Mithunam 👉மனக்குழப்பம் அதிகரிக்கும் |Astrologer Jeevith… — Transcript

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு அதிசார பெயர்ச்சி மூலம் வரும் மனக்குழப்பம், தொழில் தடைகள் மற்றும் பரிகார வழிகள் பற்றி விளக்கம்.

Key Takeaways

  • மிதுன ராசிக்காரர்கள் குரு அதிசார பெயர்ச்சியை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
  • மனஅழுத்தங்கள் மற்றும் தொழில் தடைகள் தற்காலிகம், குரு பெயர்ச்சி மூலம் முன்னேற்றம் வரும்.
  • திருப்பதி பெருமாளுக்கு பயணம் மற்றும் வழிபாடு மனநிலையை மேம்படுத்த உதவும்.
  • குரு கிரகம் தர்மம் மற்றும் செழிப்பை குறிக்கும், அதனால் நியாயமான வழியில் நடக்க வேண்டும்.
  • சனி மற்றும் குரு கிரகங்களின் மாற்றங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

Summary

  • மிதுன ராசிக்காரர்கள் தற்போது மனச்சோர்வு மற்றும் தொழில் தடைகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
  • சனி கிரகத்தின் பாதிப்பால் மனஅழுத்தங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அதிகரித்து உள்ளன.
  • குரு கிரகத்தின் அதிசார பெயர்ச்சி மூலம் 2025 அக்டோபர் 18 முதல் 2026 பிப்ரவரி வரை மாற்றங்கள் ஏற்படும்.
  • குரு வக்ரம் நிலை காரணமாக மனநிலை குழப்பம் மற்றும் தாமதங்கள் ஏற்படுகின்றன.
  • திருப்பதி பெருமாளுக்கு பயணம் செய்து வழிபாடு செய்வது மனநிலையை மேம்படுத்த உதவும்.
  • குரு கிரகம் தர்மம் மற்றும் செழிப்பை குறிக்கின்றது, அதனால் நியாயமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
  • குரு பெயர்ச்சி என்பது கிரகத்தின் ரிவர்ஸ் இயக்கம் போன்றது, இது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரும்.
  • குரு கிரகத்தின் பெயர்ச்சி காலத்தில் மனஅழுத்தங்கள் இருந்தாலும், அது நிலையானது அல்ல.
  • சனி கிரகத்திலிருந்து குருவுக்கு மாற்றம் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை தரும்.
  • பரிகார முறைகள் மற்றும் பக்தியுடன் இந்த காலத்தை சமாளிக்க வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மிதுன ராசிக்காரங்கதான் கொஞ்சம் கவனமாவே இருக்கணும்.
00:07
Speaker A
வக்ரம் அப்படின்னு நான் சொன்னேன் இல்லையா கொஞ்சம் ரிவர்ஸ் ஆகக்கூடிய ஒரு விஷயம்.
00:10
Speaker A
இங்க மிதுனத்துக்குதான் நடக்கும்.
00:12
Speaker A
ஏன் அப்படின்னா,
00:13
Speaker A
ஆல்ரெடி சனி சில வேலைகளை உங்களுக்கு பண்ணிட்டுதான் இருக்கும்.
00:18
Speaker A
அதாவது தொழில் முடக்கம் பண்றது, மைண்ட் கொஞ்ச நேரம் வேலை செய்யாமயே இருக்கிறது.
00:22
Speaker A
ஒரு கன்பியூஷன் அப்படிங்கறது அதிகமாவே இருந்திருக்கும்.
00:25
Speaker A
பெர்மனன்ட்டா நாங்க இப்படியே இருப்போமா அப்படின்னுலாம் கிடையாது.
00:28
Speaker A
டக்குன்னு ஒரு குரோத்துக்கு கொண்டு போற மாதிரி இருக்கும்.
00:31
Speaker A
ஏன்னா,
00:32
Speaker A
குருங்கிறவர் பெருக்கி பெருக்கி கொடுக்கக்கூடியவரா இருப்பார்.
00:35
Speaker A
அதனால இப்போதைக்கு,
00:56
Speaker A
மிதுன ராசி.
00:59
Speaker A
இந்த மிதுன ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி என்ன செய்யும் அப்படின்னா, மிதுன ராசிக்காரங்கதான் கொஞ்சம் கவனமாவே இருக்கணும்.
01:44
Speaker A
ஏன் அப்படின்னா, வக்ரம் அப்படின்னு நான் சொன்னேன் இல்லையா கொஞ்சம் ரிவர்ஸ் ஆகக்கூடிய ஒரு விஷயம்.
01:48
Speaker A
அது வந்து இங்க மிதுனத்துக்குதான் நடக்கும்.
01:51
Speaker A
ஏன் அப்படின்னா,
01:52
Speaker A
ஆல்ரெடி சனி சில வேலைகளை உங்களுக்கு பண்ணிட்டுதான் இருக்கும்.
01:57
Speaker A
அதாவது தொழில் முடக்கம் பண்றது, மைண்ட் கொஞ்ச நேரம் வேலை செய்யாமயே இருக்கிறது.
02:02
Speaker A
கொஞ்ச காலமாவே உங்களுக்கு வந்து மைண்ட் எதை நோக்கி போகுது அப்படிங்கறதே தெரியாம இருக்கும்.
02:09
Speaker A
ஒரு கன்பியூஷன் அப்படிங்கறது அதிகமாவே இருந்திருக்கும்.
02:11
Speaker A
மிதுன ராசிக்காரங்களுக்கு.
02:13
Speaker A
எனக்கு என்ன வரும் என்ன வராது.
02:16
Speaker A
குடும்ப சூழல்களிலும் கொஞ்சம் பிரச்சனைகள் சந்திச்சிட்டு இருக்க மாதிரி.
02:20
Speaker A
மனஸ்தாபங்கள் சந்திச்சிட்டு இருக்க மாதிரியான சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறது கண்டிப்பா மிதுன ராசிக்காரங்க நிறைய பேர் ஃபேஸ் பண்ணிட்டுதான் இருப்பாங்க.
02:26
Speaker A
வெளியில டிராவல் பண்ணி போனா கொஞ்சம் நல்லா இருக்கும்.
02:29
Speaker A
ஆனா திரும்பி வீட்டுக்குள்ள வந்த உடனே எங்கேயோ ஒரு ட்ரைனஸ் அந்த மாதிரி இருக்கக்கூடிய பட்சத்துல,
02:34
Speaker A
இங்க குருவும் உங்களுக்கு வக்ரம் ஆகுறதுனால உங்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள்.
02:40
Speaker A
உங்களுடைய தொழில் ரீதியான ஒரு முன்னேற்றம்.
02:43
Speaker A
அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்கும்.
02:46
Speaker A
ஏன்னா சனி கொஞ்சம் தாமதப்படுத்தி வச்சிருந்த விஷயங்கள் எல்லாம்.
02:50
Speaker A
இங்க வந்து உங்களுக்கு ப்ரோக்ரஸ் அப்படிங்கறது ஆக ஆரம்பிச்சாலும்.
02:55
Speaker A
இன்னும் மன அழுத்தங்கள், வீட்ல ப்ராப்ளம்ஸ் அப்படிங்கறது வந்து இருக்கத்தான் செய்யப்போகுது.
03:01
Speaker A
அதனால வார்த்தைகள்ல கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது.
03:04
Speaker A
அவங்க என்ன பேசுறாங்க அதாவது உங்க உங்களுடைய குடும்பத்தார்கள் என்ன வார்த்தைகள் பேசுறாங்க.
03:10
Speaker A
உங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரிதான் பேசுவாங்க.
03:12
Speaker A
அந்த அதுதான் அவங்கதான் குரு.
03:14
Speaker A
பெரியவங்கதான் உங்களுக்கு குருவா இருக்க போறாங்க.
03:16
Speaker A
என்ன விஷயம் சொல்றாங்க அப்படின்னு கொஞ்சம் காது கொடுத்து கேட்கணும்.
03:20
Speaker A
ஏன் என்ன சொல்ல போறாங்கன்னா,
03:21
Speaker A
ஏன் நீ இப்படியே இருக்க கொஞ்சம் மாறலாமே இதை செய்யலாமே அதை செய்யலாமே வெளிய வா கொஞ்சம் அடைஞ்சிருந்த டார்க்கிலிருந்து கொஞ்சம் வெளிய வா அப்படின்னுலாம் சொல்றப்போ.
03:29
Speaker A
கொஞ்சம் கேட்டுக்கிறது நல்லது மிதுன ராசிக்காரங்களுக்கு.
03:32
Speaker A
ஏன்னா உங்களுடைய மனநிலைமை எதையுமே நான் கேட்க மாட்டேன் அப்படிங்கிற ஒரு தாட்ல இருக்கும்.
03:36
Speaker A
அதனால அந்த மனநிலைமையிலிருந்து நீங்க கொஞ்சம் வெளிய வரணும்.
03:40
Speaker A
நீங்க எல்லாம் வந்து நேரா திருப்பதிக்கு போயிறணும்.
03:42
Speaker A
திருப்பதி பெருமாள்.
03:43
Speaker A
ஏன்னா அங்க போனாலே உங்களுடைய மனநிலைமை கொஞ்சம் நல்லபடியா மாறுறதும்.
03:48
Speaker A
செழிப்பு செழிப்பு நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பா அப்படிங்கறது.
03:52
Speaker A
நீங்க திருப்பதி பெருமாள் ஸ்தலத்துக்கு போயிட்டு வரப்போ ஒரு நாள் தங்கி இருந்து.
03:56
Speaker A
முடிஞ்சா அதாவது ஒரு அங்க ஒரு புதன்கிழமை தங்குங்க.
04:00
Speaker A
வியாழக்கிழமை வழிபாடு பண்ணுங்க.
04:02
Speaker A
வெள்ளிக்கிழமையும் இருந்து தாயாரையும் பார்த்துட்டு சனிக்கிழமை போல கிளம்பி வர மாதிரி.
04:07
Speaker A
அப்படி ஒரு ஒரு ட்ரிப் மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டு ட்ரிப் மாதிரி இருக்கணும் அப்படிங்கறதுனால நான் அதை சொல்றேன்.
04:11
Speaker A
போயிட்டு வரப்போ நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில திருப்பங்கள் அப்படிங்கறது இருக்கும்.
04:15
Speaker A
இது வந்து குரு வக்ரம் அடைஞ்சிருக்கிறதுனால இந்த மனநிலைமை அப்படிங்கறது உங்களுக்கு இருக்கும்.
04:20
Speaker A
ஆனா இதுவே வந்து,
04:21
Speaker A
பெர்மனன்ட்டா நாங்க இப்படியே இருப்போமா அப்படின்னுலாம் கிடையாது.
04:24
Speaker A
அதாவது கிட்டத்தட்ட ஒரு பிப்ரவரி மாசம் வரைக்கும்னு வச்சுக்கோங்களேன்.
04:28
Speaker A
இந்த குரு இந்த குருவோட அதிசாரத்தோடைய தாக்கமும் சனி இருந்த தாக்கமும் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா அதாவது இப்படியே ஸ்டாக்னட்டா இருக்காது.
04:37
Speaker A
கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா மாறி பிப்ரவரி 2026 அப்படிங்கிற வர சமயங்கள்ல எல்லாம்.
04:44
Speaker A
நீங்க நல்லா அடுத்த லெவலுக்கு டக்குன்னு ஒரு குரோத்துக்கு கொண்டு போற மாதிரி இருக்கும்.
04:47
Speaker A
ஏன்னா,
04:48
Speaker A
குருங்கிறவர் பெருக்கி பெருக்கி கொடுக்கக்கூடியவரா இருப்பார்.
04:51
Speaker A
அதனால இப்போதைக்கு,
04:53
Speaker A
குரு பின்தங்கி இருக்கிறார் அவ்வளவுதான்.
04:56
Speaker A
ஆனா போறப்போ கொடுத்துட்டுதான் போவார் அப்படிங்கறதை.
04:58
Speaker A
நம்பிக்கையோடு நீங்க இருக்கணும் உங்க வாழ்க்கை பிரகாசமாதான் இருக்கும்.
05:01
Speaker A
மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
05:06
Speaker A
அதை எத,
05:07
Speaker A
நவம்பர் மாசம்,
05:10
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.
05:14
Speaker A
சனிக்கு பயந்துக்குவாங்க.
05:15
Speaker A
நிஜமால்மா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?
05:17
Speaker A
ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு.
05:20
Speaker A
எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறதை விட,
05:23
Speaker A
கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பார்.
05:26
Speaker A
அப்படின்னு சொல்லப்படுது.
05:27
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
05:29
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா,
05:30
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ,
05:34
Speaker A
கர்மத்திலிருந்துதான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.
05:38
Speaker A
அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?
05:40
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோடு பண்ணி,
05:44
Speaker A
குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
05:48
Speaker A
இன்னைக்கு நம்ம பேசப்போற விஷயம் என்ன அப்படின்னா,
05:52
Speaker A
குரு அதிசாரப் பெயர்ச்சி.
05:55
Speaker A
அது என்ன குரு அதிசாரப் பெயர்ச்சி?
05:57
Speaker A
சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சுகிட்டு இருக்கு.
06:01
Speaker A
குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கிற மாதிரி இருக்கும்.
06:03
Speaker A
அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது.
06:05
Speaker A
அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு.
06:10
Speaker A
குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
06:13
Speaker A
அதை எத,
06:14
Speaker A
நவம்பர் மாசம்,
06:17
Speaker A
திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.
06:21
Speaker A
அதுதான் அதிசாரப் பெயர்ச்சி.
06:23
Speaker A
அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.
06:26
Speaker A
குருன்னா யாரு?
06:27
Speaker A
குரு வந்து அவர் தேவ குரு இல்லையா அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.
06:31
Speaker A
தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.
06:33
Speaker A
அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்.
06:37
Speaker A
குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும், திருமணம், செல்வம், செழிப்பு.
06:43
Speaker A
அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா.
06:48
Speaker A
சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்.
06:52
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.
06:55
Speaker A
சனிக்கு பயந்துக்குவாங்க.
06:56
Speaker A
நிஜமால்மா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?
06:58
Speaker A
குருவுக்குதான் பயந்துக்கணும்.
06:59
Speaker A
ஏன் அப்படின்னா,
07:00
Speaker A
குரு ஞானக்காரகன் அதாவது தர்மம்.
07:03
Speaker A
தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.
07:06
Speaker A
இல்லை அப்படின்னா,
07:07
Speaker A
தர்மம் தலைகாக்கும்.
07:10
Speaker A
கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா.
07:17
Speaker A
தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிற்பார்.
07:21
Speaker A
தெய்வம் தர்மத்தின் பக்கமே நிற்கும் அப்படிங்கிறதுதான் வந்து குருவோட கொள்கையே.
07:25
Speaker A
அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறதை விட.
07:29
Speaker A
நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.
07:33
Speaker A
சரி இந்த குரு அதிசாரப் பெயர்ச்சின்னா என்ன?
07:37
Speaker A
இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியுற மாதிரி சொல்லுங்க எங்களுக்கு அது புரியல.
07:42
Speaker A
பெயர்ச்சின்னா என்ன அதிசாரப் பெயர்ச்சின்னா என்ன அப்படின்னா,
07:45
Speaker A
நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க.
07:48
Speaker A
ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாமே பஸ்ல போயிருப்போம்.
07:50
Speaker A
இப்ப நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்போ நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?
07:56
Speaker A
பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.
07:58
Speaker A
ஆனா பஸ் அங்கேயேதான் நிக்குது.
08:00
Speaker A
நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.
08:01
Speaker A
அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே.
08:04
Speaker A
ஒரு வருடம் ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பார்.
08:09
Speaker A
மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.
08:12
Speaker A
அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பார்.
08:15
Speaker A
அப்படின்னு சொல்லப்படுது.
08:16
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
08:18
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா,
08:19
Speaker A
குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.
08:25
Speaker A
அந்த மாதிரி இப்ப ரிவர்ஸ் போறார் இப்ப.
08:26
Speaker A
அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா இது வந்து வான்ல நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.
08:32
Speaker A
அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கிதான் போகணும்.
08:35
Speaker A
வக்ரம் அடையறார்.
08:40
Speaker A
வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.
08:43
Speaker A
நிதானத்தை இழந்து.
08:44
Speaker A
அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.
08:49
Speaker A
என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறார் அந்த இடத்துல.
08:54
Speaker A
அப்ப என்ன பண்ணுவார்?
08:55
Speaker A
குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?
08:56
Speaker A
குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.
08:58
Speaker A
இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம்.
09:03
Speaker A
காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா.
09:06
Speaker A
கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம்.
09:10
Speaker A
ஆனா பார்த்துருவோம்.
09:11
Speaker A
அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க.
09:14
Speaker A
குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும்.
09:20
Speaker A
திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியிலே திரும்பவும் வந்துருவார்.
09:24
Speaker A
கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வான்ல அந்த வானியல் சாஸ்திரப்படி.
09:30
Speaker A
அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.
09:34
Speaker A
அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது.
09:39
Speaker A
சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறதுலாம் குரு கொடுக்க மாட்டார்.
09:44
Speaker A
நிதானமாதான் கொடுப்பார்.
09:45
Speaker A
சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.
09:50
Speaker A
ஆனா குரு வந்து குரோத்தை கொடுப்பார் உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும்.
09:55
Speaker A
ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும் எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறதெல்லாம் தெரியும் இல்லையா.
10:00
Speaker A
அது இன்னும் நிதானிச்சு கொடுக்கப்போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசாரப் பெயர்ச்சி அப்படிங்கறது அர்த்தம்.
10:03
Speaker A
இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசாரப் பெயர்ச்சி.
10:07
Speaker A
என்னென்ன மாதிரியான நல்லதை எப்படி கொடுக்கப்போறாரு.
10:11
Speaker A
என்ன பாடத்தை கற்பிக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.
10:14
Speaker A
ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்கதானே வராரு.
10:18
Speaker A
அதுவும் இந்த அதிசாரப் பெயர்ச்சி எப்படி தெரியுமா?
10:20
Speaker A
இன் ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாத்தியார் போறப்ப அந்த வாத்தியார் எப்படி நம்மகிட்ட பிஹேவ் பண்ண போறார்னே நம்மளுக்கு தெரியாது.
10:28
Speaker A
அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசாரப் பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்தப்போகக்கூடிய விஷயமா இருக்கும்.
10:32
Speaker A
சரி இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா,
10:36
Speaker A
கடகம், ரிஷபம், மீனம்.
10:40
Speaker A
இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசாரப் பெயர்ச்சி நிச்சயம் நல்ல விஷயங்கள்தான் கொடுக்கும்.
10:44
Speaker A
நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்னா.
10:49
Speaker A
அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.
10:53
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ,
10:57
Speaker A
மிதுனம், தனுசு, மகரம் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது இந்த அதிசாரப் பெயர்ச்சியில.
11:02
Speaker A
ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய.
11:07
Speaker A
ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.
11:13
Speaker A
குரு உருவாக்க மாட்டார்.
11:14
Speaker A
குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால கவனம்.
11:20
Speaker A
மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.
11:26
Speaker A
ஒன்னும் இல்ல நீங்க எல்லாம் பிரச்சனை இல்லை உங்களை எல்லாம் குரு அதிசாரப் பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்கப் போறது இல்லை.
11:32
Speaker A
அப்படிங்கிறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா,
11:35
Speaker A
மேஷம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்.
11:40
Speaker A
உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அப்படிங்கறது சொல்லுது.
11:45
Speaker A
பொதுவாவே குரு அப்படிங்கிறவர் எதுக்கு வராரு அப்படின்னாலே.
11:49
Speaker A
நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்குதான்.
11:52
Speaker A
அப்ப இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியை பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்குதான் பயந்துக்கணும்.
11:56
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோடு பண்ணி.
12:00
Speaker A
இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.
12:05
Speaker A
திரும்பி திரும்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற.
12:09
Speaker A
குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.
12:11
Speaker A
குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே அவர் வந்து நம்மளுக்கு டீச்சர்தானே.
12:15
Speaker A
அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க ஓகே இனிமேல் இந்த தவறு பண்ணக்கூடாது.
12:20
Speaker A
இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா கர்மத்தின் பாதையில போயிருவோம்.
12:25
Speaker A
இது எப்படின்னா கர்மத்திலிருந்துதான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.
12:27
Speaker A
அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?
12:30
Speaker A
செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.
12:33
Speaker A
அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கிறோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா.
12:38
Speaker A
தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.
12:40
Speaker A
குருங்கிறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.
12:43
Speaker A
என்னங்கிறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை.
12:47
Speaker A
ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோடு நம்ம அந்த தெய்வத்தை நம்பி இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ.
12:54
Speaker A
குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும்.
12:58
Speaker A
எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கிறது ரொம்ப நல்லது.
13:02
Speaker A
சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்குதான் பயந்துக்கணும்.
13:05
Speaker A
ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கிற மாதிரி இருக்கும்.
13:11
Speaker A
ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
13:16
Speaker A
அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா.
13:20
Speaker A
குரு தட்சணை எல்லாம் செழிப்பா குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வராது.
13:24
Speaker A
அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து.
13:30
Speaker A
இது பண்ணா போதுமா அப்படிங்கிற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ.
13:35
Speaker A
குருனாலே சந்தேகமே படவே கூடாது.
13:37
Speaker A
குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படினாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ.
13:42
Speaker A
குரு பலம் கம்மியா இருக்குங்கிறது அர்த்தம்.
13:44
Speaker A
அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.
13:45
Speaker A
அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை.
13:48
Speaker A
குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே.
13:54
Speaker A
குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.
Topics:மிதுன ராசிகுரு அதிசார பெயர்ச்சிசனி கிரகம்மனக்குழப்பம்திருப்பதி பெருமாள்தொழில் தடைகள்பரிகாரம்தமிழ் ஜோதிடம்குரு வக்ரம்ஆஸ்திரோலஜி

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →