கன்னி ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Kanni | Je… — Transcript

கன்னி ராசிக்காரர்களுக்கான தசா புத்தி மற்றும் செல்வ செழிப்புக்கான வழிபாட்டு முறைகள், வாழ்க்கை ஆலோசனைகள் மற்றும் பண மேலாண்மை குறிப்புகள்.

Key Takeaways

  • கன்னி ராசிக்காரர்கள் பண மேலாண்மையில் திறமை கொண்டவர்கள், அதனை பயன்படுத்தி செல்வத்தை மேம்படுத்த வேண்டும்.
  • பெர்ஃபெக்ஷனிசத்தை தவிர்த்து, திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கான முக்கியம்.
  • தெய்வ வழிபாடு மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் செல்வ வளர்ச்சிக்கு உதவும்.
  • குறுகிய கால திறன் மேம்பாட்டு பாடங்கள் மூலம் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • நிலையான வருமானம் மற்றும் கடன் மேலாண்மை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவசியம்.

Summary

  • கன்னி ராசிக்காரர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும், குறிப்பாக நம்பர்ஸ் மற்றும் பண மேலாண்மையில் திறமை அதிகம்.
  • பணக் கடன் மற்றும் ரொட்டேஷன் நிலையை தவிர்த்து, நிலையான வருமானத்தை உருவாக்குவது முக்கியம்.
  • பெர்ஃபெக்ஷனிசம் மனப்பான்மையை தவிர்த்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
  • சயனப் பெருமாள் மற்றும் பிற பெருமாள்களை வழிபாடு செய்வதால் செழிப்பு மற்றும் செல்வம் மேம்படும்.
  • பணத்தை பற்றிய முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும், அதிக எண்ணம் மற்றும் குழப்பம் ஏற்படலாம்.
  • குறுகிய கால திறன் மேம்பாட்டு பாடங்கள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாழ்க்கையில் நேரம் மற்றும் பணத்தை சரியாக நிர்வகிப்பது செல்வ வளர்ச்சிக்கு உதவும்.
  • பணத்துடன் தொடர்புடைய வேலைகளில் கன்னி ராசிக்காரர்கள் சிறந்த திறன்களை வெளிப்படுத்துவார்கள்.
  • வழிபாட்டு முறைகள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களை அடையுதல் செல்வம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும்.
  • வருட கடைசியில் செழிப்பு நிலை மேம்படும், பண பிரச்சனைகள் குறையும்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
ஒரு கன்னியை பொறுத்தவரைக்கும் எந்த ஃபீல்டு வேணாலும் கன்னி ராசி சூஸ் பண்ணலாம் அப்படிங்கறதுதான் ஏன்னா இன்னைக்கு படிச்சு நாளைக்கு மார்க் வாங்குறவங்க யாருன்னா கன்னிதான்.
00:11
Speaker A
ஒரு கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்க கிட்ட இருந்து வாங்கி இப்படி ரொட்டேஷன்லயே இருக்கிற மாதிரியே இருக்குமே தவிர்த்து கடனிலிருந்து நம்ம மீண்டு வந்தோமா அப்படின்னா நீங்க கடனிலிருந்து எல்லாம் மீண்டு எல்லாம் வந்திருக்க மாட்டீங்க.
00:20
Speaker A
கன்னி ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் நீங்க ஃபோக்கஸ் பண்ண வேண்டியதே ஸ்டெடியான இன்கம் எதுல வருது அப்படிங்கறதுதான்.
00:27
Speaker A
முதலில் சயனப் பெருமாளை பார்த்துட்டு அதுக்கப்புறம் நின்ற கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை நீங்க போய் பார்க்கும் பொழுது உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது நல்லபடியாவே வரும்.
00:38
Speaker A
வணக்கம்.
00:40
Speaker A
எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா எல்லா ராசியினருமே எதிர்பார்க்கிறது என்னன்னா நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும்.
00:52
Speaker A
நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம் எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும்.
01:00
Speaker A
ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள், புண்ணிய ஸ்தலங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள், அவங்களுடைய லைஃப் ஸ்டைல், அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும்னு இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும் அதாவது தசா புத்தி அப்படிலாம் இருக்கு இல்லையா உங்களுடைய ஜாதக ரீதியாகவும் உங்களுடைய தசா புத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு அதெல்லாம் பொறுத்துதான் நம்முடைய செல்வ செழிப்புமே நிரந்தரமா தங்குமா இல்ல வந்துட்டு போகுமா.
02:04
Speaker A
அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
02:07
Speaker A
இப்ப கன்னி ராசிக்காரங்க அப்படின்னு பார்க்கிறப்போ உங்களுக்கு நல்ல இன்டெலிஜென்ஸ் எல்லாமே உண்டு.
02:12
Speaker A
என்ன ஒரு விஷயம் இல்லை அப்படின்னா பொறுமை அப்படிங்கற ஒரு விஷயம் வந்து அப்பப்போ இழந்துருவீங்க அப்படின்னு ஒன்னு இருக்கு.
02:21
Speaker A
சோ எல்லாமே பிளானிங் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப உங்களுக்கு அவசியம்.
02:29
Speaker A
பயமும் இருக்கும் ஒரு ரிஸ்க் எடுக்கிறோம் ஒரு கால்குலேட்டிவாவே நீங்க ரிஸ்க் எடுக்கிற மாதிரி இருக்கும்.
02:36
Speaker A
ஏன்னா ஆல்ரெடி சில விஷயங்கள் எல்லாம் கன்னி இழந்து இருந்திருப்பீங்க.
02:42
Speaker A
நல்ல செழிப்பா வாழ்ந்து கெட்டு மறுபடியும் வாழக்கூடிய சிச்சுவேஷன்ஸ் குள்ளார இப்ப கன்னி வந்திருந்திருப்பீங்க.
02:50
Speaker A
இப்போ பினான்சியல் வைஸ் மைண்ட் நிறைய விஷயங்களை ஓவர் திங்கிங் பண்ணிட்டே இருக்கும் உங்களுக்கு.
02:57
Speaker A
ஒரு முடிவே எடுக்க முடியாது பினான்சியல் டெசிஷன் இது எப்படி எடுக்கிறது இந்த பணம் இப்படி வருதே கடன் அடைக்கணுமா இல்ல நமக்கு தேவையானது ஏதாவது ஒன்னு பண்ணனுமா.
03:10
Speaker A
இல்ல லோன் ப்ராசஸ் மாதிரி ஏதாவது போலாமா இந்த மாதிரி பல கன்பியூஷன்ஸ் அப்படிங்கறது வந்து கன்னிக்கு இருக்கும்.
03:16
Speaker A
சோ இந்த ப்ரொபஷன் வைஸ் நீங்க வேலை எல்லாம் பார்க்கிறீங்க அப்படின்னா ரெகக்னிஷன்ங்கிறது உங்களுக்கு உடனே இப்ப வந்திருக்காது.
03:24
Speaker A
கொஞ்சம் வெயிட் பண்ணிட்டே இருக்கிற மாதிரியே தான் இருக்கும்.
03:28
Speaker A
ஏதோ ஒரு விஷயத்துல ஏதோ ஒரு இடம் லேக் ஆகி இருந்திருக்கும் உங்களுக்கு வர வேண்டிய ஒரு ப்ரொமோஷனோ வராம போயிருந்திருக்கலாம்.
03:37
Speaker A
இல்ல வேற ஒருத்தங்க அந்த ப்ரொமோஷன் வாங்கிட்டு போயிருந்திருக்கலாம்.
03:42
Speaker A
உங்களுக்கு நல்லபடியா டேலன்ட் இருந்திருந்திருக்கலாம் இதெல்லாமே ஒரு மன அழுத்தங்களை உங்களுக்கு கொடுத்துட்டே இருந்திருக்கும்.
03:50
Speaker A
எனக்கு வர வேண்டிய ஒரு ஆப்பர்சுனிட்டி எனக்கு வராம போயிருச்சு அப்படின்னு.
03:54
Speaker A
சோ நீங்க எந்த மாதிரி ஒரு ஸ்ட்ராடஜி போட்டு பிளான் பண்ணுனீங்க அப்படிங்கற ஒரு விஷயத்தை வந்து நீங்க யோசிச்சு பார்க்கணும்.
04:05
Speaker A
அதோட என்னெல்லாம் எந்த மாதிரிலாம் உங்களுக்கு ஆப்பர்சுனிட்டிஸ் வரும் அப்படிங்கறது பார்க்கணும்.
04:10
Speaker A
ஒரு கன்னியை பொறுத்தவரைக்கும் எந்த ஃபீல்டு வேணாலும் கன்னி ராசி சூஸ் பண்ணலாம் அப்படிங்கறதுதான்.
04:19
Speaker A
ஏன்னா இன்னைக்கு படிச்சு நாளைக்கு மார்க் வாங்குறவங்க யாருன்னா கன்னிதான்.
04:26
Speaker A
சோ உங்களால நிறைய லாங்குவேஜஸ்லாம் கத்துக்க முடியும்.
04:30
Speaker A
நம்பர் எதுவா இருந்தாலும் நம்பர் ரீதியாவே நீங்க ஒரு விஷயத்தை படிக்கிறீங்க பணமா பேசுறது.
04:39
Speaker A
சூட்சுமமே என்ன தெரியுமா கன்னி ராசிக்காரங்களுக்கு.
04:43
Speaker A
நிறைய நம்பர்ஸ் உங்க வாயில வந்துகிட்டே இருக்கணும் ஏஞ்சல் நம்பர்ஸ் மாதிரி அதெல்லாம்.
04:50
Speaker A
பணத்தை பத்தி பேசுறது.
04:52
Speaker A
ஆடிட்டிங்ல நிறைய கன்னி இருப்பாங்க.
04:54
Speaker A
சோ இந்த ஹேண்டிலிங் இந்த கால்குலேஷன்ஸ் அப்படிங்கறது வந்து கன்னிக்கு ரொம்ப அவசியம்.
05:02
Speaker A
இது இந்த சப்போஸ் நான் நம்பராவே பேசல அப்படின்னா.
05:07
Speaker A
எங்கேயோ ஒரு இடத்துல உங்களுக்கு பிளாக்கேஜஸ் இருக்குங்கறதுதான் அர்த்தம்.
05:10
Speaker A
இந்த நம்பர் வந்து இப்ப எப்படி சில கன்னி எல்லாம் சொல்லுவீங்கன்னா நான் நம்பராதான் பேசிட்டு இருக்கேன் ஆனா இவங்களுக்கு அவ்வளவு கொடுக்கணும் இவ்வளவு கொடுக்கணும் நான் இப்படி கடன்பட்டு இருக்கேன் அப்படிங்கற மாதிரிலாம் இருக்கும்.
05:20
Speaker A
நீங்க இந்த கடன்பட்டு இருந்தாலுமே இந்த கடனை எப்படி அடைச்சீங்கன்னு ஒரு விஷயம் ஒன்னு இருக்கணும்ல.
05:30
Speaker A
ஒரு கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்க கிட்ட இருந்து வாங்கி இப்படி ரொட்டேஷன்லயே இருக்கிற மாதிரியே இருக்குமே தவிர்த்து கடனிலிருந்து நம்ம மீண்டு வந்தோமா அப்படின்னா நீங்க கடனிலிருந்து எல்லாம் மீண்டு எல்லாம் வந்திருக்க மாட்டீங்க.
05:40
Speaker A
கன்னி ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும்.
05:44
Speaker A
நீங்க ஃபோக்கஸ் பண்ண வேண்டியதே ஸ்டெடியான இன்கம் எதுல வருது அப்படிங்கறதுதான்.
05:51
Speaker A
உங்களுக்கு எல்லாத்துலயுமே வந்து ஒரு பெர்ஃபெக்சனிசம் மைண்ட் எதிர்பார்த்துட்டே இருக்கும்.
05:57
Speaker A
அது உங்களுடைய மிகப்பெரும் எதிரி.
06:00
Speaker A
அந்த பெர்ஃபெக்சனிசம்ங்கிறது 100%ங்கிறது கண்டிப்பா எல்லாத்துக்குமே வராது.
06:06
Speaker A
முதல்ல நமக்கே அது வராது அப்படிங்கறதுதான் உண்மை.
06:10
Speaker A
இல்ல நீங்க 100% பெர்ஃபெக்ட்டா இருக்கீங்க அப்படின்னா இன்னொருத்தங்க கிட்ட அந்த 100% நீங்க எதிர்பார்க்கவே முடியாது.
06:18
Speaker A
சோ அந்த பெர்ஃபெக்சனிசம் எதிர்பார்க்காம கோ வித் தி ஃப்ளோலயே கன்னி ராசி போறீங்க அப்படின்னா.
06:26
Speaker A
ஒரு ஒரு ஸ்கில்ல ஃபோக்கஸ் பண்றீங்க அப்படின்னா டெவலப்மென்ட் ரொம்ப நல்லா இருக்கும்.
06:32
Speaker A
ஏன்னா நான் தான் சொன்னேன் இல்லையா உங்களுக்கு வந்து நீங்க எந்த ஃபீல்டு வேணாலும் நீங்க சூஸ் பண்ணலாம்.
06:40
Speaker A
எது வேணாலும்.
06:43
Speaker A
முக்கியமா இந்த நம்பர்ஸ் ரிலேட்டடான ஆடிட்டிங் ரிலேட்டடான விஷயங்கள் மணி ஹேண்டிலிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே உங்களுக்கு ரொம்ப நல்லா வரும்.
06:50
Speaker A
பினான்சியல் மேனேஜ்மென்ட் அப்படிங்கற ஒரு விஷயம் உங்களுக்கு நல்லா வரும்.
06:54
Speaker A
இந்த கோஆர்டினேஷன் அப்படிங்கற விஷயம் நல்லா வரும்.
06:56
Speaker A
சோ இந்த பணத்தை பத்தி பேசுறதும் பணத்தை நல்ல விஷயமாவே பேசுறது.
07:01
Speaker A
கன்னி ராசிக்காரங்க காலையில பணத்தையே செழிப்பை பார்த்துட்டாங்கனாலே அவங்களுக்கு அதுவே அந்த டேவே சாட்டிஸ்பை ஆயிடும் அப்படிங்கற மாதிரிதான்.
07:08
Speaker A
சோ நீங்க எப்பவுமே கன்னி வந்து செழிப்பாவே தான் இருப்பாங்க.
07:12
Speaker A
செழிப்பாதான் நீங்க இருக்கணும்.
07:14
Speaker A
கொஞ்ச காலமா அந்த செழிப்பு வந்து உங்களுக்கு விதி சில சில காரணங்களால உங்களை கொஞ்சம் டல் ஆக்கி இருந்தாலும்.
07:23
Speaker A
மீண்டும் அந்த செழிப்பு வருது அப்படிங்கறப்போ அதை நீங்க ப்ராப்பரா யூஸ் பண்ணிக்கணும் அப்படிங்கறதுதான்.
07:30
Speaker A
சோ டைம் எப்படி நம்ம மேனேஜ் பண்ண போறோம் அப்படிங்கறது ஒரு விஷயம் இருக்குது.
07:34
Speaker A
எந்த இடத்துல நம்ம ஃபோக்கஸ் பண்ணனா நம்மளுக்கு குரோத் அப்படிங்கறதையும் நீங்க பார்க்கணும்.
07:43
Speaker A
எல்லா இடத்துலயும் போய் போய் நின்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டே இருக்கக்கூடாது.
07:46
Speaker A
குவாலிட்டி டைம் அப்படிங்கறது எங்க இன்வெஸ்ட் பண்றீங்களோ அதுக்கான மணி இன்கம் ஜெனரேஷனும் வந்து கன்னிக்கு ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்குது.
07:54
Speaker A
சோ உங்க ஸ்கில்ஸ் எப்படி டெவலப் பண்ணிக்கலாம்னா ஏதாவது.
07:57
Speaker A
நான் சொன்னேன்ல இப்ப இன்னைக்கு படிச்சு உங்களால நாளைக்கு மார்க் வாங்க முடியும் அப்படின்னா.
08:00
Speaker A
சின்ன சின்ன ஷார்ட் டெர்ம் கோர்சஸ் படிக்கிறது, சர்டிஃபிகேஷன் கோர்சஸ் படிக்கிறது, வொர்க் ஷாப்ஸ் அட்டென்ட் பண்றது இந்த மாதிரி ஏதாவது ஜஸ்ட் சின்ன சின்னதா ஒரு ஸ்கில்ஸ டெவலப் பண்ணிட்டீங்கன்னா.
08:10
Speaker A
ஆல்ரெடி நீங்க அதுல கரெக்டாதான் இருப்பீங்க.
08:14
Speaker A
எங்கேயோ ஒரு இடத்துல ஒரு விஷயத்தை விட்டுக்கிட்டே இருக்கீங்க அப்படின்னா மத்தவங்களை நம்புறதை விட நீங்க உங்களுடைய குவாலிஃபிகேஷன்ல கொஞ்சம் ஃபோக்கஸ் பண்ணி ஸ்கில்ஸ டெவலப் பண்ணிக்கிட்டீங்கன்னா.
08:22
Speaker A
அதுலதான் உங்களுக்கு செல்வ செழிப்பு அப்படிங்கறதையும் அபரிதமாவே இருக்கு.
08:28
Speaker A
சோ நீங்க வழிபாட்டு முறைகள் அப்படின்னுலாம் பார்க்கிறப்போ பெருமாள் வழிபாடு எப்பவுமே கன்னி ராசிக்காரங்களுக்கு உகந்தது.
08:35
Speaker A
அப்படிங்கறப்போ முதலில் சயனப் பெருமாளை பார்த்துட்டு அதுக்கப்புறம் நின்ற கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை நீங்க போய் பார்க்கும் பொழுது.
08:40
Speaker A
உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது நல்லபடியாவே வரும்.
08:45
Speaker A
இப்ப நீங்க திருப்புலானி போலாம்.
08:47
Speaker A
திருப்புலானிக்கு போயிட்டு அங்க இருக்கிற சயனப் பெருமாளும் போலாம்.
08:53
Speaker A
இல்ல ஸ்ரீரங்கமும் போலாம்.
08:55
Speaker A
ஸ்ரீரங்கமும் சயனப் பெருமாள் கோலம் தான்.
08:57
Speaker A
சோ இங்க போயிட்டு அதுக்கப்புறமா நீங்க திருப்பதி போய் அங்க தாயாரை பார்த்து நீங்க வழிபாடு பண்ணிட்டு பெருமாளை பார்த்துட்டு வரும் பொழுது.
09:09
Speaker A
இழந்த செல்வங்களை மீட்டுத் தருவார் அப்படிங்கறதுதான் உங்களுக்கு கண்டிப்பா உங்களுக்கு வந்து இந்த வருட கடைசியிலிருந்து உங்களுக்கு செழிப்புக்கான அஸ்திவாரத்தை நீங்க போட்டுருவீங்க.
09:18
Speaker A
அடுத்த வருஷம் டைம் பீரியட் எல்லாம் செழிப்பு நல்லபடியாவே இருக்கும் பணம் ரீதியா என்ன பிரச்சனைகள் இருந்தாலும் நீங்க ரிலீவ் ஆவீங்க அப்படிங்கறதுதான் கன்னி ராசிக்கு சொல்லக்கூடியது.
09:27
Speaker A
சோ பொதுவாவே செல்வத்தை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னு இருக்கு.
09:33
Speaker A
அப்ப ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான்.
09:41
Speaker A
இன்னார் இந்த கோயிலுக்கு போங்க இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா.
09:45
Speaker A
இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு.
09:47
Speaker A
சோ பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும் எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா.
09:54
Speaker A
திருப்பதிதான்.
09:56
Speaker A
பெருமாள்தான்.
09:57
Speaker A
ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கும்.
10:04
Speaker A
அவங்க போலாம்.
10:06
Speaker A
ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா.
10:13
Speaker A
மேஷம் போலாம்.
10:16
Speaker A
அதே மாதிரி சிம்மம் போலாம்.
10:17
Speaker A
ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கிற மாதிரி இருக்கும்.
10:23
Speaker A
அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது.
10:25
Speaker A
சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கிறாங்க அப்படின்னா.
10:34
Speaker A
அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள் தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது.
10:40
Speaker A
அடுத்தது பார்க்கிறப்போ செழிப்பு வரணும்.
10:43
Speaker A
முதல் லக் வரணும் அப்புறம் செழிப்பு வரணும் அப்படினாலே அது லட்சுமிதான்.
10:47
Speaker A
மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.
10:50
Speaker A
மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா.
10:58
Speaker A
அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா நல்ல வெல்த் நல்ல ஒரு ப்ராஸ்பரிட்டி நல்ல செழிப்பாதான் போகணும்.
11:06
Speaker A
எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்கு எல்லாம் போகும் பொழுது.
11:10
Speaker A
நம்ம வந்து ஒரு மனநிலைமை எல்லாம் சரியா வச்சிட்டு தான் போகணும் சிலர்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன் லட்சுமி கோயிலுக்கு போனேன்.
11:18
Speaker A
ஆனா என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கு.
11:20
Speaker A
நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது.
11:21
Speaker A
சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும் பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும் நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல.
11:30
Speaker A
நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.
11:34
Speaker A
இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும்.
11:44
Speaker A
வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்பி அதுவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கறதுதான் லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம்.
11:52
Speaker A
லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.
11:53
Speaker A
லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியான தருணங்கள் பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்குதோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க.
12:00
Speaker A
சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும்.
12:06
Speaker A
அடுத்தது வந்து யாரு கொடுக்கப்போறா.
12:09
Speaker A
அப்படின்னு ஒன்னு இருக்கு இல்ல.
12:10
Speaker A
குருதான் கொடுக்கணும்.
12:12
Speaker A
அப்போ குருவோட அனுக்கிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம்.
12:18
Speaker A
குரு ஸ்தலங்கள் குரு வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு.
12:22
Speaker A
ஆலங்குடி போயிட்டு வந்துரணும்.
12:24
Speaker A
யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை இல்லை என்கிட்ட பணம் இருக்கு ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா.
12:33
Speaker A
உடனே ஆலங்குடி கிளம்பி போயிரணும்.
12:36
Speaker A
ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவார்.
12:42
Speaker A
அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்னா.
12:46
Speaker A
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு.
12:52
Speaker A
ஒரு பெண்ணோ ஒரு பென்சிலோ ஒரு பேகோ ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா.
12:58
Speaker A
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.
13:01
Speaker A
காசு கொடுத்து இந்த இந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது.
13:03
Speaker A
நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதுக்கான பிராயச்சித்தமே அதுதான்.
13:10
Speaker A
சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க.
13:13
Speaker A
உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.
13:15
Speaker A
சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும்.
13:18
Speaker A
ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா.
13:21
Speaker A
சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனிதான்.
13:25
Speaker A
முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டு தான் புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு.
13:29
Speaker A
இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள்.
13:33
Speaker A
இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சியாகணும்.
13:37
Speaker A
இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்காங்க.
13:40
Speaker A
அவங்களுக்கு எல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா.
13:42
Speaker A
நன்றி சொல்லிட்டு வந்துரணும்.
13:43
Speaker A
திருநள்ளார் போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்கிருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்.
13:50
Speaker A
பரிகார ஸ்தலம் போயிட்டு.
13:52
Speaker A
கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது.
13:56
Speaker A
நிறைய பேர் இது நிறைய பேர் செய்யக்கூடிய தப்புதான்.
13:59
Speaker A
ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க.
14:01
Speaker A
இந்த கோயில் ஒன்னு போறோம் ஃபார் எக்ஸாம்பிள் காளகஸ்தி போவீங்க.
14:04
Speaker A
காளகஸ்தியிலிருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது.
14:08
Speaker A
இல்ல திருப்பதியிலிருந்து அப்படியே காளகஸ்தி வரேன்னு போறது.
14:11
Speaker A
காளகஸ்திங்கிறது என்னது பரிகார ஸ்தலம்.
14:14
Speaker A
திருப்பதிங்கிறது என்னது புண்ணிய ஸ்தலம்.
14:16
Speaker A
புண்ணியத்தை வாங்கிட்டு வந்து இங்க பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா.
14:22
Speaker A
இல்ல இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா.
14:27
Speaker A
ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும்.
14:29
Speaker A
அது பிளஸ் அண்ட் மைனஸ்ங்கிற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.
14:31
Speaker A
சோ அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா திரும்பி வீட்டுக்கு தான் வரணும்.
14:39
Speaker A
புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்கு தான் வரணும்.
14:41
Speaker A
இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம்.
14:44
Speaker A
பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும்.
14:47
Speaker A
புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும்.
14:50
Speaker A
சோ இதுலயும் ரொம்ப கவனம்.
14:52
Speaker A
இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா.
14:56
Speaker A
கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்க.
15:02
Speaker A
நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.
15:06
Speaker A
யாராவது வந்து பரிகாரங்கள் விட்டகுறை தொட்டகுறை வச்சிட்டு நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன்.
15:12
Speaker A
போனேன் அப்படின்னா அதெல்லாம் புண்ணியம் தராது.
15:15
Speaker A
சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே.
15:21
Speaker A
உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கறதுதான்.
15:26
Speaker A
சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறாங்க.
15:30
Speaker A
ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.
15:33
Speaker A
நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா.
15:35
Speaker A
வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க.
15:38
Speaker A
ஸ்கந்த சஷ்டி கவசம் கேளுங்க.
15:39
Speaker A
வேல் மாறல் கேளுங்க.
15:40
Speaker A
பிளாக்கேஜஸ் முதல் வீட்ல இருந்துதான் கிளியர் ஆகணும்.
15:45
Speaker A
அப்படிங்கறது ஒன்னு இருக்குது.
15:46
Speaker A
சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும் வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும் முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி.
15:55
Speaker A
நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.
16:03
Speaker A
சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.
Topics:கன்னி ராசிதசா புத்திசெல்வம்வழிபாடுபண மேலாண்மைபெருமாள் வழிபாடுதிறன் மேம்பாடுபண கடன்ஆஸ்திவாரம்தமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →