viruchigam👉குடும்பத்தில் வாக்குவாதம் கூடாது | Astrologe… — Transcript

விருச்சிக ராசிக்கான குரு அதிசார பெயர்ச்சி, குடும்ப வாக்குவாதம் தவிர்க்கும் வழிகள் மற்றும் பயணத்தில் கவனம் பற்றிய விளக்கம்.

Key Takeaways

  • விருச்சிக ராசிக்காரர்கள் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • குடும்பத்தில் அமைதியுடன் இருக்க வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
  • குரு கிரகத்தின் அதிசார பெயர்ச்சி வாழ்க்கையில் முக்கிய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
  • திருச்செந்தூர் கோயில்களில் வழிபாடு மற்றும் பரிகாரங்கள் பயனுள்ளதாகும்.
  • குரு கிரகத்தின் ரிவர்ஸ் நிலைமையை புரிந்து கொண்டு வாழ்க்கையை நிதானமாக நடத்த வேண்டும்.

Summary

  • விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
  • குடும்பத்தில் வாக்குவாதம் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
  • பயணங்கள் நிதானமாக திட்டமிட்டு, தேவையான தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • குரு கிரகத்தின் அதிசார பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவாக விளக்கம்.
  • குரு கிரகத்தின் ரிவர்ஸ் (retrograde) நிலைமையின் தன்மை மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்கள்.
  • திருச்செந்தூர் மற்றும் சித்தர்கள் கோயில்களில் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.
  • குரு கிரகம் தர்மம் மற்றும் ஞானத்தை பிரதிபலிக்கும் கிரகம் என்பதும், அதன் பாதிப்புகள்.
  • குரு அதிசார பெயர்ச்சி காலத்தில் வாழ்க்கையில் சிக்கல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் ஏற்படும்.
  • குரு கிரகத்தின் பாதிப்புகளை சமாளிக்க தர்மம் மற்றும் நியாயம் முக்கியம்.
  • குரு கிரகத்தின் அதிசார பெயர்ச்சி மூலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஏற்படும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
உங்களுக்குலாம் நீங்க என்ன சொல்ல போறீங்க? நாங்க என்ன நல்லாவே இருக்க மாட்டோமா அப்படின்னுதான் விருச்சிக ராசிக்காரங்க பெரும்பாலும் கேப்பீங்க.
00:06
Speaker A
ஆனா விருச்சிக ராசிதான்
00:09
Speaker A
இந்த பயணம் பண்ற நேரத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.
00:14
Speaker A
இந்த விருச்சிக ராசிக்கு உண்டான ஒரு அமைப்பு என்ன அப்படின்னா
00:19
Speaker A
கொஞ்சம் நிதானமா சுதாரிச்சு அந்த பயணத்தை மேற்கொள்றது அப்படிங்கறது அவசியம்.
00:27
Speaker A
போன வந்தோன அவசரமா போன வந்தோனலாம் இல்லாம நிதானமா
00:32
Speaker A
PRESENTING SPONSOR tamil matrimony
00:39
Speaker A
அப்பவும் இப்பவும் எப்பவும் சென்னை சில்க்ஸ்
00:42
Speaker A
அதிரடி கலெக்ஷன்ஸ் சரவெடி செலப்ரேஷன்
00:45
Speaker A
முந்திரி திராட்சை முழுசா இருக்கு
00:47
Speaker A
ஆச்சி பாயாசம் மிக்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
00:50
Speaker A
உங்கள் லெஜெண்ட் சரவணாவில் தீபாவளி பரிசாக பவனக்கு ரூபாய் 1200 தள்ளுபடி
00:55
Speaker A
விருச்சிக ராசி
01:40
Speaker A
விருச்சிக ராசி அப்படின்னாலே எங்களுக்குலாம் நீங்க என்ன சொல்ல போறீங்க? நாங்க என்ன நல்லாவே இருக்க மாட்டோமா அப்படின்னுதான் விருச்சிக ராசிக்காரங்க பெரும்பாலும் கேப்பீங்க.
01:45
Speaker A
ஆனா விருச்சிக ராசிதான் உள்ளதுலயே
01:50
Speaker A
என்ன பொறுத்தவரைக்கும் அதாவது வாழ்க்கை பாடங்கள் மொத்தமும் கத்துக்க கூடியவங்களே விருச்சிக ராசிக்காரங்கதான்.
01:56
Speaker A
குருவே உங்கள்ட்ட வராரு, குரு வந்து உங்களுக்கு நல்லதுதான் பண்றாரு.
02:00
Speaker A
அதாவது உங்களுக்கு நல்ல பயணம் ஏற்படுத்திக் கொடுக்கிறது, நல்ல ஒரு பிரண்ட்ஸ் சர்க்கிள் ஏற்படுத்திக் கொடுக்கிறது, வெளிநாடு பயணம் போறீங்களா வெளிநாடு பயணம் எல்லாமே செட் ஆகும்.
02:08
Speaker A
கூட பிறந்தவங்கள்ட்ட மட்டும் கொஞ்சம் வாக்குவாதங்கள் இல்லாம இருந்துக்கிறது அப்படிங்கறது நல்லது, கொஞ்சம் அதுல மட்டும் கவனமா இருந்துக்கணும்.
02:14
Speaker A
டிராவலிங் அப்படிங்கறது உங்களுக்கு அதிகமா குரு கொடுக்கிற மாதிரி இருக்கு, அங்க போய் நிறைய கத்துக்க கூடிய அமைப்புகள் அப்படிங்கறது உங்களுக்கு இருக்கு.
02:22
Speaker A
அப்போ இந்த பயணம் பண்ற நேரத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.
02:26
Speaker A
ஒரு நாள்கிழமை பார்த்து ஒரு கிளம்பி போறது, உங்களுடைய குலதெய்வம் யாரோ அவங்களை வழிபட்டுட்டு போறது, இல்ல இஷ்ட தெய்வம் யாரோ வழிபட்டுட்டு போறது, உத்தரவு கேட்டுட்டு போறது அப்படிங்கறதெல்லாம் கொஞ்சம் உகந்ததா இருக்கும், ஏன் அப்படின்னா உங்களுடைய பயண காலங்கள்லதான் குடும்ப உறுப்பினர் யாருக்காவது உடம்பு சரியில்லாம போகக்கூடிய ஒரு அமைப்பும் வரக்கூடிய இருக்கிறதுனால
03:26
Speaker A
எடுக்கக்கூடிய பயணத்துக்கான முடிவுகள் அப்படிங்கறது கொஞ்சம் நிதானமா சுதாரிச்சு அந்த பயணத்தை மேற்கொள்றது அப்படிங்கறது அவசியம்.
03:36
Speaker A
ஏன் அப்படின்னா நீங்க போயிட்டு குடும்பத்துல யாருக்காவது உடல் உபாதினா திரும்பி வரக்கூடிய ஒரு அமைப்பும் ஒரு சிலருக்கு அமையும்.
03:44
Speaker A
ஏன்னா குரு வாய்ப்பை கொடுத்தாலுமே இந்த விருச்சிக ராசிக்கு உண்டான ஒரு அமைப்பு என்ன அப்படின்னா போற மாதிரி ஏதாவது ஒரு தாமதத்தை கொடுக்கக்கூடியதாவே இருக்கும் அந்த குரோத் நோக்கி போறப்போ.
03:55
Speaker A
அதனாலதான் வந்து சரியான ஒரு தெய்வ வழிபாடு இதெல்லாம் பண்ணிட்டு போறது.
04:00
Speaker A
முக்கியமா நீங்கலாம் வந்து திருச்செந்தூர் போயிரணும், திருச்செந்தூர் போயிட்டு அங்க இருக்கிற சித்தர்கள் கோயிலுக்கு போயிட்டு முதல் சித்தர் வழிபாடு எல்லாம் முடிச்சிட்டு நிதானமா திருச்செந்தூர்ல வந்து வழிபாட்டு முறைகளை பண்ணனும்.
04:16
Speaker A
போன வந்தோன அவசரமா போன வந்தோனலாம் இல்லாம நிதானமா முருகரை காலையில நீங்க என்ன ராஜ கோலத்துல பாக்குறீங்களோ
04:22
Speaker A
சாயங்காலமும் நல்ல ஒரு ராஜ கோலத்துல பார்த்து ஒரு நாளைக்கு ரெண்டு முறை தரிசனம் பண்ணி காலையில போயிட்டு அங்க இருக்க கொடி மரத்துல விழுந்து தொழுந்து வணங்கிட்டு அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தியை வழிபாடு பண்ணிட்டு வர்றதுதான் வந்து உங்களுக்கு மிகச் சிறந்த உகந்த பரிகாரமாவே இருக்கும்.
05:15
Speaker A
இந்த பரிகாரத்தை நீங்க பண்ணிட்டு வரப்போ நான் சொல்லக்கூடிய இந்த உடம்புல உபாதைகள், குடும்பத்துல வரவங்களுக்கு சில பிரச்சனைகள் இது எல்லாமே சாதாரண விஷயங்களாக மாறக்கூடிய அமைப்பு அப்படிங்கறது இருக்கு.
05:24
Speaker A
அங்க உட்கார்ந்து நேருக்கு நேரா தூரத்துல இருந்து அங்க இருக்க குரு தட்சிணாமூர்த்தியை எல்லாம் நான் போகக்கூடிய காரியங்கள் அதாவது நான் படிக்கிறேன் இல்ல நான் இப்பதான் வேலை வாங்க போறேன் இல்ல நான் வேலை விஷயமா இப்பதான் நான் வெளிநாடோ வெளியூரோ நான் போறேன் போகக்கூடிய எந்த தடங்கள் இல்லாம எனக்கு நல்லபடியா அந்த பயணம் அமையணும் எனக்கு வந்து லைஃப்ல ஒரு குரோத் வரணும் அப்படின்னு நல்லபடியா ஒரு வேண்டுதல் வச்சிட்டு சந்தோஷமா வாங்க அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தி அதோட முருகரும் சேர்ந்து உங்களுக்கு கொடுக்கக்கூடிய ஆசீர்வாதம் அபரிதமாவே இருக்கும் உங்களுக்கு.
05:54
Speaker A
அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.
06:43
Speaker A
அதே இது நவம்பர் மாசம் திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார் அதுதான் அதிசார பெயர்ச்சி அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.
06:54
Speaker A
குருனா யாரு? குரு வந்து அவர் தேவ குரு இல்லையா அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.
07:00
Speaker A
தேவர்களுக்கெல்லாம் அவர் குரு அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும் குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும், திருமணம், செல்வம், செழிப்பு அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா.
07:13
Speaker A
சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க சனிக்கு பயந்துக்குவாங்க.
07:22
Speaker A
நிஜமால்மா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா குருவுக்கு தான் பயந்துக்கணும் ஏன் அப்படின்னா குரு ஞானக்காரகன் அதாவது தர்மம்.
07:34
Speaker A
தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார் இல்ல அப்படின்னா தர்மம் தலை காக்கும் கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா.
08:23
Speaker A
தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிற்பார் தெய்வம் தர்மத்தின் பக்கமே நிற்கும் அப்படிங்கறதுதான் வந்து குருவோட கொள்கையே அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.
08:39
Speaker A
சரி இந்த குரு அதிசார பெயர்ச்சினா என்ன? இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியிற மாதிரி சொல்லுங்க எங்களுக்கு அது புரியல பெயர்ச்சினா என்ன அதிசார பெயர்ச்சினா என்ன அப்படின்னா
08:48
Speaker A
நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாரும் பஸ்ல போயிருப்போம் இப்ப நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்ப நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம் பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம் ஆனா பஸ் அங்கேயே தான் நிக்குது.
09:04
Speaker A
நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே ஒரு வருடம் ஒரு ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பாரு மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.
10:00
Speaker A
அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம் இங்க என்ன ஆகுது அப்படின்னா
10:06
Speaker A
குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன் அந்த மாதிரி ரிவர்ஸ் போறாரு இப்ப.
10:16
Speaker A
அப்படியே அதாவது நம்முடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா இது வந்து வான்ல நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.
10:25
Speaker A
அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கி தான் போகணும் வக்ரம் அடையறாரு வக்ரம்ங்கறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம் நிதானத்தை இழந்து அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.
10:39
Speaker A
என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறாரு அந்த இடத்துல அப்ப என்ன பண்ணுவார் குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.
10:51
Speaker A
இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம் காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம் ஆனா பாத்துருவோம் அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும் திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியில திரும்பவும் வந்துருவார் கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வான்ல அந்த வானியல் சாஸ்திரப்படி அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.
11:50
Speaker A
அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறதெல்லாம் குரு கொடுக்க மாட்டார் நிதானமா தான் கொடுப்பார் சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பாரு ஆனா குரு வந்து குரோத்த கொடுப்பாரு உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும் எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறதெல்லாம் தெரியும் இல்லையா அது இன்னும் நிதானிச்சு கொடுக்க போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசார பெயர்ச்சி அப்படிங்கறது அர்த்தம்.
12:16
Speaker A
இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசார பெயர்ச்சி என்னென்ன மாதிரியான நல்லதை எப்படி கொடுக்க போறாரு என்ன பாடத்தை கத்துக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.
12:26
Speaker A
ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்க தான வராரு அதுவும் இந்த அதிசார பெயர்ச்சி எப்படி தெரியுமா ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாத்தியார் போறப்ப அந்த வாத்தியார் எப்படி நம்மள்ட்ட பிஹேவ் பண்ண போறாருன்னே நம்மளுக்கு தெரியாது அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசார பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்த போக்கக்கூடிய விஷயமா இருக்கும்.
13:24
Speaker A
சரி இந்த குரு அதிசார பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா கடகம், ரிஷபம், மீனம்.
13:31
Speaker A
இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசார பெயர்ச்சி நிச்சயமா நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும் நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.
13:42
Speaker A
அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு யாருக்கெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ
13:50
Speaker A
மிதுனம், தனுசு, மகரம் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது இந்த அதிசார பெயர்ச்சில ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.
14:05
Speaker A
குரு உருவாக்க மாட்டார் குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.
14:12
Speaker A
யாருக்கெல்லாம் ஓகே அதாவது ஒரு மத்தியமா இருக்குது ஒன்னும் இல்ல நீங்கலாம் பிரச்சனை இல்ல உங்களை எல்லாம் குரு அதிசார பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்க போறது இல்ல அப்படிங்கறவங்கலாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம்.
15:00
Speaker A
உங்களுக்குலாம் வந்து ஒரு மத்தியமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படிங்கறது சொல்லுது.
15:09
Speaker A
பொதுவாவே குரு அப்படிங்கறவர் எதுக்கு வராரு அப்படினாலே நம்ம செஞ்ச தவறுகள்ல இருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்கு தான்.
15:19
Speaker A
அப்ப இந்த குரு அதிசாய பெயர்ச்சியை பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்கு தான் பயந்துக்கணும் சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி
15:28
Speaker A
பயபக்தியோட பண்ணி இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் திருப்பி திருப்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரிப்பீட்டிஷன் குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.
15:44
Speaker A
குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே அவர் வந்து நம்மளுக்கு டீச்சர் தானே அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க ஓகே இனிமேல் நீ இந்த தவறு பண்ணக்கூடாது.
15:52
Speaker A
இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா கர்மத்தின் பாதையில போயிருவோம் இது எப்படின்னா கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கறதுதான் விதி அப்ப அந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும் செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.
16:43
Speaker A
அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கிறோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது குருங்கறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.
16:53
Speaker A
என்னங்கறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்ல ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோட நம்ம அந்த தெய்வத்தை நம்பி இந்த யூனிவர்ஸ் அப்படிங்கற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ
17:03
Speaker A
குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும் எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கறது ரொம்ப நல்லது.
17:10
Speaker A
சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்கு தான் பயந்துக்கணும் ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கற மாதிரி இருக்கும்.
17:25
Speaker A
ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல.
17:32
Speaker A
அப்போ இந்த குரு தட்சிணை அப்படிங்கற ஒரு விஷயம்லாம் இருக்கு இல்லையா குரு தட்சிணை எல்லாம் செழிப்பா குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வரது.
17:40
Speaker A
அந்த குரு தட்சிணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சிணையில வந்து இது பண்ணனா போதுமா அப்படிங்கற மாதிரி
17:49
Speaker A
அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ குருனாலே சந்தேகமே படவே கூடாது.
17:56
Speaker A
குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படினாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ குரு பலம் கம்மியா இருக்குங்கறது அர்த்தம்.
18:05
Speaker A
அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.
18:10
Speaker A
அதாவது குருமார்களுடைய வழிபட்டு போங்கன்னு சொல்றது இல்ல.
18:15
Speaker A
குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே
18:20
Speaker A
குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.
Topics:விருச்சிக ராசிகுரு அதிசார பெயர்ச்சிதிருச்செந்தூர் வழிபாடுகுடும்ப வாக்குவாதம்பயணம் கவனம்குரு கிரகம்ரிவர்ஸ் பெயர்ச்சிதர்மம்தமிழ் ஜோதிடம்பரிகாரம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →