நோன்பு திறப்பதற்குள் பதில் கிடைக்கும் 200 முறை ஓதுங்கள் — Transcript

ரமலான் மாதத்தின் முதல் சஹரில் 200 முறை ஓத வேண்டிய சிறந்த திக்ரைகள் மற்றும் நோன்பு திறப்பதற்கு முன் துவா செய்வது பற்றி விளக்கம்.

Key Takeaways

  • ரமலான் மாதத்தின் முதல் சஹரில் 200 முறை திக்ரைகள் ஓதுவது மிக முக்கியம்.
  • ஸலவாத் மற்றும் இஸ்மில் ஆலம் கொண்ட திருக்குர்ஆன வசனத்தை 100 முறை ஓதுவது அல்லாஹ்வின் அன்பையும் ரஹ்மத்தையும் ஈர்க்கும்.
  • நோன்பு திறப்பதற்கு முன் துவா செய்வது நோன்பாளர்களின் தேவைகளை அல்லாஹ்வால் நிறைவேற்றும்.
  • இந்த திக்ரைகள் மற்றும் துவாக்கள் எந்த நேரத்திலும் செய்யலாம் மற்றும் பகிர்வு மூலம் பலருக்கும் நன்மை கிடைக்கும்.
  • வஜீபா மற்றும் துவா கிதாப்கள் மூலம் மேலும் ஆழமான ஆன்மீக பயிற்சிகள் பெறலாம்.

Summary

  • ரமலான் மாதத்தின் அருள் நிறைந்த ஆரம்பத்திலேயே நல் அமல்களை செய்வதற்கான வழிகாட்டல்.
  • நோன்பு திறப்பதற்கு முன் 100 முறை ஸலவாத் மற்றும் 100 முறை 'அல்லாஹு லா இலகா இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்' திருக்குர்ஆன வசனத்தை ஓத வேண்டிய முக்கியத்துவம்.
  • இந்த திக்ரைகள் அல்லாஹ்வின் அன்பையும் ரஹ்மத்தையும் ஈர்க்கும் சிறந்த வழிகள்.
  • ஸலவாத் சொல்லுதல் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான அமலாகும்.
  • இஸ்மில் ஆலம் கொண்ட திருக்குர்ஆன வசனத்தின் சிறப்பு மற்றும் அதனை 100 முறை ஓதுவதன் நன்மைகள்.
  • நோன்பாளர்களின் துவாக்கள் அல்லாஹ்வால் கபூல் செய்யப்படும் உறுதி.
  • வீடியோவை எந்த நேரத்திலும் பார்ப்பவரும் இந்த திக்ரைகளை ஓதிக் கொள்ளலாம்.
  • வீடியோவில் பகிர்வு மற்றும் சப்ஸ்கிரைப் செய்யும் முக்கியத்துவம்.
  • வஜீபா மற்றும் துவா கிதாப்களின் பற்றிய விளக்கம் மற்றும் வாங்கும் வழிகள்.
  • ரமலான் மாதத்தில் அனைவருக்கும் நற்கிருபை மற்றும் தேவைகள் பூர்த்தி ஆக வாழ்த்துக்கள்.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
00:04
Speaker A
அருள் நிறைந்த ரமலான் மாதம் நம்மிடையே வந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ்.
00:08
Speaker A
எல்லோருமே அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்க கமெண்ட்ஸ்லயும் அல்ஹம்துலில்லாஹ் அப்படின்னு போடுங்க அதற்கும் ஒரு நன்மை அல்லாஹ் நமக்கு தருவான்.
00:15
Speaker A
இந்த அருள் நிறைந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக.
00:23
Speaker A
இந்த ஆரம்பத்திலேயே நம் அனைவருக்கும் நல் அமல்கள் செய்வதற்கு பாக்கியத்தை கொடுப்பானாக.
00:36
Speaker A
இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமல்களை செய்து அவனிடமிருந்து நமக்கு தேவைப்படக்கூடிய இம்மை மறுமை அனைத்து விஷயங்களையும் அடைந்து கொள்வதற்கு நல்லு உதவி செய்வானாக ஆமீன்.
00:45
Speaker A
இன்றைக்கு நம்ம எல்லோருமே ரமலானை அடைந்து ஒரு சஹரையும் நம்ம முடிச்சிட்டோம் அல்ஹம்துலில்லாஹ்.
00:54
Speaker A
இந்த நேரத்துல இந்த கிருபை வாய்ந்த இந்த நேரத்துல ரமலானின் தொடக்க நாள்ல முதல் சஹர்லயே நம்ம ஓதிக்கொள்ள வேண்டிய சிறந்த ரெண்டு திக்ரை தான் நம்ம பார்க்க போறோம் ரெண்டுமே கிருபை வாய்ந்தது அல்லாஹ்வினுடைய அன்பையும் ரஹ்மத்தையும் இழுத்து வரக்கூடியது.
01:51
Speaker A
அல்லாஹுத்தஆலா விரும்பக்கூடியது இந்த ரெண்டு திக்ரையும் ஓதிட்டு இன்றைய தினம் நீங்க துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ் நோன்பு திறப்பதற்குள் அல்லாஹுத்தஆலா உங்களுடைய அந்த தேவையை கபூலாக்கி தருவான்.
02:05
Speaker A
அப்படிப்பட்ட அந்த மகத்தான திக்ர் என்ன அப்படின்னா அதுதான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
02:11
Speaker A
ஒரு குட்டி ஸலவாத் அல்லாஹுத்தஆலா எதை விரும்புறான் அப்படின்னா நம்ம ஸலவாத் ஓதுறதுதான் அல்லாஹ் ரொம்ப ரொம்ப விரும்புவான்.
02:18
Speaker A
ஏன்னா அல்லாஹ்வும் ஸலவாத் சொல்லிட்டு தான் இருக்கான் அல்லாஹுத்தஆலா வேற எந்த அமலுமே செய்யறது இல்ல ஆனா ஸலவாத்தை அல்லாஹ் சொல்றான்.
02:24
Speaker A
அப்படி இருக்கும்போது இந்த பரக்கத் வாய்ந்த ஸலவாத்தை இந்த ஆரம்ப நாள்ல சொல்றது ரொம்ப பொருத்தமான ஒரு அமலா இருக்கும் முதல் நாள்லயே அல்லாஹ்வினுடைய அன்பை நம்ம அடைந்து கொள்ள முடியும் அவனுடைய நெருக்கத்தையும் அவனுடைய அன்பையும் நம்ம அடைந்து கொள்ள முடியும் எனவே இன்றைய தினம் நீங்க 100 தடவை நீங்க ஓதிக்கோங்க.
03:22
Speaker A
அடுத்தது இஸ்மில் ஆலம் கொண்ட திருக்குர்ஆனுடைய குட்டி வசனம் அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் இந்த வசனம் திருக்குர்ஆன்ல மூன்று இடங்கள்ல வருது இதுதான் இஸ்மில் ஆலம் கொண்ட வசனம் என்று அழைக்கப்படுது.
03:35
Speaker A
இன்னும் ஆயத்துல் குர்ஷில கூட இந்த வார்த்தை இடம்பெறுது அதனாலதான் ஆயத்துல் குர்ஷிக்கே சிறப்பு அவ்வளவு இருக்கு அப்படின்னும் சொல்லப்படுது எனவே இந்த இஸ்மில் ஆலம் கொண்ட அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் அப்படிங்கிற இந்த சிறந்த திருக்குர்ஆனுடைய வசனத்தை இன்றைய தினம் நம்ம 100 தடவை நம்ம ஓதிக்கலாம் இதுல அல்லாஹ்வினுடைய பெயரை சொல்லி அழைத்ததற்கான நன்மையும் கிடைக்கும் ஒரு திருக்குர்ஆன்ல இருந்து ஒரு வசனத்தை ஓதிய அந்த நன்மையும் நமக்கு கிடைக்கும்.
04:04
Speaker A
எனவே இந்த ஆரம்ப நாள்லயே இந்த மிகச்சிறப்பான ரெண்டு திக்ரையும் நீங்க ஒவ்வொன்றையும் 100 100 தடவை நீங்க ஓதிட்டு அல்லாஹ்விடத்தில நீங்க துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ்.
04:15
Speaker A
இன்னும் இந்த பதிவை நீங்க எந்த நேரத்துல பார்த்தாலும் சரி இந்த சஹர் செய்த உடனே நீங்க சொன்னீங்கன்னா ரொம்ப ரொம்ப சிறப்பு.
05:02
Speaker A
இல்ல இந்த பதிவை நீங்க லேட்டாதான் பாக்குறீங்க அப்படின்னா ஒன்னும் பிரச்சனை இல்லை.
05:10
Speaker A
நீங்க எந்த நேரத்துல வேணும்னாலும் நீங்க இதை ஓதிக்கலாம் ஓதிட்டு அல்லாஹ்விடத்தில நீங்க துவா செய்யுங்க ஏன்னா நோன்பாளிகள் கேட்கக்கூடிய துவாவை அல்லாஹ் அப்படியே கபூல் ஆக்குவான்.
05:20
Speaker A
அதுவும் ரமலான் மாதத்தினுடைய முதல் நோன்பு அப்படின்னா அதற்கும் ஒரு சிறப்பு உண்டு.
05:25
Speaker A
எனவே இந்த நாள்ல நீங்க ஒரு துவாவை கேட்டீங்கன்னா கண்டிப்பா இன்ஷா அல்லாஹ் அல்லாஹுத்தஆலா மறக்க மாட்டான் எனவே உங்களுக்கு தேவையானது நீங்க கேளுங்க இன்னும் இந்த மாதத்துல அல்லாஹுத்தஆலா ஏற்றுக்கொள்ளக்கூடிய அமல்களை செய்து நம்முடைய இம்மை மறுமை அனைத்து தேவைகளையும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.
05:40
Speaker A
ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன் இந்த பதிவை பார்க்கக்கூடிய எல்லா மக்களுமே அதிக அளவு ஷேர் பண்ணுங்க.
05:46
Speaker A
ஏன்னா நீங்க ஷேர் பண்ணி அவங்க அந்த அமலை செய்றாங்க அப்படின்னா அதுல உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு எனவே அதிக அளவு ஷேர் பண்ணுங்க மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
05:58
Speaker A
மேலும் இது போன்ற சிறந்த வஜீபாக்கள் உங்களுக்கு ஒரு தொகுப்பா ஒரு கிதாபா வேணும் அப்படின்னா யோசிக்காதீங்க நம்மளோட அற்புத வஜீபாக்கள்ல நீங்க விரும்பக்கூடிய நீங்க யோசிக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்குமே இதுல வஜீபா இருக்கு எனவே இந்த கிதாப் உங்களுக்கு வேணும் அப்படின்னாலும் சரி.
06:55
Speaker A
அல்லது தமிழ்லயே எங்களுக்கு 30 ஜூஸ் குர்ஆனும் கிடைச்சா நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சாலும் சரி அல்லது கேட்பது கிடைக்கும் வஜீபா மற்றும் தௌபா கிதாப் வேணும் அப்படின்னாலும் சரி ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க கேட்பது கிடைக்கும் வஜீபா தௌபா கிதாப் ரொம்ப ரொம்ப குறைந்த அளவுல தான் இருக்கு.
07:19
Speaker A
இதுவரையும் வாங்கல எங்களுக்கு அவசியம் தேவை அப்படிங்கிறவங்க உடனே ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க மேலும் ஒரு அன்பான வேண்டுகோள் ரமலான்ல நீங்க துவா கேட்பதற்காக கை ஏந்துனீங்க அப்படின்னா அந்த துவாவில என்னையும் சேர்த்துக்கோங்க எல்லா மக்களையும் சேர்த்துக்கோங்க நானும் உங்களை போன்ற அன்பானவர்களுக்காக அதிகமதிகம் நான் துவா செய்வேன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹுத்தஆலா நம் அனைவருடைய துவாவையும் அங்கீகரித்து கொடுப்பானாக.
07:36
Speaker A
ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
Topics:ரமலான்நோன்புதிக்ரைஸலவாத்இஸ்மில் ஆலம்திருக்குர்ஆன்துவாஅல்லாஹுவஜீபாஆன்மீக பயிற்சி

Frequently Asked Questions

ரமலான் மாதத்தின் முதல் சஹர் அன்று ஓத வேண்டிய இரண்டு சிறந்த திக்ருகள் யாவை?

ரமலான் மாதத்தின் முதல் சஹர் அன்று ஓத வேண்டிய இரண்டு சிறந்த திக்ருகள்: 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்ற ஸலவாத் மற்றும் 'அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்' என்ற திருக்குர்ஆன் வசனம்.

இந்த இரண்டு திக்ருகளையும் எத்தனை முறை ஓத வேண்டும்?

இந்த இரண்டு திக்ருகளையும் ஒவ்வொன்றையும் 100 முறை ஓத வேண்டும். அதாவது, 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' 100 முறையும், 'அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்' 100 முறையும் ஓத வேண்டும்.

'அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்' என்ற வசனத்தின் சிறப்பு என்ன?

இது 'இஸ்மில் ஆலம்' கொண்ட வசனம் என்று அழைக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் மூன்று இடங்களில் வரும் இந்த வசனம், ஆயத்துல் குர்ஷியிலும் இடம்பெற்று அதன் சிறப்புக்கு ஒரு காரணமாகும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →