அள்ளிக்கொடுக்க வருகிறார் குரு.! | Astrologer Jeevitha |… — Transcript

2025ல் குரு அதிசார பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள், பரிகார வழிகள், தர்மம் மற்றும் கர்மம் பற்றிய விளக்கம்.

Key Takeaways

  • குரு அதிசார பெயர்ச்சி 2025ல் முக்கிய மாற்றங்களை கொண்டு வரும்.
  • தர்மம் மற்றும் கர்மம் தொடர்பான பாடங்களை குரு பெயர்ச்சி மூலம் கற்றுக்கொள்ளலாம்.
  • சனி கிரகத்தின் பாதிப்புகளிலிருந்து குரு காப்பாற்றுவார்.
  • பரிகார முறைகள் மற்றும் பயபக்தி முக்கியம்.
  • சில ராசிகளுக்கு சிறப்பு கவனம் தேவை.

Summary

  • 2025ல் குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு பெயர்ச்சியாகி, பின்னர் திரும்பி மிதுனத்துக்கு வருவார்.
  • குரு அதிசார பெயர்ச்சி என்பது குரு கிரகத்தின் ரிவர்ஸ் அல்லது விக்ரம நிலை ஆகும்.
  • குரு தர்மம் மற்றும் ஞானத்தின் பிரதிநிதி, கர்மத்திலிருந்து தர்மத்திற்கு செல்ல வழிகாட்டுவார்.
  • சனி கிரகத்தினால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து குரு காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • குரு பெயர்ச்சி காலத்தில் பரிகார முறைகள் மற்றும் பயபக்தியுடன் செயல்பட வேண்டும்.
  • கடகம், ரிஷபம், மீனம் ராசிகளுக்கு குரு அதிசார பெயர்ச்சி நல்ல பலன்களை தரும்.
  • மிதுனம், தனுசு, மகரம் ராசிகளுக்கு கவனம் தேவை, ஏனெனில் சில சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம் ராசிகளுக்கு மத்திமமான பலன்கள் ஏற்படும்.
  • குரு பெயர்ச்சி மூலம் நம்முடைய தவறுகளை உணர்ந்து, தர்ம பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது.
  • குரு பெயர்ச்சி காலத்தில் நிதானமாக, ஞானத்துடன் செயல்பட்டு, பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
00:05
Speaker A
அதே இது நவம்பர் மாசம்
00:11
Speaker A
பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க? சனிக்கு பயந்துக்குவாங்க.
00:16
Speaker A
நிஜமாலுமே யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?
00:19
Speaker A
ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திடுவாரு அப்படிங்கறதை விட
00:24
Speaker A
கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
00:32
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா
00:35
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ
00:40
Speaker A
கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கிறது தான் விதி.
00:46
Speaker A
அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும் சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோடு பண்ணி
00:53
Speaker A
Presenting sponsor Tamil matrimony.
01:51
Speaker A
குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
01:53
Speaker A
இன்னைக்கு நம்ம பேசப்போற விஷயம் என்ன அப்படின்னா குரு அதிசார பெயர்ச்சி.
01:59
Speaker A
அது என்ன குரு அதிசார பெயர்ச்சி? சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சிட்டு இருக்கு குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கிற மாதிரி இருக்கும்.
02:07
Speaker A
அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
02:15
Speaker A
அதே இது நவம்பர் மாசம் திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.
02:23
Speaker A
அதுதான் அதிசார பெயர்ச்சி அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.
02:27
Speaker A
குருனா யாரு? குரு வந்து அவர் தேவ குரு இல்லையா அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.
02:33
Speaker A
தேவர்களுக்கெல்லாம் அவர் குரு அப்ப குரு இருக்கிறப்ப
02:38
Speaker A
என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்? குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும், திருமணம், செல்வம், செழிப்பு அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா? சனிக்கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க? சனிக்கு பயந்துக்குவாங்க.
03:26
Speaker A
நிஜமாலுமே யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா? குருவுக்கு தான் பயந்துக்கணும்.
03:36
Speaker A
ஏன் அப்படின்னா குரு ஞானக்காரகன் அதாவது தர்மம் தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.
03:47
Speaker A
இல்ல அப்படின்னா தர்மம் தலைகாக்கும் கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா?
04:02
Speaker A
தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிற்பார் தெய்வம் தர்மத்தின் பக்கமே நிற்கும் அப்படிங்கிறதுதான் வந்து குருவோட கொள்கையே.
04:12
Speaker A
அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திடுவாரு அப்படிங்கறதை விட நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம்
04:20
Speaker A
அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.
04:25
Speaker A
சரி இந்த குரு அதிசார பெயர்ச்சினா என்ன இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.
04:30
Speaker A
புரியிற மாதிரி சொல்லுங்க எங்களுக்கு அது புரியல.
04:34
Speaker A
பெயர்ச்சினா என்ன அதிசார பெயர்ச்சினா என்ன அப்படின்னா நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க.
04:40
Speaker A
ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாமே பஸ்ல போயிருப்போம்.
04:42
Speaker A
இப்போ நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்ப நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?
04:50
Speaker A
பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம் ஆனா பஸ் அங்கேயே தான் நிக்குது.
04:55
Speaker A
நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே
05:02
Speaker A
ஒரு வருடம் ஒரு ஒரு ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பாரு மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.
05:10
Speaker A
அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.
05:14
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.
05:18
Speaker A
இங்க என்ன ஆகுது அப்படின்னா குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு
05:23
Speaker A
இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன் அந்த மாதிரி இப்படி ரிவர்ஸ் போறாரு இப்ப.
05:29
Speaker A
அப்படியே அதாவது நம்முடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா இது வந்து வானில் நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.
05:35
Speaker A
அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கி தான் போகணும்.
05:40
Speaker A
வக்ரம் அடையறாரு வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.
05:46
Speaker A
நிதானத்தை இழந்து அந்த அதாவது
05:50
Speaker A
இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.
05:54
Speaker A
என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறாரு அந்த இடத்துல.
06:00
Speaker A
அப்ப என்ன பண்ணுவார் குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?
06:02
Speaker A
குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.
06:05
Speaker A
இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம் காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா?
06:12
Speaker A
கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம் ஆனா பாத்துருவோம்.
06:19
Speaker A
அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க.
06:24
Speaker A
குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும் திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியில திரும்பவும் வந்துருவார்.
06:33
Speaker A
கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வானில் அந்த வானியல் சாஸ்திரப்படி.
06:40
Speaker A
அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.
06:47
Speaker A
அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறதெல்லாம் குரு கொடுக்க மாட்டார்.
06:57
Speaker A
நிதானமா தான் கொடுப்பார் சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.
07:01
Speaker A
ஆனா குரு வந்து குரோத்தை கொடுப்பார் உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும்.
07:10
Speaker A
எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறது எல்லாம் தெரியும் இல்லையா?
07:15
Speaker A
அது இன்னும் நிதானிச்சு கொடுக்கப் போறார் அப்படிங்கிறதுதான் வந்து அதிசார பெயர்ச்சி அப்படிங்கிறது அர்த்தம்.
07:20
Speaker A
இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசார பெயர்ச்சி என்னென்ன மாதிரியான
07:25
Speaker A
நல்லதை எப்படி கொடுக்கப் போறாரு என்ன பாடத்தை கட்டிக்க வரார் அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.
07:31
Speaker A
ஏன்னா குரு குரு அப்படின்னாலே பாடம் கற்பிக்க தானே வராரு.
07:34
Speaker A
அதுவும் இந்த அதிசார பெயர்ச்சி எப்படி தெரியுமா? ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாத்தியார் போறப்ப அந்த வாத்தியார் எப்படி நம்மகிட்ட பிஹேவ் பண்ண போறாருன்னே நமக்கு தெரியாது.
07:43
Speaker A
அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசார பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்தப் போகக்கூடிய விஷயமா இருக்கும்.
07:50
Speaker A
சரி இந்த குரு அதிசார பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ணப் போறார் அப்படின்னா
07:55
Speaker A
கடகம், ரிஷபம், மீனம் இந்த மூணு ராசிகளுக்குமே வந்து
08:00
Speaker A
குரு அதிசார பெயர்ச்சி நிச்சயமாக நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும்.
08:06
Speaker A
நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.
08:12
Speaker A
அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது இருக்கு.
08:17
Speaker A
யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ
08:23
Speaker A
மிதுனம், தனுசு, மகரம் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது இந்த அதிசார பெயர்ச்சியில.
08:28
Speaker A
ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அப்படிங்கிறது உருவாகிவிடும்.
08:35
Speaker A
குரு உருவாக்க மாட்டார் குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.
08:43
Speaker A
யாருக்கெல்லாம் ஓகே அதாவது ஒரு மத்திமமா இருக்கிறது ஒன்னும் இல்ல.
08:49
Speaker A
நீங்க எல்லாம் பிரச்சனை இல்லை உங்களை எல்லாம் குரு அதிசார பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்கப் போறது இல்லை.
08:55
Speaker A
அப்படிங்கிறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம்.
09:00
Speaker A
உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்திமமான ஒரு பலன் அப்படிங்கிறதுதான் வந்து இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படிங்கிறது சொல்லுது.
09:07
Speaker A
பொதுவாகவே குரு அப்படிங்கிறவர் எதுக்கு வராரு அப்படின்னாலே நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி
09:13
Speaker A
அதை சரி செய்றதுக்கு தான்.
09:16
Speaker A
அப்ப இந்த குரு அதிசார பெயர்ச்சி பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்கு தான் பயந்துக்கணும்.
09:22
Speaker A
சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோடு பண்ணி இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.
09:30
Speaker A
திரும்பி திரும்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற
09:36
Speaker A
குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.
09:39
Speaker A
குரு வழிபாடு பண்றோம் அப்படின்னாலே அவர் வந்து நம்மளுக்கு டீச்சர் தானே அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க?
09:46
Speaker A
ஓகே இனிமேல் நீ இந்த தவறு பண்ணக்கூடாது இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா கர்மத்தின் பாதையில போயிருவோம்.
09:53
Speaker A
இது எப்படின்னா கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கிறது தான் விதி.
09:57
Speaker A
அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?
10:02
Speaker A
செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.
10:05
Speaker A
அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கிறோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா
10:11
Speaker A
தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.
10:14
Speaker A
குருங்கிறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.
10:20
Speaker A
என்னங்கிறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோடு
10:26
Speaker A
நம்ம அந்த தெய்வத்தை நம்பி இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ
10:31
Speaker A
குரு காட்டுற வழி அப்படிங்கிறது சிறந்த வழியா இருக்கும்.
10:36
Speaker A
எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கிறது ரொம்ப நல்லது.
10:43
Speaker A
சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்கு தான் பயந்துக்கணும்.
10:47
Speaker A
ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கிற மாதிரி இருக்கும்.
10:55
Speaker A
ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
11:00
Speaker A
அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா?
11:05
Speaker A
குரு தட்சணை எல்லாம் செழிப்பான்னா அது குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வர்றது.
11:12
Speaker A
அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து
11:19
Speaker A
இது பண்ணுனா போதுமா அப்படிங்கிற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ.
11:25
Speaker A
குருனாலே சந்தேகமே படவே கூடாது.
11:27
Speaker A
குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படின்னாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ குரு பலம் கம்மியா இருக்குங்கிறது அர்த்தம்.
11:34
Speaker A
அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.
11:35
Speaker A
அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை குருமார்கள் சொல்றதை கேட்டு
11:42
Speaker A
அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படின்னாலே
11:47
Speaker A
குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.
Topics:குரு பெயர்ச்சிஅதிசார பெயர்ச்சிஜோதிடம்கர்மம்தர்மம்2025 ராசி பலன்குரு கிரகம்பரிகாரம்தமிழ் ஜோதிடம்குமுதம் பக்தி

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →