கடக ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Kadagam | Je… — Transcript

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எமோஷனல் சிச்சுவேஷன்ஸ், தசா புத்தி மற்றும் செல்வ செழிப்பை மேம்படுத்தும் வழிகள் பற்றி விளக்கம்.

Key Takeaways

  • எமோஷன்களை கட்டுப்படுத்தி லாஜிக்கல் அணுகுமுறை அவசியம்.
  • தசா புத்தி மற்றும் ஜாதகத்தின் படி முதலீடுகளை திட்டமிட வேண்டும்.
  • குடும்ப உறவுகள் மற்றும் முன்னோர்களை மதிப்பது செல்வ செழிப்புக்கு உதவும்.
  • சனி கிரகத்தின் பாதிப்புகளை சமாளிக்க தேவையான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
  • குரு கிரகத்தின் ஆதரவைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.

Summary

  • கடக ராசி எமோஷனல் சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது சிரமமாக இருக்கும்.
  • இந்த ஆண்டு ப்ராபர்ட்டி மற்றும் தொழில் முதலீடுகள் செய்யும் போது பொறுமையாக இருக்க வேண்டும்.
  • எமோஷனல் கனெக்ஷன் காரணமாக வேலை மற்றும் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • லாஜிக்கல் திங்கிங் மற்றும் எமோஷன்களை பிரித்து செயல்படுவது கடக ராசிக்காரர்களுக்கு அவசியம்.
  • குடும்ப உறவுகள் மற்றும் முன்னோர்களை மதிப்பது செல்வ செழிப்புக்கு முக்கியம்.
  • சனி கிரகத்தின் பாதிப்புகள் காரணமாக தடை மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம்.
  • புதிய வாய்ப்புகள் மறைமுகமாக வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
  • தசா புத்தி மற்றும் ஜாதகத்தின் அடிப்படையில் நீண்டகால திட்டமிடல் அவசியம்.
  • எமோஷன்களை கட்டுப்படுத்தி, குரு கிரகத்தின் ஆதரவைப் பெறுவது முக்கியம்.
  • இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி இருக்கும்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
எமோஷனல் சிச்சுவேஷன்ஸ்குள்ள போயிட்டு ஒரு கடகம் மாட்டிக்கிறீங்க அப்படின்னா, அதுல இருந்து மீண்டு வரதே உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாவே தான் இருக்கும்.
00:08
Speaker A
இப்ப யாராவது பூமி வாங்கணும்னு நினைச்சிட்டு இருக்கீங்க, ஏதாவது ப்ராப்பர்ட்டில இன்வெஸ்ட் பண்ணனும், இல்ல ஏதாவது ஒரு தொழில்ல போய் நாங்க இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறோம், நாங்க இப்ப உடனே செய்யலாமா அப்படின்னுலாம் யோசிக்க வேண்டாம்.
00:17
Speaker A
ஒரு சிலர் வந்து விருப்பமே இல்லாத ஒரு தொழில்ல உட்கார்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கும், அதுதான் சொன்னேன் எமோஷனல் கனெக்ட்.
00:23
Speaker A
இந்த இயர் எண்டுல இருந்துதான் நீங்க செய்யக்கூடிய இன்வெஸ்ட்மென்ட்ஸ் அப்படின்னு பார்க்குறப்போ, அது உங்களுக்கு சேஃபா இருக்கும்.
00:31
Speaker A
வணக்கம், எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா, எல்லா ராசியினருமே எதிர்பார்க்கிறது என்னன்னா, நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும், நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம்.
00:45
Speaker A
எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும், ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள், புண்ணிய ஸ்தலங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள், அவங்களுடைய லைஃப் ஸ்டைல், அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும்னு.
00:56
Speaker A
இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும், அதாவது தசா புத்தி அப்படின்னுலாம் இருக்கு இல்லையா, உங்களுடைய ஜாதக ரீதியாகவும், உங்களோட தசா புத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு.
01:10
Speaker A
அதெல்லாம் பொறுத்துதான் நம்மளுடைய செல்வ செழிப்புமே நிரந்தரமா தங்குமா இல்ல வந்துட்டு போகுமா, அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
01:59
Speaker A
இப்போ கடகம் அப்படின்னு பார்க்குறப்போ, கடகம் ஆல்ரெடி நீங்க எல்லாம் வந்து ஒரு அஷ்டம சனியில இருந்து வெளிய வந்து லைஃப் எல்லாம் இப்பதான் கொஞ்சம் எல்லாம் கரெக்ட் ஆயிட்டு வந்துட்டு இருக்கக்கூடிய சூழ்நிலைகள்ல இருக்கும் பொழுது, உங்களுக்குன்னு யாராவது ஒரு மென்டார் மாதிரி இருக்கணும், மென்டார்னா என்னன்னா குரு, யாராவது ஒருத்தங்க நம்மளுக்கு திடீர்னு ஒரு கைடன்ஸ் வந்து சொல்லுவாங்க, நான் உங்களுக்கு நல்லதுதான் சொல்றேன் அப்படிங்கற மாதிரி இருக்கப்போ, சம்டைம்ஸ் மைண்ட் கேட்காது, ஏன் அப்படின்னா உங்களோட சிச்சுவேஷன் எப்படின்னா மோஸ்ட்லி எமோஷனல் கனெக்டாவே தான் இருக்கும், சோ அந்த எமோஷனல் சிச்சுவேஷன்ஸ்குள்ள போயிட்டு ஒரு கடகம் மாட்டிக்கிறீங்க அப்படின்னா, அதுல இருந்து மீண்டு வரதே உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாவே தான் இருக்கும்.
02:37
Speaker A
சோ லாஜிக்கல் திங்கிங் அப்படிங்கறது வந்து ரொம்ப அவசியம் கடக ராசியில இருக்கவங்களுக்கு, சோ அந்த ஃபர்ஸ்ட் ஹாப் வந்து ஒரு அழுத்தத்துல இருந்து நீங்க என்ன மாதிரி ஒரு எஃபர்ட் போட்டு வெளிய வரீங்க அப்படிங்கறதுதான்.
03:20
Speaker A
சோ வீட்டு ரெஸ்பான்சிபிலிட்டிஸ் கொஞ்சம் அதிகமா இருந்திருந்திருக்கும் கடக ராசியில இருக்கவங்களுக்கு, அதோட வந்து பினான்சியல் வைஸும் கொஞ்சம் இழுத்து பிடிச்சு கொஞ்சம் டைட்டா போயிட்டு இருக்க மாதிரியே இருக்கும், பட் ஸ்டில் ஏதோ ஒரு கேரி ஆன் ஆயிட்டு போயிட்டு இருக்கு, ஒரு சிலர் வந்து விருப்பமே இல்லாத ஒரு தொழில்ல உட்கார்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கும், அதுதான் சொன்னேன் எமோஷனல் கனெக்ட்.
03:46
Speaker A
எதிலும் கூடாது அப்படிங்கறது முக்கியமா உங்களுடைய ப்ரொபஷனல் லைஃப் அப்படின்னு வரப்போ, உங்க எமோஷன்ஸையும் ப்ரொபஷனையும் நீங்க மிக்ஸ் பண்ணவே கூடாது, பெரும்பாபத்தே கடகத்துக்கு வந்து எமோஷன்ஸ போயிட்டு உங்களுடைய வேலையில திணிக்கிறது அப்படிங்கறதுதான், லாஜிக்கலா இருந்துக்கணும், இந்த இடத்துலதான் வெள்ளைக்காரன் மாதிரி வேலை பார்த்துட்டு போயிறணும்ங்கறது, வெள்ளைக்காரன் வந்து ஈவினிங் 5 ஓ கிளாக் வரைக்கும் டெடிகேட்டடா வொர்க் பண்ணிட்டு இருப்பாங்க, 5 மணி ஆச்சா பேக தூக்கிட்டு போயிட்டே இருப்பாங்க, அந்த எமோஷனல் கனெக்ட் அப்படிங்கறது இருக்காது, வேலையை வேலையா பார்க்கணும்னுதான் அப்படிங்கறதுதான் வந்து கடகத்துக்கு சொல்லக்கூடியது.
04:12
Speaker A
சோ இப்ப ஜெனரலாவே கடகத்துல இருக்கவங்க வந்து ஏதாவது நீங்க ப்ராப்ளம்ஸ் ஃபேஸ் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா, இது எல்லாமே டெம்பரரியான ப்ராப்ளம்ஸ் தான், இது வந்து நீங்க கரெக்டா உங்களுடைய எமோஷன்ஸ கரெக்டா பேலன்ஸ் பண்ணி ஹேண்டில் பண்ணிட்டீங்க அப்படின்னாலே, இதுல இருந்து நீங்க தப்பிச்சிருவீங்க அப்படிங்கறதுதான்.
05:07
Speaker A
சோ உங்களுக்கு ஆப்பர்சுனிட்டி எங்கெங்கெல்லாம் வரும் அப்படிங்கறத முதல்ல நீங்க தெரிஞ்சுக்கணும், மறைமுகமாவே தான் வரும், டைரக்டா இதுதான் உங்களுக்கு ஆப்பர்சுனிட்டி அப்படிங்கறதெல்லாம் அது கொடுக்காது, சோ ஒரு ஒரு பூமி சம்பந்தப்பட்ட ஒரு விஷயங்கள் உங்களுக்கு வரலாம், ஒரு லேண்ட் மூலமா ஏதாவது ஒரு பெனிஃபிட் உங்களுக்கு வரலாம்.
05:32
Speaker A
அது முக்கியமா குடும்பத்துல இருந்து உங்களுக்கு வரக்கூடிய ஒரு அமைப்பு அப்படின்னு இருக்கிறப்போ, நிதானமாக நீங்க முடிவெடுத்து அதுல ஏதாவது ஒரு இன்வெஸ்ட்மென்ட் அந்த மாதிரி நீங்க பிளான் பண்ண ஆரம்பிக்கலாம்.
05:42
Speaker A
அதோட வீட்ல பெரியவங்க, குடும்பத்தோட இருக்கணும் கடகம், சோ வீட்ல இந்த எல்டர்ஸ் தான் வந்து சனி, பெரியவங்களதான் வந்து சனியாவே பார்க்கப்படுது அப்படின்னு ஒன்னு இருக்கு.
05:57
Speaker A
சோ இந்த சனி வந்து கடகத்துக்கு பகையாவே தான் இருக்கும், அப்போ இந்த நம்மளுடைய முன்னோர்களை மதிக்காம போனாலோ, இல்ல முன்னோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய கடமைகள் நம்ம செய்யாம போயிட்டோம் அப்படிங்கறதுனாலயோ, இல்ல ஏதாவது ஒரு வயசானவங்கள நம்ம எதையாவது ஹர்ட் பண்ற மாதிரி ஏதாவது சொல்லிட்டோம் அப்படின்னாலுமே, சனி உங்களுக்கு வரக்கூடிய ஒரு செழிப்பை வந்து தடை பண்ணிடுவார் அப்படின்னு இருக்கு.
06:45
Speaker A
சோ இப்போ இப்போ வீட்ல வந்து உங்க அப்பா இருக்காங்க, இல்ல உங்க தாத்தா இருக்காங்க, அந்த மாதிரிலாம் இருக்காங்கன்னா, கொஞ்சம் டிஸ்டன்ஸ் ஆகுற மாதிரி இருக்கும், கொஞ்சம் ஒதுங்கி இருக்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன்ஸ்லாம் வருது அப்படின்னா, கொஞ்சம் அனுசரணையா போறது, ஏன்னா அங்க இருந்துதான் உங்களுக்கு ஆப்பர்சுனிட்டீஸே வருது, சோ அந்த லாஜிக்கல் மைண்ட யூஸ் பண்ணி அந்த எமோஷன் வைஸ் போயிட்டு நீங்க வந்து இருக்கிறதெல்லாம் இழந்துடக்கூடாது அப்படிங்கறதுதான் கடகத்துக்கு சொல்றது.
07:07
Speaker A
இன்னொன்னு என்னன்னா, அதாவது சந்திரனை அப்படின்னாலே வந்து நல்ல ஒருத்தங்களை கேர் எடுத்துக்கக்கூடிய ஒரு விஷயம் தான், சோ அது ரிலேட்டடான ப்ரொபஷன்ஸ் வந்து நீங்க சூஸ் பண்ணலாம், அந்த ஹாஸ்பிடாலிட்டிங்கற ஒரு விஷயத்துல இருந்து என்னைக்குமே வந்து கடகம் மாறிடக்கூடாது, ஏன்னா கடகம் அப்படின்னாலே என்னன்னா ஒரு தாயை போன்ற ஒரு குவாலிட்டி இருக்கக்கூடியவங்கதான் கடகம் அப்படின்னு சொல்லப்படுது.
07:37
Speaker A
சோ அந்த இடத்துல எமோஷனல் பேலன்ஸ்க்கு நம்மளுக்கு தேவை, அதே சேம் டைம் இந்த ஹாஸ்பிடாலிட்டி நம்ம எப்படி யூஸ் பண்ணிக்கணும் அப்படின்னா, அனுசரணையா இருந்து யூஸ் பண்ணிக்கிறோம் அப்படின்னா, உங்களுக்கு குரோத் அப்படிங்கறது ரொம்ப நல்லா இருக்கும், அப்படித்தான் வந்து உங்களுடையதுலதான் குரு உச்சமே ஆகுறார் கடகத்துல அப்படிங்கறப்போ, குரு என்ன பார்ப்பார்ன்னா, நீங்க எந்த அளவுக்கு ஆலோசனைகள் எடுத்துக்கிறீங்க, குருமார்களை நீங்க எந்த அளவுக்கு மதிக்கிறீங்க, என்ன மாதிரியான ஒரு ஃபோக்கஸ் நீங்க பண்றீங்க அப்படிங்கற ஒரு விஷயம் தான், சோ இந்த வருடமே உங்களுக்கு எப்படி இருக்குன்னா, லைஃபே ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் தான்.
08:36
Speaker A
உங்களுடைய எமோஷன்ஸை நீங்க எப்படி பேலன்ஸ் பண்ணி, எப்படி விவரமா அதாவது புதனுடைய அனுகிரகத்தை நீங்க எப்படி எடுத்து, எப்படி குரு உங்களுக்கு சப்போர்ட் பண்ண போறாரு அப்படிங்கறதுதான் ஒரு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஜெர்னிதான் வந்து இப்ப கடகத்துக்கு போயிட்டு இருக்கு அப்படிங்கறப்போ, உங்களுக்கு எல்லாம் நன்மையாகவே நடக்குது.
09:05
Speaker A
ஆனா இந்த வருஷம் எண்ட் ஆகுற டைம் வரைக்கும் கொஞ்சம் லேட் செகண்ட் ஹாப் வருஷம் அப்படிங்கறது வந்து உங்களுக்கு நல்லா இருக்குங்கறப்போ, கொஞ்சம் பொறுமையா கடைபிடிச்சுக்கிறது அப்படிங்கறது கடகத்துக்கு ரொம்ப அவசியம், அதோட இப்ப யாராவது பூமி வாங்கணும்னு நினைச்சிட்டு இருக்கீங்க, ஏதாவது ப்ராப்பர்ட்டில இன்வெஸ்ட் பண்ணனும், இல்ல ஏதாவது ஒரு தொழில்ல போய் நாங்க இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறோம், நாங்க இப்ப உடனே செய்யலாமா, அதுதான் குரு பெயர்ச்சி எல்லாம் வருதே, எங்களுக்கு ஃபேவரபிலாதான இருக்கு அப்படின்னுலாம் யோசிக்க வேண்டாம், இந்த இயர் எண்ட் ஆகட்டும், இந்த இயர் எண்ட்ல இருந்துதான் நீங்க செய்யக்கூடிய இன்வெஸ்ட்மென்ட்ஸ் அப்படின்னு பார்க்குறப்போ, அது உங்களுக்கு சேஃபா இருக்கும், குயிக் ப்ராஃபிட் அப்படிங்கறத வந்து அகைன் எமோஷனல் கனெக்ட் அப்படிங்கற மாதிரி நீங்க போயிட்டு உங்களுடைய ப்ராஃபிட்ல போய் நீங்க பிளான் பண்ணக்கூடாது.
10:14
Speaker A
சோ எதுவா இருந்தாலும் லாங் டேர்மாவே இருக்கணும், சிறுக சிறுக சேமிக்கணும், ஏன்னா கடகத்துக்கு வந்து சேமிப்பு அப்படிங்கறது இருக்கவே இருக்காது, சோ கடக ராசி வந்து கரெக்டா லாங் டேர்ம் பிளானிங் அப்படிங்கற ஒரு விஷயத்தை லாஜிக்கலா போட்டுட்டீங்க அப்படின்னாலே ஜம்ப் பண்ணக்கூடாது.
10:37
Speaker A
ஒரு விஷயத்துல இருந்து இன்னொன்னுக்கு அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி போயிட்டே இருக்கக்கூடாது, சம்டைம்ஸ் உங்களுக்கே கன்ஃபியூஷனா இருக்கும், எனக்கு என்ன வேணும்னே எனக்கு தெரியல, எனக்கு யாராவது ஒருத்தங்க வழிகாட்டினா நல்லா இருக்கும் அப்படின்னா, யாராவது ஒருத்தங்களுடைய ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது, சோ உங்களுக்கு நல்லதுதான் சொல்றாங்கங்கறதையும் நீங்க புரிஞ்சுக்கணும், உங்களுடைய கம்ஃபர்ட் ஜோன், உங்களுடைய எமோஷன்ஸ் எங்க போய் கனெக்ட் ஆகுது அப்படிங்கறதெல்லாம் நீங்க யோசிக்கக்கூடாது, லாஜிக்கலா லாங் டேர்மா யோசிச்சு பார்க்கணும், லாங் டேர்மா யோசிச்சு பார்க்குறப்போ எனக்கு இது கரெக்டா இருக்கும் அப்படின்னா, நீங்க அதுலதான் ப்ராசஸ் பண்ணனும், அதனாலதான் வந்து இந்த வருஷ கடைசியில எதுவா இருந்தாலும் பிளான் பண்ணுங்க, அமைப்பு நல்லபடியாவே இருக்கு, கொஞ்சம் தாமதமாய் வர மாதிரிதான் இருக்கு கடகத்துக்கு, ஆனா அது லாங் டேர்மா, லாங் ஸ்டாண்டிங்கா, நிரந்தரமா உங்களுக்கு அமையக்கூடிய அமைப்பாவே இருக்கும் பொழுது, நீங்க சூஸ் பண்ற விஷயம் சரியானதாகவே இருக்கணும் அப்படிங்கறதுதான் கடகத்துக்கு.
11:56
Speaker A
அப்ப நீங்க என்ன மாதிரியான வழிபாட்டு முறைகள் பண்ணலாம் அப்படின்னா, சிவன் பார்வதி சேர்ந்து இருக்கக்கூடிய ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு பண்றது, முக்கியமா நீங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் நீங்க வழிபாடு பண்ணும் பொழுது, ஏன்னா அங்கதான் வந்து சந்திரன், சந்திரன் வந்து ஒரு நடுநிலைமையா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு, நீங்க கடக ராசி அப்படிங்கறப்போ, உங்களுக்கு சந்திரன் தான் எல்லா வேலையுமே பார்த்துட்டு இருப்பாங்க அப்படிங்கறப்போ, அந்த இடத்துக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நீங்க போயிட்டு வரும் பொழுது ஒரு தெளிவு, அதாவது புதனுக்கான ஸ்தலம் அது, அந்த புதன் உங்களுக்கு லாஜிக்கல் திங்கிங் அப்படிங்கற ஒரு விஷயத்தை வந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுக்கு கொடுக்கும், சோ அங்கேயே இருந்து அங்க தெப்பக்குளத்துல பக்கத்துல உட்கார்ந்துட்டு அவசர அவசரமாலாம் கோயிலுக்கு போயிட்டு வரக்கூடாது, ஒரு நாள் ரெண்டு நாள் முழுசா தங்கி நல்லபடியா தரிசனத்தை பார்த்துட்டு கடக ராசி வரீங்க அப்படின்னா, உங்களுக்கு வாழ்க்கை செல்வ செழிப்பை கண்டிப்பா கொடுக்கும் அப்படிங்கறதுதான் கடக ராசிக்கு.
13:26
Speaker A
சோ பொதுவாவே செழிப்பை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னு இருக்கு, அப்ப ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான் இன்னார் இந்த கோயிலுக்கு போங்க, இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா, இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு, சோ பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும், எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா, திருப்பதிதான், பெருமாள்தான்.
14:18
Speaker A
ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கோ, அவங்க போகலாம், ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா, மேஷம் போகலாம், அதே மாதிரி சிம்மம் போகலாம், ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கற மாதிரி இருக்கும், அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது, சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கிறாங்க அப்படின்னா, அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள்தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது.
15:34
Speaker A
அடுத்தது பார்க்குறப்போ, செழிப்பு வரணும், முதல் லக் வரணும், அப்புறம் செழிப்பு வரணும் அப்படின்னாலே அது லட்சுமிதான், மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம், மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா, அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா, கண்டிப்பா நல்ல வெல்த், நல்ல ஒரு ப்ராஸ்பெரிட்டி, நல்ல செழிப்பா தான் போகணும், எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்கு எல்லாம் போகும் பொழுது, நம்ம வந்து ஒரு மனநிலை எல்லாம் சரியா வச்சிட்டுதான் போகணும், சிலர்லாம் சொல்லுவாங்க, நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன், லட்சுமி கோயிலுக்கு போனேன், ஆனா என் வாழ்க்கை இப்படிதான் இருக்கு, நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது, சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும், பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும், நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல, அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.
16:57
Speaker A
இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது, சந்தோஷமா போறோம்னா, சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும்.
17:02
Speaker A
வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா, திரும்ப அதேவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கறதுதான் லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம், லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு, லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம், மகிழ்ச்சியான தருணங்கள், பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க, சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும், அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும், அடுத்தது வந்து யாரு கொடுக்கப்போறா அப்படின்னு ஒன்னு இருக்குல்ல, குருதான் கொடுக்கணும், அப்போ குருவோட அனுகிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம், அப்போ குரு ஸ்தலங்கள், குரு வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு, ஆழங்குடி போயிட்டு வந்துறணும்.
17:47
Speaker A
யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை, எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை, இல்லை என்கிட்ட பணம் இருக்கு, ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா, உடனே ஆழங்குடி கிளம்பி போயிறணும், ஆழங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா, குரு முதல் ஸ்ட்ராங் ஆவார், அப்ப ஆழங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்ன்னா, படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள், அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு ஒரு பெண்ணோ, ஒரு பென்சிலோ, ஒரு பேகோ, ஒரு நோட்டோ, ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா, படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது, காசு கொடுத்து இந்த பொருளை வாங்கி கொடுக்கணும்.
18:29
Speaker A
நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதற்கான பிராயச்சித்தமே அதுதான், சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க, உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும், சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும், ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா, சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனிதான்.
18:49
Speaker A
முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டுதான் புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு, இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள், இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும், இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்கிறாங்க, அவங்களுக்கெல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா, நன்றி சொல்லிட்டு வந்துறணும், திருநள்ளாறு போயிட்டு கர்மத்தை கழிச்சுட்டு அந்த கர்மத்தை கழிச்சுட்டு திருப்பி அங்கிருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன் போனா அப்படின்னா, அதெல்லாம் புண்ணியம் தராது, சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சுட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே, உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கறதுதான், சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறாங்க, ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.
20:28
Speaker A
நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா, வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க, கந்த சஷ்டி கவசம் கேளுங்க, வேல் மாறல் கேளுங்க, பிளாக்கேஜஸ் முதல் வீட்டிலிருந்துதான் கிளியர் ஆகணும் அப்படிங்கறது ஒன்னு இருக்குது.
20:40
Speaker A
சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும், வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும், முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.
20:55
Speaker A
சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.
Topics:கடக ராசிதசா புத்திஎமோஷனல் சிச்சுவேஷன்ஸ்செல்வ செழிப்புஜாதகம்குரு கிரகம்சனி கிரகம்முதலீடுபரிகாரம்வாழ்க்கை மாற்றங்கள்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →