Dhanusu | ஏமாற்றத்தின் உச்சத்தில் முன்னேற்த்திற்கான வழி… — Transcript

தனுசு ராசிக்காரர்களுக்கான குரு நடத்தை, குடும்பம், தொழில் மற்றும் தெய்வ வழிபாடு பற்றிய விரிவான விளக்கம்.

Key Takeaways

  • தனுசு ராசிக்காரர்கள் குருவின் வழிகாட்டுதலை சரியாக பின்பற்ற வேண்டும்.
  • குடும்ப உறவுகள் மற்றும் தொழிலில் சமநிலை முக்கியம்.
  • தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் பெற முடியும்.
  • தவறான ஆலோசனைகள் மற்றும் ஏமாற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு தேவை.
  • ஆன்மீக பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்.

Summary

  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு தெய்வம் முக்கியமான அதிபதி ஆக இருக்கிறார்.
  • குரு தன் வீட்டை பார்த்து குடும்பத்தை ஒழுங்கு செய்யாமல் இருப்பதால் குடும்ப பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
  • தனுசு ராசிக்காரர்கள் பல்வேறு தவறான ஆலோசனைகளால் ஏமாந்து வருகிறார்கள்.
  • குரு மற்றும் சனி இடையேயான உறவு மற்றும் அதன் விளைவுகள் பற்றி விளக்கம்.
  • தனுசு ராசிக்காரர்கள் தெய்வ வழிபாடுகளில் தட்சிணாமூர்த்தி மற்றும் சிவன் கோயில்களை முக்கியமாகக் கருத வேண்டும்.
  • குடும்பம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் பெற வழிபாடு மற்றும் பரிகார முறைகள் அவசியம்.
  • தனுசு ராசிக்காரர்கள் மனநிலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்.
  • தெய்வ அனுகிரகம் அதிகம் இருப்பதால் தவறான பாதைகளை தவிர்க்க வேண்டியது முக்கியம்.
  • தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மற்றும் சவால்களை சமாளிக்கும் வழிகள்.
  • யோகாசனங்கள் மற்றும் ஆன்மீக வழிமுறைகள் மூலம் மன அமைதி மற்றும் முன்னேற்றம் பெறலாம்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
தனுசு ராசின்னாலே
00:00
Speaker A
அவங்க அவங்களுடைய அதிபதியே குருதான்.
00:04
Speaker A
குரு எல்லாத்துக்கும் அட்வைஸ் பண்ணுவாரு ஆனா உபதேசம் வெளியதான்.
00:09
Speaker A
ஆனா தனக்கு கிடையாது அப்படிங்கிறதுதான் வந்து
00:10
Speaker A
ஒரு டார்க் சைடே அதுதான்.
00:12
Speaker A
தவறான குரு பாதைகள்ல போகக்கூடிய ஒரு அமைப்பு தனுசுக்கு கொடுத்துருவாரு ஏன்னா இவங்கல்லாம் வந்து லாஜிக்கலா கேள்வி கேட்டுட்டே இருக்கக்கூடியவங்களா இருப்பாங்க.
00:21
Speaker A
குருங்கிறது திருமணத்தை குறிக்கக்கூடிய ஒரு விஷயம் குருங்கிறது குழந்தைகளையும் குறிக்கக்கூடிய ஒரு விஷயம்.
00:25
Speaker A
அப்ப இந்த குரு தன் வீட்டை பார்க்காது அப்போ மனைவி பிள்ளைகளை ஒழுங்கா பார்க்காது ஏன்னா வேலை காரணமா அப்படி ஓடுறப்போ இங்க குருவுக்கு கோவம் வரும்.
00:39
Speaker B
சோ இந்த தனுசு ராசி நேயர்களுக்கு வந்து குரு என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் செய்றாங்கமா?
00:43
Speaker A
தனுசு ராசின்னாலே அவங்க அவங்களுடைய அதிபதியே குருதான்.
00:46
Speaker A
அப்போ அந்த குரு அதிபதியா இருக்கப்போ இவங்க இயற்கையாவே ஒரு டீச்சர்ஸ் இவங்களுக்கு வந்து எல்லாத்துக்கிட்டயும் அட்வைஸ் பண்ணிட்டே இருக்கக்கூடிய ஒரு தன்மை உண்டு.
00:55
Speaker A
குரு எல்லாத்துக்கும் அட்வைஸ் பண்ணுவாரு ஆனா அந்த குரு தான் ஃபாலோ பண்றாரா அந்த அட்வைஸை தானே ஃபாலோ பண்றாங்களாங்கிறதுதான் பெரிய கொஸ்டின் மார்க்.
01:02
Speaker A
உபதேசம் வெளியதான்.
01:04
Speaker A
ஆனா தனக்கு கிடையாது அப்படிங்கிறதுதான் வந்து ஒரு டார்க் சைடே அதுதான் தனுசுவோடது.
01:10
Speaker A
இந்த குரு என்ன பண்ணுவாருன்னா குரு நல்லா இருக்கணும்னா தன் வீட்ல இருக்க குரு வந்து தனக்கோ தன் வீட்டுக்கோ உகந்தவர் கிடையாது.
01:20
Speaker A
குரு பார்வை குரு யாரை பார்க்கிறாங்களோ குரு யாருக்கு போய் உதவி பண்றாரோ யாருக்கு செய்றாங்களோ அவங்கதான் முன்னேறிட்டே போயிட்டு இருப்பாங்க அப்படிங்கிறது.
01:30
Speaker A
அப்போ இந்த குரு நல்லா இருக்கணும் அப்படின்னா முதல்
01:35
Speaker A
தான் குடும்பத்துல தன்னை சுத்தி இருக்கவங்க பக்கத்துல இருக்கவங்கள பார்க்க அந்த
01:42
Speaker A
குரு தனுசு ராசியில இருக்கவங்களுக்கு வந்து புரியணும்.
01:45
Speaker A
அவ்வளவு சீக்கிரம் புரியவே புரியாது.
01:47
Speaker A
ஏன் அப்படின்னா அவங்க மல்டி டாஸ்கிங் பண்ணக்கூடிய ஒரு ஆட்களா இருக்கப்போ அந்த
01:54
Speaker A
படிக்கிற விஷயமாகட்டும் அந்த தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களாகட்டும் இது எல்லாமே தொலைநோக்கு பார்வையிலேயே அவங்களுக்கு இருக்கும்.
02:04
Speaker A
கோல் செட் பண்ணி செட் பண்ணி போயிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.
02:08
Speaker A
அவனுடைய வேலையை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு இருக்கும்.
02:10
Speaker A
அப்ப இங்க குரு எங்க அவங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்னா
02:15
Speaker A
தவறான குரு பாதைகள்ல போகக்கூடிய ஒரு அமைப்பு தனுசுக்கு கொடுத்துருவாரு.
02:20
Speaker A
ஏன்னா இவங்கல்லாம் வந்து லாஜிக்கலா கேள்வி கேட்டுட்டே இருக்கக்கூடியவங்களா இருப்பாங்க.
02:25
Speaker A
அந்த லாஜிக்கல் கொஸ்டின் அவ்வளவு சீக்கிரம் வந்து ஸ்பிரிச்சுவாலிட்டிக்குள்ள தனுசுவால போக முடியாது.
02:32
Speaker A
ஆனா தெய்வ அனுகிரகம் ரொம்ப அதிகம்.
02:34
Speaker A
தனுசு ராசிக்காரங்களுக்கு வந்து
02:38
Speaker A
அந்த குருவே தெய்வம் தான்.
02:40
Speaker A
அதாவது பெண் தெய்வங்கள்.
02:42
Speaker A
அந்த அம்மன் கோயிலுக்கு எல்லாம் போறாங்க.
02:46
Speaker A
பெண் சக்தி இருக்க கோயிலுக்கு எல்லாம் போறாங்க அப்படின்னா ஃபார் சம் ரீசன் தனுசு ராசிக்காரங்களுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கிற மாதிரி அந்த மாலை வந்து சேர்றது.
02:58
Speaker A
அந்த கடவுளை பார்க்கக்கூடிய அந்த காட்சி அந்த
03:05
Speaker A
எவ்வளவு கூட்டத்துல எத்தனை பேர் நின்னாலும் இந்த தனுசுக்கு மட்டும் ஒரு தனியா காட்சி எல்லாம் இந்த தெய்வங்கள் கொடுக்கும்.
03:14
Speaker A
ஆனா இதை எப்படி அவங்க யூஸ் பண்ணிக்கிறாங்க
03:18
Speaker A
அப்படிங்கிற ஒரு விஷயம்னு ஒன்னு இருக்கு.
03:20
Speaker A
நிறைய இழக்க வச்சிரும் குரு.
03:23
Speaker A
தவறான
03:26
Speaker A
ஒரு ஆலோசனையின்படி இப்போ குரு மத்தவங்களுக்கு இந்த குருல இருக்காங்கன்னா
03:32
Speaker A
மத்தவங்களுக்கு உபதேசம் பண்ணிட்டு இருந்தாலும்
03:35
Speaker A
இப்ப மத்தவங்கட்ட போய் இங்க ஏமாந்திராத அங்க இப்படி பண்றாங்க அப்படி பண்றாங்கன்னு சொல்லிட்டு இருந்தாலும்
03:40
Speaker A
இங்க இங்க இவரே ஏமாந்துட்டு இருப்பாங்க.
03:42
Speaker A
இவங்களுக்கு தவறான ஆலோசனைகள் கொடுக்கிற ஆட்களை பக்கத்துல வச்சுக்கிட்டு இருப்பாங்க.
03:46
Speaker A
அதே மாதிரி ஆலோசனைகள் மத்த இடத்துல கொடுத்து தேவையே இல்லாம ஆலோசனைகளை கொடுத்து
03:52
Speaker A
மத்தவங்க டெவலப் ஆகி போறப்போ தொழில் ரீதியாவே அவமானங்கள் பட்டு திரும்ப பேக் அடிக்கக்கூடிய ஒரு அமைப்பும் இருக்கும்.
03:59
Speaker A
குருங்கிறது திருமணத்தை குறிக்கக்கூடிய ஒரு விஷயம்.
04:02
Speaker A
குருங்கிறது குழந்தைகளையும் குறிக்கக்கூடிய ஒரு விஷயம்.
04:05
Speaker A
அப்ப இந்த குரு தன் வீட்டை பார்க்காது.
04:08
Speaker A
அப்போ மனைவி பிள்ளைகளை ஒழுங்கா பார்க்காது.
04:11
Speaker A
ஏன்னா வேலை காரணமா அப்படி ஓடுறப்போ இங்க குருவுக்கு கோவம் வரும்.
04:16
Speaker A
நீயே குரு ஆனா உன் பிள்ளைகளையும் உன்னுடைய அதாவது அது மனைவியோ கணவனோ
04:22
Speaker A
பார்க்கல அது முக்கியமா ஆண்கள் இதை செய்வாங்க.
04:24
Speaker A
பெண்கள்னு பார்க்கிறப்ப இந்த கணவனுடைய அன்புக்காக ஏங்குற மாதிரியோ இல்ல அது புரிஞ்சுக்க முடியாத ஒரு தன்மையோ.
04:32
Speaker A
இந்த மாதிரி ஏதோ ஒரு விஷயத்தை கொடுத்துட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.
04:35
Speaker A
அவங்க வாரங்களை சுமக்கிற மாதிரியோ இந்த குழந்தைகளை இவங்களே கஷ்டப்பட்டு வளர்க்கிற மாதிரியோ
04:41
Speaker A
இல்ல அந்த குழந்தைகள்ட்ட ஏதாவது ஒரு ப்ராப்ளம் டிபேட் மாதிரி ஏதாவது வாக்குவாதங்கள் ஃபேஸ் பண்ணிட்டு இருக்கிற மாதிரியே சிச்சுவேஷன்ஸும் கொடுத்துரும் குரு.
04:47
Speaker A
அப்படி இருக்கிறப்போ இவங்களுக்கு ஏதோ ஒரு வகையில அது ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்.
04:52
Speaker A
ஏதோ ஒரு வகையில லைஃப் பார்ட்னர் அப்படின்னு வரப்ப ஒரு குறை அப்படிங்கிறது குரு கொடுத்துருவார்.
04:57
Speaker A
அப்போ இவங்கல்லாம் வந்து என்ன மாதிரியான ஒரு வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படின்னா
05:01
Speaker A
சேர்ந்து இருக்கக்கூடிய தெய்வங்களா பார்த்து வழிபாடு பண்றது.
05:05
Speaker A
அதாவது இப்ப வந்து சிவன் கோயிலுக்கே போறாங்க அப்படின்னா
05:08
Speaker A
அங்க சிவன் பார்வதி ஒன்னா இருக்கணும்.
05:12
Speaker A
அது உமா மகேஸ்வரரா இருக்கணும்.
05:14
Speaker A
அங்க போய் அங்க இருக்க தட்சிணாமூர்த்தி வழிபாடு பண்றது.
05:18
Speaker A
அதே மாதிரி இவங்க மஞ்சள் சந்தனங்கள் கொடுத்து
05:21
Speaker A
அபிஷேகம் பார்க்கணும்.
05:23
Speaker A
இவங்க கையாலயே போய் சந்தனம் கொடுக்கணும்.
05:25
Speaker A
இவங்க முடிஞ்ச இவங்க நம்ம போய் தட்சிணாமூர்த்தியை தொட முடியாது ஆனா வந்து அந்த தட்சிணாமூர்த்திக்குன்னு அந்த மஞ்சள் சந்தனம் தேய்ப்பாங்க.
05:33
Speaker A
அதுக்கு இவங்களே உருவாக்கி அதை போய் அந்த உருண்டை பிடிச்சு அந்த ஈரமா உருண்டை பிடிச்சு போய் கொடுத்து அவங்களுக்கு அதை அதை வந்து தேச்சு விடுங்க.
05:40
Speaker A
அதை நான் பார்க்கணும்.
05:42
Speaker A
இல்ல அந்த அபிஷேகத்தை நான் பார்க்கிறேன்.
05:44
Speaker A
நிறைய சந்தனம் கொடுக்கணும்.
05:47
Speaker A
கொடுத்து நேருக்கு நேரா நின்னு பார்க்கணும்.
05:50
Speaker A
சைடுல நின்னு பார்க்கக்கூடாது.
05:51
Speaker A
இது வந்து ஒரு பரிகாரமே.
05:53
Speaker A
நேருக்கு நேரா நின்னு பார்க்கிறது.
05:55
Speaker A
அதே மாதிரி அந்த தம்பதி சகிதமா இருக்கக்கூடிய தெய்வ வழிபாடு.
06:00
Speaker A
அங்கேயும் போய் குங்குமம் கொடுக்கிறது.
06:04
Speaker A
மஞ்சள் கொடுக்கிறது.
06:06
Speaker A
சந்தனம் வந்து அபிஷேகத்துக்கு எவ்வளவு வேணாலும் அவங்க கொடுக்கலாம்.
06:10
Speaker A
அதை கொடுத்து அதை செய்ய செய்ய குடும்பத்துல அனுகிரகம் அப்படிங்கிறது.
06:13
Speaker A
அதே மாதிரி தனுசுல இருக்காங்க அப்படின்னாலே இவங்களுக்கு ஆலங்குடிதான்.
06:17
Speaker A
இவங்கல்லாம் வந்து வருஷத்துல ரெண்டு தடவை ஆலங்குடி போயிட்டு வந்துரணும்.
06:20
Speaker A
நல்ல தூரமா இருந்து நிதானமா வழிபாடு பண்ணனும்.
06:25
Speaker A
ஏன்னா அங்க போய் ஆலங்குடியில தட்சிணாமூர்த்தியுடைய
06:30
Speaker A
நம்மளுக்கு அந்த காட்சியே எப்படி இருக்கும் அப்படின்னா அந்த தெய்வத்தை பார்க்கிறது ரொம்ப நேரம் காத்திருக்க முதல் வைப்பாங்க.
06:36
Speaker A
அங்க காத்திருக்கணும்.
06:37
Speaker A
அது வந்து தனுசுக்கு ரொம்ப முக்கியம்.
06:40
Speaker A
ஏன் அப்படின்னா
06:43
Speaker A
அந்த காத்திருப்பு நிறைய விஷயங்களை அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்.
06:47
Speaker A
நான் ஏன் இங்க வந்து நிக்கிறேன்?
06:50
Speaker A
நான் எங்கெல்லாம் ஏமாந்தேன்?
06:52
Speaker A
நான் என்னெல்லாம் செஞ்சேன்?
06:53
Speaker A
ஓகே இதை அப்போ தட்சிணாமூர்த்திட்ட வழிபாடு பண்ணக்கூடிய முறையை எப்படி இருக்கும்னா புலம்பக்கூடாது.
06:59
Speaker A
அதுதான் முக்கியம்.
07:00
Speaker A
எனக்கு என்ன வேணும் அப்படிங்கிறதை ஷார்ப்பா சொல்லிட்டு வரதுக்கு.
07:03
Speaker A
தனுசு ஜெனரலாவே அவங்க வேண்ற விதமே அப்படித்தான் இருக்கும்.
07:07
Speaker A
நான் இதை சொல்லிட்டேன் எனக்கு இதை செய்யணும்.
07:10
Speaker A
ஓகே என்னை விளக்கு வைக்க சொன்னாங்க நான் வச்சிட்டேன்.
07:12
Speaker A
இப்படித்தான் இருக்கும்.
07:14
Speaker A
ஆனா அந்த ரியலைசேஷன் பார்ட் அப்படிங்கிறது இவங்களுக்கு ரொம்ப முக்கியம்.
07:17
Speaker A
இது எல்லாம் உணர்ந்து ஆத்மார்த்த ஆத்மார்த்தமா போய் தட்சிணாமூர்த்திட்ட போய் கையை எடுத்து கும்பிட்டு
07:24
Speaker A
இனி என்னுடைய தொழில் ஒன்னுனா நான் ஒன்னு ஃபோக்கஸ் பண்றேன்னு வேண்டணும்.
07:27
Speaker A
இவங்களுக்கு வந்து அந்த குடும்பம்.
07:31
Speaker A
இது இது என்னுடைய குடும்பம் இது என்னுடைய கட்டமைப்பு அப்படிங்கிற
07:35
Speaker A
அந்த கட்டுக்குள்ள இவங்க வரணும்.
07:38
Speaker A
இந்த குரு சரியில்ல அப்படின்னா
07:41
Speaker A
அவமானப்பட வச்சிரும்.
07:43
Speaker A
தனுசுல இருக்கவங்கள வந்து தொழில் ரீதியாகவும் குடும்பத்துக்காகவும்
07:49
Speaker A
குடும்பமே பிரிஞ்சு போகக்கூடிய ஒரு அமைப்பு.
07:51
Speaker A
அந்த குடும்ப ஐயோ நான் இவ்வளவு தவறு பண்ணிட்டேனே.
07:54
Speaker A
இப்போ நம்ம நிறைய அந்த டிவோர்ஸ் எல்லாம் பார்க்கிறோம் அப்படின்னா
07:58
Speaker A
தனுசுல இருக்கவங்க போய் கெஞ்சிட்டு இருப்பாங்க.
08:02
Speaker A
அவங்களுடைய லைஃப் பார்ட்னர்ட்ட.
08:05
Speaker A
நான் தவறு செஞ்சுட்டேன் நீ வா அப்படின்னா குரு அவ்வளவு சீக்கிரம் மன்னிக்காது.
08:09
Speaker A
ஏன்னா அது வந்து சனி.
08:11
Speaker A
சனி வந்து நியூட்ரலா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.
08:15
Speaker A
சனியால குருவுக்கு ஒரு யூஸும் கிடையாது.
08:19
Speaker A
குருவாலயும் சனிக்கு ஒரு யூஸும் கிடையாது.
08:22
Speaker A
ஏன்னா அவங்க அவங்க அவங்க கடமை காரியங்களை பண்ணிட்டு இருப்பாங்க.
08:24
Speaker A
ஆனா அந்த எக்ஸ்பெக்டேஷன்ங்கிறது டிஃபர் ஆகும்.
08:26
Speaker A
ஏன்னா பக்கத்து வீடே சனிதான்.
08:29
Speaker A
மகரம்.
08:31
Speaker A
அப்படிங்கிறப்ப ஏதோ ஒரு வகையில சனி ஒரு வேலை பார்த்துட்டு இருக்கிற மாதிரியே இருக்கும் குருவுக்கு.
08:37
Speaker A
அப்படி இருக்கிற பட்சத்துல
08:41
Speaker A
ஆரம்ப நிலைகளிலேயே அந்த குருவுக்கு தன் வீட்டுக்கு பார்வை கிடையாதுன்னு நான் சொன்னேன் இல்லையா.
08:47
Speaker A
தனுசு ராசியில இருக்கவங்களுக்கு சொல்லக்கூடிய விஷயமே அதுதான்.
08:51
Speaker A
முதல் உங்களை பாருங்க அப்படின்னு.
08:54
Speaker A
இப்ப அந்த யோகாசனம்லாம் என்ன சொல்லுவாங்கன்னா மேல்நோக்கி பார்க்க வேண்டாம் மேல்நோக்கி பார்த்தா உங்களுடைய எனர்ஜி மத்தவங்களுக்கு போகும்.
09:00
Speaker A
உங்களுடைய மூக்கின் நுனியை பாருங்க அப்படிங்கிறது என் நூல் பார்க்கிறதுங்கிறதுதான் அந்த விஷயம்.
09:03
Speaker A
அப்ப அவங்கல்லாம் வந்து இப்ப கோயிலுக்கு போறாங்க ஒரு மெடிடேஷன்ல உட்காருறாங்க அப்படின்னா
09:10
Speaker A
சிவன் ஸ்தலங்களுக்கு போயிட்டு அங்க இருக்க தட்சிணாமூர்த்தி வழிபாடு பண்றது.
09:15
Speaker A
அதோட ஆலங்குடிக்கும் போயிட்டு ஆலங்குடியில எல்லாம் போயிட்டு அங்க தட்சிணாமூர்த்தி வழிபட்ட கையோட வெளியே வர மாதிரிதான் இருக்கும்.
09:22
Speaker A
அப்ப அவங்க கொஞ்சம் நிதானமா போய் அந்த ஆலங்குடி முடிச்சிட்டு சிவன் ஸ்தலங்கள்ல போய் உட்கார்ந்துட்டு
09:26
Speaker A
தியான முறை மெடிடேஷன்ங்கிறது இப்படி மூக்கு நுனியை இந்த சூள்மனையை பார்த்து அமைதியா பேசாம உட்காரணும்.
09:34
Speaker A
அப்படி உட்கார்ந்து தியானம் பண்ண பண்ண ஒரு ரியலைசேஷன் வரப்போ
09:38
Speaker A
அவங்களுக்கு எல்லா செழிப்பும் தனுசுக்கு வந்து சேரும்.
09:41
Speaker B
ஓகே சூப்பர் சூப்பர்மா.
09:41
Speaker B
அதாவது வந்து ஊருக்கு உபதேசம் பண்றது தவறல்ல ஆனா அதே டைம்ல வந்து நம்மளுடைய குடும்பத்தை தான் முதல்ல பார்க்கணும் அப்படின்னு சொல்லிட்டு
09:48
Speaker B
தனுசு ராசி நேயர்களுக்கு வந்து ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தேங்க்யூமா.
09:52
Speaker A
நன்றி.
Topics:தனுசு ராசிகுரு நடத்தைதெய்வ வழிபாடுகுடும்ப பிரச்சனைதொழில் முன்னேற்றம்ஆன்மீக பரிகாரம்தட்சிணாமூர்த்திசிவன் கோயில்யோகாசனம்தமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →