கன்னி 👉 இனிதே ஆரம்பமாகும் பொற்காலம் | Kanni | New Year … — Transcript

2026 கன்னி ராசிக்காரர்களுக்கான புத்தாண்டு ராசிபலன், தொழில், உறவு, ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவுரைகள்.

Key Takeaways

  • 2026ல் கன்னி ராசிக்காரர்கள் தொழில் மற்றும் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  • பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் வர வாய்ப்பு இருப்பதால் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
  • கோவில் வழிபாடு மற்றும் ஆன்மீக செயல்கள் பிரச்சனைகளை குறைக்கும்.
  • எமோஷனல் சமநிலை மற்றும் லாஜிக் சமநிலை இரண்டும் முக்கியம்.
  • வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி 2026ல் அதிகரிக்கும்.

Summary

  • 2026 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் அதிகாரத்தில் சிறந்து விளங்கும் காலம்.
  • தொழில், கடன், உடல் ஆரோக்கியம் மற்றும் பயணங்களில் மிகுந்த கவனம் தேவை.
  • திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் தேவையில்லாத சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது.
  • பார்ட்னர் உறவுகள் (தொழில் மற்றும் வாழ்க்கை) கவனமாக பராமரிக்கப்பட வேண்டும்.
  • சனி, செவ்வாய் மற்றும் சூரியன் கிரகங்களின் தாக்கம் காரணமாக நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.
  • புதிய சொத்துகள் வாங்கும் போது நிதானமாக பரிசீலனை செய்ய வேண்டும்.
  • பயணங்களில் இரவு நேர பயணத்தை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • திருவெண்காடு கோவில் மற்றும் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் வழிபாடு மூலம் பிரச்சனைகள் குறையும்.
  • கன்னி ராசிக்காரர்கள் லாஜிக் மற்றும் எமோஷனல் சமநிலையை பேண வேண்டும்; அதிகமான ஸ்ட்ரெஸ் தவிர்க்க வேண்டும்.
  • 2026ல் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Full Transcript — Download SRT & Markdown

00:06
Speaker A
சூரியன், சனி, செவ்வாய் இவர்களெல்லாம் இருக்கும் காலத்துல மிக கவனமாக இருக்கணும்.
00:10
Speaker A
இனி நீங்க அதிகாரத்துல சிறக்கக்கூடிய காலம். மிக ஜாக்கிரதையாக இருக்கணும்.
00:14
Speaker B
நீங்க என்ன எஃபர்ட் போட்டீங்களோ அதுக்கான 100% ரிசல்ட் வரக்கூடிய அமைப்பு இருக்கு.
00:19
Speaker C
ரொம்ப நாளுக்கு அப்புறம், ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நிம்மதியா இருக்கக்கூடிய வாய்ப்பு. இதுவரைக்கும் விட்ட கண்ணீருக்கு எல்லாம் ஒரு பதில் கிடைக்கப்போகுது.
00:25
Speaker D
விபரீத ராஜயோகம் அப்படின்னு ஒரு சமாச்சாரம் இருக்கு. பயங்கரமா கொட்டோ கொட்டு கொட்டும் அப்படிங்கக்கூடிய அர்த்தமும் இருக்கு.
00:31
Speaker D
பொதுவா 2026 அமேசிங்கா இருக்கும். ஏன் அப்படின்னு கேட்டா,
00:34
Speaker E
ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026.
00:40
Speaker E
வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு. வருஷம் போகுது, மாசம் போகுது, நாளும் போகுது. ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.
00:49
Speaker E
நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க, இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களுடைய வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லியிருந்தீங்க. அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு. அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது?
01:47
Speaker E
கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு சார்?
01:50
Speaker A
பொதுவாகவே கன்னி ராசிக்கு குருவினுடைய பார்வையை வச்சு, குருவினுடைய ஸ்திதியை வச்சு எல்லாரும் நல்லா இருக்கும்னு சொன்னாலும்,
01:57
Speaker A
என்னுடைய பார்வையில கன்னி ராசிக்கு ஒரு டிஃபரண்டான ஒரு பிரடிக்ஷன் நான் எதிர்பார்த்துட்டு இருக்கேன். செய்யும் தொழில்ல, கடன்ல, உடல் ஆரோக்கியத்துல இதெல்லாம் இருந்தாலும்,
02:09
Speaker A
பயணத்துல கவனமாக இருக்கணும். தொழில் செய்யும்போது பார்ட்னர் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். பார்ட்னர்ங்கிறது தொழில் மட்டுமே இல்லை. பிசினஸ் பார்ட்னர் மட்டுமே பார்ட்னர் இல்லை. லைஃப் பார்ட்னர் கூட பார்ட்னர்தான். ஆகவே கணவன் மனைவி உறவுல மிக கவனமாக இருக்கணும்.
02:25
Speaker A
ஏன்னு சொன்னீங்கன்னா, ஏழாம் இடத்துல உள்ள வக்ர சனியும், ஏழாம் இடத்துல செவ்வாயும் சேரப்போகிறார். சூரியனும் சேரப்போகிறார். சமசப்தம பார்வையா உங்க ராசியை பார்க்கப்போறாங்க. ஆகவே திருமண வாழ்க்கையில பிரிவுகள் வரதுக்கும், தேவையில்லாத சண்டைகள் சச்சரவுகள் வரதுக்கும்,
03:22
Speaker A
ஏன் திருமண பொருத்தம் பார்க்கும்போது பொருத்தம் நிதானமா பார்க்கணும். நேர்ல போய் விசாரிக்கணும். அந்த பயோடேட்டா எல்லாம் கரெக்டா அப்படின்னு பார்க்கணும்.
03:30
Speaker A
அதே மாதிரி வீடு வாங்குறீங்க, வாகனங்கள் வாங்குறீங்க, கடன் வாங்கி வாங்கினா கூட நிதானமா அந்த சொத்து விவரத்தை தெரிஞ்சு பண்ணுங்க.
03:39
Speaker A
உங்களுக்கு அந்த சனி செவ்வாய் இருக்கும் காலத்துல பயணத்துல மிக கவனமாக இருக்கணும். இரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது.
03:48
Speaker A
முடிஞ்ச வரைக்கும் ஆபீஸ்ல வேலை செய்றீங்க, கவர்மெண்ட் ஆபீஸ்ல இருக்கீங்க அப்படின்னா தயவு செஞ்சு அதை படிங்க.
03:55
Speaker A
எங்க செக்ரட்டரி சொல்லுவாங்க, சார் என் பிஏ சொல்லுவாங்க, நான் சொன்ன இடத்துல சைன் பண்ணேன்னு நீங்க நினைக்காம தயவு செஞ்சு அதை நல்லா படிச்சு பாருங்க. அதுல ஏதாவது புது கிளாஸ், புது டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் போட்டுருக்கா? ஏன் நீங்க வீடு கட்டும்போதே கான்ட்ராக்டர் புதுசா ஏதாவது கிளாஸ் சேர்த்திருக்காரா அப்படிங்கறத பார்க்குறீங்க.
04:14
Speaker A
அடுத்தவங்களுக்கு கடன் கொடுக்கிறதோ, புத்தி சொல்றதோ, பிள்ளைங்க விஷயத்துல நீங்க தயவு செஞ்சு நீங்க எதுவும் அட்வைஸ் கொடுத்து வெளிநாடோ, வெளி மாநிலமோ, இல்லை இங்கேயே படிக்கிறதுக்கு அவங்களுக்கு உண்டான அந்த வகுப்புகளோ தேர்ந்தெடுக்க வேண்டாம். இந்த ஒரு வருஷம் உங்களுக்கு சாதகமா இருக்கு அப்படிங்கறத குருவை வச்சு மட்டுமே முடிவு பண்ண முடியாது.
05:15
Speaker A
ஆனால் அதே நேரத்துல குரு உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் மற்ற கிரகங்களுடைய ஸ்திதிகள் பார்க்கணும்.
05:22
Speaker A
ஆகவே இதற்கு சுப பலன்கள் அதிகமாக வரணும்னா என்ன பண்ணனும்?
05:28
Speaker A
திருவெண்காடு அப்படிங்கிற கோவிலுக்கு போயிட்டு அகோர மூர்த்திக்கும், புத பகவானுக்கும் காலைல 10 மணிக்கு போங்க. அங்கே நல்ல பசும்பால் விப்பாங்க. கோவில் உள்ள கருவறையிலேயே விப்பாங்க. அந்த பசும்பால் வாங்கி உங்க கையால சுவாமிக்கு கொடுத்து அபிஷேகம் பண்ண சொல்லுங்கோ.
05:47
Speaker A
அதே மாதிரி இந்த அர்ச்சனைகள், இந்த பிரசாதம் எல்லாம் கொடுக்கிறாங்க இல்லையா? அதையே வச்சிட்டு சிதம்பரம் தில்லை காளி கோவிலுக்கு வந்து காளி வழிபாடு செய்யுங்க. செவ்வாய் சனி சேரும் காலத்துல காளி வழிபாடு செய்தால் மலை போல வர பிரச்சனைகள், உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். பயணத்துல மிக கவனமாக பயணம் செய்யும்போது சுப பயணமாக அமையும். வேற என்னங்க? கவனமா இருங்க. வெற்றி பெறுங்க. வாழ்க வளமுடன். ஆல் தி பெஸ்ட்.
06:57
Speaker E
சந்தோஷம் சார். ஜீவிதா மேம் நீங்க சொல்லுங்க. கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு? எப்படி இருக்கப்போகுது?
07:02
Speaker B
கன்னி ராசிக்காரங்க ஆல்ரெடி லைஃப்ல வாழ்ந்து கெட்டு திரும்பவும் நல்லபடியாக வாழப்போற ஒரு அமைப்புக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னுதான் கன்னி ராசியை சொல்லணும்.
07:13
Speaker B
அந்த முயற்சி அது எப்படி அப்படின்னா எங்க உருள்றோம்னு ஒன்னு இருக்கு. கோயில் வாசல்ல உருள்றோமா, பைப் வாசல்ல உருள்றோமான்னு ஒரு விஷயம் இருக்குது. சோ நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க, யாரை நம்பி இருக்கீங்க அப்படிங்கறது ரொம்ப கவனம்.
07:25
Speaker B
கன்னிக்கு வந்து யாராவது புகழ்ந்தா ரொம்ப பிடிக்கும். ஆனா கிரிட்டிசைஸ் பண்ணுங்க நான் கேட்டுக்கிறேன் அப்படின்னு சொல்லுவாங்க. கேட்டுக்கிறீங்க எந்த மாதிரி கேட்டுக்கிறீங்க? ஏன்னா ஒரு விஷயத்தை ஆல்ரெடி கன்னி வந்து பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்கக்கூடியவங்க. ஆல்ரெடி ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டு, டெசிஷன் எடுத்து வச்சிட்டு, சஜஷனா ஒவ்வொருத்தங்க கிட்ட போய் கேட்டுட்டு, கரெக்ட்டான தப்பான டெசிஷன் எடுக்கிறது அப்படிங்கறது கன்னி ரொம்ப தெளிவா அழகா பண்ணும்.
08:24
Speaker B
ஏன்னா அங்க லாஜிக் மட்டுமே வேலை பார்த்துட்டு இருக்குது கன்னிக்கு. எமோஷன்ஸும் கொஞ்சம் வேலை பார்க்கணும். எமோஷனோட கொஞ்சம் கனெக்ட் ஆகணும். வீடுன்னு வரப்போ எமோஷன் கனெக்டிவிட்டி டோட்டல் ஜீரோ அப்படின்னு நம்ம சொல்லலாம்.
08:35
Speaker B
இல்லையே நான் எல்லாமே பெர்ஃபெக்ட் பெர்ஃபெக்ட்டா பண்ணிட்டு இருக்கேனே. லாஜிக்கலாவே பேசுறது.
08:42
Speaker B
என்னுடைய லைஃப் பார்ட்னருக்கு நான் எல்லாமே கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்ன வேணும்? அவங்க என்ன உங்களோட எம்ப்ளாயா? கிடையாது இல்லையா?
08:50
Speaker B
உங்களுடைய லைஃப் பார்ட்னர் உங்களோட சரிசமமா இருக்கும் பொழுது உங்களுடைய எமோஷன்ஸ எங்க போய் நீங்க ஷேர் பண்ணுவீங்க? எமோஷன் அப்படிங்கிற ஒரு விஷயத்தை கன்னி டோட்டலா மறந்துடுது. டியூட்டி ஓரியன்டடா போகும் பொழுது சில விஷயங்கள். ஏன்னா இதுதான் உங்களுக்கு ஸ்ட்ரெஸ்.
09:05
Speaker B
ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்கன்னே முதல் உங்களுக்கு தெரியாது. நீங்க ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்கன்னு சொன்னா கூட கன்னி அக்செப்ட் பண்ண மாட்டாங்க. ஏன் அப்படின்னா அது புதன். எல்லாமே லாஜிக்காவே யோசிச்சுட்டு எல்லாமே நான் கரெக்ட்டா பண்ணிட்டேன். இதுக்கு மேல என்ன பிரச்சனை அப்படிங்கறதுதான். உங்களுடைய நரம்புல கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணனும். உங்களுடைய ஃபோக்கஸ்ல கொஞ்சம் கான்சன்ட்ரேட் பண்ணனும். ரொம்ப எனர்ஜி ட்ரெயின் அவுட் ஆகும். நீங்களும் மத்தவங்களோட எனர்ஜி ட்ரெயின் அவுட் பண்ற மாதிரி இருக்கும்.
10:02
Speaker B
சில கன்னி ராசிக்காரங்க ரியல் எஸ்டேட்குள்ள போவீங்க. போகலாம். தப்பு கிடையாது. க்ரோத் அப்படிங்கறது கண்டிப்பா நல்லா வரக்கூடிய ஒரு அமைப்பு. எங்க அப்படின்னா எத்திக்ஸோட இருந்தீங்க அப்படின்னா வரும்.
10:16
Speaker B
உங்களுக்கு யாரெல்லாம் உதவி பண்றாங்களோ கன்னிக்கு ஒரு அமைப்பு உண்டு. நன்றி மறக்கிறது அப்படிங்கிற ஒரு விஷயம். அது வந்து நன்றி கடந்து போறது அப்படின்னு சொல்லலாம்.
10:25
Speaker B
ஏன் அப்படின்னா உங்களுக்கு உங்களுக்கு உதவி பண்ணும் பொழுது அவங்க உங்களுக்கு தேவைப்படுறாங்க. அப்படியே உதவி செஞ்சவங்களை அங்கேயே விட்டுட்டு அடுத்த நிலைக்கு கடந்து போகும் பொழுது சனி அங்க வந்து நிக்கும். சனி வந்து சில விஷயங்களை சொல்ல ஆரம்பிக்கும். செவ்வாய் கன்னிக்கிட்ட இருக்கு அப்படின்னாலே கடலும் வத்தும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்தக் கடல் வத்தாம பார்த்துக்கணும். கடலும் வத்தும்னா என்ன? உங்க கையிலிருந்து எல்லாமே சுழண்டி அடிச்சிட்டு திரும்ப போகக்கூடிய ஒரு அமைப்பு. சரியான ஃபோக்கஸ் இல்லை அப்படின்னா, நியாயமா இல்லை அப்படின்னா, டிசிப்ளின்டா இல்லை அப்படின்னா, எத்திக்ஸோட, டிசிப்ளினோட எந்த கன்னி இருந்தாலும் வாழ்வுல முன்னேற்றம். அப்போ சுத்தி என்ன விஷயங்கள் நடக்குதுங்கறத ஆணா ஆகட்டும், பெண்ணா ஆகட்டும் அனலைஸ் பண்ணனும் எமோஷனல் கனெக்ட்டோட அப்படிங்கறதுதான் கன்னிக்கு.
11:47
Speaker E
வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க. கன்னி ராசிக்கு 2026 எப்படி இருக்கு?
11:52
Speaker C
கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு அப்படின்னா சூப்பரா இருக்கு. இருக்கிற எல்லா ராசியிலும் நான் சொன்ன மாதிரி ரொம்ப ஸ்பெசிஃபிக்கா இந்த தடவை ரொம்ப ஜாக்பாட் அடிக்கப்போகுது. ஜாலியா இருக்கப்போறீங்க. கெத்தா காலை தூக்கிட்டு நடக்கக்கூடிய ராசி கன்னி ராசிதான் இந்த தடவை.
12:06
Speaker C
என்னதான் வந்து அப்படியே ஏழாம் இடத்துல உட்கார்ந்து உங்களுக்கு சனி பார்வை செய்தாலும், இந்த இடத்துல 11 ஆம் இடத்துல இருக்கக்கூடிய குருவுடைய அமைப்பு ஃபென்டாஸ்டிக்கான டைம் பீரியடை கிரியேட் பண்ணி கொடுக்கும்.
12:17
Speaker C
எப்பவுமே நான் சொல்ற மாதிரி இரண்டாம் இடத்துல, ஐந்தாம் இடத்துல, 11 ஆம் இடத்துல ஒரு கிரகம் இருக்கும்போது அந்த டைம் ரொம்ப சூப்பரா வேலை செய்யும். அந்த மாதிரி கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இந்த தடவை கவலைகள் எல்லாம் மறக்கப்போகுது. கெத்தா இருப்பீங்கன்னா எப்ப இருப்பீங்க? எல்லாம் கிடைச்சா தானே கெத்தா இருப்பீங்க. அந்த மாதிரி எல்லாமே கிடைக்கப்போகுது. நிறைய கன்னி ராசிக்காரர்களுடைய குழந்தைகள் வேலைக்கு போவதற்கான வாய்ப்புகள் இருக்கு. இதுவரைக்கும் என் பிள்ளை வேலைக்கே போகல, அது பண்ணல, இது பண்ணலன்னு யோசிச்சீங்கன்னா பிப்ரவரியிலிருந்து ஆல்மோஸ்ட் அதுக்கான வாய்ப்பெல்லாம் தெரிஞ்சு கன்னி ராசிக்காரர்களுக்கான பிள்ளைகள் வேலைக்கு போவாங்க. அதே மாதிரி நிறைய கன்னி ராசி குழந்தைங்க காம்படிட்டிவ் எக்ஸாம்ல ஜெயிப்பீங்க. நிறைய பேருக்கு அரசாங்க அரசு உத்தியோகம் கிடைக்கும்.
13:31
Speaker C
ஏன்னா ஐந்தாம் இடமே அரசாங்க அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம். நிறைய கன்னி ராசிக்காரங்க இந்த தடவை அரசியல்வாதியை பார்ப்பீங்க, அரசியலை போய் ஜாயின் பண்ணுவீங்க. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயத்துல ஜொலிப்பீங்க. பெரிய பெரிய மனிதர்களுடைய பழக்கவழக்கம் கிடைக்கும். ஏன்னா ஐந்தாம் இடம் பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம். அது காலபுருஷனுடைய பத்தாம் இடத்தோட கனெக்ட் ஆகுது. அஞ்சு பத்து கனெக்ட் ஆகி இங்க 11 ஆம் இடம்.
13:46
Speaker C
அப்படி எல்லாம் பார்த்தோம்னா வாவ் ஃபென்டாஸ்டிக்கான டைம் பீரியட் கன்னி ராசிக்காரர்களுக்கு. கவலைகள் எல்லாம் மறக்கக்கூடிய. நிறைய பேர் வீட்ல டும் டும் சத்தம் கேட்கும். கன்னி ராசிக்காரர்களுடைய வீட்ல உங்களுடைய தங்கச்சி, அக்கா, தம்பி, அண்ணன் யாருக்காவது திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நிறைய கன்னி ராசிக்காரர்களுக்கு உங்களுக்கே வரன் பார்த்துட்டே இருக்கீங்க, கிடைக்கவே இல்லைன்னா வரன் அமையறதுக்கான வாய்ப்பு 100 விழுக்காடு இருக்கு.
14:07
Speaker C
ஆனா இந்த தடவை வரன் செலக்ட் பண்ணும்போது கொஞ்சம் பார்த்து ஜாதகத்தெல்லாம் பார்க்கணும். ஒரு விஷயம் மட்டும் ஆணித்தரமா சொல்றேன். நிறைய பேர் அவங்க அவங்க பார்வையை சொன்னாங்க. இருந்தாலும் கன்னி ராசி என்னை பொறுத்தவரைக்கும் இந்த பக்கம் சனிக்கு குருவோட பார்வை. அதுக்கு முன்னாடி சனி அதுக்கப்புறம் கொஞ்சம் வக்ரமும் ஆகப்போறாரு. முதல் ஒரு மூன்று, நான்கு, ஐந்து மாதங்கள் மட்டும் கொஞ்சம் கவனமா இருந்துட்டீங்கன்னா, அதுக்கப்புறம் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கண்டக சனி பெருசா ஏதாவது பண்ணுமானா பெருசா பண்றதுக்கான வாய்ப்பு இல்லை.
15:09
Speaker C
ஏன்னா குரு ஏய் ஒன்னும் பண்ணாத அப்படின்னு சொல்லிட்டு புடிச்சு வச்சிட்டு இருக்காரு. அதனால பெருசா கவலைப்பட்டுக்க வேணாம். பட் இரவு நேர பயணத்தை அறவே தவிர்த்துருங்க. பார்ட்னர்ஷிப்ல மிகுந்த கவனம் தேவை.
15:16
Speaker C
இருக்கிற வேலையை விட்டுட்டு இன்னொரு வேலை போறது, இன்னொரு வேலையை விட்டு இந்த வேலைக்கு வர்றதுன்ற மாதிரி சும்மா வேலையில வந்து ரெண்டு மூணு ஜாப் மாறறதுக்கான வாய்ப்பு, ரெண்டு மூணு விஷயங்கள் பண்றதுக்கான வாய்ப்பு, நிறைய முயற்சிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்பெல்லாம் கன்னி ராசிக்காரர்களுக்கு இருக்குது. மூன்றாம் இடம் வலுக்கப்போகுது. நிறைய டிராவல் பண்ணுவீங்க. நிறைய ட்ரான்சிட் நடந்துகிட்டே இருக்கும். நிறைய டேட்டா கிடைக்கும். நிறைய டாக்குமெண்ட் வந்து நீங்க பதிவு பண்றதுக்கான வாய்ப்பெல்லாம் இருக்கு. சூப்பரா இருக்கு. கன்னி ராசிக்காரர்கள் பெருசா கவலையே பட்டுக்க வேணாம்.
15:42
Speaker C
முடிஞ்சா சென்னையில இருக்கீங்கன்னா அஷ்டலட்சுமி கோவிலுக்கு போயிட்டு வாங்க. பெசன்ட் நகர்ல கூட அம்பாள போய் பார்த்துட்டு வாங்க. அப்படி இல்ல நீங்க வேற இடத்துல இருக்கீங்கன்னா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்க வீட்ல விளக்கேற்றும்போது கல்கண்டு போட்டு விளக்கேத்துங்க. அதுவே கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பண வரவை கொண்டு வந்து கொடுக்கும்.
15:57
Speaker E
ஹரிஷ்ராமன் சார் நீங்க சொல்லுங்க. கன்னி ராசிக்கு 2026 என்ன மாதிரியான பலன்களை கொடுக்கப்போகுது?
16:41
Speaker D
நம்பர் ஒன் ராசி 2026னா கண்டிப்பா கன்னிதான். ரிமார்க்கபிள் இயர்.
16:46
Speaker D
அதுதான் உண்மை. ஏன்னா லாபஸ்தானத்துல குரு வர்றது பெரிய பெரிய பதவிகளை கொடுக்கும். அதுக்கும் மேல சொன்னா ப்ரொபசர் உத்தியோகம் நிறைய பேருக்கு கிடைக்கும்.
16:52
Speaker D
நிறைய பேருக்கு பிஎச்டி சப்மிட் பண்ணிருக்கீங்க, தீசிஸ் சப்மிட் பண்ணிருக்கீங்க, டாக்டரேட் கிடைக்குமா? இந்த மாதிரி பல சமாச்சாரங்கள் டிஸ்டர்பன்ஸ் கொடுத்துட்டு இருக்குன்னா கண்டிப்பா நடக்கும்.
17:00
Speaker D
கடல் கடந்து படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு அற்புதமான ஒரு ஆண்டாக கண்டிப்பா 2026 இருக்கப்போகுது.
17:06
Speaker D
நீங்க இஷ்டப்பட்ட அதாவது பிடிச்ச சீட்டு, பிடிச்ச காலேஜ், போட்டி தேர்வுகள்ல அபார வெற்றி. யூபிஎஸ்சி, சிவில் சர்வீசஸ், அதே மாதிரி பார்த்தீங்கன்னா லோக்கல்ல இருக்கக்கூடிய டிஎன்பிஎஸ்சி,
17:15
Speaker D
குரூப்ஸ் ஆகட்டும். இந்த மாதிரி நிறைய பேர், நிறைய பேர் டெட் எக்ஸாம்லாம் எழுதுறீங்க. அவாளுக்கெல்லாம் கண்டிப்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகள். நிறைய பேருக்கு கவர்மெண்ட் உத்தியோகம் கிடைக்கக்கூடிய அமேசிங்கான ஒரு ஆண்டாக கன்னி ராசி நண்பர்களுக்கு இருக்கப்போகுது.
17:29
Speaker D
ஒரு ஆங்கிள் இது. இன்னொரு ஆங்கிள்ல பார்த்தீங்கன்னா குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்கள். ரொம்ப தடையாயிட்டு இருக்கு, ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம்னா கண்டிப்பா நடக்கும். நிறைய பேருக்கு மாத்துரு காரகர் அம்மாவோட சைடுல இருந்து சொத்துக்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அமேசிங்கா இருக்கு.
17:39
Speaker D
அதே மாதிரி வீட்ல யாரும் மூத்த அக்கா இருக்காங்களோ அவர்களுக்கு திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புகள். நிறைய பேருக்கு மன மாற்றம் ஏற்படும். ரொம்ப கஷ்டப்பட்டேன் சார், ரெண்டு மூணு தடவை ட்ரை பண்றோம், தடை மேல தடையா இருக்கு, ஒரு விஷயம் முடிய மாட்டேங்குதுன்னா இப்ப என்னன்னா நிறைய விஷயங்கள் தானாக நடக்கும்.
17:50
Speaker D
தானாக ஒரு விஷயம் நடக்குதுன்னா லாபஸ்தானத்துல நல்ல கிரகங்கள் இருக்கும்போது நடக்கும்.
17:59
Speaker D
அதாவது எல்லா கிரகத்துக்கும் பலனே பலன் கொடுக்கிறதுங்கிறது நாராயணன்.
18:06
Speaker D
பெருமாளுடைய வழிபாடு செய்ய செய்ய கன்னி ராசி நண்பர்களுக்கு நல்ல மாற்றங்கள். எப்படி? நின்ற கோலத்தில் இருக்கக்கூடிய பெருமாளை பிடிச்சு.
18:12
Speaker D
அப்படி பார்க்கும் பொழுது பெரிய ஏற்றத்தை கண்டிப்பா கொடுக்கும் கன்னி ராசி நண்பர்களுக்கு. அதுவும் பெண்களுக்கும் சரி, ஃபேமிலி லைஃபும் சரி, குழந்தை பாத்தும் சரி, ஓவர் ஆலா 360 டிகிரி ஆங்கிள்ல பார்த்தீங்கன்னா 2026 அமேசிங்கா இருக்கு.
18:20
Speaker D
சோ எப்படி பார்த்தாலும் 95% உங்களுக்கு நல்லா இருக்கும்னு தான் சொல்ல முடியும் 2026. ஆல் தி வெரி பெஸ்ட்.
18:26
Speaker E
சூப்பர் சார். கன்னி ராசிக்கு எல்லாருமே வந்து கொஞ்சமா பார்த்து இருக்கணும் அப்படின்னு சொன்னாலும் நீங்க சொன்ன மாதிரி ரொம்ப சிறப்பா இருக்கு அப்படின்னு சொல்லியிருக்கீங்க.
18:33
Speaker E
கன்னி ராசிக்காரர்கள் இதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்படுவாங்க அப்படின்னு நினைக்கிறேன்.
Topics:கன்னி ராசி2026 ராசிபலன்புத்தாண்டு பலன்தொழில் முன்னேற்றம்உறவுகள் கவனம்ஆரோக்கியம்பயணம் கவனம்ஆன்மீகம்திருவெண்காடு கோவில்சிதம்பரம் தில்லை

Frequently Asked Questions

கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?

கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு பொதுவாகவே நல்லதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த வீடியோவில் ஒரு வித்தியாசமான கணிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் போடும் முயற்சிகளுக்கு 100% பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எவற்றில் கவனமாக இருக்க வேண்டும்?

கன்னி ராசிக்காரர்கள் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக இரவு நேர பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளிடமும், கணவன்-மனைவி உறவிலும் மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஏழாம் இடத்தில் வக்ர சனி, செவ்வாய் மற்றும் சூரியன் சேரப்போகிறார்கள்.

திருமண வாழ்க்கை மற்றும் சொத்து வாங்குவதில் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன அறிவுரை வழங்கப்படுகிறது?

திருமண வாழ்க்கையில் பிரிவுகள் மற்றும் சண்டைகள் வர வாய்ப்புள்ளதால், திருமணப் பொருத்தம் பார்க்கும்போது நிதானமாகப் பார்த்து, நேரில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். வீடு அல்லது வாகனங்கள் வாங்கும்போது, கடன் வாங்கி வாங்கினாலும், சொத்து விவரங்களை நிதானமாகத் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →