Rishabam | ரகசியங்களை பாதுகாப்பது அவசியம்! | Jeevitha S… — Transcript

ரிஷப ராசி பெண்களின் வாழ்க்கை, செல்வம் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பு பற்றிய விவரணம் மற்றும் பாபநாச ஹில்ஸ் வழிபாட்டு முறைகள்.

Key Takeaways

  • ரிஷப ராசி பெண்கள் குடும்ப செழிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
  • செம்பு, வெள்ளி மற்றும் தங்கம் பொருட்கள் செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும்.
  • பாபநாச ஹில்ஸ் அருகே உள்ள குபேரர் குகை வழிபாடு ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்களை தரும்.
  • வழிபாட்டில் நியாயமான வேண்டுதல்கள் மற்றும் நன்றி செலுத்துதல் அவசியம்.
  • சித்தர்கள் வழிபாட்டு முறைகள் குடும்ப வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

Summary

  • ரிஷப ராசி பெண்கள் வீட்ல அழுகுற போது செழிப்பு குறையும் மற்றும் வறுமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • செம்பு மற்றும் வெள்ளி பொருட்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பை கொண்டு வரும்.
  • ரிஷப ராசி பெண்கள் சூஸ் செய்யும் விஷயங்கள் சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையவை மற்றும் அதனால் கம்ஃபர்ட் மற்றும் அழகு பொருட்கள் முக்கியம்.
  • ரிஷப ராசி பெண்கள் ரகசியங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர், அவர்கள் சோம்பேறி அல்லது அப்செட் ஆகினாலும் மீண்டும் முன்னேறுவார்கள்.
  • பெண்கள் மற்றும் குடும்ப உறவுகள் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான பாத்திரம் வகிக்கின்றன.
  • பாபநாச ஹில்ஸ் அருகே உள்ள குபேரர் குகை வழிபாடு ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் செழிப்பை வழங்கும்.
  • குபேரர் குகையில் வழிபாடு செய்யும் முறைகள் மற்றும் நியாயமான வேண்டுதல்கள் முக்கியம், பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
  • சித்தர்கள் வழிபாட்டு முறைகள் மற்றும் மந்திரங்கள் மூலம் குடும்ப செழிப்பை உறுதி செய்கின்றனர்.
  • ரிஷப ராசி பெண்கள் மற்றும் குடும்பங்கள் வழிபாட்டில் நன்றி செலுத்துதல் மற்றும் முறைகளை பின்பற்றுதல் அவசியம்.
  • இந்த வழிபாட்டு முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குடும்ப செழிப்பு மற்றும் நன்மைகளை அதிகரிக்கும்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
இந்த ரிஷப ராசி பெண்கள் வீட்ல அழுகுறாங்க அப்படின்னா சளிப்பு குறைஞ்சிரும், ரொம்ப ரொம்ப குறைஞ்சிரும், வறுமை நிலைக்கே கொண்டு போயிரலாம் விட்ரும்.
00:11
Speaker A
ஒரு செம்பு போட்டா மட்டுமே வெள்ளி ஃபர்ஸ்ட் அவங்ககிட்ட இருக்கும், இந்த செம்பும் வெள்ளியும் வந்ததுக்கு அப்புறம்தான் தங்கம் தங்கும்.
00:21
Speaker A
இயற்கையாவே கலையா இருக்கக்கூடியவங்க பார்த்தாலே கலையா இருப்பாங்கங்கிறதுதான் ரிஷபம், சும்மா ஒரு அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்னடா இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்காங்கன்னு நினைச்சா விழுந்து படுத்துருவாங்க என்னன்னே அவங்களுக்கு தெரியாது அப்படிங்கறதெல்லாம் இருக்கு.
00:37
Speaker A
அப்போ முடிஞ்ச அளவுக்கு ரகசியங்கள் இந்த ரிஷபம் வந்து பாதுகாத்துட்டே இருக்கணும்.
00:41
Speaker B
ரிஷப ராசி நேயர்கள் இவங்களுக்கு வந்து பணம் சேரணும், எப்பவுமே வந்து அவங்க செல்வ செழிப்போட வாழனும் அப்படின்னா என்னலாம் பண்ணலாம்?
00:48
Speaker A
ரிஷப ராசிக்காரங்களுக்கு வந்து எப்பவுமே ரொம்ப லக்ஸூரியஸா வாழனும்ங்கிறது அவங்களுக்கு எப்பவுமே ஆசைகள் உண்டு, கம்ஃபர்டபிளா இருக்கணும், கம்ஃபர்ட் ஜோன்ல இருக்கணும் அப்படின்னு.
00:59
Speaker A
இவங்க சூஸ் பண்றது எல்லாமே வந்து சுக்கிரன் சம்பந்தப்பட்டது லைஃப்ல சூஸ் பண்றாங்க, சுக்கிரன்கிறது வெள்ளி ஆகட்டும், டிரஸ் ஆகட்டும், பியூட்டி ஐட்டம்ஸ் ஆகட்டும்.
01:45
Speaker A
இந்த மாதிரி விஷயங்கள் டச் பண்றப்போ அவங்க படிப்பு கூட கொஞ்சம் அந்த ஏஸ்தெடிக் சென்ஸோட ஒன்ன தொடுறாங்க அப்படின்னா அவங்களுக்கு அது குரோத் கொடுத்துரும், அப்போ அவங்ககிட்ட வெள்ளி எல்லாம் இருக்கணும், வெள்ளி இருக்கணும், செம்பு இருக்கணும், செம்பு தங்கம் வெள்ளி இருக்கணும்.
01:59
Speaker A
அப்போ ஒரு செம்பு போட்டா மட்டுமே வெள்ளி ஃபர்ஸ்ட் அவங்ககிட்ட இருக்கும், இந்த செம்பும் வெள்ளியும் வந்ததுக்கு அப்புறம்தான் தங்கம் தங்கும்.
02:07
Speaker B
ஓ.
02:08
Speaker A
ரிஷபத்துக்கு, ஏன்னா ரிஷபத்துக்கு அவ்வளவு சீக்கிரம் தங்கம் வாங்குவாங்க, தங்கம் எல்லாம் வாங்குவாங்க, ஆனா அது பாடில போடுறப்ப சம்டைம்ஸ் அது எங்கேயாவது காணாம போறதோ, இல்ல போய் அடமானத்துக்கு போறதோ இந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ்லாம் மோஸ்ட் ஆஃப் தி ரிஷபத்துக்கு நடக்கும் அப்படிங்கறப்போ அதை காக்குறதே கையில போடுற ஒரு காப்பாதான் இருக்கும்.
02:27
Speaker A
இவங்க வந்து ரிஷபம் பெண்கள் அப்படின்னுலாம் எடுத்துக்குறோம்னு வச்சுக்கோங்களேன்.
02:37
Speaker A
அவங்க வந்து ஆக்டிவாவே இருக்குறாங்க, காலையில அவங்களுடைய காலையிலதான் எல்லாமே முடிவு பண்ணும் அப்படிங்கிறது, இவங்க கொஞ்சம் சோம்பேறி ஆயிட்டாங்க, இல்ல ஒரு மாதிரி அப்செட் ஆயிட்டாங்க அப்படின்னா அவங்களுக்கு திரும்பி எல்லாம் ஃபர்ஸ்ட்ல இருந்தே செய்யற மாதிரியே இருக்கும், திருப்பி அவங்களோட எனர்ஜி எல்லாம் ட்ரைன் அவுட் ஆகி திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்தே நடக்குற மாதிரியே இருக்கும், இந்த ரிஷப ராசி பெண்களுக்கு வந்து நல்லா ஒரு சிரிச்ச முகமாவே மேக்ஸிமம் இருப்பாங்க, ஏன்னா அவங்களோட எனர்ஜி மத்தவங்க எல்லாத்துக்குமே பாசிட்டிவா பரவும்னு ஒன்னு இருக்கு, இந்த ரிஷப ராசி பெண்கள் வீட்ல அழுகுறாங்க அப்படின்னா செழிப்பு குறைஞ்சிரும்.
03:41
Speaker B
ஓ.
03:42
Speaker A
ரொம்ப ரொம்ப குறைஞ்சிரும், வறுமை நிலைக்கே கொண்டு போயிரலாம் விட்ரும்.
03:46
Speaker A
ரிஷபத்துக்கு, சோ இந்த ரிஷபத்துக்கு வந்து இந்த ரிஷபம் முக்கியமா நான் ஏன் இது பெண்கள் பெண்கள் சொல்றேன்னா மோஸ்ட்லி ரிஷப ஆண்கள்னு பாக்குறப்ப அவங்க கொஞ்சம் சைலன்ட், அவங்களுடைய லைஃபே வேற அதாவது ரிஷபம்னாலே பெண் சாபம் இருக்கும்னு சொல்லுவாங்க, ஒரு பெண் சாபத்தை யாரும் அந்த ஒரு குடும்பம் வாங்கி இருக்கோ அதுல ரிஷபம் பிறப்பாங்க.
04:19
Speaker A
அப்போ பெண்கள் யாரையும் வந்து நோகடிக்க கூடாது, பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே ஒரு இஷ்ட தெய்வம் கூட ஒரு பெண் தெய்வத்தை வச்சுக்கிட்டாங்க அப்படின்னா அந்த ஃபேமிலி கொஞ்சம் செழிப்பா இருக்கும், பெண் குழந்தைகளுக்கு ஃபேவர் ரிஷபம் பண்ண பண்ண பண்ண அந்த ஃபேமிலி செழிப்பாகும்.
05:00
Speaker A
அதே மாதிரி ரிஷப ராசி பெண்கள் வந்து செடி எல்லாம் வளர்க்குறாங்கன்னு வச்சுக்கோங்களேன் நல்லா வளரும், ஏன்னா அது வந்து பூமி தத்துவத்தை வாங்கிட்டு வந்திருக்கு.
05:12
Speaker A
இந்த செடி வளரறத வச்சே இவங்களுடைய வாழ்க்கை செழிப்புன்ன அப்படிங்கறத நம்ம சொல்லிடலாம், சிலரோட கைக்கு வளரவே வளராது அப்படின்னா இந்த பூமியில எத்தனை வகையான பூமி அமைப்புகள் இருக்கு பாறை இருக்கு, மண் இருக்குன்னு ஒவ்வொரு வகையான பூமி அமைப்புகள்.
05:20
Speaker A
அப்போ இவங்க வந்து அந்த பட்டுப்போன ஒரு பூமி அமைப்பு அப்படின்னுலாம் ஒன்னு இருக்கு இல்லையா அதெல்லாம் அப்படிலாம் இருக்கப்போ திருப்பி அதை அவங்க சரி பண்ணனும்னா அவங்களுடைய எண்ணங்கள் நிறைய மாத்தணும், வழிபாட்டு முறைகள் மாத்தணும், அவங்க அக்கம் பக்கத்துல இருக்கிற எனர்ஜிஸ் கூட ரிஷபத்தை டிஸ்டர்ப் பண்ணும்.
05:36
Speaker A
பக்கத்துல இருக்கிற யாரு ஏன்னா திஷ்டி இவங்களுக்கு எப்படி படும் அப்படின்னா இவங்க வந்து இயற்கையாவே கலையா இருக்கக்கூடியவங்க பார்த்தாலே கலையா இருப்பாங்கங்கிறதுதான் ரிஷபம், சும்மா ஒரு அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்னடா இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்காங்கன்னு நினைச்சா விழுந்து படுத்துருவாங்க என்னன்னே அவங்களுக்கு தெரியாது அப்படிங்கறதெல்லாம் இருக்கு, அப்போ முடிஞ்ச அளவுக்கு ரகசியங்கள் இந்த ரிஷபம் வந்து பாதுகாத்துட்டே இருக்கணும்.
05:59
Speaker A
சத்தமே இல்லாம முன்னேறிட்டு போய்க்கிறது ஏன்னா நிறைய கஷ்டங்கள்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க ரிஷபம் வெளிய தெரியாது, எக்காரணத்தை கொண்டும் எப்பவுமே அது எந்த வயது பெண்களா இவங்க வாழ்க்கையில வந்தாலும் சரி அவங்க யாரா இருந்தாலும் சரி அவங்க வீட்ல வேலை செய்யறவங்களோ, லைஃப் பார்ட்னரோ, அம்மாவோ, பாட்டியோ யாரா இருந்தாலும் சரி அவங்ககிட்ட ஒரு நல்ல வார்த்தை அப்படிங்கறது இந்த ரிஷபம் வாங்கிரனும்.
06:58
Speaker A
வாங்கிட்டாலே இவங்களுக்கு குரோத் அப்படிங்கறது வெல்த்ங்கறது ரொம்ப நல்லா இருக்கும்.
07:03
Speaker B
சூப்பர் சூப்பர் மா, அதாவது ரிஷப ராசி மேக்ஸிமம் வந்து பெண்களை மையப்படுத்தியே இருக்கக்கூடிய ஒரு அற்புதமான ராசியா இருக்குதுன்னே சொல்லலாம், சோ இப்ப நீங்க சொன்னீங்க அவங்க வந்து ரகசியமா இருக்கிறது வந்து பெட்டர் அப்படின்னு சொல்லிட்டு இவங்களுக்கு வந்து வழிபாட்டு முறைகள் வந்து எந்த மாதிரி இருக்கும் எந்த ஸ்தலத்துக்கு போனா இன்னும் சிறப்பா இருக்கும்?
07:19
Speaker A
இவங்க வந்து திருநெல்வேலி பக்கத்துல இருக்க பாபநாச ஹில்ஸ் இருக்கும், அந்த பாபநாச ஹில்ஸ்ல அந்த மலையில வந்து குபேரர் குகைன்னு ஒரு குகை இருக்கு.
08:20
Speaker B
ஓகே.
08:20
Speaker A
அந்த குபேரர் குகை வந்து எப்படின்னா சித்தர்கள் வந்து அங்க குபேர சித்திக்காக வழிபட்டாங்கன்னே அது ஒரு குகை அது, இந்த குகைக்கு இவங்க போறாங்க அப்படின்னா சொத்து சேர்றது, எல்லா வகையான செழிப்பு இவங்களுக்கு வரது அதாவது இதை எப்படி இருக்கும்னா ரிஷப ராசிக்காரங்க பர்டிகுலரா இந்த குகையில போய் வழிபாடு பண்ணும் பொழுது இவங்களுடைய ஃபேமிலி ஜெனரேஷன்ஸே செழிப்போட இருப்பாங்கங்கிறதுதான், சித்தர்களுடைய ஆசீர்வாதம் அபரிதமா இருக்கும் அந்த கோயில்ல.
08:55
Speaker A
ஏன்னா சித்தர்களே வழிபாட்டு முறைகள் பண்ணி மந்திரம் உருவேற்ற பண்ணின ஒரு இடம், குபேர சித்தி.
09:15
Speaker A
ஆண்டியே போனாலும் அங்க அரசனாவாங்கிறதுதான் அந்த குகையோட ஒரு ரகசிய அமைப்பே அங்க அதுதான், அப்போ அங்க போய் எப்படி வழிபாடு பண்ணுவாங்கன்னா ஒரே ஒரு காயின், ஒரு காயினை வச்சு அந்த காயின்ல வழிபாடு பண்ணனும், அந்த குகைக்குள்ள போயிட்டு அந்த காயினை வந்து எங்கேயாவது ஒரு இடத்துல அங்க வச்சிரணும், அதை வச்சிட்டு ஒரு காயினை வச்சிட்டு என்ன வேணுமோ அந்த வழிபாட்டு முறைகளை கரெக்டா சொல்லணும்.
10:14
Speaker A
அதுக்காக நம்ம ஒரு படத்துல வர மாதிரி கை பிடிச்சிட்டு எனக்கு இது வேணும் அது வேணும் அப்படிலாம் இல்ல.
10:18
Speaker A
நியாயமா நான் இந்த தொழில் பண்றேன் எனக்கு இது மூலமா ஒரு வருமானம் என் குடும்பம் செழிப்பா இருக்கணும் நாங்க நல்லபடியா செழிப்பா இருக்கணும் நல்லபடியா இருக்கணும் யாரையும் நாங்க துரோகம் பண்ணாம ஏன்னா இந்த சித்தர்கள் வழிபட்ட இடம், அப்போ உங்களுடைய வேண்டுதல் நியாயமா இருக்கணும்.
10:35
Speaker A
பேராசைகளா இருக்கக்கூடாது ஏன்னா நான் எல்லா செல்வமும் கிடைக்கும்னு நான் சொன்ன உடனே இஷ்டத்துக்கு கேட்கிறது அப்படிங்கறது இல்ல.
10:45
Speaker A
கேட்டது கிடைக்கும் ஆனா அது நிலைச்சிருக்கணும்ங்கற மாதிரியும் கேட்கணும்.
10:57
Speaker A
இந்த மாதிரி அந்த அந்த குகையில இருந்து எதையுமே எடுத்துட்டு வரக்கூடாது, ஏன்னா அந்த குகையில அவ்வளவு பொருட்கள் கிடைக்கும், ஒரு பொருள் எடுத்துட்டு வந்தாலும் குல நாசம் மாதிரிதான் அது, வேண்டுதல் நிறைவேறாது, ஏன்னா அங்க வந்து உங்களுக்கு அந்த கிரீடினஸ்னு சொல்றோம் இல்லையா அந்த அந்த மாதிரி விஷயங்கள்லாம் இருக்கக்கூடாது, அங்க போயிட்டு எதுக்கு போனோம் எனக்கு பணம் செழிப்பு வேணும்னு சொல்லி கேட்க போணும், யாருடைய பொருளுக்கும் அங்க ஆசைப்படக்கூடாது ஏன்னா எல்லாருமே அங்க காயின்ஸ் சொருகி வைக்கிறது சில பொருட்கள் சொருகி வைக்கிறது இப்படி எல்லாமே அந்த பொருட்கள் இருக்கும் அந்த இடத்துல.
12:06
Speaker A
ஏதோ ஒன்னு வந்து அந்த குகையில வந்து வச்சிட்டு போவாங்க, சோ இது நல்லா இருக்குன்னு சொல்லிட்டு நம்ம எடுத்துட்டு வந்துட்டோம் அப்படின்னா நம்ம சில படம்லாம் பார்த்திருப்போம்.
12:14
Speaker B
ஓகே.
12:14
Speaker A
இந்த மரகத நாணயம் படம்லாம் பார்த்திருப்போம், போய் போய் அந்த மரகத நாணயத்தை எடுத்துட்டு வரப்ப பேய் கூடயே வரும்ங்கற மாதிரி.
12:19
Speaker A
இது வந்து ஒரு இது வேற மாதிரியான ஒரு எனர்ஜி.
12:22
Speaker A
திருப்பு உங்களுக்கு தரித்திரம் கூட வந்துரும்.
12:23
Speaker A
சோ அங்க உங்களுடைய பிரார்த்தனைகள்ல மட்டுமே அங்க விட்டுட்டு வரணும் அப்படிங்கறதுதான், பிரார்த்தனைலாம் நிறைவேறினதுக்கு அப்புறமா திரும்ப போய் அதே மாதிரி ஒரு காயின் அங்க வச்சு நேத்திக்கடன் செலுத்துற மாதிரி போய் நன்றி சொல்லிட்டு வந்துரும்.
12:39
Speaker B
ஓகே.
12:40
Speaker A
அகைன் மறுபடியும் போயிட்டு வரணும்.
12:41
Speaker A
போயிட்டு ஏன் நான் இதை சொல்றேன்னா.
12:42
Speaker A
ரிஷபம் வந்து போற போக்குல நன்றி கடந்து போயிருவாங்க.
12:46
Speaker B
ஓகே.
12:47
Speaker A
மறந்து இல்ல.
12:48
Speaker A
கடந்து.
12:49
Speaker A
கடந்துருவாங்க.
12:50
Speaker A
கடக்கக்கூடாது.
12:51
Speaker A
ஏன்னா சித்தர்கள் அதை எல்லாமே கவனிப்பாங்க.
12:53
Speaker A
எதனால நம்ம இப்படி செழிப்பானோம் ஏன்னா ரிஷபத்துக்கு வந்து ரெண்டு கேட்டகிரி.
13:02
Speaker A
ஒன்னு எப்படி நான் அந்த கோயிலுக்கு போயிட்டு வந்தனாலன்னு சொல்ல முடியாது.
13:12
Speaker A
ஆனா என்னாலதான் நான் குரோத் ஆனேங்கிற மாதிரி ஒரு தாட் திடீர்னு வந்துரும், நான் தான அந்த உழைப்பை போட்டேன், அவங்கதான் அந்த உழைப்பை போட்டாங்க ஆனா அந்த உழைப்பை போட்டு செழிப்பை உண்டாக்கினது அங்க இருக்க ஒரு சக்தி ட்ரிகர் பண்ணி விட்டதுனாலதான், நேத்திக்கடனை ரொம்ப டிலே பண்ணக்கூடாது ஒரு ஒரு வருஷத்துக்குள்ளார திருப்பி அந்த குகைக்கு போயிட்டு நேத்திக்கடனை அவங்க செலுத்திட்டு வந்துரும்.
13:27
Speaker B
ஓகே இப்போ குபேரர் குகைன்னு சொன்னீங்கல்லமா.
13:30
Speaker B
பொதுவாகவே எல்லாருக்குமே வந்து குபேரரை வச்சு வழிபடுறது வந்து பணவரவு கொடுக்கும்னு நம்புறாங்க, சோ நம்ம இப்ப நீங்க சொன்ன மாதிரி ரிஷப ராசி என்ன பண்ணுவாங்கன்னா நம்ம எதுக்கு அவ்வளவு தூரம் போகணும் குபேரரை நம்ம வீட்லயே வச்சு வழிபடலாம் அப்படின்னு சொல்லிட்டு பண்ணுவாங்க.
13:43
Speaker B
சோ அது சரியான முறையா இருக்குமா?
13:44
Speaker A
குபேரர் வந்து நம்ம வீட்ல லட்சுமி குபேரர்லாம் வச்சு வழிபாடு பண்ணலாம் ஏன்னா அவங்க வந்து சுக்கிரன் லட்சுமி குபேரா ஐஸ்வர்ய பிராப்தம் கொட்டட்டும் கொட்டட்டும் அப்படின்னுலாம் வேண்டிக்கலாம்.
13:54
Speaker A
பட் சில இடங்களுக்கு போறப்போ ரிஷபத்துக்கு இயற்கையாவே டிராவல் பண்ணுனாங்கன்னா லைஃப் நல்லா இருக்கும்.
14:03
Speaker A
ஏன்னா அவங்க நகரவே மாட்டாங்க, அவங்க ஒரு இடத்துக்கு போறாங்கன்னா பிரண்ட்ஸோ ஃபேமிலியோ ரொம்ப புஷ் பண்ணி.
14:12
Speaker A
ஆசை இருக்கும் நிறைய இடத்துக்கு போகணும் வரணும்ங்கிற ஆசை எல்லாம் இருக்கும் பட் பாடி மூவ் ஆகாதுங்கறதெல்லாம் நிறைய ரிஷபத்துக்கு இருக்கும், இவங்க பிசினஸே கூட ஒரு ஒரு டெக்ஸ்டைல் பிசினஸ் துணி பிசினஸ் எந்த ஆர்னமென்ட் பிசினஸ் எது பண்ணுனாலும் சரி அவங்க தனியா கடையே வச்சிருந்தாலும் சரி எங்கேயாவது டிராவல் பண்ணி எக்ஸிபிஷன் மாதிரி அவங்களுடைய பொருளை தூக்கிட்டு போயிட்டு இன்னொரு இடத்துல போயிட்டு சேல்ஸ் பண்ணிட்டு திருப்பி கொண்டு வராங்கனாலே அவங்களுக்கு செழிப்பு.
15:00
Speaker A
ஏன்னா லட்சுமி மாறிக்கிட்டே இருக்கும், லட்சுமி வந்து டிராவல் பண்ணனும், ஏன்னா இவங்கலாம் லட்சுமி, ரிஷபம் வந்து லட்சுமி, சோ இந்த பொருள் எங்கேயாவது போயிட்டு போயிட்டு வரப்பதான் திருப்பி லட்சுமி வந்து தங்கும் இல்லன்னா லட்சுமி கிளம்பிடும்.
15:20
Speaker B
ஓகே.
15:21
Speaker A
இதுவும் அப்படி ஏன்னா அவங்களுக்கு எல்லாத்தோடய பணமும் உள்ள வரணும், கையில காசு வாங்கணும் இவங்க மத்தவங்க கிட்ட இருந்து வாங்க வாங்கதான் செழிப்பு.
15:29
Speaker B
ஓகே, பண்ணக்கூடாத விஷயங்கள் ஏதாவது இருக்கா?
15:33
Speaker A
பண்ண விஷயத்துல மட்டும்.
15:34
Speaker A
பண்ணக்கூடாத விஷயங்கள் வந்து வெள்ளி விக்க வேண்டாம்.
15:37
Speaker B
ஓகே.
15:38
Speaker A
வெள்ளியை சேர்க்கணும்.
15:40
Speaker A
தங்கம் இவங்க கிட்ட இருந்து போகும், தங்கம் போகும், தங்கம் விப்பாங்க, தங்கத்தை எல்லாம் அடமானம்லாம் வைப்பாங்க.
15:45
Speaker A
என்ன பண்ணுனாலும் வெள்ளியை எப்படியாவது கொண்டு வந்து வச்சிரணும், ஒரு ஒரு ஒரு அமௌன்ட் வருது அதுல கொஞ்சமாவது ஒரு 10% 20%க்காவது ஒரு வெள்ளியை சின்ன காயினாவாவது இவங்க இவங்களுக்கு வந்து அந்த அஃபர்மேஷனே வெள்ளியிலதான், வெள்ளி காயின் வச்சுக்கிறது அவங்க பர்ஸ்ல வச்சுக்கிறது, இவங்க யார்ட்டயாவது போய் ஒரு வெள்ளி கிஃப்ட் பண்ணுனா கூட இவங்களோட லக்கு கொஞ்சம் குறைஞ்சிரும்.
16:47
Speaker B
ஓ வெள்ளியே வெளியில கொடுத்துறவே கூடாது.
16:48
Speaker A
வெள்ளிய இவங்க கையால யார்ட்டயாவது நீங்க ரிஷப ராசியா எனக்கு கொஞ்சம் வெள்ளி குடுங்க ஒட்டே ஒரு வெள்ளி குடுங்க நான் நல்லா இருக்கணும்னு குடுத்துட்டாங்கன்னா நல்லா இருப்பாங்க.
16:55
Speaker B
ஓகே ஓகே.
16:56
Speaker A
மத்தவங்க டெவலப் ஆவாங்க, அப்போ இவங்க வெள்ளி யாருக்கு கொடுக்கிறோம் கொடுக்கவே கொடுக்காதீங்கன்னு சொல்லல மனசார இவங்க என் பரவாயில்லைங்க என் மூலமா நல்லா இருக்கட்டும் அப்படின்னு நினைக்கிறப்போ நீங்க கொடுக்கலாம் ஆனா அது நாள்கிழமைகள்ல பார்த்து கொடுக்கிறது அப்படின்னு முடிஞ்ச அளவுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை யாருக்கும் வெள்ளி கிஃப்ட் பண்ணாம இருந்துட்டாங்கன்னா கூட ஓகே.
17:15
Speaker B
ஓகே வெள்ளியை மட்டும் அவாய்ட் பண்ணனும் வெளியில கொடுக்கிறத.
17:18
Speaker A
ஓகே தேங்க்யூ.
Topics:ரிஷபம்ரிஷப ராசி பெண்கள்செல்வம் சேர பரிகாரம்பாபநாச ஹில்ஸ்குபேரர் குகைவழிபாடு முறைகள்சித்தர்கள்செழிப்புதங்கம் வெள்ளி செம்புதமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →