சீக்கிரமா இந்த 12 திக்ரையும் ஓதி முடிங்க — Transcript

ரமலான் மாதத்தின் முதல் வியாழக்கிழமை 12 சக்தி வாய்ந்த திக்ருகளை ஓதி அல்லாஹ்விடம் ஆறுதல் கேட்கும் வழிமுறை.

Key Takeaways

  • ரமலான் மாதத்தின் முதல் வியாழக்கிழமை 12 சக்தி வாய்ந்த திக்ருகளை ஓதுவது மிக நன்மை தரும்.
  • திக்ருகளை நம்பிக்கையுடன் ஓதினால் அல்லாஹ்வின் ஆறுதல் மற்றும் உதவி கிடைக்கும்.
  • இந்த திக்ருகள் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்.
  • திக்ருகளின் அர்த்தம் மற்றும் பயன்களை அறிந்து பயன்படுத்துவது முக்கியம்.
  • சமூகத்தில் இதை பரப்பி அனைவரும் பயன் பெற வேண்டும்.

Summary

  • ரமலான் மாதத்தின் முதல் வியாழக்கிழமை மிக சிறப்பு வாய்ந்தது.
  • மகரிப் தொழுகைக்கு பிறகு 12 சக்தி வாய்ந்த திக்ருகளை ஓதுவதன் மூலம் அல்லாஹ்விடம் ஆறுதல் பெறலாம்.
  • ஒவ்வொரு திக்ரும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை வழங்கும் வார்த்தைகள் ஆகும்.
  • இந்த திக்ருகள் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கும்.
  • திக்ருகளை நம்பிக்கையோடு ஓத வேண்டும் என்பதன் முக்கியத்துவம்.
  • ஒவ்வொரு திக்ரும் அல்லாஹ்வின் பாதுகாப்பு மற்றும் உதவியை வலியுறுத்துகிறது.
  • வீட்டிலும் சமூகத்திலும் இந்த திக்ருகளை பரவலாகப் பயன்படுத்த வேண்டும்.
  • வீடியோவில் திக்ருகளின் அர்த்தமும் அவற்றை எப்படி ஓத வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
  • இந்த திக்ருகள் ரமலான் மாதத்தின் பரக்கத்துடன் கூடுதல் பலன்களை தரும்.
  • சேனலை சப்ஸ்கிரைப் செய்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு.

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் நாம் அனைவருமே
00:07
Speaker A
புனிதமான ரமலான் மாதத்தினுடைய முதல் வியாழக்கிழமையில இருக்கோம்.
00:11
Speaker A
ரமலான் மாதம் என்பதே மிகச் சிறப்பு அதிலேயும் வியாழக்கிழமை அப்படின்னா இன்னும் சிறப்பு.
00:16
Speaker A
இந்த நாள்ல மகரிபுடைய தொழுகைக்கு பிறகு அதிக பலன் கொண்ட மிக சக்தி வாய்ந்த திக்ருகளை நம்ம ஓதுறதும் இன்னும் அல்லாஹ்விடத்தில துஆக்களை கேட்கிறதுமா நம்ம இருந்தோம் அப்படின்னா ஏராளமான நன்மையும் கிடைக்கும் நம்மளோட துஆவுக்கு பதிலும் கிடைக்கும்.
00:33
Speaker A
இன்றைக்கு நம்ம பார்க்க போறது ரெண்டு பாக்கியமான திக்ருகளை தான் பார்க்க போறோம் இது மலைகளையும் நகர்த்தும் சக்தி கொண்டது.
00:41
Speaker A
இன்ஷா அல்லாஹ் இந்த திக்கரை நம்ம ஓதுனோம் அப்படின்னா அல்லாஹ்வினுடைய ஆறுதல் உடனடியாக வந்தடையும் அல்லாஹ்வினுடைய உதவி அடுத்த நொடி வரும் ஏன்னா இது ஒவ்வொரு மாமீன்களுக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு திக்கர்.
00:55
Speaker A
என்ன தேவை இருந்தாலும் சரி எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் சரி இந்த திக்ருகள் போதும் இன்ஷா அல்லாஹ்.
01:01
Speaker A
ஓதுங்க அல்லது ஓதுறதை காதுல போட்டு கேளுங்க இன்ஷா அல்லாஹ் நாளை ஜுமாவுடைய தொழுகைக்கு முன்பாக உங்களுடைய துஆவிற்கு அல்லாஹ் பதில் கொடுத்திருப்பான்.
01:51
Speaker A
உங்களோட தேவைகளை அல்லாஹ் பூர்த்தியாக்கி தருவான் இன்ஷா அல்லாஹ் நம்பிக்கையோடு ஓதுங்க.
01:56
Speaker A
இதைவிட நம்பிக்கையான வார்த்தையை நம்ம தேடவே முடியாது ஏன்னா சில விஷயங்களை நம்ம அல்லாஹ்விடத்தில கேட்போம் ஆனா நம்பிக்கையோடு கேட்போமா அப்படின்னா கேட்க மாட்டோம் ஆனா இந்த வார்த்தை நம்பிக்கையோடு கேட்கக்கூடிய ஒரு துஆவாக இருக்கு.
02:08
Speaker A
இப்போ அப்படிப்பட்ட அந்த திக்ருகள் என்ன அதை எப்படி ஓதணும் அப்படிங்கறதை பார்க்கலாம்.
02:12
Speaker A
இன்னைக்கு நம்ம 12 விதமான வார்த்தைகளை சொல்லி அல்லாஹ்விடத்தில ஆறுதல் கேட்க போறோம்.
02:20
Speaker A
முதலாவது ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல்.
02:24
Speaker A
அல்லாஹுவே எனக்கு போதுமானவன் அவனே எனக்கு சிறந்த பாதுகாவலன்.
02:29
Speaker A
இது நம்ம எல்லோருக்கும்மே தெரியும் நம்ம எல்லோருமே ஓதி பலன் அடைஞ்சிருப்போம் நிறைய பலன்களை கொடுக்கக்கூடியது ஆறுதல் கொடுக்கக்கூடிய வார்த்தை இது இதை ஓதினா அடுத்த நொடி கஷ்டம் நீங்கும் ஆனா ஓதும்போது நம்பிக்கையோடு ஓதணும் எனவே இந்த திக்கரையும் நம்ம ஓதிக்கலாம்.
03:25
Speaker A
அடுத்தது ஹஸ்பி அர்ரப்பு மினல் இபாத்.
03:31
Speaker A
அடியார்களில் நின்றும் என்னுடைய ரப்பே எனக்கு போதுமானவன் இந்த வார்த்தை மனிதர்களுடைய தேவைகள் எல்லாம் எனக்கு எதுவும் இல்லை எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்னு சொல்லக்கூடிய வார்த்தையாக இருக்கு.
03:43
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல்லாஹுல்லதி ஹுவ ஹஸ்பி.
03:47
Speaker A
அல்லாஹுவே எனக்கு போதுமானவன் அவனே எனக்கு போதுமானவன் இதுவும் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடிய வார்த்தை.
03:55
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல் ஹாலிகு மினல் மக்லூக்கின்.
04:00
Speaker A
படைப்பினங்களில் நின்றும் என்னை படைத்தவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் எப்படிப்பட்ட ஒரு வார்த்தை பாருங்க அப்போ எந்த படைப்புக்கள்ட்டயுமே நம்மளோட தேவை அல்லாஹ் வச்சிருக்க மாட்டான் நேரடியா அல்லாஹ்வே உதவி செய்வான்.
04:12
Speaker A
யார்கிட்டயும் நீங்க போய் எதற்காகவும் நிக்க வேண்டாம் பணத்துக்காகவா இருக்கலாம் வேற எந்த விஷயத்துக்காகவாவும் இருக்கலாம் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லாஹ்வே பார்த்துக்கொள்வான்.
05:03
Speaker A
அடுத்தது ஹஸ்பி அர்ராஸிகு மினல் மர்சூக்கின்.
05:07
Speaker A
வசதி பெற்றவர்களில் நின்றும் மற்றவர்களுக்கு உணவளிப்பவர்களில் நின்றும் எனக்கு ரிஸ்க் அளிக்கக்கூடியவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் இதை நம்ம சொல்றதுனால நமக்கு செல்வம் சார்ந்த பிரச்சனைகளை அல்லாஹ் தாலா பொறுப்பேற்று அதுல ஆறுதலும் நமக்கு சொல்வான்.
05:26
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் மின்குல்லி ஷு.
05:30
Speaker A
எல்லா தீமைகளுக்கும் எதிராக சிறந்த முறையில் செயல்படுபவனே எனக்கு போதுமானவன் அப்போ எந்த தீமையுமே நமக்கு இருக்காது.
05:40
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் லிமா அஹம்மனி.
05:45
Speaker A
என்னை பற்றிய விஷயங்களில் சிறப்பாக கையாள்பவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் எப்படிப்பட்ட ஒரு வார்த்தை பாருங்க அல்ஹம்துலில்லாஹ்.
05:56
Speaker A
இந்த திக்கரை நம்ம சொல்வதின் காரணமாக அல்லாஹுத்தஆலா நம்மளோட எல்லா விஷயங்களையும் பொறுப்பேற்று சரியான முறையில கையாளுவான் அப்ப நமக்கு எந்த பிரச்சனையுமே இருக்காது.
06:43
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் லமின் பக அலை.
06:49
Speaker A
எனக்கு எதிராக வரம்பு மீறுபவர்களுக்கு எதிராக என்னை பாதுகாப்பவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் இதுவும் ஒரு சிறந்த ஒரு வார்த்தை.
06:59
Speaker A
அடுத்து ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் லமின் ஹசதனி.
07:04
Speaker A
என் மீது பொறாமை கொண்டவர்களுக்கு எதிராக என்னை பாதுகாப்பவனே எனக்கு போதுமானவன் அப்போ எதிரிகளுடைய பிரச்சனை தீங்கு செய்பவர்களுடைய பிரச்சனை எல்லாம் நமக்கு இருக்காது.
07:15
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் இந்தல் மௌத்.
07:19
Speaker A
என்னுடைய மரண நேரத்தில் என்னுடைய விவகாரங்களை சிறப்பாக கையாள்பவனே எனக்கு போதுமானவன் அப்போ மௌத்துக்கு பிறகும் பொறுப்பு அல்லாஹ்விடத்தில ஒப்படைக்கிறோம்.
07:31
Speaker A
அவனை பேரை சொல்லி அடுத்தது ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் இந்த சிராத்.
07:35
Speaker A
என்னுடைய நரக விவகாரங்களில் சிறப்பாக எனக்கு துணை புரிபவனே எனக்கு போதுமானவன் சுபஹானல்லாஹ் அப்போ நரகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு தீங்குகளும் நமக்கு கிட்டத்தில கூட வராது அல்லாஹுத்தஆலா பாதுகாப்பான்.
08:31
Speaker A
அடுத்தது ஹஸ்பி அல்லாஹுல்லதி பியதிஹில் மலக்கூத்து குல்லி ஷயின் வஹுவ யுஜீரு வலா யுஜாரு அலைஹில்லதி லா இலாஹ இல்லாஹுவ வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்.
08:46
Speaker A
எல்லா பொருட்களின் ஆட்சியும் அவனிடமே இருக்கிறது அவனே பாதுகாக்கிறான் அவனிடமிருந்து யாராலும் பாதுகாக்க முடியாது அவனைத் தவிர வேறு யாரும் இல்லை அவனே மகத்தான அர்ஷுடைய ரப்பாக இருக்கின்றான் சுபஹானல்லாஹ் எப்படிப்பட்ட ஒரு துஆ பாருங்க.
09:00
Speaker A
அல்லாஹ்விடத்தில ஆறுதல் கேட்கிற மாதிரியும் இருக்கு அல்லாஹ்வை புகழற மாதிரியும் இருக்கு நம்மளோட தேவைகளை அல்லாஹ்விடத்தில கேட்கிற மாதிரியும் இருக்கு.
09:10
Speaker A
அதுவும் இம்மை மறுமை ரெண்ட பத்தியுமே கேட்கக்கூடிய ஒரு அழகான ஒரு ஆறுதல் கொடுக்கக்கூடிய ஒரு துஆவாக இருக்கு எனவே இன்றைய தினம் இந்த 12யுமே சேர்த்து ஒரு தடவை ஓதுங்க அல்லது ஓதுறதை காதுல போட்டாவது கேளுங்க இன்ஷா அல்லாஹ்.
10:06
Speaker A
அல்லாஹுத்தஆலா நம் அனைவருடைய அனைத்து தேவைகளையுமே இந்த மகத்தான ரமலான் மாதத்தின் பரக்கத் கொண்டு இந்த வியாழக்கிழமையின் பரக்கத் கொண்டு கபூலாக்கி தருவானாக ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
10:16
Speaker A
இந்த பதிவு உங்க எல்லோருக்கும்மே யூஸ்ஃபுல்லா இருக்கு அப்படின்னு நினைச்சீங்கன்னா மத்தவங்களுக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சீங்கன்னா முடிஞ்ச அளவு நிறைய நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க மேலும் நம்ம சேனலை இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தீங்கன்னா இப்பவே சப்ஸ்கிரைப் பண்ணி லைக் பண்ணிக்கோங்க.
10:29
Speaker A
மேலும் இதுபோல சிறந்த வஜீபாக்கள் உள்ளடங்கிய இன்னும் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் தான் அனைத்து தேவைகளுக்கும் அற்புதம் வஜீபாக்கள் நீங்க தேடக்கூடிய ஒவ்வொரு தேடல்களுக்கும் இதுல தீர்வு உண்டு இதுல நிறைய வஜீபாக்கள் இருக்கு எனவே இன்ஷா அல்லாஹ் இந்த கிதாப் வேணும் அப்படின்னு நினைச்சீங்கன்னாலும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க.
10:56
Speaker A
இல்ல கேட்பது கிடைக்கும் வஜீபா வேணும் தவ்பா கிதாப் வேணும் அப்படினாலும் ஸ்கிரீன்ல தெரியுற நம்பருக்கு இப்பவே வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணிக்கோங்க தமிழ் குர்ஆன் ரெடியா இருக்கு.
11:46
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
Topics:ரமலான்திக்ருமகரிப் தொழுகைஅல்லாஹ்விடம் ஆறுதல்நம்பிக்கைதுஆஇஸ்லாமிய வழிபாடுவியாழக்கிழமை சிறப்புஆறுதல் வார்த்தைகள்தமிழ் இஸ்லாமிய பாடங்கள்

Frequently Asked Questions

ரமலான் மாதத்தில் வியாழக்கிழமையின் சிறப்பு என்ன?

ரமலான் மாதம் என்பதே மிகச் சிறப்பு, அதிலும் வியாழக்கிழமை என்பது இன்னும் சிறப்பு. இந்த நாளில் மகரிபுடைய தொழுகைக்குப் பிறகு அதிக பலன் கொண்ட சக்தி வாய்ந்த திக்ருகளை ஓதுவதன் மூலமும், அல்லாஹ்விடம் துஆக்கள் கேட்பதன் மூலமும் ஏராளமான நன்மைகளையும், துஆக்களுக்கு பதிலையும் பெறலாம்.

இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள திக்ருகளின் முக்கியத்துவம் என்ன?

இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள திக்ருகள் மலைகளையும் நகர்த்தும் சக்தி கொண்டவை. இவற்றை ஓதினால் அல்லாஹ்வின் ஆறுதல் உடனடியாக வந்தடையும், உதவி அடுத்த நொடி வரும், மேலும் இது ஒவ்வொரு நம்பிக்கை கொண்டவர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு திக்கர்.

வீடியோவில் கூறப்பட்டுள்ள முதல் நான்கு திக்ருகள் யாவை?

வீடியோவில் கூறப்பட்டுள்ள முதல் நான்கு திக்ருகள்: 1. ஹஸ்பி அல்லாஹு வநிஅமல் வக்கீல் (அல்லாஹுவே எனக்கு போதுமானவன், அவனே எனக்கு சிறந்த பாதுகாவலன்), 2. ஹஸ்பி அர்ரப்பு மினல் இபாத் (அடியார்களில் நின்றும் என்னுடைய ரப்பே எனக்கு போதுமானவன்), 3. ஹஸ்பி அல்லாஹுல்லதி ஹுவ ஹஸ்பி (அல்லாஹுவே எனக்கு போதுமானவன், அவனே எனக்கு போதுமானவன்), 4. ஹஸ்பி அல் ஹாலிகு மினல் மக்லூக்கின் (படைப்பினங்களில் நின்றும் என்னை படைத்தவனே எனக்கு போதுமானவன்).

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →