Kadagam 👉ஜாக்பாட் அடிக்கப்போகுது | Astrologer Jeevitha … — Transcript

கடக ராசிக்கு வரும் குரு அதிசர பெயர்ச்சி மற்றும் அதன் செழிப்பு, தர்மம், கர்மம் பற்றிய விளக்கம்.

Key Takeaways

  • கடக ராசிக்கு குரு பெயர்ச்சி செழிப்பு மற்றும் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
  • குருவை மதித்து தர்மப்படி வாழ வேண்டும், இல்லையெனில் குரு உதவி செய்யமாட்டார்.
  • அதிசர பெயர்ச்சி என்பது குரு கிரகத்தின் ரிவர்ஸ் இயக்கம் ஆகும்.
  • கர்மம் மற்றும் தர்மம் தொடர்பான பரிகாரங்கள் முக்கியம்.
  • குரு பெயர்ச்சி காலத்தில் கல்வி, செல்வம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் அதிகரிக்கும்.

Summary

  • கடக ராசிக்கு குரு பெயர்ச்சி வருவதால் செழிப்பு மற்றும் பணம் புழங்கும் காலம்.
  • குருவை மதிக்காம இருந்தால் குரு உதவி செய்யமாட்டார் என்பதின் முக்கியத்துவம்.
  • குரு பெயர்ச்சி 13 மாதங்கள் ஒரு ராசியில் இருக்கும் மற்றும் அதிசர பெயர்ச்சி என்பது ரிவர்ஸ் போக்கை குறிக்கும்.
  • குரு தர்மம் மற்றும் ஞானக்காரகன் என்பதால் தர்மப்படி வாழ்வது அவசியம்.
  • குரு பெயர்ச்சி காலத்தில் கல்வி, செல்வம், திருமணம் போன்ற நல்ல விஷயங்கள் ஏற்படும்.
  • சனி கிரகத்தின் பயம் குறைக்க குரு பெயர்ச்சி உதவும்.
  • கர்மத்திலிருந்து தர்மத்துக்கு செல்ல பரிகார முறைகள் மற்றும் பயபக்தி அவசியம்.
  • குரு பெயர்ச்சி என்பது ஒரு வருடம் 12 ராசிகளில் சுழற்சி செய்வது மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள்.
  • அதிசர பெயர்ச்சி போது குரு கொஞ்ச நேரம் யோசித்து, நிதானமாக செழிப்பை வழங்குவார்.
  • குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கையில் தர்மம், செல்வம் மற்றும் முன்னேற்றம் பெற முடியும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கடகத்துக்கு தான் ஜாக்பாட் அப்படின்னே சொல்லலாம் இந்த தடவை எல்லா செழிப்பும் வரும் பணம் புழங்கும் தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது கடகத்துக்கு வரும் ஆணவமும் சேர்ந்தே வரும்.
00:16
Speaker A
குருவை பழிச்சு பேசுறதோ குருவை தாழ்த்தி பேசுறதோ குருவை மதிக்காம இருக்கிறதோ இப்படி எல்லாம் இருந்துச்சுனா கூட குரு வந்து உதவி பண்ண மாட்டார்.
00:50
Speaker A
அடுத்தது கடக ராசி.
00:54
Speaker A
கடக ராசியில தான் வந்து குரு வரார் இப்ப சரியா அதாவது குரு பெயர்ச்சி ஆகுறது கடக ராசியில வரப்ப ஆல்ரெடி குரு கடகத்துல உச்சம் இப்ப அதை சொல்லவே வேண்டாம் உச்சம் அடையற இடத்துக்கே வரப்ப கடகத்துக்கு தான் ஜாக்பாட் அப்படின்னே சொல்லலாம் இந்த தடவை.
01:52
Speaker A
ஏன்னா எல்லா செழிப்பும் வரும் பணம் புழங்கும் படிக்கிற குழந்தைகளா நல்ல படிப்பு குருங்கறது ஞானம் கல்வியை கொடுக்கக்கூடியவர் இல்லையா அதனால உங்களுடைய படிப்பு ரொம்ப நல்லா இருக்கும் இந்த டைம ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் ப்ராப்பரா யூஸ் பண்ணிக்கணும் ஏன்னா உங்களுக்கு குருவுடைய அனுகிரகம் பரிபூரணமா இருக்கப்போகுது எல்லா செழிப்பு அதாவது தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது கடகத்துக்கு வரும்.
02:15
Speaker A
ஆனா இதெல்லாம் வரப்போ என்ன ஆகும்னா ஆணவமும் சேர்ந்தே வரும்.
02:24
Speaker A
அந்த ஆணவம் இருந்தா குருவுக்கு பிடிக்காது தர்மம் படி இருந்தரணும் அப்படிங்கறதுதான்.
02:33
Speaker A
குரு எல்லாம் வந்து உடனே தண்டனை கொடுக்கக்கூடியவர்.
02:40
Speaker A
தர்மம் இல்லை அப்படின்னா அப்படியே பிளாக் பண்ணிடுவார்.
02:45
Speaker A
இப்ப எப்படி குரு வந்து இந்த அதிசர பெயர்ச்சில எப்படி அப்படியே தங்கிட்டாரு அந்த மாதிரி உங்களுக்கு கிடைக்கக்கூடிய விஷயங்களை அப்படியே தேக்க நிலையில வச்சிருவார் குரு அள்ளி கொடுக்க போறாரு.
03:20
Speaker A
அதேபோல பகவான் குபேரனும் உங்களுக்கு வந்து போதும் போதும்ங்கிற அளவுக்கு செல்வம் செழிப்பு எல்லாமே அள்ளி கொடுக்கிறப்போ நம்மளுக்கு அகம்பாவம் மட்டும் வந்தரக்கூடாது.
03:32
Speaker A
ஏன் அப்படின்னா கர்மா புல் பேக் பண்ணக்கூடிய ஒரு அமைப்பும் இருக்கும் அப்படி கர்மத்தின்படி நீங்க பின்னாடி போறீங்க அதாவது இந்த அகந்தையா பேசுறது எடுத்தெறிஞ்சு பேசுறது இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் சொன்னீங்கன்னா.
03:49
Speaker A
இப்ப நான் சொன்னேன் இல்லையா குரு அப்படியே தங்கி எதுவுமே பண்ணாம நின்றுருவார்னு.
03:55
Speaker A
அந்த மாதிரி அமைஞ்சிருக்கும் நிறைய பேத்துக்கு வாய்ப்பு அமைஞ்சிரும் ஏன்னா எல்லாரும் எங்க எங்க பண்றாரு கடவுள் ஒன்னும் பண்றது இல்லை அப்படின்னா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க அப்படிங்கறத நீங்க கவனிக்கணும்.
04:12
Speaker A
ஏன்னா நீங்க தர்மத்தின்படி இருந்தீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு குரு கொடுக்க வேண்டியதை செல்வ செழிப்போட அதிகமா பெருக்கி கொடுக்கக்கூடியவர் குரு.
04:20
Speaker A
அதனால குருவை பழிச்சு பேசுறதோ குருவை தாழ்த்தி பேசுறதோ குருவை மதிக்காம இருக்கிறதோ இப்படி எல்லாம் இருந்துச்சுனா கூட உங்களுக்கு குரு வந்து உதவி பண்ண மாட்டார்.
04:25
Speaker A
அதனால குரு வணக்கம் தலை தாழ்ந்து இருக்கிறது நல்லது செல்வம் செழிப்போட எல்லாமே கிடைக்க போகுது.
04:33
Speaker A
நன்றி சொல்லி பழகிக்கிறது கடகத்துக்கு நல்லது.
04:40
Speaker A
மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
04:46
Speaker A
அதே இது நவம்பர் மாசம்.
04:52
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க சனிக்கு பயந்துக்குவாங்க.
04:58
Speaker A
நிஜமாலுமே யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா.
05:04
Speaker A
ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட.
05:12
Speaker A
கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.
05:20
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
05:23
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா.
05:27
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசர பயிற்சி அப்படின்னு பார்க்கிறப்போ.
05:35
Speaker A
கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.
05:40
Speaker A
அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்.
05:46
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோட பண்ணி.
05:54
Speaker A
குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
05:58
Speaker A
இன்னைக்கு நம்ம பேசப்போற விஷயம் என்ன அப்படின்னா.
06:04
Speaker A
குரு அதிசர பெயர்ச்சி.
06:07
Speaker A
அது என்ன குரு அதிசர பெயர்ச்சி.
06:10
Speaker A
சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சிட்டு இருக்கு குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கிற மாதிரி இருக்கும்.
06:16
Speaker A
அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது.
06:21
Speaker A
அக்டோபர் 18 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
06:30
Speaker A
அதே இது நவம்பர் மாசம்.
06:35
Speaker A
திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.
06:40
Speaker A
அதுதான் அதிசர பெயர்ச்சி.
06:42
Speaker A
அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.
06:45
Speaker A
குருனா யாரு.
06:46
Speaker A
குரு வந்து அவர் தேவ குரு இல்லையா அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.
06:52
Speaker A
தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.
06:55
Speaker A
அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்.
07:00
Speaker A
குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும் திருமணம் செல்வம் செழிப்பு அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா.
07:11
Speaker A
சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்.
07:16
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க சனிக்கு பயந்துக்குவாங்க.
07:21
Speaker A
நிஜமாலுமே யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா.
07:25
Speaker A
குருவுக்கு தான் பயந்துக்கணும்.
07:27
Speaker A
ஏன் அப்படின்னா குரு ஞானக்காரகன்.
07:30
Speaker A
அதாவது தர்மம்.
07:32
Speaker A
தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.
07:37
Speaker A
இல்லை அப்படின்னா தர்மம் தலை காக்கும்.
07:42
Speaker A
கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா.
07:52
Speaker A
தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிப்பார் தெய்வம் தர்மத்தின் பக்கமே நிக்கும் அப்படிங்கறதுதான் வந்து.
07:58
Speaker A
குருவோட கொள்கையே.
08:00
Speaker A
அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட.
08:05
Speaker A
நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.
08:12
Speaker A
சரி இந்த குரு அதிசர பெயர்ச்சினா என்ன.
08:15
Speaker A
இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியுற மாதிரி சொல்லுங்க எங்களுக்கு அது புரியல.
08:20
Speaker A
பெயர்ச்சினா என்ன அதிசர பெயர்ச்சினா என்ன அப்படின்னா.
08:24
Speaker A
நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாருமே பஸ்ல போயிருப்போம்.
08:30
Speaker A
இப்ப நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் பாஸ்டா போறப்ப நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்.
08:37
Speaker A
பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.
08:40
Speaker A
ஆனா பஸ் அங்கேயே தான் நிக்குது.
08:42
Speaker A
நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.
08:44
Speaker A
அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே ஒரு வருடம் ஒரு ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பாரு.
08:50
Speaker A
மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.
08:55
Speaker A
அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.
09:01
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
09:03
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா.
09:06
Speaker A
குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.
09:12
Speaker A
அந்த மாதிரி இப்ப ரிவர்ஸ் போறாரு இப்ப.
09:14
Speaker A
அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா இது வந்து வான்ல நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.
09:21
Speaker A
அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கி தான் போகணும்.
09:25
Speaker A
வக்ரம் அடையறாரு வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.
09:31
Speaker A
நிதானத்தை இழந்து அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.
09:39
Speaker A
என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறார் அந்த இடத்துல.
09:44
Speaker A
அப்ப என்ன பண்ணுவார்.
09:46
Speaker A
குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு.
09:47
Speaker A
குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.
09:50
Speaker A
இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம் காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா.
09:57
Speaker A
கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம் ஆனா பாத்துருவோம்.
10:02
Speaker A
அதேதான் வந்து.
10:03
Speaker A
இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க.
10:07
Speaker A
குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும் திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியிலே திரும்பவும் வந்துருவார்.
10:13
Speaker A
கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வான்ல அந்த வானியல் சாஸ்திரப்படி.
10:20
Speaker A
அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.
10:26
Speaker A
அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறதெல்லாம் குரு கொடுக்க மாட்டார்.
10:34
Speaker A
நிதானமா தான் கொடுப்பார் சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.
10:40
Speaker A
ஆனா குரு வந்து குரோத்த கொடுப்பார் உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும் எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறதெல்லாம் தெரியும் இல்லையா.
10:49
Speaker A
அது இன்னும் நிதானிச்சு கொடுக்க போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசர பெயர்ச்சி அப்படிங்கறது அர்த்தம்.
10:54
Speaker A
இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசர பெயர்ச்சி.
10:58
Speaker A
என்னென்ன மாதிரியான நல்லதை எப்படி கொடுக்க போறாரு.
11:03
Speaker A
என்ன பாடத்தை கற்பிக்க வரார் அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.
11:07
Speaker A
ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்க தானே வரார் அதுவும் இந்த அதிசர பெயர்ச்சி எப்படி தெரியுமா.
11:14
Speaker A
இன் ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாதியார் போறப்ப அந்த வாதியார் எப்படி நம்மகிட்ட பிஹேவ் பண்ண போறார்னே நம்மளுக்கு தெரியாது.
11:22
Speaker A
அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசர பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்த போகக்கூடிய விஷயமா இருக்கும்.
11:29
Speaker A
சரி இந்த குரு அதிசர பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா.
11:35
Speaker A
கடகம், ரிஷபம், மீனம் இந்த மூணு ராசிகளுக்குமே வந்து.
11:42
Speaker A
குரு அதிசர பெயர்ச்சி நிச்சயமா நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும்.
11:49
Speaker A
நான் சொன்ன சில விஷயங்கள் இருக்குல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.
11:54
Speaker A
அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்போட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.
12:01
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசர பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.
12:10
Speaker A
மிதுனம், தனுசு, மகரம் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது.
12:15
Speaker A
இந்த அதிசர பெயர்ச்சில ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால.
12:20
Speaker A
எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.
12:28
Speaker A
குரு உருவாக்க மாட்டார் குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால.
12:34
Speaker A
கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.
12:40
Speaker A
யாருக்கெல்லாம் ஓகே.
12:42
Speaker A
அதாவது ஒரு மத்தியமா இருக்குது ஒன்னும் இல்ல நீங்க எல்லாம் பிரச்சனை இல்லை உங்களை எல்லாம் குரு அதிசர பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்க போறது இல்லை.
12:50
Speaker A
அப்படிங்கறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா.
12:56
Speaker A
மேஷம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்.
13:03
Speaker A
உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசர பெயர்ச்சிங்கிறது சொல்லுது.
13:11
Speaker A
பொதுவாவே குரு அப்படிங்கறவர் எதுக்கு வரார் அப்படினாலே.
13:16
Speaker A
நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்கு தான்.
13:20
Speaker A
அப்ப இந்த குரு அதிசாய பெயர்ச்சியை பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்கு தான் பயந்துக்கணும்.
13:25
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோட பண்ணி.
13:31
Speaker A
இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.
13:36
Speaker A
திரும்பி திரும்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்குள்ள நான் போக மாட்டேன்.
13:40
Speaker A
அப்படிங்கிற குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.
13:43
Speaker A
குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே அவர் வந்து நம்மளுக்கு டீச்சர் தானே.
13:47
Speaker A
அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க ஓகே இனிமேல் நீ இந்த தவறு பண்ணக்கூடாது.
13:53
Speaker A
இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா.
13:59
Speaker A
கர்மத்தின் பாதையில போயிருவோம்.
14:01
Speaker A
இது எப்படின்னா கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.
14:05
Speaker A
அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்.
14:08
Speaker A
செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.
14:12
Speaker A
அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கிறோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா.
14:18
Speaker A
தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.
14:20
Speaker A
குருங்கறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.
14:25
Speaker A
என்னங்கறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை.
14:30
Speaker A
ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோட நம்ம அந்த தெய்வத்தை நம்பி.
14:36
Speaker A
இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ.
14:41
Speaker A
குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும்.
14:46
Speaker A
எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கிறது ரொம்ப நல்லது.
14:51
Speaker A
சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்கு தான் பயந்துக்கணும்.
14:54
Speaker A
ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கற மாதிரி இருக்கும்.
15:00
Speaker A
ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா நீள்றதுங்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
15:04
Speaker A
அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா.
15:08
Speaker A
குரு தட்சணை எல்லாம் செழிப்பா குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வரது.
15:12
Speaker A
அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து.
15:17
Speaker A
இது பண்ணனா போதுமா அப்படிங்கிற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ குருனாலே சந்தேகமே படவே கூடாது.
15:24
Speaker A
குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படினாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ குரு பலம் கம்மியா இருக்குங்கறது அர்த்தம்.
15:30
Speaker A
அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.
15:33
Speaker A
அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை.
15:39
Speaker A
குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே.
15:45
Speaker A
குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.
Topics:குரு பெயர்ச்சிஅதிசர பெயர்ச்சிகடக ராசிதர்மம்கர்மம்செழிப்புசனி கிரகம்பரிகாரம்ஜோதிடம்குரு கிரகம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →