நோன்பு திறக்கும் நேரம் மிக மிக கிருபையான நேரம், ஏனெனில் நாள் முழுவதும் அல்லாஹ்வுக்காக பசியோடும் தாகத்தோடும் காத்திருந்து, கண்களையும் நாவையும் பாதுகாத்து, தொழுகை தொழுது, குர்ஆன் ஓதி, அல்லாஹ்வை பயந்து நடந்திருப்பதால், அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்களை அல்லாஹ் கபூல் ஆக்குவான்.
நோன்பு திறக்கும்போது பேரீச்சம்பழத்தை கைகளில் எடுத்துக்கொண்டு, முதலில் மூன்று முறை ஸலவாத் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, நன்றி உணர்வுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்ல வேண்டும்.
அல்லாஹ் நமக்கு அனைத்தையும் கொடுத்திருப்பதற்கும், இந்த ரமலானை அடைய அனுமதித்ததற்கும், நோன்பு நோற்க வலிமை கொடுத்ததற்கும், நோன்பு திறக்கும் தருணத்தை கொடுத்ததற்கும் நன்றி செலுத்தும் விதமாக 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்ல வேண்டும்.
Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.
Or transcribe another YouTube video here →