Mithunam 👉 குரு வைக்கும் CHECKPOINT இதுதான்.! | Astrolo… — Transcript

மிதுன ராசி பெண்களுக்கான வாழ்க்கை, தொழில், ஆரோக்கியம் மற்றும் மனநிலை பற்றிய ஜோதிட ஆலோசனைகள்.

Key Takeaways

  • மிதுன ராசி பெண்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.
  • புதன் கிரகத்தின் சக்தியை சரியாக பயன்படுத்தி தொழிலில் முன்னேற முடியும்.
  • டீச்சிங் மற்றும் டிராவல் சார்ந்த தொழில்கள் மிதுன ராசி பெண்களுக்கு சிறந்தவை.
  • குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை திறம்பட சமாளிக்க வேண்டும்.
  • யோகா, ரேக்கி போன்ற ஆன்மிக மற்றும் சிகிச்சை முறைகள் மனநிலையை மேம்படுத்த உதவும்.

Summary

  • மிதுன ராசி பெண்களின் தன்மை மற்றும் மூன்று நட்சத்திரங்கள் (மிருகசீரிஷம், புனர்பூசம், திருவாதிரை) பற்றிய விளக்கம்.
  • பெண்களின் ரீப்ரோடக்டிவ் சிஸ்டம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து முக்கிய கவனம்.
  • மிதுன ராசி பெண்கள் தங்கள் கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்கும் தன்மை.
  • புதன் கிரகத்தின் தாக்கம் மற்றும் அதனை சரியாக பயன்படுத்துவதன் முக்கியத்துவம்.
  • டீச்சிங், மார்க்கெட்டிங், அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் டிராவலிங் போன்ற தொழில்கள் மிதுன ராசி பெண்களுக்கு ஏற்றவை.
  • குடும்ப உறவுகளில் ஏற்படும் சண்டைகள் மற்றும் அதனை சமாளிப்பது பற்றிய ஆலோசனைகள்.
  • மிதுன ராசி பெண்களின் மனநிலை மற்றும் கோபங்களை கட்டுப்படுத்த யோகா, ரேக்கி போன்ற துறைகள் உதவும்.
  • ஹார்மோனல் சமநிலை மற்றும் தைராய்டு பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு.
  • பிரேஷியஸ் ஸ்டோன்கள் மற்றும் பூஜை சாதனங்கள் வியாபாரம் மூலம் மத்தவங்களுக்கு உதவுவது.
  • மிதுன ராசி பெண்கள் தங்கள் அறிவை பகிர்ந்து, புண்ணியத்தை பெருக்கி வாழ வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker None
ஒரு இடத்தை தாண்டி இன்னொரு இடத்துக்கு டிராவல் பண்ணிட்டே போகக்கூடிய ஒரு தொழில் சூஸ் பண்றதுங்கிறது உங்களுக்கு கரெக்டா வரும்.
00:08
Speaker None
அதைவிட சிறந்த தொழில் எது பெண்களுக்குன்னு பார்த்தா,
00:11
Speaker None
ரீப்ரோடக்டிவ் சிஸ்டம் அப்படிங்கறது ரொம்ப பார்த்துக்கணும் அதாவது உங்களுடைய கருப்பை அப்படிங்கற விஷயம் மிக கவனம் மிதுன ராசி பெண்களுக்கு.
00:19
Speaker None
ஏன் அப்படின்னா,
00:23
Speaker None
அதேபோல மிதுன ராசி பெண்கள் லைஃப் பார்ட்னரை சூஸ் பண்றீங்க அப்படின்னா,
00:28
Speaker None
உங்களுக்குலாம் நான் சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்ன அப்படின்னா,
00:46
Speaker None
குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:48
Speaker None
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா ஸ்பெஷலா பெண்களுக்காகவே 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.
00:56
Speaker None
இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.
01:00
Speaker None
இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது.
01:06
Speaker None
அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும்?
01:10
Speaker None
அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
01:57
Speaker None
மிதுன ராசி.
01:58
Speaker None
மிதுன ராசி பெண்களுடைய தன்மை என்னன்னு பார்க்கிறப்போ இதுலயும் மூணு நட்சத்திரங்கள் வருது இல்லையா?
02:02
Speaker None
மிருகசீரிஷம் வருது, புனர்பூசம் வருது, திருவாதிரை வருது.
02:07
Speaker None
அப்போ இந்த மூணு நட்சத்திரங்களுக்குமே தனித்தனியான குணாதிசயங்கள் இருந்தாலுமே ஒருசேர ஒரு விஷயம் என்ன மிதுன ராசிக்கு அப்படின்னா,
02:15
Speaker None
மிதுன ராசி பெண்களுக்கும் சிறு வயதிலிருந்தே தனக்கு என்ன வேணும் அப்படிங்கறது அவ்வளவு சீக்கிரம் புலப்படவே புலப்படாது.
02:25
Speaker None
படிக்கிறதா இருந்தா கூட புடிச்சாதான் படிப்பாங்க இல்லைன்னா படிக்க மாட்டாங்க.
02:30
Speaker None
கொஞ்சம் மந்த நிலை அப்படிங்கறது சிறிது காலத்துக்கு இருக்கிற மாதிரி இருக்கும்.
02:36
Speaker None
அதுக்கப்புறம் அந்த சப்ஜெக்ட் புடிச்சிருச்சுன்னா படிக்கிறது அப்படிங்கறது இருக்கும்.
02:40
Speaker None
ஏன்னா மிதுனம்ங்கறது அனலிட்டிக்கல் மைண்ட் இருக்கக்கூடியது.
02:45
Speaker None
சேட்டர் பாக்ஸ் ஏன்னா இந்த புதன் எப்படின்னா பேசிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.
02:50
Speaker None
இந்த மிதுன ராசி பெண்கள் இருக்கக்கூடிய இடத்துல ரொம்ப கலகலன்னே இருக்கும்.
02:56
Speaker None
அந்த பிரெண்ட்ஷிப் ஜோன் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்.
02:58
Speaker None
குடும்பத்துல மட்டும் அம்மா கிட்ட கொஞ்சம் சண்டை போடுறது,
03:04
Speaker None
வீட்ல வீட்டு உறுப்பினர்கள்ட்ட கொஞ்சம் சண்டை போடுறது, வாக்குவாதம் பண்றது அப்படிங்கறதெல்லாம் இருக்கும்.
03:10
Speaker None
ஏன் அப்படின்னா,
03:11
Speaker None
புதனுக்கு உபதேசம் பிடிக்காது.
03:13
Speaker None
அதனால வந்து யாராவது அட்வைஸ் பண்றாங்க அப்படின்னா மிதுன ராசி பெண்களுக்கு வந்து அவ்வளவு சீக்கிரம் அதை ஏத்துக்க பிடிக்காது.
03:20
Speaker None
அப்ப தாயவே வந்து ஒரு எதிரி மாதிரி பார்க்கிறது.
03:22
Speaker None
எனக்கு எனக்கு தெரியும் நான் என்ன பண்றேன்னு எனக்கு தெரியும் அப்படின்னு சொல்லி தவறுகள் பண்றது.
03:28
Speaker None
இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வந்து மிதுன ராசி பெண்களுடைய லைஃப்ல அப்படிங்கறது இருந்திருக்கும்.
03:34
Speaker None
இப்போ என்ன மாதிரியான தொழில் மிதுன ராசி பெண்களுக்கு அமையும் அப்படின்னா,
03:38
Speaker None
உங்களுக்கும் வந்து பேச்சு அப்படிங்கறது விசுதி சக்கரம் அப்படின்னு சொல்றோம் இல்லையா உங்களுக்கு புதன்.
03:44
Speaker None
புதன்ங்கறது சரியா இருக்கணும்.
03:46
Speaker None
அந்த புதனை சரியா யூஸ் பண்ணவும் தெரியணும்.
03:50
Speaker None
அந்த டீச்சிங் ஸ்கில்லு, அட்மினிஸ்ட்ரேஷன் பண்றது,
03:54
Speaker None
மார்க்கெட்டிங் பிசினஸ் இது எல்லாமே வந்து மிதுன ராசி பெண்களுக்கு ரொம்ப நல்லா வரும்.
03:59
Speaker None
சில மிதுன ராசி பெண்களுக்கு பெரும்பாலும் டிராவலிங்னா ரொம்ப பிடிக்கும்.
04:03
Speaker None
நிறைய டிராவலர்ஸ் போய் பார்த்தீங்கன்னா மிதுன ராசியில இருப்பாங்க.
04:08
Speaker None
திருவாதிரை நட்சத்திரத்துல இருப்பாங்க.
04:10
Speaker None
நிறைய பெண்கள்.
04:12
Speaker None
போய் செக் பண்ணி பார்த்தீங்கன்னா தெரியும்.
04:14
Speaker None
நிறைய பெண்கள் இப்ப சொல்லலாம் நான் திருவாதிரைதான்.
04:17
Speaker None
எனக்கு டிராவலிங்னா ரொம்ப பிடிக்கும் அப்படின்னு.
04:19
Speaker None
அப்ப அந்த டிராவலிங் ரிலேட்டடான பிசினஸ் எடுத்து நீங்க பண்றது.
04:23
Speaker None
அதாவது இப்ப சோசியல் மீடியா நிறைய அந்த டிராவல் ப்ளாக்ஸ் எல்லாம் கொண்டு வந்துட்டாங்க இல்லையா?
04:30
Speaker None
நீங்க வந்து ஃபுட் பத்தின வீடியோஸ் போடுறது.
04:33
Speaker None
ஃபுட் ப்ளாக்ஸ் போடுறது.
04:35
Speaker None
இந்த மாதிரி டிராவல் பண்ணி டிராவல் பண்ணி இந்த எக்ஸ்பீரியன்ஸஸ் போடுறது.
04:38
Speaker None
ஏன்னா உங்களுக்கு அந்த தேடல்கள் அந்த ஏஸ்தெடிக் சென்ஸ் அப்படிங்கறது மிதுன ராசி பெண்களுக்கு இயற்கையாகவே வரும்.
04:43
Speaker None
அப்போ ஒரு இடத்தை தாண்டி இன்னொரு இடத்துக்கு டிராவல் பண்ணிட்டே போகக்கூடிய ஒரு தொழில் சூஸ் பண்றதுங்கிறது உங்களுக்கு கரெக்டா வரும்.
04:50
Speaker None
அதைவிட சிறந்த தொழில் எது பெண்களுக்குன்னு பார்த்தா டீச்சிங் தான்.
04:54
Speaker None
ஏன்னா மிதுன ராசி பெண்களால தன்கிட்ட இருக்க விஷயத்தை வெளியில சொல்லாம இருக்கவே முடியாது.
05:00
Speaker None
அவங்களுக்கு பேசிக்கிட்டே இருக்கணும்.
05:02
Speaker None
நிறைய பேர் இருக்கணும் பேசுறதுக்கு கேட்டுக்கிட்டே இருக்கணும்.
05:05
Speaker None
உபதேசம் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.
05:07
Speaker None
தன்னுடைய கல்வியை பெருமையா பேசிக்கிட்டே இருக்கக்கூடிய அமைப்பு மிதுன ராசி பெண்களுக்கு பெரும்பாலும் இருக்கும்.
05:13
Speaker None
டிகிரிஸ் நிறைய போட்டுக்கணும்.
05:15
Speaker None
நான் இன்ன படிச்சேன்.
05:17
Speaker None
படித்துக்கிட்டே இருக்கக்கூடிய அமைப்பு மிதுன ராசி பெண்களுக்கு அதிகம்.
05:20
Speaker None
டாக்டரேட் வாங்குறது.
05:22
Speaker None
மறுபடியும் இன்னொரு டாக்டரேட்டுக்கு படிக்கிறது.
05:24
Speaker None
இந்த எம்ஃபில், பிஹெச்டி இது எல்லாமே வந்து மிதுன ராசி பெண்களுக்கு திருமணம் ஆனதுக்கு அப்புறம் கூட படிக்கிற பெண்கள் ரொம்ப அதிகம்.
05:30
Speaker None
அப்போ படிப்பு உங்களுடைய படிப்பு மத்தவங்களுக்கு உபயோகமா இருக்கணும்.
05:34
Speaker None
அந்த டீச் பண்றது.
05:36
Speaker None
கெஸ்ட் லெக்சரர்ஸா போறது.
05:38
Speaker None
நான் வீட்லதாங்க இருக்கேன் நான் என்ன பண்றதுன்னே எனக்கு தெரியல.
05:41
Speaker None
பெரும்பாலான மிதுன ராசி பெண்கள் இதை சொல்லலாம்.
05:44
Speaker None
எனக்கு வீட்ல இருந்துட்டு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல அப்படின்னா,
05:46
Speaker None
உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை உங்களுடைய ஸ்கில்ஸ பேச்சுலதான் இருக்குது.
05:50
Speaker None
சொல்லிக் கொடுக்கிறதுல இருக்குது.
05:52
Speaker None
மத்தவங்களால லிசன் பண்ண முடியும்.
05:54
Speaker None
அந்த காசிப்பிங்ங்கிற விஷயம் அந்த புறளி பேசுறதுங்கிற விஷயத்துக்குள்ள மிதுன ராசி பெண்கள் போயிறவே கூடாது.
06:00
Speaker None
ஏன்னா அப்படியே காதுல கேட்டுட்டு என்னன்னே தெரியாம புறளி பேசக்கூடிய அமைப்பு அதிகம் உண்டு.
06:06
Speaker None
அதேபோல இந்த மிதுன ராசி பெண்கள் என்ன பண்ணுவாங்கன்னா,
06:08
Speaker None
வீட்ல நடக்கிற விஷயத்தை வெளியில போய் சொல்றது.
06:12
Speaker None
வீட்ல நடக்கிற விஷயத்தை அம்மாட்ட போய் சொல்றது.
06:14
Speaker None
அதாவது கணவன் கிட்ட இருக்கிற விஷயத்தை அம்மாட்ட போய் சொல்றது இதெல்லாம் என்னன்னா திஷ்டியாவே உங்களுக்கு மாறும்.
06:20
Speaker None
மத்தவங்களுடைய குறைகளை கேட்டு கேட்டு அந்த குறைகளை நீங்க வீட்ல வந்து அதை டிஸ்கஸ் பண்ணி பேசுறீங்கன்னா,
06:27
Speaker None
வெளியிலிருந்து கர்மாவை மிதுன ராசி பெண்கள் இப்படித்தான் வீட்டுக்குள்ள கொண்டே வருவீங்க.
06:32
Speaker None
உங்களுடைய ரீப்ரோடக்டிவ் சிஸ்டம் அப்படிங்கறது ரொம்ப பார்த்துக்கணும் அதாவது உங்களுடைய கருப்பை அப்படிங்கற விஷயம் மிக கவனம் மிதுன ராசி பெண்களுக்கு.
06:40
Speaker None
ஏன் அப்படின்னா,
06:41
Speaker None
உங்களுக்கு ஏதோ ஒரு வகையில அந்த யூட்ரஸ்லங்கிற ஒரு இஸ்யூ அப்படிங்கறது ஒரு பிசிஓடி இஸ்யூஸ் இருக்கிறதோ,
06:49
Speaker None
இல்ல கருவுற்றதுக்கு அப்புறமா திடீர்னு உங்களுக்கு வந்து பிரக்னன்சி சுகர் வரக்கூடிய ஒரு அமைப்பு.
06:55
Speaker None
இந்த சுகர் டச் பண்ணக்கூடியது இதெல்லாமே வந்து உங்களுக்கு இருக்கும்.
06:59
Speaker None
உங்களுடைய விசுதி சக்கரம் எல்லாமே உங்களுக்கு தைராய்டு இஸ்யூஸ் எல்லாமே இந்த கழுத்து பகுதியிலதான் இந்த நோய் தாக்கக்கூடிய அமைப்பும் வந்து மிதுன ராசி பெண்களுக்கு உண்டு.
07:05
Speaker None
சில பெண்களுக்கு இந்த மைக்ரேன் இஸ்யூஸ் வரது.
07:08
Speaker None
இது எல்லாமே எங்க வருதுன்னு நீங்க கவனிச்சீங்கன்னா தெரியும்.
07:10
Speaker None
அதிகமா பேசுறது இந்த நீர் கோர்க்கக்கூடியது உங்க உடம்பை நீங்களே கவனிக்காம போறது.
07:16
Speaker None
அந்த மாய்ஸ்சர் தன்மை அப்படிங்கறது உடம்புல இல்லாம போறது.
07:20
Speaker None
இதெல்லாமே வந்து பருவ வயதிலிருந்தே மிதுன ராசி பெண்கள் அந்த ஹெல்த்தை வந்து பார்த்துக்கிட்டே இருக்கணும்.
07:25
Speaker None
ஏன்னா,
07:26
Speaker None
மிதுனம்ங்கறது அர்த்தநாரீஸ்வரரை குறிக்கக்கூடியது.
07:29
Speaker None
ஆண் பெண் சமமா ஈக்குவலா சொல்லக்கூடியது.
07:34
Speaker None
அப்படி இருக்கப்போ இந்த பெண்களுக்கு இந்த ஆண் தன்மை இருக்கக்கூடிய அமைப்பு அதிகம் மிதுன ராசி பெண்களுக்கு.
07:38
Speaker None
ஆண் போல பாவிக்கிறது.
07:40
Speaker None
ஆண் போல நடையுடை இருக்கிறது.
07:42
Speaker None
அதே மாதிரி இந்த தைராய்டு இருக்கிறது.
07:44
Speaker None
இந்த முகத்துல இந்த தாடி பகுதியில முடி வளரறது இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் இந்த ஹார்மோனல் இஸ்யூஸ்.
07:50
Speaker None
இது எல்லாமே மிதுன ராசி பெண்களுக்குங்கறது வரும்.
07:53
Speaker None
அப்ப என்ன பண்ணனும் அப்படின்னா,
07:54
Speaker None
கோபங்களை குறைக்கணும்.
07:57
Speaker None
நிதான நிலைக்கு வரணும்.
07:58
Speaker None
நீங்கலாம் வந்து யோகா, ரேக்கி இந்த சர்வீஸ் ஓரியண்டடான துறைகள் எல்லாம் இருக்கு இல்லையா?
08:02
Speaker None
முதல்ல இதெல்லாம் நீங்க கத்துக்கணும்.
08:04
Speaker None
உங்களுக்கு யோகா, ரேக்கி இதெல்லாம் ரொம்ப நல்லாவே வரும்.
08:07
Speaker None
ஒருத்தங்களுக்கு சர்வீஸ் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு.
08:10
Speaker None
இதை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பு.
08:12
Speaker None
அதே மாதிரி நாங்க ஒரு கடை வைக்கிறோம்.
08:14
Speaker None
ஒரு பொட்டிக் வைக்கிறோம்.
08:15
Speaker None
நாங்க என்ன பொருள் வைக்கட்டும் அப்படின்னா,
08:17
Speaker None
இந்த ஜெம் ஸ்டோன்ஸ் வைக்கிறது, இந்த பிரெஷியஸ் ஸ்டோன்ஸ் வைக்கிறது.
08:20
Speaker None
இந்த நிறைய கற்கள் எல்லாம் விப்பாங்க தெரியுமா?
08:24
Speaker None
இந்த பிரேயர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் வைக்கிறது.
08:27
Speaker None
அதாவது பூஜை சாமான்கள் வைக்கிறது.
08:30
Speaker None
இந்த மாதிரி தொழில் எல்லாம் நீங்க சூஸ் பண்ணி பண்றீங்க அப்படின்னா,
08:34
Speaker None
மத்தவங்களுக்கு அந்த ஹீலிங்ங்கறது கிடைக்கும்.
08:36
Speaker None
ஏன்னா உங்களுடைய நாலேட்ஜை நீங்க இப்படித்தான் ஷேர் பண்ணி,
08:39
Speaker None
அதை வந்து புண்ணியமா நீங்க மாத்தணும்.
08:42
Speaker None
இந்த பொருளை நீங்க யூஸ் பண்ணுங்க.
08:44
Speaker None
நீங்க நல்லா வருவீங்க.
08:45
Speaker None
இப்ப ரேக்கிலாம் நீங்க தாராளமா கத்துக்கலாம்.
08:47
Speaker None
ஏன்னா உங்களுக்கு இருக்க சக்கரங்கள் எல்லாம் நல்லபடியா ஆக்டிவேட்டடா தான் இருக்கும்.
08:50
Speaker None
ஏன்னா துருதுருன்னு இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.
08:52
Speaker None
உங்களால மத்தவங்களை ஹீல் பண்ண முடியும்.
08:54
Speaker None
அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு நான் சொன்னேன் இல்லையா வெளிய போய் நீங்க காசிப் பண்றீங்கன்னா அந்த திஷ்டியை நீங்க வாங்கிட்டு வந்துருவீங்கன்னு.
08:59
Speaker None
இங்க ஒரு சிலருக்கு ஹீல் பண்றப்போ அந்த திஷ்டியை கழிக்கக்கூடிய பலன் அப்படிங்கறது உங்களுக்கு அமையும்.
09:03
Speaker None
அதனால இது போன துறைகள் அப்படிங்கறது நீங்க சூஸ் பண்ணிக்கிறது நல்லது.
09:06
Speaker None
அதேபோல மிதுன ராசி பெண்கள் லைஃப் பார்ட்னரை சூஸ் பண்றீங்க அப்படின்னா,
09:10
Speaker None
உங்களுக்குலாம் நான் சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்ன அப்படின்னா,
09:14
Speaker None
லவ் மேரேஜ் அப்படிங்கறது முடிஞ்ச அளவுக்கு செட்டே ஆகாது மிதுன ராசி பெண்களுக்கு.
09:18
Speaker None
ஏன் அப்படின்னா சூஸ் பண்ணக்கூடிய ஒரு பார்ட்னர்,
09:20
Speaker None
எப்படியாவது தவறா அமைஞ்சிருவார்.
09:22
Speaker None
மிதுன ராசிக்கு குரு வைக்கக்கூடிய செக்பாயிண்ட்டே அதுதான்.
09:26
Speaker None
ஏன்னா புதன் குரு சொல்றதை கேட்கவே கேட்காது.
09:31
Speaker None
ரொம்ப அனலிட்டிக்கல் மைண்ட்லயே இருந்துகிறது.
09:34
Speaker None
நான் சொல்றதுதான் கரெக்ட்ன்னு இருந்துகிறது.
09:36
Speaker None
அப்போ இந்த மிதுன ராசி பெண்களுக்கு குழந்தை தாமதமாகிறது.
09:40
Speaker None
படிப்புல எங்காவது தாமதமாகிறது.
09:42
Speaker None
கணவன் அமையறதுல தாமதமாகிறது.
09:44
Speaker None
நிறைய பரிகாரங்கள் செஞ்சுதான் அந்த திருமணம் அமையறதே அப்படிங்கறதே வந்து இந்த மிருகசீரிஷம் நட்சத்திரம் இருக்கக்கூடிய பெண்களுக்கு.
09:52
Speaker None
திருவாதிரையில இருக்கக்கூடிய பெண்களுக்குலாம் திருமணம்ங்கறது தாமதமாயிரும்.
09:56
Speaker None
இல்ல ஏர்லி மேரேஜ் நீங்க பண்ணிட்டீங்கன்னா அந்த திருமணம் முடிஞ்சு இன்னொரு திருமணத்துக்கு போகக்கூடிய ஒரு அமைப்பு.
10:02
Speaker None
அது அரேஞ்ச்டு மேரேஜா இருந்தா கூட அந்த மாதிரி போகக்கூடிய ஒரு அமைப்புங்கறதெல்லாம் பெரும்பாலான மிதுன ராசி பெண்களுக்குங்கறது அமைஞ்சிரும்.
10:07
Speaker None
அந்த குழந்தை பிறப்புல குரு பெரிய செக்பாயிண்ட்டே வச்சிருப்பார் அப்படிங்கறதுதான் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.
10:12
Speaker None
கொஞ்சம் இல்ல எனக்கு குழந்தையே பிறக்காதா அப்படின்னு மிதுன ராசி பெண்கள்,
10:14
Speaker None
நிறைய பேர் கேட்பாங்க.
10:16
Speaker None
குழந்தை உங்களுக்கு பிறக்கும்.
10:17
Speaker None
தாமதப்படுத்திதான் குழந்தை வரக்கூடிய ஒரு அமைப்பு பெரும்பாலும் மிதுன ராசி பெண்களுக்கு மேக்ஸிமம் ஆண் குழந்தை வரக்கூடிய அமைப்பு ரொம்ப அதிகம்.
10:23
Speaker None
ஏன் அப்படின்னா,
10:24
Speaker None
குரு இப்படித்தான் வருவார்.
10:26
Speaker None
குரு வந்து பெண் சாரத்தை வச்சிருந்தாலுமே ஏதோ ஒரு வகையில அந்த ஆண் குழந்தை அந்த வாரிசுங்கறது கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பு.
10:34
Speaker None
அதுக்கப்புறம் ரெண்டாவதா பெண் குழந்தை வரக்கூடிய அமைப்புலாம் மிதுன ராசி பெண்களுக்கு கொஞ்சம் லேட்டா எல்லாமே இந்த சுபகாரியங்கள் அப்படிங்கறது கொஞ்சம் தாமதமா வரக்கூடிய ஒரு அமைப்பு.
10:40
Speaker None
அப்படின்னு இருக்கிறப்போ நீங்கலாம் வந்து பெருமாள் வழிபாடும்,
10:44
Speaker None
சிவன் வழிபாடும் ஒருசேர ஈக்குவலா பண்ணிக்கிறது அப்படிங்கறது நல்லது.
10:49
Speaker None
தம்பதி சகிதமா இருக்கக்கூடிய ஆலயங்களுக்கு போறது.
10:53
Speaker None
அதாவது உமா மகேஸ்வரர் சேர்ந்து இருக்கக்கூடிய ஆலயங்கள்.
10:58
Speaker None
சிவன் பார்வதி சேர்ந்து இருக்கக்கூடிய ஆலயங்கள் இப்படி போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா,
11:03
Speaker None
உங்களுக்கு அது ஒரு பரிகாரமாவே அமையும்.
Topics:மிதுன ராசிபெண்கள் வாழ்க்கைஜோதிடம்தொழில் ஆலோசனைஆரோக்கியம்மனநிலைபுதன் கிரகம்டீச்சிங் தொழில்யோகாரேக்கி

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →