கும்பம் 👉 குரு பகவானால் ஏற்படும் ராஜயோகம் | Kumbam | Ne… — Transcript

கும்பம் ராசிக்காரர்களுக்கான 2026 புத்தாண்டு ராசிபலன், நிதானம், பொறுமை மற்றும் முக்கிய மாற்றங்கள் பற்றிய ஆன்மீக முன்னறிவிப்பு.

Key Takeaways

  • 2026ல் கும்பம் ராசிக்காரர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.
  • தொழில் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது, ஆனால் அடிப்படை பிரச்சனைகள் தவிர்க்கப்படாது.
  • மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கும்; மனநிலை கட்டுப்பாடு அவசியம்.
  • புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும், அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
  • ஆன்லைன் மோசடிகள் மற்றும் பண இழப்புகளை தவிர்க்க அதிக கவனம் தேவை.

Summary

  • 2026 ஆம் ஆண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு நிதானம் மற்றும் பொறுமை மிக அவசியம்.
  • வருட கடைசியில் ராகு 12ஆம் இடத்தில் இருப்பதால் தொழில், வருமான மற்றும் இடமாற்றங்கள் ஏற்படும்.
  • முதல் ஐந்து மாதங்கள் சிறப்பாக இருக்கும்; அடுத்த மாதங்களில் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.
  • 2026ல் இந்தியாவில் அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாக பெரும் மாற்றங்கள் நிகழும், குறிப்பாக குழந்தைகள் பிறப்பில்.
  • ரியல் எஸ்டேட் துறையில் பெரும் வளர்ச்சி, தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மன அழுத்தம், குடும்ப பிரச்சனைகள் மற்றும் தொழில் சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது; நிதானமாக செயல்பட வேண்டும்.
  • புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும், அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  • திருநள்ளாறு பயணம் மற்றும் மௌனமாக இருப்பது நல்ல பலன்களை தரும்.
  • வார்த்தைகள் மற்றும் மனநிலை பாசிட்டிவாக இருக்க வேண்டும்; நெகட்டிவ் வார்த்தைகள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
  • ஆன்லைன் மோசடிகள் மற்றும் பண இழப்புகளை தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:06
Speaker A
நிதானமும் பொறுமையும் வேண்டும், வருஷ கடைசியில ராகு உங்களுக்கு 12 ஆம் இடம் வருகிறார், 12 ஆம் இடம் வரும்போது தொழில் மாற்றம், வருமான மாற்றம், இடமாற்றம் இது அத்தனையுமே வரும்.
00:16
Speaker B
நிறைய எஃபர்ட் போட்டு எனக்கு நடக்குமா நடக்குமா அப்படின்னு அந்த பேஷன்ஸ்லாம் உடையற அளவுக்கு இப்ப இருப்பீங்க, ஏதோ ஒரு விஷயத்துல தடைப்படுற மாதிரி இருக்கும், அப்போ வாழ்க்கை வேற ஒரு விஷயத்தை நிதானத்துக்கு நம்மளுக்கு சொல்லுது அப்படிங்கறது அர்த்தம்.
00:28
Speaker C
முதல் ஒரு ஐந்து மாதம் ரொம்ப சூப்பரா இருக்கு, அடுத்த மாதம் அடுத்து வரக்கூடிய மாதங்கள் கொஞ்சம் கவனமா இருக்கணும், அஞ்சாம் இடத்துல வந்து குருவோட உட்கார்ந்து பார்வை வழங்கி இது எல்லாமே சூப்பர்தான்.
00:36
Speaker D
இதுவரைக்கும் பயம் பயம் பயம், 24 மணி நேரம் அந்த மரண பயம், 24 மணி நேரம் அமிர்தாஞ்சன் டப்பா, பாராசிட்டமால் இதெல்லாம் பக்கத்துலயே வச்சு சுத்திட்டு இருப்பீங்க, அது எல்லாமே கோட்டெல்லாம் வந்து மாறக்கூடிய பிராப்தம்ங்கிறது கும்பத்துக்கு அபாரமா இருக்கு.
00:47
Speaker E
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026, ரொம்ப கஷ்டமா இருக்கு, வருஷம் போகுது, மாசம் போகுது, நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.
00:59
Speaker E
2025ல நிறைய சொல்லிருந்தீங்க, அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு, அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது அப்படிங்கறத ஷேர் பண்ணிக்கிறதுக்காக நீங்க எல்லாருமே இங்க கூடி இருக்கீங்க, முதல்ல உங்க எல்லாரையுமே வெல்கம் பண்ணிடுறேன்.
01:54
Speaker E
முதல்ல இந்த 2026 எப்படி இருக்கப்போகுது அப்படிங்கற எதிர்பார்ப்பு எல்லா மக்கள் கிட்டயுமே வர ஆரம்பிச்சிருச்சு, கஷ்டமா போகப்போகுதா இல்ல ரொம்ப அருமையா இருக்கப்போகுதா அப்படின்னு சொல்லிட்டு எதிர்பார்த்துட்டு இருக்காங்க, சோ அதுக்கு முன்னாடி ஒரு பொதுப்பலன் எப்படி இருக்கப்போகுது 2026.
02:09
Speaker D
2026 ஆம் ஆண்டிற்கான மிக முக்கியமான பலன்கள், இந்த வருஷம் தான் வந்து குரு புஷ்ய யோகம் அப்படின்னு சொல்லக்கூடிய மிக அற்புதமான யோகம் ஸ்டார்ட் ஆகுது.
02:17
Speaker D
மெயினா ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் இந்த மூன்று மாதங்கள்ல பிறக்கக்கூடிய குழந்தைகள் மிகப்பெரிய அளவுல அரசியல் ரீதியாகவும் சரி, மோட்ச திரிகோணம் சொல்லக்கூடிய தெய்வீகம் சார்ந்த ஆன்மீகம் சார்ந்த மிகப்பெரிய அளவுல வல்லுனர்களாக பிறக்கக்கூடிய வாய்ப்புகள், சன்னியாசிகள் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் அப்படிங்கறது 2026 கண்டிப்பாக நடக்கும்.
02:35
Speaker D
அது நடக்கிறது எல்லாமே வந்து ஃபாரின்ல கிடையாது, இந்தியாவுக்குள்ள அது நடக்கும்.
03:22
Speaker E
எப்படி இருக்கப்போகுது இந்த 2026 அப்படின்னு பார்த்தோம்னா.
03:25
Speaker C
செம்மையா மாசா ஃபென்டாஸ்டிக்கா இருக்கப்போகுது, ஏன்னா இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ரியல் எஸ்டேட் பெரிய பூம் கொடுக்கும், யாரெல்லாம் வந்து சென்னைக்கு ஓரத்துல, சென்னைக்கு அருகில் இடம் வாங்கி போட்டீங்களோ நிஜமாவே அருகில வர அளவுக்கு இந்த தடவை காசு, பணம், துட்டு, மணி மணியில தலைக்க போறீங்க, நல்ல மழைப்பொழிவு இருக்கும், தங்கத்தோட விலை கொஞ்சம் ஏறி இறங்கி திரும்ப ஏறி அப்படின்ற மாதிரி கொஞ்சம் ரிங்க ரிங்க ரோசஸ் ஆடும், ஆனா 15,000க்கு மேல கண்டிப்பா தங்கத்தோட விலை போகும், நிறைய பேர் வெள்ளில இன்வெஸ்ட் பண்ணுவாங்க.
03:47
Speaker B
2026 எப்படி இருக்கும் அப்படின்னா, 2025லயே ஒரு பாதையில இருந்தே அதாவது ஒரு ஆகஸ்ட்ல இருந்தே நிறைய பேத்துக்கு வந்து லைஃப்ல ஃபோக்கஸ் ஒரு கிளாரிட்டிய நோக்கி போகணும் அப்படிங்கற ஒரு தாட் ப்ராசஸ் அப்படிங்கறது வர ஆரம்பிச்சிருக்கும், இனிமே ஒரு சிலரால டெசிஷன் எடுக்க முடியாத சூழ்நிலைகள்ல இருக்கும்.
04:13
Speaker B
இப்ப நிறைய அந்த அதிசாரமாகுறதும் சரி, வக்ரமாகுறதும் சரி இந்த மாதிரி விஷயங்கள்ல வந்து இப்படி நடக்கும் பொழுது முடிவுகள் எடுக்க திணறுவாங்க, முடிஞ்ச அளவுக்கு யாராக இருந்தாலுமே சரி, பிப்ரவரி 2026 வர வரைக்கும் நீங்க எடுக்கக்கூடிய முடிவுகள் கொஞ்சம் தள்ளி போட்டு கிளாரிஃபை பண்ணிட்டே இருக்கணும், இன்னும் என்னென்ன விஷயங்கள் நான் சரி பண்ணனும், அவசரப்படக்கூடாது, யார் என்ன அவசரப்பட்டாலுமே ஆகஸ்டுக்கு அப்புறம் கொஞ்சம் சுக்ரன் கொஞ்சம் நல்லபடியா வரது அப்படிங்கறதுனால அவசரப்படாம இருந்துக்கிறது நல்லதுன்னே சொல்லுவேன்.
05:11
Speaker A
இதுவரைக்கும் நம்ம இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக ஸ்திரமான ஸ்திரமான ஒரு பெயரும் புகழும் வந்து சேரும், எல்லாத்தை விட ஸ்திரமான ஆட்சி வந்து சேரும், இந்த தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் நிறைய மாறுதல்கள், கூட்டணிகள், காட்சிகள் எல்லாமே மாறும், இவர் இவரோட இருக்கார், அவர் அவரோட இருக்கார், எவர் எவரோட இருக்கார்ன்னு சொல்லிட்டு கிரகம் மாறும்போது நம்ம பார்ப்போம்.
05:37
Speaker E
சார் அடுத்ததா கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு சார்?
05:43
Speaker A
இவங்களுக்கு கொஞ்சம் நிதானமா பொறுமையா முடிவு எடுக்கணும், அவசரப்படக்கூடாது.
05:48
Speaker A
ஏன்னா குடும்ப வாக்கு தனஸ்தானத்துல போய் சனியும், சனியோடு சேர்ந்த செவ்வாயும், சூரியனும் கூட இருக்கிறதுனால வாயில இருந்து நெருப்பா வந்து விழும், அந்த வார்த்தைகள் மனதை பாதிக்கும், அது திருமண வாழ்க்கையை கூட பாதிக்கும்.
06:43
Speaker A
அது பார்ட்னர்ஷிப்ல கூட பாதிக்கும், செய்யற தொழில்ல மேலதிகாரிகளுடைய இதயம் பாதிக்கும், மெண்டல் ஸ்ட்ரெஸ் இருக்கும், நிதானமும் பொறுமையும் வேண்டும்.
06:55
Speaker A
வருஷ கடைசியில ராகு உங்களுக்கு 12 ஆம் இடம் வருகிறார், அந்த 12 ஆம் இடம் வரும்போது தொழில் மாற்றம், வருமான மாற்றம், இடமாற்றம் இது அத்தனையுமே வரும்.
07:05
Speaker A
ஆனால் 2026 பெருசா உங்களுக்கு பேர் சொல்லக்கூடிய அளவுக்கு அவ்வளவு பெருசா பலன் கொடுக்காது, ஆனால் அடிப்படை பிரச்சனைகள் உங்களுக்கு வராம இருக்க மாட்டான், போட்டுக்க துணி, இருக்க இருப்பிடம், சாப்பிட சாப்பாடு, அடிப்படை பிரச்சனைகள் வராது, இருந்தாலும் உங்களது நிதானம் இங்கே கணக்கிட வேண்டும்.
07:25
Speaker A
அதற்கு நீங்க செய்ய வேண்டியது திருநள்ளாறு அப்படிங்கிற ஸ்தலத்துக்கும், இரவு பயணத்தை தவிர்ப்பதும், ஒன்னு கால்ல அடிபடும் இல்லனா தலையில அடிபடும், இந்த இரண்டு பாகங்கள்ல மிக கவனமாக இருக்கணும், முடிஞ்ச வரைக்கும் உங்களுடைய ஒபினியனை ஓன் ஒபினியன் அப்படின்னு கேட்டு உங்க மனசோட வச்சுக்கங்க, வெளிய சொல்லாதீங்க, புதிய முயற்சிகளை தள்ளி போடுங்க, ஒரு ஒரு வருஷம் மௌனமாகவும் நிதானமாகவும் இருந்தால் திருநள்ளாறுக்கு போயிட்டு வந்தீங்கன்னா சுப பலன் கிடைக்கும், வாழ்க வளமுடன், ஆல் தி பெஸ்ட்.
08:37
Speaker E
கண்டிப்பா சார் மௌனமாவும் நிதானமாவும் இருந்தா வாழ்க்கை ரொம்ப அழகாக மாறும்னு சொல்லிருக்கீங்க, மேம் நீங்க சொல்லுங்க கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த 2026 எப்படி இருக்கு?
08:46
Speaker B
கும்ப ராசிக்காரர்கள் நிறைய எஃபர்ட் போட்டு எனக்கு நடக்குமா நடக்குமா அப்படின்னு அந்த பேஷன்ஸ்லாம் உடையற அளவுக்கு இப்ப இருப்பீங்க.
08:53
Speaker B
எல்லாமே கொஞ்சம் டிலே ஆகி நடக்குற மாதிரிதான் இருக்கு, ஏன்னா டாக்குமெண்ட்ஸ் எல்லாமே கிளியரா இருக்கும், நிறைய பேர் வெளிநாடு போகணும்னு முயற்சி பண்ணிருந்திருப்பீங்க, ஏதோ ஒரு விஷயத்துல தடைப்படுற மாதிரி இருக்கும், அப்போ வாழ்க்கை வேற ஒரு விஷயத்தை நிதானத்துக்கு நம்மளுக்கு சொல்லுது அப்படிங்கறது அர்த்தம், உங்களுடைய ஹையர் அத்தாரிட்டி யார் இருந்தாலுமே வார்த்தைகள் ரொம்ப கவனமா இருக்கணும், ஏன்னா நீங்க சொல்ற வார்த்தைகள் அவங்களை வேறு மாதிரி பெர்ஸ்பெக்டிவ்ல உங்களை பார்க்க வச்சிரும்.
09:15
Speaker B
வீட்டு சூழல்களுமே அப்படித்தான் இருக்குது, அதாவது நல்ல வார்த்தைகள் பேசணும், உங்களுடைய ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட நல்ல வார்த்தைகளை நீ நல்லா இருப்ப, நான் நல்லா இருப்ப அப்படின்னு ஒரு பாசிட்டிவ் பெர்ஸ்பெக்டிவ்லயே பேசிட்டு இருக்கிறது நல்லது, ஏன்னா உங்களுடைய வாக்குகள் நெகட்டிவாக பேசும்போது அது பழிச்சிடும் அப்படிங்கறது, அப்ப பாசிட்டிவா பேசுறது பழிக்குதா அப்படின்னா கொஞ்சம் நிதானமாக பேசுறது அப்படிங்கறது முக்கியம், ஏன்னா அங்க சனி சில வேலைகள் அப்படிங்கற ஒரு விஷயத்தை பார்க்குறப்போ எண்ணம் வேறயா இருக்கும், வார்த்தைகள் வேறயா இருக்கும், ஏன்னா அந்த அழுத்தத்துல இருந்து வார்த்தைகள் வெளிப்படும் பொழுது கொஞ்சம் கஷ்டம் அப்படிங்கற மாதிரி வந்துரும், அதனால கொஞ்சம் பொறுமையாவே ஹேண்டில் பண்ணிட்டு சிவஸ்தலங்களுக்கு போய் உட்காருறது, முடிஞ்ச அளவுக்கு பாதயாத்திரைகள் மாதிரி நிதானமா போயிட்டு வாங்க, ரிலாக்ஸ்டா போயிட்டு வாங்க, இயற்கையோட கொஞ்சம் உங்களோட ஒன்றிடுங்க அப்படிங்கற விஷயத்துல நிதானம், மைண்ட் செட் அப்படிங்கறது இப்ப ரொம்ப முக்கியம், மனசும் மைண்டும் ஒரே நிலையில செயல்படணும் அப்படிங்கறதுதான் இந்த 2026 உங்களுக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயம், ஏன்னா இதுவும் கடந்து போகும் அப்படிங்கறதுதான் கும்பத்துக்கு.
10:48
Speaker E
ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க, இதுவும் கடந்து போகும் அப்படின்னு சொல்லிட்டு வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க கும்ப ராசிக்கு 2026 எப்படி இருக்கு?
10:55
Speaker C
கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய வருடமா இருக்கும், முதல் ஒரு ஐந்து மாதம் ரொம்ப சூப்பரா இருக்கு, அடுத்த மாதம் அடுத்து வரக்கூடிய மாதங்கள் கொஞ்சம் கவனமா இருக்கணும், அஞ்சாம் இடத்துல வந்து குருவோட உட்கார்ந்து பார்வை வழங்கி இது எல்லாமே சூப்பர்தான், குழந்தைகள் மூலமாக வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனையை பத்தி யோசிச்சிட்டே இருப்பீங்க, குழந்தைகளை பத்திய கவலை கொஞ்சம் அதிகரிச்சிட்டே இருக்கும் முதல் ஒரு அஞ்சு மாசத்துக்கு.
11:45
Speaker C
அதுக்கப்புறம் தலைக்கு மேல இருக்கக்கூடிய ராகு குரு பார்வை இல்லாம இருக்கக்கூடிய ராகுனால கொஞ்சம் தேவையில்லாத ஆன்லைன் மோசடியில சில பேர் மாட்டுறதுக்கான வாய்ப்பு இருக்கு, அதுல கொஞ்சம் கவனமா இருக்கணும், சோ நிறைய பேருக்கு வந்து இந்த ஆன்லைன் ஸ்கேம், ஆன்லைன்ல வந்து பணம் இழப்பு இந்த மாதிரியான விஷயம்லாம் ராகு தலைக்கு மேல கோச்சாரத்துல வரும்போதுதான் நடக்கும், அதனால அந்த இடத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்க வேண்டிய ராசி கும்ப ராசி.
12:14
Speaker C
அதே மாதிரி ஏழாம் இடத்துல இருக்கக்கூடிய கேது கொஞ்சம் உங்களுடைய ஸ்பவுஸோட உடல்நிலையில ஒரு சின்ன சின்ன பிரச்சனையை கொடுப்பார், அதனால முன்னாடியே ஒரு மாதிரி இருக்கு அப்படின்னு வீட்ல சொன்னாங்கன்னா இம்மீடியட்டா போய் டாக்டர் செக்கப் பண்ணிக்கிறது, கொஞ்சம் பிரீத் பண்றதுல கொஞ்சம் சின்ன சின்ன இஸ்யூவை கொடுப்பார், அதனால அதெல்லாம் போய் பார்த்துக்கிறது, அதே மாதிரி ஹார்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஒரு அக்கறை எடுத்துக்கிறது இதெல்லாம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரு தேவைப்படக்கூடிய அட்வைஸா இருக்கும், முதுகு முதுகு பக்கத்துல ஏதாவது ஒரு கட்டி மாதிரி வரது அது சர்ஜரி பண்றதுன்ற மாதிரி கும்ப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் ஹெல்த் மட்டும் கவனமா பார்த்துக்கணும், ஆறாம் இடத்துல குரு அமர்ந்து குணரோக சத்ரு எல்லாம் நிவர்த்தி தான் பண்ண போறாரு ஒன்னும் பெருசா கவலைப்பட வேண்டாம், இருந்தாலும் கடன் வாங்குறதுல மட்டும் கவனமா இருந்துக்கோங்க கும்ப ராசிக்காரங்க.
13:27
Speaker E
கண்டிப்பா மேம் பார்த்து ரொம்ப கவனமா இருங்கன்னு சொல்லிருக்கீங்க, சார் நீங்க சொல்லுங்க கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு?
13:33
Speaker D
2026 கும்ப ராசி நண்பர்களுக்கு ஃபர்ஸ்ட் விஷயம் இந்த மனக்கலக்கம் அப்படிங்கறது கிளியர் ஆகும்.
13:39
Speaker D
எல்லாத்துக்குமே தப்பான மைண்ட் செட், சின்ன விஷயமா இருந்தாலும் ஆர்கியுமென்டேட்டிவ் மோடுக்கு போறது, இல்லைனா அனத்தறது, ஒரே தொணத்தல், எனக்கு ஏன் நடக்கல, ஏன் நான் என்ன தப்பு பண்ணேன், இந்த மாதிரி சம்பந்தமில்லாம மைண்ட்ல ஒரு கன்பியூஷன், திடீர்னு பேயை பார்த்தாங்கறது, பிசாசை பார்த்தாங்கறது, அமானுஷ்யத்தை பார்த்து ஏதோ நான் அதை பார்த்தாங்கறது, நிறைய பேர் எனக்கு வந்து ஏதாரு என்ன சொல்றது அபிச்சாரம் பண்ணி வச்சிட்டாங்க, அதே மாதிரி நிறைய அந்த பில்லி சூனியம் மாதிரி வச்சிட்டாங்கன்னு நிறைய இடங்களுக்கு கோவில்களுக்கு எல்லாம் போயிட்டு வரேன், பேசிக்கலா என்னன்னா ராகு அது பேரு காலன் அல்லது எமன்னு சொல்லுவாங்க, அது உள்ள வரும்போது ஆட்டோமேட்டிக்கா வீட்ல யாரோ ஒருத்தருக்கு ஒரு டிஸ்டர்பன்ஸ் ஆகும்.
14:18
Speaker D
இன் ஜெனரல், அது யாருக்குன்னா வீட்ல மூத்த பெண்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகலாம், அக்காவுக்கு இல்ல அண்ணனுக்கு பிரச்சனை வரலாம், இன் ஜெனரல், பட் என்னன்னா இந்த குரு கன்ஜங்ஷன் வந்து ஆறாம் இடத்துக்கு வந்ததுன்னா இது எல்லாமே உங்களுக்கு பாசிட்டிவா மாறும், நிறைய பேர் குழந்தைகளுக்கு போட்டி தேர்வுகள்ல அபார வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள், ஆஸ்லேஷம் அப்படின்னு சொல்லுவோம், டாக்டரோட சிம்பல் எப்படி இருக்கோ அந்த மாதிரி உங்களுடைய சிம்பல் மாறும், விச் மீன்ஸ் யூ ஆர் கோயிங் டு பி எ டாக்டர், நிறைய பேருக்கு மருத்துவமனையில சிகிச்சை கொடுத்துட்டு இருந்தாங்கன்னா அது சரியா போகும், நிறைய பேருக்கு லோன் இருந்ததுன்னா அது கண்டிப்பா க்ளோஸ் பண்ணக்கூடிய வாய்ப்புகள்.
15:22
Speaker D
நிறைய பேருக்கு புரியாத விஷயம் புது டெக்னாலஜில இன்வெஸ்ட் பண்ணக்கூடிய வாய்ப்புகள், அதாவது இதுவரைக்கும் வரவே இல்லை, அது இப்பதான் ரிசர்ச்ல இருக்கு அப்படின்னா அது நீங்க எடுத்து நீங்க உபயோகிக்கக்கூடிய பிராப்தம், இல்லைனா அதுல நீங்க இன்வெஸ்ட் பண்ணக்கூடிய பிராப்தம்.
15:51
Speaker D
நிறைய விஷயங்கள் வந்து இப்ப இல்லாத கிளாரிட்டிங்கறது இனிமேல இருக்கும், அந்த மனசுல இருக்கக்கூடிய தெளிவு, மனசுல இருக்கக்கூடிய சிந்தனைகள் எல்லாமே மாறும், இதுவரைக்கும் பயம் பயம் பயம், 24 மணி நேரம் அந்த மரண பயம், 24 மணி நேரம் அமிர்தாஞ்சன் டப்பா, பாராசிட்டமால் இதெல்லாம் பக்கத்துலயே வச்சு சுத்திட்டு இருப்பீங்க, அது எல்லாமே கோட்டெல்லாம் வந்து மாறக்கூடிய பிராப்தம்ங்கறது கும்பத்துக்கு அபாரமா இருக்கு, குழந்தை பிராப்தம் இல்லாம கஷ்டப்படக்கூடிய நபர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிராப்தம் அது பெண் குழந்தையாக பிறக்கக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமா இருக்கு, சோ ஓவராலா பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு நல்ல ஜோனா தான் இருக்கு, ஃபர்ஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் இஸ் குட், செகண்ட் சிக்ஸ் மந்த்ஸ்ங்கும்போது கொஞ்சம் கவனமா இருக்கக்கூடிய ஒரு நிலைமை, என்ன பண்ணலாம், இதுக்கு ரொம்ப முக்கியமானது சுதர்சன மந்திரம் அப்படின்னு சொல்லுவோம், அதை நீங்க காயத்ரி அதை நீங்க ஜெபிக்க ஜெபிக்க நல்ல மாற்றங்கள் ஆட்டோமேட்டிக்கா தெரியும், ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு சிவபெருமானுக்கு வில்வத்துல அர்ச்சனை பண்ணிட்டு வந்தாலும் பெரிய மாற்றங்கள் கண்டிப்பாக வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கு, சந்தோஷமும் சரி, பொருளாதாரமும் ஏற்றமும் சரி 85% நல்லா இருக்குன்னே சொல்லலாம், தைரியமா இருங்க.
17:06
Speaker E
கண்டிப்பா சார் தைரியமா இருங்க கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொல்லிருக்கீங்க.
Topics:கும்பம்ராசிபலன் 2026புத்தாண்டு பலன்நிதானம்பொறுமைராகுதொழில் மாற்றம்ஆன்மீகம்திருநள்ளாறுஆன்லைன் மோசடி

Frequently Asked Questions

கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ராகுவின் தாக்கம் எப்படி இருக்கும்?

கும்ப ராசிக்காரர்களுக்கு வருடக் கடைசியில் ராகு 12 ஆம் இடத்திற்கு வருவதால், தொழில் மாற்றம், வருமான மாற்றம் மற்றும் இடமாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்படும். இது பொறுமையின்மையை ஏற்படுத்தி, சில விஷயங்களில் தடைகளை உருவாக்கலாம்.

2026 ஆம் ஆண்டில் குரு புஷ்ய யோகம் எப்போது தொடங்குகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன?

2026 ஆம் ஆண்டில் குரு புஷ்ய யோகம் தொடங்குகிறது. குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் அரசியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பெரிய வல்லுநர்களாகவோ அல்லது சன்னியாசிகளாகவோ பிறக்க வாய்ப்புள்ளது.

2026 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வளர்ச்சி அடையும். குறிப்பாக சென்னைக்கு அருகில் நிலம் வாங்கியவர்கள் பணம் மற்றும் செல்வத்தில் சிறந்து விளங்குவார்கள்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →