ராகுகாலம் – எமகண்டம் எதற்கு பார்க்கணும்? – Astrologer J… — Transcript

ஜோதிடம் மற்றும் ராகுகாலம் பற்றிய ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம், மனநிலை மற்றும் நேரம் முக்கியத்துவம் குறித்து விவாதம்.

Key Takeaways

  • ஜோதிடம் திடமாக இருக்க உதவும் கருவி மட்டுமே.
  • ராகுகாலம் மற்றும் எமகண்டம் நேரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மனநிலை மற்றும் நேரம் ஜோதிட விளக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • ஸ்டாக் மார்க்கெட்டில் வெற்றி பெற பொருளாதார அறிவும் மனநிலையும் அவசியம்.
  • ஜோதிடம் மூடநம்பிக்கை அல்ல, வழிகாட்டுதல் மற்றும் ஆறுதலாக மட்டுமே பார்க்க வேண்டும்.

Summary

  • ஜோதிடம் என்பது திடமாக இருக்க உதவும் ஒரு கருவி ஆகும்.
  • ராகுகாலம் மற்றும் எமகண்டம் நேரங்களில் சில செயல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம்.
  • மனநிலை மற்றும் நேரம் ஜோதிடத்தில் மிக முக்கியம், மனநிலை சரியில்லாமல் ஜோதிடம் பயனில்லை.
  • ஸ்டாக் மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு பொருளாதார அறிவு மற்றும் மனநிலை அவசியம்.
  • ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் மற்றும் பண்புகள் உள்ளன.
  • ராகுகாலத்தில் வண்டி ஓட்ட வேண்டாம் என்ற பரிந்துரை, ஆனால் அது முழுமையாக விபத்துக்களுக்கு காரணம் அல்ல.
  • ஜோதிடம் ஒரு ஆறுதல் மற்றும் வழிகாட்டுதலாக மட்டுமே பார்க்க வேண்டும், மூடநம்பிக்கையாக அல்ல.
  • தினசரி ஜோதிடம் பார்க்க அவசியமில்லை, தேவையான நேரத்தில் மட்டுமே பார்க்க வேண்டும்.
  • ஜாதகத்தின் கோச்சாரங்களைப் பார்த்து தேவையான நேரங்களில் டேக் டைவர்ஷன் செய்ய வேண்டும்.
  • மனநிலை மற்றும் நேரம் சரியானபோது மட்டுமே ஜோதிடம் பயனுள்ளதாக இருக்கும்.

Full Transcript — Download SRT & Markdown

00:24
Speaker B
என்னோட ஒபினியன் என்ன அப்படின்னா, ஜோதிடம், திடமா இருக்கறதுக்கு தான் ஜோதிடம். நீங்க எப்பவுமே திடம் இல்லாம இருக்கிறீங்க அப்படின்னா, அது சைக்கலாஜிக்கல் இஸ்யூ.
00:33
Speaker A
ஓகே.
00:34
Speaker B
ரொம்ப நல்லா இருக்கறதுக்கு ஜோதிடம் சொல்லவே தேவையில்லை, உங்க ஜாதகம் நல்லா இருக்கு, போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்புறம் உங்க ரூட் கிளியர், நீங்க போற பாதை கிளியர், உங்களுக்கு எல்லாமே கிளியரா இருக்கு, திடமாக தான் இருக்கிறீர்கள், போயிட்டு வாங்கன்னு சொல்லிடுறது.
00:46
Speaker B
ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல இருக்கறவங்க ஹோரைக்கள் அப்படி பாக்குறாங்க, எனக்கே அவ்வளவு கால்ஸ் வருது, என்னைய லைன்லயே வச்சுப்பாங்க, ஆன்லைன்லயே நான் பாக்குறதுனால நான் லைன்லயே இருப்பேன், ஹோரைப்படி நான் இப்ப இதுல போடலாமா, நான் என்ன பண்ணலாம், இப்ப என்னுடைய என்னுடைய இது எப்படி மாறுது?
00:59
Speaker A
இல்ல ஆக்சுவலா ஒர்க் அவுட் ஆகாது தானே அது?
01:01
Speaker B
இப்ப கும்ப ராசிக்காரங்க, மகர ராசிக்காரங்கலாம் இருக்காங்கன்னா, அவங்களுக்கு பொறுமைங்கறது ஒன்னு இருக்கும், நின்னு நிதானமா கவனிக்கிற தன்மை இருக்கும், கன்னி ராசிக்காரங்கன்னா கால்குலேட்டிவா இருப்பாங்க.
01:10
Speaker B
உட்கார்ந்துறாங்கன்னு வச்சுக்கோங்க.
01:11
Speaker A
அந்த டைம் வந்து அவருடைய இதுபடி ஒரு எமகண்டம் இருக்கு, ஒரு ராகுகாலம் இருக்குன்னா பண்ணலாமா பண்ணக்கூடாதா?
01:15
Speaker B
பண்ண மாட்டாங்க, ராகு காலத்துல ஏன்னா அந்த நேரத்தின்படி நம்மளுக்கு ஆக்சுவலாவே சில விஷயங்கள் நல்லாவே நடக்காது.
01:21
Speaker A
என்னங்க?
01:22
Speaker B
மனநிலைமை.
01:23
Speaker A
ஒரு நிமிஷம் இருங்களேன், ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் இருங்களேன், நான் ஒரு இன்டர்வியூக்கு போறேன், எனக்கு 10 மணிக்கு நேரம் கொடுத்திருக்காங்க, உங்க ராசிப்படி உங்க காலண்டர் படி, பத்தரை பன்னெண்டு ராகுகாலம் பாண்றீங்க, பத்தே முக்காலுக்கு தான் இன்டர்வியூவே என்னைய கூப்பிடுவாரு, அப்ப நான் என் லைஃப் முக்கியமா, என்னோட இன்டர்வியூ முக்கியமா, எனக்கு ராகுகாலம் எமகண்டம் முக்கியமா? அப்ப எப்படி ஒர்க் அவுட் ஆகும்ன்றீங்க?
01:40
Speaker B
நீங்க எத்தனை மணிக்கு போய் என்ன மனநிலைமையில வீட்ல இருந்து கிளம்பி போய் உட்காருறீங்களோ அதுதான் டைம்.
01:46
Speaker B
அதனாலதான் ராகுகாலத்துல வந்து வண்டி ஓட்டாதீங்க அப்படின்னு சொல்றதுமே வந்து எனர்ஜி பேஸ்டு தான், சிவன் சக்தி பேஸ்டு தான்.
01:52
Speaker A
இருங்க இருங்க, உலகம் முழுக்க ராகுகாலத்துல வண்டி ஓட்டிட்டு இருக்காங்களா இல்லையா? எமகண்டத்துல ஓட்டுறாங்களா இல்லையா? அப்புறம் என்ன?
01:58
Speaker B
ஓட்டிட்டு தான் இருக்காங்க, அதுக்காக எல்லாரும் ஆக்சிடென்ட் ஆகுறாங்களா அப்படி இல்ல, நீங்க என்ன மனநிலைமையில இருக்கீங்க, எல்லாத்துக்குமே ஆக்சிடென்ட் ஆக போகுதா, ஏதோ ரெண்டு ஆக்சிடென்ட்டாவது யாருக்காவது நடக்கும்.
02:07
Speaker A
இது உலக இயற்கைங்க இது, நடக்கத்தான் செய்யும்.
02:09
Speaker B
சாமி கும்பிடுறவங்க எல்லாருமே நல்லா இருக்கவும் இல்ல, சாமியே கும்பிடாதவங்க யாரும் நல்லா இல்லாம போகவும் இல்ல.
03:46
Speaker A
இன்னொரு விஷயம் தொடர்பாகவும் கேட்கணும்னு நினைச்சேன், அதையும் நான் கேட்டு நிறைவு பண்ண விரும்புறேன். தினசரி ஒருத்தர் வந்து தன்னுடைய வாழ்க்கையில பார்த்தீங்கன்னா, இப்போ என் சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க, நிறைய பேர் பார்ப்போம் நம்ம, இந்த தினசரி வேலைகள் செய்வதற்கு இந்த ராகுகாலம் பார்க்கிறது, எமகண்டம் பார்க்கிறது, நீங்க சொல்ற மாதிரி ஓரை பார்க்கிறது எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க.
04:04
Speaker A
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில இதை பார்த்துக்கிட்டே இருந்தான்னு வச்சுக்கோங்களேன், உண்மையிலேயே எனக்கெல்லாம் சில சமயம் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆயிடும், ஏன்னா இந்த விஷயத்தை பண்ணக்கூடாதான்னு எல்லாம் பார்ப்பாங்களா அப்படிங்கற மாதிரி தோணும். இது வந்து ஒரு கட்டத்துல எனக்கெல்லாம் என்ன ஆயிடுச்சுன்னா ஓரளவுக்கு சில விஷயங்களை இப்ப நீங்க சில ராசிகள் எல்லாம் சொல்லுவீங்க, குணங்கள் எல்லாம் சொல்லுவீங்க, அது கூட ஓகேன்ற மாதிரி ஓகே அந்த மாதிரி நடக்குது போல இருக்குன்னு பார்க்கலாம், ஆனா இது ரொம்ப ஓவர் எக்ஸ்ட்ரீமா போய் ஒரு மூடநம்பிக்கை நோக்கி நகர்றாங்களா?
05:07
Speaker B
என்னோட ஒபினியன் என்ன அப்படின்னா, ஜோதிடம், திடமா இருக்கறதுக்கு தான் ஜோதிடம். நீங்க எப்பவுமே திடம் இல்லாம இருக்கிறீங்க அப்படின்னா, அது சைக்கலாஜிக்கல் இஸ்யூ.
05:17
Speaker A
ஓகே.
05:18
Speaker B
எப்போ எனக்கு என்ன தேவை இதை பண்ணலாமா நம்மளுக்கு ஒரு கன்பியூஷன் வருது அப்படின்னா, திடமாகறதுக்கு உங்களுக்கு ஒரு ஆறுதல் சொல்றதுக்கு தான் ஜோதிடம்.
05:26
Speaker B
நீங்க அதை சும்மா சும்மா எடுத்து கரெக்டா கரெக்டான்னு பார்த்துட்டு, அது அப்படியே தான் இருக்க போகுது, நீங்க ஒவ்வொரு நொடிக்கும் எடுத்து எடுத்து பார்த்துட்டே இருந்தா அது சரி வராது, அது வந்து உங்களுக்கே உங்க மேல ஒரு செல்ஃப் டவுட் ஜாஸ்தியா இருக்குன்னு அர்த்தம்.
05:38
Speaker B
அதனால எந்த நேரத்துல உங்களுடைய திடம் இழக்கப்படுதோ, என்னுடைய மேப்ல இப்படி இருக்குது, நான் போற மேப் பாதை கரெக்டா, ஜாதக கட்டம் தான் உங்க மேப், இந்த மேப் படி இந்த இடத்துல என்ன இருக்கு, கோச்சாரம், கோச்சாரம்னு ஒன்னு பார்ப்பாங்க, அந்த கோச்சாரப்படி இந்த இடத்துல வந்து இப்ப டேக் டைவர்ஷன் போட்டுருக்காங்கன்னா, அந்த இடத்துல இருந்து டைவர்ட் பண்ணி போங்க அப்படிங்கறதுதான் நம்ம ஜோதிடத்துல சொல்ல போறோம். அதை மட்டும் கேட்டுட்டு ஓகே டேக் டைவர்ஷன் அப்படின்னு சொல்லிட்டாங்க நம்ம கரெக்டா போலாம்னு போயிடணும், டேக் டைவர்ஷன், நான் டேக் டைவர்ஷன்னு குனிஞ்சிட்டே போனா இடிச்சிரும்.
06:48
Speaker B
அந்த இடத்துல அந்த காலநிலைகள் நம்ம சொல்லிடுவோம், அதாவது வந்து ஒரு ஒரு வாரம், பத்து நாள், இல்ல ஆறு மாசம் அந்த மாதிரி நம்ம சொல்றோம்னா, அதுவரைக்கும் நீங்க ஜோதிடம் பார்க்க தேவையே இல்லை.
06:58
Speaker A
ஓகே.
06:59
Speaker B
சில ஜாதகங்களை எல்லாம் இப்ப நம்ம பார்த்துட்டு, இல்லைங்க இதை பார்க்க வேண்டிய ஜாதகமே இல்லைன்னு கூட வச்சிருவாங்க, ஏன் அப்படின்னா சொல்லி யூஸ் இல்லை, இல்லைன்னா ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கறதுக்கு ஜோதிடம் சொல்லவே தேவையில்லை, உங்க ஜாதகம் நல்லா இருக்கு, போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லிடுவாங்க. அப்புறம் உங்க ரூட் கிளியர், நீங்க போற பாதை கிளியர், உங்களுக்கு எல்லாமே கிளியரா இருக்கு, திடமாக தான் இருக்கிறீர்கள், போயிட்டு வாங்கன்னு சொல்லிடுறது. இப்ப திடம் இல்லாமல் இருக்கிறீங்கன்னா வாங்கறதுதான் ஜோதிடம், அந்த மாதிரி திடனுக்காக பார்த்துக்கோங்க அப்படிங்கறதுதான்.
07:24
Speaker A
இல்ல தினசரி பார்க்கிறாங்கல்ல?
07:26
Speaker B
அவசியம் இல்லைன்னு தான் நான் சொல்றேன், இப்போ தினசரி நீங்க பார்க்கிறீங்க அப்படின்னா, அந்த அளவுக்கு உங்களுடைய லைஃப் சிச்சுவேஷன் ரொம்ப ஒர்ஸா இருக்குது, நொடிக்கு நொடி உங்களுக்கு எல்லாமே மாறப்போகுது அப்படின்னா நீங்க பார்க்கிறது வேற.
07:36
Speaker A
இல்ல நீங்க வந்து தனி மனிதர்.
07:38
Speaker B
யார் இப்ப இதை பார்க்கிறாங்க தெரியுமா? இப்ப நீங்க சொன்னீங்க இல்லையா, ஸ்டாக் ஷேர்ஸ்ல இருக்கறவங்க இப்ப பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, அப்படியா? ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல இருக்கறவங்க ஹோரைக்கள் அப்படி பாக்குறாங்க, எனக்கே அவ்வளவு கால்ஸ் வருது, என்னைய லைன்லயே வச்சுப்பாங்க, ஆன்லைன்லயே நான் பாக்குறதுனால நான் லைன்லயே இருப்பேன், ஹோரைப்படி நான் இப்ப இதுல போடலாமா, நான் என்ன பண்ணலாம், இப்ப என்னுடைய என்னுடைய இது எப்படி மாறுது?
08:38
Speaker A
இல்ல ஆக்சுவலா ஒர்க் அவுட் ஆகாது தானே அது?
08:40
Speaker B
ஒரு சிலருக்கு அது ஒர்க் அவுட் ஆகுது, இந்த மாதிரி ஒருத்தர் வின் பண்ணிட்டும் இருக்கிறாரு.
08:45
Speaker B
ஆனா யாருக்கு ஸ்டாக் மார்க்கெட் உதவும், யாருக்கு வந்து உதவாதுங்கற அமைப்பும் ஜாதக கட்டங்களுக்கு இருக்கு.
08:53
Speaker A
அடிப்படையில ஒரு ஸ்டாக் மார்க்கெட்டுக்கு போனும்னா, அவருக்கு அது சார்ந்த பொருளாதார அறிவு இருக்கணும், ஒரு புரிதல் இருக்கணும், நிலைப்பு தன்மையோட சிந்திக்கிற திறன் இருக்கணும், இது இருந்தாதான் ஒருத்தர் அதுல வெற்றி பெற முடியும். அப்படி இருக்கும்போது எப்படி அதை வந்து இந்த ஓரை, எமகண்டம், ராகுகாலம் எப்படி ஒர்க் அவுட் பண்ண முடியும்னு கேக்குறேன்.
09:03
Speaker B
நான் என்ன சொல்றேன்னா, இதை நம்ம எப்படி புரிஞ்சுக்கணும் அப்படின்னா, எல்லா ராசிக்காரங்களாலயுமே வந்து ஸ்டாக் மார்க்கெட்ல வின் பண்ண முடியாது.
09:15
Speaker A
ஒத்துக்குறேன் ஆமா.
09:16
Speaker B
விஷயம் என்ன அப்படின்னா, ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு சாராம்சத்தை வாங்கி வந்தவங்களா இருப்பாங்க, இப்ப மேஷ ராசிக்காரங்க, விருச்சிக ராசிக்காரங்கலாம் வச்சுக்கோங்களேன், அவங்களுக்கெல்லாம் வந்து படபடப்பு ஜாஸ்தியாவே இருக்கும், பொறுமைங்கறது பெருசா இருக்காது. இப்ப கும்ப ராசிக்காரங்க, மகர ராசிக்காரங்கலாம் இருக்காங்கன்னா, அவங்களுக்கு பொறுமைங்கறது ஒன்னு இருக்கும், நின்னு நிதானமா கவனிக்கிற தன்மை இருக்கும், கன்னி ராசிக்காரங்கன்னா கால்குலேட்டிவா இருப்பாங்க, சிம்ம ராசிக்காரங்கன்னா ஷார்ப்பா தனக்கு என்ன வேணுமோ அதை பார்த்துட்டு இருப்பாங்க, இப்படி ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு அமைப்பு இருக்கும்.
10:16
Speaker B
இப்போ இந்த நேரம் காலம் எல்லாமே இருக்கு, நான் சொன்னேன் இல்லையா, இந்த இந்த கால நேரம் பார்த்து இந்த அந்தர் திசை இப்ப சந்திர திசை போகுது, சூரிய திசை போகுது அப்படின்னா, சந்திர திசை படி மனநிலைமை ஒரு மாதிரி எல்லாத்துக்கும் இருக்காது, சூரிய திசை ஷார்ப்பா இருக்கும், புதன் திசை ஒருத்தங்களுக்கு நல்லா இருக்கும், ஒருத்தங்களுக்கு நல்லா இருக்காது, அந்த மாதிரிலாம் ஒவ்வொரு அமைப்பு இருக்கு, அதன்படி ஏன் எல்லாமே மனநிலையை வச்சு சைக்கலாஜிக்கலா சொல்லக்கூடிய விஷயங்கள் தான். உங்க மனநிலை சம்பந்தப்பட்ட இந்த விஷயத்துல இப்போதைக்கு இதுல நீங்க போகாதீங்க, இப்போதைக்கு டிரைவ் பண்ணாதீங்க, இப்போதைக்கு பார்க்காதீங்க, இப்ப உங்களுக்கு டைம் நல்லா இருக்கு, நீங்க நிதானமா உங்களால ஸ்டாக் மார்க்கெட் பண்ண முடியும், உங்களால உட்கார முடியும், உங்களால வின் பண்ண முடியும்னு இப்படி உட்கார்ந்துறாங்கன்னு வச்சுக்கோங்க.
10:50
Speaker A
அந்த டைம் வந்து அவருடைய இதுபடி ஒரு எமகண்டம் இருக்கு, ஒரு ராகுகாலம் இருக்குன்னா பண்ணலாமா பண்ணக்கூடாதா?
10:55
Speaker B
பண்ண மாட்டாங்க, ராகு காலத்துல ஏன்னா அந்த நேரத்தின்படி நம்மளுக்கு ஆக்சுவலாவே சில விஷயங்கள் நல்லாவே நடக்காது. மனநிலைமை.
11:41
Speaker A
என்னங்க?
11:43
Speaker A
ஒரு நிமிஷம் இருங்களேன், ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம் இருங்களேன், நான் ஒரு இன்டர்வியூக்கு போறேன், எனக்கு 10 மணிக்கு நேரம் கொடுத்திருக்காங்க, உங்க ராசிப்படி உங்க காலண்டர் படி, பத்தரை பன்னெண்டு ராகுகாலம் பாண்றீங்க, பத்தே முக்காலுக்கு தான் இன்டர்வியூவே என்னைய கூப்பிடுவாரு, அப்ப நான் என் லைஃப் முக்கியமா, என்னோட இன்டர்வியூ முக்கியமா, எனக்கு ராகுகாலம் எமகண்டம் முக்கியமா? அப்ப எப்படி ஒர்க் அவுட் ஆகும்ன்றீங்க?
11:58
Speaker B
நீங்க எத்தனை மணிக்கு போய் என்ன மனநிலைமையில வீட்ல இருந்து கிளம்பி போய் உட்காருறீங்களோ அதுதான் டைம்.
12:05
Speaker A
இது என்னங்க, நீங்க தானங்க சொன்னீங்க பத்தரை பன்னெண்டுக்குள்ள எதுவும் பண்ணக்கூடாதுங்கறீங்க, அதுக்குள்ள தான் ஒரு ஆபரேஷன் பண்ணனும் இதெல்லாம் பாத்துக்கிட்டு இருப்பாங்களா?
12:11
Speaker B
பத்தரை பன்னெண்டுக்குள்ளார என்ன பண்ணனும் பண்ணக்கூடாது, ராகுகாலத்துல பண்ணனும் பண்ணக்கூடாதுங்கற விஷயம்லாம் இருக்கு, இப்ப நீங்க ஆபரேஷன் சொல்றீங்க இல்லையா, ராகுகாலம், ராகுகாலம்ங்கறது துர்கைக்கானது, துர்கைன்னு பாக்குறப்போ நீங்க ரத்தம் சம்பந்தப்பட்டது, இந்த ஆபரேஷன் சம்பந்தப்பட்டது, இந்த மாதிரி விஷயங்கள்லாம் வந்து அந்த டைம்ல வந்து பண்ணாங்கன்னா.
12:32
Speaker A
எக்ஸ்க்யூஸ் கொடுத்துறீங்க அப்படியே அது உள்ள.
12:33
Speaker B
இல்ல அது வந்து சக்சஸ் ஆகும் அப்படிங்கறது ஒரு அமைப்பு இருக்கு, ஏன்னா என்ன தெய்வம் தூங்கும், என்ன தெய்வம் முழிச்சிட்டு இருக்கு அப்படிங்கறதெல்லாம் இருக்கு, அந்த நேரத்துல ராகுவும் துர்கையும் தான் முழிச்சிட்டு இருக்குங்கறது, அதாவது சக்தி, அந்த நேரத்துல சக்தி நல்லா இருக்கும், சிவன் அமைதியா இருக்கும் அப்படிங்கறதுதான் அந்த ராகுகாலத்துடைய அமைப்பு. அப்ப வந்து உங்களுக்கு நீங்க இன்டர்வியூ அட்டென்ட் பண்ண போறீங்கன்னா, சக்திப்படி உங்களுக்கு நல்லா இருக்கும், உங்களுக்கான அந்த சிவன் அப்படிங்கறது வந்து நிதானம், அந்த நேரத்துல உங்களுக்கு இலக்கு கொடுக்கும்.
13:35
Speaker B
அதனாலதான் ராகுகாலத்துல வந்து வண்டி ஓட்டாதீங்க அப்படின்னு சொல்றதுமே வந்து எனர்ஜி பேஸ்டு தான், சிவன் சக்தி பேஸ்டு தான்.
13:48
Speaker A
இருங்க இருங்க, உலகம் முழுக்க ராகுகாலத்துல வண்டி ஓட்டிட்டு இருக்காங்களா இல்லையா? எமகண்டத்துல ஓட்டுறாங்களா இல்லையா? அப்புறம் என்ன?
13:50
Speaker B
ஓட்டிட்டு தான் இருக்காங்க, அதுக்காக எல்லாரும் ஆக்சிடென்ட் ஆகுறாங்களா அப்படி இல்ல, நீங்க என்ன மனநிலைமையில இருக்கீங்க, எல்லாத்துக்குமே ஆக்சிடென்ட் ஆக போகுதா, ஏதோ ரெண்டு ஆக்சிடென்ட்டாவது யாருக்காவது நடக்கும்.
14:00
Speaker A
இது உலக இயற்கைங்க இது, நடக்கத்தான் செய்யும்.
14:01
Speaker B
இயற்கை தான் அது, அதான் நான் என்ன சொல்றேன் அப்படின்னா, பர்டிகுலரா இன்னைக்கு இவர்தான் இறப்பார், இவங்க தான் பிறப்பாங்கன்னு ஒன்னு இருக்கு இல்லையா, அந்த கோச்சாரப்படி நம்ம விதியா கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கோம், கர்மாவை கேரி ஆன் பண்ணிட்டு இருக்கோம். இப்ப எனக்கான நேரம், எனக்கான டைம் டிக் டாக் ஆயிட்டு இருக்குது, அப்போ எனக்கான நேரத்துல நான் இந்த நேரத்துல ராகுகாலத்துல போனா, எனக்கு இது நடக்கும்னா எனக்கு அது நடக்கும். மொத்த பொதுமக்களுக்கும் அந்த ராகுகாலத்துல உனக்கு இது நடக்கும்னா, ராகுகாலத்துல நல்லது நடக்கும், ராகுகாலத்துல சாமி கும்பிட்டு இருப்போம், அமைதியான நிலைமையில உட்கார்ந்துட்டு இருப்போம், ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு நிலை மாறும்.
15:11
Speaker B
அதாவது நம்ம அந்த ஜாதக ரீதியா போனோம்னா பக்ஷி சாஸ்திரத்துல இருந்து நிறைய விஷயங்கள் இருக்கு.
15:16
Speaker A
இதுல என்ன ஒரு எக்ஸ்ட்ரீம்னா, நான் சொல்ல விரும்பல, ஆனாலும் ஒரு முக்கியமான ஒரு அமைச்சர் பொறுப்பே இருக்கிறாரு தமிழ்நாட்டுல, தமிழ்நாடே அறியும் அவரை, அவர் வந்து பார்த்தீங்கன்னா அந்த டைமிங் பேஸ் பண்ணி தான் எல்லாருக்கும் அறிய பொறுப்பே இருக்கிறாரு, ஒருத்தர் கட்சி ஆரம்பிக்கிறாரு, அவர் வந்து பார்த்தீங்கன்னா ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடந்து தான் கட்சி ஆரம்பிக்கிறாரு, அப்ப இவங்களே வந்து அதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காங்க அப்படின்னும் போது, இது ரொம்ப எக்ஸ்ட்ரீம் பாயிண்ட் ஆஃப் வியூ ஒர்க் அவுட் ஆகுது போல இருக்குப்பா, அதனாலதான் இவங்களே அதெல்லாம் பண்றாங்கன்னு ஒரு பாமர மக்கள் நினைக்க மாட்டாங்களா?
15:44
Speaker B
அதாவது நான் என்ன சொல்றேன் அப்படின்னா, நம்ம நேரம் காலத்தை பார்த்தாலும் பார்க்காட்டாலும் அந்த நேரம் இயங்குறது இயங்கிட்டு தான் இருக்கும்.
15:56
Speaker A
இயங்கிட்டு தான இருக்கும்.
15:57
Speaker B
மேப்ப நம்ம பார்த்துட்டே ஓட்டினாலும், மேப்ப நம்ம பார்க்காம ஓட்டினாலும், போற போற வழி ஒன்னுதான். மேப்ப பார்த்துட்டு ஓட்டுனா ஒருவேளை அது வந்து நம்மளுக்கு டேக் டைவர்ஷன் சொல்லி கரெக்ட்டான பாதையில நம்மள கொண்டு போய் நிறுத்திடலாம். ஓவர் கான்பிடன்ஸ்ல எனக்கு வழி தெரியும்னு சொல்லிட்டு நம்ம போய் பிளாக்கேஜ் ஆகி நிக்கறதுக்கும் இது இருக்கு. வாய்ப்பு இருக்குது.
16:50
Speaker B
சோ, நீங்க வந்து மேப்ப பார்த்துட்டு போறதுனால என்ன தப்பும் கேக்குறேன், கையில ஒரு மேப் வச்சுட்டு போங்க, அதனால நேரம் காலம் பார்க்கிறது ஒன்னும் தவறோ பெரிய குற்றமோ கிடையாது, ஐயோ இது நீங்க நம்பிட்டீங்களா, இதை நீங்க ஃபாலோ பண்றீங்களா அப்படின்னா, எனக்கு என்னைக்கு தேவையோ, எதுக்கு தேவையோ, முக்கியமான தருணங்களுக்கு எனக்கு தேவைனா நான் நேரம் காலம் பார்த்து பண்றது பண்ண வேண்டியதுதான்.
17:05
Speaker B
ஒரு குழந்தை பிறந்தா, பிறந்த ஒரு ஒரு குழந்தை பிறக்குது, ஒருவர் இறக்கிறார் அப்படின்னா, அந்த இறப்பு டைமும், பிறப்பு டைமும் நம்மளுக்கு முக்கியம் தான், அந்த நொடி நம்மளுக்கு முக்கியம் தான், அதிலிருந்து என்னுடைய கால நிலை எனக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு அப்படிங்கறப்போ, நம்ம அப்பவே நம்மளுக்கு ஒரு மேப் கொடுக்கப்பட்டுருச்சு, என் மேப் படி நான் இப்படி போயிட்டு இருக்கேன், எனக்கு கட்டம் எல்லாமே தெரியும்ப்பா, இல்லை எனக்கு கட்டத்தை பத்தி எனக்கு கவலையே இல்லை, நான் என்னவோ முட்டி மோதுகிறேன் அப்படின்னாலும் நம்ம முட்டி மோதிக்க வேண்டியதுதான், இல்லை எனக்கு வழி தெளிவா தெரியும், எனக்கு ஞானமா தெரியும், அவங்களும் நல்லா தான் இருப்பாங்க, அதாவது சாமி கும்பிடுறவங்க எல்லாருமே நல்லா இருக்கவும் இல்ல, சாமியே கும்பிடாதவங்க யாரும் நல்லா இல்லாம போகவும் இல்ல.
18:20
Speaker A
பெரியா சொன்ன மாதிரி இருக்கும்.
18:22
Speaker B
அதாவது இது வந்து தெய்வம் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் தாண்டி நம்மளோட எனர்ஜி சம்பந்தப்பட்டது தான் நான் சொல்லுவேன்.
18:29
Speaker A
அப்ப எல்லா நேரமும் இதை பார்க்காதீங்கன்னு.
18:30
Speaker B
எல்லா நேரமும் பார்க்க தேவையில்லை, உங்களுக்கு மேப்ல டவுட் இருந்தா மட்டும் மேப்ப பாருங்க, உங்களுக்கு வழி தெரிஞ்சா நல்லபடியா போங்க, எனக்கு சுக்கிர திசையா, வாவ் எனக்கு நல்லா இருக்கு, எல்லாத்துக்குமே சுக்கிர திசை வேலை பண்ணாது, சனி திசையா, ஒருத்தர் சிலருக்கு சனி திசை தான் ரொம்ப நல்லா இருக்கும், அந்த மாதிரி மேப் வந்து நம்ம எப்ப பார்க்கணுமோ அப்ப பார்த்துக்க வேண்டியதுதான், சும்மா சும்மா மேப் எடுத்து பார்க்க தேவையில்லை, எனக்கு ஆல்ரடி இந்த வழி தெரியும்னா நல்லபடியா போயிட்டு வாங்க, தெரியாத வழிக்கு வழி கேட்டுட்டு போங்க, அவ்வளவுதான் விஷயம்.
18:52
Speaker A
நிச்சயமா பலவிதமான ஆஸ்ட்ராலஜி சம்பந்தமான விஷயங்களுக்கு ரொம்ப வெளிப்படையா எளிமையா பதில் கொடுத்தீங்க, மிக்க நன்றி.
18:57
Speaker B
நன்றி.
18:58
Speaker A
நன்றி, மீண்டும் சந்திக்கலாம்.
Topics:ஜோதிடம்ராகுகாலம்எமகண்டம்மனநிலைஸ்டாக் மார்க்கெட்ஜாதகம்தமிழ் ஜோதிடம்ஆரோக்கியம்சைக்கலாஜிவழிகாட்டுதல்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →