நோன்பு திறப்பதற்குள் பெரிய தேவை கைகூடும் — Transcript

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் நாம் அனைவருமே பரக்கத் வாய்ந்த ரமலான் மாதத்துல ஒரு நோன்பாளியா இருக்கிறோம்.
00:14
Speaker A
நோன்பாளி அப்படிங்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் அல்லாஹ் ஹுத்தஆலா நமக்கு கொடுத்ததற்கே முதல்ல நம்ம எல்லோருமே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தணும்.
00:26
Speaker A
அதுவும் நோன்பு வைத்த நிய்யத் சொன்ன இந்த நிமிஷத்துல நம்ம சொல்லக்கூடிய ஒரு அழகான திக்ரை தான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம்.
00:32
Speaker A
இந்த திக்ர் எப்படிப்பட்டது அப்படின்னா அல்லாஹ்வினுடைய உயர்ந்த திருநாமங்கள் உன்னதமான திக்ர் இன்னும் உயர்ந்த புகழ்சொல் அனைத்தையுமே உள்ளடக்கிய ஒரு வார்த்தையை தான் நம்ம பார்க்க போறோம்.
00:47
Speaker A
இதை யார் 10 முறை சொல்றாங்களோ அவங்களுக்கு அல்லாஹ் ஹுத்தஆலா உடனடியாக அவங்களுடைய ஒவ்வொரு தேவைகளையும் கபூல் ஆக்கி தருவானாம்.
00:58
Speaker A
இந்த திக்ரை ஓதி யாருக்கும் பலன் கிடைக்கல அப்படின்னா அன்னைக்கு அவங்களுக்கு வரக்கூடிய சோதனைகளோ கஷ்டமோ பிரச்சனையோ அவங்க விரும்பாத ஏதோ ஒரு செயலோ அவங்களுக்கு தடுக்கப்படுமாம்.
01:04
Speaker A
சுபஹானல்லாஹ் இது எவ்வளவு பெரிய ஒரு நற்செய்தியா இருக்கு பாருங்க.
01:10
Speaker A
நம்ம எல்லோருக்கும் இதுதான் வேணும் நம்ம ஒரு துவாவை கேட்கிறோம் நம்மளோட துவா கபூல் ஆகல.
01:20
Speaker A
நமக்கு தேவையானது கிடைக்கல அப்படின்னாலும் அதற்கு பதிலாக நம்ம விரும்பாத ஒரு விஷயம் தடுக்கப்படுது அப்படிங்கறதே ஒரு பெரிய ஒரு நல்லதுதான்.
01:30
Speaker A
இதுவே ஒரு பெரிய ஒரு சிறந்த ஒரு விஷயம் தான் இது நமக்கு இந்த ஒரு திக்ர்ல கிடைக்குது அப்படிங்கும் போது.
01:36
Speaker A
நம்ம எல்லோருமே இந்த திக்ரை இன்றைய தினம் ஓதக்கூடியவங்களா நம்ம இருக்கணும்.
01:42
Speaker A
எனவே சஹர் முடிச்சிட்டு இந்த ஒரு திக்ரை 10 தடவை ஓதிக்கோங்க.
01:46
Speaker A
நான் உங்களுக்காக தமிழ்லயே ஸ்கிரீன்லயே போடுறேன் இன்ஷா அல்லாஹ்.
01:50
Speaker A
பார்த்து எல்லோருமே ஓத ஆரம்பிங்க.
01:52
Speaker A
இப்ப அந்த திக்ர் என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.
01:55
Speaker A
இந்த திக்ரினுடைய மகத்துவம் என்ன அப்படின்னா கௌதுல் ஆலம் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவங்க வளமையா ஓதப்பட்ட ஒரு மகத்தான ஒரு திக்ர் என்பதாக சொல்லப்படுது.
02:02
Speaker A
அது என்ன திக்ர் அப்படின்னா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சுபஹானல் காதிரில் காஹிரில் கவிய்யில் முத்தாலி.
02:10
Speaker A
லா இலாஹ இல்லாஹுவ யா ஹய்யு யா கய்யூமு யாதல் ஜலாலி வல் இக்ராம் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அலீம்.
02:18
Speaker A
சர்வ வல்லமை உடையவனும் அடக்கியாளும் வல்லமை உடையவனும் எல்லாம் அறிந்தவனுக்கே புகழ் அனைத்தும் உண்டாகட்டும்.
02:27
Speaker A
வணக்கத்திற்கு தகுதியானவன் அவனை தவிர வேறு யாரும் இல்லை அவனே உயிருள்ளவன் என்றும் அதிலேயே நிலைத்திருக்கக்கூடியவன்.
02:36
Speaker A
மகத்துவமும் கண்ணியமும் பொருந்தியவன்.
02:40
Speaker A
அவனை தவிர வேறு எந்த சக்தியோ வலிமையோ கிடையாது.
02:46
Speaker A
அவன் உயர்ந்த மகத்தானவன்.
02:50
Speaker A
இதை யார் தொடர்ந்து ஓதுறாங்களோ அவங்களுக்கு ஒரு சிரமமும் தீண்டாதாம்.
02:57
Speaker A
அவங்களுக்கு ஒவ்வொரு தேவைகளும் நடக்குமாம்.
03:01
Speaker A
இதை தினமும் யார் 10 முறை ஓதுறாங்களோ அவங்களுக்கு விரும்பாத எந்த காரியமும் அவங்களுக்கு அன்றைக்கு நடக்காதாம்.
03:07
Speaker A
அப்ப நம்ம தினமும் ஓதணும் அப்படின்னா நம்ம மனசுக்கு பிடிக்காத எதுவுமே நமக்கு நிகழாது.
03:12
Speaker A
எனவே இன்ஷா அல்லாஹ் இன்றைய தினம் இந்த அற்புதமான மகத்துவங்கள் பொதிந்த இந்த ஒரு திக்ரை நீங்க ஓதி பாருங்க.
03:20
Speaker A
இதுல சிறந்த திக்ர் இருக்கு சிறந்த திருநாமங்கள் இருக்கு சிறந்த ஒரு துவா இருக்கு.
03:26
Speaker A
சிறந்த ஒரு புகழ்சொல் இதுல இருக்கு.
03:29
Speaker A
இதைவிட நமக்கு வேற என்ன வேணும்.
03:30
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்னு சொன்னாலே நமக்கு போதுமானது.
03:34
Speaker A
அனைத்து நலவுகளுமே நடக்கும்.
03:36
Speaker A
அந்த ஒன்னே போதும் மந்திரச்சொல் நம்மளோட வாழ்க்கையில மேஜிக் மிராக்கிளை ஏற்படுத்தும்.
03:40
Speaker A
அப்படிப்பட்ட மந்திரச் சொல்லையும் உள்ளடக்கியது தான் இந்த ஒரு திக்ர் இன்றைய தினம் இதை 10 தடவை ஓதிட்டு அல்லாஹ்விடத்தில நீங்க மனதார துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ்.
03:47
Speaker A
இன்று நோன்பு திறப்பதற்குள்ள எங்களுடைய ஹாஜத்துக்களை கபூல் ஆக்கி கொடு யா அல்லாஹ் எங்களுடைய பிரச்சனையை லேசாக்கி கொடு யா அல்லாஹ்னு துவா செய்யுங்க.
03:54
Speaker A
அல்லாஹ் ஹுத்தஆலா அப்படியே உங்களுக்கு நசீபாக்கி தருவான்.
03:56
Speaker A
ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
03:59
Speaker A
இந்த பதிவு உங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன்.
04:03
Speaker A
முடிஞ்ச அளவுக்கு நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
04:05
Speaker A
மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
04:12
Speaker A
மேலும் இதுபோல ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒவ்வொரு விதமான தேவைகளுக்கும் வஜீபாக்கள் வேணும் அப்படின்னா.
04:18
Speaker A
நம்மளோட அற்புத வஜீபாக்கள் கிதாப்ல எல்லாமே இருக்கு.
04:20
Speaker A
இந்த கிதாப் உங்களுக்கு வேணும்னாலும் சரி அல்லது கேட்பது கிடைக்கும் வஜீபா தௌபா கிதாப் வேணும்னாலும் சரி ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.
04:27
Speaker A
கேட்பது கிடைக்கும் வஜீபா தௌபா கிதாப் ரொம்ப ரொம்ப குறைவாதான் இருக்கு.
04:32
Speaker A
எனவே அவசியம் வேணும் அப்படிங்கறவங்க இப்பவே ஆர்டர் போட்டுக்கோங்க.
04:34
Speaker A
இன்னும் தமிழ்ல 30 ஜூஸ் குர்ஆனும் வேணுங்கறவங்களும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே whatsapp மூலம் புக் பண்ணிக்கோங்க.
04:40
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Frequently Asked Questions

இந்த திக்ரை எத்தனை முறை ஓத வேண்டும்?

இந்த திக்ரை தினமும் 10 முறை ஓத வேண்டும். சஹர் முடித்த பிறகு இதை ஓதலாம்.

இந்த திக்ரை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த திக்ரை ஓதுபவர்களுக்கு உடனடியாக அவர்களின் தேவைகள் நிறைவேறும். மேலும், அவர்களுக்கு வரக்கூடிய சோதனைகள், கஷ்டங்கள் அல்லது விரும்பாத செயல்கள் தடுக்கப்படும்.

இந்த திக்ரின் சிறப்பு என்ன?

இந்த திக்ர் அல்லாஹ்வினுடைய உயர்ந்த திருநாமங்கள், உன்னதமான திக்ர் மற்றும் உயர்ந்த புகழ்சொல் அனைத்தையும் உள்ளடக்கியது. இது கௌதுல் ஆலம் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் வழக்கமாக ஓதப்பட்ட ஒரு மகத்தான திக்ர் என்று கூறப்படுகிறது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →