Mesham | சத்தமே இல்லாம பண மழை கொட்டும் | Astrologer Jee… — Transcript

மேஷ ராசிக்காரர்களுக்கான பண வரவு மற்றும் செல்வம் சேர்க்கும் வழிபாட்டு பரிகாரங்கள், திரிபுர சுந்தரி மற்றும் ஸ்ரீ சக்கர பைரவி கோவில் வழிபாடு.

Key Takeaways

  • மேஷ ராசிக்காரர்கள் பண வரவு மற்றும் செல்வம் பெற வழிபாடுகள் முக்கியம்.
  • பணம் பற்றி வெளிப்படையாக பேசாமை பணம் சேர்க்க உதவும்.
  • திருவண்ணாமலை ஸ்ரீ சக்கர பைரவி கோவில் வழிபாடு பண வரவை மேம்படுத்தும்.
  • செவ்வாய் கிரக பிளாக்குகளை தீர்க்க வழிபாடுகள் அவசியம்.
  • திரிபுர சுந்தரி வழிபாடு ரகசியமாக கோவிலில் மட்டுமே செய்ய வேண்டும்.

Summary

  • மேஷ ராசிக்காரர்களுக்கு இயற்கையாக பணம் வரக்கூடிய அமைப்பு உள்ளது.
  • உணவு தட்டுப்பாடு மேஷ ராசிக்கு வராது, நல்ல தெய்வ பலம் எப்போதும் இருக்கும்.
  • பணம் பற்றி வெளியே பேசாமையே பணம் சேர்க்கும் முக்கிய அம்சமாகும்.
  • திரிசக்தி பீடம் மற்றும் ஸ்ரீ சக்கரம் போன்ற சக்தி மிக்க வழிபாடுகள் பண வரவுக்கு உதவும்.
  • திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ சக்கர பைரவி கோவில் வழிபாடு முக்கியம்.
  • செவ்வாய் கிரகத்தின் பிளாக்குகள் பண வரவை தடுக்கும், அதனை தீர்க்க வழிபாடுகள் அவசியம்.
  • திரிபுர சுந்தரி தாயாரின் ரகசிய வழிபாடு கோவிலில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
  • கோவில் வழிபாடு மற்றும் மரியாதை மூலம் பணம் மற்றும் செல்வம் நிலைத்திருக்கும்.
  • வீட்டில் சில வைப்ரேஷன்கள் இருந்தால் செழிப்பு மறுபடியும் வரும்.
  • உடம்பு சரியில்லாதவர்கள் கோவிலுக்கு நேரடியாக போக முடியாவிட்டாலும், வழிபாட்டு முறைகள் உள்ளன.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
மேஷ ராசிக்கு வந்து
00:00
Speaker A
இயற்கையாவே அவங்களுக்கு பணம் வரக்கூடிய அமைப்பு எப்பவுமே உண்டு உணவு தட்டுப்பாடுங்கறது மேஷத்துக்கு வராது இவங்களுக்கு நல்ல தெய்வ பலம் எப்பவுமே உண்டு என்ன பிரச்சனை அப்படின்னா
00:13
Speaker A
வார்த்தைகளை வெளியே சொல்ல சொல்ல திஷ்டி எப்பலாம் இவங்க பணத்தை பத்தி பேசாமையே இருக்காங்களோ பணம் சேர்ந்துகிட்டே இருக்கும்ங்கறதுதான் இவங்களுடைய அமைப்பு சத்தமே இல்லாம
00:24
Speaker A
திரிசக்தி பீடம் இருக்கக்கூடிய ஸ்ரீ சக்கரம் இருக்கு இல்லையா பயங்கரமான சக்தி
00:30
Speaker A
இங்க போயிட்டு வராங்க அப்படின்னா திடீர்னு கேஷ் ஃப்ளோ வர ஆரம்பிச்சிரும்
00:34
Speaker A
10 வருஷம் 15 வருஷம் எனக்கு பணமே வரல வந்துரும்
00:44
Speaker B
மேம் பொதுவாவே வந்து ஒரு விஷயம் என்ன அப்படின்னா பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்கிடலாமான்னு கேட்டா இல்ல சந்தோஷமா இருந்துடலாமான்னு கேட்டா கிடையாது
00:51
Speaker A
ஆனா பணம் இல்லைன்னா எந்த மனுஷனாலயும் நிம்மதியா இருக்க முடியாது அப்படின்ற காலமா மாறிப்போயிடுச்சு இல்லையா
00:56
Speaker B
சோ அதனால எல்லாருடைய எதிர்பார்ப்பும் பெருசா இப்ப இருக்கிறது என்ன அப்படின்னா நம்மகிட்ட பணம் சேர என்ன பண்ணனும் அப்படி இருக்கும்போது நம்ம என்ன பண்றது அப்படின்ற ஒரு சரியான வழிகாட்டுதல் இல்லை எல்லா மக்கள் கிட்டயும் சோ முதலாவதா வந்து ஒவ்வொரு ராசிகளுக்கும் நீங்க சொல்லக்கூடிய வழிபாட்டு தளங்கள் மூலமா வந்து அவங்களுக்கு வந்து நல்லது நடக்கட்டும் அப்படின்றது எங்களுடைய சேனல் சார்பா வந்து ஒரு ஆசை
01:42
Speaker B
சோ அதனாலதான் உங்ககிட்ட வந்திருக்கோம் இன்னைக்கு முதலாவதா இருக்கக்கூடிய ராசி நேயர்கள் பார்த்தீங்க அப்படின்னா மேஷ ராசி நேயர்கள்
02:05
Speaker B
இவங்களுக்கு வந்து பணவரவு எப்படி இருக்கும் அதுக்கு வந்து அவங்க என்னலாம் பண்ணலாம்
02:09
Speaker A
மேஷ ராசிக்கு வந்து இயற்கையாவே அவங்களுக்கு பணம் வரக்கூடிய அமைப்பு எப்பவுமே உண்டு
02:14
Speaker B
ஓகே
02:15
Speaker A
அப்படிங்கறதுதான் அதாவது உணவு தட்டுப்பாடுங்கறது மேஷத்துக்கு வராது
02:20
Speaker A
எப்படியாவது அதுதான் முக்கியம் ஒரு மனிதனுக்கு அவசியமானது வந்து உடுக்க உடை உண்ண உணவு அப்படிங்கறது இவங்களுக்கு அது எப்படியாவது அது நடக்கும்ங்கறதுதான் அதுவே ஒரு முதல் படிதான்
02:30
Speaker A
செழிப்பு செல்வ செழிப்பு அப்படிங்கறது இவங்களுக்கு பூர்வீக சொத்து அப்படிங்கறது மெதுவாதான் வரும் அப்படின்னு இருக்கு
02:38
Speaker A
என்னதான் ஒரு செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நல்லபடியா வளர்ந்திருந்தாலும் மேஷத்துக்கு இடையில இடைப்பட்ட வயதுன்னு வரப்போ எல்லாத்தையும் இழக்கக்கூடிய ஒரு அமைப்போ இல்லைன்னா எங்கயாவது பின்தங்கக்கூடிய ஒரு அமைப்பு திரும்ப அவங்க உழைப்பிலேயே முன்னேறி வரணும் அப்படிங்கறதுதான் பெரும்பாலான மேஷத்தோடைய ஒரு வெல்த் சம்பந்தப்பட்ட விஷயத்துல ஒரு அமைப்பாவே இருக்கும்
03:37
Speaker A
அவங்களுக்கு தெய்வ அனுகிரகம்ங்கறது நல்லாவே இருக்கும் முக்கியமா பெருமாள் சம்பந்தப்பட்ட தெய்வங்கள் பெண் தெய்வங்கள் இவங்க எல்லாமே வந்து மேஷத்துக்கு உகந்தது இவங்களுக்கு நல்ல தெய்வ பலம் எப்பவுமே உண்டு என்ன பிரச்சனை அப்படின்னா
03:53
Speaker A
மேஷம் வந்து சில விஷயங்களை வெளியே பேசிடுவாங்க வார்த்தைகளை வெளியே சொல்ல சொல்ல திஷ்டி
04:00
Speaker B
ஓகே
04:01
Speaker A
வர ஒரு பணம் வரதுக்கு முன்னாடியே என்கிட்ட இது இருக்கு எனக்கு இது வந்துரும் எனக்கு இது நடந்துரும்
04:11
Speaker A
நான் இவங்களை பார்க்க போறேன் இந்த விஷயத்துக்காக போறேன் எனக்கு இங்க இருந்து பணம் வரப்போகுதுன்னா வராது
04:19
Speaker A
ஏன்னா அவங்க ரொம்ப வெகிலியா ஃப்ளோல எல்லாம் சொல்றவங்க
04:26
Speaker A
அதுக்கப்புறம் உணர்ந்துருவாங்க பணத்தை பத்தி வெளியே பேசவே கூடாதுன்னு எந்த எப்பலாம் இவங்க பணத்தை பத்தி பேசாமையே இருக்காங்களோ பணம் சேர்ந்துகிட்டே இருக்கும்ங்கறதுதான் இவங்களுடைய அமைப்பு சத்தமே இல்லாம
05:06
Speaker A
அதுக்கப்புறம் பார்த்தா மேஷத்து மாதிரி பணம் சேர்றவங்க யாரும் கிடையாதுங்கறதுதான் அந்த அளவுக்கு பதுங்கி வரும் பணம்
05:15
Speaker A
சேர்ந்துகிட்டே இருக்கக்கூடிய அமைப்புதான் மேஷத்துக்கு சொல்ல சொல்ல வெளியே போகும் சொல்லலைன்னா கூடயே தங்கும் அப்படிங்கறதுதான் சொல்லாலயே கெடும் அப்படிங்கறது
05:22
Speaker A
இவங்களுக்கு திடீர்னு ஒரு பணம் முடக்கம் ஆகும் வீட்ல எல்லா வழிபாட்டு முறைகளும் பண்ணுவாங்க தெய்வத்துக்கு கொடுக்கக்கூடிய அந்த மரியாதையாகட்டும் அந்த ப்ரொசீஜர் ஆகட்டும் இது எல்லாமே கரெக்டாதான் மேஷம் பண்ணுவாங்க
05:43
Speaker B
ஓகே
05:44
Speaker A
இதையும் தாண்டி அவங்களுடைய அந்த ராசி கட்டம் அந்த அமைப்பு அந்த பிளாக் பண்றதுன்னு ஒரு விஷயம்லாம் இருக்கு இல்லையா
05:53
Speaker A
திடீர்னு அப்படியே ஒரு பிளாக் ஆகி நிக்கிற மாதிரி
05:55
Speaker A
அவங்களுக்கு வரும்
05:56
Speaker B
ஓகே
05:57
Speaker B
கண்டிப்பா எல்லாருமே வந்து ஒரு இக்கட்டான சிச்சுவேஷனை சந்திச்சுக்கிட்டுதான் இருக்காங்க
06:02
Speaker B
இப்ப சொன்ன மாதிரி எல்லாமே பண்றாங்க ஏதோ ஒரு விதத்துல எல்லார்கிட்டயுமே பணம் சேருதா எல்லாருமே சந்தோஷமா இருக்காங்களான்னு கேட்டா கிடையாது
06:12
Speaker A
ஆமா
06:13
Speaker B
சோ அப்படி இருக்கும்போது மேஷ ராசி நேயர்கள் வந்து கேப்பாங்க மேம் இப்ப இதுக்கு என்னதான் சொல்யூஷன்
06:21
Speaker B
நான் ஏதாவது வழிபாடு பண்ணலாமா இல்ல வந்து நிறைய பேருக்கு வந்து ஆன்மீகத்து மேல தீராத நாட்டம் இருக்கும் சோ ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வந்தா சரியாகுமா அப்படின்ற ஒரு விஷயத்தையும் முன்வைப்பாங்க இல்லையா இப்ப நீங்க அந்த மாதிரி ஏதாவது மேஷ ராசி நேயர்களுக்காக நீங்க எந்த கோவில் போயிட்டு வாங்க இந்த விஷயங்களை பண்ணுங்க உங்களுக்கு பணம் வந்து எப்பவுமே தங்கும் அப்படின்னா ஏதாவது கோவில் வழிபாடு இருக்கா
06:56
Speaker A
நம்ம வீட்ல பூஜை புனஸ்காரங்கள் எது பண்ணனாலும் சரி நம்ம வீட்ல சில வைப்ரேஷன்ஸ்ங்கறது இருந்துட்டுதான் இருக்கும்
07:10
Speaker A
ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போயிட்டு அங்க இருக்கிற ஆகர்ஷண சக்தியை வீட்டுக்குள்ள நம்ம கொண்டு வரப்போதான் செழிப்பு மறுபடியும் ஓங்கும் அப்படிங்கறது இப்ப மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து ஸ்ரீ சக்கர பைரவி கோவில்னு ஒரு கோவில் இருக்கும்
07:26
Speaker A
அதாவது திருவண்ணாமலையில ஒரு காட்டு பகுதியில ஒரு காட்டு சைடுல இருக்கக்கூடிய ஒரு கோவில் அது
07:33
Speaker A
அங்க இருக்கிறவங்க கிட்ட கேட்டா தெரியும் அந்த திருவண்ணாமலை பெல்ட்ல வரும் அந்த கோவில்
07:40
Speaker A
இங்க போயிட்டு இதை எப்படி சொல்லணும்னா பார்க்க அந்த கோபுரம்லாம் அப்படி பப்ளிக்காலாம் தெரியாது அந்த கோவில்ல இவங்களுக்கு இப்ப நம்ம சொல்லக்கூடியது எல்லாமே வந்து கொஞ்சம் ரகசிய பரிகாரங்களாவே நம்ம சொல்லிட்டோம் அப்படின்னா இந்த ராசிக்காரங்க இந்த கோவிலுக்கு போறப்ப அவங்களுக்கு செழிப்பாயிடும்
08:13
Speaker A
அதாவது முடங்கின விஷயம் கிளியர் ஆகும் அப்படிங்கறதுதான் அப்போ இது வந்து இது எப்படின்னா
08:24
Speaker A
திரிசக்தி திரிசக்தி பீடம் இருக்கக்கூடிய ஸ்ரீ சக்கரம் இருக்கு இல்லையா ஸ்ரீ சக்கரத்தை வழிபடக்கூடிய கோவில் அது அப்போ அந்த ஸ்ரீ சக்கரத்துலதான் வந்து திரிபுர சுந்தரியை உட்கார வச்சே வழிபாடே பண்ணுவாங்க கோவில்ல அதுதான் அந்த ரகசிய வழிபாடு அது காட்டு கோவில்லதான் பண்ண முடியும் சாதாரண இடங்கள்ல எல்லாம் வந்து நம்ம திரிபுர சுந்தரியை கூப்பிட்டு வச்சுலாம் பண்ண முடியாது ஏன்னா உட்கார மாட்டாங்க வந்து
08:49
Speaker A
அவங்க அந்த அளவுக்கு ஆசீர்வாதம் கொடுக்கக்கூடிய ஒரு பயங்கரமான சக்தி அவங்க அப்ப இங்க போயிட்டு வராங்க அப்படின்னா திடீர்னு கேஷ் ஃப்ளோ வர ஆரம்பிச்சிரும் 10 வருஷம் 15 வருஷம் எனக்கு பணமே வரல வந்துரும்
09:03
Speaker A
எப்படிங்க அந்த குடும்பத்துல இருக்கவங்க இறந்தே போயிட்டாங்க அந்த குடும்பத்துல இருக்கவங்க வேற யாராவது ஒருத்தங்க மூலமாவாவது வந்து சேரும்ங்கறது விதி
09:12
Speaker A
இந்த கோவிலுக்கு போறாங்க அப்படின்னா இதை என்ன பண்ணும்னா செவ்வாய் சம்பந்தப்பட்ட எல்லா பிளாக்கேஜஸ்மே கிளியர் பண்ணிடும்
09:22
Speaker A
செவ்வாய்தான் முதல் இவங்களுக்கு முடக்கம் ஏன் அப்படின்னா இவங்களுக்கு கோவம் கோவத்தினால வார்த்தைகள் விடுறது அதனால சில சாபங்கள் வாங்குறது அதனால முடங்கும் அப்படிங்கறதுதான் செவ்வாய்தான் பெருசா முடக்கும் அப்ப இந்த இடத்துல இது முடக்கும் பொழுது இந்த ஸ்ரீ சக்கரம் இருக்கக்கூடிய ஸ்ரீ சக்கர பைரவி கோவில் அது
10:12
Speaker A
அந்த பைரவியை உட்கார வச்சு அதாவது அந்த ஸ்ரீ சக்கரத்துல எல்லா தேவியர்களையும் உட்கார வைப்பாங்க திரிபுர சுந்தரில இருந்து பைரவில இருந்து அந்த அந்த சக்தியை கொண்டு வந்து மந்திரங்கள் எல்லாம் ஓதி அந்த நேரத்துல இருக்கக்கூடிய அந்த ஒரு வைப்ரேஷன்லாம் ஒன்னு இருக்குது அந்த கோவில்ல அந்த வைபுக்கு போயிட்டு அவங்க ஆக்சுவலா ஒரு ஒன்பது சுத்து அந்த ஸ்ரீ சக்கரத்தை சுத்தணும்
10:56
Speaker A
அவங்க
10:57
Speaker A
சுத்தி வர வர சிவப்பு மலர்கள் ஃபுல்லா கொடுத்து அவங்களுக்கு தீபத்துக்கு எண்ணெய் எல்லாம் நிறைய எண்ணெய் எல்லாம் அங்க கொடுக்கணும் தீபம் எல்லாம் ஏத்தி அங்க வழிபாடு பண்றப்ப அவங்களுக்கே தெரியும் என்ன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்குது அப்படின்னு ஏன்னா அது கிட்டத்தட்ட ஒரு காட்டு பகுதியில இருக்கக்கூடிய ஒரு கோவில்ங்கறப்போ அந்த ஆம்பியன்ஸ் அந்த நேச்சர் அங்க இருக்கக்கூடிய அந்த ஒரு அமைதி நிலை அவங்க போய் முதல் ஃபர்ஸ்ட் அமைதியா உட்காரணும் அவசரமா போனோம் அவசரமா ஏன்னா மேஷத்துக்கு அவசரம் உண்டு அதனால கொஞ்சம் நிதானமா போய் வழிபாடுகள் பண்ணிட்டு வரப்ப ஜாபோ இல்ல அவங்க பிசினஸோ என்ன முடங்கி இருந்தாலும் சரி என்ன தொழில்ல யார் அவங்களுக்கு எதிரிகள் இருந்தாலும் சரி அப்படியே காணாம போயிடுவாங்க இல்ல பலம் இழந்து போயிடுவாங்க அப்படிங்கறதுதான் பணம் அப்படி ஒரு செழிப்பா சேரும் செழிப்பன செழிப்பு அப்படி ஒரு செழிப்பு வரும் அவங்களுடைய வாழ்வாதாரத்துக்கு தகுந்த மாதிரி கண்டிப்பா வரும்
12:02
Speaker B
ஓகே
12:03
Speaker B
சூப்பர் மேம் சூப்பர் இப்ப அவங்க போயிட்டு கோவில் போயிட்டு வந்துறாங்க இப்ப நீங்க சொன்னீங்க திருவண்ணாமலை போயிட்டு தரிசனம் பண்ணிட்டு வந்தா ரொம்ப சிறப்பா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இப்ப நிறைய பேர்கிட்ட ஒரு கொஸ்டின் இருக்கும் இல்லமா எனக்கு உடம்பு சரியில்லை நான் வந்து அவ்வளவு தூரம் போயிட்டு வர முடியாது இப்ப திரிபுர சுந்தரி தாயாருடைய வேற ஏதாவது கோவில்களோ இல்ல நான் அவங்கள வந்து வீட்ல வச்சு வழிபடலாமா அப்படின்ற ஒரு கொஸ்டினும் வரும் இல்லையா
12:21
Speaker A
திரிபுர சுந்தரியை வீட்ல வச்சு வழிபாடே பண்ணவே கூடாது
12:25
Speaker B
அப்படியா
12:26
Speaker A
வழிபாடு எப்படி பண்ணலாம்னா ஸ்ரீ சக்கரம் வச்சு வீட்ல வச்சு வழிபாடு பண்ணலாம்
12:35
Speaker A
ஸ்ரீ சக்கரம் வீட்ல இருக்குன்னா ஸ்ரீ சக்கரத்துக்கு சரியான பூஜை முறைகள் பண்ணனும்
12:40
Speaker A
சும்மா வாங்கி ஸ்ரீ சக்கரத்தை வச்சிரக்கூடாது
12:44
Speaker A
ஏன்னா ஸ்ரீ சக்கரம் வந்து பெண் சக்தி வந்து உட்காரக்கூடிய ஒரு ஆற்றல் சக்தி அவங்களுக்கு உண்டு
12:50
Speaker A
அப்போ சரியான மந்திரங்கள் ஓதணும்
12:54
Speaker A
லலிதா சகஸ்ரநாமம் பாடணும் அதுக்கு
12:56
Speaker B
ஓகே
12:57
Speaker A
லலிதா சகஸ்ரநாமம் இத்தனை தடவை ரிப்பீட் பண்ணி பவர் ஏத்தணும்னு இருக்கும்
13:05
Speaker A
வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை ஒரு பொண்ணை வீட்ல வச்சு பார்த்துக்கிற மாதிரி அந்த அளவுக்கு ஸ்ரீ சக்கரத்தை பார்க்க பார்க்கதான் செழித்து
13:20
Speaker A
ஸ்ரீ சக்கரத்தை எதுவுமே பண்ணாம தூசி படிய படிய நிறைய பேரு சக்கரங்களா வாங்கி வாங்கி போட்டோஸ் வச்சிருப்பாங்க ஆனா அதுல அவ்வளவு தூசி படிஞ்சிருக்கும் அதுக்கு வந்து உயிரோட்டம் கொடுக்கணும் உயிர் சக்தி கொடுக்கணும் அதுக்குதான் அந்த எந்திரம்
13:46
Speaker B
ஓகே
13:47
Speaker A
ஒரு தெய்வம் வந்து உட்காரு ஏன்னா அந்த சக்கரத்துல இருக்கக்கூடிய அந்த ஒவ்வொரு ட்ரையாங்கிளுக்கும் ஒவ்வொரு வகையான மந்திர அமைப்புகள் இருக்கும் அந்த சக்கரத்து நடுவுலதான் வந்து இந்த பெண் சக்தி வந்து உட்காருதுன்னா அதுக்கு அத்தனை யோகினிகள் இருக்காங்க
14:12
Speaker A
அந்த யோகினிகள் எல்லாம் முதல் அழைச்சு அந்த யோகினிகள் எல்லாம் கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்து அப்புறம்தான் அந்த ஸ்ரீ சக்கரத்துக்குள்ள இந்த திரிபுர சுந்தரி வந்து உட்காருவாங்கன்னு இது அவ்வளவு பெரிய விஷயம் அது அதனாலதான் அந்த சகஸ்ரநாமங்கள் எல்லாம் படிக்கிறப்ப அந்த அளவுக்கு டெடிகேட்டடா படிக்கிறது சுத்தபத்தமா படிக்கிறது இல்லைன்னா ரிவர்ஸ் கொடுத்துரும் இல்லைன்னா ரிவர்ஸ் ரியாக்ஷன்ஸ் ஆயிடும்
15:01
Speaker B
15:02
Speaker B
எல்லாமே வந்து சக்கரம் வாங்கி வச்சுக்கோங்கன்னா ஒரு மாதிரி வாங்கி வச்சுட்டா பணவரவு வந்துருமான்னு ரொம்ப ஜாலியாவும் போய் வாங்கி வைக்கிற பர்சன்ஸ்லாம் நிறைய பேர் இருக்காங்க
15:16
Speaker A
ஸ்ரீ சக்கரத்துக்கு வந்து ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு நம்ம என்ன சொல்றோம் நம்ம எப்படி வழிபாடு பண்றோம்
15:22
Speaker A
ஜெனரலாவே ஸ்ரீ சக்கரத்தை கொடுக்கிறப்பவே அதுக்கு பவர் ஏத்திதான் கொடுப்பாங்க அதுக்கு எல்லா மந்திரங்களும் ஓதி எல்லாமே சரி பண்ணிதான் கொடுப்பாங்க அதுக்கு நம்ம சரியான தீப தூபங்கள் காட்டுறது நம்ம மூலமா அது என்னன்னா அந்த தெய்வம் ஆல்ரெடி உருவேத்தி இருக்கு
15:54
Speaker A
அந்த உருவ சக்தியை நம்ம அப்படியே இருக்க வைக்கிறதுதான் அது வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை இல்ல அவங்களுக்கு எப்பலாம் ஒரு வாரத்துல ஒரு நாளோ ரெண்டு நாளோ
16:02
Speaker A
இவங்க அதை கரெக்டா கிளீன் பண்ணி சொல்லிட்டே இருக்கணும் மேனிபெஸ்டேஷன் அது ஸ்ரீ சக்கரம் அப்படிங்கறது ஏன்னா குடும்பமே செல்வ செழிப்பா பார்த்துக்க கூடிய ஒரு அமைப்பு
16:33
Speaker A
16 லட்சுமிகள் இருப்பாங்க அந்த ஸ்ரீ சக்கரத்துல ஒரு லட்சுமி வந்தாலே பெரிய விஷயம் இதுல 16 லட்சுமி வாசம் செஞ்சு அதுல இருக்கக்கூடிய அந்த மெயினான அந்த திரிபுர சுந்தரி பைரவி ஏன்னா பைரவிங்கறவங்கலாம் காலத்தை கடந்து இருக்கிறவங்க காலத்தை இயக்கக்கூடியவங்க அப்போ இங்க இருக்கிற இந்த ஸ்ரீ சக்கர பைரவி கோவில்ல போய் அந்த காலத்தை இயக்கிறப்ப அவங்களுக்கு முடங்கி இருந்த எல்லா விஷயமுமே அதனாலதான் சொன்னேன் எப்பயோ முடங்கி இருந்த பணம் எல்லாம் வந்துரும் இனிமேல் வரக்கூடியதும் இயங்கும் அப்படிங்கறது இயக்க வச்சிருவாங்க இந்த ஸ்ரீ சக்கர பைரவி கோவில்ல இருக்கக்கூடிய அந்த ஸ்ரீ சக்கரத்துல வழிபாடு பண்றப்ப ஒன்பது சுத்து கரெக்டா சுத்தி வரப்ப
17:09
Speaker A
அவங்களுடைய ஒவ்வொரு பிளாக்கேஜஸும் அப்படியே கிளியர் ஆகும் அப்படிங்கறதுதான் ஏன்னா நான் யோகினிகள்லாம் இருக்காங்கன்னு சொல்லிருக்கேன் இல்லையா அந்த பிணிகள் எல்லாமே நீங்கும் அப்படிங்கறதுதான் அது
17:21
Speaker B
ஓகே
17:22
Speaker B
சூப்பர் மேம் சூப்பர் இப்ப வந்து இவங்க நிறைய விஷயங்கள் சொன்னீங்க இந்த விஷயத்தை மட்டும் நீங்க பண்ணாதீங்க ஸ்ரீ சக்கரம் வீட்ல வைக்கிறீங்க இல்ல கோவிலுக்கு போக போறீங்க வழிபாடு நடத்த போறீங்கன்னா இந்த விஷயத்தை மட்டும் தயவு செஞ்சு மேஷ ராசி நேயர்களே பண்ணாம போங்க அதுதான் பெட்டர் அப்படின்னா ஏதாவது விஷயங்கள் இருக்கு
17:35
Speaker A
இப்போ நான் வந்து இந்த கோவிலுக்கு போக சொல்றேன்
17:38
Speaker A
இல்லையா இப்ப ஜெனரலா என்ன பண்ணுவாங்க இந்த கோவில் வழியா என்னென்ன கோவில் இருக்குங்கறத முதல் பார்க்கிறது மக்களுக்கு ஒரு எல்லாத்துக்குமே இந்த பழக்கம் இருக்கு போற வழியில ஒவ்வொரு கோயிலா முடிச்சிட்டு வந்துரலாம்ங்கற பேட்டர்ன்ல போவாங்க இப்போ இந்த மாதிரி கோவில்களுக்கு எல்லாம் போறப்போ ஃபோக்கஸ் ஒண்ணாதான் இருக்கணும்
18:29
Speaker A
இது வந்து பெண் சக்தி இவங்கள இவங்களை வழிபாடு பண்ண போறப்போ ஃபோக்கஸ் கரெக்டா இந்த கோவிலுக்குதான் நான் போவேன் இதை முடிச்சிட்டு இந்த கோவில்ல இருந்து இந்த லட்சுமி நான் நேரா என் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் தான் கூட்டிட்டு வரணும்
18:45
Speaker A
நீங்க வழியில நின்னு சாப்பிடுறதெல்லாம் வேற திருப்பி இன்னொரு கோவிலுக்கு போறப்போ ஒவ்வொரு கோவிலுக்குமே வெவ்வேறு வகையான சக்திகள் அங்க இருக்க பூதங்கள்லாம் இருக்கு இல்லையா ஒவ்வொரு கோவிலுக்குள்ள போறப்போ பூதங்கள் இருக்கும் அந்த பூதங்களை எல்லாம் கடந்துதான் நம்ம போவோம் அப்போ அந்த கோவில்ல இருந்து வெளியே வரப்போ ஏன் உட்காந்துட்டு வராங்கன்னா பூதங்கள் கூட வந்துரும்ங்கறதுனால உட்காந்துட்டு வருவாங்க
19:02
Speaker A
இப்போ இந்த மாதிரி பெண் சக்தி இருக்கிற கோவிலுக்கு எல்லாம் போறப்போ ரொம்ப நேரம் உட்காரக்கூடாது ஏன்னா பூதங்களே இருந்தாலும் யோகினியாவே இருந்தாலும் அது நல்லதுதான் பண்ணும் இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட பணம் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு போறப்போ போன வேகத்துக்கு எல்லாம் முடிச்சிட்டு அங்க இருந்து நடக்கலாம் இது பண்ணலாம் ரொம்ப நேரம் உட்கார்ந்துட்டு அவங்களை அங்கேயே விட்டுட்டு வந்துரக்கூடாது நேரா வீட்டுக்குதான் வரணும் அப்படிங்கறதுதான் வந்து இந்த வழிபாட்டு முறைகள்ல இது ஒன்னு ஏன்னா ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு அமைப்பு உண்டு
20:09
Speaker B
ஓகே
20:10
Speaker A
சிலது பரிகார ஸ்தலம் சிலது புண்ணிய ஸ்தலங்கள் அப்படின்னுலாம் இருக்கு
20:14
Speaker A
இப்ப நம்ம எதுக்கு போறோம் அப்படின்னா முடக்குகளை உடைக்கதான் நம்ம போறோம் முடக்குகளை உடைக்க போறப்போ பரிகாரமும் தேவையில்லை புண்ணியங்களும் தேவையில்லை இதுக்கு நடுவுல இருக்கக்கூடிய விஷயத்தை உடைக்கணும் அப்படிங்கறப்போ நீங்க நேரா போற வழியில ஒரு பரிகார ஸ்தலமா இருக்குன்னு வச்சுக்கோங்க இது கழிஞ்சிரும்
20:29
Speaker B
ஓகே
20:30
Speaker A
இது வேலைக்கு ஆகாது
20:32
Speaker A
ஏன்னா ஜெனரலாவே எல்லாரும் சொல்ற விஷயம் நீங்க சொன்ன கோவிலுக்குலாம் நாங்க போயிட்டு வந்தோம் எங்களுக்கு ஒன்னும் நடக்கலையே
20:37
Speaker B
மக்கள் வந்து அதை வந்து ஆன்மீக சுற்றலாவா மாத்திடுறாங்க
20:40
Speaker A
சுற்றலாவா நம்ம மாத்திடுறோம்
20:42
Speaker A
அப்போ இவங்க புண்ணிய ஸ்தலங்களுக்கு போறாங்கன்னு வச்சுக்கோங்க அங்க சில ஆல்ரெடி உங்களுக்கு பரிகாரம் பண்ண வேண்டியது நிறைய இருக்கு
20:56
Speaker A
பரிகாரங்களே பண்ணாம புண்ணிய ஸ்தலங்களுக்கு போனீங்கனாலும் புண்ணியம் வேலை பார்க்காதே இது ரெண்டும் மிக்ஸ் ஆகி கிளாஷ் ஆகுறப்போ நீங்க இந்த கோவிலுக்கு போனது
21:09
Speaker A
யூஸ் ஆகாது
21:10
Speaker A
அதனால மக்கள் இந்த பேட்டர்ன் ஆக்சுவலா மாத்தணும் இதை மாத்துனாங்கனாலே சில பேர் சொல்லுவாங்க நான் பல கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு கஷ்டம் அப்படின்னா எங்க போறோம் எங்க வரோம் அப்படிங்கறது ஒன்னு இருக்கு
21:41
Speaker A
ஒன்னு பரிகாரம் ஒன்னு புண்ணியம் பரிகாரத்துக்கு போயிட்டு புண்ணியம் போயிட்டீங்கனாலும் ஒன்னும் வேலைக்கு ஆகாது புண்ணியம் போயிட்டு பரிகார ஸ்தலத்துக்கு போனா புண்ணியமே கழிஞ்சு போயிடும் அதனால இப்படிதான் பேட்டர்ன் இப்படிதான் கோவிலுக்கு போகணும்
22:07
Speaker B
அருமை அதாவது ஒரு ஒரு புதுவிதமான தெளிவை கொடுத்திருக்கீங்க மேம் ஏன்னா எல்லாருக்குமே வந்து நம்ம ஒரு பிளேஸ் போறோம் அப்படின்னாலே அதை ஆன்மீக சுற்றலாவா மாத்தி மொத்த ஃபேமிலியும் போயிட்டு அங்க பக்கத்துல என்னென்ன பிளேஸ் இருக்குதோ எல்லா இடங்களையும் சுத்திட்டு வர்றதுதான் வழக்கமா வச்சிருக்காங்க சோ ஒரு அழகான புரிதலை வந்து மேஷ ராசி நேயர்களுக்காக பணம் சேர்றதுக்கு ரொம்ப அழகான தகவல்கள் கொடுத்திருக்கீங்க தேங்க்யூ மேம்
Topics:மேஷ ராசிபணம் வரவுசெல்வம் சேர்க்கும் பரிகாரம்திரிபுர சுந்தரிஸ்ரீ சக்கரம்பைரவி கோவில்திருவண்ணாமலைசெவ்வாய் கிரக பிளாக்குகள்வழிபாடுஆஸ்திரோலஜி

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →