சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 | Simmam Rasi Sani … — Transcript

சிம்மம் ராசிக்கான 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள், ஜோதிடம் வகுப்புகள் மற்றும் வாழ்க்கை பாடங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள்.

Key Takeaways

  • சனிப்பெயர்ச்சி 2026 முக்கியமான மாற்றங்களை கொண்டு வருகிறது, குறிப்பாக சிம்மம் ராசிக்கான பலன்களில் மன அழுத்தம் அதிகரிக்கும்.
  • ஆஸ்ட்ராலஜி ஒரு விரிவான அறிவு துறை, அதன் அடிப்படையில் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
  • சிம்மம் ராசி மக்கள் இந்த காலத்தில் குடும்ப உறவுகளில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் மனநிலையை பேண வேண்டும்.
  • ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாதங்கள் நீடித்து, மாணவர்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட அறிவு வழங்குகின்றன.
  • சனிப்பெயர்ச்சி காலத்தில் சனியின் பாதிப்புகளை கவனித்து, வாழ்க்கை சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.

Summary

  • சனிப்பெயர்ச்சி 2026 மார்ச் 5-6 அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் துவங்கியது.
  • ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மற்றும் அவற்றின் கட்டமைப்புகளை விளக்கினார்.
  • ஆஸ்ட்ராலஜி என்பது கடல் போன்ற ஒரு துறை, மூன்று மாதங்கள் நீடிக்கும் அடிப்படை வகுப்புகள் நடைபெறுகின்றன.
  • சனிப்பெயர்ச்சி என்பது கோயில் ஆகம விதிகளின் அடிப்படையில் ரிஷிகள் கணித்த ஒரு பழமையான கணிப்பு.
  • பிளானட்கள் மெதுவாக நகர்வதால், சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும்.
  • சிம்மம் ராசி நேயர்கள் தற்போது சனியின் அஷ்டம ராசியில் இருப்பதால், குடும்பம் மற்றும் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  • சிம்மம் ராசியில் திருமண வாழ்க்கையில் சண்டைகள், சட்ட பிரச்சனைகள் போன்ற மன அழுத்தங்கள் அதிகரிக்கும்.
  • இந்த காலத்தில் ஜோதிட அறிவு மற்றும் மன அமைதியை பேணுவது அவசியம்.
  • ஆஸ்ட்ராலஜி வகுப்புகளுக்கு 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன, தரமான மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
  • வகுப்புகள் வாரத்தில் ஒரு நாள், 2 மணி நேரம் நடைபெறும், மேலும் வொர்க்ஷாப்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் வழங்கப்படுகின்றன.

Full Transcript — Download SRT & Markdown

00:29
Speaker A
Fourth Estate தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வருமனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் Fourth Estate தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.
00:36
Speaker A
தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும். எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த ஆஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட. சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனிப்பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது மார்ச் 5, 6-ல துவங்கி இருக்குது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.
00:56
Speaker A
அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் ஆஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.
01:05
Speaker A
வணக்கம்.
01:06
Speaker B
வணக்கம்.
01:07
Speaker A
எப்படி இருக்கீங்க மேம்?
01:08
Speaker B
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
01:09
Speaker A
நலமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல.
01:19
Speaker A
நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க. அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாசஸ் என்ன அப்படிங்கறத டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்கலாம்.
02:01
Speaker B
ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு. பேசிக் கோர்ஸ் ஆஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம். சோ எப்படி நான் ஸ்டுடென்ட்ஸ சூஸ் பண்றோம் அப்படின்னா வர்றவங்க வந்து நான் எடுத்த உடனே ஆஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா? நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா? நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா? அதெல்லாம் கிடையாது. இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம். மைண்ட ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும். ஏன்னா ஆஸ்ட்ராலஜியை பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல். சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும். இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும். ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.
03:26
Speaker B
இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம். இப்பதான் நட்சத்திர கிளாசஸ் முடிச்சோம். சோ இந்த கிளாசஸ் போயிட்டு இருக்கிறப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும். சோ இப்ப வர ஸ்டுடென்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும் நம்ம ஸ்டுடென்ட்டா இருக்கிறப்போ.
03:42
Speaker B
சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட். ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே நான் இன்னும் ஒரு 15 பேத்தை கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல. சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம். ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை. ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிளா இருக்கணும் அப்படிங்கறதுதான்.
04:05
Speaker A
ஓகே 20-ல ஆரம்பிச்சு எப்ப முடியுது மேம் வகுப்புகள்?
04:08
Speaker A
மூன்று மாத வகுப்புகள்.
04:09
Speaker B
மூன்று மாத வகுப்புகள் தான். இது மார்ச், ஏப்ரல், மே. அதாவது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கிளாசஸ் வாரத்துல ஒரு நாள் கிளாசஸ் வைக்கிற மாதிரி. ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம். பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே ரெண்டு கிளாஸை ஒரே கிளாஸா மாத்திடலாம் அப்படிங்கற மாதிரி.
05:04
Speaker A
இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க. அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க. நன்றி.
05:15
Speaker A
மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம். சோ வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பல முறை பேசி இருக்கிறீங்க. நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல கூட நீங்க பேசி இருக்கிறீங்க. இந்த முறை வந்திருக்கிறது என்ன சனிப்பெயர்ச்சி? என்ன மாறுபாடு இருக்கு? அதிலிருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.
05:32
Speaker B
சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான். அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறது. கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது. பலாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம். அதெல்லாம் அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.
06:42
Speaker B
தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல. சோ இது வந்து கூட்டாதான் வந்தது. ராஜாக்களுக்காக வந்தது. அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது. சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான். அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது. நம்மளுடைய கிராவிடேஷனல் புல்லுன்னு ஒன்னு இருக்குது. கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்கு. லைட்டா நம்மளுடைய குளோபும் டில்ட் ஆயிடுச்சுங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு.
07:06
Speaker B
சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை. அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது. இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லிருப்போம் குருப்பெயர்ச்சில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது. சோ இதெல்லாம் என்னன்னா அதான் குரு அங்கேயேதான் இருக்குது. நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான். சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி. ஒரு நிமிஷம் மிஸ் பண்ணா கூட எல்லாமே மாறும். லக்னம் எல்லாமே மாறிடும். சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும். மெதுவாதான் மூவ் ஆகும் அப்படிங்கறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான். இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வர்றாரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்கும். இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.
08:34
Speaker B
சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான். அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும். என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும் நம்ம தவிர்த்து தனிமனிதனுக்கு என்ன ஆகும் அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி பெருசா கிடையாது. ஏன்னா அடுத்தது குருப்பெயர்ச்சி.
08:52
Speaker B
சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவார்னு எல்லாம் ஒன்னு இருக்குது. அப்ப வந்து குரு குரு வர்றப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆவாருதான். குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆவாருங்கறதுனாலதான் இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம். ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனிப்பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கறதுனால அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.
09:12
Speaker A
சோ கடகத்துல நம்ம ராசியை பத்தியும் பேசிட்டோம். விஜய் ரசிகர்களுக்காக விஜயின் தொண்டர்களுக்காக அதைப்பத்தி நம்ம பேசியாச்சு. அடுத்த கட்டமாக சிம்ம ராசி நேயர்களுக்கு இது எப்படி இருக்கும் மேம் சனிப்பெயர்ச்சி?
10:09
Speaker B
சிம்ம ராசி நேயர்களுக்கு ஆல்ரெடி அவங்களுக்கு வந்து அஷ்டமத்துல சனி வந்து திருக்கணிதப்படி வந்தாச்சு. இப்ப வாக்கிய பஞ்சாங்கப்படி இப்பதான் வந்திருக்கு அப்படிங்கறப்ப இன்னுமே அவங்க வந்து லைஃப் பார்ட்னர்கிட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அதே மாதிரி கூட இருக்கிற ஃபேமிலி மெம்பர்ஸ்ட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். நிறைய அழுத்தங்கள், மன அழுத்தங்களை ஃபேஸ் பண்ணி ஹெல்த் எல்லாம் கொஞ்சம் ஸ்பாயில் ஆகி ஒரு போராட்டம் போராடி என்னெல்லாம் இழக்கணுமோ எல்லாம் இழந்து லைஃப் லெசன்ஸ் அப்படிங்கறது நிறைய அவங்களுக்கு வந்து லைஃப் லெசன்ஸ் அப்படிங்கறது நிறைய அவங்க வந்து கத்துட்டு இருக்கிற டைம் ஜோன்லதான் அவங்க இருக்காங்க. இன்னுமே லேர்னிங் லேர்னிங் ஃபேஸ்லதான் அவங்க இருக்காங்க. இன்னுமே அவங்க சைலன்ட்டாதான் இருக்கணும்ங்கறதே இருக்குது. நிறைய மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ணுவாங்க. ரிவர்ஸ் திங்கிங் அதிகமாவே ஆகும். ஒருத்தங்க போய் நல்லதே சொன்னா கூட அதை அக்செப்ட் பண்ற இடத்துல அவங்க இருக்க மாட்டாங்க. இப்ப எப்படி இருக்கும்னா நான் எல்லாத்தையுமே இழந்துட்டேன். நான் என்ன தப்பு பண்ணேன்? என்னை சுத்தி ஏன் இப்படி நடந்துச்சு அப்படிங்கறப்போ பர்சனல் லைஃப்ன்னு பார்த்தா இந்த தடவை எப்படி இருந்திருக்குன்னா ஆல்ரெடி திருக்கணித டைம் பீரியட்ல இருந்தே சிம்மத்துல இருந்தவங்களுக்கு எல்லாம் இந்த ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் அதிகமா சண்டை போட்டவங்க, லீகல் இஸ்யூஸ் வரைக்கும் போனவங்க எல்லாம் சிம்மம் ஜாஸ்தி.
11:44
Speaker A
ஓகே.
11:44
Speaker B
சோ எந்த சிம்மம் எல்லாம் வந்து கொஞ்சம் சரண்டரிங் மோட்ல இருந்தாங்களோ அவங்க மட்டும் அப்படியே சத்தமில்லாம ஓட்டிட்டு இருந்த மாதிரி இருக்கும். அதாவது அவங்க வைஃப்கிட்ட யாரெல்லாம் கொஞ்சம் சரண்டரிங் ஜோன்ல இருந்தாங்களோ அவங்க ஓகே. அது ஹஸ்பண்ட் ஆகட்டும் வைஃப் ஆகட்டும்.
12:07
Speaker B
யாரெல்லாம் கொஞ்சம் வாய்ஸ் ரைஸ் பண்ணி பேசியிருப்பாங்களோ ஒரு டிபேட் மாதிரி ஸ்டார்ட் ஆயிருக்குமோ அது பெரிய லெவல்ல ட்ரிகர் ஆயிருந்திருக்கும்.
12:14
Speaker A
ஓ.
12:14
Speaker B
சோ அவங்களுக்கு ஆல்ரடி நான் சொல்லிட்டு இருந்த விஷயம் என்னன்னா கொஞ்சம் அமைதியா இருங்க சைலன்ட்டா இருங்க. என்ன பண்றீங்கன்னே தெரியாம ஏதாவது ஒன்னு பண்ணிடுவீங்க அப்படிங்கறதுதான். சோ இப்ப எப்படி இருக்குன்னா அதோட பின்விளைவுகள் இன்னும் ஒரு க்ளோஷர்க்குள்ள இன்னும் அவங்க வரல அப்படிங்கறப்போ இந்த வருடமும் அமைதியாவே இருந்தர்றது நல்லது. இன்னும் எதுவும் ஓஞ்சு போகல. பட் ஸ்டில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா அவங்களுக்கு குரு காப்பாத்துற ஒரு ஜோன்க்குள்ள வர்றதுனால பிரீதிங் ஸ்பேஸ் அப்படிங்கறது அவங்களுக்கு இருக்கிறப்போ ரொம்ப பெரிய தண்டனைகளா இருக்காது. தண்டனைகள் வந்து சாஃப்டன் ஆகும். பட் தண்டனைகள் உண்டுதான் பட் நீங்க மேனேஜ் பண்ணிடுவீங்க ஹேண்டில் பண்ணிடுவீங்க.
13:29
Speaker A
ரொம்ப மோசமானதா இருக்காது சூழல்.
13:29
Speaker B
அதாவது ஜெயிலுக்கு போயிருவோம் அப்படின்னு நினைச்சிட்டு இருக்கிறவங்க பெனால்டி கட்டுவாங்க. பெனால்டி கட்டினாலுமே அந்த பெனால்டி கட்டுறதே அவங்களுக்கு ஒரு பெரும்பாடா தான் இருக்கும். அதே மாதிரி இப்ப குழந்தைகள் எல்லாம் இருக்காங்கன்னா ஒபிசிட்டி ஆயிடக்கூடாது. ஒபிஸ் ஆயிடக்கூடாது. ஹெல்த்ல ரொம்ப கவனம். பாடி பெருசாயிடக்கூடாது. ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிஸ்ல எதையா எதிலயாவது நீங்க போயிட்டீங்க அப்படின்னா சனி கொஞ்சம் விடும். அந்த அஷ்டமத்து சனி அதுதான் பண்ணும். உடல் உழைப்பை போட வைக்க தூண்டும். இல்லைன்னா வயித்துல பிரச்சனை கொடுத்து டைஜெஷன் ப்ராப்ளம் கொடுத்து அந்த ஃபுட் கிரேவிங்ங்கற ஒரு விஷயத்துல கொண்டு போய் விட்டு நோய் அதிகப்படுத்தற மாதிரி ஆயிடும் அப்படிங்கறதெல்லாம் ஒன்னு இருக்குது. அப்ப சிம்மத்துல இருக்கிறவங்க இன்னும் திருமணம் ஆகாம இருக்காங்கன்னா இவங்க எல்லாம் திருமண வாழ்க்கைக்குள்ள போகலாம். அவ்வளவு சீக்கிரம் சிம்மம் வந்து திருமணத்துக்கு எல்லாம் அக்செப்ட் பண்ணவே மாட்டாங்க அப்படிங்கறதெல்லாம் ஒன்னு இருக்கும். சோ குரு வர்றதுனால அந்த டவுட் ஃபியர் எதுவும் இல்லாம திருமண பந்தத்துக்குள்ள அவங்க போகலாம் அப்படிங்கறதுதான்.
14:19
Speaker A
சிம்மத்தினுடைய வழிபட வேண்டிய தெய்வங்கள்னு எதை சொல்ல விரும்புறீங்க?
15:02
Speaker B
இப்ப வந்து சிம்ம ராசிக்காரங்க வழிபட வேண்டிய தெய்வம் பார்க்கிறப்போ அவங்க திருக்குள்ளிக்காடு.
15:08
Speaker A
திருக்குள்ளிக்காடு.
15:09
Speaker B
திருக்குள்ளிக்காடு சனீஸ்வரர் கோயிலுக்கு போய் அவங்க வழிபாடு பண்றாங்க அப்படின்னா ஏன்னா இவங்களுக்கு வந்து திரு திருநள்ளாறு ஆகாது.
15:15
Speaker A
ஓ திருநள்ளாறு ஆகாது.
15:16
Speaker B
ஆகாது. ஓகே. சோ இவங்க திருநள்ளாறு எல்லாம் போகக்கூடாது. போ போனா தானே போய் சிக்கிக்கிட்ட மாதிரிதான் அது.
15:22
Speaker A
ஓ போனாலே சிக்கிக்கிறது அது.
15:23
Speaker B
ஆமா ஆமா. இப்ப எல்லாத்துக்குமே வந்து திருநள்ளாறு செட் ஆகாதுங்கறதெல்லாம் ஒன்னு இருக்குது. சோ அப்ப அங்க திருக்குள்ளிக்காடுல இருக்கக்கூடிய சனீஸ்வர பகவான்கிட்ட இவங்க கொஞ்சம் சேஃபாதான் இருப்பாங்க. அங்க எந்த பிரச்சனையும் இருக்காது. அங்க போயிட்டு அவங்க வழிபாடு பண்ணிட்டு வராங்கன்னா கொஞ்சம் ஒரு அதான் சொல்றேன் மைண்ட் வந்து ஒரு பேலன்சிங் லெவல்க்குள்ள அவங்க போவாங்க.
15:40
Speaker B
பெருசா பயந்துக்கணும்ங்கற ஒரு அவசியம் கிடையாது. சனினாலே ஒரு கரெக்ஷன் பண்ண வர்றவர்தான். என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கறதுக்குதான் இப்ப வர்றோம்ங்கறப்போ உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான். அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார். இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.
15:58
Speaker B
சோ அதனால தவறுகளை திருத்திக்கூடியதுதான் திருத்தறதுதான் வந்து சனிப்பெயர்ச்சி.
16:43
Speaker A
சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.
16:44
Speaker B
பயப்பட வேண்டாம். மாற்றம் தான். மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும். அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.
16:56
Speaker B
ஓ சனி வந்து ஒருத்தவங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது. சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டேதான் இருக்கும்ங்கறப்போ அப்ரேடேஷன் தான். சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க. இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார் அப்படிங்கறதை நீங்க தெரிஞ்சுக்கணும். அந்த மாதிரி பார்க்கலாம்.
17:15
Speaker A
நன்றி.
17:16
Speaker A
நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.
Topics:சிம்மம் ராசிசனிப்பெயர்ச்சி 2026ஆஸ்ட்ராலஜி வகுப்புகள்ஜோதிடம்வாக்கிய பஞ்சாங்கம்திருக்கணித பஞ்சாங்கம்சனி கிரகப் பெயர்ச்சிமன அழுத்தம்குடும்ப பிரச்சனைகள்ஜீவிதா சுரேஷ்குமார்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →