இன்று பத்ரு தினம் மறக்காம 7 முறை சொல்லுங்க மனதில் நினைப்பதை ரப்பு நடத்தி தருவான்

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
00:05
Speaker A
இன்றைக்கு ரமலான் பிறை 17 அதாவது பத்ருடைய தினம்.
00:11
Speaker A
இந்த தினத்துல நம்ம எல்லோருமே அவசியமாக ஓதிக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த திக்ரை தான் நம்ம பார்க்க போறோம்.
00:20
Speaker A
இந்த திக்ரு நம்மல பலருக்கும் தெரியாது ஆனால் ரசூலுல்லாஹ் பத்ருடைய நாள்ல சூரியன் உதயமான உடனேயே இரண்டு கைகளையும் வானத்தின் பக்கம் ஏந்தி இந்த திக்ரை தான் அவங்க ஓதி இருக்காங்க.
00:36
Speaker A
அடுத்த நொடி அல்லாஹ்விடமிருந்து அவங்களுக்கு வகி வந்தது.
00:41
Speaker A
அதாவது என்ன துஆவை அல்லாஹ்விடத்தில கேட்டாங்களோ அந்த துஆவை நான் தர்றேன் அப்படின்னு அதைவிட சிறந்ததா நான் தருவேன் அப்படின்னு அல்லாஹ் ஒரு வகியை அனுப்பி இருக்கான் அந்த அளவு இது ஒரு சிறந்த திக்ரா இருக்கு.
00:56
Speaker A
இன்ஷா அல்லாஹ் இந்த திக்ரை இன்றைய தினம் இந்த பதிவை கேட்ட உடனேயே நீங்க எப்படியாவது ஒரு முறை ஓதிடுங்க.
01:07
Speaker A
அல்லாஹுத்தஆலா நபி அவங்களுக்கு கொடுத்த வெற்றியை போல நமது வாழ்விலும் வெற்றியை கொடுப்பான்.
01:15
Speaker A
இந்த ஒரு திக்ரு இந்த பத்ருடைய தினத்துல மட்டும் தான் ஓதணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது.
01:23
Speaker A
எல்லா நாட்களிலும் ஓதலாம்.
01:26
Speaker A
இன்னும் இந்த ஒரு திக்ரை ஓதி நானும் பலன் அடைஞ்சிருக்கேன்.
01:34
Speaker A
ஏன்னா ஒரு ஹாஜத்தை மனசுல நிய்யத் வச்சுக்கிட்டு ரப்பு கிட்ட எந்த வார்த்தையை கொண்டு கேட்டா நம்ம ரப்பு உதவி செய்வான் அப்படின்னு யோசிச்சு இந்த திக்ரை நான் ஓதி கேட்டு இருக்கேன்.
01:45
Speaker A
அல்ஹம்துலில்லாஹ் நிமிடத்துல எனக்கு பதில் கிடைச்சது.
01:50
Speaker A
அப்படிப்பட்ட மகத்தான ஒரு திக்ரை தான் நான் இன்றைக்கு சொல்ல போறேன்.
01:58
Speaker A
அதைப்பற்றி ஹதீஸையும் நம்ம பார்க்கலாம்.
02:01
Speaker A
இப்போ அந்த திக்ரு என்ன?
02:03
Speaker A
அதற்கு பிறகு நடந்த சம்பவம் என்ன அப்படிங்கறது தான் நம்ம பார்க்க போறோம்.
02:11
Speaker A
சிறு சம்பவம் தான்.
02:12
Speaker A
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ரு போர் நாளில் எதிரிகளான இணை வைப்பாளர்கள் எண்ணிக்கை ஆயிரம் பேராக இருப்பதையும் முஸ்லிம்களான தம் தோழர்கள் முன்னூற்று பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள்.
02:29
Speaker A
அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையின் பக்கம் விரைந்தார்கள்.
02:35
Speaker A
இன்னும் கிப்லாவை முன்னோக்கி தம் கரங்களை நீட்டி தம் இறைவனை உரத்த குரலில் அழைத்து பிரார்த்தித்தார்கள்.
02:44
Speaker A
எந்த வார்த்தையை கொண்டு பிரார்த்தித்தாங்க அப்படின்னு பாருங்க.
02:48
Speaker A
அல்லாஹும்ம அன்ஜிஸ்னி மா வ அத்தனி.
02:53
Speaker A
அல்லாஹும்ம ஆத்தி மா வ அத்தனி.
02:58
Speaker A
இதனுடைய பொருள் என்ன அப்படின்னா இறைவா எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக இறைவா எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக என்று தம் கரங்களை நீட்டி கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தார்கள்.
03:13
Speaker A
அதற்கு பிறகு நடந்தது என்ன அப்படின்னா
03:15
Speaker A
அல்லாஹுத்தஆலாவே திருக்குர்ஆன்லேயே அழகா சொல்றான் கேளுங்க.
03:20
Speaker A
நீங்கள் உங்கள் ரட்சகனிடம் உங்களை ரட்சிக்க தேடிய போது அணி அணியாக உங்களோடு இணைந்து அடுத்தடுத்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
03:39
Speaker A
அல்குர்ஆன் 08:09.
03:42
Speaker A
எப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்திருக்கு பாருங்க.
03:46
Speaker A
ரசூலுல்லாஹ் இந்த வார்த்தையை கொண்டு அல்லாஹ்விடத்தில உதவி கேட்டுட்டாங்க.
03:53
Speaker A
அல்லாஹ் அடுத்த நிமிஷமே ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவங்க மூலமாக வகியை கொடுத்து அனுப்பிட்டான்.
04:00
Speaker A
எவ்வளவு ஒரு ஆறுதல் சொல்லி இருக்கான் பாருங்க.
04:03
Speaker A
நீங்க கேட்டுட்டீங்க துஆவை.
04:06
Speaker A
நான் உங்களுக்கு ஆயிரம் மலக்குகளை கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன் அப்படின்னு சொல்லி.
04:13
Speaker A
இந்த பக்கம் சஹாபாக்கள் 313 பேர் தான்.
04:18
Speaker A
அந்த பக்கம் ஆயிரக்கணக்கான காஃபிர்கள் இருக்காங்க.
04:23
Speaker A
இதற்கு இடையில அல்லாஹுத்தஆலா ஆயிரக்கணக்கான வானவர்களை கொண்டு உதவி செஞ்சான் அந்த போர்ல நம்முடைய ரசூலுல்லாஹ்விற்கு வெற்றி கிடைச்சது.
04:34
Speaker A
எப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்திருக்கு பாருங்க.
04:37
Speaker A
இந்த பத்ரு தினம் அப்படிங்கிறது சாதாரணமான நாளே கிடையாது.
04:40
Speaker A
இதைப்பற்றிய சிறப்பு என்ன என்ன நிகழ்ந்தது இன்னும் எந்த மாதிரியான அமல்கள் செய்யலாம் அப்படிங்கறதை நம்ம தொடர்ந்து நம்ம பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
04:48
Speaker A
இன்றைய தினம் இந்த பதிவை கேட்ட உடனேயே இந்த தினத்தை நீங்க அடைந்து கொண்டாலே இந்த வார்த்தையை சொல்லி அல்லாஹ்விடத்தில நீங்க கையேந்தி உங்களுடைய தேவைகளை குறித்து கேளுங்க.
05:00
Speaker A
நிச்சயம் அந்த ரப்பு நீங்கள் நினைக்கக்கூடிய எல்லா காரியத்திலும் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.
05:07
Speaker A
அதுல வெற்றியும் கொடுப்பான்.
05:09
Speaker A
ஏன்னா இது வெற்றியை நமக்கு வழங்கக்கூடிய வார்த்தையா இருக்கு.
05:14
Speaker A
எனவே இன்ஷா அல்லாஹ் இந்த சிறந்த திக்ரை நம்ம எல்லோருமே ஓதக்கூடியவங்களா இருக்கணும்.
05:23
Speaker A
இது நம்மல பலரும் அறியாத ஒரு திக்ரா இருக்கு.
05:28
Speaker A
ஆனா ரசூலுல்லாஹ் ஓதிய ஒரு அற்புதமான வார்த்தை.
05:32
Speaker A
எனவே இன்ஷா அல்லாஹ் இந்த சிறந்த திக்ரை ஓதி இதனுடைய சிறப்பையும் பலனையும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.
05:40
Speaker A
ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →