Kanni | பணம் கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது! | Jeevitha … — Transcript

கன்னி ராசிக்காரர்களுக்கான பண வரவு மற்றும் செல்வம் சேர பரிகாரம், தன்வந்திரி குகை வழிபாடு மற்றும் தொழில் நுணுக்கங்கள் பற்றிய விளக்கம்.

Key Takeaways

  • கன்னி ராசிக்காரர்கள் பண வரவு மற்றும் செல்வம் சேர பரிகாரத்தில் சிறப்பாக இருக்கிறார்கள்.
  • தன்வந்திரி குகை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது அவர்களுக்கு ஆற்றல் மற்றும் ஆசீர்வாதம் தரும்.
  • புத்திசாலித்தனமான செயல்பாடு மற்றும் தொழில் நுணுக்கங்கள் கன்னி ராசிக்காரர்களின் வெற்றிக்கு காரணம்.
  • குழு வேலை மற்றும் அப்பிரிசியேஷன் இல்லாமல் கன்னி ராசிக்காரர்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.
  • கன்னி ராசிக்காரர்கள் குடும்ப ஒற்றுமையை பேண வேண்டும் மற்றும் குறைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

Summary

  • கன்னி ராசிக்காரர்கள் உழைத்து முன்னேறக்கூடியவர்கள் மற்றும் செழிப்பான குடும்பத்தில் பிறக்குவார்கள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு பண வரவு மற்றும் செல்வம் சேர பரிகாரம் முக்கியம்.
  • தன்வந்திரி குகை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது கன்னி ராசிக்காரர்களுக்கு சக்தி மற்றும் ஆசீர்வாதம் தரும்.
  • கன்னி ராசிக்காரர்கள் தொழிலில் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள், ஆனால் எமோஷனல் கனெக்ஷன் குறைவாக இருக்கும்.
  • பணத்தை நிர்வகிப்பதில், கணக்கில் மற்றும் நிதி தொடர்பான பணிகளில் கன்னி ராசிக்காரர்கள் சிறந்தவர்கள்.
  • கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தொழில் ரகசியங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்கள்.
  • பெர்ஃபெக்ஷன் மற்றும் குறைகளை சரி செய்யும் பணியில் கன்னி ராசிக்காரர்களுக்கு தனித்துவம் உள்ளது.
  • கன்னி ராசிக்காரர்கள் குழு வேலை மற்றும் அப்பிரிசியேஷன் இல்லாமல் சிக்கல்களை சந்திக்கலாம்.
  • கன்னி ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினரிடையே சமநிலை மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும்.
  • கன்னி ராசிக்காரர்கள் தன்வந்திரி குகை கோயிலில் துளசி தண்ணி குடித்து மெடிடேஷன் செய்வது நல்லது.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து உழைச்சு முன்னேறக்கூடிய ஒரு அமைப்பு. இன்னொரு விஷயம் என்னன்னா கன்னி வந்து கொஞ்சம் செழிப்பான ஃபேமிலில தான் பிறக்கும் செய்வாங்க.
00:12
Speaker A
அவங்களுக்கு எப்பவுமே ஒரு செழிப்புங்கிறது கன்னி ராசிகிட்ட இருக்கும். அவங்க கொஞ்சம் லக்கி. கன்னி எல்லாத்துக்குமே கொடுக்கக்கூடியவங்க தான். எடுத்து எடுத்து கொடுப்பாங்க. இந்தா நீ வச்சுக்கோ, இந்தா வச்சுக்கோ, இது வேணுமா வச்சுக்கோன்னு எல்லாமே கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. தானமாகட்டும், தர்மமாகட்டும், கேட்காமலோ, தேவையில்லாமலோ அதை செய்யாம இருக்கிறது நல்லது.
00:28
Speaker A
எந்த தொழில் வேணாலும் கன்னி செய்யலாம். ஏன்னா எமோஷனலா கனெக்ட் ஆக மாட்டாங்க. அதுதான் கடவுள் கொடுத்த ஒரு ஆசீர்வாதமே இவங்களுக்கு. இந்த தன்வந்திரி குகைக்குள்ள போய் அவங்க வழிபாடு பண்ணும் பொழுது அவங்களுக்கு இந்த சக்திகள் எல்லாம் அபரிதமா இருக்கும்.
00:47
Speaker B
கன்னி ராசி நேயர்கள் மா. கன்னி ராசி நேயர்கள் வந்து பண விஷயத்துல எப்படி இருப்பாங்க? பண விஷயத்துல இந்த விஷயத்தை பண்ணிடவே பண்ணிடாதீங்க. இதை மட்டும் பண்ணுங்க சூப்பரா இருக்கும் உங்களுக்கு பணவரவு அப்படின்னா என்ன விஷயம் பண்ணலாம்?
00:58
Speaker A
கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து உழைச்சு முன்னேறக்கூடிய ஒரு அமைப்பு. இன்னொரு விஷயம் என்னன்னா கன்னி வந்து கொஞ்சம் செழிப்பான ஃபேமிலில தான் பிறக்கும் செய்வாங்க. அவங்களுக்கு எப்பவுமே ஒரு செழிப்புங்கிறது கன்னி ராசிகிட்ட இருக்கும். அவங்க கொஞ்சம் லக்கி. ஒரு ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும்.
01:52
Speaker A
அவங்களை சுத்தி ஏதோ ஒரு செழிப்புங்கிறது இருந்துகிட்டே இருக்கும். ஏன் அப்படின்னா கன்னி ராசியில் இருக்கவங்களுடைய பிளஸ் மைனஸ்னு பார்க்கிறப்போ பிளஸ் என்ன அப்படின்னா எல்லாமே கொஞ்சம் பாசிட்டிவாவே திங்க் பண்ணி எல்லாமே கிளீனா வச்சுக்கணும். அந்த குரோத்ங்கிற விஷயத்தை நோக்கி போறது. நெகட்டிவ்ங்கிறது என்னன்னா ஒரு குறை பேசி ஸ்டார்ட் பண்றதாவே இருக்கும்.
02:13
Speaker A
கன்னி வந்து குறை பேசாம முடிஞ்ச அளவுக்கு மேனேஜ் பண்ணனும். ஏன்னா அவங்களுக்கு வந்து எல்லாமே அந்த பெர்ஃபெக்ஷன் பெர்ஃபெக்ஷன்ங்கிற ஒரு விஷயம் இருந்துகிட்டே இருக்கும் கன்னிக்கு. அந்த பெர்ஃபெக்ஷனாலயே இவங்க ஒரு ஓட்டம் ஓடிட்டே தான் இருப்பாங்க.
02:33
Speaker A
இதை சரி பண்ணனும், அதை சரி பண்ணனும். இந்த குடும்பத்திலேயும் இப்போ ஒரு குழந்தையே அந்த ஃபேமிலில இருக்குன்னா அந்த ஃபேமிலில இருக்க பேரண்ட்ஸ் எப்படியாவது ஏதாவது ஒன்னு பேசி முன்னேத்தும். அந்த மாதிரி ஏதோ ஒன்னு ஐடியாஸ் கொடுத்துக்கிட்டே இருக்கிறது. ஒரு டெவலப்மென்ட் நோக்கி போறது அந்த மாதிரி. ஏன்னா குறை சொல்லிடும். அந்த வீட்ல அப்படி இருந்துச்சு, நம்ம வீட்ல ஏன் அப்படி இல்லை? இதை நம்ம சரி பண்ணனுமே அப்படிங்கிறப்போ அந்த கம்பேரிசன் கன்னியை பண்ணுனா பிடிக்காது. ஆனா கன்னி கம்பேரிசன் பண்ணும்.
03:26
Speaker B
ஓகே.
03:27
Speaker A
தன்னையே வச்சு மத்தவங்க கிட்ட கம்பேரிசன் பண்ணுவாங்க. நான் பண்றதுதான் பெஸ்ட் அப்படின்னு. ஆனா கன்னி என்ன பண்ணுனாலும் பெஸ்ட்டா தான் இருக்கும். கன்னியால ஒரு விஷயத்தை ஃபோகஸ் பண்ணிட்டாங்க அப்படின்னா ஏன்னா அது புதன். அந்த புதன் போய் எமோஷனலா ஃபர்ஸ்ட் கனெக்ட் ஆகாது. இந்த புதன் வந்து ஞானமாவும் அதோட அதாவது விவரமா செயல்படுறது. இன்டெலிஜென்ஸ். கிளவர்னஸ் யூஸ் பண்ண மாட்டாங்க. இன்டெலிஜென்ஸ் கிளவர்னஸும் வேற.
03:48
Speaker A
இன்டெலிஜென்ஸ் யூஸ் பண்ணிட்டு கரெக்டா இதை மட்டுமே ஃபோகஸ் பண்ணி அதை மட்டுமே குரோத் பண்ணிட்டே இருப்பாங்க. இந்த கிளவர் எங்க மிஸ் ஆகும் அப்படின்னா ஒரு டீம் வொர்க் இருக்கு. அந்த டீம் வொர்க்லாம் எல்லாரும் சேர்ந்தா தான் ஜெயிக்க முடியும். இவங்களுடைய பங்கும் அதுல ஒன்னு இருக்கு அப்படின்னா தன்னால மட்டுமே ஜெயிச்சுன்னு மத்தவங்களை விட்டுரும். அங்கதான் அந்த கிளவர்னஸை மிஸ் பண்ணிடுவாங்க. அப்ரிசியேஷன் பண்றதுக்கு மிஸ் பண்ணிடுவாங்க. அப்போ இவங்களுக்கு டிராபேக் ஆகி லைஃப் கொஞ்சம் டிராபேக் ஆயிடும்.
04:15
Speaker A
அப்ப இவங்களை பாதியிலேயே விட்டுருவாங்க. கன்னி யாரை நம்புறாங்கன்னு ஒன்னு இருக்கு. கன்னி கரெக்டா யாரு சப்போர்ட் இந்த ஜால்ரா அடிப்பாங்கல்ல அவங்களை போய் நம்பிடுவாங்க. யாரு வந்து இல்லை நீ இதை மாத்து, இதை சரி பண்ணு அப்படி ஐடியாஸ் கொடுக்கிறவங்களை விட்டுருவாங்க.
05:08
Speaker B
எனக்கு குறை சொல்றது பிடிக்காது.
05:10
Speaker A
குறை சொல்றது பிடிக்காது. இவங்க சொல்றது இன்னொருத்தங்க கேட்டுட்டு இருந்தா நல்லா இருக்கும்ங்கிற மாதிரி நினைச்சுட்டு வா நீ சொல்றது கரெக்டா இருக்குதுன்னு அவங்களை வச்சுக்கிறாங்க அப்படின்னா அவங்கதான் கூட இருந்து காலவாரி விட போறாங்கன்னு அர்த்தம்.
05:30
Speaker B
ஓகே ஓகே.
05:31
Speaker A
அதனால கன்னி அந்த விஷயத்துல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும். கன்னி வந்து ரொம்ப மைன்யூட்டா தான் எல்லா விஷயத்தையுமே யோசிப்பாங்க. அவங்களுடைய தொழில் நுணுக்கங்கள் அவங்களுக்கே உகந்தது. ஒவ்வொரு கன்னிக்கும் தனித்தனி வகையான தொழில் நுணுக்கங்கள் உண்டு. அவ்வளவு சீக்கிரம் தொழில் ரகசியங்களை வந்து கன்னி யாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க.
05:47
Speaker B
ஓகே.
05:48
Speaker A
சொல்லிக் கொடுப்பாங்கன்னா சம்டைம்ஸ் உளறுவாங்கன்னு வச்சுக்கோங்களேன். இதை நான் பண்ணுனேன், அதை நான் பண்ணுனேன், இப்படி எல்லாம் பண்ணுனேன் அப்படின்னு சொல்லிட்டு போறப்போ அது திஷ்டியா ஃபர்ஸ்ட் மாறும். கன்னி வந்து தான்ட்ட என்ன இருக்குங்கிறதை முடிஞ்ச அளவுக்கு யாருக்கும் காட்டாம இருக்கிறது நல்லது. ஆனா கன்னி காட்டுவாங்க. கன்னி தான் ஒரு ப்ராப்பர்ட்டி வாங்கினாலும் சரி, அவங்க வீட்ல ஒரு திங்ஸ் இருந்தாலும் சரி, ஏன்னா அவங்க எல்லாமே இந்த பெர்ஃபெக்ஷன் இருக்கப்போ தன்னுடைய செலக்ஷன் கரெக்டா இருக்கான்னு கேட்கிறது. தான் இந்த பிளான் வச்சிருக்கோம்னு சொல்றதும். முடிஞ்ச அளவுக்கு அதை ரகசியமா ஹேண்டில் பண்ணிட்டாங்க அப்படின்னா கொஞ்சம் ஓகேயா இருக்கும்.
06:47
Speaker A
கன்னி எல்லாத்துக்குமே கொடுக்கக்கூடியவங்க தான். எடுத்து எடுத்து கொடுப்பாங்க. இந்தா நீ வச்சுக்கோ, இந்தா வச்சுக்கோ, இது வேணுமா வச்சுக்கோன்னு எல்லாமே கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. திடீர்னு அப்ரூப்ட்டா நிறுத்துவாங்க.
06:56
Speaker B
ஓகே.
06:57
Speaker A
அப்ரூப்ட்டா அதை நிறுத்துறப்போ ஏன்னா நான் ஏன் இதை சொல்றேன்னா தானமாகட்டும், தர்மமாகட்டும், கேட்காமலோ, தேவையில்லாமலோ அதை செய்யாம இருக்கிறது நல்லது. யாருக்கு தான தர்மம் பண்ணனும்ங்கிறதையும் பார்த்து செஞ்சுக்கிறது நல்லது. ஏன்னா இவங்களுக்கு ஒருத்தங்களை பிடிச்சிருச்சுன்னா நிறைய செய்வாங்க. இதை எப்படின்னா பார்ஷியாலிட்டி பார்க்கிற மாதிரிதான். ஒரு குழந்தை, ரெண்டு குழந்தை இருக்குன்னா ஒரு குழந்தையை நல்லா பார்த்துக்கிறது, இன்னொரு குழந்தையை பார்த்துக்க மாட்டேன் அப்படிங்கிற மாதிரி இப்படி இருக்கக்கூடாது கன்னி. கன்னி வந்து எல்லாத்தையுமே சேர்த்துக்கணும், அரவணைச்சுக்கணும் அப்படிங்கிறதுதான்.
07:26
Speaker B
சூப்பர் சூப்பர். கன்னி ராசி நேயர்கள் வந்து செல்வ செழிப்போட இருக்கணும். பணவரவு வந்து மேலும் மேலும் தலைத்தூங்கணும் அப்படின்னா அவங்க வந்து எந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வந்தா இன்னும் சிறப்பா இருக்கும்?
07:36
Speaker A
கன்னி ராசிக்கு வந்து குற்றாலம்ல ஒரு காட்டு கோயில் இருக்கு. குற்றாலம்ல வந்து தன்வந்திரி குகை கோயில்னே ஒன்னு இருக்குது. அந்த தன்வந்திரி குகை கோயிலுக்கு போயிட்டு இது எப்படி இருக்கும்னா ரொம்ப மறைஞ்சு தான் இருக்கும். சித்தர் பூங்காவனம் வந்து அங்க தவம் செஞ்ச ஒரு இடம் அது. ஏன் அப்படின்னா இவங்களுக்கு வந்து நான் சொன்னேன் இல்லையா கன்னி வந்து ஒரு கெரியரை ஃபோகஸ் பண்ணிட்டாங்கன்னா எல்லாமே கரெக்டா போயிட்டு இருக்கும்னு. இவங்களுக்கு அந்த தொழில் தாண்டி இன்னொரு தொழிலுக்கு போறதுக்கே டைம் இருக்கும். ஒரு தொழில் பிடிச்சிருச்சுன்னா இதுதான் என்னுடைய தொழில்னு செஞ்சுட்டே இருப்பாங்கன்னா அவங்க இன்னும் எதை கத்துக்கிட்டாலும் கன்னிக்கு தொழில் வரும்.
08:49
Speaker A
எந்த தொழில் வேணாலும் கன்னி செய்யலாம். ஏன்னா எமோஷனலா கனெக்ட் ஆக மாட்டாங்க. புத்தியா தான் கனெக்ட் ஆவாங்கங்கிறப்போ இந்த புத்தி எதை வேணாலும் செயல்படுத்தும் அப்படிங்கிறதுதான். அதுதான் கடவுள் கொடுத்த ஒரு ஆசீர்வாதமே இவங்களுக்கு. எனக்கு என்ன வரும்னு தெரியாதுன்னு இல்லை. என்ன கத்துக்கிட்டாலும் வரும். அதுதான் கன்னி.
09:20
Speaker A
அப்போ இந்த இந்த குகை கோயிலுக்குள்ள போய் இவங்க வழிபாடு பண்ணும் பொழுது இந்த தன்வந்திரி ஏன்னா ஒரு ஸ்டெப் எடுக்க முதல்ல யோசிப்பாங்கன்னு சொன்னேன் இல்லையா. முதல்ல இது ஹீல் ஆகணும். இவங்களால மத்தவங்களை ஹீல் பண்ண முடியும். அனலிட்டிக்கல் மைண்ட் ரொம்ப நல்லா இருக்கும். பெரும்பாலான கன்னிக்கு. இந்த அனலிடிக்ஸ் இந்த அக்கவுண்ட்ஸ் பார்க்கிறது, இந்த ஃபினான்ஸ் பண்றவங்கலாம் இருப்பாங்க. பணத்தை ஹேண்டில் பண்றவங்களா இருப்பாங்க. கணக்கு வழக்கு பார்க்கிறவங்களாலாம் இருப்பாங்க. இந்த இடத்துக்கு போறப்போ மெடிக்கல் இண்டஸ்ட்ரிலயும் இருப்பாங்க. நிறைய இண்டஸ்ட்ரிஸ்ல இருப்பாங்க கன்னில இருக்கவங்க. ஹீலிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை கண்டிப்பா இருப்பாங்க.
10:16
Speaker A
இந்த தன்வந்திரி குகைக்குள்ள போய் அவங்க வழிபாடு பண்ணும் பொழுது அவங்களுக்கு இந்த சக்திகள் எல்லாம் அபரிதமா இருக்கும். அங்க வந்து துளசி தண்ணி கொடுப்பாங்க. அந்த துளசி தண்ணியை வாங்கி இவங்க குடிக்கிறது. 10 நிமிஷம் அந்த குகையில எதுவுமே பண்ணாம மெடிடேஷன் மாதிரி பேசாம உட்கார்ந்து அந்த எனர்ஜியை மட்டும் இவங்க வாங்கிட்டு வரணும். இந்த இது வந்து ஒரு மறைஞ்ச ஒரு கோயில் தான். அந்த ஒரு வெஸ்டர்ன் காட்ஸ் இருக்கும். அதுக்குள்ளார ஒரு மறைஞ்ச ஒரு கோயிலா தான் இருக்கும். கேட்டு தான் போகணும். இந்த தன்வந்திரி குகை எங்க இருக்கு அப்படின்னு கேட்டுட்டு அந்த குற்றாலம் ஃபாரஸ்ட்லயே தான் இருக்கும் இந்த கோயில்.
10:50
Speaker B
ஓகே.
10:51
Speaker A
இங்க இங்க உட்காரணும். ஏன்னா கன்னிக்கு வந்து எல்லாத்துலயும் அவசரம். பொறுமை ரொம்ப கம்மி கன்னிக்கு. டக்கு டக்குன்னு முடிக்கணும். இப்ப இங்க போய் சாமி கும்பிட்டு வாங்க அப்படின்னா ஏன்னா நான் சொன்னேன் இல்லையா எமோஷனல் கனெக்ட் ஆக மாட்டாங்க அப்படின்னு. எமோஷன்ஸ்ல அது கொஞ்சம் வேலை பார்க்கணும் கன்னி. அதனாலதான் நான் சொல்றேன். அப்பதான் குரு. இங்க வந்து சித்தர் பூங்காவனம் மெடிடேஷன் பண்ணி இருக்கிறாரு, தியானம் பண்ணி இருக்கிறாருன்னா அவர் குரு. குரு ஸ்தானம். அப்போ குருவோட அனுக்கிரகமும் கன்னிக்கு வேணும். இந்த புதன் எப்பவுமே வந்து குருவோட அனுக்கிரகத்தை அவ்வளவு சீக்கிரம் எடுத்துக்க மாட்டாங்க. எந்த ஒரு கன்னி ஒரு குருவோட அனுக்கிரகத்தை வாங்குறாங்களோ, ஒரு குருன்னு யாரையாவது ஒருத்தங்களை வழிபட ஆரம்பிக்கிறாங்களோ, அவங்களுக்கு எல்லா வளமும் வந்து சேரும் அப்படிங்கிறதுதான். அப்போ இந்த இடத்துல போய் அந்த சித்தர் பூங்காவனத்தை நினைச்சுட்டு இந்த தன்வந்திரி இடத்துல போயிட்டு அங்க இருக்கிற அந்த சிலையை பார்த்து அந்த தன்வந்திரியை பார்த்து வழிபாடு பண்ணும் பொழுது ஒண்ணுமே இல்லை. பேசாம கண்ணை மூடி எதுவும் வேணும்னு கேட்க வேணாம். அமைதியா ஒரு 10 நிமிஷம் அவ்வளவுதான். இதுவே அவங்க லைஃபை வந்து கிளியர் பண்ணி விட்டுரும்.
12:24
Speaker B
சூப்பர். ஆனா நீங்க வந்து போக சொல்லி இருக்கக்கூடிய இடம் வந்து குற்றாலம் அப்படின்னு சொல்லிட்டீங்க. நம்ம ஆட்கள் என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியும். குற்றாலம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம் ரொம்ப ஜாலியா கிளம்பி போயிடுவாங்க. எல்லாரும் வந்து தன்வந்திரியை பார்க்கிறதை விட குற்றால அருவிக்கு போய் குடிக்கிறதுதான் மெயினா வச்சிருப்பாங்க. சோ அந்த மாதிரி பண்ணலாமா?
13:20
Speaker A
அது ஓகே. அவங்க வந்து குளிச்சிட்டு போய்க்கட்டும். போயிட்டு வந்து குளிக்க வேண்டாம். அந்த கோயிலுக்கு போயிட்டு வந்து ஏன்னா எனர்ஜி அவங்க வாங்கிட்டு வரதுக்கு தான் போறாங்க. அப்ப நல்லா செழிப்பா ஏன்னா இந்த குகை கோயிலுக்கு எல்லாம் போறது வந்து பகல் நேரங்களிலேயே போயிட்டு வந்துறது உத்தமம். ஒரு மத்தியான வேலைக்குள்ள இந்த வழிபாட்டு முறைகளை அவங்க முடிச்சுக்கிறது நல்லது. அப்போ அந்த குற்றால அருவியில அவங்க காலையில குளிச்சாங்களா? எவ்வளவு சீக்கிரம் அந்த கோயிலுக்கு போயிட்டு ஏன்னா அது காட்டுப்பகுதி. சீக்கிரம் வெளிய வரணும் அப்படிங்கிறப்போ ஒரு மூணு மணி தாண்டாம பார்த்துக்கிறது நல்லது.
13:51
Speaker B
ஓகே. இதுக்கு ஏதாவது கிழமைகள் இருக்கா? அந்த தினங்கள்ல போயிட்டு வாங்க இன்னும் சிறப்பா இருக்கும். புதன். ஓகே. பண விஷயத்துல கன்னி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க அப்படின்னா என்ன விஷயம்?
13:57
Speaker A
புதன்.
13:58
Speaker B
ஓகே.
13:59
Speaker A
புதன்கிழமை இவங்களுக்கு உகந்தது. கன்னி வந்து நிறைய சேர்த்து வைக்கக்கூடிய நிறைய சேர்த்து வைப்பாங்க. கன்னிக்கு வந்து அந்த ஹாபிட் உண்டு. என்ன பண்ணுவாங்கன்னா பல்க்கா போய் எங்கயாவது கொடுத்துருவாங்க. பல்க்கா போய் எங்கயாவது ஒரு இடத்துல போய் மாட்டிட்டு திருப்பி எதுவுமே இல்லாத மாதிரி. அப்ப அவங்க என்ன பண்ணனும்னா கன்னி செய்ய வேண்டிய வேலையை பிரிச்சு பிரிச்சு பிரிச்சு வைக்கணும் காசு. இதுக்கு அதுக்கு இதுக்கு இந்த விஷயத்துக்கு தான் இந்த பணத்தை நான் யூஸ் பண்ணுவேன். அதை நான் தொட மாட்டேன். இதை செலவுக்கு, இது அவங்களுக்கு, இவங்களுக்குன்னு பிரிச்சு வச்சுட்டாங்கன்னா பிளானிங் கரெக்டா பண்ணிட்டாங்கன்னா பிளானிங் ஓகே. அவங்க ஆக்சுவலா பிளானிங் கரெக்டா தான் பண்ணுவாங்க. இந்த ஒரு விஷயத்துல அவங்க தெளிவா இருந்துக்கணும். முக்கியமா அவங்களோட லைஃப் பார்ட்னர் கிட்ட போயிட்டு கன்னி இந்த வேலையை பார்க்கும். என்கிட்ட எவ்வளவு காசு இருக்குன்னு சொல்லிடும் கன்னி.
15:38
Speaker B
ஓகே.
15:39
Speaker A
எந்த விஷயத்துல இப்போ எதுல இன்வெஸ்ட் பண்ணா அவங்களுக்கு பெர்ஃபெக்ட்டா இருக்கும்?
15:42
Speaker A
கன்னிக்கு வந்து பூமி இன்வெஸ்ட்மென்ட் நல்லா இருக்கும். நிறைய பூமிங்கிறது ஃபார்ம் லேண்ட்ஸ் வாங்கி போடுறது. அக்ரிகல்ச்சர் செட் ஆகும். வீடா வாங்கி போடுறதை விட வீடா வாங்கி போடுறது வந்து அந்த அளவுக்கு அவங்க கிட்ட நிக்காது. ஃபார்ம் லேண்ட்ஸ் விளையணும். அந்த இடத்துல வந்து நிறைய விளைஞ்சுகிட்டே இருக்கணும். விளைய விளைய இவங்களுக்கு நல்லா இருக்கும் அப்படிங்கிறதுதான். தங்கம் சேமிக்கலாம் இவங்க. தங்கம் பெரிய இன்வெஸ்ட்மென்ட். இவங்களுக்கு ஸ்டாக் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் எல்லாமே வேலை செய்யும் கன்னிக்கு. இந்த திடீர் லக் வரது அந்த ஏன்னா இவங்க மார்க்கெட் அனலைஸ் பண்ணக்கூடியவங்களா தான் இருப்பாங்க. அதுக்காக பெரிய அமௌன்ட்டா நீங்க சொன்னீங்கன்னு நம்பி இந்த ஸ்டாக்ல போய் போட்டுட்டேன்னு சொல்லிடக்கூடாது. இந்த வேலை எல்லாம் அவங்க செய்வாங்க. மார்க்கெட் அனலைஸ் பண்ணாம செய்யக்கூடாது. ஆனா அது வரும். ஸ்டாக் மார்க்கெட்ல ஷேர்ஸ்ல லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்க்கு இவங்க போகணும். ஏன்னா கன்னி அவசரப்படுவாங்கன்னு நான் சொல்லிருக்கேன். குறுக்கு வழிகள் பயங்கரமா தேடுவாங்க கன்னி. இப்படி போட்டு அப்படி வந்துரலாம் அப்படின்னு. அப்படி போயிட்டு அப்படி வர முடியாது. பாதி வழியிலேயே சிக்கிடுவாங்க அப்படிங்கிறதுதான். லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இவங்க பண்ணனும்.
17:14
Speaker B
ஓகே மா. தேங்க்யூ சோ மச்.
Topics:கன்னி ராசிசெல்வம் சேர பரிகாரம்தன்வந்திரி குகைபண வரவுதொழில் நுணுக்கங்கள்வழிபாடுபுத்திமெடிடேஷன்தமிழ் ஜோதிடம்கன்னி ராசி பணம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →