Mesham👉 நம்பி நம்பி ஏமாந்து போகாதீங்க! | Astrologer Jee… — Transcript

மேஷ ராசி பெண்களின் வாழ்க்கை, குணாதிசயங்கள் மற்றும் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி ஜீவிதா ஜோதிடர் விளக்கம்.

Key Takeaways

  • மேஷ ராசி பெண்கள் தனித்துவமான ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
  • திருமண வாழ்க்கையில் பொறுமை மற்றும் புரிதல் அவசியம்.
  • தொழிலிலும் குடும்பத்திலும் சமநிலை முக்கியம்.
  • மனரீதியான பிரச்சனைகள் மற்றும் ஓவர் திங்கிங் குறைக்க கவனம் தேவை.
  • பெண்கள் தங்களின் குறைகளை அறிந்து முன்னேற வேண்டும்.

Summary

  • மேஷ ராசி பெண்கள் பிறக்கும் போது தனித்துவமான ஆளுமை மற்றும் வெகளி கொண்டவர்கள்.
  • மேஷ ராசி பெண்கள் வாழ்க்கையில் சிக்கல்கள் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் எதிர்கொள்ளலாம்.
  • அவர்கள் படிப்பு மற்றும் தொழிலில் சாதனை காண்பதற்கான தன்மை மற்றும் அனுபவம் உள்ளது.
  • திருமண வாழ்க்கையில் 10-20 வருடங்கள் கூட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • மேஷ ராசி பெண்கள் குடும்ப உறவுகளில் மற்றும் வேலை இடத்தில் வேறுபட்ட ஆளுமைகளை காட்டுவர்.
  • அவர்கள் குடும்ப உறவுகளில் தகுந்த சமநிலை மற்றும் பொறுமை தேவைப்படுகிறது.
  • மேஷ ராசி பெண்கள் தங்களின் குறைகளை அறிந்து சரியான வழியில் முன்னேற வேண்டும்.
  • இந்த வீடியோ முழுவதும் பெண்களுக்கான வாழ்க்கை கணிப்பாகவும், அறிவுரையாகவும் அமைந்துள்ளது.
  • மேஷ ராசி பெண்கள் வாழ்க்கையில் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது முக்கியம்.
  • வீட்டிலும் வேலை இடத்திலும் ஒரே மாதிரி ஆளுமை காட்டாமல் சமநிலையை காக்க வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
சில பேத்துக்கு மேஷ ராசி பெண்கள்ட்ட சொல்றதுக்கே பயமா இருக்கும். சொன்னா கேப்பாங்களா கேக்க மாட்டாங்களா அப்படின்னு.
00:06
Speaker A
ஏதாவது ஒரு சர்வீஸ் ஓரியன்டடான தொழில் அமையறதுங்கறதே அவங்களுக்கு அப்படித்தான் அமையும்.
00:11
Speaker A
ஆனா அந்த தொழிலும் நான் தான் கரெக்ட் நான் தான் பெர்ஃபெக்ட் அப்படின்னு பேசி பேசியே 10 வருஷம், 15 வருஷம், 20 வருடம் திருமணமா இருந்தா கூட உங்களுடைய குழந்தைகள் ஆகட்டும், உங்களுடைய கணவன் ஆகட்டும், உங்களோட மாமனார், மாமியார் யார் ஆகட்டும் அவங்க எல்லாம் வந்து
00:25
Speaker A
இப்ப மேஷ ராசி பெண்கள் என்ன மாதிரியான ராசியில் இருக்கவங்கள வந்து திருமணம் பண்ணிக்கலாம், என்ன மாதிரி குணாதிசயங்களோடு இருக்கவங்கள திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னு பார்க்கிறப்போ
00:35
Speaker B
Presenting sponsor Tamil matrimony.
00:37
Speaker B
Sowbaghya home and kitchen appliances.
00:40
Speaker B
Everest Eazy Chef. Chef ஆகுங்கள் சில நிமிடங்களிலேயே.
00:45
Speaker A
குமுதம் நேயர்களுக்கும் எனது வணக்கங்கள். இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா ஸ்பெஷலா பெண்களுக்காகவே 12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.
00:55
Speaker A
இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம். இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது. அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.
01:56
Speaker A
முதல்ல மேஷ ராசி. மேஷ ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்பவே
02:01
Speaker A
மேஷ ராசி பெண்கள் பிறக்கும் பொழுதே எப்படின்னா வெகளி. பயங்கரமான ஒரு வெகளி.
02:06
Speaker A
எதுவுமே தெரியாம அதாவது எப்படி பார்க்கப்படுதுன்னா மேஷ ராசியில் பிறக்கக்கூடிய அந்த ஆன்மாக்கள் அப்படின்னு எடுக்கிறப்ப புதுசா உலகத்தை பார்க்கிற மாதிரியே ஒரு அமைப்பு அவங்களோடது.
02:15
Speaker A
அப்போ அந்த குழந்தைக்கு எப்படி அந்த உலகம் தெரியாம இருக்குமோ போக போக வாழ்க்கையில வளர வளர தான் தன்னை சுத்தி யார் நல்லவங்க, யார் கெட்டவங்க அப்படின்னு புரிஞ்சுக்கறதுக்கே ரொம்ப டைம் எடுத்துரும்.
02:27
Speaker A
எடுத்த உடனே போய் கலகலன்னு பேசக்கூடிய ஒரு அமைப்பு, நம்பி போய் பேசக்கூடிய ஒரு அமைப்பு. குழந்தையிலிருந்தே மேஷ ராசி பெண்களுக்குங்கறது துருதுருன்னு இருக்கும். மேஷ ராசி பெண்கள் இருக்கக்கூடிய வீடுகள் எப்படி இருக்கும் அப்படின்னா
03:20
Speaker A
ஒரு குழந்தை எந்திரிச்சு நடக்குறதுக்கு முன்னாடியே தவளக்கூடிய சமயங்கள்ல இருந்தே ஏன் இந்த குழந்தை இவ்வளவு துருதுருன்னு இருக்கு அப்படிங்கிற அதுவும் அது பெண் குழந்தையா இருக்கிறப்போ சீக்கிரம் எந்திரிச்சு நடந்தர்றது, சீக்கிரம் பேசிர்றது.
03:33
Speaker A
எள்ளுனா என்னையா வந்து நிப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்களா அது மேஷ ராசி பெண்களுக்கு வந்து சரியாவே பொருந்தும். அவசரங்கள் ஜாஸ்தியா இருக்கும். இங்கதான் வந்து வாழ்க்கை பாடம் அப்படிங்கறத வந்து மேஷ ராசி பெண்களுக்கு வந்து இந்த இயற்கை சொல்லிக் கொடுக்குது அப்படின்னே சொல்லலாம்.
03:47
Speaker A
ஃபர்ஸ்ட் எங்க அவங்களுக்கு இஸ்யூஸ் வரும் அப்படின்னா வாழ்க்கையில படிக்கிறது எல்லாம் அமைஞ்சிரும். பெரும்பாலான மேஷ ராசி பெண்களுக்கு படிப்புங்கறது அமைஞ்சிரும்.
03:55
Speaker A
சில மேஷ ராசி பெண்களுக்குங்கறது படிப்புல சில தடை தாமதங்கள் வந்து அதுக்கப்புறம் ஒரு குரோத்துக்கு போகக்கூடிய அமைப்பு. ஆனா ஏதோ ஒரு வகையில பெரும்பாலான மேஷ ராசி இந்த மேஷ ராசியில மூணு நட்சத்திரங்கள் இருந்தாலும் அந்த நட்சத்திரங்களுக்கு தகுந்த மாதிரிதான் அவங்களுடைய வாழ்க்கை அமைப்பும் இருக்கும். அதாவது அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் இருக்கு இல்லையா இதுல இந்த நட்சத்திர அமைப்புல இருக்கவங்க ஒவ்வொருத்தங்களுக்கும் ஒரு குணாதிசயங்கள் இருந்தாலும் பொதுவா பார்க்கக்கூடிய ஒரு விஷயம் என்ன அப்படின்னா ஏதாவது ஒரு சர்வீஸ் ஓரியன்டடான ஒரு தொழில் அமையறதுங்கறதே அவங்களுக்கு அப்படித்தான் அமையும்.
05:12
Speaker A
ஆனா அந்த தொழிலும் இவங்க எப்படி கத்துக்குவாங்க அப்படின்னா லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் வச்சு கத்துக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இவங்களுக்கு இருக்கும். அதாவது ஏதோ ஒரு தருணத்துல இந்த தொழிலை நான் கத்துக்கணும்னு சொல்லிட்டு ஆதியிலிருந்து ஆரம்பிக்கக்கூடிய ஒரு அமைப்பு.
05:26
Speaker A
ஏன்னா அஸ்வினி நட்சத்திரம் கேதுவிலிருந்து ஆரம்பிக்குது இல்லையா? கேதுங்கறது நம்முடைய விதி. இந்த விதி அப்படிங்கறது இந்த மேஷத்திலிருந்து தான் ஆரம்பம். இந்த விதி என்ன சொல்லும்? சுத்தி சுத்தி வாழ்க்கை பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கும். இது தவறு, இதை செய்யக்கூடாது. அதோட மேஷம் அப்படிங்கறது வந்து அந்த செவ்வாய், அந்த கோபம் பட்டு பட்டுன்னு வரக்கூடியது.
05:46
Speaker A
ஏன்னா நான் தான் கரெக்ட், நான் தான் பெர்ஃபெக்ட் அப்படின்னு பேசி பேசியே குறைகள் தெரியாமையே மத்தவங்க குறைகள் மத்தவங்க குறைகள் தெரியும். தன்னுடைய குறைகள் தெரியாமையே இருக்கக்கூடிய பெரும்பாலான மேஷ ராசி பெண்கள் வாழ்க்கையில அப்படித்தான் சிக்கல்லையே போய் மாட்டுவாங்க. கூட இருக்கவங்க எல்லாம் உங்கள்ட்ட சொல்லுவாங்க. இல்லமா இது தப்பு, இதை நீ செய்யாத. சில பேத்துக்கு மேஷ ராசி பெண்கள்ட்ட சொல்றதுக்கே பயமா இருக்கும். சொன்னா கேப்பாங்களா, கேக்க மாட்டாங்களா அப்படின்னு.
06:53
Speaker A
ஏன்னா இல்ல நான் சொன்னதுதான் கரெக்ட். நான் இப்படி முடிவு பண்ணிட்டா இதுதான் முடிவு. நான் தெளிவாதான் இருக்கேன். ஆமா நம்ம தெளிவாதான் இருக்கோம். ஆனா நம்ம பேசக்கூடிய வார்த்தைகள் மத்தவங்களை என்ன மாதிரி காயப்படுத்துது அப்படிங்கறதையும் மேஷ ராசி பெண்கள் வந்து கவனத்துல எடுத்துக்கணும்.
07:07
Speaker A
சின்ன வயசுல இருந்தே எப்படி இருப்பாங்கன்னா பட்டு பட்டு பட்டுன்னு பேசக்கூடியதா இருக்கும். நான் சரியா தான பேசினேன். நீ மனசு நொந்தா எனக்கு என்ன? அந்த மாதிரி இருக்க இருக்க காலம் போக காலம் போக இந்த உறவுகள் எல்லாம் உங்களை விட்டு போகக்கூடிய மாதிரி ஒரு சிச்சுவேஷன் வரும். அதாவது 10 வருஷம், 15 வருஷம், 20 வருடம் திருமணமா இருந்தா கூட
07:21
Speaker A
லைஃப் பார்ட்னர்ட்ட ஏதாவது ஒரு இஸ்யூஸ் ஃபேஸ் பண்ணிட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பு பெரும்பாலான மேஷ ராசி பெண்களுக்குன்னு இருக்கும். சில கணவர்கள் ஓகே நீங்க எதை சொன்னாலும் சரின்னு சொல்லிட்டு இருக்கக்கூடிய கணவர்கள் இருக்கிற பட்சத்துல ஓகே. இல்ல உங்களை குறை சொல்லக்கூடிய ஒரு ஹஸ்பண்ட் இருக்கிறாங்க. இல்ல உங்களுக்கே குருவா அமையக்கூடிய இப்ப மீன ராசியிலிருந்து வந்துட்டாங்க, தனுசு ராசியிலிருந்து வந்துட்டாங்க அப்படின்னா உங்களுக்குள்ள ஒரு 10, 15 வருஷம், 20 வருஷம், 25 வருஷம் கூட லைஃப் போயிட்டே இருக்கும். ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல உங்களோட லைஃப் பார்ட்னரால டாலரேட் பண்ணிக்க முடியாம போகக்கூடிய ஒரு அமைப்பும் அப்படிங்கறது வந்துரும். சில மேஷ ராசி பெண்களுக்கு ஒரு வகையான மனரீதியான சில பிரச்சனைகளும் வரக்கூடிய அமைப்புகளும் இருக்கு.
08:45
Speaker A
எப்படின்னு பார்த்தீங்கன்னா நிறைய ஓவர் திங்கிங் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. நிறைய மத்தவங்களுக்கு வேலைகள் செஞ்சு கொடுத்துட்டே இருந்து அதுக்கான ரெகக்னிஷன் வராம போறப்ப அந்த வேலிடேஷன் வராம போறப்ப அப்படியே மனசு அப்படியே பேக் அடிச்சிரும். இந்த குடும்பத்துக்காக ரொம்ப உழைச்சு கொட்டுறது. வேலை செய்ய போற இடத்துல பெர்ஃபெக்ட் இவங்களை மாதிரி ஒரு பெர்ஃபெக்ட் இருக்கவே முடியாது. மேஷ ராசிக்காரங்க ஒரு வேலை எடுத்து பண்றாங்க. மேஷ ராசி பெண்கள் ஒரு வேலையில் இருக்காங்கன்னா சுத்தபத்தமா இருக்கும். வீட்ல எவ்வளவு பெரிய ப்ராப்ளம் நீங்க ஃபேஸ் பண்ணிட்டு இருந்தாலும் வேலை செய்யக்கூடிய இடத்துக்கு போறப்போ அப்படியே நீங்க வந்து ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி மாதிரி. அந்த இடத்துல வேற ஒரு முகத்தை நீங்க காட்டுவீங்க. திரும்பவும் அதே ஆளுமையோட வேலை பார்க்கக்கூடிய பெண்கள் அந்த ஆளுமை மனசோட வீட்டுக்குள்ள வந்து அதே ஆளுமையை நீங்க வீட்டுக்குள்ள காட்டுறீங்க அப்படின்னா அங்கதான் உங்களுக்கு சிக்கலே இருக்கும்.
10:14
Speaker A
ஏன்னா உங்களுடைய குழந்தைகள் ஆகட்டும், உங்களுடைய கணவன் ஆகட்டும், உங்களோட மாமனார், மாமியார் யார் ஆகட்டும் அவங்க எல்லாம் வந்து அதே உறவு நிலைகள்ல தான் உங்களை பார்க்கிறாங்க. என்னுடைய மருமகள், என்னுடைய மனைவி, எங்க அம்மா இப்படி பார்க்கிறப்போ நீங்க உங்களுடைய வொர்க் பிளேஸ்ல உங்களுக்குன்னு ஒரு டெசிக்னேஷன் இருக்கும்ல அதே டெசிக்னேஷன் மைண்ட்செட்டோட நீங்க வரக்கூடாது. என்ன அங்கெல்லாம் இப்படி மதிச்சாங்க? என்ன இங்க இப்படி எல்லாம் பாராட்டினாங்க? இங்க ஏன் எனக்கு யாரும் அங்கீகாரம் கொடுக்க மாட்டேங்குறீங்கன்னு இந்த ஆளுமையை நீங்க வீட்ல காட்டுறீங்க. அந்த ஆளுமை எப்படி எல்லாம் உங்களுக்கு வரும்னா தொழில் செஞ்ச இடத்துல எப்படி எல்லாம் ஒரு குறைகள் சொல்லி நீங்க வேலையை வாங்கி இருப்பீங்களோ அதே வேலையை வீட்ல வந்து பண்ணுவீங்க.
11:47
Speaker A
நீ பெர்ஃபெக்ட்டா இல்ல. நீ ஏன் இந்த துணி மடிச்சு வைக்கல? நீ ஏன் இதை பண்ணல, அதை பண்ணல அப்படின்னு பண்ண பண்ண டீச்சர் மாதிரி நீங்க ஆயிடுவீங்க. டீச்சர் மாதிரி டீச்சர் மாதிரி வீட்ல ஆகி என்ன பண்றது? அந்த இடத்துல நீங்க மனைவியா இருக்கணும், தாயா இருக்கணும், மருமகளா இருக்கணும். இப்படி பல பரிமாணங்கள் இருக்கு இல்லையா அதை வந்து சரியா செய்யணும். உங்களுக்கு எப்படி இருக்கும்னா எல்லாமே கடமையா செய்யற மாதிரியே இருக்கும். என் கடமை இது இது நான் செஞ்சுட்டேன் அப்படின்னா அது இவங்க அக்செப்ட் பண்ணிதான் ஆகணும்.
12:09
Speaker A
அதே மாதிரி நீங்க ஒருத்தங்களுக்கு இப்ப ஒரு பர்த்டே செலிப்ரேஷனே பண்றீங்க பெண்கள்னா பிரம்மாண்டமா இருக்கும். நீங்க அவங்க பண்ணக்கூடிய பர்த்டே செலிப்ரேஷன் வந்து அரேஞ்ச்மென்ட்ஸ் இதெல்லாம் செழிப்பா நீங்க பண்ணிடுவீங்க. அது நல்ல விஷயம். ஆனா அதையே திருப்பி உங்களுக்கு பண்ணனும்னு எதிர்பார்க்கிறதுதான் தவறு. ஏன்னா உங்களுடைய வேகத்துக்கு குடும்ப உறுப்பினர்களால வர முடியுமா? உங்க சுத்தி இருக்கவங்களால வர முடியுமா? உங்க பிரண்ட்ஸ்னால வர முடியுமா? முடியாது.
13:28
Speaker A
நீங்க உங்களுடைய தன்மையை காட்டிட்டீங்க. அது உங்களுடைய உண்மை தன்மை. ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். நம்மளோட தன்மையை அவங்கள்ட்ட போய் புகுத்த புகுத்த மன அழுத்தங்கள்ங்கறது மேஷ ராசி பெண்களுக்கு அதிகமாயிடும். புலம்பலே இப்படித்தான் இருக்கும். ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல எப்படி இருக்கும்னா நான் யாரையும் கண்டிக்க மாட்டேன். எத்தனை பேத்துக்கு நான் என்ன செஞ்சேன்? நான் வாழ்க்கையில ஏமாந்ததுதான் மிச்சம். எதுக்கு நம்ம ஏமாறணும்? எதுக்கு நம்ம அளவுக்கு அதிகமா செய்யணும்?
13:52
Speaker A
எல்லாத்துக்குமே ஒரு பவுண்டரி செட் பண்றதுங்கறதுக்கு மேஷ ராசி பெண்களுக்கு தெரியணும். இவ்வளவுதான் என்னுடைய எல்லை. இதுக்கு மேல நான் செய்யல. அவங்களும் அதை கேட்கல. கிருஷ்ணரே என்ன சொல்லி இருப்பார் தெரியுமா? கிருஷ்ணர் சொல்லி இருப்பார் அதாவது அந்த பஞ்ச பாண்டவர்கள் கேட்பாங்க. ஏன்ப்பா இப்படி ஒரு யுத்தம் நடக்க போகுதே? இது முன்னாடியே உனக்கு தெரியுமே. இதை நீ நடக்காமலே தடுத்து நிறுத்தி இருந்திருக்கலாமே அப்படிங்கிறப்போ கேட்டால் தான் நான் சொல்லுவேன்னு சொல்லி இருப்பார்.
15:06
Speaker A
கேட்காம எதையும் நம்மளா வாலண்டியரா போய் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்றோம்னா அந்த வார்த்தைக்கு மதிப்பே கிடையாது. யாருக்கும் அந்த சீரியஸ்னஸ் புரியவே புரியாது. இப்ப ஜெனரலாவே நம்ம என்ன சொல்லுவோம்? உங்களுக்கு உடம்பு முடியாம போக போகுது. உங்க உடம்பு கொஞ்சம் பார்த்துக்கங்கன்னா ஏன் எனக்கு என்ன இப்ப நான் நல்லா தான இருக்கேம்பாங்க. இனிமேல் உனக்கு உடம்பு முடியாம இருக்க போகுது. பார்த்துக்கங்கன்னு சொல்றேன். இந்த நாள்கிழமையில உங்களுக்கு வரப்போகுதுன்னு சொல்றேன்னா அலட்சியம். அப்போ அந்த நோய் வந்ததுக்கு அப்புறம் தான் கேட்பாங்க. அதேதான் மேஷ ராசி பெண்களுக்கும். கொஞ்சம் பார்த்து பதுசா இருந்துக்கங்க அப்படின்னா அது முன்கூட்டியே சரி பண்ணிக்கிட்டீங்க அப்படின்னா உங்க குடும்பம் ஆகட்டும், நீங்க வொர்க் பண்ற பிளேஸ் ஆகட்டும் எல்லாமே வந்து ஒரு சமநிலையில நீங்க பார்த்துட்டீங்கனாலே உங்களை சுத்தி இருக்கவங்களும் நிம்மதியா இருந்துருவாங்க. இல்லைனா குறை கண்டுபிடிச்சுட்டே இருப்பாங்களோ அப்படிங்கிற ஒரு ஃபியர் இருந்துகிட்டே இருக்கும்.
15:52
Speaker A
நீங்க சில மேஷ ராசி பெண்கள் எல்லாம் நான் பார்த்திருக்கேன். குடும்பத்துக்கு குடும்பத்திலிருந்து பிரிஞ்சு போகக்கூடிய தருணம். இல்லைனா அந்த குடும்ப உறுப்பினர்களே ஒதுக்கி வச்சிருவாங்க. இவங்க எந்த தவறுமே செஞ்ச மாதிரி இவங்களுக்கு தெரிஞ்சிருக்காது. எங்க தவறு செஞ்சிருப்பாங்கன்னா ஓவர் ஆளுமையா இருந்து வீட்டுக்குள்ள இருக்கவங்களுக்கே ஒரு மாதிரி மன சஞ்சலங்கள் வந்து நீங்க கொஞ்ச நாள் தள்ளியே இருங்க அப்படிங்கிற மாதிரிதான் சிச்சுவேஷன் வந்திருக்கும். இல்ல வேற ஊர்ல போய் வேலை செய்யறது. இந்த தனிமை பயங்கரமா வாட்டும் மேஷ ராசி பெண்களை. ஏன்னா இவங்க பேசிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கவங்க. யாருக்காவது அட்வைஸ் பண்ணி முன்னேத்திட்டே இருக்கணும். அந்த நேரத்துல போய் மன்னிப்பு கூட மேஷ ராசிக்கு சரியா கேட்க தெரியாது. அந்த மன்னிப்பு கூட ஆளுமையான ஒரு குரலாதான் இருக்கும். என்னோட குரலே இப்படிதாங்க என்னங்க பண்றது அப்படின்னா அந்த குரல்லையும் ஒரு பணிவு, தன்னடக்கம் அப்படிங்கறது அவசியம். சிவன் ஸ்தலங்கள் பழைய சிவன் ஸ்தலங்கள்ல எல்லாம் போய் தியான முறையில போய் நீங்க உட்கார்ந்துறணும். அதே மாதிரி நந்தீஸ்வரருக்கு செய்யக்கூடிய அபிஷேகங்களை பார்க்கிறது, அபிஷேகங்கள்ல உட்கார்றது, பூஜை முறைகள் எல்லாம் நீங்க நல்லா செய்யக்கூடியவங்கதான். இருந்தாலும் அது கடமையா இல்லாம ஆத்மார்த்தமா இருந்து சில புரிதல்கள் வரப்ப உங்களுக்கு எல்லாமே செழிப்பா இருக்கும். அப்பப்ப திவ்ய தேசங்களுக்கும் போயிட்டு வாங்க. அதாவது புண்ணிய ஸ்தலங்களுக்கு போறப்ப உங்களுக்கு மனம் ரொம்ப செழிப்பாகும். திருப்பதி பெருமாளுக்கு மேஷ ராசினா ரொம்ப பிடிக்கும். ஏன்னா நீங்க கலகலன்னு இருக்கக்கூடியவங்க. ஃபீனிக்ஸ் பறவைகள் அவ்வளவு சீக்கிரம் சோகங்களை வந்து வெளிக்காட்ட தெரியாதவங்க. அந்த சோகத்துக்கு கூட டைம் ஸ்பென்ட் பண்ண தெரியாத டைம் வந்து ஸ்பென்ட் பண்ண தெரியாது மேஷ ராசி பெண்களுக்கு. ஏன்னா அடுத்தடுத்த பிளான்ஸ் அப்படிங்கறது வந்து மேஷ ராசி பெண்களுக்கு இருக்கும். அப்ப இப்படி செழிப்பா இருக்கவங்களைதான் பெருமாளுக்கே பிடிக்குமாம். அதனால நிறைய புண்ணிய ஸ்தலங்களுக்கும் நீங்க போக போக லைஃப் ரொம்ப ஹாப்பியா இருக்கும் மேஷ ராசி பெண்களுக்கு.
17:25
Speaker A
இப்ப மேஷ ராசி பெண்கள் யாரை என்ன மாதிரியான ராசியில் இருக்கவங்களை வந்து திருமணம் பண்ணிக்கலாம்? என்ன மாதிரி குணாதிசயங்களோடு இருக்கவங்களை திருமணம் பண்ணிக்கலாம் அப்படின்னு பார்க்கிறப்போ இயற்கையாவே உங்களுக்கு ஆளுமை குணம் இருக்கு இல்லையா? அப்போ நீங்க உபதேசம் பண்றதை இன்னொருத்தங்க கேட்கக்கூடிய அமைப்புல இருக்கிறவங்களாலதான் உங்களோட வாழவே முடியும்.
18:25
Speaker A
இப்போ பெரும்பாலும் மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து தனுசு ராசி, குரு சம்பந்தப்பட்ட ராசிகிட்ட ஒரு அட்ராக்ஷன்ங்கறது இருக்கும். மீன ராசிக்காரங்கள்ட்ட ஒரு அட்ராக்ஷன் அப்படிங்கறது இருக்கும். லைஃப் நல்லாதான் போகும். பெரும்பாலான மேஷ ராசி பெண்களுக்கு ஒரு லவ் மேரேஜ் ஆகுது. இல்ல வீட்லயே ஒரு அரேஞ்ச் பண்றாங்க. திடீர்னு ஏதாவது இளம் வயதிலேயே உங்களுக்கு எர்லி மேரேஜ்லாம் ஆகுதுன்னா தெரிஞ்சோ தெரியாமலேயோ தனுசு ராசியோட அமையறதுக்கு வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம். தனுசுங்கறது குரு. குரு ஒரு அளவுக்குதான் பொறுமையா இருக்கும். அதனாலதான் சொன்னேன் 10 வருஷம், 15 வருஷம், 20 வருஷம் கழிஞ்ச பின்னும் குருவுக்கு முடிவெடுக்க தெரியும். குரு தண்டனை கொடுத்துருச்சு அப்படின்னா அது பெரும் தண்டனையா இருக்கும்.
19:11
Speaker A
இப்ப மேஷ ராசி பெண்கள்லாம் சொல்லலாம் எங்க ஹஸ்பண்ட் தனுசு ராசிதான். நாங்க நல்லபடியாதான் இருக்கோம்னா நல்லபடியாவே இருந்து இருந்துர்றது நல்லது. அதே நேரத்துல எங்கேயாவது ஒரு வகையில நீங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்களா? வார்த்தைகளை விட்டுட்டு இருக்கீங்களாங்கறதெல்லாம் கவனமா இருக்கணும். ஏன் அப்படின்னா இந்த குரு அமைப்பு இருக்கக்கூடியவங்க எப்படின்னா அவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்க மாட்டாங்க. ஆனா உள்ளுக்குள்ளேயே வச்சு வச்சு யோசிச்சுக்கிட்டு ஏதோ ஒரு தருணத்துல உடைச்சு வெளிய வர மாதிரியான சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறது அமையறதுக்கு வாய்ப்பு ரொம்ப அதிகம். அப்போ அந்த பிரிவினையும் ரொம்ப கடுமையா இருந்துரும். வயதாகி மேஷ ராசி பெண்கள் பிரிவினையில இருக்கிறவங்க ரொம்ப அதிகம். அதனால இப்ப நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன் இல்லையா உங்களுக்கு உடம்பு சரியில்லாம போக போகுது. பார்த்துக்கங்க அப்படின்னா நான் நல்லா தான இருக்கேன் அப்படின்னு மேஷ ராசி சொல்லிட்டு போயிரும். நீங்க நல்லாதான் இருக்கீங்க. நல்லா இல்லாம போகாம இருந்துக்கிறது நல்லதுங்கறதுக்குதான் இந்த ஒரு வார்னிங்காவே நான் உங்களுக்கு சொல்றேன். அதுபோக சிம்ம ராசி அப்பப்ப உங்களுக்கு செட் ஆகும்.
20:34
Speaker A
சிம்ம ராசியில் இருக்கவங்களும் திருமணம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா சிம்ம ராசி ஆண்கள் அப்படிங்கறவங்க மேஷ ராசி பெண்களுக்கு கொஞ்சம் சொல்பேச்சு கேட்டு போகக்கூடியவங்களா இருப்பாங்க. அதோட மகர ராசி ஆண்களுமே வந்து மேஷ ராசி பெண்கள் சொல்றதை கேட்டுட்டு போகக்கூடிய ஒரு அமைப்புல இருப்பாங்க. அதாவது ஏன் அப்படின்னா மகர ராசி அப்படிங்கறவங்க பெரும்பாலும் சின்ன வயசுல இருந்தே அட்ஜஸ்ட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணி வந்திருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறைதான் மகர ராசி ஆண்களுக்கு அப்படின்னு இருந்திருக்கும். அப்போ இந்த மேஷ ராசி பெண்கள் பேசுறதை கேட்கிறது, அவங்க சொல்றதை கேட்டு ஃபாலோ பண்றது. ஏன்னா மகர ராசிக்கு யாராவது இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டே இருந்தா அவங்க செஞ்சுகிட்டே இருப்பாங்க. அப்போ இந்த மாதிரி கணவர்கள் உங்களுக்கு அமையறாங்க. இப்ப சிம்மத்துல அமையறாங்க. சிம்ம ராசி ஆண்களுமே அப்படித்தான். மனைவிக்கு மனைவி சொல்லுக்கு கொஞ்சம் கட்டுப்பட்டு கொஞ்சம் கேட்டு இருக்கிறது. மனைவி சொல் கேட்டு கொஞ்சம் நடக்கிறது. இல்லைனா மனைவி எடுக்கக்கூடிய முடிவுகள்ல பெருசா தலையிட மாட்டாங்க. உங்களுக்குன்னு ஒரு ஸ்பேஸ் கொடுக்கிறது. ஏதோ ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அப்படிங்கறதெல்லாம் வந்து சிம்ம ராசி ஆண்களுக்கும் மகர ராசி ஆண்களுக்கும் உண்டு. தனுசு ராசியை கல்யாணம் பண்ணிருக்கீங்க. மீன ராசியை கல்யாணம் பண்ணிருக்கீங்க அப்படின்னா கொஞ்சம் சமநிலையில இருந்துக்கிறது அப்படிங்கறது நல்லது. அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு பண்ணிட்டு வர்றது அப்படிங்கறது வந்து உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது கொடுக்கும்.
22:26
Speaker A
அதுபோக மேஷ ராசி பெண்கள் என்ன மாதிரியான தொழில் எடுத்து நாங்க பண்ணுனா நல்லா இருக்கும்? நாங்க வேலைக்கு போனா நல்லா இருக்குமா? தொழில் செஞ்சா நல்லா இருக்குமா அப்படின்னா நீங்க வேலை, தொழில் எதுவா இருந்தாலும் ரொம்ப சிறப்பாவே பண்ணக்கூடியவங்களா இருப்பீங்க. முக்கியமா சர்வீஸ் ஓரியன்டடான எந்த தொழில் எடுத்தாலும் உங்களுக்கு நல்லா இருக்கும். அதாவது இயற்கை சம்பந்தமா இயற்கை சார்ந்து ஒரு தொழில் முனைவோரா நீங்க இருக்கீங்க அப்படின்னா பியூட்டி ப்ராடக்ட்ஸ், ஆயுர்வேதா ப்ராடக்ட்ஸ் இந்த மாதிரி அழகும் கலையும் அதோட அந்த சர்வீஸும் சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு துறையை நீங்க சூஸ் பண்றீங்கன்னா சிறந்து விளங்குவீங்க. ஏன்னா நீங்க மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டே இருக்கக்கூடியவங்க. மேஷ ராசி பெண்களால நிறைய பேர் வாழ்க்கையில முன்னேறக்கூடிய ஒரு அமைப்பு பெற்றவங்க நீங்க. ஏன்னா நீங்கதான் ஏணிப்படிக்கட்டுகள் மாதிரி. அப்போ உங்ககிட்ட இருந்து ஒரு மருந்து வாங்குறாங்க. ஒரு மருந்து வாங்கி சாப்பிடுறாங்க. சீக்கிரம் குணமடைஞ்சிடுவாங்க. மேஷ ராசி பெண்கள் டாக்டருக்கு படிக்கணும்னு நினைக்கிறீங்களா? தாராளமா படிக்கலாம். ஆயுர்வேதா படிக்கிறீங்களா? தாராளமா உங்களுக்கு இயற்கை சார்ந்த எந்த ஒரு படிப்பா இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப நல்லபடியாவே வரும். இந்த நர்ஸா இருக்கிறது இல்ல ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறது. இந்த மாதிரி ஹாஸ்பிடாலிட்டி ரிலேட்டடான விஷயங்கள் இது எல்லாமே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாவும் இருக்கும். ஆத்மார்த்தமா உங்களுக்கு அந்த ஒரு குரோத்தையும் கொடுக்கிறப்போ அங்கதான் உங்களுக்கு பெயர், புகழ் எல்லாமே கிடைக்கும். ஏன்னா மேஷ ராசி பெண்களுக்கு வந்து தோல் தட்டி கொடுத்துக்கிட்டே இருக்கணும். பரவாயில்லை உங்களால நான் நல்லபடியா வந்தேன். ரொம்ப நன்றின்னு சொல்ல சொல்ல உங்களுக்கு ஒரு சந்தோஷம் இருந்துகிட்டே இருக்கும். அப்போ அந்த சர்வீஸ் ஓரியன்டடான ஒரு ப்ரொபஷன் நீங்க சூஸ் பண்றீங்க அப்படின்னா உங்களுக்கு செழிப்புங்கறது உறுதி. உச்சாணிக்கே போகக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது உங்களுக்கு இருக்கும்.
Topics:மேஷ ராசிபெண்கள் வாழ்க்கைஜோதிடம்திருமண வாழ்க்கைமனரீதியான பிரச்சனைகள்தொழில் மற்றும் குடும்ப சமநிலைஆளுமைதமிழ் ஜோதிடர்மேஷ ராசி பெண்கள்வாழ்க்கை அறிவுரை

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →