் மன்னிப்பு கேட்கக்கூடிய சிச்சுவேஷன், நீங்க கொஞ்சம் சரண்டரிங் ஆகக்கூடிய ஒரு அமைப்புல இருக்கவங்கதான், ஆனா நீங்க சரண்டரிங் ஆவீங்களா அப்படின்னு தெரியாது, ப்ரொஃபஷன் வைஸ் ஒரு க்ரோத் அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, பார்ட்னர்ஸ் சூஸ் பண்றப்போ கொஞ்சம் கவனமா சூஸ் பண்ணிக்கிறது நல்லது.
05:49
Speaker A
ஏன் அப்படின்னா உங்களை யாராவது கொஞ்சம் புகழ்ந்து பேசுறப்போ நீங்க அதுக்கு கொஞ்சம் சரண்டர் ஆகுற மாதிரி இருக்கு, புகழ்ந்து பேசுறாங்கன்னா நீங்க கொஞ்சம் யோசிக்கணும், ஏன் இவங்க நம்மள புகழ்ந்து பேசுறாங்க, ஏன்னா சனி சொல்லிக்கொடுத்த விஷயம் என்னங்கிறதை ஞாபகத்துல வச்சுக்கங்க, பொறுமை, ஏன்னா இதுக்கு முன்னாடி சில விஷயங்கள் இழந்துட்டீங்க, இழந்ததை மீட்கக்கூடிய தருணமாகவே மேஷத்துக்கு இருக்கு அப்படிங்கிறப்போ.
06:45
Speaker A
ஸ்டூடென்ட்ஸ் கூட கொஞ்சம் படிக்கிறப்போ கொஞ்சம் ஃபோக்கஸ் பண்ணி கொஞ்சம் ஃபோக்கஸ் பண்ணி கொஞ்சம் கவனமா அதாவது அப்புறம் பார்த்துக்கலாம், உங்களுக்கு ஃபெயிலியர்ஸ் உடைய எண்டு தெரிஞ்சா மட்டுமே உங்களால நெக்ஸ்ட் லெவல் போக முடியும்.
06:58
Speaker A
மேஷத்துடைய அமைப்பு எப்படின்னா ஆரம்பிச்சிருவீங்க, போற போக்குல ஆரம்பிச்சுட்டு போறது, ஆனா அதை அப்புறம் பார்த்துக்கலாம் அப்படிங்கிறது வரப்போ எப்பவுமே ஒரு ஃபெயிலியர் எப்படி யோசிக்கணும் அப்படின்னா, நீங்க சக்சஸ் ஆகணும்னா அந்த ஃபெயிலியர் ஆச்சுன்னா இதுக்கு அப்புறம் நான் சமாளிக்க முடியுமா, முடியாதா, சமாளிக்கவே முடியாது அப்படின்னா அது உங்களுடைய விஷன் கிடையாது, அது உங்களுடைய பிசினஸ் கிடையாதுங்கறதை நீங்க ஞாபகத்துல வச்சுக்கணும், அதை எப்படி எல்லாம் சமாளிக்கலாம்னு ஒரு வழி கண்டுபிடிக்கிறீங்க பார்த்தீங்களா அப்ப நீங்க சக்சஸ்ஃபுல் ஆயிடுவீங்க, இப்படி பிளான் பண்ணுங்க மேஷத்துடைய லைஃப் நல்லா இருக்கும்.
07:32
Speaker A
ரிஷப ராசி அப்படின்னு பாக்குறப்போ ஆண் பெண் அப்படின்னு ரெண்டா நம்ம பிரிச்சிரலாம், ஆண் அப்படிங்கிறப்ப யார் கூட பழகுறீங்க அப்படிங்கிற ஒரு விஷயம் முக்கியம், ஏன்னா ரிஷப ராசியில இருக்க ஆண்களுக்கு எப்படின்னா யார் தனக்கு ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்காங்களோ அவங்களை பக்கத்துலயே வச்சுக்கிட்டே இருக்கிறது, யாராவது ஒரு குறை சொல்றாங்க அப்படின்னா இந்த ரிஷபத்துக்கு பிடிக்காது, ரிஷபம் ஆணுக்கு பிடிக்காது, ஒதுக்கிடுவாங்க.
08:32
Speaker A
இதை செய்ய வேண்டாம், ஏன்னா இதை செய்யறதுனாலதான் சில விஷயங்கள் பேக் அடிச்சு இருக்கு அப்படிங்கிற மாதிரி இருக்கு, ரிஷபத்துக்கு கொஞ்சம் டைம் நல்லா இருக்கு, கொஞ்சம் உங்களுடைய கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து கொஞ்சம் நெக்ஸ்ட் லெவலுக்கு வந்து உங்களை கிரிட்டிசைஸ் பண்றாங்களா இல்ல உங்களை திருத்துறாங்களா, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறாங்களா, நியாய தர்மம் என்ன அப்படின்னு சொல்லிட்டு ரிஷபம் கொஞ்சம் பார்க்கணும்.
08:49
Speaker A
ஏன் அப்படின்னா ரிஷபத்துக்கு மறைமுகமாகவே பெண் சாபம் அப்படிங்கிற ஒரு விஷயமும் இருக்கு, அதனால அந்த விஷயத்திலயும் ஆண்கள் இந்த தடவை கொஞ்சம் கவனமா இருந்துக்கணும், ஏன்னா உங்களுக்கு பொருள் சேரக்கூடிய ஒரு அமைப்பு இருக்கு, எப்பவுமே ஒரு நல்ல விஷயம் வரக்கு முன்னாடி ஏதோ ஒன்னு கெட்டது லைட்டா எட்டிப்பார்க்கும் அப்படிங்கிறப்போ.
09:09
Speaker A
ஆண்கள் இந்த விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்துட்டீங்க அப்படின்னா, லைஃப் கொஞ்சம் அப்ரேடேஷனா போகும், வீட்ல இருக்கவங்களுடைய பேச்சைக் கேட்கிறது ரொம்ப நல்லது, முக்கியமா வீட்ல பெண்கள் இருக்காங்க அப்படின்னா உங்களுக்கு சில விஷயங்கள் அவங்க ஞானமாவே உங்களுக்கு சொல்லுவாங்க, இதை செய்யுங்க இதை வேண்டாம், இவங்களை நம்புங்க, வேண்டாம் கொஞ்சம் தள்ளிப்போட்டு சில வேலைகளை செய்யுங்க அப்படின்னா கொஞ்சம் லிசன் பண்ணி சுத்தி இருக்க மனிதர்கள் உங்களை எந்த மாதிரி ஒரு பெர்ஸ்பெக்டிவ்ல பாக்குறாங்கங்கறதை தெரிஞ்சுகிட்டு நீங்க அடுத்த லெவல்.
10:10
Speaker A
ஏன்னா ரிஷபத்துக்கு ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன், தொழில் அமையக்கூடிய அமைப்பு அப்படி கூட இருக்கு, ஏன்னா சில பேர் வந்து ரியல் எஸ்டேட்டே ஆரம்பிக்கிற ஒரு அமைப்பும் இருக்கு, பொருளாதார ரீதியா ரிஷபத்துக்கு ஒரு க்ரோத்ங்கிறது இருக்கு, அப்போ இதெல்லாம் கெடுக்கறதுக்குன்னே சில பேர் வருவாங்க அப்படிங்கிறப்போ ஜால்ரா அடிக்கிறவங்க ஆண்களுக்கு வேண்டாம்.
10:29
Speaker A
இதே இது பெண்கள் அப்படின்னு வரப்போ உங்களுக்கு லைஃப் பார்ட்னர்கிட்ட அதீதமான ஒரு எக்ஸ்பெக்டேஷன், அந்த ஃபேன்டசி அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போறப்போ மன அழுத்தத்துக்குள்ள ரிஷப பெண்கள் போவீங்க.
10:49
Speaker A
ஏன்னா ரிஷப பெண்களுக்கு இப்ப க்ரோத், பிசினஸை நோக்கி போகக்கூடிய அமைப்பும், உங்களுடைய பிசினஸ்ல ஃபோக்கஸ் அந்த அந்த எக்ஸ்டர்னல் வேலிடேஷன் இவங்க சொல்ற வரைக்கும் நான் காத்திருக்கேன் அப்படிங்கறதெல்லாம் இல்லாம உங்களை மட்டுமே நம்பி எஃபர்ட் ரிஷப பெண்களுக்குமே நான் எப்படி சொல்றேன்னா நீங்க என்ன பிசினஸ் ஆரம்பிச்சாலும் சரி, அதுல ஒரு பியூட்டி இருக்கணும், ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும், ஒரு இடத்துல இருந்து நீங்க ஒரு வேலை பார்க்கிறப்போ அது ஸ்டாக்னன்ட்டாதான் இருக்கும் ரிஷபத்துக்கு, ஒரு எக்ஸிபிஷன்ஸ்லாம் அமைக்குறாங்க இல்லையா டூர் போங்க, டிராவல் பண்ணுங்க, ரிஷப பெண்கள் டிராவல் பண்ண டிராவல் பண்ண உங்களுக்கு க்ரோத் அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும், ஏன் அப்படின்னா ரிஷபம்ங்கிறது சுக்ரன், லக்ஷ்மி ஒரு இடத்துல தங்காது, அப்படியே மூவ் ஆகி போயிட்டே இருக்கணும், அப்படி மூவ் ஆகி போகப்போக உங்களுடைய க்ரோத் லெவலும் ரொம்ப அதீத லெவல்ல அதிகமாவே போயிட்டு இருக்கும் அப்படிங்கிறதுதான் இந்த தடவை ரிஷபத்துக்கான 2026 பலன்.
12:04
Speaker A
அதோட நீங்க வந்து வழிபாட்டு முறைகள் கூட ஒரு சிவன் பார்வதி யாரா இருந்தாலும் சேர்ந்து இருக்கக்கூடிய தனித்த தெய்வத்தை வழிபடுவதை விட குடும்பமாக இருக்கக்கூடிய தெய்வங்களை வழிபடும் பொழுது வீட்ல ஒரு அமைதி நிலை அப்படிங்கிறது உங்களுக்கு இருக்கும்.
12:21
Speaker A
மிதுன ராசிக்காரங்களுக்கு வந்து ப்ரொஃபஷனல் வைஸ் வந்து கொஞ்சம் கன்ஃபியூஷன்ஸ் நிறைய இருந்திருக்கும், ஒரு சிலருக்கு வேலை பரிபோறக்கூடிய ஒரு அமைப்பும் இருந்திருக்கும், சிலருக்கு பரிபோயும் இருந்திருக்கும், செல்ஃப் கான்ஃபிடன்ஸ் அப்படிங்கிறது கொஞ்சம் குறைஞ்சிருக்கும்.
12:39
Speaker A
வேலை என்ன வேலை எனக்கு வரும் அப்படிங்கிறதுல ஒரு தேடல் அதிகமா இருக்கும் பொழுது கான்ஃபிடன்ஸ் லெவல் கொஞ்சம் கம்மியா இருக்கிறதுனால சுத்தி இருக்கிறவங்க உங்களை எந்த மாதிரி ஒரு பெர்ஸ்பெக்டிவ்ல பாக்குறாங்கங்கறதே உங்களுக்கு மென்டல் ஹெவினஸ் அதிகமாவே இருக்கும், எந்த வருத்தமும் பட வேண்டாம், மார்ச்சுக்கு அப்புறமா இப்போ மார்ச் வரைக்குமே ஸ்கில்ஸ் எப்படி அப்ரேட் பண்ணிக்கிறது, சர்டிஃபிகேஷன் சர்டிஃபிகேஷன் கோர்ஸ் ஏதாவது படிக்கலாமா, ஏன்னா உங்களுக்கு தொழில் மாற்றம் அமையக்கூடிய அமைப்பு.
13:36
Speaker A
நீங்க ஆல்ரெடி பார்த்துட்டு இருந்த ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலை, வேற ஒரு ஸ்ட்ரீம், ஏன்னா நீங்கலாம் வந்து ஹீலர்ஸ், மிதுனத்தினால ஹீல் பண்ண முடியும் மத்தவங்களை, அப்போ எப்படி ஹீல் பண்ண முடியும், நிறைய பெயின் அண்டர்கோ பண்ணுனாலதான் ஹீலே பண்ண முடியும், அப்போ நீங்களே உங்களுக்கான அந்த ஹீலிங்கை நோக்கி போகக்கூடிய அமைப்பு, ஆன்மீகம் மிதுனத்துக்கு மிக அதிகமாக வளரக்கூடிய ஒரு அமைப்பு இந்த வருடம் இருக்கு, அதனால தெய்வத்தை நம்பணும், தெய்வம் தான் உங்களை காப்பாத்தும் அப்படிங்கிறதை முழுசா நம்பணும், மனிதர்களை நம்புறதை விட அப்படியே இந்த யூனிவர்ஸ் கிட்ட உங்களோட லைஃபை நீங்க முதல் டெடிகேட் பண்ணனும்.
14:10
Speaker A
அதோட எல்லா அந்த மென்டல் பிரஷர்ஸ் எல்லாத்தையுமே உங்களோட லைஃப் பார்ட்னர்கிட்ட காட்டக்கூடிய ஒரு அமைப்பும் இருக்கும், உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்கு ஃபேவர் பண்ற இடத்துலதான் இருக்காங்க அப்படிங்கிறதை நீங்க உணர்ந்தாலுமே வேற வழியே இல்லாம அவங்ககிட்ட அந்த பிரஷர்ஸ், உங்களுடைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் அங்க போய் நீங்க அழுத்தம் கொடுக்கும் பொழுது குடும்பத்துல விரிசல் உண்டாகக்கூடிய ஒரு அமைப்பு வந்துரும், அது தேவையில்லாத இன்னொரு பிரஷர் அப்படிங்கிறது இல்லாம.
15:15
Speaker A
மிதுனம் கொஞ்சம் குறைச்சலா பேசி உங்களுடைய ஆக்ஷன் கொஞ்சம் அதிகமா இருக்கும் பொழுது க்ரோத்தை நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பு, நிதானமாக சிந்திக்கக்கூடிய அமைப்பு, நான் ஏன் ஸ்பிரிச்சுவாலிட்டி அப்படின்னு சொல்றேன் அப்படின்னா கோயில் கோயிலா போறது, ஓகே சொன்ன பரிகாரங்கள் எல்லாம் நான் செஞ்சுட்டு வந்துட்டேன் அப்படிங்கிறது இல்லை, முதல் போய் நிதானமா ரிலாக்ஸ்டா ஒரு இடத்துல முதல் நீங்க உட்காரணும், ஏன்னா மிதுனத்துக்கு டிராவலிங் ரொம்ப பிடிக்கும், அந்த டிராவலிங் என்ன மாதிரியான ஒரு பெர்ஸ்பெக்டிவ்ல நீங்க பாக்குறீங்கன்னு ஒன்னு இருக்கு.
15:47
Speaker A
காலையிலிருந்து ஒரு ஐட்டினரி போட்டுட்டு போறீங்கன்னா இத்தனையும் நான் முடிக்கணும்னு நீங்க நினைக்க வேண்டாம், ஒரே ஒரு விஷயத்துல போய் நிதானமா முடிஞ்ச அளவுக்கு சிவன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க, முருகர் வழிபாடு பண்ணிட்டு வாங்க, சிவன் ஸ்தலங்கள்ல போய் தெப்பக்குளங்கள் அருகில உட்கார்ந்து நிதானமா எனக்கு என்ன வரும் அப்படின்னு உங்களை நீங்களே ஒரு வேலிடேஷன் பண்றீங்க அப்படின்னா, உங்களுக்கு போன அந்த செல்ஃப் கான்ஃபிடன்ஸ் எல்லாம் திரும்ப வந்து நீங்களே சில விஷயங்கள் உருவாக்கி அடுத்த லெவலுக்கு போகக்கூடிய ஒரு அமைப்பு, ப்ரொமோஷன் வரல அப்படின்னு ஃபீல் பண்ண வேண்டாம், ஜூலைக்கு அப்புறம் சில விஷயங்கள் வாழ்க்கையில கொஞ்சம் மாறறப்போ உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும், அது அந்த தெய்வ பலமே உங்களுக்கு கொடுக்கும் அப்படிங்கிறதுதான் மிதுனத்தோட அமைப்பு.
Topics:ராசிபலன்2026புதிய ஆண்டுமேஷ ராசிரிஷப ராசிகுடும்பம்முதலீடுபிசினஸ் வளர்ச்சிபொறுமைஆரோக்கியம்

Frequently Asked Questions

2026 ஆம் ஆண்டில் முடிவுகள் எடுப்பதில் மக்கள் ஏன் சிரமப்படுவார்கள்?

2026 ஆம் ஆண்டில், அதிசார மற்றும் வக்ர கிரக நிலைகள் காரணமாக மக்கள் முடிவுகள் எடுப்பதில் சிரமப்படுவார்கள். குறிப்பாக பிப்ரவரி 2026 வரை அவசரப்பட்டு முடிவெடுக்காமல், தெளிவுபடுத்தி செயல்படுவது நல்லது.

கணவன் மனைவி உறவுகளில் உள்ள பிரச்சனைகள் எப்போது சரியாக வாய்ப்புள்ளது?

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு சுக்கிரன் நல்ல நிலையில் வருவதால், கணவன் மனைவி உறவுகளில் உள்ள பிரச்சனைகள், குறிப்பாக கோபங்கள், சரியாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என்றாலும், ஆகஸ்டுக்குப் பிறகு நல்ல மாற்றம் இருக்கும்.

2026 ஆம் ஆண்டில் முதலீடுகள் குறித்து என்ன அறிவுரை வழங்கப்படுகிறது?

2026 ஆம் ஆண்டில் முதலீடுகள் விஷயத்தில் அவசரப்படாமல் இருப்பது நல்லது. ஆகஸ்ட் அல்லது அக்டோபர் 2026 க்குப் பிறகு முதலீட்டு திட்டங்கள் சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் முதலீடு செய்யும்போது ராகுவின் தாக்கத்தால் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →