Speaker A
சரி இந்த குரு அதிசர பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா கடகம், ரிஷபம், மீனம். இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசர பெயர்ச்சி நிச்சயமா நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும். நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா? கொஞ்சம் கவனமா இருந்துக்கணும். அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது இருக்கு. யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசர பெயர்ச்சி அப்படின்னு பாக்குறப்போ மிதுனம், தனுசு, மகரம். கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது இந்த அதிசர பெயர்ச்சியில. ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அப்படிங்கிறது உருவாகிவிடும். குரு உருவாக்க மாட்டார். குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன். யாருக்கெல்லாம் ஓகே அதாவது ஒரு மத்திமமா இருக்குது. ஒன்னும் இல்லை. உங்களை எல்லாம் குரு அதிசர பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்க போறது இல்லை அப்படிங்கிறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம். உங்களுக்கு எல்லாம் வந்து ஒரு மத்திமமான ஒரு பலன் அப்படிங்கிறதுதான் வந்து இந்த குரு அதிசர பெயர்ச்சி அப்படிங்கிறது சொல்லுது.